yyyyy :huh:Quote:
Originally Posted by Raikkonen
Printable View
yyyyy :huh:Quote:
Originally Posted by Raikkonen
It's better to close this thread. Started without a purpose and ends here. It would be great if Mods close this away.
G8 man
ஆக்ஷன் படம் எடுத்தா தப்பா...?
குமுறுகிறார் டைரக்டர் பேரரசு
இன்று காலை சூரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் நடந்தது. கே.பாக்யராஜ், ஜனநாதன், பாண்டிராஜ், சற்குணம், பேரரசு, ஏ.வெங்கடேஷ் Perarasuஉள்ளிட்ட ஏராளமான இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். தன் ஆழ்மனதில் பல நாட்களாக புதைந்து கிடந்த சோகத்தை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் பேரரசு. அதுவும் மிகவும் தமாஷாக.
இந்த படத்தின் பாடல்களையும், விளம்பர ஸ்டில்களையும் பார்க்கும் போது படத்தின் இயக்குனர் நம்ம ஆளா இருப்பார் போலிருக்கிறது. அதாவது என்னை மாதிரி கமர்ஷியல் படம் எடுக்கிற ஆளா தெரியுது. யதார்த்த படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது, கடைசியாக இப்படி எழுதுறாங்க. இந்த படத்தில் பஞ்ச் டயலாக் இல்லை, குத்துப்பாட்டு இல்லை. அந்தரத்தில் பறக்கும் ஃபைட் இல்லை. அதனால் நிம்மதியா படம் பார்க்கலாம் என்று.
சரவணபவன் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தா ரசம் நல்லாயிருக்கு. சாம்பார் நல்லாயிருக்குன்னுதான் சொல்ல முடியும். அங்க போய் முட்டை பற்றியும், கறிக்கொழம்பு பற்றியும் பேச முடியுமா? எந்த இடத்தில் என்ன கிடைக்குமோ, அதை பற்றி பேசுவது மட்டும்தான் நியாயம். இனிமேலாவது அப்படி எழுதாதீங்க என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆக்ஷன் படங்களை ரசிக்கிறவர்களுக்காக நாங்க ஆக்ஷன் படங்கள் எடுக்கிறோம். யதார்த்த படங்களை ரசிப்பவர்களுக்காக அந்த மாதிரி படங்கள் எடுக்கிறாங்க. இரண்டையும் ஏன் குழப்பிக்கிறீங்க? இராமாயணம் கதை கூட ஆக்ஷன் கதைதான். இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதுதான் பஞ்ச் டயலாக். அதை தப்புன்னு சொன்னா, நாங்க எடுக்கிற படத்தையும் தப்புன்னு சொல்லுங்க என்று பொறிந்தார்.
இந்த படத்தை எட்டு தயாரிப்பாளர்கள் சேர்ந்து எடுக்கிறார்களாம். ஒரு தயாரிப்பாளரை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் எட்டு தயாரிப்பாளரை எப்படிதான் சமாளித்தாரோ பாலு நாராயணன் என்று இந்த படத்தின் டைரக்டரை பாராட்டினார் பசங்க பாண்டிராஜ்.
சூரன் படத்தின் கதாநாயகனாக கரண் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு, மற்றும் ஷிபாலி ஷர்மா என்று இரு நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
Agree with Perarasu on this.
I will never like those realistic movies.
Signed masala movie fan.
I too support him on one condition.. I shud never ever see his face again on screen.
bharath madhiri amulbaby'ku meesai varanju kaila penakatthi kudutthu kovamaa morachi paatthu punch dialog pesa veppaar... praalayaa...?
Ivaru "panju" dialaak vaikkanumEnu kashtapattu insert panni iruppAr, adhu thaan kaduppA irukkum...