http://i64.tinypic.com/wtbnp.jpg
Printable View
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.
‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.
தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.
அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.
தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.
கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
courtesy -கோவி.லெனின்.
http://i68.tinypic.com/f1ihl4.jpg
நன்றி .கனகராஜா ஆண்டியாபிள்ளை முகநூல்
தமிழ் இந்து -31/10/2016
http://i63.tinypic.com/a5bzn4.jpg
துக்ளக் வார இதழ் -09/11/2016
http://i65.tinypic.com/3150ax1.jpg
http://i68.tinypic.com/iz3gie.jpg
இன்று (02/11/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/5o7e9v.jpg
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "என் கடமை " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2zqhpmw.jpg
இன்று பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை , ஹலோ எப் எம்.106.4ல் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகியது
http://i68.tinypic.com/eg7c69.jpg
'சிம்பிள் ஸ்டார் ' விஜய் ஆண்டனி பதில்கள் - குமுதம் வார இதழ்
http://i67.tinypic.com/dq6geu.jpg
மக்கள் திலகத்தின் ''படகோட்டி ''
http://i67.tinypic.com/29g0d48.jpg
3.11.1964 தீபாவளி அன்று வெளிவந்த வண்ணக்காவியம் . இன்று 53 வது ஆண்டு துவக்கம் . மெல்லிசை மன்னர்களின் இனிய இசையில் பாடகர் திலகம் - இசைக்குயில் - இருவரின் குரல்களில் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பில் திரை உலக ரசிகர்களை மயக்கிய படம்
.
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நவ ரசங்களை காட்ட வேண்டிய இடத்தில ,கச்சிதமாக காட்டி மிகவும் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கண்டார் நம் மக்கள் திலகம் . மாறு வேடத்திலும் , சண்டை காட்சிகளிலும் , காதல் காட்சிகளிலும் , ஏக்கமான , துயரமான காட்சிகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் வெளுத்து கட்டியிருந்தார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . படம் முழுவதும் காலணி இல்லாமல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
.மக்கள் திலகம் எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய ஆளுமைகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது .
1. தரை மேல் பிறக்க வைத்தான் - மக்கள் திலகம் அமர்ந்த இடத்திலேயே சோகத்துடன் பாடிய காட்சி என்றென்றும் மறக்க முடியாது . அத்தனை உணர்ச்சி பிழம்பு .
2..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அருமையான தத்துவ பாடல் .
3. நான் ஒரு குழந்தை - மக்கள் திலகத்தின் இளமை , பேரழகு நம் கண்களுக்கு தித்திக்கும் விருந்து
.
4. கல்யாண பொண்ணு ...மாறு வேடத்தில் மக்கள் திலகம் ஜொலித்த காட்சி .
5. படகு சவாரி காட்சியில் மெல்லிசை மன்னர்களின் அட்டகாசமான இசையில் நம் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சி
6. தொட்டால் பூ மலரும் - 52 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் உன்னதமான காதலர்களின் உணர்வை பிரதிபலித்த காதல் கீதம் . எல்லாவற்றிக்கும் மேலாக மக்கள் திலகத்தின் காதல் உணர்வும் , துடிப்பும்
நடிப்பும் பிரமாதம் .
7.பாட்டுக்கு பாட்டெடுத்து ---காதலர்களின் ஏக்கத்தை நம் கண் முன் நிறுத்திய மக்கள் திலகம் -சரோஜாதேவி இருவரையும் மறக்க முடியுமா ?
http://i63.tinypic.com/2myt4z7.png
படகோட்டியின் பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .. 52 ஆண்டுகள் ஆனாலும் இன்றைய மக்கள் திலகத்தின் படகோட்டியின் விநியோக உரிமை ரூ 2 கோடி என்ற தகவல் கிடைத்துள்ளது . இதன் மூலம் நம் மக்கள் திலகத்தின் புகழ் , அவருடைய நடிப்பின் தாக்கம் - உலக திரைப்பட வரலாற்றில் இன்னமும் அவருடைய மார்க்கெட் முதலிடத்திலேயே உள்ளது என்பதை அறிய முடிகிறது .
திரை உலகத்தில் ஒரு வரலாற்றை உருவாக்கினார் - தென்னிந்திய வசூல் சக்கரவர்த்தி - பாரத் எம்ஜிஆர்
அரசியல் உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார் - அதிமுக நிறுவனர் - பாரதரத்னா எம்ஜிஆர்
மறைந்தும் மக்களின் நாயகனாக சகாப்தம் படைத்து கொண்டு வருகிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
நாளை (04/11/2016) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் தினசரி 3 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i65.tinypic.com/bewxj.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
நாளை (04/11/2016) முதல் மதுரை மாநகர் மீனாட்சியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மீண்டும் வெற்றி விஜயம் .-தினசரி 4 காட்சிகள் .
http://i65.tinypic.com/b5p0jk.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
நாளை (04/11/2016) முதல் நெல்லை கணேஷாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " இணைந்த 6 வது வாரமாக தொடர்கிறது .
http://i66.tinypic.com/2ed5j47.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
https://s21.postimg.org/ycghmiao7/IMG_1224.jpg
Courtesy - Mr.jayababu, Chennai
வெற்றிகரமாக இரண்டாவது வாரம்
கோவை - ராயல் - ஆயிரத்தில் ஒருவன்
கோவை - டிலைட் - இதயவீணை
மதுரை - மீனாட்சி தியேட்டரில்
நாளை முதல்
ஆயிரத்தில் ஒருவன்
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்
1. விவசாயி - 01.11-1967
2. படகோட்டி - 03.11.1964
3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961
4. நம்நாடு - 07.11. 1969
5. உரிமைக்குரல் . 07.11.1974
6. பறக்கும் பாவை - 11.11.1966
7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976
8. பரிசு . 15.11-1963
9. மகாதேவி - 22.11.1957
10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974
https://s17.postimg.org/zfledfsv3/IMG_1227.jpg
Courtesy: Mr.jayababu, chennai
https://s21.postimg.org/6mipf7lo7/IMG_1245.jpg
Courtesy - facebook
http://i66.tinypic.com/t5q14j.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
முகநூலில் திரு ஜெய பாபு பதிவிட்ட மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும்'' - வரவேற்பு நோட்டீஸை திரியில் பதிவிட்டமைக்கு நன்றி .
மலரும் இனிய நினைவுகள் - சிரித்து வாழ வேண்டும்
*****************************************
பெங்களுர் நகரில் இந்த படம் சற்று தாமதமாக 31.1.1975 அன்றுதான் வெளிவந்தது . .பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அன்பர்கள் சார்பாக நாங்கள் இந்த வரவேற்பு நோட்டீஸை வேலூரில் அச்சடித்து படம் வெளிவந்த தினத்தன்று ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விநியோகித்தோம் . நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த நோட்டீஸை மீண்டும் காணும் இந்த வாய்ப்பை தந்த ஜெயபாபுவிற்கும் தங்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நவம்பர் -1974ல் வெளிவந்து 50 நாட்கள் கடந்த பின்னர் .சிரித்து வாழ வேண்டும் அதே அரங்குகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .
FLASH BACK
1974
BANGALORE - BALAJI THEATER
URIMAIKURAL
http://i67.tinypic.com/2vdsfn4.jpg
மாலை மலர் -04/11/2016மற்றும் திருநெல்வேலி கணேசா (தினசரி 4 காட்சிகள் )
http://i67.tinypic.com/2w7o4et.jpg
புதிய தலைமுறை வார இதழ் -10/11/2016
http://i67.tinypic.com/2mdnt78.jpg
http://i66.tinypic.com/r04gih.jpg
http://i67.tinypic.com/2i0eqg4.jpg
http://i68.tinypic.com/14o59xd.jpg
04/11/2016 முதல் மதுரை மீனாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . அதன் சுவரொட்டிகள் திரியில்
பதிவிட அனுப்பி உதவிய நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி .
http://i65.tinypic.com/10dtwdt.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆகும் நிலையில் , இன்னும் அவருடைய உருவம், பிம்பம் , சுவரொட்டி, பேனர் ,இமேஜ் , சினிமா
கண்டு எதிர் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் பயப்படும் சூழ்நிலை தொடர்கிறது .
அதன் எதிரொலியாக , மதுரையில் வருகின்ற சட்டமன்ற இடை தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை கருத்தில் கொண்டு , ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட சுவரொட்டிகள், மற்றும் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சுவரொட்டிகள் கிழிக்கப்படுகின்றன./நீக்கப்படுகின்றன . மதுரை மீனாட்சி அரங்கு வளாகம் தவிர மற்ற இடங்களில் சுவரொட்டிகள் தென்படவில்லை என்று மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
http://i66.tinypic.com/10dfuqu.jpg
கடந்த வாரம், தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா " , பல முறை திரை அரங்குகளில்
திரையிடப்பட்டும், பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டும் , மீண்டும்
வசூலை வாரி குவித்துள்ளது . ஒரு வார வசூல் ரூ.1,02,000/-
தகவல் உதவி : நண்பர் திரு. எஸ். குமார், மதுரை.
http://i67.tinypic.com/2m76z6c.jpg
04/11/2016 முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) " இதயக்கனி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
அதன் சுவரொட்டிகளை காண்க .
http://i67.tinypic.com/2u6ntj8.jpg
16/09/20/16 முதல் சென்னை மகாலட்சுமியில் தினசரி 2 காட்சிகள் நடைபெற்று
ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .