இன்று (19/06/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/213j5hi.jpg
Printable View
இன்று (19/06/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "காவல் காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/213j5hi.jpg
இன்று இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i67.tinypic.com/11mf3b9.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு . சுந்தர்.
மக்கள் திலகத்தோடு நெருங்கிப்பழகியவரும் சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவருமான ஜேப்பியார் (85) சென்னையில் காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அவர் உயிர் பிரிந்தது. சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலைக்கழக வளாக வீட்டில் ஜேப்பியார் வசித்து வந்தார்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எஸ். ரவிச்சந்திரன்
https://s31.postimg.org/z5lozbw9n/IM...619_WA0004.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
இனிய நண்பருக்கு
நீண்ட நாளைக்குப்பிறகு தங்களை மையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இனிய நண்பர்கள் திரு எஸ்வி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் பெங்களுரு திரு குமார் சார் அவர்களுக்கும் திரு அக்பர் அவர்களுக்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன இந்த திரியின் நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள் !
வேறு கம்பெனி மாறியதால் அலுவல் வேலைகள் சற்று அளவிற்கு அதிகமாக உள்ளதால் முன்பு போல திரியை விஜயம் செய்யவோ தங்களுடன் உரையாடவோ முடியவில்லை. அனைவரும் அனைவரின் குடும்பத்துடன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.
திரு அக்பர், திரு யுகேஷ்பாபு பதிவுகள் பார்த்தேன். ரசித்தேன். அதில் தங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகத்தை விரைவில் தெளிவுபடுத்தும் பதில் அளிக்கிறேன்.
இன்று மணநாள் காணும் இந்த திரியின் மற்றும் மக்கள் திலகம் அவர்களுடைய பழம் பெரும் பழுத்த அனுபவசாலி, மக்கள் திலகம் அவர்களுடைய ஆத்மார்த்தமான முரட்டு பக்தர் அனைவரும் கூறும் பழகுவதற்கு இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை வாழ்த்த வயது பத்தாது ஆகையால் வணங்குகிறேன். தங்களுடைய சதாபிஷேகத்திர்க்கும் நான் வாழ்த்து சொல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Thankyou
rks
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தில் பாடல் காட்சி அமைத்துள்ள செயலைக் கண்டித்து மக்கள் திலகத்தின் அபிமானியும் மூத்த பத்திரிகையாளருமான அன்பு நண்பர் திரு மேஜர் தாசன் அவர்கள் தமது சினிமா பொக்கிஷம்.காம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.
“எனக்கு இன்னொரு பேர் இருக்கு”படத்தைப்பற்றி விமர்சனம் எழுத மனம் வரவில்லை.அதற்கு பதில் கோபம் தான் வந்தது..”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி வாகை சூடிய “நினைத்ததை முடிப்பவன்”படத்தில் இடம் பெற்ற “கண்ணை நம்பாதே …உன்னை ஏமாற்றும்…”என்ற அற்புதமான பாட்டை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாய் மாற்றி கிண்டல் செய்து பாடல் காட்சியை எடுத்திருப்பது அயோக்கியத்தனமாகும்.இதன் மூலம் நூற்றாண்டு விழா காணவிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களையே அவமானப்படுத்தி விட்டீர்கள்.மரியாதையாக அந்த பாடல் காட்சியை நீக்கி விடுங்கள்..இல்லையேல் எம்.ஜி.ஆர்.ரசிகர்களை ஒன்று திரட்டி “சினிமா பொக்கிஷம்.டாட் காம்.”சார்பில் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-ஹீரோ ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்களின் வீட்டின் முன் போராடுவோம்….போராடுவோம். .போராடுவோம்……
https://s32.postimg.org/5cutewd6t/Ni...tippavan_3.jpg
அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு -
தங்களின் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன். தாங்கள் என் மீது கொண்டிருக்கும் அளவற்ற மதிப்புக்கும், பாசத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி !
தாங்கள் சேர்ந்திருக்கும் புதிய அலுவலகப்பணியில், சிறப்புக்கள் பல பெற்று, பதவி உயர்வுகள் பல காண, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். !