ஸ்டைல் சக்கரவர்த்தியின் அவன் தான் மனிதன் படத்தைக் காண விருக்கும் நெல்லை ரசிகர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தகவலைத் தந்த ராம ஜெயம், முத்துக் குமார், மற்றும் பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்
Printable View
ஸ்டைல் சக்கரவர்த்தியின் அவன் தான் மனிதன் படத்தைக் காண விருக்கும் நெல்லை ரசிகர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தகவலைத் தந்த ராம ஜெயம், முத்துக் குமார், மற்றும் பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்
அன்புள்ள திரு ராகவேந்தர் அவர்களே,
தாங்களும், பம்மலாரும் இந்தத் திரியின் வேகத்தையும் சிறப்பையும் சிகரத்திற்கே இட்டுச் சென்று விட்டீர்கள்.
எழுபதுகளின் இறுதியில், பொம்மை இதழில், காலஞ்சென்ற a.s.a. சாமி அவர்கள் அவருடைய படங்கள் பற்றி நீண்ட கட்டுரையை தொடராக எழுதி வந்த போது, "துளி விஷம்" படம் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். சிவாஜி கணேசன் அவர்களின் அனல் பறக்கும் வசன நடிப்புக்குப் பெயர் போன படம். இந்தப் படத்தில், தர்பாரில், அவருக்கும் கே.ஆர். ராமசாமி அவர்களுக்கும் இடையே நடக்கும் வசனப்போர் ஒன்று இடம் பெறும். அந்தக் காட்சி அவ்வளவு அற்புதமாக இருக்கும். நடிகர் திலகம் மற்றும் ராமசாமி அவர்களும் நடத்திய வசனப்போர், மயிர்க்கூச்செரியும்படி அமைந்து, ரசிகர்கள் அந்தக் காட்சியில் தங்களை மறந்து, அதற்கு முன் நடந்த கதையை மறந்து, அதற்குப்பின் நடக்கும் கதையில், மனதை செலுத்தமுடியாமல் போனது. அதனாலேயே, அந்தப் படம் பெரிய வெற்றியை அடைய முடியாமல் போனது என்று எழுதியிருந்தார். என் தந்தையும் இந்தப் படத்தைப் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்லுவார். (அவர் mgr ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.).
நினைவு கூர வைத்ததற்கு நன்றி.
1954 - நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில், மிக மிக முக்கியமான வருடம். இந்த வருடத்தில் தான் அவர் எத்தனை அற்புதமான படங்களில், வித்தியாசமான வேடங்களில் அற்புதமாக நடித்தார்! மனோகரா, இல்லற ஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, துளி விஷம், கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி மற்றும் எதிர்பாராதது. அனைவரும் எதிர்பார்த்தது போல், அவரே அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றார். எல்லோரும் அவர் "மனோகரா" படத்திற்குத் தான் விருது வாங்குவார் என்று நினைத்த போது, மிகச் சரியாக, விருதுக் கமிட்டியினர், "தூக்குத் தூக்கி" படத்திற்குக் கொடுத்தனர். அதில்தான், அவருடைய நடிப்பு அனைத்து அம்சங்களிலும் அற்புதமாகப் பரிமளிக்க வழி வகுத்ததால்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி. 'யாம் பெற்ற இன்பம்' என்று தன்னடக்கத்தோடு ஒரே வரியில் நீங்கள் முடித்துக்கொண்டாலும் உங்கள் சேவை மகத்தானது.
ஒருபடம் 100 நாட்களைக்கடந்து ஓடியது என்பதற்கு செய்தித்தாள் விளமபரங்களைப்போல் ஆதாரங்கள் வேறில்லை.
முன்பு நமது முரளி சீனிவாஸ் அவர்கள் நடிகர்திலகத்தின் சாதனைகளைத் தொடராக எழுதியபோது, 'சும்மா இஷ்ட்டத்துக்கு அளக்கிறீர்களே இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா' என்று சிலர் கேள்வியெழுப்பினார்கள். அந்த கேலிகளை முறியடிக்கத்தான் இப்போது திகட்ட திகட்ட ஆதாரங்களை வழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இம்மாதம் (ஜூலை) 3-ம் தேதி துவங்கி, இதுவரை எத்தனை படங்களின் '100-வது நாள்' விளம்பரங்கள், அவை ஓடிய தியேட்டர் பெயர்களுடன் அணிவகுத்து வந்து விட்டன....
சவாலே சமாளி
தெய்வ மகன்
சிவந்த மண்
எங்கள் தங்க ராஜா
கை கொடுத்த தெய்வம்
கௌரவம்
அந்தமான் காதலி
தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல் (வெள்ளி விழா)
இவற்றோடு கூடவே அன்பு, துளிவிஷம், குழந்தைகள் கண்ட குடியரசு, தேனும் பாலும், திருவருட்செல்வர், தர்மம் எங்கே போன்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள். ரொம்ப ரொம்ப அற்புதம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி.
இங்கும் அதே நிலைதான். நானும் லோயர் மிடில் கிளாஸ்லிருந்து வந்தவன்தான். அப்போதெல்லாம் தினமும் தினத்தந்தி, தினகரன் செய்தித்தாள்களை கார்ப்பரேஷன் லைப்ரரியில்தான் படிக்க முடியும். பேசும் படம், பொம்மை, பிலிமாலயா பத்திரிகைகளை உடனுக்குடன் சுடச்சுட படிக்க முடியாது. மாநகராட்சி நூலகங்களில் அவற்றை வாங்க மாட்டார்கள். யாராவது பணக்கார மாணவர்கள் கொண்டுவந்தால் ஓசியில் படிப்பதுதான். சொந்தமாக வாங்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்கள் கழித்து பழைய பேப்பர் கடைகளுக்கு வரும்போதுதான் வாங்கிப்படிக்க முடியும். ஒரிஜினலாக 90 பைசா விலையுள்ள 'பொம்மை' அங்கு 25 பைசாவுக்குக் கிடைக்கும்.
இதற்காக நான் தொடர்ந்து சென்னை த்ம்புச்செட்டித்தெரு, பவளக்காரத்தெரு சந்திப்பிலுள்ள பழைய பேப்பர் கடையில்தான் வாங்குவது வழக்கம். நான் தொடர்ந்து பேசும் படம், பொம்மை இதழ்களையே வாங்குவதைக்கண்ட கடைக்காரர் திரு ராமசாமி, இம்மாதிரி புத்தகங்கள் வரும்போது அவற்றை வெளியில் தொங்க விடாமல் எனக்காக தனியே எடுத்து வைத்து விடுவார்.
படம் பார்க்கச்செல்லும்போதும் அப்படித்தான். கிரௌன் தியேட்டரில் 1.25 டிக்கட் ஃபுல் ஆகிவிட்டால், அதற்கடுத்த 1.66 கட்டணத்தில் போக காசு பத்தாது. திரும்பி வந்து விட்டு, அடுத்த காட்சி அல்லது அடுத்த நாள் மீண்டும் 1.25 கியூவில் போய் நிற்பது வழக்கம். ஆனால் எப்படியேனும் நடிகர்திலகத்தின் படம் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவது வழக்கம். நான் நன்றாகப்படித்து நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணியதற்கும் மறைமுகமாக நடிகர்திலகம் காரணம் எனலாம்.
அதாவது நான் நிறைய சினிமா பார்ப்பதை வீட்டில் பெற்றோர் கண்டிக்காமல், தடுக்காமல் இருக்க வேண்டுமானால் படிப்பில் நல்லமாதிரியாக இருக்க வேண்டும். மார்க் ஷீட்டில் நல்ல மார்க்குகளைப் பார்த்து விட்டால் மற்ற குறைகள் பெரிதாகத் தோன்றாது என்று கணக்குப்போட்டேன். அதுபோலவே நடந்தது. நன்றாகப்படித்து தொடர்ந்து முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்துகொண்டிருந்ததால், 'சினிமா பார்த்தாலும் பையன் படிப்பில் சோடை போகலை. அதான் நல்ல மார்க் எடுக்கிறான்ல அதுபோதும், மற்றபடி எப்படியும் போகட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.
பின்னர் கையில் ஓரளவு காசு புழங்கத் துவங்கியபிறகுதான், பஸ் ஏறி மவுண்ட் ரோடு வந்து ரசிகர்களின் தாய் வீடான 'சாந்தி ஜோதி'யில் சங்கமமாகத்துவங்கினேன். பின்னர் நடந்தவற்றை அவ்வப்போது இங்கே சொல்லியிருக்கிறேன். இனிமேலும் சொல்லிக்கொண்டிருப்பேன்.
சுவாமி/ராகவேந்தர் சார்,
ஒரு யாத்ரா மொழி 1997 ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானதாக நினைவு. ஒரு யாத்ரா மொழி திரைப்படத்தை பொறுத்தவரை முதலில் வேறு கதையை படமாக்குவதாக இருந்தது. 1995-ல் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்க, தந்தை கதாபாத்திரம் ஒரு நோயினால் தாக்கப்பட, அது குணமாக கூடிய வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் தந்தை மிகுந்த உடல் வேதனையை அனுபவிக்க, கருணை கொலை என்ற தீர்வு மகன் முன்னால் வைக்கப்பட, தந்தை மீது உயிரையே வைத்திருக்க கூடிய மகன் அனுபவிக்க கூடிய மன வேதனையை மையமாக கொண்ட படமாக உருவாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஹெவி சப்ஜெக்ட்-ஐ ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் அந்த கதை ட்ராப் செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக பிரியதர்சன் எழுதிய இந்த கதை தேர்வு செய்யப்பட்டு அதை பிரதாப் போத்தன் இயக்கினார். 1996 ஜனவரியில் பொள்ளாச்சி பகுதியில் வைத்து படப்பிடிப்பு தொடங்கிய இந்த படம் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன் அவர்கள் [இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். contractor ஆக வரும் நடிகர் திலகத்திடம் தனது ஆட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என தகராறு செய்து அடி வாங்கி கொண்டு போகும் யூனியன் தலைவராக வருவார்] சற்று பொருளாதார சிரம தசையில் இருந்ததால் படப்பிடிப்பு இடை இடையில் நின்று போய் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. உடல் நலம் ஒத்துழைக்காத அந்த காலக் கட்டத்திலும் கூட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று தகவல் சொல்லியவுடன் உடனே வந்து நடிகர் திலகம் நடித்துக் கொடுத்ததை இப்போதும் மேனனும் லாலும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். [மாப்பிளை, நீங்க பிஸி ஆர்டிஸ்ட். உங்களுக்கு கால்ஷீட் கிளாஷ் வந்துடக் கூடாது. நான் கரெக்டாக வந்திர்றேன் என்று லாலிடம் சொல்வாரம் நடிகர் திலகம்].
இன்னொரு குறிப்பிட்ட தக்க விஷயம் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் நடிகர் திலகன் அவர்கள். தன்மானத்தை பெரிதாக மதிக்கும் திலகன், நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதற்காக ஒரே ஒரே காட்சி என்ற போதிலும் தானே வலிய சென்று தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடித்ததை இப்போதும் பெருமையுடன் சொல்வார். அது போன்றே நெடுமுடி வேணு அவர்களும் இந்த படத்தில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்ததை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.
இனி மீண்டும் ரிலீஸ் தேதிக்கு வருவோம். [அப்போது நான் கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்] அந்த வருடம் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் வந்ததாக நினைவு. அந்த நேரத்தில் மோகன்லாலின் மற்றொரு படமான சந்திரலேகா வெளியாவதாக இருந்தது. மம்மூட்டி நடித்த களியூஞ்சால் [விளையாட்டு ஊஞ்சல் என்று தமிழில் மேலோட்டமாக சொல்லலாம்] மற்றும் ஜெயராம், சுரேஷ் கோபி போன்றவர்களின் படங்களும் வெளியாவதாக இருந்ததால் திரை அரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே திரையிடப்பட்டது இந்தப் படம். விளம்பரமின்றி, பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் மலையாள திரைப்பட உலகம் சார்பில் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு ஒரு பெரிய பாராட்டு விழா அதே ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி [24-08-1997] அன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் நடைபெற்றது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து சிறப்பித்த விழா அது.[தமிழ் திரையுலகமோ அன்றைய தமிழக அரசோ செய்ய தவறியதை அவர்கள் அழகாய் செய்தார்கள்].
அன்புடன்
Message Deleted
டியர் ராகவேந்திரன் சார், மனமார்ந்த நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கும் பதிவிற்கும் நன்றி !
டியர் mr_karthik, நெஞ்சார்ந்த நன்றி !
டியர் முரளி சார், விளக்கமான பதிவிற்கும் அதில் பின்னிப் பிணைந்துள்ள அபூர்வ தகவல்களுக்கும் கனிவான நன்றி !
Dear goldstar Satish, Nellai Alapparai will arrive shortly in our thread.
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"
[31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்
லீலா வினோதங்கள் விரிந்து நிறைகின்றன...
வெண்திரை : ஜூன் 1965 : அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4237a.jpg
[தனது தொடக்க இதழான 'ஜூன் 1965' இதழின் அட்டையில், "திருவிளையாடல்" திரைக்காவியத்தினுடைய புகைப்படத்தை வெளியிட்டு முதல் இதழிலேயே பெருமை தேடிக் கொண்டது 'வெண்திரை' சினிமா மாத இதழ்]
இதே இதழின் உள்ளே பிரசுரமான காவியக்காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4241a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4242a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4243a.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
முப்பெரும் ஜோதி
திருமயிலையில் திவ்யமான 'இல்லற' ஜோதி
இன்று 31.7.2011 ஞாயிறு மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, நான் பயின்ற பள்ளிக்கூடமான, பெண்ணத்தூர் சுப்ரமண்யம் உயர்நிலைப்பள்ளியின் [P.S. HIGHER SECONDARY SCHOOL], விவேகானந்தா ஹாலில் உள்ள மினி திரையரங்கில் [நான் படிக்கும் போது இந்த இடம் வகுப்பறைகளாக இருந்தது], "VINTAGE HERITAGE" அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட கலையுலக ஜோதியின் "இல்லற ஜோதி" காவியத்தைப் பார்த்தது மெய்சிலிர்க்கும் அனுபவம். அதுவும் நமது மேன்மைமிகு திரித்திலகங்கள் ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார் ஆகியோரோடு பார்த்ததில் அளவிலா மகிழ்ச்சி. இந்த வெளியீடு குறித்து பட விவரங்களுடன் ஏற்கனவே நமது திரியில் தகவல் அளித்த ராகவேந்திரன் சாருக்கு முதற்கண் நன்றி. 1990லிருந்து இருபது ஆண்டுகளாக பம்மலில் வசித்தாலும், 1980களில் மயிலாப்பூரில் இருந்ததை மறக்கவே முடியாது. அனைத்தும் திரும்பவும் பெற முடியாத பள்ளி நாட்கள் ஆயிற்றே ! பள்ளியினுள்ளே நுழைந்ததுமே ஒரு முப்பது வயது குறைந்ததாக நினைந்தேன். 1982 ஜூனிலிருந்து 1989 ஏப்ரல் வரை [ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை], பள்ளியில் பயின்ற நாட்களெல்லாம் நினைவுத் திரையில் விஸ்வருபமெடுத்தன. பள்ளிக்கு எதிர்முனையில் உள்ள ஒரு சந்துத்தெருவில் வியாழக்கிழமைதோறும் கபாலி, காமதேனு அரங்குகளில் வெள்ளி முதல் என்ன படம் என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அதனை ஒவ்வொரு வியாழன் மாலையும் பள்ளி முடிந்ததும் பார்த்து விட்டு அந்த வாரம் நடிகர் திலகத்தின் படம் என்றால், ஞாயிறு மேட்னி நிச்சயம், எனது மாமாவுடனோ / எனது அன்னை மற்றும் அன்னையாரின் குடும்பத்தினருடனோ பார்த்து விடுவேன். அன்று மாலைவேறு சென்னைத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் படம் இருந்தால் எனக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் எனது படிக்கும் அட்டவணையையும் சரி செய்து கொள்வேன். [mr_karthikகைப் போல் அடியேனும் படிப்பில் சுட்டி என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்]. இப்படிப் பற்பல நினைவலைகளில் நீந்திக் கொண்டே இருந்தேன் "இல்லற ஜோதி" படம் தொடங்கும் வரை. இனி இக்காவியத்திற்கு வருவோம்:
"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!]. ராகப்பிரவாகம் திரு.சுந்தர் அவர்களின் தமிழ்ப்பிரவாகமான முன்னறிவிப்போடு திரைக்காவியம் பெரிய திரையில் உன்னதமாக ஓடத் தொடங்கியது. முதல் படத்திலேயே முந்நூறு படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியவர், 11வது படத்தில் ஓராயிரம் படங்களில் நடித்திருந்த நடிப்பு முதிர்ச்சியைக் காண்பித்தார் என்று குறிப்பிட்டால் அது மிகையன்று. அவரது ஒவ்வொரு திரைக்காவியமுமே ஓராயிரம் திரைப்படங்களுக்குச் சமம் என்பது வேறு விஷயம். ஒரு படைப்பாளியாக [கவிஞன்-எழுத்தாளனாக] தனது பாத்திரத்தை செவ்வனே படைத்திருந்தார். அவரது அறிமுக சீனே அமர்க்களம். அவரது வீட்டு மாடி அறையில் அவர் குரல் மட்டும் கேட்கும். தனது படைப்பை தனிமையில் லயித்து உரக்க முழங்கிக் கொண்டிருப்பார். கீழே இருக்கும் அவரது பெற்றோர் [சிகேசரஸ்வதி-கேஏதங்கவேலு], மாடியில் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கிறதே என்றவர்களாய் படிகளில் ஏறிச் சென்று அறைக்க்தவைத் தட்ட, திறந்து அவர்களுக்கும், நமக்கும் ஒரு திவ்ய தரிசனம் அளிப்பார் பாருங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம். என்னே ஒரு Screen Presence ! படம் முழுவதும் நம்மவரின் காஸ்ட்யூம் கலக்கல். ஒரு படைப்பாளிக்கேற்ற ஒரு Pant, Full Hand Shirt மற்றும் அதன் மேல் Sweater போல் ஒரு Half Jacket. இந்தக் காஸ்ட்யூமில் தலைவர் Smart & Cute ! [எந்தக் காஸ்ட்யூமில்தான் அவர் நன்றாக இருக்க மாட்டார். எல்லாவற்றிலுமே அவர் சிறப்பாகத் தான் இருப்பார்]. மனைவியாக ஸ்ரீரஞ்சனியும், காதலியாக பத்மினியும் அமைய இருவருக்குமே தோற்றத்தில் பொருத்தமாக - Convincingஆக - இருப்பதே அவரது ஸ்பெஷாலிட்டி. NTயின் படைப்புத்திறனால் ஈர்க்கப்பட்ட பத்மினி அவரிடம் இதயத்தை பறிகொடுக்க, மணமான மனோகரும் [NT பாத்திரப் பெயர்] மனதை 'கப்'பென்று பப்பியிடம் மாற்றுகிறார்.
அனார்க்கலி-சலீம் ஓரங்க நாடகத்தின் தொடக்கமாக வரும் 'களங்கமில்லா காதலிலே' பாடல் இசையமுதம். ராகதேவன் ராமநாதன் அவர்களின் இசையில், ராஜா-ஜிக்கி குரல்களில், சிவாஜி-பத்மினி நடிப்பில், கண்ணதாசனின் வைர வரிகள் ஜொலிஜொலிக்கின்றன. NT & NP made for each other romantic pair என்பதனை இப்பாடல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. படம் முழுவதற்கும் கவியரசர் வசனம், இந்த ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் வசனம். [கௌவரத் தோற்றமேற்கின்ற NT, கதாநாயகனையே தூக்கி சாப்பிட்டுவிடுவது போல், கௌரவமாக வரும் கலைஞர் இப்படத்தில் கவியரசரை வசனப்பந்தயத்தில் Photo-Finishல் மிஞ்சுகிறார் ; மகேஷ் சார் கோபித்துக் கொள்ள வேண்டாம்]. படத்தின் இன்னொரு ஹைலைட் பாடல் பத்மினிக்காக பி.லீலாவின் குரலில் ஒலிக்கும் 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே'. ராமநாதன் ஸ்வரப்பிரவாகத்தில் விளையாட, லீலா அதற்கு குரல் கொடுத்து தூக்கிவிட, நாட்டியப் பேரொளியின் நடனமும், நடிகர் திலகத்தின் வாத்திய இசையும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது. இப்பாடலில் பத்மினி ஆட, கற்பனையாக அவருக்கு இருபுறமும் NTக்கள் அமர்ந்து, இடதுபுற NT வீணை வாசிப்பதாகவும், வலதுபுற NT வயலினில் வெளுத்துக் வாங்குவதாகவும் காண்போருக்கு செம Treat. படத்தின் கிளைமாக்ஸில், பத்மினியுடனான தனது காதலை அங்கீகரிக்கும் தியாகச்சுடராக தனதருமை மனைவி இருப்பதை உணர்ந்த மனோகர், தன் காதலைத் துறந்து, "இல்லற ஜோதி"யான ஸ்ரீரஞ்சனியுடன் இணைகிறார் என படம் திருப்திகரமாகவே நிறைகிறது. படத்தின் ஆங்காங்கே வரும் தங்கவேலு-சரஸ்வதி சரவெடிகள் சீரியஸான படத்தில் சிரிப்புக்கும் பஞ்சம் வைக்காமல் திகழ்கிறது. ராகதேவனின் BGM பிரமாதம். ஹார்மோனியத்தையும், வயலினையும் இழையோடச் செய்கிறார். நடிகர் அசோகன் நம்மவருடன் நடித்த முதல் படம் இது. பத்மினியின் முறைமாப்பிள்ளையாக அளவான பாத்திரத்தில் அளவோடு செய்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி படத்தின் Emotional touch என்றால் பத்மினி Romantic-cum-emotional brilliance. 'இரு மாதருடன் நம்மவர்' என்ற Themeல் பின்னாளில் வெளியான எத்தனையோ படங்களுக்கு இப்படம் முன்னோடி. மொத்தத்தில் சகோதரி சாரதாவிற்கு மிகவும் பிடித்த எடுப்பான, துடிப்பான, கனக்கச்சிதமான, ஸ்வீட்டான சிவாஜியின் திவ்யமான "இல்லற ஜோதி"யை, நான் பயின்ற பள்ளியில், நமது ஹப் நண்பர்கள் புடைசூழ பார்த்து மகிழ்ந்தது எனக்கு ஒரு LIFETIME RECHARGE !
திரையிட்ட "VINTAGE HERITAGE" அமைப்பிற்கு இதயபூர்வமான நன்றிகள் !
மகாலட்சுமியில் மகோன்னத 'மகர' ஜோதி
இன்று 31.7.2011 ஞாயிறு மாலை பெரம்பூர்-ஓட்டேரி பகுதி கிடுகிடுத்திருக்கிறது. பாரிஸ்டரின் வழக்காடு தொடங்குவதற்கு முன், 'மகாலட்சுமி' அரங்கம் இருக்கும் நெடுஞ்சாலை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பரவசப்படுத்தும் பதாகைகள் என்ன, வாலாக்களின் விண்ணதிரும் சப்தங்கள் என்ன, மாலை அலங்காரங்கள் என்ன, மஹாதீபாராதனை என்ன என அந்த ஏரியாவே அமர்க்களப்பட்டிருக்கிறது. சில மணித்துளிகள் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கூறவும் வேண்டுமோ! பின்னர் உள்ளேயும் உச்சக்கட்டக் கொண்டாட்டம் தான் ! சற்றேறக்குறைய அரங்கம் நிறைந்திருந்ததாகவும் எமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களுமே [ஜுலை 29,30,31], ஒவ்வொரு காட்சியும், நல்ல கூட்டத்தோடு நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மகோன்னத மகர ஜோதியை மகாலட்சுமியில் தரிசித்துக் கொண்டாடிய ரசிக மன்னர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.பி.கணேசன் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !
நெல்லைச்சீமையில் ஆட்கொள்ளும் 'அருட்'ஜோதி
'சென்ட்ரல்' அரங்கை ஒட்டிய சாலை இன்று [31.7.2011 : ஞாயிறு] மாலை, விளம்பரம் தேடா வள்ளல் ரவிக்குமாரின் திக்விஜயத்தால் திக்குமுக்காடியிருக்கிறது. அவ்வழியாக போவோர்-வருவோர் அனைவருக்கும் மற்றும் அரங்கில் இருந்தவர்களுக்கும் லட்டுகளும், பால் கோவா கேக்குகளும் அன்புள்ளங்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 வாலா முழங்க, கட்-அவுட்டுக்கு மலர் மாலை அலங்காரங்கள் நிரம்பி வழிய, மஹாதீபாராதனை மகத்தான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. காட்சியின் போதும் அதிக அளப்பரையாம். எல்லாப் பாடல் காட்சிகளுக்கும் கூரை கிழிந்திருக்கிறது. குறிப்பாக 'ஜெலிதா வனிதா' பாடல் காட்சியில் ஆரவாரம் உச்சாணிக் கொம்பைத் தொட்டிருக்கிறது. மாலைக் காட்சிக்கு கணிசமான அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்திருக்கிறது. ரவிக்குமாரின் அருட்ஜோதியில் ஆட்கொள்ளப்பட்டு அன்புள்ளங்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர் !
ஸ்வீட்டான இச்செய்திகளை வழங்கிய அன்புள்ளம் திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமாருக்கு நன்றி முத்தாரங்கள் !
பக்தியுடன்,
பம்மலார்.