-
-
-
Congrats Mr.Ramamurthy for crossing 3000 posts.
-
-
-
3000 ..... பதிவுகள் .மலைப்பாக உள்ளது ராமமூர்த்தி சார் .உங்களின் கடுமையான் உழைப்பினால் நாங்கள் எல்லோரும் வேலூர் அதனை சுற்றி இருந்த இடங்களில் வைக்கப்பட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு நாள் பதாகைகள் ,படங்களை பார்க்கும்போது நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
கடுமையான சிரத்தையுடன் நீங்கள் எல்லா இடங்களக்கும் சென்று படம் பிடித்து இரவெல்லாம் திரியில் பதிவேற்றி எங்களுக்கு மன மகிழ்ச்சியை தந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
வேலூர் நகர மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் ஆவணங்கள் அணிவகுப்பு மற்றும் வரஉள்ள மக்கள் திலகத்தின் பிறந்த நாள் தொடர் பதிவுகள் - தர உள்ள நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரபிரசாதம்
விரைவில் உங்களின் 4000 பதிவுகளை காணும் அந்த இனிய நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன் .
வாழ்த்துக்கள் .
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
1984ம் வருடம், ஜனவரி மாதம் 17ம் தேதி அன்று, அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் முசிறிப்புத்தனை ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "மன்ற முரசு" பத்திரிகை வெளியீட்டு விழாவில், நம் மக்கள் திலகம், அவர்கள், தனது கலையுலக வாரிசு என திரு. பாக்கியராஜ் அவர்களை பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இறுதி வரை அரசியல் வாரிசு என்று, நம் புரட்சித்தலைவர் ஒருவரையும் அடையாளம் காட்டவில்லை.
1984ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், உடல் நலம் குன்றி, அமெரிக்க மருத்துவ மனையில், அனுமதிக்கப்பட்திருந்த போழ்து, அவரைப் பற்றிய பொய்யான தகவல்களுடன், மாற்றுக்கட்சியினரும் (குறிப்பாக தி. மு. க.வினர்), நமது இதய தெய்வம் உருவாக்கிய கட்சியில், கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன், சில புல்லுருவிகளும், வதந்திகளை பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட நெருக்கடியான, சிக்கலான, சோதனையான கால கட்டத்தில், புரட்சித்தலைவரின் பெருமைக்கு புகழ் சேர்த்தவர்களில் முதலிடம் பெற்ற திரு.ஆர். எம். வி. அவர்களின் யோசனைப்படி, திரு. பாக்கியராஜ் அமெரிக்கா சென்று, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களை நலம் விசாரித்து, அவரைப்பற்றிய உண்மை நிலவரத்தை உறுதிப்படுத்தி, வதந்திகளை தவிடு பொடியாக்கினார். அமெரிக்கா சென்று திரும்பியவுடன், முதன் முதலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், மக்கள் திலகம் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்ற தகவலை, மக்களின் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். அந்த சமயத்தில், திரு. பாக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்ட எல்லா தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும், மக்கள் எழுச்சியுடன் கூடி அவரை வரவேற்ற காட்சி, இன்னும் நம் கண்கள் முன்பு தோன்றுகிறது. நமது ஒப்பற்ற புரட்சித்தலைவர் உருவாக்கிய அ .இ.அ. தி. மு. க., 1984 பொது தேர்தலின் போது பெற்ற வெற்றியில் முக்கிய பங்கு திரு. பாக்கியராஜ் அவர்களுக்கு உண்டு.
"அண்ணா நீ என் தெய்வம் " என்ற தலைப்பில், நம் பொன்மனச்செம்மல் அவர்கள் சில காட்சிகளில் நடித்த திரைப்படம், பின்பு அவர் தமிழக முதல்வர் ஆனதால், வெளிவராமல் போனது. திரு. பாக்யராஜ் அவர்கள், இந்த படத்தினை, தனது சாமர்த்தியமான திரைக்கதை அமைப்பினால், சில மாற்றங்களை புகுத்தி,
"அவசர போலீஸ் 100" என்ற தலைப்பில் வெளியிட்டு, மக்கள் திலகத்தின் எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றார் என்பதனை, இத்தருணத்தில், குறிப்பிட விரும்புகிறேன்.
மக்கள் திலகம் தோன்றும் ஒரு சில காட்சிகளுக்காகவே, "அவசர போலீஸ் 100" காவியத்தை பல முறை கண்டு களித்த ரசிகர் - ரசிகைகள் உண்டு. அதன் மூலம், வசூலையும் அள்ளிக் குவித்தது. இது, அப்போது, பரவலாக, பரபரப்புடன் பேசப்பட்டது.
பத்திரிகை நடத்துவது என்பது சிரமமான தொழில். அதிலும், வாரப்பத்திரிகை நடத்துவது மிக மிக கடினமான ஒன்று. இந்த நிலையில், திரு. பாக்கியராஜ் அவர்களை ஆசிரியராக கொண்ட "பாக்யா" வார இதழ், கடந்த 25 வருடங்களாக, வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருப்பது, மிகவும் மகிழ்ச்சிக்குரிய, பெருமைக்குரிய ஒன்று.
http://i59.tinypic.com/14vsdxz.jpg
இன்று பிறந்த நாள் காணும் நடிகர் - இயக்குனர் திரு. பாக்கியராஜ் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன், வளமுடன் வாழ, அனைத்துலக எம்.ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அன்புடன் வாழ்த்துகிறோம்.
If possible [ available], could you please post Daily Thanthi News [1986-87] during that time "எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்கிறார்" as well Sir.
-
-
-