-
10.2.1985
மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் இன்று .
10.2.1985 அன்று மக்கள் திலகம் மட்டும் முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .
ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் - ஏற்கனவே மந்திரி யாக இருந்தவர்கள் - பதவிகளை எதிர் பார்த்து இருப்பவர்கள -மற்ற கட்சி தலைவர்கள் - அரசியல் விமர்சகர்கள் - ஊடகங்கள் -பொது மக்கள் எல்லோரும்
வியக்கும்படி மக்கள் திலகம் நடத்திய அரசியல் தான் காரணம் .
எம்ஜிஆரால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது .உடல்நிலை ஒத்துழைக்காது .நிர்வாக திறமை .அரசியல்
ஆளுமை .இவை எல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் திலகம் கொடுத்த பதில் - தான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் - உடலில் வலுவும் மனதில் தைரியமும் உள்ள முதல்வர் என்பதை நிரூபிக்க ஒரு வாரம் மந்திரிகளின்
பட்டியலை காக்க வைத்து பின்னர் அவரது மந்திரிசபையினை விரிவு படுத்தியதன் மூலம் எல்லோருக்கும்
எம்ஜிஆர் - யார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது .
கட்சியையும் ஆட்சியும் தக்க வைத்து பிரமிக்க வைத்தவர் எம்ஜிஆர் ..
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 1988க்கு பிறகு மீண்டும் ஒரு மாபெரும் சோதனைக்கு உட்பட்டுள்ளது . அதிகார மோகம் , குடும்ப அரசியல் என்று தீய சக்திகள் ஊடுருவி உள்ளது மிகவும் வருத்தமான செய்தி .விரைவில் நல்ல தீர்ப்பு கிடைத்து குடும்ப ஆட்சி ஒழிந்து , உண்மையான மக்கள் இயக்கமாக மீண்டும் மலரும் என்று நம்பிக்கையடன் பொறுத்திருப்போம் .
-
இந்து நாளிதழ் வெளியிட்ட எம்ஜிஆர் -100 புத்தகம் இரண்டாம் பதிப்பு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது . முதல் பதிப்பில் சாதனை புரிந்த எம்ஜிஆர் -100 விரைவில் மீண்டும் இன்னொரு சாதனையை படைக்க உள்ளது .
-
மக்கள் திலகத்தின் திரையுலக உச்சத்தையும் , பிரமிக்க வைத்த அரசியல் வெற்றிகள் பற்றியும் ''இந்து '' நாளிதழ் ஆசிரியர் திரு அசோகன் அவர்கள் எம்ஜிஆர் -100 புத்தக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நன்றி திரு அசோகன் .
http://i1273.photobucket.com/albums/...psr12rctri.jpg
-
http://i1077.photobucket.com/albums/...psosubv0z0.jpg
இன்று (10/02/2017) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு , "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
-
-
-
இன்று (10/02/2017) முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psvx1scfj3.jpg
-
இன்று (10/02/2017) முதல் மதுரை வண்டியூர் பழனிமுருகனில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...pspim2lyro.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
-