my favourite song in idaya kamalam
https://www.youtube.com/watch?v=TC_ewqr6eqk
Printable View
my favourite song in idaya kamalam
https://www.youtube.com/watch?v=TC_ewqr6eqk
உண்மை எஸ்வி சார்
உங்கள் போன்ற சீனியர் hubber வாழ்த்துகள் இந்த திரி மென்மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை
வாசு சார்
உங்கள் பணி சிரிக்க :) வாழ்த்துகள்
யார் பெயரை சொல்ல யார் பெயரை விட
அனைவரின் பங்களிப்பு ஊர் கோடி தேர் இழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நமது திரி மிக சிறந்த எடுத்துகாட்டு
https://encrypted-tbn2.gstatic.com/i...FqvQkn1FWVF6X2
THANKS KRISHNA SIR
ANDRU- 1960
WELLINGTON
http://i57.tinypic.com/o52mbo.jpg
INDRU -2014
WELLINGTON PLAZA
http://i61.tinypic.com/w1zr76.jpg
//யார் பெயரை சொல்ல யார் பெயரை விட //சரியே..
அது மட்டுமல்ல.. படிக்க சுவையான எவ்ளோ இன்ஃபர்மேஷன்கள்.. எல்லோருக்கும் நன்றி..இன்னும் இன்னும் தொடருஙக்ள்..
அன்றும் இன்றும் நல்ல கான்செப்ட்.. தொடருஙக்ள் எஸ்வி சார்.
Good esvee.Interesting.
வாலி - மாலைமலர் - 05/08/2014
http://mmimages.maalaimalar.com/Arti...9_S_secvpf.gif
வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.
'நல்லவன் வாழ்வான்' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய 'எதையும் தாங்கும் இதயம்' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
'உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்!
என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'
என்பதுதான் அந்தப்பாடல்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.
இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.
வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.
ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.
'வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...' என்று கையைப்பிடித்து இழுத்தார்.
'அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!' என்று வாலி சொன்னார்.
'பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...' என்று வெங்கடேஷ் கூறினார்.
உடனே வாலி, 'அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...' என்றேன்.
ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.
'நீ உருப்படமாட்டேடா' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
'கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.
ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.
விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.
இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.
மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.
அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.
சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.
அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.
ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், 'சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...' என்று சொன்னேன்.
அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.
ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.
`சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.
எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.
பாடல் இதுதான்:
`மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
`வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;
வாசல் தோறும் வேதனையிருக்கும்;
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை;
எதையும் தாங்கும் இதயமிருந்தால் -
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'
`ஏழை மனதை மாளிகை யாக்கு;
இரவும் பகலும் காவியம் பாடு;
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;
உனக்கும் கீழே உள்ளவர் கோடி -
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'
கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.
திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தின் மிக சிறந்த கதை திரை வசனம் இயக்கம் செய்தவர்களில் ஒருவர்
அவர் மகன் கே எஸ் ஜி வெங்கடேஷ் 1989 ஆண்டு அத்தையடி மெத்தையடி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார் . இந்த படத்தில் கடலோர கவிதைகள் ரேகா இவருக்கு ஜோடி பிறகு காணமல் போனார் இப்போது மீண்டும் சதுரங்க வேட்டை திரை படத்தின் மூலம் மீள் நுழைவு ஆகி உள்ளார். இவர் பற்றி மேலும் எதாவது தகவல்கள் உண்டா
http://moviegallery360.com/wp-conten...-images-06.jpg
இந்த படத்தின் பாடல்களை நாம் அலசி விட்டோமா ?
https://encrypted-tbn1.gstatic.com/i...Eq5neopANW-COA
https://antrukandamugam.files.wordpr...1963.jpg?w=593https://antrukandamugam.files.wordpr...3-16.jpg?w=487https://antrukandamugam.files.wordpr...3-17.jpg?w=487
மாடர்ன் திடேர்ஸ் தயாரிப்பு
யாருக்கு சொந்தம் 1963
திரை இசை திலகம் மகாதேவன் மாமா இசை அமைப்பு
என்னை தெரியலையா இன்னும் புரியலையா
http://www.youtube.com/watch?v=uhqjJ6XYc6o
http://www.inbaminge.com/t/y/Yaarukku%20Sontham/
இல்லை என்று தான் நினைக்கிறோம் க்ருஷ்ணா ஜி..தொடருங்கள்..
சந்திரபாபு என்றால் நிறையப் பேருக்கு நினைவுக்கு வருவது பம்பரக் கண்ணாலே, குங்குமப் பூவே..ஆனால் பிழியப் பிழிய அழும் விஜயகுமாரியின் நடிப்பிலான போலீஸ்காரன் மகள் படத்தில் வரும்..பொறந்தாலும்ஆம்பளையா ரொம்பவே பிடிக்கும்..
காதலக் கவிஞன்பாடிவச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்னை எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சு அழுக வச்சான்..
அது போல சந்திரபாபு பாடிய- நடிக்காத பாடல் ஒரு ந.தி படத்தில் வரும்..ஜாலி ஹை ஜாலி ஹை..க.ப.பிரம்மச்சாரி..சரிதானா.
யாருக்குசொந்தம் டைட்டில் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பாடல் யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நீ கேட்டால் நான் என்ன சொல்வது.. சபாஷ் மாப்பிளே ?
யாருக்கு சொந்தம்.... கல்யாண்குமார், தேவிகா, ராஜஸ்ரீ, புஷ்பலதா...
கொஞ்சம் "அன்னை" சாயலில் திரைக்கதை நகரும்...
சந்திரபாபுவின் "என்னைத் தெரியலையா" பாடலைத் தவிர
ராஜஸ்ரீயின் நடனத்தில் சுசீலாவின் துள்ளும் குரலில் "பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன ஊரென்ன"
http://youtu.be/XDkgHym2GOU
தேவிகாவின் இதமான முகபாவனைகளில் பி.பி.எஸ்., சுசீலாவின் "வண்டுக்கு தேன் வேண்டும்"
http://youtu.be/0xeSorYEPOE
சந்திரபாபு தனக்காக பாட மனோரமாவுக்கு ஜமுனாராணி குரலில் "ஓஹோ மேரி புல்புல்புல்"
http://youtu.be/4AMT2dFoUyI
சிக்கா...
பெண் படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக... "கல்யாணம்......" பாட்டை சந்திரபாபு பாடியிருக்கிறார்.
http://youtu.be/08kEuJ98SR4
யா.. மதுண்ணா தாங்க்ஸ்..அந்த நடிகர் யாருன்னு தலையைப் பிச்சுக்கிட்டு இருந்தேன்.. எஸ்.பாலச்சந்தர்..
கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்.. சிலிர்க்க வைக்கும் பாட்டு
மாறிப் போனமுகத்தினிலே வனப்பு மாற வில்லை..
நல்ல த்ரில்லர் அண்ட் சஸ்பென்ஸ்.. வெகு குட்டியாய் இருக்கும்போது சிந்தாமணியில் பார்த்த நினைவு..
பால் தான் வைகக்றேன் விஷமா வெக்கப் போறேன் என சோ (இரண்டாவது படம் என நினைக்கிறேன்) சொல்லிவிட்டுப் போக ஒரு கை வந்து விஷ பாட்டிலை பாலில் கலப்பது, அம்மாவுக்குத் தெரியாமல் பணம் எடுக்க இருவர் பீரோவைத் திறக்க அங்கே அம்மாவே டபக் கென உயிரில்லாமல் சரிவது ., செளகாரை க் கத்தியால் குத்த ப்ளாக் அண்ட் வொய்ட் ஸ்ட்ரைப்ஸ் போட்டு கொலைகாரன் வர..செள பதட்டமிலலாமல்வாங்க டாக்டர் எனப் பார்க்க என்னை ஏன் கூப்பிட்டாய் என மாடியிலிருந்து எஸ்.பாலச்சந்தர் வருவது..என திக் திக் திகீர் படம்..
நாலுபக்கம் ஏரி ஈ ஏரியில தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா.. நல்ல பாட்டு..
பொம்மை படத்தின் கடைசியில் வேலை பார்த்தவர்களையே ஸ்டில்லாகப் போட்டு புதுமை பண்ணியிருப்பார்..ஒல்லி ஜேசுதாஸ் ஒல்லி எல்.ஆர்.ஈஸ்வரி எனப் பார்க்கலாம்..சுசீலா இருந்தார்களா நினைவிலில்லை..
யாருக்கு சொந்தம் நன்னாயிட்டு இருக்குமா..நான் பார்த்திராத தேவிகா படம்..:) சிலவருடங்களுக்கு முன் முரசுவில் ஒரு படம் போட்டிருந்தார்கள் ஹீரோ நம்பியார் அவர் நண்பர் பாலாஜி..பாலாஜிக்கு ஜோடியாக தேவிகா..படம்..தெரியலை :)
என்னது ஒல்லியா ? அப்படித் தெரியலியே ? ஒருவேளை கம்பேர் செஞ்சீங்களோ ? சுசீலா இல்லாமலா ?
http://youtu.be/LL_EEkZJw50
ஒரு விஷயம் சொல்லப் படாதே..ஒடனே எவிடென்ஸோட வந்துடுவீங்களே.. :) நான் இப்ப பார்க்க முடியாது.. பார்த்து சொல்றேன்னாவ்.
சரிதான் சி.க.சார். பாடல் வரிகளில்தான் சிறு மாற்றம்.
ஜாலி லைப்
ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப்
ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்
நடிகர் திலகம் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து போடும் கலக்கல் டான்ஸ். நடிகர் திலகத்திற்கு சந்திரபாபு அவர்களின் பின்னணிக் குரல். இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. மிக வேகமான, கடினமான நடன ஸ்டெப்கள் கொண்ட இப்பாடலில் நடிகர் திலகம் நன்றாக ஆடியிருப்பார்.
இந்தப் பாடலும், 'பெண்' படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக பாபு பாடிய 'கல்யாணம் அஹ்ஹஹ்ஹா கல்யாணம்' பாடலும் அனைவரையும் மிகவும் குழப்பும்.
வீடியோவில் சவுண்ட் கம்மி.
http://www.youtube.com/watch?v=5B7mo...yer_detailpage
//இந்தப் பாடலும், 'பெண்' படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக பாபு பாடிய 'கல்யாணம் அஹ்ஹஹ்ஹா கல்யாணம்' பாடலும் அனைவரையும் மிகவும் குழப்பும்.// நன்னி வாசு சார்.. அனைவரைக் குழப்பிச்சோ இல்லியோ என்னைக் கன்ஃபூஸ் பண்ணி விட்டுடுத்து.. :)
யெஸ்.. டான்ஸ் வேகமான ஸ்டெப்ஸ்.. நல்லா இருக்கும்..
அதே கண்கள்ள அந்த டைபிஸ்ட் கோபு ஆர் வேற யாரோ மாதவியோட ஒரு வரிக்குக்கூட வேக ஸ்டெப்னு நினைவு..
வணக்கம் வாசு சார்
இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ
நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்
க.ப பிரம்மச்சாரி பேச்சு வந்ததனால் கூடவேஒரு பாட்டும் நினைவு..ஆனால் பாடல் வரியில் - இது 1954ங்க எனபத்மினி சொல்வது போல்..என்னவாக்கும்பாட்டு..(ஓஹ் 60 வர்ஷம் ஆச்சே:) )
//இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ
நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்// க்ருஷ்ணா ஜி கொஞ்சம் நார்த் இண்டியன் செளத் இண்டியன் காம்பினேஷன்ல தரச் சொல்லுங்க..
thanks esvee sir for the information
நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா
கே.விஜயன் இயக்கம்
g .k வெங்கடேஷ் இசை என்று நினைவு
சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்
'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '
http://www.5eli.com/Movie/wp-content...n-vazhkai.jpeg
http://www.youtube.com/watch?v=l2BtXC64lIE
பெண்ணின் வாழ்க்கை ந்னு ஒரு படமா சுதாகர் (மொ என்பது சரியே..ஆனால் தெலுகில் சிரிப்பு நடிகராக மாறி விட்டார்) ரத்தியுமா..கேள்விப் பட்டதில்லையே..ம்ம் கேட்டுப் பார்க்கிறேன் பாட்டை..
ஜெயச்சந்திரன் கொஞ்சம் வித்யாசக் குரலுக்குச் சொந்தக் காரர்..அவரோட ஒரு பாட்டு..வடிவங்கள்னு ஒரு படம்..
இதயவானில் உலவுகின்ற புதிய மேகமே இதயராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்புத்தருகின்றதேன்னு போகும்..கேட்டதுண்டா..
இன்றைய ஸ்பெஷல் (48)
'இன்றைய ஸ்பெஷலி'ல் 1980-ல் வெளி வந்த, என்றும் மனதை மயக்கும் ஒரு பாடல். பாலா, வாணியின் தேன் மதுரக் குரல்களில். 'சௌந்தர்யமே வருக வருக' படத்தில் ஸ்ரீப்ரியாவிற்கும், சிவச்சந்திரனுக்குமான டூயட். ஸ்ரீதர் டைரெக்ஷன். விஜயபாஸ்கர் இசை. பாடலை இயற்றியவர் வாலி.
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0001003.jpg
நெஞ்சை வருடிக் கொண்டே செல்லும் பாடல். ஒரே சீராகச் செல்லும். ஸ்ரீப்ரியாவிற்கு வாணியின் குரல் வெகுப் பொருத்தம்.
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி
காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டு கொண்டேன் உன்னிடம்
கொள்ளை இன்பங்களோ
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம்தளிர் இது புதிது
காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும்தானோ அர்ச்சனை
சொந்தம் தெய்வீகமே
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
லலாலலாலலலாலலலா
லலாலலாலலலாலலா
லலாலலாலலலாலலா...
http://www.youtube.com/watch?v=byr5aJsEKbk&feature=player_detailpage
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
இப்படத்தின் பாடல்கள் வெகு பிரமாதம். ஸ்ரீதர் ஆயிற்றே.
பாலா பாடும் ஒரு பாடலை வாழ்நாள் முச்சூடும் மறக்கவே முடியாது.
'ரசம் பழரசம் ராகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோகனம்'
ஐயோ! அமர்க்களமான பாடல்.பாலா குழைத்து பின்னியெடுத்து விடுவார்.
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா. மிக மிக அனுபவித்து ரசித்துப் பாடியிருப்பார் பாலா. இது போன்ற ஒரு சில பாடல்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்து இவ்வளவு சிறப்பாக அனுபவித்துச் செய்திருப்பார் அவர்.
அதிக ஹிட்டடிக்காத பாடல். ஆனால் நம் நெஞ்சில் ஹிட்டடடித்த சூப்பர் பாடல்.
அதுவும்
'நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்'
அப்புறம் ஒரு
'ஹே ஹே ஹே'
அடடா! பாலா! என்னவென்று புகழ!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YHpqUtKRQMM
போனஸ் ஸ்பெஷல்
'சௌந்தர்யமே வருக வருக'
(இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).
மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
http://www.youtube.com/watch?v=rrrcCsBqbwQ&feature=player_detailpage
போனஸ் ஸ்பெஷல்
இன்னும் இருக்கிறது.
இது கிருஷ்ணாஜிக்காக. (காரணம் உண்டு)
ஏய் சிந்தாமணி
ஏ செந்தாமரை
வந்தாளய்யா
ஆத்தாங்கரை
அம்மாளு இப்ப அவ
நம்மாளு
தத்தினத்தீன் தத்தினத்தீன் தத்தினத்தீன்
அப்படியே டி.ராஜேந்தர் ஸ்டைலில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i20mJYqUcFk
ஆளாளுக்குக் கொடுக்க வேண்டிய அவில் பாகத்தைக் கொடுத்து விட்டேன். சமத்தா எல்லோரும் வாங்கிக்கணும் சரியா!:)
சௌந்தர்யமே வருக வருக'
(இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).
மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்// அச்சோ..ஈவ்னிங்க்க் வரைக்கும் வெய்ட் பண்ணனுமே..எனிவே இப்பவும் ஒரு தாங்க்ஸ் :)
கிருஷ்ணா சார்!
படம் எப்படியோ போகட்டும். காலா காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல பாடல்கள் கிடைத்ததே. அது மட்டும் பூரண சந்தோஷம்.
ஒரு பதினஞ்சு பேர்..(அப்போ நான் வெகு சின்னப் பையன் என்று சொல்லவும் வேண்டுமோ :) ) பெரியக்காவிற்கு கல்யாணம் ஆனபுதிதில் அத்திம்பேருடன் மதுரைக்கு குவைத்திலிருந்து முதன் முறையாக வர, அத்திம்பேரின் உறவினர்கள் சிலரும் வர எல்லோரும் கலந்து கட்டிப் போய் 2.90 டிக்கட் கல்பனா தியேட்டரில் வாங்கிய நினைவு..படம்..ம்ம் போர் என்று மட்டும் நினைவு..(செள..வருக வருக)
சி.க.சார்,
ஆபீஸில் பாட்டு பார்க்க முடியாத ஆபிஸ் என்ன ஆபிஸ்?:) உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?:)
கிருஷ்ணா சார்
போஸ்ட் போட்டு முடிக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து. எத்தனை முறை லாகின் பண்றது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருக்கு. இதுக்கு விமோசனமே இல்லையா? கோபால் கூட நேத்து நொந்து போய் போன் பண்ணாரு.