பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,
ஆரம்பமாகிவிட்டது அடுத்த அட்டகாசம். சாதாரண படங்களுக்கே விளம்பர அணிவகுப்பைத்தந்து அசத்துவீர்கள். திருவிளையாடலோ சாதனைப்படம், வெள்ளிவிழாப்படம். கேட்கணுமா?. ஒரே அதகளம்தான் போங்க.
உண்மையில் நினைக்க நினைக்க ஆச்சரியமாக வே இருக்கிறது. நமக்கு நினைவுதெரிந்த நாள் முதல், இந்த விளம்பரங்களை தினத்தாள்களில் வெளியாகும்போது பார்த்ததோடு சரி. ஆனால் அவற்றையெல்லாம் அப்போது பத்திரப்படுத்தவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு. இப்படி ஒரு கனினி யுகம் வெருமென்றோ, அதிலும் கூட கிடைத்தற்கரிய இவ்விளம்பரங்களைப் பத்திரப்படுத்தி வைத்து நீங்களெல்லாம் அவற்றை மீண்டும் காண்ச்செய்வீர்கள் என்றோ கனவிலும் நினைத்ததில்லை.
இவற்றை இங்கே பதிவேற்றம் செய்வதில் எவ்வளவு சிரமங்கள், எத்தனை ஸ்டெப்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தபோதிலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவைக்கு முன்னால் இந்த சிரமங்களெல்லாம் துச்சம் என்று எண்ணி செயல்படும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது வெறும் சம்பிரதாயச்சொல் அல்ல.
அதிலும் 'துளி விஷம்' வெளிவந்த காலத்திலெல்லாம் இத்திரியில் ப்ங்கேற்கும் நாம் யாருமே பிறந்திருக்கவில்லை. அப்போது வெளியான பத்திரிகை விளம்பரங்களை இப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது உண்மையிலேயே ஒரு த்ரில்லிங்கான அனுபவம்.
இதுவரை ஒரு சிலரிடத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரவர்களும் கணினி, சிடி, ப்ளாஷ் மெமோரி என பல வகையிலும் பத்திரப்படுத்தி வருகின்றனர். இந்தப்பெருமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.
ஜூலை இறுதி வாரத்திலேயே நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மூன்று முத்தான படங்கள் வெளிவந்திருப்பது அபாரம். தேதிவாரியாக நாம் கொண்டாடுவதால் வருட வாரியாக உல்டாவாகி விட்டது என்பது இன்னொரு சுவாரஸ்யம். முதலில் 1968, பின்னர் 1967, இப்போது 1965.
உங்கள் சேவையைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நமதி திரிக்கு விஜயம் செய்யும் நேரம் 'இன்றைக்கு நடிகர்திலகத்தின் எந்தப்படத்தின் வெளியீட்டு நாள்?' என்ற ஆவலுடன் திறக்கின்றோம். நீங்களும் எங்களை ஏமாற்றாமல் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள்.
இந்தச்சேவைக்காக உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உங்களை வாழ்த்தியவண்ணம் இருப்பார்கள்.