https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a6&oe=5EC3A726
Printable View
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...60&oe=5EC1E80C
M. N. Nambiar about Sivaji Ganesan Cinema Express Magazine Dated 15-9-1994
'அன்னை என்னும் கடல் தந்தது..தந்தை என்னும் நிழல் தந்தது...பிள்ளை செல்வம் என்னும் வண்ணம்... கண்ணன் பிறந்தான்....நன்றி என்னும் குணம் கொண்டது...நன்மை செய்யும் மனம் கொண்டது..எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்...'
நாளை ( 20/04/2020 ) காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர் திலகம் நடித்த. !!!
" தங்கப்பதக்கம் " மெகா வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...8f&oe=5EC16820
இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்களின் மாற்று சினிமா ரசனையை ரசித்து ஏற்றுக்கொண்ட திரு.நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்!
.................................................. .....
"தங்கப்பதக்கம்",பாதிப்பினால் நிறைய திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்றுள்ளன.
வால்டர் வெற்றிவேல்,இந்தியன்,அஞ்சாதே போன்ற படங்களுக்கு inspiration தங்கப்பதக்கம் திரைப்படம்தான்.
'அஞ்சாதே'திரைப்படத்திற்கு inspiration ,'தங்கப்பதக்கம்',திரைப்படம்தான், 'என்று இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
'தங்கப்பதக்கம்'திரைப்படமாக்கப்படுவதற்கு முன்பு நாடகமாக நடிகர் திரு.செந்தாமரை அவர்களால் மேடையேற்றப்பட்டுள்ளது.இந்த நாடத்திற்கு கதை வசனம் எழுதியவர் திரு.மகேந்திரன் அவர்கள்.நாடகத்தின் பெயர் இரண்டில் ஒன்று.
இந்த நாடகத்தை ஒருமுறை பார்த்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை தான் ஏற்று நடிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளார்.
தன்னுடைய விருப்பத்தை செந்தாமரையிடம் சொல்லவே, அவரும் சிவாஜியின் ஆர்வத்தைப் புரிந்துக் கொண்டு, அந்த இரண்டில் ஒன்று நாடகம் சிவாஜி நாடக மன்றத்தின் மூலமாக தங்கப்பதக்கமாக அரங்கேறி வெற்றிநடைபோட்டுள்ளது.
என்னுடைய தந்தை 25 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய் கொடுத்து பிளாக்கில் வாங்கி பார்த்துள்ளார்.
1972 ஆம் ஆண்டு 100 ரூபாய் என்பது பெரும் தொகைதானே!
பின்பு,திரைப்படமாகவும் பெரும் வெற்றி பெற்றது என்பது எல்லோருக்குமே தெரியும்.
அந்த S.P.கதாபாத்திரத்தை யாரால் மறக்க இயலும்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்று வரும்.
மனைவி இறந்த தகவல் கேட்டு கணவன் வீட்டிற்கு வரும் அந்தக்காட்சியின் சம்பந்தமாக இயக்குனர் திரு.P.மாதவன் அவர்களுக்கும் திரு.மகேந்திரன் அவர்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.இயக்குனருக்கோ வசனம் மிகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.மகேந்திரன் அவர்களுக்கோ நாலே வரியில் இந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக ஆக்கிவிடமுடியும் என்று சொல்லியிருக்கிறார்.
இயக்குனரின் ரசனைக்கு தகுந்த படி ஒன்றும் தன்னுடைய ரசனைக்கு ஏற்றவாறு மற்றொன்றும் எழுதி வைத்துக்கொண்டு சிவாஜியை அணுகியிருக்கிறார்.
சிவாஜி அவர்கள் மகேந்திரன் அவர்களின் ரசனையை புரிந்து ஏற்றுக் கொண்டு அதன்படியே நடித்துக்கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் மாஸ்டர்பீஸே இந்தக் காட்சிதான்.சிவாஜி பேசும் அந்த நாலு வரி வசனம் நம்மை கலங்கடித்து விடும்.
காட்சிப்படி வீட்டிற்குள் சோகத்தோடு வருவார்.Uniform
ஐ கழற்றி விட்டு பனியனோடு மாடிப்படி ஏறி வருவார்.கூடத்தில் மனைவியான கே.ஆர் விஜயாவின் உடல் கிடத்தப்பட்டிருக்கும்.மனைவியின் உடலின் அருகில் வந்து நிற்கும் சிவாஜி சில நொடிகள் மனைவியின் முகத்தையே உற்றுப்பார்த்துவிட்டு பேசும் வசனம்," லட்சுமி....நான் வந்து ரொம்ப நேரமாச்சு ...ஏன்,என் கூட பேசமாட்டேன்கிறே....நான் Uniformலே இருக்கும்போதுதான் பேசப் பயப்படுவே...இதோ பார்.....நான் Uniform இல்லாம வந்துருக்கேன்...பேசமாட்டே....பேசுமா.....நா நேரம் கழிச்சு வருவேன்.....நீ எனக்காக தூங்காம காத்துக்கிட்டு இருப்பே ...இப்போ நான் நேரத்தோடு வந்துருக்கேன்.....நீ தூங்கிட்டீயே....நா என்னம்மா தப்பு பண்ணேன்....ஏம்மா என்னை விட்டுப் போயிட்டே ...எனக்கு யாருமே இல்லேயேம்மா...என்னையை தனிமரமா ஆக்கிட்டுப் போயிட்டியேம்மா....என்னால தாங்க முடியலம்மா...."
என்று பேசிவிட்டு மனைவியின் முகத்தை கட்டிப்பிடித்து வெடித்து அழுவார்.
இந்தக்காட்சியை நாம் பார்க்கும் பொழுது சிவாஜி அவர்களின் நடிப்பிற்கு மகேந்திரன் அவர்களின் வசனமும் காட்சி அமைப்பும் பேருதவியாக இருந்தது என்பதை நம்மால் உணரமுடியும்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...db&oe=5EC1A514https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ec&oe=5EC1AF52https://scontent.fyto1-2.fna.fbcdn.n...21&oe=5EC1FF5B
Thanks Manisekaran
#தாதாமிராசி (DADAMirashi)
#நடிகர்திலகத்தின்
ரசிகர்கள்
அக்காலத்தில் ஆண்ரசிகர்கள்அதிகம். #பெண்ரசிகைகள் அதைவிட அதிகம். ️
ஆனால் அன்றைய காலகட்டத்தில் பிரபலமான
தமிழ் இயக்குனர் ஒருவர்
#நடிகர்திலகத்தின் வெறித்தனமான ரசிகராக இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா....️
ஆம் அவர்தான் இயக்குனர் #தாதாமிராசி புதிய பறவை திரைப்படத்தின் #இயக்குனரும் இவர்தான்.
அக்காலத்தில் வெளிவரும் நடிகர் திலகத்தின் படங்களை
மக்களோடு மக்களாக
முதல் நாளில்
முதல் காட்சியே
பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். ️
நடிகர் திலகத்தின் #எவர்கிரீன் மூவிகளை பார்த்து பார்த்து ரசித்து ருசித்து தன் நண்பர்களிடம் சிலாகிப்பார்....
அவரை வைத்து
ஒரு அற்புத படைப்பை தரவேண்டும் என இவரே பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் புதிய பறவை..
அதுமட்டுமல்ல இவர் இயக்கும் அனைத்து படங்களின் பூஜையும் நடிகர் திலகத்தின் தலைமையில் தான் நடக்கும்.
#பூவும்பொட்டும்
#ராஜாவீட்டுபிள்ளை
#சங்கமம்
#அன்னையின்ஆணை
என மற்ற நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியிருந்தாலும்
"என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத படம் புதிய பறவை மட்டுமே" என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுவார்...
இவரது பூர்வீகம் மகாராஷ்டிரா என்றாலும்
தமிழ் திரை உலகில் தான்
தன் திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார்.
நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர் #பீம்சிங் கிற்கு #இணைஇயக்குனராக பணியாற்றிய காரணத்தினால் என்னமோ #நடிகர்திலகத்தின் மீது இவருக்கு அவ்வளவு #ஈர்ப்பு..
நடிகர் திலகத்தை வைத்து இவர் இயக்கிய #மூன்றுதெய்வங்கள் படமும் நல்ல ரசனை மிக்க படங்களில் ஒன்று....
என்னதான் சினிமாஇயக்குனர் என்றாலும் நடிப்பு இவருக்கு வரவே வராது அப்படி இருந்தும்
இவருக்கு ஓரளவு நடிப்புச்
சொல்லிக் கொடுத்து
#புதியபறவை படத்தில்
தனது தந்தை கேரக்டராக
#நடிகர்திலகம் இவரை நடிக்க வைத்திருப்பார்.
️ஒரு #இயக்குனரே நடிகர் திலகத்தின் #ரசிகர் என்றால் நாமெல்லாம் #அவரதுரசிகர்கள் நமக்கெல்லாம் பெருமை அல்லவா!
அன்புடன் #லேகாஸ்ரீ
(நன்றி: #சினிமாஎக்ஸ்பிரஸ் 1994 பொங்கல் மலர்)
Thanks Lega Sree
இன்று சிவாஜி பட திருவிழா.. ¶
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜ் டிஜிட்டல் பிளஸ் இல் மதியம் 1.30 மணிக்கு " ஊருக்கு ஒரு பிள்ளை "
கேப்டன் தொலைக் காட்சியில் மதியம் 1.30 மணிக்கு " நீல வானம் "
மெகா தொலைக்காட்சி இல் இரவு 8.00 மணிக்கு " ஜல்லிக்கட்டு "
படங்களையும் கண்டு மகிழலாம்.
'அந்த மானைப் பாருங்கள் அழகு.. இளம்
பாவை என்னோடு உறவு..அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்...'
இன்று 20/04/2020 - இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த "அந்தமான் காதலி "
படத்தை காண தவறாதீர்கள் . இந்த படத்தில் சிவாஜி, சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e6&oe=5EC221F6
நடிகர் திலகத்தின் பொன் மொழிகள்
உங்கள் வெற்றியின் பின்னால் இருக்கப் போவது நீங்கள் கண்ட அவமானங்கள் மட்டுமே.
அவற்றை உங்களை எரித்து விடும் நெருப்பாகப் பார்க்காமல்.
வேகப்படுத்தும் எரி பொருளாகப் பாருங்கள்.
இரக்கம் கொள்!!! தர்மம் செய்!!! மண்ணறைக்கு
செல்லும் போது உன்னை தனியாக தான் அனுப்புவார்கள்...
உன் செல்வங்களோடு அல்ல.....
பலசாலிகள் என்று யாரும் இல்லை அடுத்தவரின் பலவீனத்தை பயன் படுத்தி கொள்பவர்களே
..... பலசாலிகளாக தெரிகிறார்கள் !!!
எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும் ஒரு கணவனுக்கு மனைவி ராணியாக முடியாது ஆனால் ஆயிரம் தவறுகள் செய்தாலும் தந்தைக்கு தன் மகள் இளவரசி தான்....!
வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது....அதை விட வலிமையானது வாழும் வாழ்க்கை....
அன்புடன் ஏ.சுந்தரராஜன்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7e&oe=5EC23C3B
Thanks Sundar Rajan
'ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன்,''
இன்று 20/04/2020 - இரவு 09.30 p.m. மணிக்கு சன் தொலைகாட்சி இல்.
நடிகர்திலகத்தின் பக்தி படம் " திருவிளையாடல் " - வெள்ளிவிழா படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், சாவித்திரி, நாகேஷ் ஏ.பி.நாகராஜன் மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0c&oe=5EC34BE9
"உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... "
இன்று - 20.04.2020 பகல் 01.30 P.M. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த வெற்றி படம். !!!
" ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர் சுந்தராஜன் நடித்து உள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d5&oe=5EC32ADB
20-04-2020 - தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மாவட்ட தலைவர் திரு.p .ஜெயக்குமார், சென்னை, போரூர் பகுதியில், போக்குவரத்து காவல்துறை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.
- நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை
தென்சென்னை மாவட்டம் .
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...72&oe=5EC1B1B8
Thank Sivaji Peravai Chennai
ஒரே நாளில் 9 படங்கள். 21ம் தேதி தொடங்கி இன்று வரை பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பிய நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மட்டும் நூற்றுக்கும் மேல். இதில் ஒரே படம் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகியதும் சில முறை நடந்தேறியுள்ளது. இதை விட ஒரு கலைஞனின் சாதனை வேறேது இருக்க முடியும், அதுவும் அவர் அமரராகி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழிந்தும் இதை செய்கிறார். இவ்வளவும் TRP Rating கிற்காக. இதற்கு மட்டும் அவர் வேண்டும். ஆனால் அவருடைய சாதனைகளை மட்டும் சொல்ல மாட்டார்கள். இதில் தான் நாம் மனம் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. பரவாயில்லை. நடிகர் திலகத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு இதை விட வேறு சாட்சியில்லை.Thanks to Mr Vee Yaar
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0c&oe=5EC14839
Thanks Vasudevan
கண்ணதாசன் புதல்வி திருமணத்தில் நடிகர் திலகத்துடன் கண்ணதாசன் சகோதரர் ஏ எல் எஸ் மற்றும் டி எம் சௌந்தர்ராஜன்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...65&oe=5EC43074
#நிச்சயதாம்பூலம் (1962)
நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத படம் இது. நடிகர் திலகத்தின் மிகச் சிறப்பான நடிப்பைக் கொண்ட வெற்றிப்படம். பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா படங்களுக்கு நடுவே வந்ததால் 100 நாட்கள் என்ற எல்லைக் கோட்டைத் தொடாவிட்டாலும், 100 நாட்களின் வசூலை பத்து வாரங்களிலேயே அள்ளிக் கொடுத்த படம். ஜமுனா, நம்பியார், ரங்காராவ், நாகையா , ராஜஸ்ரீ ஆகியோரும் திறம்பட நடித்த படம். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்களனைத்தும் இனிமை.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசன் பாடல்களில் தேன் சொட்டியது...
"ஆண்டவன் படச்சான் எங்கிட்ட கொடுத்தாள் "
" நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு"
"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா"
" மாலை சூடும் மணநாள்"
"இது வேறுலகம் தனி உலகம்"
"படைத்தானே படைத்தானே"
என அத்தனையும் நன் முத்துக்கள்.https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c9&oe=5EC2C1C5
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...bb&oe=5EC4C42Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...2e&oe=5EC15CE9https://scontent.fyto1-2.fna.fbcdn.n...f5&oe=5EC27D79
நன்றி பழையதிரைப்பட நாளிதழ் விளம்பரம்
இந்திய அரசால் நெகட்டிவ் உரிமை வாங்கப்பட்டு இந்தியாவின் முக்கிய மொழிகளில்
மொழி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா முழுதும்திரை யிடப்பட்டமுதல் தமிழ் படம் பாரத விலாஸ் தான் என்பது பெருமைக்குரியது
சிவாஜி நடித்து மலேசியாவில் 100நாட்கள் ஓடிய தமிழ் படம் வியட்நாம் வீடு
சிங்கப்பூரில் 100நாள் ஓடிய முதல் தமிழ் படம் ஞான ஒளி.குவைத்தில் திரையிட்ட முதல் தமிழ் படம் கவ்ரவம்
தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் ஒரே நாளில்18/10/71வெளியான தமிழ் படம் பாபு
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...85&oe=5EC2A0F0
Thanks Vijaya Raj Kumar
1985 in bangalore devi
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...1a&oe=5EC511FC