-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
திருடன்
[10.10.1969 - 10.10.2011] : 43வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 12.10.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC4912-1.jpg
குறிப்பு:
1. தென்னகமெங்கும் 10.10.1969 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் ஒரு வாரம் கழித்து 17.10.1969 வெள்ளியன்று வெளியானது.
2. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய "திருடன்", அயல்நாடான இலங்கையின் கொழும்பு நகரின் 'சென்ட்ரல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி கண்டது. இந்த விளம்பரங்கள் கிடைத்ததும் இங்கே பதிவாகும்.
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் Mr.NOV,
நமது நடிகர் திலகத்தின் 84வது ஜெயந்தியை முன்னிட்டு மலேசியாவில் நடைபெறும் 'சிவாஜி விருது விழா' சீருடனும், சிறப்புடனும் இனிதே நடைபெற இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் அதிதீவிர பக்தர் அருமைச்சகோதரர் எம்.எல்.கான் அவர்களுடைய அயராத முயற்சியின் பலனாக வீறுகொண்டு வலம்வர உள்ள சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" பெரும்வெற்றி பெறப்போவது திண்ணம். வெளியிடும் திரு.கான் அவர்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
இந்த மறுவெளியீட்டிற்காக திரு.கான் அவர்கள் அளித்துள்ள இந்த "தங்கப்பதக்கம்" போஸ்டர் டிசைன் மிகமிக அருமை !
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாபு
[18.10.1971 - 18.10.2011] : 41வது ஜெயந்தி
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 10.10.1971
http://i1110.photobucket.com/albums/...GEDC4918-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(திருச்சி) : 25.1.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC4914-1.jpg
திருச்சி 'பிரபாத்' திரையரங்கில் 100வது நாள் : தினத்தந்தி(திருச்சி) : 24.1.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC4915-1.jpg
குறிப்பு:
தமிழகத்தில் சூப்பர்டூப்பர்ஹிட்டான "பாபு", சிலோனிலும் கலக்கியது. கொழும்பு 'ஜெயின்ஸ்தான்' திரையரங்கில் 112 நாட்களும், யாழ்ப்பாணம் 'ராஜா' திரையரங்கில் 105 நாட்களும் ஓடியது.
அன்புடன்,
பம்மலார்.
-
wITH BEST WISHES FOR A GRAND OPENING OF thanga pathakkam AND MY PERSONAL CONGATS TO MR KHAN FOR THIS EFFORTS. all the very best again.
THIRUDAN adv cuttings very good. as uuual pammalar deserves kudos. we have never imagined all these things will happen even after our GODs days. that way our friends are doing very good job to NADIGAR THILAGAM and we are able to live in HIS thoughts.
great
RAMAJAYAM
-
டியர் Mr.NOV சார்,
நடிகர் திலகத்தின் 84வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவில் நடைபெறும் 'சிவாஜி விருது' வழங்கும் விழா சரித்திரம் படைக்கும் புகழ் பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்.
-
டியர் Mr.sankara1970 சார்,
திரியில் தங்கள் பங்குகள் மட்டுமென்ன சாதாரணமானவையா? உங்கள் தன்னடக்கமே தங்களை உயர்ந்த மனிதரின் உயர்ந்த ரசிகர் என நிரூபிக்கிறதே! உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்,
'திருடன்' தினமணி முதல் வெளியீட்டு விளம்பரம் வெளியிட்டு மனதைத் திருடி விட்டீர்கள். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் 'திருடன்' கண்மண் தெரியாமல் ஓடி வெற்றிகளைக் குவித்த விவரங்களை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி.
'பாபு' தினமணி முதல் வெளியீட்டு விளம்பரம் நிஜமாகவே அபூர்வ பொக்கிஷம். பாபு படத்தைப் பற்றி அந்த விளம்பரத்தில் வந்துள்ள அந்த மூன்று முன்னோட்ட வரிகள் டாப்போ டாப். அதுபோல நூறாவது நாள் விளம்பரங்களும் அருமை! அளித்தமைக்கு அன்பான நன்றிகளும்,பாராட்டுக்களும்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
'தங்கப் பதக்கம்' சௌத்ரி மறுபடியும் வெற்றிநடை போடப் போவது நிச்சயம். படத்தை வெளியிடும் அருமை நண்பர் திரு எம்.எல்.கான் அவர்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். தங்கப் பதக்கம் போஸ்டர் டிசைன் அருமை.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பைலட் பிரேம்நாத்
[30.10.1978 - 30.10.2011] : 34வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 19.11.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC4887-1.jpg
அன்புடன்,
பம்மலார்.