தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக சித்தரித்திருந்த அற்புத நிழற்படம்.
http://i812.photobucket.com/albums/z...psc39d57e5.jpg
Printable View
தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக சித்தரித்திருந்த அற்புத நிழற்படம்.
http://i812.photobucket.com/albums/z...psc39d57e5.jpg
Nice photoes and info, vasudevan sir. சில மாதங்களுக்கு முன் என நினைக்கிறேன்..ஆனால் சென்ற வருடமா என நினைவிலில்லை.. பக்த துகாராம் என்ற திரைப்படம் தெலுங்கு டப்பிங் ஸீ தமிழ் டிவியில் சேனல் மாற்றும் போது பார்த்தேன்..அதில் ஸர்ப்ரைஸாக சிவாஜியாக வந்தவர் நடிகர் திலகம்..டப்பிங்க் அவர் குரலில்லை என நினைவு.. பின் அவருக்காகவே அந்தப் படத்தை முழுதாக (வெள்ளி மதியம்..நன்றாகக் கண் செருகும் நேரம்) ப் பார்த்தேன்..
On the sets of Chatrapati Sivaji. (Thanks 'The Hindu')
http://www.thehindu.com/multimedia/d...n2_807305g.jpg
On the sets of Chatrapati Sivaji. Second on Sivaji Ganesan's left is S.A. Kannan, the first being DD producer Narayanaswamy. Others are director Thanjaivanan, DD director Andiyappan and cinematographer Durai Rajendran. Photo: Special Arrangement
டியர் வாசுதேவன் சார்,
'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிம் பற்றிய தங்களுடைய புகைப்படங்களுடன் கூடிய அரிய தகவல்கள் மிகவும் சிறப்பு. மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் அளித்துள்ள தங்களுக்கு பாராட்டுக்கள்.
நான் மும்பை சென்றிருந்தபோது மராட்டிய மன்னன் சிவாஜி சிலையைப் பார்த்தேன். ஏறக்குறைய அது நம் நடிகர்திலகத்தின் வீரசிவாஜி வேடத்தோடு தாடி முதல் தாடை வரை கன கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவே தோன்றியது. அதுதான் - நடிக்கும் பாத்திரத்தில் மட்டுமல்ல, வடிக்கும் சிலையிலும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் நம் நடிகர்திலகத்தின் மகிமை.
Mr Vasu Sir,
Thanks for the rare information of Sivaji Teleserial. It shows your painstaking efforts
in sharing the details with all the hubbers. But we are all not fortunate enough to
watch that serial. Atleaset the photos you have shared must be preserved.
ஏதேது, "நான் விழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போலிருக்கே, சின்னக்கண்ணன்!!
எனக்கு கூட, "நான் முழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆசைதான்! ஆனால் t ராஜேந்தர், ராமராஜன் ஆகியோருக்கு தனி திரி இல்லையே!
Vasu Sir - excellent - it was not only rare collection but your unique efforts of posting the same for all of us ::):smokesmile:
நெஞ்சிருக்கும் வரை
இந்த பதிவு அருமையாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருக்கும் நமது திரியின் வேகத்தை தடை போடுவதற்காக அல்ல . நானும் எழுதலாமே “என் கண்ணோட்டத்தில் “ என்ற ஒரு பேராசை தான்.
இந்த படத்தை பற்றி பல மேதைகள் இந்த திரியில் விலாவரியாக எழுதயுள்ளனர் - என்ன புதியதாக எழுதிவிட முடியும் ? இந்த படம் அட்டகாசமான வெற்றியை அடைத்திருக்க வேண்டிய படம் . எல்லா விதத்திலும் பண்பாடான முறையில் எடுத்த படம் . பாடல்கள் தேனில் ஊறிய பலா சுளைகள் - வசனங்கள் நெய்யில் வறுத்து எடுத்த முந்தரிபருப்புகள் . நடிப்பு இனிமேல் யாருமே நடிக்கமுடியாத நடிப்பு
நட்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
தியாகத்தின் அளவுகோலை தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு பக்க காதலை தெய்வீக மாக்க வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
தவறு செய்தவர்களை மன்னிக்க தெரிய வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு ஏழையின் பசியை புரிந்துகொள்ள வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு நல்ல இதயம் எப்படி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமா - ரகுராமனை சந்தியுங்கள் - தசரத ராமனை சந்தித்தவர்கள் ரகு ராமனை யும் சந்திப்பது அவசியம்
தான் காதலித்தவளை பழிவாங்கும் ஹீரோக்களை பார்த்து இருக்கிறோம் ஆனால் அவளை அவள் விரும்பியவனையே மணக்க வைத்து அவர்கள் சந்தோஷத்தில் தன் இளமையை , வாழ்கையை கர்ணனாக தானம் செய்தவனை நாம் பார்த்ததுண்டா? - ரகுவை பாருங்கள்
பாசிடிவ் vibrations , தன்னம்பிக்கை ரகு விடம் தான் கத்துகொள்ளமுடியும்
நெஞ்சிருக்கும் வரை ரகுவை மறக்க முடியுமா இல்லை மறுக்க முடியுமா - எத்தனை படங்கள் வந்தாலும் இந்த ஒரு படம் வசீகரித்த அளவு பண்ண முடியுமா - ஒரு கர்ணன் தான் மஹா பாரதத்தில் - ஒரு ரகு தான் நெஞ்சிருக்கும் வரை
ஒரு கல்யாணத்தை ஒரே பாட்டில் ரகு பாட இன்னும் அந்த பாடல் தேனை பொழிகிறதே!!
“மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மனவரயில் காத்திருக்க
காதலால் மெல்ல கால் பார்த்து நடந்து வர
காலை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என்று ஆங்கோர்
குரல் பிறக்க கொட்டியது மேளம்
குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்”
ஒரு மனைவி எப்படி அன்பை தன் கணவரிடம் கட்டவேண்டும் என்று ராஜி யின் பாடல் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியுமா ?
காலம் வரும்.. என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்...
காத்திருப்பேன்.. என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்.
கருணை என்றால் தாயாவேன்.. கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
:smokesmile::)
Full movie - Vouch for acting , dialogues , songs and this is a testimony for how a good movie should be ! :smokesmile::-D
http://youtu.be/BWRv6d47Yl8
Ravi
:smokesmile::)
[QUOTE=Gopal,S.;1081034]இருக்கட்டுமே. இடைவிடாமல் படங்கள் ரிலீஸ் ஆகி ,அவருடைய படங்களே ஒன்றுக்கொன்று போட்டியிட்ட போதும் (அவருக்கு வேறு ஏது போட்டி?தனி காட்டு ராஜாதானே) ,அவர் success rate உலகத்தில் வேறு எந்த நடிகனும் கனவு கூட காண முடியாத ஒன்று.
100 Days Films List
[SIZE=3][B]Film Name /
Place Name(s)
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Dear Gopal Sir
Needhibathi - Trichy Cauvery A/C -77 days shifting wellington - 28 days
Sandhippu - Trichy Cauvery A/C -70 days shifting Roxy - 21 days
C.Ramachandran
[QUOTE=vasudevan31355;1081096]'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு பார்வை
Dear Vasudevan Sir
First of all Great Salute to you for this Valuable information about "Chatrapathi Sivaji" Telefilm which is new to not only me but also lot of sivaji fans
This is great POKKISHAM for all fans. Thanks and superb.
What a great achiever our sivaji is
C.Ramachandran
[QUOTE=g94127302;1081160]நெஞ்சிருக்கும் வரை
இந்த பதிவு அருமையாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருக்கும் நமது திரியின் வேகத்தை தடை போடுவதற்காக அல்ல . நானும் எழுதலாமே “என் கண்ணோட்டத்தில் “ என்ற ஒரு பேராசை தான்.
இந்த படத்தை பற்றி பல மேதைகள் இந்த திரியில் விலாவரியாக எழுதயுள்ளனர் - என்ன புதியதாக எழுதிவிட முடியும் ? இந்த படம் அட்டகாசமான வெற்றியை அடைத்திருக்க வேண்டிய படம் . எல்லா விதத்திலும் பண்பாடான முறையில் எடுத்த படம் . பாடல்கள் தேனில் ஊறிய பலா சுளைகள் - வசனங்கள் நெய்யில் வறுத்து எடுத்த முந்தரிபருப்புகள் . நடிப்பு இனிமேல் யாருமே நடிக்கமுடியாத நடிப்பு
Dear
What you are saying is correct. Two months back i have attended one marriage at mumbai, mattunga. On that day evening in NALANGU function around 15 persons sang this
POOMUDIPPAL SONG and everybody clapped for the song. Our great nadigar thilagam still lives in hearts of every body
C.Ramachandran.
வாசு சார்,
மிக அருமை. நடிகர் திலகம் சத்ரபதி சிவாஜியாக தோன்றி நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் அபூர்வமானவை. அதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி!
நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சத்ரபதி சிவாஜி கதையை அல்லது அந்த பாத்திரத்தை மொத்தம் நான்கு முறை நடித்திருக்கிறார். நான்கு முறை என்று நான் குறிப்பிடுவது நான்கு வெவ்வேறான திரைக்கதை அமைப்புகள் மற்றும் வசனகர்த்தாகளின் படைப்புகளில் அவர் பரிமளிதிருக்கிறார்.
முதலில் அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் நாடகத்தில் ஏற்று நடித்த சத்ரபதி சிவாஜி வேடம். 1946-ல் 18 வயதில் ஏற்று நடித்த அந்த வேடம்தான் பெரியாரால் சிவாஜி என்ற பட்டம் கொடுப்பதற்கே காரணமாக இருந்தது எனபது நம் அனைவருக்கும் தெரியும்.
இரண்டாம் முறை 1970 ஆகஸ்ட் 15 அன்று வெளியான ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தில் தோன்றி நடித்தது. இது சற்றென்று முடிவு செய்யப்பட்டு நடந்த விஷயம். அதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1970 ஜூலை 16-ந் தேதி அன்று கயத்தாறில் நடிகர் திலகத்தின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலையை சஞ்சீவ ரெட்டி தலைமையில் பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். அந்த விழாவில் ஆட்சியாளர்களை விமர்சித்து பேசினார் நடிகர் திலகம். அதை பொறுக்க மாட்டாமல் சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று அன்றைய முதல்வர் சொல்ல, அதன் காரணமாகவே கண்ணதாசன் முன்னாட்களில் எழுதியிருந்த சத்ரபதி சிவாஜி நாடகத்தை சிற் சில மாறுதல்களோடு படமாக்கி ராமன் எத்தனை ராமனடி படத்தில் சேர்த்தார்கள். இதை பற்றி முன்பு விரிவாக நானே நமது திரியில் எழுதியிருக்கிறேன்.
மூன்றாம் முறை நடிகர் திலாக்ம் சத்ரபதி சிவாஜியாக வேடம் பூண்ட போது சுந்தர தெலுங்கில் செப்பினார். ஆம், 1973-ம் ஆண்டு வெளியான பக்த துக்காராம் படத்திற்காக மராட்டிய மன்னனாக வேடம் தரித்தார். அந்த காட்சிகளை நீங்களும் இங்கே தரவேற்றியிருந்தீர்கள்.
நான்காம் முறைதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மும்பை தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எதற்காக தயாரிக்கப்பட்டது என்றால் சத்ரபதி சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொண்ட 300-வது ஆண்டு விழா மாராட்டிய மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. [சத்ரபதி முடி சூட்டிக் கொண்டது 1674-ம் வருடம் ஜூன் மாதம்]. ஆகவேதான் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பபட்டது. எனக்கு தெரிந்தவரை அன்றைய பம்பாயில் 1972 முதலே டிவி வந்துவிட்டது.
அது போல் நான் கேள்விப்பட்ட வரையில் இந்த நிகழ்ச்சி 1974 ஜூலை 21-ந் தேதிதான்[ஞாயிற்றுக்கிழமை] ஒளிபரப்பபட்டது என்று நினைக்கிறேன். சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இதே நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது. இன்னொரு பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்திருந்தும் அன்று தென்னிந்தியகளுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிகழ்ச்சியை வரவேற்றார் என்பதுதான்.
பழைய நிகழ்வுகளை நினைவு கூற வாய்ப்பளித்ததற்கு நன்றி வாசு!
அன்புடன்
நண்பரே!
ஏதோ நீங்கள் கேட்கிறர்களே என மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு சின்ன நடையை ஆரம்பித்தால் இரண்டு பதிவு தள்ளி நண்பர் முரளியின் பதிவு..
அம்புட்டுதேன்..இங்கே Walmart,Carrefour,7 eleven,Metro ,SPAR போன்ற giant chain storesகள் கடை விரித்து ஜாம் ஜாம் என வியாபாரம் நடத்திகொண்டிருக்க, இந்த அண்ணாச்சியின் பொட்டி கடை நடக்க முடியுமா??ஒரே ஓட்டம்தான்!
Nadigar Thilagam at the Agasthiyar Ashram, Nochur, Kerala.
http://nochuragasthyaashram.org/images/gallery/20.jpg
கவனியுங்கள், சச்சினை பற்றிய article .அதிலும் நமது நடிகர்திலகம்.
http://tamil.oneindia.in/news/sports...nt-185165.html
டியர் ரவி சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி! ரகுவைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். எனக்கும் மிகவும் பிடித்த படம். அதுவும் தன் காதல் தோற்றுப் போனதை எண்ணி வருத்தமுற்றிருக்கும் நேரத்தில் அதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாய் என்று நண்பன் கோபாலகிருஷ்ணன் கேட்க அதற்கு நடிகர் திலகம் வேதனையுடன் பதிலளிக்கும் காட்சி என்னை சிலிர்க்க வைத்த ஒன்று. அருமை. தொடருங்கள்.
நடிகர் திலகத்தின் நடை
*
3. மன்னனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி
*
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..
*
எல்லாரும் செளக்கியமா இருக்கேளோன்னோ.( என்னடா அம்பி..என்ன சொல்றே..இனிமே தான் மாறப் போறதுன்னா…படவா..சமர்த்தா ஒக்காரு..என்ன!)
*.
அதுல பாருங்கோ மொதல்ல ஒரு பாட்டுப் பாடலாமா..
*
மோகம் பெருமாள் மேலே கொண்ட மன்னனவன்
பாகப் பணத்தில் பக்தி வளர்த்த மன்னனவன்
வேகங் கொண்டே விரைவாய் நடந்த மன்னனவன்
தேகம் பதறித் தாளில் விழுந்த மன்னனவன்
*
தெரியுது.. யாராக்கும் இதுன்னு நீங்க யோசிக்கறேள்.. நானே சொல்றேன்..
*
ஒரு தளபதி..பேர் மறந்து போச்சு.. படக் படக்குன்னு வாளெடுத்து வெற்றிகரமாப் போர் பண்ணி சோழ மகாராஜா குலோத்துங்கனுக்குப் பல நாடுகள் ஜெயிச்சுத் தர்றான்.. சோழச் சக்கரவர்த்திக்கோ ஒரே குஷி..
*
ஓ மை பாய்.. நீ தான் என்னோட ஃபேவரிட்னு சொல்லி ஒரு குட்டி அரசை அவனுக்குக் கொடுத்துடறார்.. வேணாம் ராஜான்னு இந்தத் தளபதி மறுக்கறான். நோ நோ நோ..யூ ஷீட் நாட் டெல் லைக் தட்..அப்படின்னு ராஜா கம்பெல் பண்ணி சிற்றரசுக்கு மன்னனாக்கறார்..
*
பாருங்கோ.. ராஜ்யம் கிடச்சுடுத்து அந்தத் தளபதிக்கு..அது இன்பம்.. ஆனா வாழ்க்கைல இன்பத்தைத் தொடரும் துன்பம்னு பெரியவாள்ளாம் சொல்லியிருக்காளோல்லியோ..யெஸ்.. மகாராஜா அந்தத் தளபதி பேர் நீலன்னு நினைக்கறேன் அவனுக்கு ஒரு அழகான(?!) பொண்ணாப் பார்த்து கல்யாணமும் பண்ணி வச்சுடறார்..
*
ம்ம் கல்யாணம் ஆனாலே ஆண்களுக்கெல்லாம் கொஞ்சம் தடுமாற்றமாத் தான் இருக்கும்.. என்ன சொல்றீங்க.. அதுவும் புதுசா கிளி கொஞ்சறா மாதிரி ஆத்துக்காரி.. அவளைப் புரிஞ்சுக்கணும்.. அதுக்காக எந்த விதமான மெளண்டெய்னையும் எடுத்துத் தா ந்னு அவ கேட்டா அவன் முடிஞ்சா எடுத்துத் தந்துருவான்.. ஏன்..அவளோட குட் புக்ஸ்ல இடம் பிடிக்கணுமேன்னு..
*
ஸோ நீலன் கேட்டான்..ஸ்வீட் ஹார்ட்.. ஐயாம் வெரி ஹாப்பி..ஆனா இன்னும் என்னல்லாம் நான் செய்யலாம்..இது வெள்ளித் திரை.. நிறைய பேர் பாக்கறா.. அதனால சொல்ல முடிஞ்சத மட்டும் சொல்லுன்னான்.. சம்சாரம் கொஞ்சம் வெக்கத்தோட கக்னு சிரிச்சுட்டு
நீங்க என்ன பண்றேள்.. பெருமாளுக்கு உண்டானதப் பண்றேள்..அழகா ஒரு கோவில் கட்டினீங்கன்னா அந்தப் பெருமாள் ஒங்களுக்கு ஆல் குட்திங்க்ஸ் தருவாராக்கும்னா..
*
நீலன் யோசிச்சான்..சரின்னு பட்டதுனால பெருமாள் கோவில் திருப்பணிக்கு நிறைய செலவு பண்ண ஆரம்பிச்சான்..பணம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைய ஆரம்பிச்சது.. எதுவரைக்கும்.. மகாராஜாவுக்கு கப்பம் கட்டக் கூட முடியாமப் போய்டுத்து
*
மகாராஜா பார்த்தார்.. ஆர்டினரி மெய்ல், ரிஜிஸ்ட்ர் போஸ்ட், ஈமெய்ல்னு வசதி எதுவும் அந்தக்காலத்துல இல்லாததுனால ஆளனுப்பியும் கேட்டுப் பார்த்தார்..பதில் சரியா வரலைன்னவுடனே கொஞ்சூண்டு கண் சிவந்துச்சு.. ம்ம்.. சரி படையெடுப்போம்னு போய் அவனோட கோட்டையைச் சூழ்ந்துக்கிட்டார்..
*
நீலனுக்கா கோபம்.. ம்ம் நான் எதற்காகச் செலவு செய்கிறேன்..பெருமாள் திருப்பணிக்குத் தானே.. என கர்ஜித்துட்டுப் கம்பீரமா போருக்குப் போறான்..கோட்டை வாயில் கதவு திறக்குது..பட் அங்க அவனுக்கு ஸர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு
*
மகாராஜா மட்டும் புன்சிரித்து கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல நிக்கறார்.. வா.. நீலா..உன்னை வளர்த்து போர்த்தொழில் புரிய வைத்து ராஜ்யமும் கொடுத்த பெருந்தன்மையான என் நெஞ்சில் வந்து வாள் பாய்ச்சு.. என வாளை விட வார்த்தையால அவனைக் கொல்றார்..
*
அந்தக் கொஞ்ச தூரத்துலருந்து நீலன் நடக்கறார் பாருங்க ஒரு நடை..வாவ்…அப்படியே நடந்து மகாராஜா கிட்டக்க ப் போய்…டபக்குன்னு கம்பீரம் குலையாம மண்டியிட்டு வேந்தே ஸாரின்னு உருகறது இருக்கே.. ம்ம் ரொம்ப நல்லா இருக்குமாக்கும்..
*
ஸோ.. என்ன மொதல்ல இருந்த பாட்டு பொருத்தமா இருக்கா இல்லியா.. இது என்ன படம்னு தெரிஞ்சுருக்கும்.. திருமால் பெருமை..மன்னன் நீலனா நடிகர் திலகம் மகாராஜாவா எம்.என் நம்பியார்.. நீலன் வைஃபா… வேறுயார்.. செளகார் ஜானகிதான்..ம்ம்ம்.
*
முடிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.. ஹோன்னு சத்தம் போட்டுக்கிட்டு அலைகள் ஓயாம இருக்கற கடல் மாதிரி ந.தியின் நடிப்பு..அதை எத்தனை பேர் எத்தன விதமா ரசிச்சுப் பேசினாலும் எழுதினாலும் ந்ல்லாத் தான் இருக்கும்.. என்ன சொல்றேள்..
*
உருவாய் அருள்வாய் உளதா இலதா..
…
அருள்வாய் குகனே..
• டைட்டில் இந்தக் காலத்த நினைவு படுத்தினா என்னை ஷமிக்கணும்
**(வாசக தோஷ சந்தவ்யஹ)
இந்த போங்காட்டம் தானே வேணாங்கறது.. பெட்டிக் கடைல தான் சில சமாச்சாரங்கள்ளாம் கெடைக்குமாக்கும் (வேற எதையும் நினைச்சுக்காதீங்க).. தவிர பெட்டிக் கடைக் காரர்களுக்கெல்லாம் நல்ல ஞாபக சக்தி உண்டாக்கும்.. வால் மார்ட் கேரிஃபோர் லாம் ஸேல், கலக்*ஷன்ஸுன்னு பேசிக்கிட்டிருப்பாங்க. நமக்கு என்ன அண்ணாச்சி..நாம எஞ்சாய் பண்றோமா..மத்தவங்களைக் கொஞ்சம் புன்சிரிக்க வைக்கறோமா..அது போதும்..
சின்னக் கண்ணன் சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி!
நடந்து நடந்து நீலனின் நடை எழுதினீர்களோ! நடை சுவையோடு நகைச்சுவை சேர்ந்ததே. நன்று.
திருமங்கையாழ்வாருக்கு நீலன், பரகாலன், நாற்கவிச் சிங்கம் என்று நிறைய பெயர்கள் உண்டாம்.
சந்திர சேகரன் சார்,வாசுதேவன் சார், ராமச்சந்திரன் சார்,முரளி சார்,
'சத்ரபதி' பற்றிய தங்கள் பாராட்டிற்கு நன்றி!
கைபேசியில் பாராட்டிய வினோத் சார், ராகவேந்திரன் சார் ஆகியோருக்கும் நன்றி!
டியர் முரளி சார்,
'சத்ரபதி சிவாஜி' பற்றிய மேலதிக விவரங்கள் மிக சுவாரஸ்யம். இதற்குதான் எங்கள் முரளி சார் வேண்டுமென்பது. நன்றி சார்.
கோபால் சார்,
புது பெண்ணின் மனதை தொட்டு போனவரின் எண்ண ஓட்டத்தையும், உடல் மொழிகளையும் கூறு போட்டமைக்கு பாராட்டுக்கள். இதே பாணியில் தொடருங்கள்.
வினோத் சார்,
வெற்றி தீபத்தை இங்கே பிரகாசிக்கச் செய்தமைக்கு நன்றி!
ஜெய்ஷங்கர் சார்,
நடிகர் திலகம் பற்றிய அனிமேஷன் படத்தை இங்கே பதிவிட்டு அசத்தியதற்கு நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
எல்லாம் உனக்காக பற்றி பல தடவை எல்லாம் நாம் கைபேசியில் உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். உங்களுக்கு மிக மிக மிக பிடித்த காவியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த காட்சியை உங்கள் பதிவைப் படித்த பின் பார்க்கையில் அப்போதும் சரி இப்போதும் சரி இன்னும் மெருகேறிய காட்சியாக அது கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கிறது. அருமையான வீடியோவிற்கு நன்றி!
'யாரடா மனிதன் இங்கே என்று கேட்டவரைக் கூட்டி வந்து இங்கே காண்பித்த சகோதரி சரஸ்வதி லக்ஷ்மிக்கு நன்றி!
தூர் தர்ஷன் தொலைத்து விட்ட சிவாஜியை நீ தேடி துருவி தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் வாசு.
முரளி,எங்கள் தகவல் சுரங்கமே, அருமை.
சின்ன கண்ணா, என் வழி தனி வழி என்று தூள் கிளப்புகிறாய்.
டியர் ரவி சார்,நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் படி செய்து விட்டீர்கள்.
கோபால் ஸார்,
சிவாஜியின் காதல் தொடர் அருமையான துவக்கம். அதுவும் அவரின் துவக்கமான பராசக்தியிலிருந்தே என்பது (வாசுதேவன் சாரும் அவ்வாறே ஆடைகள் தொடரை துவங்கினார். சிறப்பாக சென்று கொண்டு உள்ளது.) உங்கள் தொடரும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுக்கள். உங்களின் அடுத்த் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இரு மலர்கள் ஸேர்த்து கொள்ளவும். அந்த நாள் படத்தின் பதிவை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
வாசுதேவன் ஸார்,
ஸத்ரபதி சிவாஜி - டெலி-பிலிம் கட்டுரை எல்லோரும் சொல்வது போல் அரிது ஆனதுதான். அபூர்வமான புகைப்படங்களும் தங்கள் கடின உழைப்பை பறை சாற்றுகின்றன. ஏற்கனவே இதைப்பற்றி சிறிது விவாதிததிருந்தாலும் சுவாரசியம் கூட்டி விரிவாக எழுதி நினைவில் நிறுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்.
ரவி ஸார்,
நெஞ்சிருக்கும் வரை - என் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருக்கும் திரைப்படம். இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் திலகம் கூட்டணியில் வந்த அருமையான படம். நன்றாகவே எழுதி உள்ளீர்கள். பாடற் காட்சிகளும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இப்படி சிறந்த படங்களை எடுத்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
நடை அழகைப்பற்றி எழுதி கலக்கி கொண்டிருக்கும் சின்னக்கண்ணன் ஸார்,
நீங்க இங்க மட்டுந்தான் இப்பிடி எழுதறீங்களா. இல்லை எல்லா இடங்களிலும் இப்படித்தானா? வித்தியாசமா ஒவ்வொரு நடை அழகையும் எழுதறது பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு. நெறைய இப்பிடி வித்தியாசமா எழுதுங்க வோய்!!!
வாசுதேவன் சார்,கோபால் சார், கல் நாயக் ஸார் நன்றி :)
கல் நாயக் ஸார்..எழுதினாப் போச்சு ஓய்.. என்ன கொஞ்சம் மூட் வரணும் ;)
சிவாஜியின் காதல்கள்- 2
அந்த நாளும் வந்திடாதா.......
பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)
இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.
உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.
ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.
கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதிர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.
மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.
அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.
நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*
24.07.72
ஷேமம்…
*
அன்புள்ள நீலாவிற்கு.,
நலம் நலமறிய ஆவல்.. எப்படி இருக்கிறாய்.. நேத்துத் தான் ஒண்ணா சினிமா பாத்தோம்..இன்னிக்கு என்ன இன்லேண்ட் லெட்டர் என நீ திகைப்பது தெரிகிறது..உனக்கு ஃபோன் செய்ய வேண்டுமென்றால் பக்கத்து மளிகைக் கடைக்குப் பண்ண வேண்டியதாய் இருக்கிறது..அவன் ம்ம் இருங்கன்னு சொல்லிட்டு யாரிடமோ க.ப 2 கிலோ உ.ப ரெண்டு கிலோ என கடைக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறான்..
*
அப்புறம் நீ ஆடி அசைந்து வந்து ஃபோன் எடுத்து குரலெழும்பாமல் வேறு பேசுகிறாய்..நாமென்ன லவ்வர்ஸா.. ஹஸ்பெண்ட் வைஃப் தானே..கொஞ்சம் சத்தமா ஃப்ரீயா பேசவேண்டியது தானே..ம்ம்.
*
ஒண்ணும் கேக்காம இருந்ததா.. அதான்.. ரொமான்ஸே மறந்து போகப் போகுதுன்னு வரச்சொன்னேன்..உங்கப்பாவை யாரு அண்ணா நகர்லாம் தாண்டி வீடு கட்டிவைக்கச் சொன்னார்.. நானிருக்கறது மதுரை டவுன்..உன்னை வந்து என்னோட பஜாஜ் சேட்டக்கில் கூட்டிச் செல்லலாம் என்றால் அதுக்கும் உன் கிட்ட ஆயிரத்தெட்டு வெக்கம். பஸ்ஸிலேயே வருகிறேன் என்று சொல்கிறாய்...அடி போடி இவளே..ம்ம் ஒரு மாசம் அதுவுமிந்த ஆடி மாசம் எப்படிப் போகப் போறதோ தெரியலை..
*
நேத்துப் பார்த்த படம் ஆண்டவன் கட்டளை எப்படி இருந்துச்சு..ஒருவார்த்தை சொல்லவே இல்லை..பழைய படம் கூட்டமே இருக்காதுன்னு பார்த்தா நல்ல கூட்டம்.. அப்பப்ப உன்னைப்பார்த்தாக் கூட சீரியஸா ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தாய்.. நல்ல படம் தான் இல்லையா..
*
அதுவும் சிவாஜி முதல் காட்சியில் வெகு மிடுக்காய் கோட் சூட் போட்டுக் கொண்டு விசுக் விசுக்கென நடக்கற நடை இருக்கே..அதுவும் ட்ராஃபிக் எல்லாம் ஸ்தம்பித்து குறுக்கே ஒரே விதமாய் நடந்து செல்வாரே வாவ்
*
இந்த தேவிகாப் பொண்ணு கூட கொஞ்சம் நல்லாருக்குல்ல.. ந\ன்னா ஜீரால ஊறின கொழு கொழு குலோப் ஜாமூன் மாதிரி ( நீ சாப்பிட்டிருக்கியோ..இல்லைன்னா ஆரியபவன் – இந்த மாசம் முடிஞ்சு வந்ததும் கூட்டிக்கிட்டுப் போறேன்)
*
அந்த தேவிகாப் பொண்ணு கிட்ட காதல் வலைல்ல விழுந்துட்டு ஆளே மாறிப்போக – முதல்ல காலேஜீக்கு வருவார் சிவாஜி..அந்த சீன் சூப்பர் இல்லை..ரொம்ப அழகிய யூத் நடை..
*
கலக்கலா டிரஸ் பண்ணிக்கிட்டு குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்னு வருவாரே வாவ் நன்னா இருக்குமில்லை..
*
அம்பிகாபதி மாண்டான் – என சந்திரபாபு சொல்ல சிவாஜி அது காதலின் தத்துவம்னு சொல்றச்சே உன்னோட கண்ணு கொஞ்சம் வெளிய வந்து அழகா இருந்துச்சு..கொஞ்ச வெளிச்சத்துல பார்த்தேன்..
*
குட்டியா டச்சிங் டச்சிங்க் கூட பண்ண விடமாட்டேங்கற..ம்ம் நேர்ல வா பார்த்துக்கறேன்
*
மொத்தத்துல படம் ஓகேதான்..ஆனா வீட்டுக்கு பஸ்ஸிலேயே போய்க்கிறேன்ன பாரு அதான் எனக்குப் பிடிக்கலை..பத்திரமாப் போய்ச் சேர்ந்தியா..முடிஞ்சா மளிகைக் கடைக் காரர் ஃபோன்ல எனக்கு பேங்க்குக்கு ஃபோன் பண்ணு..
*
சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..ஓ.கே..ஐ மிஸ் யூ டா..
*
உன் அன்புள்ள
மாதவன்..
25.07.72
அன்புள்ள இவருக்கு.,
யோவ்.. என்ன ஒரு துணிச்சல் இருந்துச்சுன்னா தேவிகாவை குலோப் ஜாமூன்லாம் சொல்லுவ.. அதுவும் என் கிட்டயே....இன்னும் இருபது நாள் தான்..நேர்ல ஒங்களை வெச்சுக்கறேன்..அடுத்த வாரம் படத்துக்குக் கூப்பிட்டீங்கன்னா வரமாட்டேன்..
அன்புடன் – நற நற – I didn’t miss you..daa..
நீலா மாதவன்..
*
//அந்த நாளும் வந்திடாதா.......// நல்ல ரைட் அப்.. நன்றாக இருக்கிறது.கோபால் சார்... நடத்துங்க நடத்துங்க.. அந்த நாள் நான் அந்த நாளில் பார்த்தது.. மறுபடி பார்த்து ரெஃப்ரஷ் செய்து கொள்ள் வேண்டும்..