தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 2
http://sivajiganesan.in/Images/030116_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 2
http://sivajiganesan.in/Images/030116_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 3
http://sivajiganesan.in/Images/030116_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 4
http://sivajiganesan.in/Images/030116_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 5
http://sivajiganesan.in/Images/030116_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 6
http://sivajiganesan.in/Images/030116_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 7
http://sivajiganesan.in/Images/030116_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 8
http://sivajiganesan.in/Images/030116_9.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 9
http://sivajiganesan.in/Images/030116_8.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 10
http://sivajiganesan.in/Images/030116_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 11
http://sivajiganesan.in/Images/030116_11.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள் 12
http://sivajiganesan.in/Images/030116_12.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...3a&oe=5738C425
In tune with Thangaikkaga song...
THIRUVILAIYADAL GOLDEN JUBILEE CELEBRATIONS ... PHOTOS...
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a0&oe=5737CDF7
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d2&oe=573A0AB9
Smt. Vijaya Samundeeswari, D/o Savithri, receiving memento
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...15&oe=576DEF3E
Rajesh, S/o Nagesh receiving memento
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...89&oe=576CDFD6
Shri OAK Sundar receiving memento...
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...eb&oe=5770AF7F
Cinematographer Babu, who was an assistant to Shri K.S. Prasad, receiving memento
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...b9&oe=57230455
Smt. Sucharitha, who donned the role of Muruga in Thiruvilaiyadal, receiving memento and fondly embraced by Kumari Sachu, while Shri Cheran and Shri ARS look on. The man behind clapping is Shri Ramu, coordinator of the music troupe.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...14&oe=576E01ED
Shri Nandakishore, S/o of P.B.Srinivas, receiving memento
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...0b&oe=573535CE
Smt. P. Susheela while memnto was presented to Smt. A.P.Nagarajan
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...10&oe=573870BB
Shri C.N. Paramasivan, S/o A.P.Nagarajan, lauding YGeeM for the organisation of the function.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...98&oe=573EBF69
Our dearest bro, Shri Ramkumar Ganesan, appreciating YGM.
http://i1028.photobucket.com/albums/...pslltuamfl.jpg
மெட்டுக்குப் பாட்டெழுத
வேண்டுமென்கிற என்
நெடுநாள் ஆசையை
திரு.ராகவேந்திரா சார்
பெரிதாக்கி விட்டார்.
அதே "தங்கைக்காக" படத்தில் இடம் பெற்ற "தாயின் முகம்
இங்கு நிழலாடுது" பாடலின்
மெட்டை எடுத்துக் கொண்டு,
நடிப்பரசரை வியந்து நான்
எழுதிய பாடல்.
-------------------------------
காலம் கொண்டாடும்
கலை மன்னவா!
கானக் குரலால் உன்
புகழ் சொல்லவா?
'பிள்ளை' எனச் சொல்லி
அன்பின் மடி தந்த
நீயும் தாயல்லவா?
(..காலம்..)
ராகம் சேராமல்
தாளம் கூடாமல்
பாடல் சுகமாகுமோ?
வெள்ளித்திரை தன்னில்
நீயும் தோன்றாமல்
நடிப்பும் நலமாகுமோ?
மிகையென்ற பொய் வென்று
நிஜமென்று மனம் நின்ற
தலைவா உன் திறமெல்லாம்
கலை பெற்ற வரமாகும்.
'பிள்ளை' எனச் சொல்லி
அன்பின் மடி தந்த
நீயும் தாயல்லவா?
அய்யா..
நீயும் தாயல்லவா!
(..காலம்..)
உன்னைத் தினம் கண்டு
உருகும் விழி ரெண்டும்
உன்னைப் பிரியாதய்யா!
உன்னைக் காணாமல்
உன்னைப் பாடாமல்
எமக்கு நிறைவேதய்யா?
ஒருபோதும் மறவாத
மனமுண்டு. நினைவுண்டு.
நினைவோடு நீ உண்டு.
உன்னோடு புகழுண்டு.
'பிள்ளை ' எனச் சொல்லி
அன்பின் மடி தந்த
நீயும் தாயல்லவா?
அய்யா..
நீயும் தாயல்லவா?
(..காலம்..)
தினத்தந்தி நாளிதழில் டி.என்.பி.எஸ்.சி தேரிவிற்கு பொதுஅறிவு தகவல் தொகுப்பு என்ற பகுதியில் தமிழ்நாட்டு தலைவர்களின் சிறப்புப் பெயர்கள் என்ற தலைப்பில் தலைவர்களின் பெயர்களையும் அவர்களின் சிறப்புப் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. அதில் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. கலையால் உலகை ஆண்ட உன்னத தலைவனின் பெயரை பதிவு செய்த தினத்தந்தி நாளிதழுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான சிவாஜி அவர்களின் அன்பு இதயங்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/050216_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் வெளிவர இருக்கும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கான விளம்பரம் பிப்ரவரி மாத இதயக்கனி சினிமா இதழில் முன் அட்டை உள்பக்கத்தில் வெளியாகி உள்ளது. மேலும் பிப்ரவரி 6 அன்று தினத்தந்தி நாளிதழில் தமிழகம் முழுவதும் விளம்பரம் வெளியாகிறது என்ற தகவலை சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் தயாரித்துள்ள மதுரை சிவா மூவீஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.sivajiganesan.in/Images/050216_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
ஜனதா தள தலைவராக இருந்தபோது( கோவை) http://i1039.photobucket.com/albums/...pstmyzrltf.jpg
1988தேர்தலுக்கு பின்
சூரக்கோட்டை வீட்டில் http://i1039.photobucket.com/albums/...ps3rypyhzc.jpg
பண்பாடு வழுவாத பட்டிக்காட்டானாக நம் நடிகர் திலகம் தோன்றி, பழமையை
விட்டு நீங்கச் சொல்லும்
பட்டணத்து மனைவிக்கு
அறிவுறுத்துவது போல்
"பட்டிக்காடா பட்டணமா"
படத்தில் ஒரு வசனம் உண்டு.
" ஒங்க தாத்தனே வந்தாலும்
மாத்த முடியாத சமாச்சாரமெல்லாம் இங்க
நிறைய இருக்கு."
------------------------------
*வந்தோம்.பார்த்தோம். மூன்று
மணி நேரம் முடிந்தது. கிளம்புகிறோம்- என்கிற மாதிரியான ஏனோதானோ
ரசிகர்களாயில்லாமல், ஒரு
தவமாய் படம் பார்க்கிற
ரசிகர்கள்...
* மழலைப் பருவம் தொட்டு
மரணம் வரையிலும்
நடிப்பின் மீதான காதல்
விடாத கலைஞனின் மீது
அவர்கள் வைத்திருக்கிற
பேரன்பு...
* எந்தக் காலத்திலும், எந்தத்
தலைமுறையிலும் காண
முடிகிற அந்தப் பேரன்பின்
நீட்சி...
-இவையும் கூட இங்கே
மாற்ற முடியாத சமாச்சாரங்கள்
தாம்.
மாற்ற முடியாத சமாச்சாரங்கள்
காட்டும் அதிசயங்களை
மாசமொருமுறை நிரூபித்துக்
காட்டும் " நடிகர் திலகம்
திரைப்படத் திறனாய்வு அமைப்பு"க்கும், சிறப்பான
அதன் ஐந்தாம் ஆண்டு விழாவிற்கும் எனது இதய
வாழ்த்துகளைச் சமர்ப்பிக்கிறேன்.
அவசர அலுவல்களால் வரவியலாமற்போன எனது
இந்த வாழ்த்துச் செய்தியை
விழாவில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றிகளுடனும்...
நல்வாழ்த்துகளுடனும்...
-ஆதவன் ரவி-
Courtesy Mr. Sudhangan Face book
செலுலாய்ட் சோழன் – 112
பாலையா பாலமுரளி கிருஷ்னாவின் குரலுக்கு எப்படி நடிக்கப் போகிறார் என்பதை பார்க்கவே சிவாஜி போயிருந்தார்!
அதையும் மீறி தான் நடிக்க வேண்டும்!
தன் நடிப்பை காட்டுவதற்காக இல்லாவிட்டாலும், அந்த கதாபாத்திரம் சிவனுடையது!
சிவன் ஜெயித்தாக வேண்டுமே!
திருவிளையாடல் வெற்றிக்குப் பிறகு அடுத்த ஆண்டுகளில் சிவாஜிக்கு சில சமூக படங்கள் வந்தது!
அதில் குறிப்பிடத் தக்கது `இரு மலர்கள்’ `ஊட்டி வரை உறவு’
இருமலர்கள் ஏ.சி. திருலோல்சந்தர் இயக்கிய படம்!
இவரைப் பற்றி சொல்லியாக வேண்டும்!
ஏவிஎம்மின் `வீரத் திருமகன்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்!
தமிழ். தெலுங்கு, இந்தி உட்பட 65 படங்களை இயக்கியவர்!
20 படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்!
2 படங்களுக்கு இந்திய அரசின் வெள்ளிப் பதக்கம்!
5 முறை பிலிம்பேர் விருதுகள்!
இரு மலர்கள் படத்தின் இவருடைய கதைக்காக தங்கப்பதக்கமும், ` அண்ணா’ காலத்து 5,000 ரூபாய்க்கான காசோலையும் கிடைத்தது!
இந்த படத்திற்காக ராஜா சாண்டோ விருதையும் வாங்கினார்!
இவர் இயக்கி சிவாஜி நடித்த `தெய்வமகன்’ படம் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படம் ஆஸ்காருக்கு சிபாரிசானது!
சென்னை புரசைவாக்கத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த எம்.ஏ.பட்டதாரி!
பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் படித்த பள்ளியில் படித்தவர்!
`இரு மலர்கள்’ படம் உருவான விதமே வித்யாசமானது!
முன்பு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் நியூடோன் ஸ்டுடியோவின் முதலாளிகளில் ஒருவர் பாரசீகத்தைச் சேர்ந்த `தீன்ஷா தெக்ரானி’ இவர் ஒரு சிறந்த ஒலிப்பதிவாளர்.
தியாகராக பாகவதர், எம்.எஸ். சுப்புலட்சுமி, பி,யூ சின்னப்பா டி.ஆர் மகாலிங்கம் போன்ற பிரபலங்களின் குரல்களையெல்லாம் ஒலிப்பதிவு செய்தவர்!
இவருடைய கால்ஷீட்டிற்காக ஒரு காலத்தில் இந்த பிரபலங்கள் காத்திருந்த தருணங்கள் உண்டு!
காலச் சக்கரம் சுழன்றது!
இவர் நிலை கொஞ்சம் சரிந்தது!
ஏ.சி. திருலோக்சந்தர் இவருடைய ஸ்டுடியோவில் உதவியாளராக ஒரு காலத்தில் வேலை செய்தவர்!
தீன்ஷா டெக்ரானி இப்போது ஏ.சி.டியை அணுகினார்!
தனக்கு ஒரு படம் இயக்கிக் கொடுத்து தன் நிலையை மாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்!
ஆனால் அவரிடமோ பணமில்லை!
அவருக்கு உதவி செய்ய யாருமில்லை என்பது ஏ.சி.டிக்குத் தெரியும்!
அவரே சொன்னார், `எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பம்பாய்க்காரர் ஒருவர் எனக்கு பண உதவி செய்கிறேன்’ என்று சொல்கிறார்.
அவருக்கு சினிமாவில் விருப்பமில்லை1
ஆனால் எனக்குத் தெரிந்த தொழிலின் மூலம் என்னை முன்னேற்ற நினைக்கிறார்!
உங்களிடமே அவர் நேரில் பேசுவார் ‘ என்றார் தின்ஷா!
அந்தப் பம்பாய் பெரிய மனிதரும் ஏ.சி.டியும் சந்தித்தார்கள்!
ஏ.சி.டி அந்த பெரியவரிடம் தின்ஷாவின் நிலையை விளக்கி, அவர் உதவி செய்வதாக இருந்தால் தானும் அதில் இணைவதாக சொன்னார்!
வெளியே பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெரியவர் கேட்ட பணத்தைக் கொடுத்தார்!
அப்படித்தான் ` இரு மலர்கள்’ என்கிற அருமையான குடும்பக் காதல் கதை உருவானது!
இந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா, அசோகன், நாகையா, ஆகியோர் அந்தக் கதையில் பதிக்கப்பட்ட வைரக் கற்கள்!
பத்மினியும், கே.ஆர். விஜயாவும் வாசமிகு இருமலர்கள்.
சிவாஜி மலர்களை வட்டமிடும் வண்டு!
ஒருவரால் இரு பெண்களையும் சமமாக நேசிக்க முடியுமா ?
முடியும் என்று சொன்னது கதை!
இரு தார மண கதைகள் பலவற்றில் சிவாஜி நடித்திருக்கிறார்!
ஆனால் இரு மலர்கள் படம் வித்யாசமான கதைக் களத்தை கொண்டது!
படத்தில் இன்னொரு மகுடம் எம்.எஸ். வியின் இசை!
இந்தப் படத்தை பார்க்கும்போது சிவாஜியும், பத்மினியும் மனதிற்குள் ஆதர்ஷ தம்பதிகளாக இருந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிற மாதிரி இருக்கும் அவர்களின் திரை நெருக்கம்!
அந்த நெருக்கத்தை அவர்கள் சந்திக்கும் அந்த முதல் பாடல் காட்சியான `மாதவிப் பொன்மயிலாள்’ பாடலிலேயே பார்க்க முடியும்!
கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த வித்யாசமான பாடல் இது!
படத்தில் அத்தனை பாடல்களையுமே வாலி தான் எழுதியிருப்பார்!
`மாதவி பொன் மயிலாள்’ பாட்டில் வாலியின் தமிழ் கொஞ்சி விளையாடும்!
`மாதவி பொன் மயிலாள்
தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து
தூது விட்டாளாம்!
இந்த படம் வந்த காலத்தில் கண்ணில் மையெழுதி வரும் பெண்களெல்லாம் தங்களுக்கு பார்வையால் தூது விட மாட்டார்களா என்று இளைஞர்கள் ஏங்கிய காலம் உண்டு!
காதல் மழை பொழியும்
கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்க
பேரெழிலாய் என்று சரணமும்.
வானில் விழும் வில்போல்
புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய
பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில்
குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின்
நிழலாட – கலை
மானின் இனம் கொடுத்த
விழியாட – அந்த
விழிவழி ஆசைகள்
வழிந்தோட .
இந்தப் பாடல் வெற்றி யடைந்து திரையில் மாணவர்களாக சிவாஜியும் பத்மினியும் மேடையில் தோன்றியதும் பல இளைஞர்கள் இலக்கிய பூர்வமாக காதல் கடிதங்கள் எழதக் கூட ஆரம்பித்தார்கள்!
இந்த படத்தில் எல்லா பாடல்களுமே படு ஹிட்!
`மன்னிக்க வேண்டுகிறேன்’ `வெள்ளி மணி ஒசையிலே’ `மகராஜா ஒரு மகராணி’ ` கடவுள் தந்த இரு மலர்கள்’ ` அன்னமிட்ட கைகளுக்கு’ என்று எல்லாமே காலத்தால் மறக்க முடியாத பாடல்கள்!
சென்னை வெலிங்க்டன் தியேட்டரில் படம் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஒடியது!
கதாசிரியரும், கவிஞரும் இசையமைப்பாளரும் கைகோர்த்து வெற்றி கண்ட படம் தான் இரு மலர்கள்!
இந்தப் படத்தில் ஒரு புதுமையை புகுத்தியிருப்பார் ஏ.சி.டி.
மகராஜா ஒரு மகராணி’ பாடலில் முதல் முதலாக வென் ட்ரிலாகிஸம் அதாவது பொம்மை கையில் வைத்துக்கொண்டு அதை இயக்கும் மனிதர் மக்களுக்கு தெரியாமல் அந்த பொம்மை பேசுவதைப் போல மக்களை நம்ப வைப்பார்!
இந்தப் பாடலில் சிவாஜி கையில் பொம்மை இருக்கும்!
இதைத்தான் பின்னார் கே. பாலசந்தர் ` அவர்கள்’ படத்தில் கமல்ஹாசன் கையில் அதே மாதிரி பொம்மையை கொடுத்து அந்த பொம்மையையும் படத்தில் ஒரு பாத்திரமாக்கியிருப்பார்!
இரு கதாநாயகிகள் பாடும் பாடல் என்றால் வாலி என்றைக்குமே சோடை போனதில்லை!
அந்த வகை பாடலுக்கு இந்த படத்தில் வந்த ` கடவுள் தந்த இரு மலர்கள். ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஒரத்திலே’ என்று இரு கதாநாயகிகளும் நேரடியாக சந்திக்கும் பாடலாக ஜொலிக்க விட்டிருப்பார்!
அடுத்து சிவாஜிக்கு கிடைத்த இன்னொரு `காதலிக்க நேரமில்லை’
( தொடரும் ).
Attachment 4861
நேற்று 06.02.2016 சனிக்கிழமை மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் ஐந்தாவது ஆண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியமும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இன்று வரை முறியடிக்க முடியாத கருப்பு வெள்ளை திரைப்பட வசூல் சாதனையைப் புரிந்ததுமான பட்டிக்காடா பட்டணமா திரையிடப்பட்டது. அரங்கு நிறையும் வகையில் ரசிகர்கள் திரளாகக் கூடியிருந்தனர். தொலைக்காட்சியில் தெய்வமகன் திரையிடப்பட்டும் இந்த அளவிற்கு மக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டது பேருவகையூட்டியது.
நிகழ்ச்சியில் படத்தின் ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் திரு சிம்மையா-ஆனந்த், இயக்குநர் திரு பி.மாதவன் அவர்களின் பேரன், மற்றும் பிசாசு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அன்புமிக்க திரு wideangle ரவிசங்கர் அவர்களும் பங்கு கொண்டனர். மேலும் படம் படமாக்கப்பட்ட சோழந்தான் பண்ணையின் உரிமையாளரும் தமிழ்த்திரையுலக வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற நடிகரும் பாடகருமான திரு டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் பேத்தியும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொடுத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...8a&oe=5738B8C0
திரு கவிதாயலயா கிருஷ்ணன் அவர்கள் திரு சிம்மையா ஆனந்த் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...68&oe=576E4480
திரு க. பரத் அவர்கள் திரு Wideangle ரவிசங்கர் அவர்களை கௌரவிக்கிறார்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...9f&oe=57242DB0
Wideangle திரு ரவிசங்கர் அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை சிலாகித்து பேசுகிறார்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...46&oe=5727398E
திரு சிம்மையா ஆனந்த் அவர்கள் நடிகர் திலகத்துடனான தன் நட்பைப் பெரிதும் மகிழ்வுடன் நினைவு கூர்ந்த காட்சி.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...07&oe=5727241B
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் பொருளாளர் முரளி அவர்கள் அமைப்பின் ஐந்தாண்டு நிகழ்ச்சிகளைப் பற்றியும், பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தின் சிறப்பைப் பற்றியும் பேசும் காட்சி.