சினிமா எக்ஸ்பிரஸ்
கேள்வி பதில் பகுதி
http://i1065.photobucket.com/albums/...psbhd2tdgr.jpg
Printable View
சினிமா எக்ஸ்பிரஸ்
கேள்வி பதில் பகுதி
http://i1065.photobucket.com/albums/...psbhd2tdgr.jpg
தினகரன் வசந்தம்
இதழில் வெளி வந்த கட்டுரைகளில் சில...
http://i1065.photobucket.com/albums/...ps6kecujvw.jpg
செந்தில்வேல் சார்,
நீங்கள் இரண்டு விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். முதல் ஒன்று, ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பற்றி பலரது பார்வையில் வரும் விமர்சனங்கள். இது நல்ல யோசனையும் வரவேற்கத்தக்கதும் கூட. நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சி [இன்று மதியம் jmovies பார்த்தீர்களா?] பற்றி 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் திரி பாகம் -1ல் எழுதியிருக்கிறேன். நடிகர் திலகம் திரியில் என்னுடைய அல்லது மூன்றாவதோ பதிவு என நினைவு. ஆனால் அன்று ஆங்கிலத்தில் எழுதினேன்.
உங்கள் இரண்டாவது பாயிண்ட், வாசிப்பவர் எண்ணிக்கை பற்றி. அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும். காரணம் இங்கே வருபவர்கள் வாசிக்க வருகிறார்கள். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட பல புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவர் நடிப்பைப் பற்றி பல்வேறு கோணங்களில் அலசப்படுவதை படிக்க, அன்றைய நாட்களின் ஆவணங்களை பார்வையிட வருகிறார்கள். ஒரு நாளைக்கு இங்கே 10 பக்கங்கள் நிரப்பினால் அவர்களுக்கு சிரமம். அது மட்டுமல்ல புத்தகங்களின் தாள்களை scan செய்து போடும்போது அதை அபப்டியே படிப்பது சிரமம். அதுவும் 4,5 பக்கங்கள் முழுக்க இது போன்ற scan images வரும்போது பலரும் அதை skip செய்து போய் விடும் அபாயம் இருக்கிறது. நாம் பக்கங்களை இது போல் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. நாம் மெதுவாக செல்லுவோம். நாம் யாருடனும் போட்டி போடவில்லை. ஆகவே நாம் எழுத்துக்கு முன்னுரிமை கொடுத்து வீடியோக்களையும் தேவையான இடத்தில் மட்டுமே பதிவு செய்து இது போன்ற பத்திரிக்கை தாள்களை ஒரு நாளைக்கு இத்தனை என்று குறைந்தபட்சமாக பதிவு செய்தால் வாசிப்பவர்களுக்கும் நன்மை.
அதிகமான வீடியோக்கள் இணைக்கப்படுவதால் திரியை திறக்கவே முடிடவில்லை. இன்று ஞாயிறு இரவு, இருப்பதிலேயே internet traffic குறைவாக இருக்கும் நேரம். இந்த நேரத்தில் கூட Broadband இணைப்பு வைத்திருக்கும் எனக்கே ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு திருப்ப 30 நிமிடங்கள் என்றால் dial up connection வைத்திருப்பவர்களின் நிலைமை? சிவாஜி செந்தில் சார், பிற மொழி படங்களின் வீடியோக்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
நான் சொல்லியிருப்பவற்றை நீங்களும் மற்றவர்களும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
குமார் சார்,
உங்கள் பதிலுக்கு நன்றி.
அன்பு நண்பர் கலைவேந்தன்,
உங்களின் நீண்ட பதிவிற்கும் அருமையான புரிதலுக்கும் மனமார்ந்த நன்றி! வினோத் சார் மதுரை மேற்கு தொகுதியில் 1980-ல் கிடைத்த வெற்றி பற்றி எழுதியதற்குதான் நான் 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வசூல் பற்றி சொன்னேன் என்று சொன்னிர்கள் பாருங்கள் அது சூப்பர்! நல்ல வேளை அந்த நாள் ஞாபகம் தொடர் நான் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டேன். இல்லாவிட்டால் அதுவுமே நான் உங்கள் தரப்ப்பிற்கு எதிராக ஆரம்பித்தது என்று சொல்லியிருப்பீர்கள்!
Anyhow, மீண்டும் நன்றி.
செல்வகுமார் சார்,
Typo error காரணம் 4 என்பது 6 ஆவது புரிந்துக் கொள்ளக்கூடியதே ஆனால் 70 நாட்களில் நடைபெற்ற 250 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்ததை "மதுரை மீனாட்சி அரங்கில் தொடர்ந்து 301 காட்சிகள் அரங்கு நிறைந்து (அதாவது 100 நாட்கள் கொட்டகை நிறைந்த வரலாற்று சாதனை)" என்று எழுதியது கூட typo error தான் என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை [நண்பர் கலைவேந்தன் பாணியில் சொல்வதென்றால் 2015 ஜூன் மாதம் 14ந் தேதி நள்ளிரவு 1.17 வரை] திருத்தப்படாமல் இருக்கிறது.
இதை கூட நீங்கள் வேண்டுமென்றே எழுதியதாக சொல்லவில்லை. அதனால்தான் நீங்கள் உணர்சிவசப்பட்டதில் தகவல் பிழைகள் என்று எழுதினேன்.ஆனால் நண்பர் கலைவேந்தன் அதற்கு வேறுவிதமாக விளக்கம் கொடுக்க நீங்களும் எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் எழுதி கோவத்தை காட்டியிருக்கிறீர்கள். பரவாயில்லை சார்.
Thanks for your "understanding" but I will always retain the respect for you!
அன்புடன்
47 வருட ஆய்வாம்? அட பாவமே? தேவர் படங்களை பற்றியா?நாங்களெல்லாம் அம்பேல். போங்கப்பா போங்க, காசை செலவழிச்சு ,ஆளில்லா theatre இல் bulk ticket வாங்கி (மத்திய கிழக்கிலிருந்து)புகழை பரப்பி உற்சாகம் கொண்டு வாங்க.
நாங்கள் உள்ளதை சொன்னாலே போதுங்க.
நாசர் -நேரு விஷயம் ரூபா publication போட்ட விஷயம்.(english இல் வெளிவந்ததால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது)
எஸ்.வீ,
தேவரிடம் மன்னிப்பு கோரத்தான் போகிறேன். விழுப்புரம் சின்னையா கணேச மூர்த்தி தேவரிடம். வாசு குறிப்பிட்டது போல ,இன்றைக்கு எழுதிய விஷயங்களை ,அவர் நம்முடன் வாழ்ந்த காலத்தில் எழுதி அவரிடம் ஆசி பெறாமல் விட்டதற்காக.
என்ன செய்வது, பணி சுமை ,குடும்ப பொறுப்புகள் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் என்னை எதுவுமே எழுத விடவில்லை.(கொஞ்சம் சோம்பேறி தனமும்)
http://i1146.photobucket.com/albums/...ps9hfq6ufk.jpg
நமது நண்பர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திருச்சி பொன். ரவிச்சந்திரன் அவர்களின் வாழ்த்துப்பா.
நன்றி ரவிச்சந்திரன்.
சமீபத்தில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியமான என்னைப் போல் ஒருவன் திருச்சியில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டது. இதைப் பற்றி திருச்சி பதிப்பு டெக்கான் க்ரோனிகிள் மற்றும் மாலை மலர் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திக்குறிப்பின் நிழற்படங்கள்..
http://i1146.photobucket.com/albums/...psj7iqwhmj.jpg
http://i1146.photobucket.com/albums/...psjuumjw0e.jpg
நிழற்படங்களுக்கு நன்றி . திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.
Courtesy: Tamil Hindu
‘நடிகர் சங்கம் மீது நம்பிக்கை இல்லை’: சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்ட வலியுறுத்தல் - ஜூலை 21-ல் உண்ணாவிரதம்
‘சென்னையில் அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும், அந்த இடத்தில் சிவாஜி மணிமண்டபம் கட்டவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்ற நம்பிக்கை போய்விட்டது. எனவே அரசே மணிமண்டபம் கட்ட வேண்டும்’ என மாநில சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவாஜி சமூகநலப் பேரவை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 65 சென்ட் இடத்தை தமிழக அரசு இலவசமாக ஒதுக்கி 2002-ல் அரசாணை பிறப்பித்தது. அங்கு சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இடத்தையும் அரசிடம் இருந்து முறைப்படி பெறவில்லை. தற் போது வரை அந்த இடம் பொதுப் பணித் துறை வசம்தான் உள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, மணிமண்டபம் கட்டுவதற்கு பூமிபூஜை போடப்பட்டது. அதன் பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை. அங்கு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவார்கள் என தென்னிந்திய நடிகர் சங்கம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
சிவாஜி பிறந்தநாளை நடிகர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்து, ஒரு ஆண்டு மட்டும் கொண்டாடினர். அதன்பிறகு விட்டுவிட்டனர். தன்னுடைய நடிப்பால் தமிழகத்துக்கு சிறப்பு சேர்த்தவர் சிவாஜி. கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மறைந்த ஓராண் டில் அம்மாநில அரசால் மணிமண்டபம் கட்டப்பட்டது. நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைந்த சில நாளில் அவருக்கு மணிமண்டபம் கட்ட கர்நாடக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியது. யாரும் கேட்காமலேயே கன்னட நடிகர்களுக்கு அம்மாநில அரசு சிறப்பு செய்கிறது.
சிவாஜிக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழக அரசே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் சிவாஜி நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.
FILM : BAKTHA THUKARAM
http://i61.tinypic.com/200d7v5.jpg