-
மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் நடித்த படம் .
தொழில் அதிபராகவும் , துப்பறியும் அதிகாரியாகவும் வித்தியாசமான நடிப்பில் வந்த படம் .
வாணிஸ்ரீ - வெண்ணிற ஆடை நிர்மலா -குமாரி பத்மினி
mn ராஜம் -ps வீரப்பா -தேங்காய் ஸ்ரீனிவாசன் -கண்ணன் நடித்தது .
பிள்ளை தமிழ் பாடுகிறேன் ......
இரவு பாடகன் ...ஒருவன்
அழகெனும் ஓவியம் .....இங்கே
இது தான் முதல் ......
போன்ற இனிய பாடல்கள் .
மக்கள் திலகம் - ஷெட்டி மோதும் சண்டை காட்சிகள் சென்ஸார் பல இடங்களில் வெட்டியதால் சண்டை காட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .
மெல்லிசை மன்னரின் இசை சுமாரக அமைந்த படம் .
Tms பாடல் இல்லாதது - குறைதான் .
1976 அன்றைய அரசியல் நெருக்கடி சூழ் நிலையில் மக்கள் திலகம் இப்படத்தை மிகவும் சிரம பட்டு எதிர்ப்புகளை மீறி வெளியிட்டார் .
ஊருக்கு உழைப்பவன் - ரசிகர்களின் மனதை கவர்ந்தவன் .
-
மக்களின் நாயகன்!
எம்.ஜி.ஆர்! தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் இன்னமும் நீங்கா இடம் பெற்றிருக்கிற மூன் றெழுத்து மந்திரச் சொல் இது.
அண்மையில் சென்னையில் ‘நாடோடி மன்னன்’ திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் அந்தப் படத்தின்மீது காட்டிய ஆர்வத்தைக் கண்டு தமிழக மெங்கும் வியப்பின் வெளிச்சம்! பல புதிய படங்கள் பெறாத வசூலை ‘நாடோடி மன்னன்’ பெற்றதைக் கண்டு, திரையுலக பெரும் புள்ளிகளே அசந்து போயினர்.
காலத்தால் அழியாத அவரது இந்த வெற்றிக்கும் புகழுக்குமான அடிப்படைக் காரணம், சினிமாவிலும், நிஜத்திலும் உளவியல் ரீதியாக எம்.ஜி.ஆர். மக்களோடு ஊடுருவிய விதம்தான்!
கூட்டத்தைக் கண்டுமிரளும் நட்சத்திரங்களிடையே, மக்களிடம் நெருங்கிப் பழக ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர். சென்னை கமலா தியேட்டரில், ‘ஊருக்கு உழைப்பவன்’ ரிலீஸான (1976, நவம்பர்) ... திடுதிப்பென்று ஒரு மாலைக் காட்சிக்கு வந்திருந்தவர், படம் முழுக்க மக்களோடு இருந்து பார்த்தார். பிதுங்கி வழியும் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பத்திரமாக அனுப்பிவைக்க முடியுமா என திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் பதற, ‘‘கவலைப்படா தீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது!’’ என்று புன்சிரிப்போடு அவருக்கு தைரியம் சொல்லி, உள்ளே இருந்த ரசிகர்கள், வெளியே இரவுக் காட்சிக்காகக் காத்திருந்தவர்கள் என அனைவரிடமும் கையசைத்து அளவளாவிவிட்டு, வடபழனி பகுதியையே அதிரவைத்த அவர்களின் ஆரவாரக் கூச்சலிடையே நிதானமாகக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார் எம்.ஜி.ஆர். அவர் சென்ற பின்பும், தியேட்டரில் இருந்த பரபரப்பு அடங்க நீண்ட நேரமானது.
எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவுக்கு ஆளாகி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவருக்கென்று ஒரு ஸ்பெஷல் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. பிறரிடமிருந்து முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நோய்க்கிருமி எதுவும் தொற்றிக்கொள்ளக் கூடாது என்ற டாக்டர் களின் முன்யோசனையில் ஏற்படுத்தப்பட்ட குழு அது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு அதெல் லாம் பிடிக்கவில்லை. பொதுமக்களிடமிருந்து தன்னை யாரும் பிரிக்கக்கூடாது என்றே விரும்பினார் அவர். அதனால் அந்தப் பிரத்யேகப் பாதுகாப்புக் குழுவினரையும் மீறிப் பொதுமக்களை நெருங்கி வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதி நாள் வரையிலும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது (1965), எம்.ஜி.ஆர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப் பிடிப்புக்காக கோவாவில் இருந்தார். அதை அன்றைக்குக் காங்கிரஸாரும், பின்னர் 1972&ல் தி.மு.க&வை விட்டு எம்.ஜி.ஆரை விலக்கிய பின் தி.மு.க.வினரும் கடுமையாகச் சாடிப் பேசினார்கள். ‘‘அண்ணா வேண்டுகோளுக்கு இணங்கியே நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அது மட்டுமல்ல, இங்கே இந்திப் போராட்டத்தில் உயிர்கள் பலியானபோது, நான் மட்டும் கோவாவில் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. கறுப்பு பாட்ஜ் அணிந்து மவுனம் காத்தேன்’’ என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.
‘‘எம்.ஜி.ஆரால் ஒரு நாள்கூட போராட்டம் என்ற பெயரில் சிறையில் இருக்க முடியாது’’ என்று தி.மு.க., காங்கிரஸ் எனப் பல கட்சியினரும் கேலியாக விமர்சனம் செய்தபோது, எம்.ஜி.ஆர். அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் பதில் சொல் லாததாலேயே அவர்கள் சொன்னது உண்மையென்று ஆகிவிடாது. 1958&ல் பிரதமர் நேரு, அண்ணாவை ‘நான்சென்ஸ்’ என்று கூறியதற்காக, நேரு சென்னை வரும்போது கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்று தி.மு.க.வினர் திட்டம் தீட்டியிருந் தார்கள். ‘‘கலைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’’ என்று அண்ணா கூறியிருந்தாலும், போலீசார் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ஆகியோரைக் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
உயர்ந்த வசதிகள் உள்ள பிரிவுக்கு மாற்றவேண்டு மென்று மற்றவர்கள் முயன்ற போதும், ‘‘இங்குள்ள மற்ற கைதிகளுக்கு என்ன வசதிகள் தரப்பட்டிருக்கிறதோ அதுவே எனக்கும் போதுமானது!’’ என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். ஜாமீனில் வெளி வரவும் மறுத்து, துர்நாற்றம் மிகுந்த அறையில், கொசுக் கடியில் ஐந்து நாட்கள் கழித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இந்தச் சிறை அனுபவத்தை அவர் எந்த ஒரு பொதுக்கூட்ட மேடையிலும், ஏன்... ஆனந்தவிகடனில் அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ வாழ்க்கைத் தொடரில்கூட ஒருபோதும் வெளிப் படுத்திக்கொண்டது இல்லை. இந்தப் பண்பு எத்தனை பேருக்கு வரும்?
நன்றி ஆனந்த விகடன்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
http://www.youtube.com/watch?v=1czNDoIQ5kY
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும் - SUPER
-
-
இனிய நண்பர் சைலேஷ் சார்
ஊருக்கு உழைப்பவன் - பாடல்கள் - காட்சிகள் வீடியோ பதிவுகள் அருமை .மக்கள் திலகத்தின் பதில்கள் அருமையான தொகுப்பு .
-
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
குமுதம் - சுனில் பதிலில் தவறான தகவல் உள்ளது
வெள்ளி விழா ஓடிய மக்கள் திலகத்தின் படங்கள் .
மதுரை வீரன்
எங்க வீட்டு பிள்ளை
அடிமைப்பெண்
மாட்டுக்காரவேலன்
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல் .
நாடோடி மன்னன் - அன்பே வா- ஒளிவிளக்கு- ரிக்ஷாக்காரன் படங்கள் 150 நாட்கள் மேல் ஓடியவை .இணைந்த வெள்ளி விழா -படங்களாக அமைந்து விட்டது .
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
1966ல் பறக்கும் பாவை வெளியான நேரத்தில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு கிடைத்திருந்த மாபெரும் வரவேற்புகளும் , விநியோகஸ்தர்கள் தங்களுடைய வரவேற்பிதழில் மக்கள் திலகத்தை நடிகபேரசர் என்றும்
வசூல் சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டுள்ளது மூலம் மக்கள் திலகத்தின் செல்வாக்கு புரிகிறது .
பறக்கும் பாவை - விளம்பரம் .
பறக்கும் பாவை - 51வது நாள் விளம்பரம்
மதுரை தங்கம் - முதல் வார வசூல்
சென்னை - கிருஷ்ணா முதல் வார வசூல்
வேலூர் - தாஜ் - அப்சரா இரண்டு அரங்கின் வரவேற்பு நோட்டீஸ்
வேலூர் எம்ஜிஆர் மன்ற வரவேற்பு நோட்டீஸ்
சிதம்பரம் - வடுகநாதன் விநியோகஸ்தர் நோட்டீஸ்
சிதம்பரம் - எம்ஜிஆர் மன்ற ''பறக்கும் பவை '' கவிதை நோட்டீஸ்
இத்தனை ஆதரங்களையும் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட உங்களுக்கு இதயங்கனிந்த
நன்றி . காணக்கிடைக்காத தங்கம் . பொக்கிஷ குவியல்கள் .
அடுத்து பறக்கும் பாவை - சிறப்பு மலர் புத்தகம் - வேலூர் எம்ஜிஆர் மன்ற வெளியீடு -பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
super welcome notice by the ambika pictures- vellore
-
மக்கள் திலகம் - சின்னப்பா தேவர் கூட்டணியில் வந்த படங்கள் - 16
மெகா ஹிட் படங்கள் .
தாய்க்கு பின் தாரம் - 1956
தாய் சொல்லை தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் - 1963
வேட்டைக்காரன் - 1964
நல்ல நேரம் - 1972.
ஹிட் படங்கள்
நீதிக்கு பின் பாசம் - 1963
முகராசி - 1966
சுமாரான வெற்றி
குடும்ப தலைவன் - 1962
தர்மம் தலைகாக்கும் - 1963
தொழிலாளி - 1964
தனிப்பிறவி - 1966
தாய்க்கு தலை மகன் - 1967
விவசாயி - 1967
சுமாரான படங்கள்
கன்னித்தாய் - 1965
தேர்த்திருவிழா - 1968
காதல் வாகனம் - 1968
-
மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர பக்தர் திரு பெங்களுரு போஸ்ட் ஆபீஸ் இரவி அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்ட நமது மக்கள்திலகம் பக்தர்கள்
http://i57.tinypic.com/wk1f1h.jpg
பெங்களுரு காந்தி நகர் AIADMK முன்னால் MLA திரு முனியப்பா மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் B S.ராஜு,மணியரசு மற்றும் பலர்
-
-
-
-
-
-
-
-
திரு முனியப்பா Ex.MLA அவர்கள் எங்கள் அனைவருக்கும் THREE STAR ஹோட்டலில் ஒரு MINI PARTY கொடுத்து தலைவரைப்போல கவனித்து மகிழிந்தார்.அப்போது நமது தலைவருடன் பழகிய அந்த அற்புதமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார் அவரிடம் என்ன ஒரு உண்மையான பற்று ,உண்மையான நேசிப்பு அப்படியே தலைவரின் கொள்கையில் வாழ்ந்துவரும் மிக அற்புதமான தலைவரின் மூத்த பக்தர்
http://i60.tinypic.com/v3ngvk.jpg
http://i61.tinypic.com/5x4rc8.jpg
நண்பர்கள்
திருவாளர்கள் நாகராஜ் ,தமிழ் நேசன் ,பேராசிரியர் செல்வகுமார்
பி எஸ்.ராஜு,ஹயாத்,மணியரசு,பாபு,லோகநாதன் மற்றும் பலர்
-
நம் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பி வந்த " திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட " ஊருக்கு உழைப்பவன் " சிறப்பு மலரிலிருந்து ...... அட்டைப்படக் காட்சிகளும், திரைக்கலைஞர்களின் பேட்டிகளும் :
http://i57.tinypic.com/3ylqe.jpg
குறிப்பு : ஏற்கனவே இப்பதிவுகள் கடந்த ஆண்டு பதிவிடப்பட்டதாக நினைவு ! இருப்பினும், 1976 ம் ஆண்டு இதே நாளில், " ஊருக்கு உழைப்பவன்" வெளிவந்த காரணத்தால், இந்த செய்திகளை திரியின் பார்வையாளர்கள் மீண்டும் காண்பதற்கு பதிவிடுகிறேன் ![/B]
-
-
-
-
-
-
வேலூர் records 90 ஆரம்பம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலைக்குழு - வேலூர் நகர எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக வெளியிட்ட பறக்கும் பாவை சிறப்பு மலர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வைக்கு .
1966ல் எம்ஜிஆர் ரசிகர்கள் தீவிரமாக அவருடைய எல்லா படங்களுக்கும்சிறப்பு மலர்கள் தயாரித்தும் , வரவேற்பு இதழ்
அளித்தும் பெருமை பட்டனர் .
பறக்கும் பாவை -மலரில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும்
மூத்த ரசிகர்கள் திரட்டிய ஆதார பூர்வமான தகவல்கள் .
இந்த பதிவு - திரியின் பார்வையாளருக்காக ..
http://i57.tinypic.com/x27714.jpg
-