http://oi67.tinypic.com/xm92yx.jpg
Printable View
இனிய நண்பர் திரு சிவா அவர்களுக்கு
வணக்கம்.
நேற்று நமது திரிக்கு விஜயம் செய்யலாம் என்று நினைத்தபோது, தாங்கள் தொடர்ந்து பதிவிட்டுவரும் பதிவுகளை பார்க்க நேர்ந்தது.
எதற்கு இப்படி சார் ? ஓரிரு வருடம் முன்பு நானும் திரியில் பங்களித்தவன்தான். இருப்பினும், இனியும் நாம் இந்த வசூலை விட அந்த வசூல் சிறியது.....அந்த வசூலை விட இந்த வசூல் பெரியது ....என்று 2018 முடிய சில மாதங்கள் உள்ள நிலையிலும் பதிவுகள் பதிவு செய்யவேண்டுமா ?
ஒரு மாறுதலுக்கு இரு திலகங்களும் அவர்கள் படங்கள் வெளிவந்த நேரம் மற்ற படங்கள் என்ன வந்தன மற்ற ரசிகர்கள் இவர்கள் இருவரையும் எப்படி எதிர்கொண்டனர் போன்ற சுவையான செய்தி பதிவிடலாம் என்பது எனது எண்ணம்.
திரை உலகில் நடிகர் திலகம் சாதனை எவராலும் அதன் நிழலை கூட நெருங்க கனவு கூட காண முடியாது என்பது உலகறிந்த விஷயம். இதனை நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது எனது கருத்து.
அவர் அவர்கள் சாதனை அவர் அவர்களுக்கு பெரியது. நாம் சினிமா சாதனையை பேசினால் அரசியலில் நாம் கண்ட அனுபவத்தை பற்றி பேச்சு வருவது இயற்கையே.
ஆனால் புரியாதவர்கள் இங்கு புரிந்துகொள்ளவேண்டியது, நடிகர் திலகம் தனியாக கட்சி ஆரம்பித்தாலும் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு தனியாக நிற்கவில்லை. திரு MGR அவர்கள் துணைவியாருடன் அவர்கள் விரும்பியதாக திரு MGR விருப்பப்படிதான் கூட்டுசேர்ந்தாரே தவிர என்னை உங்கள் கட்சியுடன் கூட்டு சேர்கிறேன் என்று இவர் ஒன்றும் அவர்களை கெஞ்சவில்லை.
BRUKLIN மருத்துவமனையில் அனுமதித்தபோது...தேர்தல் பிரச்சாரம் ADMK வுக்கு செய்தது நடிகர் திலகம் சிவாஜி அவர்களே தவிர MGR ஊக்கு பிறகு கட்சியை தனதாக்கிக்கொண்ட மறைந்த மாஜி நடிகையும் முதல்வருமான ஜெயலலிதா அல்ல என்பது பல விடலைகளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை! சில விடலைகள் அது தெரிந்தாலும் தெரியாததுபோல் சிவாஜியை விட பிரம்மாண்டமாக நடிப்பார்கள். மேலும் அமரர் ராஜிவ் காந்தியிடம் "THIS OLD MAN IS UNABLE TO TAKE ANY DECISION AND IS COMPLETELY INACTIVE " என்று கடிதம் அனுப்பி தன்னுடைய உச்சகட்ட விசுவாசத்தை காட்டியது நமது நடிகர் திலகம் அல்ல !
அது யார் என்பது உலகறிந்த விஷயம் !
நடிகர் திலகம் அரசியலில் 1987il ஒருவேளை திருமதி ஜானகி அம்மையாருடன் சேர்ந்து வெற்றிபெற்றிருந்தால் 1983 இல் ADMK ஆட்சியில் தொடங்கப்பட்ட TASMAC ஸ்தாபனத்தை இவர் தொடர்ந்து நடத்தி, நாள் ஒன்றுக்கு 100 , 200 கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தினசரி கூலி தொழிலாளிகள் குடும்பத்தின் வயித்தெரிச்சல் நடிகர் திலகம் பெற்றிருக்க நேர்ந்திருக்கும் ! அதனை இன்று அதிக அளவில் தனது ஆட்சியில் விரிவுபடுத்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்த காரியம் ஒருவேளை இவர் செய்திருக்கக்கூடும் நிர்பந்தத்தின் காரணமாக. ஆகையால் கேட்டதில் ஒரு நல்லது அவர் அரசியலில் தோல்வியுற்றது என்றே நான் கருதுகிறேன்.
1980 - 1987 யில்தான் CORRUPTION WAS INSTITUTIONALIZED என்று மிக பிரபலமான பாரம்பர்யம் மிக்க ஒரு தனியார் ஆங்கில பத்திரிகை 1987 இரெண்டுபக்கங்களுக்கு குறைவில்லாமல் எழுதியிருந்தது. அரசியல் என்று வந்துவிட்டால் ஊழல் என்பது நமக்கு செய்ய பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தவனுக்காக கண்டும் காணாமலும் சில சமயம் சேர்ந்தும் சேராமலும் செய்ய வேண்டியிருக்கும்.
ஆகவே அரசியலில் சிவாஜி தோற்றதற்கு நமக்கு எந்த கவலையும் இல்லை. தமிழகத்தின் ஒரே ஊழல் செய்யா முதல்வர் கர்மவீரர் ...அவரையே தோற்கடித்ததன் பயன் இன்று தமிழகம் சீரழிந்து கேவலமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதில் இருந்ததே தெரிந்துகொள்ளுங்கள் !
LET US NOT FIGHT OR PUT ANYMORE COMPARISON SIR
வணக்கம் ரவிகிரண்சூரியா
தங்கள் வரவுக்கு நன்றி
முன்னர் பார்க்க தவறியவர்களுக்காக பழைய பத்திரிகை
நோட்டீஸ் என்பனவற்றை பதிவிடுகின்றேனே தவிர
வேறில்லை நன்றி
Quote:
இலங்கை சென்றிருந்த வேளை சிவாஜி ரசிக நண்பர் ஒருவரை
சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அவர்மூலம் வேறு ஓர்
சிவாஜி ரசிகரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது
அவர்மூலம் பல பொக்கிஷங்கள் கிடைத்தன
அந்த பொக்கிஷ பதிவுகள் இங்கே
முன்னர் பார்க்க தவறியவர்களுக்காக
பார்வைக்கு!
எங்கள் கலை தெய்வத்தின் 17 ம் ஆண்டு நினைவு அஞ்சலி கோயம்புத்தூர் வடவள்ளி பஸ் நிலையம் அருகில்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b8&oe=5C09C2F8
courtesy f b
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ea&oe=5BD74C9B
courtesy vee yaar f b
நாளை ஜூலை 27ம் தேதி மறக்க முடியாத நாள். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, நமது கலாச்சார வரலாற்றிலும் முக்கியமான நாள் ... சிக்கில் சண்முக சுந்தரம் தில்லானா மோகனாம்பாள் இணை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன நாள். நாட்டுப் பற்றா அங்கே நடிகர் திலகம் தான் பாடங்களைப் படைத்துள்ளார், தமிழ்ப் பண்பாடா அங்கே நடிகர் திலகம் தான் பாடங்களைப் படைத்துள்ளார் தமிழ் இலக்கிய வரலாறா அங்கே நடிகர் திலகம் தான் பாடங்களைப் படைத்துள்ளார்் தமிழரின் கலை... இலக்கிய வரலாறா அங்கேயும் அவர் தான். இவ்வாறு அங்கிங்கெனாதபடி தமிழின் வாழ்வில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பாடத்தை சொல்லியிருப்பவை நடிகர் திலகத்தின் படங்களே. அப்படிப்பட்ட ஒரு பாடமே தில்லானா மோகனாம்பாள். சிக்கில் ்சண்முக சுந்தரம் என்ற வரலாற்று நாயகனை நடிகர் திலகம் பதிவிட்டு சென்றிருக்கிறார் என்றால் அந்த நாயகனின் மேன்மையை தொடர்ந்து பரப்பி வருவது நமது கடமையல்லவா. நாளை ... தில்லானா நாள்.. முழு நாளும் இந்த காவியத்தைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும் என்பது நம் விருப்பம். அது மட்டுமின்றி கூடிய வரையில் அத்தனை நண்பர்களும் பங்கேற்பதே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக விளங்கும்.பொன்விழா காணும் சிக்கல் சண்முகசுந்தரம் - தில்லானா மோகனாம்பாள் இணைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்
See morehttps://external.fyyz1-1.fna.fbcdn.n...Bo9fncca7R1LMy
courtesy vee yaar fb