Quote:
ரசிகன் எக்ஸ்பிரஸ்
விஜய் டிவியின் திரைப்பட விருது வழங்கும் விழா, இந்த ஆண்டும் தொடர்
கிறது. ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை டிவி ரசிகர்கள் மூலம் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வரும் விஜய் டிவி, கடந்த ஆண்டில் வெளிவந்த 131 படங்களில் இருந்து விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. இதன் முதற்கட்டமாக `விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ்' வாகனம் ரசிகர்களை சந்திக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பயணப்படுகிறது.
சென்னை மைலாப்பூரில் உள்ள சிட்டி சென்டரில் இருந்து புறப்பட்ட ரசிகன் எக்ஸ்பிரசை அமைச்சர் பரிதிஇளம்வழுதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். திரைப்பிரபலங்கள் ராம.நாராயணன், வி.சி.குகநாதன், பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த வருட தேர்வுக்குழுவில் இடம்பெறும் முக்கிய நபர்கள்: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை ராதிகா, ஒளிப்பதிவாளர் ரவி. கே சந்திரன், நடிகர் ïகி சேது, கார்டூனிஸ்ட் மதன். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி.யில் காணலாம்.