http://i1146.photobucket.com/albums/...ps5mfzbjzv.jpg
Printable View
Courtesy: Tamil Hindu
மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா
“கண்ணா கண்ணா வாராய்… காதல் என்னைப் பாராய்…ஜாலம் பண்ணாதே இப்போ நீ எங்கே போறாய்” என்ற ஜிக்கியின் குரலில் அமைந்த புகழ்பெற்ற பாடலுக்கு ஒய்யாரமான அசைவுகளில் நடனம் ஆடிக்கொண்டு ‘மாயமனிதன்’(1958) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. இந்தப் படத்தின் நாயகன், ஏவி.எம்.மின் ‘சம்சாரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீராம்.
இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயக நடிகராக உயர்ந்தார் அசோகன். ‘இன்விசிபிள் மேன்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி டி.பி. சுந்தரம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு நடனம், நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரமாக சந்திரகாந்தா உயர்ந்தார்.
காவிரியின் மகள்
கீழத் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் சொந்த ஊர். இந்த ஊரின் நிலக்கிழார் டி.என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் தம்பதிக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் சந்திரகாந்தா. திராவிட இயக்கத்தின் மீது தீவிரப் பிடிப்பு கொண்ட குடும்பம்.
சந்திரகாந்தாவின் அக்கா வத்சலாவை திருமணம் செய்துகொண்டவர் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற வேதாசலம். இவர் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அண்ணா, சென்னை வரும்போதெல்லாம் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் வசித்துவந்த வேதாசலம் வீட்டில்தான் தங்குவார்.
சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரகாந்தாவும் அவரது அண்ணன் சண்முகசுந்தரமும் (`கரகாட்டக்காரன்’ புகழ்) அண்ணாவின் வாழ்த்துகளைப் பெற்று அவரது அன்புக்குரியவர்கள் ஆனார்கள்.
வேதாசலம் வீட்டில் அண்ணா தங்கியிருக்கும் தருணங்களில் அவரைக் காண அங்கே வருவார் ‘நடிப்பிசைப் புலவர்’ என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமி. ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் ‘கிருஷ்ணன் நாடக சபாவை 1943-ல் தொடங்கிய கே.ஆர்.ஆர், சமூக சீர்திருத்த நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி, திராவிட இயக்கத்துக்கு வலு சேர்த்துவந்தார். இவரது நாடக சபாவுக்காகவே அண்ணா நாடகங்களை எழுதிவந்த காலம் அது.
ஒருமுறை வேதாசலம் வீட்டுக்கு அண்ணாவைக் காண வந்த கே.ஆர்.ஆர்., வீட்டின் ஓர் அறையில் நட்டுவாங்கம் செய்யும் சத்தம் ஒலிப்பதைக் கேட்டு, அந்த அறையில் நுழைந்தார். அங்கே 14 வயதுப் பருவப் பெண்ணாக லட்சுமிகாந்தத்தின் (இதுதான் சந்திரகாந்தாவின் இயற்பெயர்) துள்ளலான நடனத்தைக் கண்டார்.
வேற்று மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்று வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார் சந்திரகாந்தா. நடனம் முடிந்ததும் குருவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வந்தவர், கே.ஆர்.ஆருக்கும் வணக்கம் செய்தார். ஆச்சரியப்பட்ட கே.ஆர்.ஆர்., “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “உங்களைத் தெரியாத பேதையா நான்?” என்று துடுக்காக பதில் சொன்ன அந்தக் கணத்தில் தனது நாடகத்துக்குக் கதாநாயகி கிடைத்துவிட்டதாக நினைத்தார் கே.ஆர்.ஆர்.
15 வயதில் தொடங்கி கே.ஆர்.ஆரின் பல பிரச்சார நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார் லட்சுமிகாந்தம். ஒரு நாடகத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் சந்திரா. அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன்.
நாடகத்தின் முடிவில் “இந்த நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த காந்தம், நாடகக் கலைக்குக் கிடைத்த அரிய சொத்து” என்று பாராட்டினார். நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து கே.ஆர்.ஆர்., லட்சுமிகாந்தத்துக்கு `சந்திரகாந்தா’ என்று பெயர் சூட்டினார். லட்சுமிகாந்தம் என்ற புகழ்பெற்ற மற்றொரு நடிகையும் இருந்ததால் பெயர் மாற்றம் சந்திரகாந்தாவுக்குக் கைகொடுத்தது.
நவரச நாயகி
முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைவது அபூர்வம் என்ற காலகட்டம் அது. அப்போது முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொடுக்க விரும்பினார் ‘சிட்டாடல்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இயக்கிய ஜோசப் தளியத். அந்தப் படம் ‘விஜயபுரி வீரன்’.
குழு நடனங்களில் டான்ஸராகப் புகழ்பெற்றிருந்த சி.எல். ஆனந்தனைக் கதாநாயகனாகவும் ஹேமலதா என்ற புதுமுகத்தைக் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்த தளியத், இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சந்திரகாந்தாவை ஒப்பந்தம் செய்தார். ஏ.சி. திருலோகச்சந்தர் திரைக்கதை எழுதியிருந்த இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.
அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963-ல் வெளியான ‘இது சத்தியம்’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். படத்திலிருந்து விலகிக்கொள்ள அவருக்குப் பதிலாக அசோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை சந்திரகாந்தா. ரா.கி. ரங்கராஜன் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக எழுதி புகழ்பெற்று பின் திரைப்படமான இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
“சரவணப் பொய்கையில் நீராடி உனைத் தந்தருள் என்றேன் முருகனிடம்” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடல் காட்சியில் ஆற்றில் குளித்தபடி நடித்தார் சந்திரகாந்தா. அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது இந்தப் படம் (இதே படத்தில் இடம்பெற்ற “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலில் நடனமாடி, துணை நடிகையாக அறிமுகமான ஹேமமாலினி அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் பட உலகில் புகழ்பெற்ற கதாநாயகியானார்).
அடுத்த ஆண்டே ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இசைச் சித்திரமான ‘கலைக்கோயில்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக்கொண்டார் சந்திரகாந்தா.
சவாலும் துணிச்சலும்
சி.எல்.ஆனந்தன், அசோகன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மீண்டும் சந்திரகாந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்க அன்றைய கதாநாயகிகள் மறுத்தார்கள். ஆனால் சந்திரகாந்தா இதில் விதிவிலக்கான நட்சத்திரம் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று நடித்ததால் ‘துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா’ என்றும் பெயரெடுத்தார்.
சிறந்த குரல்வளம், சிறந்த நடனத் திறமை, தரமான நடிப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்த அவரை நவரசத் திலகமாக உயர்த்தின அவர் ஏற்ற துணிச்சலான கதாபாத்திரங்கள். முத்துராமன் ஜோடியாக ‘முத்து மண்டபம்’படத்தில் அழகும் ஆபத்தும் இணைந்த பெண்ணாக, நாட்டியக் கலைஞர் குமுதவல்லி, நவயுக மங்கை கனகவல்லி ஆகிய இரண்டு பரிமாணங்களில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.
தன் திரைவாழ்வின் தொடக்கத்தில் இருந்த சந்திகாந்தா பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘பந்தபாசம்’(1962) படத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.
தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, ‘துளிசிமாடம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது உட்பட சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார்.
சிவகாமி கலை மன்றம்
புதிய கதாநாயகிகளின் படையெடுப்பு மிகுந்திருந்த 60-களின் இறுதியில் சினிமாவிலிருந்து முற்றாக விலகிய சந்திரகாந்தா, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்வில் இணைந்தார்.
இந்தத் தம்பதியின் ஒரே மகள் தீபா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். 1978-ல் மறைந்த சந்திரகாந்தா திரையிலிருந்து விலகியபின் ‘சிவகாமி கலை மன்றம்’ என்னும் நாடக மன்றத்தைத் தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களையும் நடத்தினார். இவற்றில் பல திரைப்படங்களாகியிருக்கின்றன.
சந்திரகாந்தாவைப் பற்றி எண்ணும்பொழுது சிறந்த நடனக் கலைஞரான இவர் "பொன்னியின் செல்வி" என்ற நாட்டிய நாடகத்தை நடத்தியதாக நினைவு. ( ஆதிமந்தி, ஆட்டன் அத்தி, மருதி ஆகியோரை பாத்திரங்களாகக் கொண்ட இதே கதையை ( மன்னாதி மன்னன் திரைப்படக் கதைதான் ) ஜெயலலிதாவும் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற பெயரில் நாட்டிய நாடகமாக்கி நடித்ததாகவும் நினைவு.
சரிதானா என்பதைப் பெரியவங்க சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
15.4.1956
சுதேசமித்திரன் தின இதழ் வெளியிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் -திரைப்பட விமர்சனம்
http://i65.tinypic.com/iqc3rp.jpg
அன்புள்ள வாசு சார்,
தாங்கள் எத்தனை முறை ராஜாவைப் பற்றி எந்தெந்த கோணங்களில் எழுதினாலும் படிக்க படிக்க சுவையே தவிர சலிப்பில்லை. எப்படி ராஜாவை எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்குமோ அது போலவே.
ராஜாவில் நமது விஸ்வம் பங்களிப்பு பற்றிய உங்களது வர்ணனை அருமை. கதாநாயகன் அறிமுகம் ஆவது வரையில் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்வார். அலட்டிக் கொள்ளாத அலட்சிய நடிப்பு நம்மை மிகவும் கவரும். கைது செய்யப்பட்டு கமிஷனர் முன் நிறுத்தியபோதும் கமிஷனர் சிங்கப்பூரில் இருக்கும் கடத்தல் மன்னனின் போட்டோவைக் காட்டி மிரட்டும்போது கொஞ்சம் கூட பயமின்றி அசால்ட்டாக பதிலளிக்கும் அழகே தனி.
லாக்கப்பில் ராஜாவுடன் அறிமுகம் ஏற்பட்டதும் அதற்கெனவே காத்திருந்தவர் போல பொறுப்பை ராஜாவின் தோளில் சுமத்தி விட்டு மறைந்து விடுவார். அதிலிருந்து ராஜாவின் அட்டகாசம்தான் படம் முழுக்க. க்ளைமாக்சுக்கு சற்று முன் மீண்டும் விஸ்வத்தின் அட்டகாசம் தொடரும். மீண்டும் அறிமுகம் ஆகும்போதே கமிஷனரிடம் அவர் போனில் பேசும் அலட்சியம். "கமிஷனர் சார், என்னை ஏமாற்ற முடியாது. ஒருத்தர் குரலை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டேன்" என்று சர்வ அலட்சியமாக சொல்வதும் "எங்க தொழிலில் பாவ புண்ணியம் பார்க்க கூடாது சார்" என்று கமிஷனரையே மிரட்டுவதும்,
க்ளைமாக்சில் ராஜாவின் அம்மாவாக தன்னால் கடத்தி வரப்பட்ட பண்டரிபாய் பாபுவின் அம்மா என்று அறிந்து தடுமாறுவதும், தன் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து போய் பாஸின் முன் நிலைகுலைந்து நிற்கையில் அப்போது அங்கு வரும் ஜம்புவின் (கே.கண்ணன்) விளக்கத்தால் மீண்டும் விஸ்வம் விஸ்வரூபம் எடுத்து, தன்னை ஏமாற்றிய சகோதரர்களை சாட்டையால் விளாசுவதும் என 'விஸ்வம்' மனோகரின் பங்கு ராஜாவில் மகத்தானது.
ஓ... அயணம் என்றால் இப்படி அர்த்தமா?
60-களின் மத்தியில் (துப்பாக்கி பிடிக்குமுன்) ஆனந்த விகடனில் எம்.ஆர்.ராதா தன் சுய சரிதையை எழுதி வந்தார். அதற்கு அவரிட்ட தலைப்பு "ராதாயணம்". நாத்திகரான இவர் ராமாயணத்துக்கு போட்டியாக பெயர் வைத்தாரோ என்று நினைத்தேன். இப்போ அர்த்தம் புரிந்தது.
சந்திரகாந்தா தமிழ்த் திரையில் மறக்க முடியாத பெயர். அவர் பற்றிய கட்டுரையில் முரடன் முத்து, கறுப்புப்பணம் படங்களை குறிப்பிடாதது குறையே.
நான் உன்னைச் சேர்ந்த செல்வம் (கலைக் கோயில்)
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்தேன் (முரடன் முத்து)
உந்தன் ராஜசபை இங்கு வாராதோ (கறுப்புப்பணம்)
பாடல்கள் மறக்க முடியாதவை.
தன் அண்ணன் சண்முகசுந்தரத்தின் மனைவி நடிகை ரமாபிரபா, முறையான விவாகரத்து பெறாமல் சரத்பாபுவுடன் "ஓடிப்போனபோது" நேரில் போய் ரமாபிரபாவை பளார் பளாரென்று விளாசிவிட்டு வந்தவர் சந்திரகாந்தா.
சுத்தமான தமிழ் பேசும் நல்ல நடிகை.
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ.....
நம்மில் நிறையப் பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும்...... சேற்றில் கால்பதித்துக் கூத்தாட ....?
https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo
மழையில் நனைந்தால் சேறு கரைந்துவிடப் போகிறது !
https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y
மனதில் சேற்றை வாரியிறைத்த மங்கையரை நினைத்திட்டால்.....
https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg
Come back Rajesh. You don't think you lost her. She is very well with you. You continue your routine and she will be taking part in all your ventures.
God bless You with enough strength and will power.
சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள் !
https://www.youtube.com/watch?v=euICZmupFJ0
https://www.youtube.com/watch?v=XLWbdfXk-HU
வாங்க ராஜேஷ்.. நாங்க இருக்கோம் எங்க பிரார்த்தனைகள் இருக்கு..
With Love from the Treasure Island of GG!
The Cosmology and Seismology of Love!!
கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....
The cosmic power of sky controls earth.....the seismic power of lady confuses the lad!
Quote:
உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!
மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!
காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....
நேற்றுவரை அவன் யாரோ என்ன பேரோ....
அண்டாகாகசம் அபூகாகுசூம்.....மூடிடு சீசே!
இன்றுமுதல்... இவள் வேறோ இவன் வேறோ.....
அண்டாகாகசம் அபூகாகுசூம்..... திறந்திடு சீசே!
இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!
மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!! விண்ணும் மண்ணும் வாழ வைக்கும்.... நம்மைக் காதலில் வீழ வைக்கும்..... பிரம்மாஸ்திரங்களே பெண்ணும் கண்ணும் !!
The cosmic power anchors the love!
https://www.youtube.com/watch?v=9sFXN-3Ju7c
The seismic power cracks the love!!
https://www.youtube.com/watch?v=RggMJODLIac
பகுதி : 3
குர்குமா லோங்கா (அட திட்டல்லாம் இல்லீங்க) ஒரு மருத்துவ மூலிகையாகும்..இதன் தண்டில் உள்ள கிழங்கானது அழகிய ந்ங்கையர்க்கு மேலும் அழகூட்டும்..பல வித மருத்துவ குணங்கள் உள்ள இந்த மூலிகையின் இயற்பெயர் தமிழில் …மஞ்சள் என்பதாகும்..
வஞ்சி எழிலினை வாகாகக் கூட்டுவது
மஞ்சள் கிழங்கினால் ஆம்..
சஞ்சலங் கொண்டேன் சாகவா என்றே
வஞ்சியென் உள்ள வாட்டமும் அறியான்
கொஞ்சிய கோவும் கோதையைப் பிரிய
மஞ்சளும் சற்றே மாறலு மாச்சே..
என ஒரு சங்க காலப் பெண் காதலன் பொருள் சேர்க்கப் பிரிந்ததை நினைந்து புலம்புகிறாளாக்கும்..
ஹச்சோ மறந்துட்டேனே.. ஆமாம் தலைப்பு வைக்கத்தான்.. பரவாயில்லை எழுதப் போவது தமிழ் சினிமாவில் தலைப்பு என்ற கான்செப்டையே விட்டொழித்தவர் என்று கான்செப்ட் புகழ் செந்திலும் சில ஆன்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள்! :)
சரி தலைப்பு.. சிம்ரனாயனம் -பகுதி 3
நாம் பார்க்கப் போகும் பாடலில் அப்படிப் பட்ட சிம்ரன் கிடையாது அடக்க ஒடுக்கமான ஆனால் மஞ்சள் பூசாத பஞ்சாபிப் பெண்ணாக ஆரம்பத்தில் வந்து பின் மஞ்சள் பூசி.. கனவே கலையாதேயில் வருவாராக்கும்..
எண்ணமது ஈடேற ஏந்திழையின் உள்ளத்தில்
கண்ணனின் தோற்றத்தைக் கண்டிங்கு – பொன்னென
மின்னும் முகமதியும் மீண்டும் பொலிவுறவே
முந்தினாள் மஞ்சளிடத் தான்..
ம்ம் பஞ்சாபிப் பெண் தமிழ்ப் பையன் காதல்..ஈடேறிச்சுன்னு நினைகக்றச்சே வேறு என்னவெல்லாமோ நடந்து கதை வேறு விதமாகப் போகும்.. சிம்ரன் நன்னாயிட்டு நடிச்சுருப்பார்..
*
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடேறுதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூறுதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பாடியது அனுராதா பட்வல்..கொஞ்சம் மென்மைக்குரலாய் ஏதோ ஒன்று ஈர்க்கிறது..
ம்ம் இனி பாட்..
https://youtu.be/Wlkbs2mZYCk?list=PL...qaZEsDw2mb8L-l
அடுத்த பாடலில் சிம்முவை விட நாயகனை விட நடனத்தில் அசத்துபவர் இன்னொருவர்.. என்னவாக்கும் அந்தக்காதல் பாடல்..
ஆமாம் எங்கெங்கே அந்தப் பாட் அப்புறமா போடுவேன்.- இன்னொரு அத்தியாயத்தில்ல்..:)
பின்ன வாரேன்..
Gap filler....
Cosmology and Seismology of Love with the King of Romance!!
கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....
The cosmic power of sky controls earth.....the seismic power of lady controls the lad!
பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை.....
கண்ணைப் பார்த்தும் ஏன் கவிதை வரவில்லை
பெண்ணையும் கண்ணையும் தவிர்த்து விண்ணையும் மண்ணையுமே பார்த்துத் தவிக்கும் காதல் மன்னர் !
https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_k
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..
ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..
கன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
https://youtu.be/oVWMAwvi2kA
Super சி க! நீங்களும் சின்னக் கலைவாணரே!!Quote:
பண்ணினைப் பாடுகின்ற பாவையர் கண்ணிலே
வண்ணங்கள் துள்ளியே வாடாத மாலைகளாய்
இன்னும் பலவாய் இருக்கு மெழிற்காட்சி
எண்ணி லடங்காது தான்..
ம்ம் க க்கும் பெக்கும் என்னோட காண்ட்ரிப்யூஷன்..
பெக்கடித்தால் கக்க வேண்டியிருக்கும் என்பதை எவ்வளவு அழகாக கக்கும் பெக்கும் என்று கான்ட்ரிப்யுட் பண்ணியிருக்கிறீர்கள் !
கக்கும் பெக்கின் கிக்குக்காக விக்கும் திக்கும் மக்கு காதல் (தோல்வி) ரன்னர் !
https://www.youtube.com/watch?v=QeFCsvtZCO8
ஹச்சோ க விற்கும் பெ விற்கும் அஃதாவது கண்ணுக்கும் பெண்ணுக்கும் என்று தானே சொல்லவந்தேன்..ஹச்சோ ஹச்சோ :)
பெண்ணும் கண்ணும்........ மக்கள் கலைஞரும் கலைநிலவும் ....அவரவர் பாணியில் !
https://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74
https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk
ஒரே பாடல் இரு நாயகர்கள்... இரு வேறு பாடகர்கள்... இரு வேறு சூழல்களில் !
நான்கு சுவர்கள் திரைப்படம் ஜெய் சங்கர் ரவிசந்திரன் இணைவில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து அந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த வெற்றியைத்
தராவிட்டாலும் அருமையான வண்ணப் பதிவில் இனிமையான இசையில் தேனான பாடல்களால் ரசிகர்களை ஈர்த்த படம் !
கைகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் ரவி (SPB) வாணிஸ்ரீயுடன் டூயட் பாடி ஜெய்யை உசுப்பேற்றுகிறார்!
ஜெய்யும் (TMS)தனக்கு சூழல் வாய்க்கும் போது விஜயலலிதாவுடன் ரவி பாடிய பாட்டையே பாடி ரவியை கடுப்பேற்றுகிறார் ...ரவியும் நடுநடுவே வசனத்தால் அடிக்கிறார் !
https://www.youtube.com/watch?v=bXkkNe7Kk8c
https://www.youtube.com/watch?v=oC1om5nJZPk
One song...different actors, singers and situations!
Paar makale paar song aval paranthu ponale then pachai maram ondru song in Ramu...anbu malarkale song in Naalai namadhe.?
situational song for me
https://www.youtube.com/watch?v=FKRozvRwkjY
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!No.1 :நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுவரை ஓர் நினைவு தந்தாய் ....சாந்தி !Quote:
அன்பு நேசம் காதல் பரிவு பாசம் எல்லாம் குடிபுக நினைக்கும் இடங்களே மனம் இதயம் நெஞ்சம் .....என்ன வித்தியாசம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆனாலும் நேசம் நேராக தஞ்சம் புகும் இடமே நெஞ்சம்...அன்பு மிஞ்சும் மனமே நெஞ்சம் ...காதல் கொஞ்சும் இதயமே நெஞ்சம் ..என்று நம்புகிறேன் !
நெஞ்சம் நிறைந்த நெஞ்சத்தைத் துளைத்த நெஞ்சம் தொலைந்த நெஞ்சம் கிஞ்சித்தும் மறக்கவொன்னாத மதுர கானங்கள் ...எனது நெஞ்சிருக்கும் வரை !
பாடலின் தெளிந்த நீரோடை வரிகளாகட்டும் இசை நேர்த்தியாகட்டும் சுசீலாம்மாவின் தேனினுமினிய குரல் குழைவாகட்டும் நடிகர்திலகத்தின் சதனார் விசிலின் உதட்டுக் குவிப்பசைவாகட்டும் தேவிகாவின் எழிலாகட்டும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் தனியிடமே !
https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு![QUOTE]
No.2
அன்புக்கும் காதலுக்கும்தான் நெஞ்சம் என்றில்லாமல் கோபத்தின் கொள்ளிடமாகவும் அது மாறிவிடும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பொறுமையை சோதித்திடும் போது ! நடிகர்திலகத்தின் அகக்கோபம் முகபாவத்திலே ....பராசக்தி
https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo
No.3 :
எதிர்மறை எண்ணங்கள் உதிர்ந்து நேர்சிந்தனைகள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைப் புகுத்தும்போதும் ....நெஞ்சிருக்கும் வரை ..
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
நெஞ்சம் மறக்கவோன்னாத மதுர கானங்களின் அணிவகுப்பு ....மரியாதை நடிகர்திலகத்துக்கு !
தமிழ்த் திரை கண்ட மிகச்சிறந்த காதல் காட்சிய்மைப்புக்களில் இதமானது !
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு கண்ணில் குடியிருக்கும் காதலியின் நிலைமை உணர்த்தும் கண்ணியமான காட்சியமைப்பு !!
No. 4 வெள்ளித்திரையோ வண்ணத்திரையோ புதிரை உள்ளடக்கிய காதல் நெஞ்சத் திரை இரும்புத்திரையா பனித்திரையா பட்டுத் துணித்திரையா ?! ....இல்லை வெறும் மண்குதிரையா?!
https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி ....பாரதியின் பாரதிரும் நெஞ்சின் நிலைப்பாடு நடிகர்திலகத்தின் நெஞ்சில் தஞ்சம் !
No.5 கப்பலோட்டிய தமிழன்
https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg
மனித வாழ்வில் மறதி என்னும் கசப்பு மருந்தே மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது படைத்தவனாகிய இறைவனின் படைப்பு வினோதமே !
ஆனாலும் பழையதை மறந்து புதிய பறவையாக வட்டமிட திட்டமிடும்போது மறந்ததை எல்லாம் நெஞ்சத்தின் நினைவில் மீட்டுக் கட்டம் கட்டிட வந்ததையா ஒரு பழைய பறவை !! எந்த திரைக் கதாபாத்திரமும் இவ்வளவு நெஞ்சுவலி தரும் இன்னல்களை சந்தித்ததில்லை ! அந்த வேதனைகளை வெளிப்படுத்தியதில் உலகநடிகர் எவரும் நமது திலகத்தை மிஞ்சியதுமில்லை !
அவர் நமது இதயக் குடிலில் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..... மறந்ததே என்ன நெஞ்சமோ !
No. 6 : புதிய பறவை!
https://www.youtube.com/watch?v=vkMpyPk6Mss
https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ
Superb melody from Manidharil Ithanai Nirangala
https://youtu.be/tu5z65CsMJs
Gap filler...
"Don't You Need Somebody..." by RedOne
This is the Official Song of Euro 2016
https://www.youtube.com/watch?v=6fBZBntjEOA
Featuring:
Akon
Alex Sparrow
Ali B
Aseel
Bibi
Cristiano Ronaldo
Dave Stewart and Kaya Stewart.
Dr. Simon Ourian
Enrique Iglesias
French Montana
Howie Mandel
James Rodriguez
Jay McGuinness
Aliona Vilani
Jean-Claude Van Damme
Jennifer Lopez
John Maman
Just Jared
Kaitlin Bristowe
Karina Bazan
Kevin McHale
Kristina Bazan
Maître Gims
Max Schneider
Mesut Özil
Mila Jovovic
Momo
Mr Brainwash
Perez Hilton
Priyanka Chopra
David Luiz,
Blaise Matuidi
Josh Norman
R City
Rafael Nadal
Randy Jackson
RedOne
Ryan Seacrest
Serayah
Shaggy
Simobb
Tal
Thanh Bui
The Band Perry
Mood and Mind Moderators!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!
(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.1 : ரம்பையின் காதல்.....!Quote:
மாயா வினோதங்கள் நிறைந்த நீர்க்குமிழியாய்த் தோன்றி மறையும் வாழ்வுச் சுழற்சியின் முற்றுப்புள்ளி மரணத்திற்குப் பிறகு நாம் ஐக்கியமாகப் போகும் மண்ணோ விண்ணோ......நமது ஆவி நீங்கிய பூதவுடல் இறுதியாகக் கிடத்தப்பட்டு சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டு....சமரசத் தேரேறி மனித வாழ்வில் நாம் ஆர்ப்பரித்திட்ட பேதங்கள் அடங்கி இறைவனின் பாதங்களை சேர்ந்திட உதவும் உந்துதளம் Spring Board தொல்லைகள் ஏதுமின்றியே தூங்கிடும் வீடாம் சு(இ)டுகாடே!
மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!
https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4
Mood and Mind Moderators!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!
மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!
உயிர் இருக்கும் வரையே நிலைக்கும் உறவுகள்....துறந்த உயிரின் ஆத்மா இனி நினைவஞ்சலி நிழற்படமே!
வீடு வரை உறவு..... வீதி வரை மனைவி..... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ!
பிறந்தவுடன் இன்பத் தாலாட்டு....இறந்தவுடன் துன்ப ஒப்பாரி.....இசையிலும் பேதங்கள் வாழ்வியல் வேதங்களே
(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.2 பாதகாணிக்கை ......மண்ணில் மறையும் விண்ணில் உறையும் அமர ஆத்மாக்களுக்காக!
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
Mind Menders and Mood Moderators!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!
மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!
போனால் போகட்டும் போடா....இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.3 பாலும் பழமும் ......வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது!
https://www.youtube.com/watch?v=xJv69gO4dBA
NT at his best....!
நடிகர்திலகத்தின் சமரச சாம்ராஜ்ஜியம்....முடி சூடிய மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலே!!
https://www.youtube.com/watch?v=hBWh4TrnUeQ
https://www.youtube.com/watch?v=EYjT...=RDEYjTYoi1i7M
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி -1966
அதுவரை Road movies என்ற genre ,hollywood காரர்களுக்கே ரொம்ப அரிது.(You only live twice,Persons in Hiding (1939??),They live by night,Gun Crazy,Breathless(1960),The Sadist(1964) போன்ற ஒரு சில.
இந்திய அளவில் Road movies முன்னோடி ,மெட்ராஸ் டு பாண்டிச்சேரியே .
விவித பாரதி என்ற வினோத banner இல் பீம்சிங் மேற்பார்வையில் திருமலை மகாலிங்கம் இயக்கிய இந்த படம், suspense ,thrill ,நகைச்சுவை ,romance ,புதுமை அத்தனையும் கொண்டு A ,B ,C அனைத்து தரப்பினரையும் ஒரு சேர சந்தோஷ படுத்திய படம்.கதை-வசனம் -உசிலை த. சோமநாதன் (சபாஷ்). மகா வெற்றி பெற்ற ஆரம்ப ரவிச்சந்திரன் படங்களில் ஒன்று (B .S .ரவிச்சந்திரன் என்று டைட்டில் ) .கொஞ்சம் சரோஜாதேவி சாயலடிக்கும் கன்னட நடிகை கல்பனாவின் ஒரே தமிழ் படம்.அழகன் ரவியின் இணையில் ஜொலிப்பார். ரவியும்,வில்லன் கள்ளபார்ட் நடராஜனும் பின்னுவார்கள்.நாகேஷ்,கருணாநிதி,பக்கோடா காதர் என்று செம காமெடி அணிவகுப்பு. படம் போவதே தெரியாது.
படத்தின் மற்றுமொரு சிறப்பு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி யின் இசை. பிரிந்த பின் இவரை ஆதரித்தவர்கள் முக்தா, மேகலா ,ராமண்ணா, பீம்சிங் போன்றோர். ராமமூர்த்தி ,கண்ணதாசனை தவிர்த்தே வந்தார். (இந்த படத்திற்கு 5 பாடலாசிரியர்கள்.)கண்ணதாசன் ,தன் சுயநல நோக்கிற்கு,இரட்டையர்களை பிரித்தார். (இதை பற்றி ஏற்கெனெவே, எழுதியுள்ளேன்)இந்த படத்தில் ஹாய் Friend dear க்கு என்ன, மலரை போன்ற,பயணம் எங்கே,என்ன என்ன நெஞ்சுக்குள்ளே என்ற ஜாலி பாடல்கள் ,ரவியின் நடன திறமை,சின்னி-சம்பத் choreography யில் மிளிரும்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அசைய விடாமல் அசத்திய இந்த வெற்றி படம் பாம்பே டு கோவா என்று எஸ்.ராமநாதன் (தமிழிலிருந்து ஹிந்தி ரீமேக் புகழ்,இருதுருவம் இயக்குனர்) ஹிந்தியில் எடுத்தார். அமிதாப் பின் ஆரம்ப கால சுமார் வெற்றி படங்களில் ஒன்று. (ஒரிஜினல் கிட்டே வர முடியவில்லை)இதில் பயணம் எங்கே பாடலின் ஹிந்தி பதிப்பான தேக்ஹா நா ஹைரெ சொஜானா என்ற பாடல் அந்த கால மாணவர்களின் விருப்பம். (ஜெய் ஜெய் சிவ சங்கர் இன்னொன்று.)
https://www.youtube.com/watch?v=OybNT11fIvg
https://www.youtube.com/watch?v=-Ju_SPo1tKQ
Our Heart Felt condolenses to A.C.Thirulok Chandar. One of the respected Script Writer,Director and well read person.
From sundaramurthi naayanaar
thalaiye nee vaNangaai......
http://www.youtube.com/watch?v=sZAmRkNpD0Y
I was taught this song when I was in elementary school. I don't know whether they still teach thevaram in schools ! :)
காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்! Posted by: Manjula Published: Wednesday, June 15, 2016, 15:33 [IST]
சென்னை:பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இயக்குநர் மிஷ்கின் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் ரவிச்சந்திரன். இவரது பேத்தி தான்யா தற்போது மாடலிங் செய்து வருகிறார். இந்நிலையில் தான்யாவை ஒரு புகைப்படத்தில் பார்த்த மிஷ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். மிஷ்கின் நடித்து வரும் சவரக்கத்தி படத்திற்குப் பின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார். இந்த 2 படங்களுக்குப் பின் தான்யா நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். நாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர். ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாத்தா போல பேத்தியும் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.