நன்றி சாரதா
தொல்ஸ்-ன் ஒவ்வொரு செயல்பாடும் இனி உங்களுக்கு அத்துபடியாகப் போகின்றது
1500 ...
Printable View
நன்றி சாரதா
தொல்ஸ்-ன் ஒவ்வொரு செயல்பாடும் இனி உங்களுக்கு அத்துபடியாகப் போகின்றது
1500 ...
‘இன்ஸ்பெக்டர் என்ன சொல்றீங்க?. என்னுடைய ஆஃபீஸை சோதனை போடணுமா? எதுக்கு?.’
‘இதோ நிற்கிறாரே இந்த கார்த்திக், இவர் முன்னர் வேலை பார்த்த மிஸ் மேனகாவின் ஆஃபீஸிலிருந்து முக்கியமான ஃபைலை திருடிக்கொண்டு வந்துவிட்டார்’.
‘நோ இன்ஸ்பெக்டர், நான் அப்படிப்பட மோசமான ஆள் இல்லை. நான் வரும்போது அங்கிருந்து எந்த ஃபைலையும் திருடி வரவில்லை. இது அபாண்டமானது’
‘இன்ஸ்பெக்டர், ஒரு விஷயம். கார்த்திக் மேனகாவிடமிருந்து ஃபைலை திருடி வந்துட்டார்னு சொல்றீங்க. அதுக்காக என்னுடைய ஆஃபீஸை ஏன் சோதனை போடணும்’
ரவி குறுக்கிட்டு, ‘சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க அபி. இந்த கார்த்திக் திருடிக்கொண்டு வந்த ஃபைலை உங்க கிட்டேதான் கொடுத்திருக்கார்’.
‘யூ ஷட் அப்….’ ‘இன்ஸ்பெக்டர் நீங்க தாராளமா என் ஆஃபீஸை சோதனை போடலாம்’.
சோதனை ஆரம்பிக்கும் முன்னர் ரவி திடீரென அபியின் மேஜையிலுள்ள ஃபைலைக்காட்டி, ‘இன்ஸ்பெக்டர் இதோ இந்த ஃபைலாகத்தான் இருக்கணும்’ கையில் எடுத்துப் புரட்டிப்பார்த்து ‘ஆமா இன்ஸ்பெக்டர், இந்த ஃபைலேதான் இதைத்தான் திருடி வந்திருக்கார் இந்த ஆள்’
‘ரொம்ப யோக்கியம் மாதிரி பேசினீங்க இப்போ என்ன சொல்றீங்க அபி’
‘நான் வெளியில் போய்விட்டு இப்போதான் வந்தேன், நான் வந்தபிறகுதான் கார்த்திக் வந்தார். இந்த ஃபைல் எப்படி என் டேபிளுக்கு வந்ததுன்னே எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி நடந்திருக்கு’
‘மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் கோர்ட்ல வந்து சொல்லுங்க, கார்த்திக் எங்களோடு வாங்க’.
இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தவாறு ஆஃபீஸுக்குள் நடந்துகொண்டிருக்கும் அபியிடம் கிருஷ்ணன் வந்து. ‘என்னம்மா இப்படி ஆயிடிச்சு’.
‘கிருஷ்ணன் உடனே நம்ம அட்வகேட்டுக்கு போன் பண்ணி அவரை வரச்சொல்லுங்க’.
கோர்ட்…….. குற்றவாளிக்கூண்டில் கார்த்திக்…..
பார்வையாலர்கள் பெஞ்சில் அபி, மேனகா, ஆதித்யா, கிரி, ரவி, ஜெனிஃபர், கிருஷ்ணன்….
அரசு தரப்பு வக்கீல் தனது வாதத்தை எடுத்துரைக்கிறார். மேஙாவிடம் கார்த்திக் வேலை பார்த்தது, அபியின் தங்கை ஆனந்திக்கும் அவனுக்கும் திருமணம் நடக்க இருப்பது, அதனால் மேனகாவை எதிர்த்தது, மேனகாவிடமிருந்து விலகியது, ஆனந்தியுடன் சேர்ந்து பத்திரிகையில் எழுதுவது என்று எல்லா விவரங்களையும் எடுத்துக்கூறியவர் ‘ஆகவே கார்த்திக்தான் ஃபைலை திருடியிருக்கிறார்’ என்று முடிக்க….
அபி தரப்பு வக்கீ மேனகா, அதித்யா இவர்களைப்பற்றி எழுதியதால் ஆனந்திமீது நடந்த கொலை முயற்சியையும், அதைத் தட்டிக்கேட்டதற்காக மேனகா கார்த்திக்கை வெளியேற்றியதையும், அந்தக்கோபத்தில் மேனகா கார்த்திக்கைப் பழிவாங்க இப்படி ஒரு நாடகம் ஆடியிருப்பதையும் சுட்டிக்காட்டி, கார்த்திக்தான் திருடினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்று கூறி வாதாட…….. அதற்கு அரசு வக்கீல்…
‘நல்ல வேடிக்கை, காணாமல்போன ஃபைல் அபியின் டேபிளிலேயே கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது, இதைவிட என்ன ஆதாரம் வேன்டும்?’
‘அரசு வக்கீல் சொல்வதுபோல அவர் திருடி அபியிடம் கொடுத்திருந்தால், அதைப்பத்திரமாக ஒளித்து வைக்காமல் யாருடைய பார்வையிலும் சட்டென்று படுகிற மாதிரி போட்டு வைப்பார்களா?. எனவே கார்த்திக் மீது எந்த தவறும் இல்லாததால் அவரை ஜாமீனில் விடுவிப்பதுடன், இந்த வழக்கில் இருந்தும் விடுதலை செய்ய வேண்டும்’.
‘இருதரப்பு வாதங்களையும் கேட்டதில், கார்த்திக்கை ஜாமீனில் விடுவிக்க கூடாதென்பதற்கு போதுமான காரணங்கள் சொல்லப்படவில்லை. எனவே அவரை நிபந்தனையற்ற ஜாமீனில் இந்த கோர்ட் விடுவிக்கிறது’.
அபிக்கும் கார்த்திக்கிற்கும் முகத்தில் நிம்மதி, மேனகா, ஆதி முகத்தில் அதிர்ச்சி கலந்த எமாற்றம். கோர்ட் வரண்டாவில் நடந்துசெல்லும்போது, அபி ‘கார்த்திக், எங்களல்தான் உங்களுக்கு இந்த கஷ்ட்டமெல்லாம், என்மீதுள்ள உள்ள் கோபத்தில்தான் அந்த மேனகா உங்களைப்பழி வாங்குகிறாள்’
‘அதெல்லாம் இல்லீங்க, நான் அவளை விட்டு விலகியதில் கோபம், அதுதான் காரணம்’.
‘ஆனந்திக்கு சப்போர்ட் பண்ணித்தானே விலகினீங்க, அப்படீன்னா அந்த கோணத்தில் பார்த்தாலும் நாங்கதானே காரணம்?’
அப்போது அவர்களைக் கடந்து போகும் மேனகா, ‘ஏய் அபி, ஜாமீன் கிடைச்சிடுச்சுன்னு சந்தோஷப்படாதே, இது த்ற்காலிக வெற்றிதான். இவன் பண்ணிய காரியத்துக்கு இவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’.
‘இதோ பார் மேனகா, உனக்கும் எனக்கும்தான் போட்டி, அதுக்காக சம்மந்தம் இல்லாதவர்களையெல்லாம் ஏன் பழி வாங்கறே?’
‘என்னுடைய ஃபைலை திருடி உன்கிட்டே கொடுத்த இவன் சம்மந்தமில்லாதவனா?. நீ இப்படி அடுத்தவங்க ஐடியாவைத்திருடி பிஸினஸ் பண்றதை விட, தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுக்கலாம். நான் யாரு, என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியாம என்கிட்டே மோதுறே, கூடிய சீக்கிறம் அதன் பலனை அனுபவிப்பே’
(மேனகா இன்னும் கூட கார்த்திக்தான் அந்த ஃபைலை திருடி அபியிடம் கொடுத்திருப்பதாகவே நம்புகிறாள். அதனால்தான் அவளது கோபம் உண்மையான கோபமாக ஆவேசமாக வெளிப்படுகிறது. ஆனால் இது ஆதியின் தகிடுதத்த வேலை என்பது அவளுக்கு தெரியாதே. ஆனால் அபியோ இது, தன்னையும் கார்த்திக்கையும் மாட்டிவிட மேனகா செய்த சதியென்றே நினைப்பதால் அவளது கோபமும் முழுக்க மேனகா மீதுதான் திரும்புகிறது. பாண்டவர்களையும் கௌரவர்களையும் நேருக்கு நேர் மோதவிட்டு, தள்ளி நின்று தாடியை சொறிந்துகொண்டே கள்ளச்சிரிப்பு சிரிக்கும் சகுனியின் அதே சிரிப்பு ஆதியின் முகத்தில். இவன் தாடியில்லாத, கூலிங்கிளாஸ் அணிந்த சகுனி).
:ty: சாரதா
I can't believe how much the story has changed. I can't even remember who use to be the good guy and who use to be the villain :? . They all keep changing and then changing back again. I guess thats what Thols have to do in-order to keep the serial going.
Thols had ONLY 1 project and its Kolangal ONLY.
so he is taking for his life time.
let him not take our life :wink:Quote:
Originally Posted by aanaa
kolankal story ..
1 day serious
second day - dragging
so we can guess what could have happened today ....
:-)
நேற்றைய (TUESDAY) எபிசோட் முழுக்க சொதப்பல்...................
ஃப்ராடு மாப்பிள்ளை ஊற்றிக்கொடுக்க திருவேங்கடமும் தங்கராசும் மதுவருந்திக்கொண்டிருக்கின்றனர். (வர வர சீரியல்களுக்கும் சென்ஸார் வந்தால் தேவலை, இப்படி குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள் குறையும்). மருமகன் வழக்கம்போல உலக அரசியல் அது இது என்று திருவேங்கடத்தை விட அதிகமாக பிதற்றுகிறான். ‘உலக அரசியலே நான்கு விஷயங்களைச் சுற்றியே அமைந்துள்ளது, அவை ஜாதி, மதம், இனம், நிறம்… இவற்றில் இனம், நிறம் இவையிரண்டும் நம் நாட்டுக்கு பொருந்தாது மற்ற இரண்டில் குறிப்பாக ஜாதியைப் பிடித்துக்கொண்டு அரசியல் பண்ணினால் ரொம்ப சீக்கிரம் முன்னுக்க வந்து விட முடியும் அதற்கு முதற்கட்டமாக நம்ம ஜாதிக்காரனை ரகசியமாக நாமே ஆள் வைத்து அடித்துவிட்டு பின்னர் அடிவாங்கியவனுக்காக போராட்டத்தில் இறங்க வேண்டும், அதுபோல நம்ம ஜாதி தலைவர் சிலைக்கு ரகசியமாக நாமே செருப்பு மாலை அணிவித்து விட்டு, பின்னர் பகிரங்கமாக ‘சிலை அவமதிப்பு போர்’ என்று களத்தில் குதிக்க வேண்டும், இப்படியெல்லாம் செய்தால்தான் சீக்கிரம் முன்னேற்றம் காண முடியும்’ என்று கூற அவனுடைய பிதற்றல் திருவேங்கடத்துக்கு ரொம்ப பிடித்துப்போகிறது. (உண்மையில் இது பிதற்றல் அல்ல, இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடுதான். இன்றைக்கு எந்த தலைவனும் தலைவியும் ‘பாடுபடும் ஏழைக்கு பசிக்கு உணவுக்காக’ போராடுவதில்லை. அப்படிப்போராடுவதாக பாவலா பண்னுபவர்களும் தான் ஆட்சி செய்தபோது மட்டும் என்ன வாழ்ந்தது என்று சிந்திப்பதில்லை).
தோழரும் தொல்காப்பியனும் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். கார்த்திக் மீது அநியாயமாக குற்றம் சுமத்தி பழிவாங்கும் மேனகாவின் செயலைக்குறித்து தோழர் ஆவேசப்படுகிறார். 'இதற்காக இவர்களின் உயிரை எடுத்தாலும் தப்பில்லை' என்று சொல்ல, பதிலுக்கு தொல்ஸ், 'தோழரே உயிரை எடுக்கும் உரிமை நமக்கேது?' என்று கேட்க, 'அப்படியென்றால் அந்த உரிமை கடவுளுக்குத்தான் என்கிறீர்களா?' என்று தோழர் பதிலுரைக்க, 'இந்த சதிவேலைகளுக்கு மேனகாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, அபிக்கு எதிரான ஒவ்வொரு சதிக்குப்பின்னாலும் அந்த ஆதியின் ஆலோசனையும், பங்கீடும், செயல்பாடும் முக்கியமாக இருக்கிற்து' என்று தொல்காப்பியன் சொல்ல, 'ஏன் தொல்காப்பியன், மேனகாவுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீங்கள் மென்மையான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்?' என்று மடக்க, 'அதன் காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என்று சொல்லி தொகாப்பியன் விடை பெற்றுச்செல்ல, தோழர் தன் இருப்பிடத்துக்குப்போகிறார்.
வேலையில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் சுமதி, வழியில் தன் மோசடிக்கணவன் நிற்பதையறிந்து, அவனைக்கண்டுகொள்ளாமல் கடந்துபோக, அவன் பின்தொடர்ந்து வந்து, 'தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு' கேட்க, அவள், 'நீ யாரென்றே எனக்கு தெரியாது. உன்னோடு நான் ஏன் சேர்ந்து வாழ வேண்டும்?' என்று பதிலளித்துவிட்டு வேகமாக நடக்க, அவனும் விடாமல் வந்து வம்பு பண்ண, சுமதி ரோட்டில் போவோரை உதவிக்கு அழைக்கிறாள். அவர்கள் வந்து விசாரிக்கும்போது, 'தான் எம்.எல்.ஏ.யின் மருமகன்' என்று அவன் கூறுவதை மறுத்து 'இவன் யாரென்றே எனக்கு தெரியாது. அப்படியிருக்க தன்னோடு வாழ வரும்படி தொந்தரவு செய்கிறான்' என்று சுமதி கூற.... கூட்டத்தினர் 'அப்படியா, நீ போம்மா நாங்க இவனை கவனிச்சுக்கிறோம்' என்று சொல்லி அவனுக்கு தாராளமாக அடிகளை வழங்க, அந்த சந்தடியில் அவள் தப்பிச் செல்கிறாள்.
தெரிந்த விடயம்தானேQuote:
Originally Posted by saradhaa_sn
:notworthy:
BUT WEDNESDAY EPISODE WAS INTERESTING AANAA... ESPECIALLY 'MENAKA & TOLS MEET' AND 'USHA & THOLS MEET'... (follows)......
‘சொல்லுங்க, எதுக்காக என்னைப்பார்க்கனும்ணு சொன்னீங்க?’
தன்னுடைய பண்ணை வீட்டில் இரவு நேரத்தில் தன்னை சந்திக்கும் தொல்காப்பியனிடம் மேனகா கேட்க, ‘முதல்ல யாருக்குமே அனுமதி கொடுக்காத இந்த பண்ணை வீட்டில் என்னை சந்திக்க அனுமதி கொடுத்த உங்களுக்கு தேன்க்ஸ்’
‘சரி, வந்த விஷயத்தை சொல்லுங்க’
‘அந்த கார்த்திக் இருக்காரே அவர் ஒரு அப்பாவி. அவரை உங்களுடைய பிஸினஸ் போட்டியிலே ஏன் இழுக்குறீங்க?’
‘அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான், அப்படியிருக்க அவனுக்காக நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க’.
‘இப்படித்தான் மேனகா நீங்க சின்னக்குழந்தையா இருந்தபோது எதையும் கத்தி அழுது சாதிப்பீங்க, இப்பவும் அப்படித்தான், ஒரு மாற்றமா கோபத்தோடு அடம்பிடிச்சு சாதிக்கிறீங்க. நானும் அம்மாவும் உங்க மேலே எவ்வளவு அன்பு வச்சிருந்தோம் தெரியுமா?’
‘ஷட் அப்… திரும்ப திரும்ப நீங்க பழைய கதைகளை பேசாதீஙன்னு பலதடவை உங்களுக்கு சொல்லியிருக்கேன், கொஞ்சம் நிறுத்துறீங்களா? இப்போ வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க’
‘இதோ பாருங்க மேனகா அந்த அபி ரொம்ப நல்லவங்க, அவங்களை நீங்க உங்க எதிரியா நினைக்கிறது சரியில்லை, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அந்த ஆதிதான் எல்லா குழப்பங்களையும் பண்ணிக்கிட்டு இருக்கார்’.
‘என் கிட்டே இருந்தவனை பிரிச்சிக்கிட்டுப் போய் இப்ப எனக்கு எதிராக செயல்பட்டுக்கிட்டு இருக்கிறவ நல்லவளா? நான் இந்தியாவுக்கு வந்ததுமுதலே அபியை என் எதிரியா நினைக்கிறேன். இதுக்கு மேலே நான் பேச விரும்பலை, நீங்க போகலாம்’
திருவேங்கடத்தின் வீடு…. தான் சுமதியை சந்தித்து அவளிடம் பேசப்போக, தெரு ஜனங்கள் எல்லாம் கூடி தன்னை நன்றாக மொத்தி அனுப்பியதை மாமனாரிடம் மோசடி மாப்பிள்ளை சொல்ல, அவரோ அதை சட்டை பண்ணுவதாக இல்லை. ‘உங்க மகள் ரொம்ப மோசமானவள்’ என்று சொல்லும் மருமகனிடம் ‘அப்படீன்னா ஏன் அவளுடன் சேர்ந்து வாழனும்னு நினைக்கிறே? அவள் என்னையே அப்பா என்று மதிக்காதவள்’ என்று சொன்னவர் திரும்பவும் தன் அரசியல் உளறல்களைத் தொடர்கிறார் (அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டால் நமக்கு தலை சுற்றும். இந்த வசனங்களை யாரும் எழுதிக்கொடுக்கிறார்களா அல்லது ராமச்சந்திரனை தானே பேச விட்டுட்டாங்களா தெரியவில்லை). ஒருகட்டத்தில் மாமனாரை மடக்க, தான் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கும் டயல்டோனைப்போட்டுக்காட்ட அதில் ‘அண்ணன் திருவேங்கடம் வாழ்க, தானைத்தலைவன் திருவேங்கடம் வாழ்க, வருங்கல முதல்வர் திருவேங்கடம் வாழ்க’ போன்ற கோஷங்கள் பதிவாகியுள்ளன. புகழ்ச்சி கோஷத்துக்கு மயங்கிப்போகும் திருவேங்க்டம், தன் மாப்பிள்ளைக்காக அவனுடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாக சொல்கிறார்.
காஞ்சனாவின் வீடு..... ஆதி, ரேகா, மனோ அனு, கிஷோர், அர்ஜுன் (இவன் எங்கிருந்து வந்தான்?)... என எல்லோரும் ஆஜராயிருக்க, காஞ்சனா ஆவேசமாகப் பேசுகிறாள். அபி நடத்த்போகும் விழா மட்டும் நடந்துவிட்டால் தான் ஈஸ்வரனின் ‘சின்ன வீடு’ என்று எல்லோரும் பேசுவார்கள் என்றும் அது தனக்கு மட்டுமல்ல அவர்கள் எல்லோருக்குமே அவமானம்தான் என்றும் கத்தும் அவள், அப்படி நடந்துவிட்டால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும் மிரட்டுகிறாள். உலகமே அழிந்தாலும் கலங்காத ஆதி, அம்மாவின் இந்த வார்த்தைக்கு மட்டும் ஆடிப்போகிறான்.
‘இதைத்தடுக்க, முதலில் அப்பா இருக்கும் இடத்தைக்கண்டு பிடிக்கவேண்டும்’ என்று மனோ சொல்ல, அதற்கு அர்ஜுன் ‘ஏன், அவர் இருக்கும் இடம் உனக்கு தெரியாதா? உங்க அக்காதானே அவரைக் கடத்தி ஒளிச்சு வச்சிருக்காங்க? இப்போ இங்கே வந்து ஒண்ணும் தெரியாதவன் மாதிரி பேசுவது யாரை ஏமாத்த?’ என்று கேட்க, அவர்களுக்குள் வாய்ச்சண்டை முற்றுகிறது. இடையில் புகும் ஆதி, அர்ஜுனைத்திட்டுகிறான். ‘நீங்க இப்படி சண்டை போட்டுக்கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை, முதலில் உங்க அப்பாவைக் கண்டுபிடிக்கணும்’ என்று கிஷோர் சொல்ல, ஆளுக்கொருபக்கம் கலைந்து போகின்றனர். இத்தனை நாள் கழித்து வந்த கணவனை ரேகா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ஒரு உயரமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் இரவு நேரத்தில் தொல்காப்பியனைச் சந்திக்கும் உஷா, தன்னை அவன் அழைத்த காரணத்திக்கேட்க, அதற்கு தொல்ஸ், ஆதி உஷாவுக்கு விட்டிருக்கும் டைவர்ஸ் மிரட்டல் பற்றிச் சொல்லி, அதுபற்றி உஷா ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்று கேட்க அவளோ, ஆதியிடமிருந்து பிரிந்து போவதுதான் தனக்கு நிம்மதியான வாழ்க்கையென்றும் தன்னுடைய மிச்ச வாழ்க்கைக்கு தன்னுடன் இருக்கும் தன் மகன் போதுமென்றும் கூறுகிறாள்…
‘இதோ பாருங்க உஷா, நம்முடைய நட்பு உங்க வாழ்க்கைக்கு இடையூறா இருக்கக்கூடாது. முன்னர் இப்படித்தான் எனக்கும் அபிக்கும் இடையே இருந்த தூய நட்பைக் கொச்சைப்படுத்தி கோர்ட்டில் சொல்லி பாஸ்கர் அபியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இப்போ ஆதியும் அதே வழியைக்கையாள்கிறார்’
‘இதோ பாருங்க தொல்ஸ், பாஸ்கரைப்பற்றியும், ஆதியைப்பற்றியும் நமக்குத்தெரியும். அப்படியிருக்க அவங்க என்ன சொல்வாங்கன்னு ஏன் பயப்படணும்?. நான் பாஸ்கரையோ, ஆதியையோ வைத்து இந்த உலகத்தை எடைபோட விரும்பவில்லை (ஆகா… இது முன்பு இந்த சாரதா சொன்ன அதே வார்த்தைகள்……!!!!). எனக்கு என் மகன் இருக்கிறான், என்மீது அன்பைப்பொழியும் அப்பா அம்மா இருக்காங்க, அதோடு நல்ல நண்பராக நீங்க இருக்கீங்க… என்னுடைய மிச்ச வாழ்க்கைக்கு இதுபோதும் தொல்ஸ். எனக்காக நீங்க மனசைப்போட்டு குழப்பிக்காதீங்க. பசிக்கிறது… வாங்க நிம்மதியா டின்னர் சாப்பிடுவோம்’
கட் அண்ட் ரைட்டாக (அதாவது தெளிவாக) பேசிவிட்டு உஷா படியிறங்கிப்போக, தொல்காப்பியன் பின்தொடர…….