Originally Posted by
murali srinivas
rks
நான் முன்பே பல முறை கூறியதுதான். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள். நடிகர் திலகம் பற்றி தவறான தகவலோ அல்லது அவதூறான செய்தியோ வந்தால் அதை நீங்கள் moderator அவர்களிடம் புகாராக அளிக்கலாம். அதை விடுத்து நீங்களே அவ்விடம் சென்று பல விஷயங்களைப் பற்றி பதிவிடுவது பல தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக எம்ஜிஆர் திரி நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று நிகழ்ந்தவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே எந்த புகாருக்கும் இடம் கொடாமல் உங்கள் உழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம். தயை கூர்ந்து உங்கள பதிவை எடிட் செய்து விடுங்கள்.
அன்புடன்