-
ஒரு சமயம் தலைவர் பொம்மை என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.
ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்..
நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.
அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.
ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.
தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.
யார் அவர் என்றால்
அவர் பெயர் பாரதி...தலைவருடன் அவர் நடித்த படம் நாடோடி.
நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.
வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks...
-
ஸ்ரீ mgr வாழ்க
சித்திரை 1 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
உங்கள் முன்பாக மேடையில் பேசிக் கொண்டிருப்பவர்
ராஜ விசுவாசி
கோவை மாவட்டம்
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்
நெகமம் கந்தசாமி அவர்கள்
எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து
இவர் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்
கோவை மாவட்டத்தில் திமுக அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்
கோவை மாவட்டத்தில்திமுக அமைச்சர் கண்ணப்பன் அவர்களை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய மாட்டார்கள்
ஆனால் அந்தஅமைச்சர் கண்ணப்பனின் கண்ணில் விரலை விட்டு இவர்ஆட்டிய காரணத்தினால்
இவருக்கு ஒரு பட்டப் பெயர் வந்துவிட்டது
இவரை நெகமம் நெப்போலியன் என்று அழைப்பார்கள்
எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு
துரோகம் செய்யாதவர்
எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மையாரை முதல்வராக கொண்டு வந்த எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
உறவைக்காத்த கிளி என்ற படத்தின் தயாரிப்பாளர் பொள்ளாச்சி ரத்தினம் அவர்களுக்கும்
டைரக்டர் டி ராஜேந்திரன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது
நெகமம் கந்தசாமி அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்
அப்பொழுது நெகமம் கந்தசாமி அவர்கள்
டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து
தயாரிப்பாளர் சொல்வதை போல் நீங்கள் படத்தை எடுத்து முடித்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்
பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை
பத்திரிகைகளில் வந்த செய்தியை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்
நெகமம்ம்கந்தசாமி அவர்கள்
டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து
கையை வெட்டுவேன் காலைவெட்டுவேன் என்று கூறினாராம்
இப்படித்தான் திமுக மேடையில் பேசினார்கள்
இந்த நிகழ்ச்சி நடந்து நான்கு நாட்களில்
டி ராஜேந்திரன் அவர்கள்
கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்
நெகமம் கந்தசாமி அவர்களைப் போன்றவர்கள் கட்சி வளர்த்தி வைத்த காரணத்தினால்தான்
ஜெயலலிதா எடப்பாடி போன்றவர்கள் முதலமைச்சராக வர முடிந்தது
நெகமம் கந்தசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.........நன்றி... முகநூல்.........
-
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது
வாழ்க எம்ஜிஆர்புகழ்........ Thanks.........
-
#தெரியாதது #கடலளவு
சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.
"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...
பின்னர்,
அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.
அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,
#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...
வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
படித்ததைப் பகிர்கிறேன்...
வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'........ Thanks...
-
*எம்ஜிஆரும்*
*பத்திரிகையாளருக்கு நடந்த ‘கவனிப்பும்’!*
---------------------------------------
https://m.facebook.com/story.php?sto...00000064280192
---------------
அவர் முற்போக்கு *கட்சியின் #பத்திரிகையாளர்.*
எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தவர்.
அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர்.
எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
#செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.
அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார். (நிறைய எழுதுவதை தவிர்க்கின்றேன்).
ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.
அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான் என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.
அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.
அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள் என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார் எனக்கூறி வருந்தினார்கள்.
நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.
அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஅர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.
ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டு #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.
#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆ. பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.
தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.
காலம் ஓடியது.
ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.
‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.
எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.
மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?
ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.
அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்!
அந்த பத்திரிகையாளரும், எம்ஜிஆர் செய்த உதவிக்காக வேண்டி, தன் #எழுத்தை விற்றுவிடவில்லை. தன் நோக்கத்தில், மக்கள் நலனுக்காக வேண்டி தன் #விமர்சனத்தை சமரசம் இன்றியே எதிர்த்து எழுதி வந்தார்.
இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பு- நான் #குமுதத்தில் எழுதியது. சில காரணங்களுக்காக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி சம்பவம் உண்மை........ Thanks Enkalai van...
-
#தேவை #என்பதே #இல்லை
வாத்தியாரோட பக்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களாகவும், மீதமுள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும் தான் இருக்கிறார்கள்...
ஏன்? அவர்களால் வாழ்வில் முன்னேற முடியாதா? எம்ஜிஆர் பக்தர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...?????
எம்ஜிஆர் பக்தர்கள் போதுமென்ற மனம் படைத்தவர்கள். அவர்களுக்கு சதா வாத்தியாரை நினைப்பதைத் தவிர வேறு எண்ணமில்லை.
வாத்தியாரின் முகத்தை திரையில் பார்த்தால் போதும், சோறும் தண்ணீரும் அவர்களுக்குத் தேவைப்படாது... குறைந்த சம்பளத்தில் தான் சேமிக்கும் சிறிது பணத்தைக்கூட வாத்தியாருக்காகத் தான் செலவு செய்வார்கள்.
வாத்தியாரின் பக்தர்கள் பணத்தால் வசதி படைத்தவர்களல்ல...
மனத்தால் வசதி படைத்தவர்கள்...
ஏங்க! நம்ம பொண்ணு படிப்புக்கு, திருமணத்திற்கு இன்னும் சேர்த்து வைக்காமல் இருக்கீங்களே? உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ....!
#எல்லாத்தையும் #எங்க #வாத்தியார் #பாத்துப்பாரு...
இதுதான் எம்ஜிஆர் பக்தனின் பதில்...
எவ்வளவு அசாத்திய நம்பிக்கை பாருங்க...
வாத்தியாரின் பக்தர்களுக்குத் தேவை என்பதே இருப்பதில்லை............. Thanks.........
-
மக்கள் திலகத்தின் மாண்பு
'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.
அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
ஆரின் கையை பிடித்து விட்டான்.
எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.
அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)......... Thanks.........
-
எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100
முன் குறிப்பு- இந்த கட்டுரை திருமதி ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் விகடன்.காம் வலைதள பக்கத்தில் எழுதியது. அவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
எம்.ஜி.ஆர் பாடல்களில் பிரசார உத்தி :
MGR
எம்.ஜி.ஆர் சிறு வயது முதல் நாடக மேடையில் நடித்துப் பழகியவர் என்பதால் பாடல்களின் செல்வாக்கு குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார்.
பாடல்கள் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்ட விதத்தை அறிந்திருந்ததால் தேச விடுதலை போல சமூக விடுதலைக்கும் அவை நல்ல பிரசார உத்தியாகத் திகழும் என்று அவர் நம்பினார். இத்துடன் தன் சுய விளம்பரத்துக்கும் திரை இசைப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்த முன்னறிவுடன் அவர் பாடல் ஆசிரியர்களிடம் பாடல்களைக் கேட்டு எழுதி வாங்கினார். அவருக்கு உடன்பாடில்லாத எந்த ஒரு விஷயமும் அவர் பாடலில் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்.
எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் தன் விருப்பத்துக்கேற்றபடி பாடல் அமையாதவரை அவர் விடுவதேயில்லை. படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் தன் பாதையில் குறுக்கிடாதவரை அவர் எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். இருப்பினும் காதல் பாடல்களில் அவர்களின் விருப்பத்துக்கு இடம் அளித்த எம்.ஜி.ஆர், தத்துவப் பாடல் என்று ரசிகர்களாலும் வேறு பலராலும் அழைக்கப்படும் தனிப் பாடல்களில் அவர் பாடல் ஆசிரியரோடு எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை
எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1936-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது.
இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது.
எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.
MGR-Karunanedhi
மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :
எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார்.
இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன.
அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின.
ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :
1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை.
கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார்.
இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார்.
டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.
அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :
திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன
எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார்.
ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார்.
தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார்.
MGR-Karunanedhi
எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை.
அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம் எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது.
இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.
‘நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :
1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது.
'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது.
எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.
‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார்.
இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல் 'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது.
இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.
எம்.ஜி.ஆர்
தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :
1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன.
1963-ல் வெளிவந்த 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள்
'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார்.
அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது.
ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது.
1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார்.
அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் - தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்' பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
1967-ல் வெளிவந்த 'அரசகட்டளை' படம் காங்கிரஸ் காலத்தில் தயாரிக்கப்பட்டதால், 'ஆடி வா...' பாடலில் 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நம் வரவேற்பதோ' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதில் முயல் கூட்டம் என்பது காங்கிரஸையும் சிங்கம் என்பது திமுகவையும் குறித்தது.
திமுக புகழ் பாடும் பாடல்கள் :
1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.
இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று.
ஜெயலலிதாவை காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் .
வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை.
மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.
1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார்.
அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.
திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் :
சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார் நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன.
அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.
கலைஞர் முதல்வர் ஆக்கப்பட்டார் :
1969-ன் தொடக்கத்திலேயே அண்ணா காலமாகிவிட்டார். கலைஞர் எம்.ஜி.ஆரை அடிக்கடி சந்திக்கிறார். கட்சியின் அடுத்த தலைவர் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். 'தம்பீ வா... தலைமை ஏற்க வா...' என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் தன் ஆதரவாளர்களோடு 'தான் தன் அடுத்த முதல்வர்' என்ற நம்பிக்கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.
இச்சூழலில் எம்.ஜி.ஆர் தன் சத்யா ஸ்டூடியோவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி காங்கிரஸின் செல்வாக்கு இன்னும் முற்றிலுமாக ஒடுக்கப்படவில்லை, இந்நிலையில் படித்தவரைவிட காங்கிரஸை சமாளிக்கக் கூடியவரே கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்பது நல்லது என்று சொல்லி அனைவரையும் கலைஞருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் சம்மதிக்க வைத்து கலைஞருக்கு பிடித்தமான வால்நட் கேக்கை அவர் டிரைவரை விட்டு வாங்கிவரச் சொல்லி அவர் வாயில் ஊட்டினார்.
ஏமாற்றிய ஆட்சி :
1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர்.
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார்.
அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.
ஏமாற்றாதே ஏமாறாதே :
'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது.
படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை.
இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :
'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.
இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர்.
எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.
பாரத் விருது பெற்ற எம்.ஜி.ஆர் :
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். உடல்நலத்தைப் பேணுவதில் சிறிதும் அக்கறை இல்லாத ஜெயலலிதா ரொம்பவும் குண்டாகிவிட்டார். 'பட்டிக்காட்டுப் பொன்னையா', 'அன்னமிட்ட கை' படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பெரியம்மா போலத் தோற்றமளித்தார்.
மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இவரைப் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பல் இந்நேரம் பார்த்து மஞ்சுளாவை அறிமுகம் செய்தது. சத்யா மூவிஸ் முலமாக 'ரிக்க்ஷாக்காரன்' படம் ஆர்.எம்.வீ அவர்களால் எடுக்கப்பட்டது. இதில் பணக்காரர்களின் அக்கிரமங்களுக்குத் துணை போகும் நீதித்துறையை எம்.ஜி.ஆர் சாடியிருந்தார். இதில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு' என்ற பாடலில் 'நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா - அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று கேட்டிருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகரான 'பாரத்' விருது கிடைத்தது. பின்பு அது கலைஞர் சிபாரிசால் கிடைத்தது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டியதும், எம்.ஜி.ஆர் அதைத் திருப்பிக் கொடுத்தார். இத்துடன் எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பு முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டே (1971) கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போன்ற கதைகள் கேட்டு, தோற்றம், பாட்டு, டான்ஸ் எம்.ஜி.ஆர் போலவே உருமாற்றி திரைக்குக் கொண்டுவந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை.
'சினிமாவுக்கு அதிகம் பேர் போகிறார்களே அவர்களை மடை மாற்றுவோம்' என்று கருதி அரசுக்கு வருமான தரக்கூடிய மதுக்கடைகளைத் திறந்தார்.
எம்.ஜி.ஆரையும் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகான தனது படங்களில் எம்.ஜி.ஆர் நேரடியாக திமுக எதிர்ப்பை வெளியிட்டார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்........ Courtesy by: mr.Vaithianathan.........
-
That day report from 'The Times of India' news paper:
As the optics of crowds became synonymous with the popularity of the leader, it became essential to keep up the show. Now money is key to bringing in people. The audience is, therefore 'assembled' by luring men, women and college students with incentives like money, food and liquor.
This was not the case in 1970s and 1980s, when announcements used to be made on 'cone' speakers about '#Puratchi #Thalaivar' #MGR being on his way and crowds would instantly gather and wait patiently for a glimpse of the matinee idol. MGR would finally arrive well past midnight. But it didn't matter to the crowd which would go into raptures on seeing MGR's convoy........ Thanks...
-
Why Edappadi Palaniswami can’t claim MGR’s legacy
As late as in the early 2000s, I’ve met men and women in the hinterlands of Tamil Nadu who said MGR was alive. Maybe some of them were lying, but all of them wanted to believe what they said.
Sunday’s grand finale of the MGR centenary celebrations in Chennai marked the end of a year-long attempt by chief minister Edappadi K Palaniswami to claim the legacy of a man whose charisma no other politician in the state could match even more than 30 years after his death on the Christmas eve of 1987.
Has it helped EPS gain popularity? Yes.
Has it helped him claim MGR’s legacy?
No.
Political legacy is mostly perception, but no amount of public relations or publicity can ensure legacy. It comes with association or action. In the case of J Jayalalithaa, it happened mostly because of the former (by being his heroine) and partly because of the latter (through welfare measures). EPS has neither-and he knows it.
MGR was a phenomenon of his own making. A heart in the right place helped, but he also systematically worked to be the king of hearts. It wasn’t just M Karunanidhi’s scripts that helped MGR become the hero that he was; he chose and played his roles to be the epitome of goodness. He never smoked or drank on screen, he was gentle with his women, he was fair.
And when the time came, he so effortlessly moved from the silver screen to the rough and tumble of Tamil politics, and became Ponmanachemmal (the one with the golden heart). Such was his image of Puratchi Thalaivar (revolutionary leader), the school noon meal scheme introduced by Kamaraj (some argue such a scheme was introduced in Madras during the British rule) was attributed to MGR.
It wasn’t easy for Jayalalithaa to inherit the political legacy of MGR. She fought a bitter battle with MGR’s widow Janaki, first to stay near MGR’s hearse during his funeral procession and later to take over the AIADMK mantle. Once she achieved it she strenuously worked on it, rolling out welfare measures. Always in the background were images of her with her mentor, prominent among them the one showing MGR handing over a silver sceptre to her in 1982 when she became the propaganda secretary.
Taking MGR’s welfare measures to a new level, Jayalalithaa gave away free bicycles and gold rings, goats and computers. At one point, Jayalalithaa, who so fiercely wanted to leave her original mark in politics, appeared to be trying to grow out of the image of being MGR’s successor. She catalysed a new industrial climate that attracted investments in manufacturing. But when she finally left her footprint, it was still in her mentor’s shadow.
The Jayalalithaa model that combined freebies with overall development was a natural progression from the MGR times. If he wants to take forward that progress, EPS should focus more on ensuring ease of doing business while remaining true to long-term commitments on health and education.
Jayalalithaa had the knack of keeping corruption and business on parallel tracks, with neither derailing the other. Today corruption stands in the way of business. If EPS shows the courage to minimise, if not remove, corruption, he may be remembered as someone who tried, not just survived.
Forget about winning hearts. MGR' legacy is alive though he is physically dead.
forwarded message
DISCLAIMER : Views expressed above are the author's own.
AUTHOR
Arun Ram Resident Editor
Times of India,Tamilnadu....... Thanks...
-
"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்
தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா
தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:
அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...
ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.
வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.
திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.
இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.
எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.
விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.
சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.
சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.
எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.
வாட்ஸ் அப்பில் வந்த பதிவு........ Thanks.........
-
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்- I
# சத்துணவு திட்டம்(01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.
# பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
# கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
# பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
# புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
# குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
# காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
# பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
# பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
# கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
# சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
# அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
# அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
# பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
# பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
# நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
# முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
# தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
# மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
# பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
# ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
# திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
# அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
# அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
# தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
# தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
# தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
# தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
# தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
# நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
# பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
# வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
# கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
# விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
# நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
# மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
# கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
# காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
# உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்......... Thanks.........
-
புரட்சித் தலைவரைப் பற்றி பேரறிஞர் அண்ணா போற்றுவது...
M.G.R என்பது தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துகள்...
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம்...
சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்...
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு.அவருக்கே அமைந்த வசீகரம்...
இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம்...
ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்?
இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர்...
அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்...
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந்தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது....
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார்...
கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்...
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று...
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார்...
ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா...!!!
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது...
இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா...!!!......... Thanks.........
-
'நாடோடி' என்ற படத்தில் ஒரு காட்சியில் பணியாளர்கள் தங்கள் எஜமானர்
எம்.ஜி.ஆரைக் காண வருவர். சமதர்மம் பேசும் அவரிடம், "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்" என்பர். அதற்கு
எம்.ஜி.ஆர்., "நீங்களெல்லாம் வாழ்த்தப்பட்டவர்கள்" என்பார். அப்படிப்பட்டவர்களின் தலைவர் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கர்.
அப்படி சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட,
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவிக்க வந்த ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே. அவரைப்பின்பற்றி அடித்தட்டு
மக்களுக்காக பாடுபடுகின்றவர் எவருமில்லை.
நேற்று அம்பேத்கரின் பிறந்த நாள்.
Image by Mr Ponvannan
Ithayakkani S Vijayan........ Thanks...
-
தலைவரின் காட்சி அமைப்புகள்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன...
அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான்...
காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்...
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.படம் வெளியானது 1973-ஆம் ஆண்டு...
தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம்...
‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும்...
இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும்...
இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து தலைவர் பார்த்துக் கொண்டிருப்பார்...
காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்...
‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும்...
பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று...
இதில் விசேஷம் என்னவென்றால், காட்சியைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்...
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்............ Thanks.........
-
அது 1974.இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கி மிக*சிரமத்தில் உழன்ற* வருடம்.
திரையுலகில் அப்போது அறுத்த கைக்கு யாரும் சுண்ணாம்பு கூட* தரமாட்டார்கள். கையறு நிலையிலிருந்த அவரை நோக்கி ஒரு சிவந்த கை உதவிசெய்ய நீட்டப்பட்டது.அஃது நமது மனிதபுனிதர் எம்ஜிஆர் அவர்களின் வள்ளல் கை!
கையை இறுகப் பிடித்துக்கொண்ட* ஸ்ரீதர் 'உரிமைகுரல்' படத்தின் முதல் காட்சியை இப்படி ஆரம்பித்திருப்பார்,
கீழத்தெரு பெண்ணை வில்லன் நம்பியார் ஆள்வைத்து கடத்திவர சொல்லியிருப்பார்.அவரின் அடியாட்களிடமிருந்து அப்பெண்ணை மீட்டு வீட்டில் கொண்டு விடுவதற்காக
'எந்த ஊர்மா நீ? வாம்மா தங்கச்சி வண்டில ஏறு' என்பார் தலைவர்.
'சாமி நாங்க* கீழ்ஜாதி,நீங்க மேல்ஜாதி உங்க வண்டில எப்படி நான்' என்று தயங்குவார்.
அப்ப நம் தலைவர் சொல்லுவார் 'எனக்கு தெரிஞ்ச ஒரே ஜாதி மனித ஜாதி மட்டும் தான்மா நீ வண்டில ஏறுமா!'
ஏறினார் இயக்குநரும் படத்தின் வெள்ளிவிழா மேடையில்!
பசுமையான,கண்களுக்கு இதமான,பாசனவசதி பெறும் நெல்வயல்கள் அமையப்பெற்ற கிராமம்.
அதில் ஒற்றை குதிரை வண்டியில் சவாரி செய்பவர்.சிவப்புச் சட்டை,தங்கச்செயின் அணிந்திருக்கும் கதாநாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
பிறந்தநாள் கொண்டாடினால் புது பட்டுஜரிகை வேட்டி, சட்டை அணிந்துகொண்டு அண்ணன், அண்ணியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் அளவு அண்ணன்-தம்பி பாசம்.
அவரின் உரிமைப்பெண்ணாக லதா!
முதலில் குறும்புகளாக நகரும் காட்சிகள் அவர்களின் திருமணத்திற்கு பின் பாகப்பிரிவினை,வீட்டை இரண்டாக பிரிப்பது என்று தடம் மாறும்.
பெண் கதாபாத்திரத்திற்கு சமமான ஸ்கீரின் ஸ்பேஸ் தந்திருப்பார் எம்ஜிஆர் அவர்கள்.'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற பாடலும் பெண்களே நிலத்தை ஏர்மாடு கொண்டு உழவு செய்யவருவதுமே உதாரணங்கள்!
எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் இன்னிசையில் 'நேத்து பூத்தாலே ரோஜா மொட்டு' 'மாட்டிக்கிட்டாரடி மயில காளை' 'பொண்ணா பொறந்தா ஆம்பிளைகிட்ட*' ஆகியவை இன்றைய பென் டிரைவ் யுகத்திலும் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் வாழ்த்து கீதமாக ஒலித்துகொண்டிருக்கிறது!
படத்தில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சிறுவிரிசல் முடிந்து, வாங்கிய கடனை அடைத்து, உரிமையான நிலத்தை ஏலத்திலிருந்து மீட்கிறார் தலைவர்.
நிஜத்தில் இறைவன் அருளால்,மக்களின் அன்பால்,தமிழகத்தின் உரிமைக்காக மூன்றுமுறை முதல்வராக குரல் கொடுத்தவர் தான் நம் தலைவர்.
இன்றும் அவர் தொடங்கிய இயக்கம் தான் ஆசியுடன் நடக்கிறது என்றால் அப்படிப்பட்டவரின் ஆன்மா இன்றும் நம்மை பிரியவில்லை என்றே அர்த்தம்.
தலைவர் எம்ஜிஆரின் ஆசிர்வாதமிருந்தால் இன்று ஒரு ஒன்றியப் பகுதிக்கு மட்டும் உரிமைக்குரல் தருபவர்கூட* நாளை ஒரு தொகுதி முழுவதும் அதன் உரிமைக்காக* குரல் தர முடியும்!
அப்பேற்பட்ட தலைவர் எம்ஜிஆரின் 'உரிமைகுரல்' என்றைக்கும் ஓங்கும்!...ஒலிக்கும்!...... Thanks...
-
மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள் மறு வெளியீட்டிலும் மகத்தான சாதனை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் குறிப்பாக ஒரு சில படங்கள் எப்போது திரையிட்டாலும் வாரக்கணக்கில் ஓடும். அப்படிபட்ட படங்களில் ஒன்றுதான் "படகோட்டி". சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த ஊர்களில் திரையிட்டாலும் மீண்டும் மீண்டும் ஒரு சில வாரங்கள் ஓடும் ஆற்றல் இந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தை ரீ மாஸ்டர் பண்ணினால் நிச்சயம் இன்னொரு 100 நாள் படமாக அமையும். சென்னையில் மறுவெளியீட்டில் படகோட்டி செய்த சாதனைகளை பாருங்கள்.......... Thanks.........
-
அன்னை ஜானகி எம்ஜியார் தலைவர் கால நினைவுகள் உங்கள் பார்வைக்கு.
சர்வாதிகாரி படத்தில் இருவரும் நடித்து கொண்டு இருந்த நேரம் நானும் அவரும் குதிரை வண்டியில் தான் பயணம்..
படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து செல்ல கார் வரும். பின் படம் சார்ந்த அனைவரும் பயணம் செய்ய குதிரை வண்டியே.
நாங்கள் ஊர் கடைசியில் இருந்த பிரபாத் திரையரங்கு போக கூட அதிலே பயணம்.
வழக்கம் போல கோவை விடுதியில் இருந்து நாங்கள் சாப்பிடும் மதீனா உணவகத்துக்கு வண்டியில் வந்து சேர என்னை யாருக்கும் அறிமுகம் செய்ய கூடாது என்று அவர் சொல்ல.
வெள்ளை கலர் முழு ஜிப்பா இடுப்பில் நான்கு முழ வேட்டியுடன் அவர்.
மதீனா உணவக முதலாளி எங்களை பார்த்தவுடன் கல்லா பெட்டியில் இருந்து எழுந்து வரவேற்பார்.
என்ன வேண்டும் என்று முதலாளி கேட்க அவர் இரண்டு புல்ஸ் ஐ என்று சொல்ல. நான் பதறி அதுஎல்லாம் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல.
வரும் பார் என்றவுடன் வந்தது இரண்டு முட்டைகள் அரை வேக்காட்டுடன் மஞ்சள் கரு பாதி வெந்து வேகாமல் இருக்க வெள்ளை கரு தோசை போல.
அந்த ஹோட்டல் இருந்த இடத்தில் இப்போது பெரிய ஜவுளிகடை வந்து விட்டது
சேலத்தில் ஓரு நாள் இரவு காட்சிக்கு நான் கதாநாயகி ஆக நடித்த படம் பார்க்க இருவரும் போனோம்...அரங்கம் நிறைந்து விட அம்பிகா திரை அரங்க முதலாளி அவர் வந்து
கேபின் அறையில் இரண்டு நாற்காலிகள் போட்டு அந்த படத்தை நாங்கள் இருவரும் பார்த்தோம்.
படம் ஒளி செல்லும் ஓட்டை வழியாக ஒரு வழியாக எட்டி எட்டி படத்தை பார்த்து முடித்தோம்.
மருதநாட்டு இளவரசி படத்தில் அன்னை ஜானகி அம்மாவுக்கு சம்பளம் 5000 ரூபாய், நம் தலைவருக்கு சம்பளம் 4001 ரூபாய்.
நன்றி.... ......... Thanks fb.,
-
இதய தெய்வம் புரட்சித்தலைவர் பக்தர்களாக இணைந்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய வணக்கத்துடன், நாளை நமதே இந்த தளத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி புகழும் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்துடன் இத்தளத்தில் என்னை யார் என்று கேட்டீர்கள் நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர் தேவராஜ் ராதிகா தற்போது நான் இந்தியாவில் திருச்சியில் இருக்கின்றேன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொண்டேன் என்றாள் அவர் இறந்த பிறகு புகைப்படங்களை அவரின் படங்களை பார்த்துதான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன் ஆனாலும் எனக்கு தெரிந்த நாள் முதலாய் அவர் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் இப்போது இந்தியாவில் வந்து தேவராஜ் சாரை மருமணம் செய்துகொண்டேன் என்றாள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தெய்வ வடிவில் வந்து இந்த வாழ்வை எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளார் என்று நான் உறுதியுடன் கூறுவேன் மேலும் நான் இதய தெய்வம் எம்ஜிஆர் ஆண்டவன் எம்ஜிஆர் நல்ல நேரம் எம்ஜிஆர் ஆசைமுகம் எம்ஜிஆர் தற்போது நாளை நமதே புகழ் வேந்தர் எம்ஜிஆர் இது போன்ற தளங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி பதிவுகளைப் போட்டுக்கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயரால் என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளை செய்கின்றேன் மேலும் தலைவர் தேடி தேடி ஓடி ஓடி கேட்கும் உங்கள் அன்பின் தேவராஜ் ராதிகா வணக்கம்........ Thanks...
-
*மலரும் நினைவுகள்....*
*கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார்,*
“என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
*MGR IS GREAT...!!*
Nallathambi
(Son Of Kalaivanar)
அவர்கள் ஆல்பத்திலிருந்து.
..... Thanks.........
-
பொதுவாக தமிழில் யாரையாவது புகழ்வதற்கு ஒரு வார்த்தை பயன்படுத்துவார்கள்.....
அது.....
ஒப்பாரும் - மிக்காரும் இல்லாதவர்..... என்பர்.....
இன்று முதல் அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளட்டும் ....!!!
எங்கள் மக்கள் திலகத்திற்கு மட்டும் வேண்டாம்.....!!!!!!????
ஏன் என்றால்.....?
ஒப்பாரே இல்லாத போது மிக்கார் யார்.....? எங்கள் தங்கத்தை மிஞ்ச.......???!!!
என்ன ரத்தத்தின் ரத்தங்களே நான் சொல்வது சரிதானே......????...... Thanks...
-
கெட்டவன் வாழ்வான் …!!!
நல்லவன் வாழ்வான் … நீதிக்கு பின் பாசம் … நீதிக்கு தலை வணங்கு … தர்மம் தலை காக்கும் … தாய் சொல்லை தட்டாதே … குடியிருந்த கோயில் …… நம் நாடு … திருடாதே … உழைக்கும் கரங்கள் … சிரித்து வாழ வேண்டும் … இவை எல்லாம் 1960 இல் இருந்து 1980 வரை தமிழ் சினிமா தந்த கருத்து பெட்டகமான தலைப்புக்கள் ….
சூது கவ்வும் … மூடர் கூடம் … சதுரங்க வேட்டை … கபடம் … டமால் டுமீல் … பிசாசு … கத்தி … துப்பாக்கி … யுத்தம் செய் … சண்டியர் … குத்து … சேட்டை … திமிரு … சண்டகோழி … களவாணி… உத்தம வில்லன் … இவை சமீப கால படத் தலைப்புகள் …
எங்கே போகிறோம் நாம் … 1980 களில் கூட நம் கதாநாயகன்கள் நெகடிவ் ரோல்கள் செய்து இருக்கிறார்கள் … ஆனால் .., தப்பு செய்தால் தண்டனை உண்டு என்பதை ஆணித்தரமாக சொன்ன காவியங்கள் அவை …
1961இல் வெளியான திருடாதே … படத்தில் கிளைமாக்ஸ்
எம் .ஜி .ஆர் . திருடி அந்த பணத்தில் பல நல்ல விஷயங்கள் செய்து திருட்டை விடுத்து திருந்தி வாழ முடிவு செய்து சில காலம் கஷ்டப்பட்டு பின் ஒரு பெரிய கூட்டத்தின் நன் மதிப்பை பெற்று போலீசில் சரணடையும் போது அந்த கூட்டம் தடுக்க அவர் நான் தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் … என் நன்னடத்தை காரணமாக நான் இப்போது கூட தப்பித்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது … ஆனால் அது ஒரு மோசமான முன் உதாரணமாக போய் விடும் … நாளை யாரும் திருடி நல்லது செய்து கூட்டம் சேர்த்தால் தப்பித்துகொள்ளலாமென்று இந்த சமுதாயம் நினைத்துவிடகூடாது என்று கூறி மக்களை பார்த்து கும்பிட்டு விட்டு காவலர்களிடம் செல்வதாக முடியும் … அந்த காவியம் …
மாட்டிக்காம தப்பு செஞ்சா நெறைய பணம் வரும்னா கண்டிப்பா செய்யலாம்ங்கறது தான் என்னோட பிலாசபி … இது சரபம் எனும் படத்தில் நாயகன் உதிர்க்கும் அரிய பெரிய தத்துவம் …
மங்காத்தா படத்தில் அஜித் உருவாக்கிய ட்ரெண்டு புத்திசாலித்தனமான கெட்ட விஷயங்கள் ஜெயிக்கும் என்கிற ஜானரில் புற்றீசல்களை பின்னுக்கு தள்ளி விட்டு வேகமாக அதிக எண்ணிக்கையில் யோசிக்க தொடங்கி விட்டார்கள் நம் சிந்தனை சிற்பிகள் … ஆனால் எதுவுமே நம் சமூகத்திற்கு சொல்லும் கருத்து … நல்லவன் இளிச்சவாயன் … யோக்கியன் கேனயன் … அயோக்கியனே உயர்ந்தவன் … கெட்டவன் வாழ்வான் ….(ஒரு பழைய பதிவு)
-
மக்கள் திலகத்தின் நூற்றாண்டில் உள்ளோம்...!
என்ன செய்ய போகிறோம்...? என நான் அடிக்கடி உங்கள்
( உண்மையான உன்னதரின் உதிரத்தின் உதிரங்களை ...???!!!) சிந்தையினை தூண்டியதுண்டு...!!
ஆனால் இப்போது பரவலாக சில செவி வழி செய்திகள் என்னை மிகவும் வருத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது...???
நம் மக்கள் திலகத்தின் பால் உண்மையான அன்பு - பாசம் - பக்தி - மரியாதை என அனைத்தும் உள்ள சில செல்வந்தர்களிடம் ஒரு சிலர் சுயஇலாப நோக்கத்தில் நம் மக்கள் திலகத்தின் பெயரினை பயன்படுத்தி சதுரங்க வேட்டையாடி வருகிறார்களாம்...???!!!
சிலர் சொன்னதில் பாதி செய்கிறார்களாம்...???!!!
சிலர் முழுவதுமாக வேட்டையாடி விளையாடி விடுகிறார்களாம்...???!!!
தன் தாய் மண் - சொந்த பந்தங்களை துறந்து அந்நிய தேசம் சென்று உழைத்து செல்வத்தால் செழித்து - உள்ளத்தால் இளகிய நம் மக்கள் திலகத்தின் உண்மை உதிரங்களும் இந்த நயவஞ்சக கூட்டத்தில் அவ்வப்போது சிக்கி கொள்கிறார்களாம்...???!!!
அன்பர்களே...!
ஒரு மாபெரும் அற்புத மஹா சக்தி நம் மக்கள் திலகம்...!!!
தயவு செய்து அவர் பெயரினை உச்சரித்து தவறோ - தப்போ செய்ய நினைக்காதீர்கள்....!!!
நீங்கள் செய்யும் இந்த செயல்.... உண்மையான தேவை உள்ள இடத்திற்கு அந்த செல்வந்தர்களின் சேவை பார்வை பதிய தடையாய் உள்ளது...
அதே போல சேவை செய்ய நினைக்கும் மக்கள் திலகத்தின் உண்மை அன்பர்கள் உங்கள் உதவி 100% உரியவர்களிடம் செல்கிறதா...? என உறுதி செய்து கொள்ளுங்கள்...
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை....
இது நம் மக்கள் திலகம் சொன்னது...
ஏமாற்றாதே... என அந்த கூட்டத்திற்கு மட்டும் சொல்லவில்லை நம் உன்னதர்... மறு வார்த்தையே... ஏமாறாதே... என நமக்கும் தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
ஆகவே இது தான் சமயம்.... என நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சில விஷமிகள் உலவுவதாக தகவல்...
எச்சரிக்கை அவசியம்... அவர்களுக்கு மட்டும் அல்ல... நமக்கும் தான்...
மக்கள்திலகத்தின் மாணவன் - மயில்ராஜ் - மதுரை..........(Old Posts)... Thanks...
-
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பக்தர்கள் அணைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
எனது பெயர் வ.ராஜவேல். திருவண்ணாமலை மாவட்டம். சாணானந்தல் கிராமம்.
நான் ஒரு எம்ஜிஆர் பக்தன்.
எனது பாட்டனார் முதல் எனது தந்தை வரை புரட்சி தலைவர் மீது தீராது அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அந்த வழியில் வந்த மூன்றாம் தலைமுறையில் பிறந்தவன் நான்.
எனது தந்தைக்கு புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் தலைமையில் எங்கள் தாத்தா ஏற்பாட்டில் ராமவர தோட்டத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
எனது தாதா அவர்கள் எம்ஜிஆரின் ரசிகனகாக மட்டுமல்லாமல் பக்தியும் இருந்த காரணத்தால் ராமவர தோட்டத்தில் கிடையாய் கிடந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக திருமதி ஜானகி அம்மையாருக்குதான் சொந்தம் என்றுசொந்தம் கொண்டாடிய சமயத்தில் அம்மையார் கோஷ்டியில் இருந்தார்.
பிறகு 1989ஆம் ஆண்டு திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்திற்க்கு அழைத்து வந்து எம்ஜிஆர் நினைவாகவும் அவரது புகழை வளர்க்க எம்ஜிஆர் பெயர் பொறித்த பெயர் பலகையை அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இறந்த நாள் அஞ்சலி மற்றும் அம்மையாரின் மறைவுக்கு பிறகு அவர்களின் இறந்த நாள் அஞ்சலி செலுத்தி வந்தோம்.
தற்போது என்ன பிரச்சனை என்றால்.
தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக புரட்சி தலைவர் பெயர் பொறித்த பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஆளும் கட்சியினர் பெயர்களை பொறித்து வரும் 28 ம் தேதி அன்று திறப்பு விழா நடத்த உள்ளனர்.
திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மற்றொரு கல்வெட்டை திறந்து வைக்க மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்களும் கல்வெட்டை திறந்து வைக்க வரவுள்ளனர்.
எனது ஆதங்கம் என்ன வென்றால் அதே இடத்தில் மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் மட்டுமல்லாமல் புரட்சி தலைவரின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அந்த பெயர் பலகை நீக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் என் மனம் குமுறி கொண்டு இருக்கிறது.
புரட்சிதலைவர் வெறும் அரசியல்வாதி மட்டும்மல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று நான்காம் தலைமுறைக்கு உணர்த்த கடைமைப்பட்டுள்ளேன்.
இதனை பற்றி சில கருத்துகள் மற்றும் உதவிகள் தேவைகப்படுகிறது ஐயா.
நன்றி.
எனது தொடர்பு எண். 9884165867
எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க....... Thanks...
-
நியூஸ் 18 சேனல். துரைமுருகன் பேட்டி. விருப்பமில்லாமல் வேறு சேனல் மாற்ற நினைக்கும்போது புரட்சித் தலைவரைப் பற்றி துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
புரட்சித் தலைவர் தன்னை படிக்க வைத்தது, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ய உதவிகள் செய்ததை சொன்னார். சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தபோது நீ படி, அதுதான் நல்லது என்று புரட்சித் தலைவர் சொல்லி சட்டக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்ததை சொன்னார். துரைமுருகன் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை வரத் திட்டமிட்டிருந்த புரட்சித் தலைவர் அப்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். சென்னை வரஇருந்த ஃப்ளைட்டை தவறவிட்டுவிட்டாராம். எப்படியும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சார்டர்ட் ப்ளைட் ஏற்பாடு செய்து கொண்டு புரட்சித் தலைவர் சென்னை வந்ததை துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
புரட்சித் தலைவர் முதல்வர் ஆன பிறகு அவரை பார்ப்பதை துரைமுருகன் தவிர்த்து வந்திருக்கிறார். ஒருநாள் எதிர்பாராமல் சட்டசபை கட்டிடத்தில் புரட்சித்தலைவரை நேருக்கு நேர் பார்த்துவிட்டார். புரட்சித் தலைவர் உடனே துரைமுருகனை சட்டையை இழுத்துப் பிடித்து ‘மேலே வா’ என்று தன் அறைக்கு கூப்பிட்டிருக்கிறார்.
துரைமுருகன் போனதும், ‘யார் யாரோ என்னிடம் அமைச்சராக இருக்கிறார்கள். நான் வளர்த்தவன் நீ. என்னிடம்தானே நீ இருக்க வேண்டும். என்ன இலாகா வேண்டும் என்று முடிவு செய். போ’ என்று புரட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
அதற்கு துரைமுருகன், ‘நான் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வந்தவன். அண்ணாவுக்குப் பிறகு கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். என்னால் உங்களிடம் வர முடியாது. மன்னித்துவிடுங்கள். கலைஞர்தான் என் தலைவர்’ என்று சொல்லியிருக்கிறார்.
புரட்சித் தலைவர் உடனே, ‘அப்ப உனக்கு நான் யாரு?’ என்று கேட்டிருக்கிறார்.
‘நீங்க என்னை வாழவெச்ச தெய்வம்’ என்று கூறி காலில் விழுந்தாராம் துரைமுருகன். அவரைத் தூக்கி கட்டியணைத்து ‘சரி போயிட்டு வா’ என்று புரட்சித் தலைவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை எல்லாம் துரைமுருகனே நியூஸ் 18 செய்தி சேனலில் சொன்னார். நெகிழ்ச்சியாக இருந்தது.
மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் கூட தெய்வமாக வணங்கும் ஒரே தலைவர் மனிதப் புனிதர் புரட்சித் தலைவர்....... Thanks...
-
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பிறந்த நாள் கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர் வீட்டில் ஆரம்பத்தில் அவர் அண்ணனின் ஒன்பது குழந்தைகளுக்கும் அடிக்கடி பிறந்த நாள் பெயர் சூட்டல் திருமண நாள் என்று விசேஷங்கள் வந்துகொண்டேயிருக்கும். அவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதை விரும்பமாட்டார்.
அன்றைக்குப் பாயசத்துடன் நல்ல சாப்பாடு செய்யச் சொல்வார். ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போய் வரும்போது அடிக்கடி விசேஷம் வருவதால் அங்கு வைக்கும் பாயசத்தை எனக்குத் திருகுச்செம்பில் (கூஜா) எம்.ஜி.ஆரின் அண்ணி கொடுத்து விடுவார்கள் என்பார்.
அதன்பிறகு ஜானகி அம்மையாரின் அண்ணன் பிள்ளைகள் ராமாவரத்திலிருந்து வளர்ந்த போதும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இல்லை. அதை அவர் ஆடம்பரம் என்று நினைத்தார்......... Thanks.........
-
எழுத்தாளர் திரு. ஆரூர்தாஸ் அவர்கள் எழுதிய "சினிமாவின் மறுபக்கம்" என்ற தொடரில் புரட்சித் தலைவர் நடித்த "அன்பே வா" திரைப்படம் தயாரிப்பு மற்றும் இயக்கம் பற்றியும் எழுதியது.
அன்பே வா ! MGR ஐ சோதித்து சாதனை காட்டிய AVM இன் Masterpiece ! நிரந்தர வசூல் படம்
நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1965–ல் பட உலகில் ஒரு பரபரப்பான பேச்சு! என்ன அது? ஏவி.எம். புரொடக்ஸன்ஸ் முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப்போகிறார்! அவருடைய சம்பளம், அதுவரையில் தென்னிந்திய கதாநாயக நடிகர்கள் வேறு யாருமே வாங்காத அதிகபட்சத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்!
செய்தி வெளியான சிறிது நாட்களுக் குள்ளாகவே அனைத்து ஏரியாக்களையும், அதிகபட்சத் தொகையான முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு செட்டியார் விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கிறார்! (அந்த 33 லட்சம் இன்றைக்கு 100 கோடிக்கு சமம்!)
ஆம், இந்தச் செய்தி உண்மைதான். ஏவி.எம். பிளஸ் எம்.ஜி.ஆர். அதனால்தான் அந்த விலையும் விற்பனையும்.
1964 வாக்கில் ‘கம் செப்டம்பர்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலப்படம் வந்து நன்றாக ஓடியது. அதைப்பார்த்த நண்பர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அந்தத் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்திருந்தார்.
அதைக்கேட்ட முருகன் பிரதர்ஸின் மூன்றாவது சகோதரரான எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரனை வைத்து கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று சொன்னார். பிறகு இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து கலர் படமாக எடுக்கலாமே என்று எண்ணி திருலோகசந்தரை தன் தந்தையிடம் அழைத்துச்சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்லச் சொன்னார்.அதைக்கேட்ட செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட் ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக் கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்றார்.
எம்.ஜி.ஆரிடம் சென்று திருலோகசந்தர் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட அவர் கூறியது:–
‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’. அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் பணம் அனுப்பப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எம்.வீ. தனது சத்யா மூவிஸ் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் ஆணையிட்டால்’ படத்தைத்தயாரித்துக் கொண்டிருந்தார். ‘அன்பே வா’ படத்தின் கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும் ஒப்பந்தமானார்கள். வசனம், வழக்கம்போல நான்தான்! (ஆரூர்தாஸ்) ஸ்டூடியோவில் ‘அன்பே வா’ களைகட்டத் தொடங்கியது. செட்டியார் பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் அழைத்து ஒளிவு மறைவு இன்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
‘இந்தப்படம் முப்பத்தி மூணு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கு. இதுல முப்பது லட்ச ரூபாய் தயாரிப்பு செலவு (காஸ்ட் ஆப் புரொடக்ஷன்) ஆகும். அந்தச் செலவு படத்தில தெரியணும். அந்த அளவுக்கு படம் ‘ரிச்சா’ இருக்கவேண்டும். உதவி டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம்... ‘இந்தாப்பா, நீயும் நம்ம காஸ்டியூமர் ரஹ்மானும் இங்கே இருக்குற எல்லா பெண்கள் கல்லூரிக்கும் காலையிலேயே போய் வெளி வாசல்ல நின்னு அங்கே படிக்குற பொண்ணுங்க லேட்டஸ்டா எந்தெந்த விதமான டிரஸ் போட்டுக்கிட்டுப் போறாங்கன்னு நல்லா கவனிச்சு அதே மாதிரி நம்ம ஹீரோயின் சரோஜாதேவிக்கும் மத்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டிரஸ் தயார் பண்ணுங்க’.
ஒளிப்பதிவாளர் மாருதிராவிடம்...
‘நீ என்ன பண்றே. இதுவரைக்கும் வந்திருக்குற பெஸ்ட் இங்கிலீஷ் – இந்தி கலர் படங்களை தினமும் நம்ம மாடி டீலக்ஸ் தியேட்டர்ல பார்த்து நல்லா ஸ்டடி பண்ணிக்கிட்டு, அதுக்குத் தகுந்தபடி நிறைய கலர் டெஸ்ட் எடுத்துப்பாரு’.
முருகன் பிரதர்ஸின் இரண்டாவது சகோதரரான எம்.குமரனிடம்...
‘அப்பா! நீ வழக்கம்போல மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கத்துலேருந்து கவனிச்சி ஒனக்கு திருப்தி உண்டாகுறபடி நல்ல நல்ல டியூனா போடச்சொல்லி, வாலி கிட்டே நல்ல பாட்டு எழுதி வாங்கி ‘ரிக்கார்ட்’ பண்ணு.
செட்டியார் அத்துடன் விடவில்லை. அன்றைய நாட்களில் கலை இயக்குனர்களில் (ஆர்ட் டைரக்டர்) தலை சிறந்து விளங்கியவரும், ஜெமினி ‘‘சந்திரலேகா’’ படத்திற்கு பிரமாண்டமான அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆடை அணிமணி அலங்காரங்கள் அமைத்துப் புகழ் பெற்று, பின்நாட்களில் ஜெமினியிலிருந்து விலகி வந்து ஏவி.எம். ஸ்டூடியோவில் சேர்ந்து பணிபுரிந்தவருமான பிரபல ஏ.கே.சேகர் என்பவரை அழைத்தார். இவரது முழுப் பெயர் ஏ.குலசேகரன் செட்டியார்.
ஏ.கே.சேகரிடம் செட்டியார் சொன்னார்:– ‘‘சார்! எம்.ஜி.ஆரோட அந்த ஊட்டி பங்களாவை, வழக்கமான சினிமா செட் மாதிரி இல்லாம, ரொம்ப ரிச்சா போடுங்க. நல்லா அழகா பர்னிஷ் பண்ணுங்க. கீழே தரையில் விரிக்கிற கார்ப்பெட்டெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா ரிச்சா இருக்கோணும். படத்துல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கோணும்.’’
அதைக்கேட்டு சேகர் சொன்னார்:– ‘‘நம்ம ஸ்டூடியோவுல இருக்கிற ஏழு புளோர்லேயும் இப்போ செட் போட்டு ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு . புல் புளோர் எதுவும் காலியா இல்லே.’’
செட்டியார்:– அப்படின்னா எட்டாவதா பெரிசா புதுசா ஒரு புளோர் கட்டி அதுல இந்த பங்களா செட்டைப் போடுங்க. இப்போ பாட்டு பிக்சரைஸ் பண்ணுறதுக்காக டைரக்டர் யூனிட் ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போகப்போறாங்க. அவுங்க திரும்பி வர்றதுக்குள்ளே இந்த புது புளோர் ரெடியாகி வந்த உடனே இதுல ஷூட் பண்ணணும். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரே மாசத்துல எட்டாவது புளோர் ரெடியாகோணும். கட்டி முடிக்கிற வரைக்கும் நம்ம புரொடக்ஷன் மேனேஜர் வெள்ளைச்சாமியை ராத்திரி பகலா இங்கேயே தங்கி இருந்து பாத்துக்கச் சொல்லுங்க.
அப்படியே, புது புளோருக்கு கீழ்ப் பக்கம் காலியா இருக்கிற இடத்துல எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் புதுசா ஏர் கண்டிஷன் வசதியோட ரெண்டு மேக்–அப் ரூம் கட்டுறதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. எல்லாம் ஒரே மாசத்துல ரெடியாகோணும்.
இந்த மாசம் ஆறாந்தேதி பூஜை போட்டு படத்தை எடுத்து முடிச்சு வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும். அதுக்குத் தகுந்தபடி எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கோணும்.’’
செட்டியார் உத்தரவின் பேரில் போர்க்கால வேகத்தில் வேலைகள் தொடங்கின.
புதிய எட்டாவது தளம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ‘‘அன்பே வா’’ படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அருகில் சொல்லி வைத்தாற்போல இருவர்! ஒருவர் கோயமுத்தூரிலிருந்து அவர் கூடவே வந்த அருமை ஆர்மோனியப் பெட்டியார். இன்னொருவர் சின்னச்செட்டியார். அதாவது ஏவி.எம். செட்டியாரின் இரண்டாவது குமாரரான எம்.குமரன்.
என் அன்பிற்கினிய அண்ணன் எம்.எஸ்.வி.யின் மூளையை முடிந்த மட்டும் குமரன் பிசைந்து மெல்ல மெல்ல நல்ல – நல்ல மெட்டுக்களை மொட்டு மொட்டாக வாங்கி அருமைக் கவிஞர் வாலியின் மூலமாக அவற்றை மனதிற்கினிய பாடல்களாக மலரச் செய்துவிடுவார்.
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.’ என் அண்ணன் எம்.எஸ்.வி. சுடர் விளக்கு என்றால் என் சகோதரர் எம்.குமரன் தூண்டுகோல்.
‘ஊட்டி’ என்னும் நீலகிரி உதகமண்டலம் மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள ‘சிம்லா’ ஆகிய மலை வாசஸ்தலங்களில் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மூன்று பாடல்கள் முதலில் தயாராயின. படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலும், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்ற டூயட் பாடலும், இன்னொரு எம்.ஜி.ஆரின் தனி (சோலோ) பாட்டும் அன்றைக்கு ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர்.தான் அந்த ஊட்டி மாளிகையின் உரிமையாளரான ஜே.பி. என்னும் பாலு என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கீதா – சரோஜாதேவி. அவரை ‘டீஸிங்’ பண்ணியதை எண்ணி வருந்தி ஓடும்போது, அவர் பின்னாலிருந்து எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வரும் அந்தச் சூழலுக்கான பாட்டை அண்ணன் டி.எம்.எஸ். பாடி ஏராளமான இசைக் கருவிகளுடன் இணைந்து ஒத்திகை பார்த்து முடிந்து ‘டேக்’ எடுத்துப் பதிவாகப் போகும் தருணத்தில் செட்டியார் ‘ஆர்.ஆர்’ தியேட்டர் என்னும் வழக்கமான ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து ‘பைனல் மானிட்டர்’ என்னும் கடைசி ஒத்திகையைக் கேட்டார்.
அடுத்து ‘டேக்’ என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். அதுதான் இல்லை.
எந்த பீடிகையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் செட்டியார் இப்படிக் கூறினார்:–
‘‘அப்பா! மியூசிஷியன்ஸ்க்கு (இசைக்குழுவினர்) சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க (எம்.எஸ்.வி.யிடம்) நீங்க இதுக்குப்பதிலா வேறு ஒரு டியூன் போடுங்க. (வாலியிடம்) நீங்க அதுக்குத் தகுந்தபடி சிச்சுவேஷனுக்கேத்தாப்போல வேற பாட்டு எழுதுங்க. (குமரனிடம்) நீ பக்கத்துலேருந்து பாத்துக்கப்பா. டேக்குக்கு முந்தி என்னைக் கூப்பிடுங்க’’ என்று சர்வ சாதாரணமாக – மென்மையாக சொன்னார். இருக்கையை விட்டு எழுந்தார். துண்டை எடுத்தார். தோளில்போட்டுக்கொண்டார். ஒன்றும் அறியாத நல்ல பிள்ளைபோல காரில் உட்கார்ந்தார். கார் நகர்ந்தது.
வாலி வாழைப்பூ போல தலை குனிந்து தரையைப் பார்த்தார்.
எம்.எஸ்.வி. சட்டைப்பையிலிருந்து எவர்சில்வர் பொடி டப்பியை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து ஒரு சிட்டிகை எடுத்தார். மூக்கில் வைத்தார். முடிந்த மட்டும் ஒரு இழுப்பு இழுத்து உறிஞ்சினார். அந்தப் பொடி சிவ்வென்று மூளையில் ஏறி கண்கள் சிவந்தன. கலங்கின.
அதோடு குமரனை ஒரு பார்வை பார்த்தார்.
குமரன் தியேட்டருக்குள் போனார். பியானோ எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தார். டியூன் பண்ணிக்கொடுத்தார். எழுந்தார். விசுக்கென்று அண்ணன் விசு அதில் அமர்ந்தார். கண்டமேனிக்கு கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்து அழுத்தென்று அழுத்தினார். ஒலி உண்டானது. அந்த இன்னொலியில் இசையுடன் இணைந்து இனிய ‘டியூன்’ பிறந்தது.
வாலியை அழைத்தார். அவர் வந்தார். இவர் வாசித்தார். அவர் எழுதிக்காட்டினார். இவர் தன் டியூனோடு சேர்த்துப்பாடிப்பார்த்தார். சரியாக இருந்தது. குமரன் கேட்டார். ஓகே சொன்னார். ஆள் அனுப்பினார். ‘அப்பச்சி’ (செட்டியார்) வந்தார். ‘மானிட்டர்’ கேட்டார். ‘‘டேக் எடுங்கப்பா’’ என்றார்.
டி.எம்.எஸ். மைக் அருகில் சென்றார். நின்றார். வாயைத் திறந்தார். பாட்டு வந்தது. அது ஒலிப்பதிவு ஆனது. அந்தப்பாட்டுதான்:–
‘‘அன்பே வா... அன்பே வா
உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும்
அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும்
அன்பே வா.’’
இந்தப்பாட்டும் மற்றும் படத்தில் இடம் பெற்ற ‘புதிய வானம் – புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’, ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்’
இன்றைக்குக் கேட்டாலும் – இனி என்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் இந்த இனிய கற்கண்டுப் பாடல்கள், அன்றைக்கு அண்ணன் எம்.எஸ்.வி.க்கும், என் அருமை இளவல் கவிஞர் வாலிக்கும் புகழுக்குப் புகழ் சேர்த்தன.
அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று அன்றைக்கு தியேட்டர்களில் விற்கப்பட்டன.
செட்டியாரின் விருப்பப்படி எட்டாவது எண் கொண்ட புதிய தளம் கட்டி முடிக்கப்பெற்றது. அதில் கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஊட்டி மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும் மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக உருவாகி இருந்தது!
8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.
முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.
இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.
தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.
ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.
இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு நான் எடுத்து விளக்கினேன். அதைக்கேட்டு அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.
1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.
சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.
அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.
14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.
காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.
‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–
எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?
நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.
எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?
நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.
ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.
வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)
எம்.ஜி.ஆர். சொன்னார்:– ஒரு சந்தோஷமான சேதின்னேனே. அதைச் சொல்றேன். இப்போ நாம ராதாண்ணனுக்கு (எம்.ஆர்.ராதா) ஒரு படம் பண்றோம். அவருடைய நண்பர் வாசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் புரொடியூசர். அவர் கலைவாணர் மற்றும் டி.எஸ்.பாலையாண்ணன், கே.ஏ.தங்கவேலு மாதிரி பழைய நாடக நடிகர்களுக்கெல்லாம் நண்பர். அவருக்கு உதவி செய்றதுக்காகத் தான் ராதாண்ணன் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்காரு. ஆரம்ப பைனான்சே அவரோட சொந்தப்பணம் தான். முத்துக் குமரன் பிக்சர்ஸ் கம்பெனி பேரு.
டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. அவுங்களும் இந்தப் படத்துல பார்ட்னருங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்ல ஏற்கனவே ‘‘ரத்னகுமார்’’, ‘‘பைத்தியக்காரன்’’ படங்கள்ளே நான் சின்னச் சின்ன வேடங்களில் நடிச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறது இதுதான் முதல் தடவை. அதனால ஒரு மாறுபட்ட கதையா இருக்கணும் என்று விரும்புகிறேன். ஒங்ககிட்ட இப்போ உடனே எழுதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறாப்போல ஏதாவது நல்ல கதை இருக்கா?
நான்:– (சற்று யோசித்து) இருக்குண்ணே. ‘அவுட்லைன்’ வச்சிருக்கேன். அதுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதணும்.
எம்.ஜி.ஆர்:– அதையெல்லாம் நீங்க சீக்கிரம் எழுதிடுவீங்க. எனக்குத் தெரியும். இப்போ அந்தக் கதையை சுருக்கமாக எனக்குச் சொல்லமுடியுமா?
நான்:– சொல்றேன். இது ஒங்களுக்கு ஒரு மாறுபட்ட கதையா இருக்கும்னு நினைக்கிறேன். கேளுங்க என்று நான் நினைத்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொன்னேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். சொன்னார்:– கதை நல்லாயிருக்கு. நான் விரும்பின மாதிரி எனக்கு இது ஒரு மாறுபட்ட வேஷமா இருக்கும். சரி. இதுக்கு ஏதாவது டைட்டில் வச்சிருக்கீங்களா?
நான்:– நல்ல டைட்டில் இருக்குண்ணே. அதை நானே ரிஜிஸ்ட்டர் பண்ணி வச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:– அப்படியா? சொல்லுங்க என்ன அது?
நான்:– ‘‘பெற்றால்தான் பிள்ளையா?’’
இதைக்கேட்ட மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆரின் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அப்படியே என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தூக்குத் தூக்கினார். ‘ஜானு’ என்று கூப்பிட்டார். அம்மா வந்தார்கள். ஆள் காட்டி விரலைக்காட்டினார். அவர் அறைக்குள் சென்றார். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர்:– இந்த டைட்டில் கதைக்கு மட்டுமல்லே எனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. இதைவிட ஒரு நல்ல டைட்டில்
கிடைக்கவே கிடைக்காது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஜானகி அம்மா வந்து ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.
“அதை நீயே உன் கையால் ஆசிரியர்கிட்டே கொடு”. அம்மா என் கையில் கொடுத்ததை வாங்கிக்கண்களில் ஒற்றிக்கொண்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
1964–ல் கமலாம்மா கையால் ‘‘புதிய பறவை’’க்கு முன் பணம். 1966–ல் ஜானகி அம்மா கையால் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’வுக்கு டைட்டில் பணம். நான் கொடுத்து வைத்தவன்.
எம்.ஜி.ஆர். கூறினார்:– இதுல ஆயிரம் ரூபா இருக்கு. இது டைட்டிலுக்காக நான் உங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு.
நான்:– ரொம்ப நன்றி அண்ணே! இப்படி ஆயிரம் ஆயிரமா நீங்க கொடுக்கிறதா இருந்தா, நான் ஒவ்வொரு படத்துக்கும் நல்ல நல்ல டைட்டிலா சொல்லுவேன்.’’
இதைக்கேட்டு அண்ணன் மட்டும் அல்ல. அம்மாவும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.
எம்.ஜி.ஆர்:– என்ன பிரமாதம். நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. நான் கொடுத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நீங்க நேரா ராதாண்ணன் வீட்டுக்குப்போய் அவரைப் பாருங்க. உங்களை எதிர்பார்த்து அவரும், கிருஷ்ணன் பஞ்சுவும், வாசுவும் காத்துக்கிட்டிருக்காங்க. டைரக்டருங்க கிட்டே கலந்து பேசிக்கிட்டு தற்சமயம் அவசரத்துக்கு முதல் கட்ட படப்பிடிப்புக்கான காட்சி வசனங்களை மட்டும் எழுதிக்கொடுத்திட்டிங்கன்னா மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். புறப்படுங்க. வாழ்க.
அங்கிருந்து புறப்பட்டேன். வயிறு நிறைய சர்க்கரைப்பொங்கல். மனம் நிறைய மகிழ்ச்சி. சட்டைப்பை நிறைய பணம். கார் ஸ்டியரிங்கைப் பிடித்தேன். பரங்கிமலைச் சாலையில் ஓட்டினேன். பாட்டு வந்தது. பாடினேன்:–
‘‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான் நல்ல வள்ளல் என்பேன், நல்ல வள்ளல் என்பேன்’’
இது வாலியின் அந்த பாட்டு அல்ல. என் சொந்தப்பாட்டு.
Courtesy. Arurdoss.............. Thanks.........
-
"அன்பே வா" திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் முதன்மை காவியங்களில் ஒன்று...1965ம் வருடம் 33 லட்சங்கள் என்பது இன்றைய 300 கோடிகள் ரூபாய் எனில் மிகையாகாது.........
-
ஸ்ரீMGR வாழ்க
சித்திரை 2 புதன்
MGR பக்தர் களே
நீங்கள் பார்க்கின்ற இந்த போட்டோ
MGR அவர்கள் திமுக வில் இருந்த காலத்தில் எடுத்த போட்டோ
தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை காரணத்தினால்
சென்னை நகரமக்கள் வாழ்க்கை பாதிக்கபட்டது
ஏழைமக்கள் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே
முடங்கி கிடந்தார்கள்
அப்பொழுது நம் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாபுரம் தோட்டத்தில் தன் பணத்தில்உணவு தயாரித்து
லாரிகளில் சென்னை முழுவதும் ஏழை மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கினார்
இப்போது கொரோனா / வந்தகாரணத்தினால்
ஏழை மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்
இப்போதுஉள்ள நடிகர்களும்
MGR அவர்களைபோல்
ஏழைமக்ளுக்கு தன் பணத்தில் உணவுதயாரித்துகொடுக்கலாம்அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்
நடிகர்களும்
நடிகைகளும் அப்படி த்தான்
இவர் களுடைய நினைப்பு
நேராக முதலமைச்சர் நாற்காலியில் சென்று அமர வேண்டும்
மார்க்கெட் இழந்த பிறகு
யாருடையகட்சியிலாவதுசேர்ந்து
முதலமைச்சராக வரவேண்டும்எண்று
நடிகைகள் நினைக்கிறார்கள்
அந்த நடிகைகள் மார்க்கெட்டுக்கு இழப்பதற்கு முன்பு ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் கூட அவர்கள் நிதி கொடுத்தது கிடையாது........ Thanks PM
-
#மண்டைக்காடு மதக்கலவரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் #எம்ஜியார் என்ன பேசினார்?
29.3.1982 அன்று சட்ட மன்றத்தில் நடந்த காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர்...
“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.
இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது.
குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாகச் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’
- என்று மிக தெளிவாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்...........(இதுபோன்ற ஆணித்தரமாக கருத்துக்களை துணிந்து கூறுவதற்கு இப்பொழுது தலைவர்கள் யாருமில்லை)......... Thanks.........
-
கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....
ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...
காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.......... Thanks.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி
ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி
பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி
படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.
திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்
அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.......... Thanks.........
-
இதுவே தலைவரின் சிறந்த படம் ஆகும்...இந்த படத்தை விரும்பாத எம்ஜியார் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம் அவர்கள் ஒரு தனியார் விழாவில் இரண்டு படங்கள் எடுத்தார். ஒன்று இந்த படம் அடுத்தது 2017 இல் மைய அரசு வெளியிட்ட தபால் தலை தலைவர் படம்.
கீழே உள்ள இந்த படத்தை அரசு படம் ஆக ஆக்க விரும்பி செய்தி துறை அதிகாரியாக இருந்த அவர் மற்றவர்களிடம் காட்டிய போது இது முதல்வருக்கு பிடிக்காத படம்....சாப்பிட்டுவிட்டு பல் குத்துவது போல இருக்கு என்று அவரே நிராகரித்த படம் என்று சொல்ல.
முதல்வரிடம் இந்த படத்தை காட்டிய அந்த அதிகாரி.... ஐயா இந்த படத்தில் தான் உங்கள் தனித்து உள்ள அடையாளங்கள் ஆன உங்கள் தொப்பி, கருப்பு கண்ணாடி, வலது கரத்தில் கடிகாரம், கையில் கைக்குட்டை, மற்றும் உயரமான சட்டை காலர் அவை தவிர...
உங்களுக்கே உரிய அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு அனைத்தும் உண்மையை காட்டுகின்றன என்று அவர் சொன்னதும் ஒரு நிமிடம் படத்தை உற்று பார்த்த நம் மன்னன் சரி இந்த படமே இருக்கட்டும் என்று ஒப்புதல் தந்தார்.
இன்றும் இந்த படம் தலைவர் நம்மை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆகியும் பட்டி தொட்டி எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது உண்மைதானே நண்பர்களே.
படத்தை தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெற்றவர்....இரா.. கற்பூரசுந்தரபண்டியன்..(இந்திய ஆட்சி பணி)... அவர்கள்.
நீங்களும் படத்தை பார்த்து அனைத்தும் சரிதானா என்று சரிபார்த்து கொள்ளவும்.
நன்றி...வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி............ Thanks...
-
எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்... நடிகனாக நேசத்துக்கு உரியவனானேன்- நடிகர் சத்யராஜ்.
வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ் தனது திரை உலக பயணம், எம்ஜிஆர் உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் மரியாதை படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு கடலோரக் கவிதைகள் என்ற படத்தை எடுக்க இருந்தார்.
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், இரவுப்பூக்கள் என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப் படம்தான், நான் ஹீரோ ஆகிய பின் டூயட் பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு டூயட் கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு டான்ஸ் தெரியாதே என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா என்று கேட்டேன். அவர் நடனம் தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, மைசூர் போனால் டான்ஸ் காட்சி எடுக்காமல் விட்டு விடலாமா, என்று சிரித்தபடி கேட்டார்.
இந்தப்படத்தில் நண்பர் நிழல்கள் ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர் மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன, என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர் சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல் காட்சிக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.
எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. மலைக் கள்ளன், சிவகவி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில் தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார்.
நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன், என்றேன்.
இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.
திருமணத்திற்கு முந்தின நாள், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு ஃபோன் செய்தார். ஏன் சார் சி.எம் வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே, என்றார்.
நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார். மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் எப்படி என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.
அவர் எப்படி என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த எப்படி வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன எப்படிக்கு அர்த்தம். நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா, என்கிற அர்த்தம்.
நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை சட்டென்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம், டேய் இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர் என்னிடம், உங்கம்மா எங்கே என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப் போனேன். அம்மாவை பார்த்து வணக்கம்மா என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.
திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.
சிவாஜி சாருடன் நான் நடித்த ஜல்லிக்கட்டு பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்.
நான், வேணாங்க எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே. இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் என்றேன்.
நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா, என்று மறுபடியும் கேட்டார்.
இதற்கும் வேண்டாம் என்றேன். எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு என்றார், உறுதியான குரலில். அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.
எனவே, நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும் என்றேன். நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.
1987 டிசம்பர் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று வரவில்லை என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.
இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர், எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம் என்பதுதான் அந்த தகவல்.
ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே, என்று சொல்லி விட்டார்கள்.
நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் ஃபைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல, என்றார்.
நான் என்ன பதில் சொல்வது, விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே என்றேன். அதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, நான் வரலைன்னா வருத்தப்படுவியா, என்று கேட்டார்.
வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே என்றேன். ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், உனக்காக வர்றேன், என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் எப்படி என்றார், உற்சாகமாக. அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த எப்படி என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். முத்தமா தர முடியாது. குத்துவேன் என்றார், ஜாலியாக.
நம்பியாரோ, அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம் என்றார். இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர், கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
டிசம்பர் 5ஆம் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு உப்பு போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த உப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.
ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்கு உரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர் என்று சத்யராஜ் சொன்னபோது அவருடைய கண்கள் கலங்கி இருந்தன.......... Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சந்தித்த சவால்கள் நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள் விவரம் :
எம்.ஜி.ஆர். அவர்கள் இலங்கையில் கண்டியில் பிறந்தாலும் , வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரின் தாயார் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணத்தில் சில காலம் வசித்தார். அப்போது கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு வரை எம்.ஜி.ஆர். படித்தார் .* பின்னர்* வறுமையின் காரணமாகவும், வருமானம் போதிய அளவு இல்லாததாலும் , தன்*குழந்தைகளான எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி..ராமச்சந்திரன் இருவரையும்* மதுரையில் உள்ள பாய்ஸ் நாடக கம்பெனியில் நாடகத்தில் நடிக்க சேர்த்துவிட்டார் .பருவ வயதை அடைந்த பின்பு ,போதிய அளவு கல்வி திறன் இல்லாததால் , நிறைய புத்தகங்கள் படித்து கல்வியையும், அறிவையும் வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்பட நிறைய புத்தகங்களை படித்துள்ளார் . இலக்கணம், இலக்கியம் அறிந்த அறிஞர்கள் புத்தகங்களை படித்துள்ளார் .பள்ளியில் பொது கல்வி பயிலாவிட்டாலும், இந்த உலகத்தில் ஒரு அறிவார்ந்த மனிதனுக்கு என்ன தேவை, மற்றவர்களுடன் எப்படி பழகுவது, உரையாடுவது , மற்றவர்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது போன்ற புத்தகங்கள் அதிகம் படித்துள்ளார் .நாடக துறையில் நல்ல நிலைக்கு வரவும் ,*உலக அறிவு, பொது அறிவு , பற்றி தெரிந்து கொள்ளவும், எம்.ஜி.ஆரின் தாயார் சிறிது காலம் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு*செய்திருந்தார் . கல்வி திறன், பேச்சு திறன் ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டு அதை பொது வாழ்க்கையில் நல்லமுறையில் கையாண்டார் .
இதயவீணை படத்தில் காஷ்மீர் பியூட்டி புல் பாடலில் வரும் வரிகள்*சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா , சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா* -* தான் பள்ளியில் பொதுக்கல்வியை போதுமான அளவில் படிக்காவிட்டாலும் , ஒரு தேர்ந்த மனிதனை போல தான் அறிந்ததை இந்த பாடலில் குறிப்பிட்டார் .
எம்.ஜி.ஆருக்கு தெய்வபக்தி உண்டா என்று அனைவரும் அந்த காலத்தில் கேட்பதுண்டு.* சினிமாவில் பிரபலம் ஆவதற்கு முன்பு சில கோவில்களுக்கு சென்றுள்ளார் . திருப்பதிக்கு இருமுறை சென்றுள்ளார் .* முதல்வரான பின்பு*அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும், கோவில் மரியாதை நிமித்தமாகவும் சில கோவில்களுக்கு சென்றுள்ளார் .* பொதுவாக மதுவிலக்கு , தெய்வபக்தி எம்.ஜி.ஆருக்கு பிடித்த விஷயங்கள் .* நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு. தெய்வம் உண்டு என்ற நம்பிக்கை உடையவர் எம்.ஜி.ஆர்.* மகாத்மா காந்தி சோர்வாக இருந்த சமயத்தில் பகவத் கீதை படித்து உற்சாகம் அடைவார் என்று சொல்வதுண்டு . பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை* தொடங்கிய பின்னர் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சி கொள்கையில் இருந்து சற்று மாறுபட்டவர் . அதாவது தெய்வ பக்திக்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கை இல்லை எனவும் செயல்படவில்லை .* அதனால்தான் என்னவோ, தந்தை* பெரியாருக்கு கூடிய கூட்டத்தைவிட பேரறிஞர் அண்ணாவுக்கு அதிக அளவில் கூட்டம் கூடியது என்பார்கள்.
எம்.ஜி.ஆர். தி. மு.க. வில் சேர்ந்த பின்னர் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ,*அவர் வீட்டில் என்ன தெய்வங்கள் உள்ளன என்ற கேள்விகள் கேட்கப்பட்டது .எம்.ஜி.ஆர். தனது வீட்டில் , என் தாய் வணங்கிய விஷ்ணு, காளி ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன . என் தாய் மறைந்த பிறகு ,அவரது படத்தை நான் வணங்கி வருகிறேன் .ஆனால் எம்.ஜி.ஆரை போல தன் தாயை வணங்கியது , போற்றியது,திரைப்படங்களில்* மரியாதை அளித்தது , தாய் பற்று மிக்க காட்சிகளில் நடித்தது, தாயின் பெருமை மிக்க பாடல்களில் நடித்தது*உலகில் வேறு* எந்த நடிகரும், அரசியல் தலைவரும் உண்டா என்றால் இல்லை என்று அடித்து சொல்லலாம் .உதாரணமாக தாயின் பெருமையை போற்றும் வகையில் அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை*சிறப்பாக இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, உடன் நடிகை ஜெயலலிதாவும் நடித்துக் கொண்டிருந்தார் . அப்போது பொம்மை சினிமா மாத இதழில் ஒரு பேட்டியில் நடிகை ஜெயலலிதா , எம்.ஜி.ஆரிடம் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார் .* ஏன் நீங்கள் கடவுள் வேடத்தில் ஒரு படத்தில் கூட நடிப்பதில்லை .* எம்.ஜி.ஆர். பதிலுக்கு, நான் கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று மக்களையோ, மற்றவர்களையோ நம்பவைக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை .ஒருவர் மனதை தூய்மைப்படுத்துவது, வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது , ஒழுக்கத்தை கற்று கொடுப்பது, உழைப்பில் நம்பிக்கையை வைக்க சொல்வது , தாய் தந்தையரை வணங்க செய்வது , அனைவரிடமும் அன்பு செலுத்த சொல்வது , இப்படி என்னால் முடிந்த அளவில் திரைப்படங்களின் மூலம் பல நல்ல விஷயங்களை* எடுத்து சொல்வதில் என் மனம் நிறைவடைகிறது . இவையே நான் கடவுள் வேடத்தில் நடித்து மக்களுக்கு நன்மை பயக்கும் செயலை செய்ததாக எண்ணி மகிழ்கிறேன் . எனவே நான் தனியாக கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் நான் கடவுள் நம்பிக்கை உடையவன்என்று மற்றவர்களை நம்பவைக்க வேண்டும்* என்ற கட்டாயத்தில் இல்லை என்றார் எம்.ஜி.ஆர் .இப்போதைக்கு அது அவசியமில்லாத ஒன்று .
ஒருவன் எப்போதும் தன் தாயிடம் அன்பு காட்ட வேண்டும் . தந்தையிடம் மரியாதை அளிக்க வேண்டும் . தனக்கு போதிக்கும் ஆசானிடம் பயபக்தியாக நடந்து கொள்ள வேண்டும் .* ஏழைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும் . மக்களிடம் மனிதநேயத்தோடு நடக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார் .ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது பேரறிஞர் அண்ணாவின்*தி. மு. க. கொள்கை .* *திரைப்படங்களில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை, பொன்மொழிகளை, கருத்துக்களை தனது பாணியில் , மிகவும் எளிமையாக மக்களை சென்றடையும் வகையில்* நடித்து மக்களை தன்பால்*ஈர்த்தவர் எம்.ஜி.ஆர். என்று சொன்னால் மிகையாகாது .
நிகழ்ச்சியில் இதயவீணை படத்தில் ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே* பாடல், அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் ,என் அண்ணன் படத்தில் கடவுள் ஏன் கல்லானான் என்ற பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன .*
-
1967ஆம் ஆண்டு சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட குடிசைவாழ் ஏழை மக்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரூபாய் 25,000 பணம் உதவி அளித்துள்ளார்.
அத்துடன் ஒரு திறந்த ஜீப்பில் ஏறி சென்னை நகர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி வசூல் செய்து அந்த பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.
அவர் சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்.
புகைப்படங்கள் அன்றைய பொம்மை சினிமா இதழ்........ Thanks...
-
#நினைத்ததை_முடிப்பவன்..
"பூமழை" தூவி பாடல்...
மைசூர் சாமுண்டேஸ்வரி கோயில்
மலையின்
அடிவாரத்தில் எடுக்கப்பட்ட
தலைவரின் இந்த பாடலை
சற்று மெருகுபடுத்தியுள்ளேன்...
இந்த பாடலை ஒளிப்பதிவு
செய்த ஒளிபதிவாளர்
ரெம்ப சாமர்த்தியமாக திறமையாக
சூரிய வெளிச்சம் அதுவும்
உச்சி வெயிலில் மட்டும்
அதுவும் தலைவரின் தலை மீது
விழுமாறு ரெம்ப கைதேர்ந்த
ஒளிபதிவு நிபுணராக
பதிவு செய்துள்ளார்...
1974 இல் நமது காதுகளை
குடைந்த ஏழிசை அரசர்
பாட்டிசை சித்தர்
ஐயா டிஎம்எஸ் அவர்களின்
குரல் அந்த
பாட்டுடை தலைவனின்
உயிரான ஒரு படைப்பு...
என் அண்ணாவை ஒருநாளும்
என் உள்ளம் மறவாது என்று
இடது கையால் தலைவர்
காட்டுவது நமது கழக
அண்ணா கொடியை...
இந்த காட்சியை தீவிரமாக
ஆராய்ந்து பார்த்தால்
தலைவர் வேறெந்த பக்கமும்
கை நீட்ட வசதி இல்லாததால்
தனது இடது கை மட்டும்
காட்சியின் பிரேமில்
சரியாக இருக்கும் என்று
Technically யோசித்து
எடுக்கப்பட்ட காட்சி...
தலைவர் கடைசியில்
லதாவோடு காரில்
ஏறும் இடம்
மைசூர் மிருக கண்காட்சி
அருகே உள்ளது..
நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை............ Thanks...
-
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...
எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...
ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .
உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.
"அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.
"நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
"இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'
-என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று...
"சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
"அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.
ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.
சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை... ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது......... Thanks...
-
-