திரு.தாமு அவர்களின் மறைவுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் அத்துணை பேருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
Printable View
திரு.தாமு அவர்களின் மறைவுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் அத்துணை பேருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 4
கே: சிவாஜி தம் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருப்பதேன்? (மைத்ரேயி நடராஜன், மதுரை)
ப: அவர் தன் அன்னையிடம் மிகவும் பக்தி கொண்டவர். அவரது அன்னையார் தான் அவரது வளர்ச்சிக்குக் காரணமானவர். அன்னை மாரியம்மனிடம் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு. இரண்டுக்கும் பொருத்தமாக அன்னை இல்லம் என்று தன் இல்லத்துக்கு பெயரிட்டிருக்கிறார்.
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1970)
அன்புடன்,
பம்மலார்.
ஒய்.ஜி. விழா - 3
விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறப்புரை:
"கடந்த 60 ஆண்டு கால தமிழக வரலாற்றில், தமிழினத்துக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்த பேராசான்கள் இருவர் - ஒருவர் கலைஞர், இன்னொருவர் சிவாஜி. ஆம்! தமிழர்களுக்கு தாய்மொழியாம் தமிழைக் கற்றுக் கொடுத்தவை - கலைஞரின் விரல், சிவாஜியின் குரல். இதை எவரும், எங்கும், என்றும் மறுக்க முடியாது.
கலைஞரும், சிவாஜியும் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள். நான் சிவாஜியுடன் சில வருடங்கள் தான் பழகியிருக்கிறேன். அவருடன் பழகிய அந்த இனிய தருணங்களை, நினைவுகளாக அசை போடும் போது, நான் என்னை மறந்து எங்கோ சென்று விடுகிறேன். எனக்கே அப்படி என்றால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அவருடன் நெருங்கிப் பழகிய கலைஞருக்கு எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிவாஜிக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பாராட்டுக்களை வழங்கியிருக்கலாம். ஆனால், கலைஞரின் ஒரு செய்கை அளித்த பாராட்டைப் போல் அவருக்கு வேறு எவரும் வழங்கியிருக்க முடியாது. ஒரு முறை. தனது இல்லத்தில் தனது அறையில், கலைஞர் அவர்கள் தொலைக்காட்சியில் ஒரு சிவாஜி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிப் பெட்டிக்கும், அவருக்கும் உள்ள இடைவெளி கிட்டத்தட்ட 12 அடிகள். சிவாஜியின் நடிப்பில் அப்படியே மெய்மறந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், சட்டென்று எழுந்தவர், அந்த 12 அடிகளையும் கடந்து, தொலைக்காட்சித் திரைக்கு அருகே சென்று சிவாஜியின் உருவத்தை தொட்டுத் தடவி 'நீ தான்யா நடிகன். உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்' என்று பாராட்டி சிவாஜியின் திரை பிம்பத்துக்கு முத்தமும் கொடுத்தார். இதை விட சிவாஜிக்கு உச்சமான பாராட்டு வேறென்ன இருக்க முடியும். திரையில் வருவது, சிவாஜியின் பிம்பம் என கலைஞரின் உள்ளம் நம்பும். இருப்பினும், அதையும் மீறிய பாராட்டு. தனது நெருங்கிய நண்பன் தலைசிறந்த நடிகன் என்கின்ற பூரிப்பில், பெருமிதத்தில் நட்பினால் வழங்கப்பட்ட பாசப் பாராட்டு.
சிவாஜியுடன் தனக்குள்ள நெருக்கத்தைப் பற்றி, ஆழமான நட்புறவைப் பற்றி, எவ்வளவோ முறை எத்தனையோ சம்பவங்களை என்னிடம் கலைஞர் அவர்கள் கூறியிருக்கிறார். அதில் இரண்டை மட்டும் இன்று இந்த விழாவில் கூறுகிறேன்.
பராசக்தி படம் வெளிவந்து இரவோடு இரவாக (ஒரே இரவில்) சிவாஜி, வெள்ளித்திரையின் உச்சத்திற்கே போய் விட்டார். அடுத்து அவர் நடித்துக் கொண்டிருந்த பணம் திரைப்படத்தில் அதுவரை அவருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. பணம் படத்திற்கும் வசனம் கலைஞர் தான்.
'பணத்திற்கு பணம் வாங்கினாயா, கணேசு' - இது கலைஞர்.
'இல்லை மூனாகனா, இனிமேல் தான் கேட்க வேண்டும்' - இது சிவாஜி.
'எவ்வளவு கேட்கப் போகிறாய்' - கலைஞர்.
'ஒரு பத்தாயிரம் ரூபாய் கேட்கலாம் என்று இருக்கிறேன்' - சிவாஜி.
'அட என்னப்பா நீ, இவ்வளவு குறைத்துக் கேட்கிறாய். உன் திறமை, உன் மதிப்பு உனக்கே தெரியவில்லையே! இன்னும் அதிகமாகக் கேள்' என்று கூறி தன் ஆருயிர் நண்பனுக்கு பணம் சம்பாதிக்கும் வழியையும் பாங்குறக் காட்டினார் கலைஞர். இதைக் கலைஞர் என்னிடம் கூறிய போது அவர்களது நட்பின் ஆழம் என்னை வியக்க வைத்தது.
இன்னொன்று கலைஞர்பால் சிவாஜி வைத்திருந்த அழியாத அன்பைப் பறைசாற்றும். ஒருமுறை சங்கரன் கோவிலில் நாடகம் நடத்தி முடித்து விட்டு நள்ளிரவில் சிவாஜியும், கலைஞரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். கலைஞருக்கோ கடுமையான வயிற்றுவலி. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. சிவாஜி பார்த்தார். தனது ஆருயிர் நண்பனுக்கு மின்னல் வேகத்தில் முதலுதவி புரிந்து வலியிலிருந்து விடுதலைப் பெறச் செய்தார். அப்படி என்னதான் செய்தார் சிவாஜி. அவர்கள் இருவரும் இருந்த அந்த இடத்திற்கு மிக அருகில் ஒரு பெரிய நீர்த்தொட்டி பெருமளவு நீருடன் காணப்பட்டது. அந்த நீர்த்தொட்டியிலே அப்படியே கலைஞரை அலேக்காகத் தூக்கி, 'தொபகடீர்' என்று போட்டு விட்டார் சிவாஜி. சில நிமிடங்கள் நீரில் இருந்த கலைஞர், சிவாஜியால் மீண்டும் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவரது வயிற்றுவலி பறந்து போயிருந்தது. சிவாஜியின் கைவைத்தியம் கலைஞருக்கு பலித்தது. கலைஞரிடம் அவர் வைத்திருந்த அன்புக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!
சிவாஜி நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை அவரது சீடர் ஒய்ஜி நடிப்பதே ஒரு மிகப் பெரிய சவால். ஒய்ஜியின் வெற்றிகரமான இம்முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! சிவாஜிக்கு ஒய்ஜி செய்யும் தலைசிறந்த அஞ்சலி இது. ஒரு மனிதன், மாமேதையாகத் திகழ்ந்து மறைந்த இன்னொரு மனிதனை, எண்ணத்தால் நினைக்கலாம். பேச்சால் நினைவுபடுத்தலாம். எழுத்தால் நினைவுபடுத்தலாம். செயலால் நினைவுபடுத்தலாம். இன்னும் எத்தனையோ வகைகளில் நினைவைப் போற்றலாம். ஆனால், ஒய்ஜி, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தனது மானசீக குருவான சிவாஜியை, தனது உடலால், அங்க அசைவுகளால், தனது நடிப்பால் நினைவு கூர்கிறார். சிவாஜியின் நினைவை இதைவிட சிறந்த முறையில் வேறு எவரும் போற்ற முடியாது. இதை விட உன்னதமான அஞ்சலியை அந்த மகாகலைஞனுக்கு வேறு எவரும் செலுத்த முடியாது. ஆம்! உண்மை. ஒய்ஜிமகேந்திராவின் உன்னத நடிப்பில், அவரது உடல் அசைவுகளில் நாம் சிவாஜியைக் காண்கிறோம். சிவாஜியை மறந்து விட்டு, அவரது நடிப்பை மறந்து விட்டு இந்நாடகத்தை நாம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு, சிவாஜி என்கின்ற காவியக் கலைஞன் நம் அனைவருக்குள்ளும் வியாபித்திருக்கிறார். இந்நாடகத்தின் மூலம் நமக்கு மீண்டும் சிவாஜியை நினைவூட்டிய பொன்விழா நாயகன் ஒய்ஜிமகேந்திரா அவர்கள், இதுபோல் மென்மேலும் பற்பல சாதனைகளைப் புரிய வேண்டும் என என் மனதார அவரை நான் வாழ்த்துகிறேன்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
Joe,
I have watched tribute to Sivaji from Singapore, excellent. Host is very simple and very real like us, just comparing so called big TVs and killing our Tamil. We must appreciate host interviewing different people and getting new details of NT from each one of them. I have watched this video for couple of times and still not boring, I will watch again and gain for few more times this week.
In Australia, I meet lots of Srilankan Tamils and they all simply love our NT's movies and some time old NT movies shown at Srilankan Tamils community gathering.
Cheers,
Sathish
திரு தாமு அவர்களின் மறைவுக்கு அஞ்சலிகள்.
சிவன்கே அவர்களின் பார்த்தால் பசி தீரும் - திரைக்கதை, திறனாய்வு அலசல் - ரசித்து ருசித்தேன். பாராட்டும் நன்றியும்.
பம்மலார் வழங்கும் கேள்வி -பதில்களும்
உரைத்தொகுப்புகளும் - கோயில் பிரசாதங்களாய் வணங்கி அருந்துகிறேன்.
நன்றி அய்யா.
இன்றைய 05.05.2010 சிங்கத் தமிழன் நிகழ்ச்சியுடன் சி.வி.ஆர் - மனோ சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இனி வரும் வாரங்களில் வேறு பிரபலங்கள் பங்கேற்கக் கூடும்.
இன்று சி.வி.ஆர். மிகுந்த மன நெகிழ்ச்சியுடன் காணப் பட்டார். நடிகர் திலகம் மறைய மாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும் ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து வி்ட்டதாகவும் கூறினார்.
பிரபுவின் திரையுலகப் பிரவேசம், மகன்-தந்தை உறவை தொழிலில் ஈடுபடுத்தாமல் அவருக்கு ஈடாக நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் நடித்ததை நினைவு கூர்ந்தார். மற்றும் ஒன்ஸ் மோர் படத்தில் நடிக்க வைத்ததைப் பற்றியும் சிலாகித்துக் கூறினார்.
முத்தாய்ப்பாக அவர் கூறிய ஒரு நடந்த நிகழ்ச்சி மிகவும் புல்லரி்க்க வைத்தது. 81வது பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சேலம் சென்ற பொது ஒரு இளைஞனைப் பார்த்ததாகவும் அவர் 25 முறை நேர்காணல் சென்றும் எதுவும் பயனில்லை என்று வருந்தியதாகவும் சொன்னார். உடனே அவர் அந்த இளைஞனிடம் சொன்னாராம் - வருத்தப் படாதே, இந்த நேர்காணலை நீ நிச்சயம் பங்கேற்க வேண்டும். நிச்சயம் உன்னுடைய தகுதியைப் பற்றிக் கேட்பார்கள். அப்போது நீ சொல்ல வேண்டியது, நான் குறைந்தது 50, 60 சிவாஜி படங்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொல் என்றாராம். பின்னர் மறுமுறை அந்த இளைஞனைச் சந்திக்க நேர்ந்த போது அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுடன் இவருக்கு நன்றி நவின்றானாம். சி.வி.ஆர். அவர்கள் காரணம் கேட்ட போது, அந்த இளைஞன் - நீங்கள் சொன்னது போன்றே நான் சிவாஜி படத்தைப் பார்த்தது பற்றி சொன்னேன். உடனே எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றானாம். சி.வி.ஆர் அந்த இளைஞனை வாழ்த்தினாராம். பின்னர் அந்த இளைஞனுக்கு வேலை கொடுத்த நிர்வாகியிடம் கேட்டாராம். அதற்கு அந்த நிர்வாகி சொன்னாராம். சிவாஜி படங்களில் 50, 60 படங்களைப் பார்த்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவருடைய நற்குணங்கள் அவனிடம் குடி புகுந்திருக்கும் . ஏனென்றால் அவர் படங்களைப் பார்த்து அவருடைய நற்குணங்கள் என்னிடம் குடி கொண்டுள்ளன. அதே போல் இந்த இளைஞனும் ஒழுங்காக வேலைக்கு நேரத்தோடு வருவான் என்று கூறினாராம்.
இந்த சம்பவத்தைக் கூறிவிட்டு, நடிகர் திலகம் எவ்வளவு பெரிய மகான் என சிலாகித்தார் சி.வி.ஆர்.
நடிகர் திலகம் மகான் என்பதில் ஐயம் உண்டோ
ராகவேந்திரன்
டியர் முரளி சார், ராகவேந்திரன் சார்,
பல்கலைக்கழகங்களாகிய தாங்கள் வழங்கிய பட்டங்களுக்கு எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்!
திரு.சிவன்கே,
பார்த்தால் பசி தீரும் - திரைக்கதை, திறனாய்வு - எல்லாமே பிரமாதம். தங்களது அழகிய எழுத்து நடை, மீண்டும் ஒரு முறை இக்காவியத்தைக் கண்டு களித்த திருப்தியை ஏற்படுத்தியது.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணாஜி, திரு.காவேரிக்கண்ணன், திரு.சதீஷ்.
Mr.Joe, Thanks a lot for the stupendous links!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 5
கே: நடிகர் திலகம் அமெரிக்கா போகிறாரே, அவருக்கு ஆங்கிலம் தெரியுமா? (மிஸ்.பியூலா எலிசபெத், கோவை)
ப: இதையே அவருக்கு ஆங்கிலத்தில் எழுதிக் கேளுங்கள். அழகாக அவரிடமிருந்து ஆங்கிலத்திலேயே பதில் வரும்!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1961)
அன்புடன்,
பம்மலார்.
"சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்குக் காலமுண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டையேறி"
என்று அன்னை மாரியம்மனிடம் பக்திப் பெருக்குடன் முழங்கிய மூக்கையா சேர்வைக்கு நாளை (6.5.2010) 39வது ஜெயந்தி!
பட்டிக்காடா பட்டணமா
6.5.1972 (ஸ்திர வாரமான சனிக்கிழமை)
156வது காவியம் (132வது கருப்பு-வெள்ளைக் காவியம்)
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கோலாகல வெள்ளி விழா (26 வாரங்கள்)
9 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல்
கிட்டத்தட்ட திரையிட்ட சகல ஊர்களிலும் 50 நாட்களுக்கு மேல்
ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் ஈட்டிய ஒரே தமிழ் கருப்பு-வெள்ளைக் காவியம்
இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகள்! எண்ணினால் எண்ணிலடங்கா!! எழுதினால் ஏட்டிலடங்கா!!!
உலக கருப்பு-வெள்ளை சினிமாவின் நிரந்தரப் பெருமை, பட்டிக்காடா பட்டணமா.
சத்தியத்திற்கும் நாளை (6.5.2010) 35வது ஆண்டு ஆரம்ப விழா!
அன்புடன்,
பம்மலார்.
Patti Kada Pattanama vil annan anintha cooling glass appo romba famous.
Nalvazthu nan solluven nalla padi vazga vendru
B'lore la intha padathukku romba nalla varaverpu endru ennudaya college professor solluvar.
aramabame super pattu-ambigaie easwariye
ennai alavandu koil konda kumguma kari
patti thoti engum ella koil vizhavilum intha pattu speaker la poduvanga-
kudumi uncle endru JJ koopiduvathu azagu
Iyakunar PMadhavan thantha super padam!