-
டியர் mr_karthik,
தாங்கள் வழக்கம் போல் என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்துவிட்டீர்கள் ! தங்களுக்கு எனது வளமான நன்றிகள் !
தாங்கள் குறிப்பிட்டது போல், "பாகப்பிரிவினை"யுடன் மோதாமல் இருந்திருந்தால் "அவள் யார்" வெற்றிவிகிதத்தில் அசத்தியிருக்கும் ! எனினும் தரமான படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !
Dear sankara1970, Thanks !
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பைலட் பிரேம்நாத்
[30.10.1978 - 30.10.2011] : 34வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 6.11.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC4907-1.jpg
'பெங்களூரூ' வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4906-1.jpg
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 17.12.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC4910-1.jpg
100வது நாள் விளம்பரம் (சென்னை) : தினத்தந்தி : 6.2.1979
http://i1110.photobucket.com/albums/...GEDC4905-1.jpg
வெள்ளிவிழா விளம்பரம் (இலங்கை) : யாழ்ப்பாணம் ' வின்ஸர்' திரையரங்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4908-1.jpg
குறிப்பு:
"பைலட் பிரேம்நாத்" இந்தியாவில் 102 நாட்களும், இலங்கையில் 222 நாட்களும் [ஷிஃப்டிங் முறையில் 1080 நாட்களுக்கு மேல்] ஓடிய இமாலய வெற்றிக்காவியம். இலங்கையில் 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
[ஊர் - அரங்கு - ஓடிய நாட்கள் என்கின்ற விகிதத்தில்]
1. கொழும்பு - கெப்பிடல் - 189 நாட்கள்
2. கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்
3. யாழ்ப்பாணம் - வின்ஸர் - 222 நாட்கள்
4. வெள்ளவெத்தை - சவோய் - 189 நாட்கள்
5. திரிகோணமலை - லட்சுமி - 105 நாட்கள்
6. மாத்தளை - சென்ட்ரல் - 101 நாட்கள்
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
Nantri Pammalar
Pammalar sir,
There is no word to describe for your service to our god, please keep rocking...
Cheers,
Sathish
-
http://xa.yimg.com/kq/groups/5389531...e/scan0001.jpg
SIVAJI GANESAN AWARD - 2011
------------ --------- --------- --------- --------- ---
AN INVITATION
The Sivaji Ganesan Cultural Society of Malaysia has been presenting the
prestigious Sivaji Ganesan Award annually in honour of the great actor to
deserving local artistes in the field of acting on stage dramas, TV
serials, telemovies or local films. The award comes with a Memento,
Certifcate and Cash prize of RM1,000 and RM500 for a upcoming artiste. The
selection process is on going for the year 2011 Awards. VELLA POVATHU
YAARU?. Winners would be honoured on stage with maalai and ponnadai during
the "Sivaji Ganesan Vizha" to be held on 17 Nov, 2011 at Tan Sri KR Soma
Auditorium at 7pm.
Admission to the event is FREE. You will be entertained to songs, music and
dances from the movies of Sivaji Ganesan. A special talk on Sivaji Ganesan
would be in the programme. Light refreshments and snacks would be served
from 6pm onwards.
See you all at the venue on Nov 17, 2011.
Thanks you
Yours Sincerely,
Eashvara Lingam
Organizing Chairman
tel: 016-6880455
-
டியர் ராகவேந்திரன் சார்,
சொர்க்கம் பேசும்படம் விளம்பரம், பொம்மை விளம்பரம், பொம்மை மாத இதழ் எங்கிருந்தோ வந்தாள் படப்பிடிப்பு செய்தித் தொகுப்பு, மனோகரா தெலுங்கு திரைக்காவிய பாடல் வீடியோக் காட்சி என்று அனைத்து பதிவுகளையும் அற்புதமாக வழங்கி ஆனந்தப் பட வைத்து விட்டீர்கள். நன்றிகள் பல.
அன்பு பம்மலார் சார்,
"சொர்க்கம்" பதிவுகள் சொக்கத் தங்கம்.
"எங்கிருந்தோ வந்தாள்" பதிவுகள் எங்கிருந்தாலும் மறக்க முடியாதவை.
"பைலட் பிரேம்நாத்" விளம்பரங்கள், இலங்கையில் நம் பைலட் அவர்களின் நெருங்கவே முடியாத சாதனைப் பதிவுகள் அனைத்தும் அதி அற்புதம்.
குறிப்பாக "அவள் யார்" பதிவுகள் அளவில்லா ஆச்சர்யங்கள். இப்படியும் ஒரு மனிதரால் பதிவுகளை அளிக்க முடியுமா! இந்த அளவுக்கு ஒரு மனிதரால் உழைக்க முடியுமா! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. ('சுவாமி' எனும் சுனாமி நாலா திசைகளிலும் ஆதாரப் புயலுடன் சுழன்று எதிரிகளே இல்லாமல் செய்து, நமது திரியை பகை கொண்டு யாரும் நெருங்க முடியாத நெருப்புச் சூரியனாய், ஆயிரம் ஆதாரங்களை ஆணித்தரமாய் காட்டி அணைக்கின்ற தாயாய், அந்தத் தாய் சேயைக் காப்பது போல் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்ள இருக்கையில் எங்கள் அனைவருக்கும் என்ன கவலைகள் இருக்கப் போகிறது? )
இப்பேர்ப்பட்ட அற்புத ஆவணங்களை அள்ளித் தரும் பாசமிகு பம்மலாரே! உங்கள் இந்தத் திருப்பணியைப் பற்றி என்னத்த சொல்ல!
மலைப்புடன்,
வாசுதேவன்.
-
டியர் கார்த்திக் சார்,
தங்கள் அன்புக்கு நன்றி. தங்களுடைய ஆதங்கம் நூற்றுக்கு நூறு சரியே. நிச்சயம் நம் எண்ணம் ஈடேறுவது திண்ணம்.
அன்பு முரளி சார்,
பசுமையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு எங்களையும் அந்த நினைவுகளில் மூழ்கச் செய்து விட்டீர்கள். 29.10.1970 தீபாவளித்திருநாள் அன்று என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் காட்சி காலைக் காட்சியாக கடலூர் நியூசினிமா திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாளும், மேட்னி ஷோ பாடலி திரையரங்கில் சொர்க்கமும் என் தாயார் அவர்களுடன் கண்டு மகிழ்ந்தது பசுமையாக நினைவில் நிற்கிறது. திரை அரங்குகளில் நடந்த அலப்பரைகளைக் கண்டு அந்த சிறு வயதில் அரண்டு மிரண்டு போனது இன்றும் மனதை விட்டு அகலவில்லை.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு அடியேனின் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
-
வெற்றி முழக்கமிட, நேர்மையை நிலைநாட்ட, வீர நடை போட்டு வருகிறார்
எஸ்.பி.சௌத்ரி
விரைவில்...
வெளியீடு - எம்.எல்.கான்
http://i872.photobucket.com/albums/a...12011-12fw.jpg
-
Nov சார்,
மலேசியாவில், நடிகர்திலகம் பெயரில் வழங்கப்படும் விருதுக்கான விழா பற்றிய அறிவிப்புக்கு மிக்க நன்றி. தமிழ்க்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது என்ற வரிகள் மனதை மகிழ்ச்சியாக்குகின்றன.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உச்சமான புகழுரைக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
Dear goldstar, Thanks a lot !
அன்புடன்,
பம்மலார்.