-
Quote:
Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
படம் எப்படியோ போகட்டும். காலா காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல பாடல்கள் கிடைத்ததே. அது மட்டும் பூரண சந்தோஷம்.
yes vasu sir
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே நீ விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
நீல கருவிழிகள் நீண்ட கதை பேசிட
கோல கொடி மலர் இது பருவ மனம் வீச
மாய கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடை அழகினை இரண்டு கரம் ஏந்த
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
இரவு பகல் தொடரவேண்டும் இந்த உறவு
-
Quote:
Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்
போஸ்ட் போட்டு முடிக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து. எத்தனை முறை லாகின் பண்றது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருக்கு. இதுக்கு விமோசனமே இல்லையா? கோபால் கூட நேத்து நொந்து போய் போன் பண்ணாரு.
இதே பிரச்சனை தான் இங்கேயும்
சாவரேன் சார்
-
Quote:
Originally Posted by
chinnakkannan
க.ப பிரம்மச்சாரி பேச்சு வந்ததனால் கூடவேஒரு பாட்டும் நினைவு..ஆனால் பாடல் வரியில் - இது 1954ங்க எனபத்மினி சொல்வது போல்..என்னவாக்கும்பாட்டு..(ஓஹ் 60 வர்ஷம் ஆச்சே:) )
சி.க.சார்,
60 வருஷம் ஆனால் என்ன? 6000 வருஷம் ஆனால் என்ன? தலைவர் பாட்டு சார் தலைவர் பாட்டு.
இதுவாக்கும் பாட்டு.
'மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
அய்யாவே! மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா'
'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' யில்
தலைவர் கலக்குவார். பத்மினி கலாய்ப்பு.
'காதல் களத்திலே தோல்வி அடைவதே ஆணுக்கு வெற்றிதானே'
பத்மினி பதிலுக்கு,
'சேற்றினில் பெண்கள் மயங்கிய காலம் போச்சுது மிஸ்டர் பாருங்க
ஏய்க்க நினைத்தால் இனி முடியாது இது 1954 ங்க'
http://www.youtube.com/watch?feature...&v=TMb0-8HAhsA
-
'ஆகாயம் தானே அழகான கூரை'
பாடல் வரிகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்.
-
//மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
அய்யாவே! மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா' // yes இதே பாட்டு தான்..ரெண்டு பேரும் நல்ல ஜோடி.. நன்னாயிட்டு இருப்பாங்க.. தாங்க்ஸ் வாசு சார் :)
-
300 க்கு வாழ்த்தளித்த அன்பு வினோத் சாருக்கும், மற்ற அன்புள்ளங்களுக்கும் நன்றி!
-
கிருஷ்ணா சார்,
கவிஞர் வாலி பற்றிய நேற்றைய மாலை மலர் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி! ரசித்துச் சுவைத்தேன்.
-
சௌந்தர்யமே வருக வருக
பிரியா நினைத்தாலே இனிக்கும் போல் வெளி நாடுகளில் படமாக்கப்பட்ட படம் என்று நினைவு .
1980 கால கட்டம் சிவச்சந்திரன் ஸ்ரீப்ரிய காதல் கிசு கிசு பீக்கோ பீக்
ஸ்ரீப்ரியவை மிகவும் ரசித்த படங்கள்
பொல்லாதவன் (அதோ வாரண்டி வாரண்டி வில் ஏந்தி )
எமனுக்கு எமன் (மழை விழுந்தது காற்றிலே ஐ ராம ராம )
என்னடி மீனாஷி (ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை)
ஸ்ரீப்ரியா(ஒரு சிறு குறிப்பு கற்றது கையளவு சுட்டது நெட்அளவு )
பேருக்கு தகுந்த மாதிரியே ட்ரெஸ் விசயத்துல ரொம்ப ஃப்ரீயா இருந்தவங்க... ஆடைகுறைப்பு புரட்சியின் ஆரம்ப விதை இவரால்தான் விதைக்கபபட்டது! இவங்க நீயா படத்துல ஆடிய பாம்பு டான்ச இன்னைக்கு வரை மறக்கமுடியாது! இவங்க ஷூட்டிங் வரும்போது குளிச்சிட்டு வரமாட்டாங்க போல? அதான் எல்லா படத்துலயும் கண்டிப்பா குளியல் காட்சி வச்சிருவாரு டைரெக்டர்! ( நல்லவேள குளிக்காம வந்தாங்க!) அப்பிடி..இப்பிடி நடித்திருந்தாலும் வாழ்வே மாயம் படத்துல இவங்க நடிச்ச அந்த கேரக்ட்டர வாழ்நாள் சாதனையா சொல்லிக்கலாம்.. அதுல அவங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்திருந்தாங்க! இப்ப இவங்க நடிக்கிறத மறந்துட்டு கெட்ட வார்த்தை பேசுவது எப்பிடின்னு கிளாஸ் எடுக்குறாங்க போல? சந்தேகம் இருந்தா தினமலருக்கு நடிகர்கள் நடத்திய கண்டன கூட்டம் வீடியோ பார்க்கவும்!
அவரின் விலாசம் 'No 10,முத்துபாண்டியன் avenue ,சாந்தோம்,சென்னை '
https://encrypted-tbn3.gstatic.com/i...43svr3TTRcyE43http://3.bp.blogspot.com/-E7gNqeC4w2.../sripriya5.jpg
-
டியர் ராகவேந்திரன் சார்!
'தென்னங்கீற்று' படத்தின் மிக மிக அற்புதப் பாடலான
http://i1087.photobucket.com/albums/...31355008/n.jpg
'மாணிக்க மாமணி மாலையில்'
பாடலைத் தந்து என் எண்ணங்களை எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள். ஒரு காலத்தில் இப்பாடல் வேண்டுமென்று கேசெட்டில் பதிவு செய்ய எங்கும் கிடைக்காமல் அலையோ அலை என்று அலைந்து பின்னர் விழுப்புரத்தில் ஒரு கடையில் சொல்லி பதிவு செய்து வந்தேன்.
பைத்தியம் சார் இப்பாடலின் மீது. இப்படத்தின் டிவிடி வந்தவுடன் வாங்கி விட்டேன். ஒரு ஏழெட்டு வருடங்கள் இருக்கும். இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன் இப்பாடலுக்காகவே.
இந்தப் படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ். இன்னொரு விஷயம். இப்படத்திற்கு துணை இசை.எல்.வைத்தியநாதன் அவர்கள்.
சுஜாதாவின் பாத்திரத்தின் பெயர் வசுமதி. கதை, வசனம், இயக்கம் கோவி.மணிசேகரன்.
வித்தியாசமான கதைக்களம். சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லியிருந்தால் நல்ல வெற்றி பெற்றிருக்கலாம். காட்சிகள் போராக நகரும். சுஜாதா வசுமதிக்கு அருமையான தேர்வு.
இந்தப் படத்தில் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும் இன்னொரு அருமையான பாடல்.
http://www.youtube.com/watch?v=dbeTKDF31c8&feature=player_detailpage
-
வண்ணத்திரை - 04/08/2014
-
Quote:
Originally Posted by
vasudevan31355
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா.
ரொம்ப கிக் கொடுக்கிறீங்களே சார் !! :) நன்ன்ன்ன்றி....
பாடல்களின் வீடியோக்கள் முன்பு யூடியூபில் இருந்தன. நானே முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன். பிறகு காபிரைட்ஸ் என்று சொல்லி காணாமல் அடித்துவிட்டார்கள். மீண்டும் எங்காவது எட்டிப் பார்த்தால் இழுத்து வந்து விடுவோம் !!
இதோ உன் காதலி கண்மணி எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதன் வீடியோவை மட்டும் சட்டுனு டவுன்லோட் செய்துவிட்டேன். ஆனால் அதை மறுபடி அப்லோடு செஞ்சா கணககை மூடிடுவாங்களே என்ற பயம் :)
-
Quote:
Originally Posted by
gkrishna
நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா
சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்
'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
http://youtu.be/qcPVlvpzZEE
ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
http://youtu.be/l-gfjVU6rkU
எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்
http://youtu.be/yM54-CDY-WU
-
Iravil irandu paravaigal ,Bala & vani mattum illa along with them Isaiyarasiyum jolly abrahamum undu. Beautiful song
-
சும்மா சும்மா சீரியஸா பாட்டமட்டும் கேட்டுக்கிண்டிருந்தா எப்படி..சிரிக்க வேணாமா..ஒரு பாட்டுப் போடலாம்னு சர்ச் பண்ணி ஒரு வெப் சைட் போனேன்..அந்த பாட்டோட ஆரம்பம்..
அணைக்க அந்த மேடம் பாடல்கள் மற்றும் விவரங்கள் :) // ஷாக் ஆகிட்டீங்களா
http://tamilsongslyrics.our24x7i.com...AF%8D/1248.jws
லிங்க் வேலை செய்யாமல் போனால் என்னைத் தவறாக நினைக்கவும் வாய்ப்புண்டு.. :) எனில் பாடலின் சில வரிகள்..அங்குள்ளதைப் போலவே
ஒயுங்கு தவறாமே ஊரை எட்டி வாயாமே
பொயுதே வீணக்காமே ரூபாவைத் தேடிக்கணும்..
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம்
//ஆமா ஒருதலை ராகம் ரூபா எங்க இருப்பார்..:) //
-
சிக்கா...
அது "எட்டி" இல்லே.. "ஊரை எத்தி வாயாமே"...
சென்னை பிளாட்ஃபார்ம் பாஷையில் சுசீலாம்மா கலக்கிய பாட்டு..
தெட்டிக்கினு போறதுக்கு திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க தூங்காம முயிப்பாங்க
துட்டும் கையிலே இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
பொட்டியும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே
http://youtu.be/4_dPyndat90
-
அதான்..அது நல்ல பாட்டுதேன்.. அத எப்படி எழுதியிருக்காகன்னு சொன்னேன் மதுண்ணா..எனிவே வீடியோவுக்கும் ஒரு தாங்க்ஸ்..
-
வாசு சார் எனது pm பார்க்கவும்
-
thanks madhu sir
Quote:
Originally Posted by
madhu
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
"ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்
மது சார்
விடியோ எனக்கு கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு ஈஸி ஆக கிடைக்குது . மிக்க நன்றி .
அந்த ஹீரோ நம்ம பாலச்சந்தர் நூல்வேலி நாராயண ராவ்
நினைத்தாலே இனிக்கும் படத்திலும் வருவர் -ஜெயசுதாவின் கணவராக
http://www.idlebrain.com/movie/photo...narao-0034.jpg
நான் சிலோன் ரேடியோவில் கேட்டு ரசித்த சில பாடல்களை மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
-
பைரவி - கலைஞானம் - முதல் தயாரிப்பு
-
சி.க.சார் ஜாலியாகக் கேட்டதால் ஒரு ஜாலி பாடல் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும் மாதிரி.
என்னா ஒரு தீர்க்க தரிசனம் இந்தப் பாடலில்
http://i.ytimg.com/vi/ga3SN7VaUgM/0.jpghttp://img.youtube.com/vi/hh4zrcovLgA/0.jpg
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவசரமா வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டாக்கா விலை இப்போ சுண்டாக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
மகனே உனக்கேன் தெரியவில்லை
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது
நடக்கட்டும் விடு ராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பாடகர் திலகத்தைத் தவிர இந்தப் பாடலுக்கு வேறு யார் பொருந்துவார்கள்?
ஜெய் படு கேஷுவல். வரிகள் யதார்த்தம்.
இந்தப் பாடல் 'மறந்தே போச்சு... ரொம்ப நாளாச்சு'
'அத்தையா மாமியா'.... அங்கேயா இங்கேயா
http://www.youtube.com/watch?v=xEpf7DtA5AE&feature=player_detailpage
-
இசையமைப்பாளர்களின் பாடும் ஆசையும் ,இயக்குனர்களின் படத்தில் தலை நீட்டும் ஆசையும் ,தமிழும் -இனிமையும் போல பிரிக்க முடியாதவை.ஆனால் எந்த இசையமைப்பாளர்களுக்கும் (பாடகர் இசையமைப்பாளராவது வேறு ரகம்-ஏ.எம்.ராஜா) குரலோ, பாடும் ஒழுக்கமோ,சுருதியோ இருந்ததாக வரலாறே இல்லை.ஆனாலும் சில இசையமைப்பாளர்களின் ஒத்தையும் ,ரெட்டையுமான குரல் சில பாடல்களுக்கு மெருகேற்றி ,எங்கோ கொண்டு விடும் அதிசயத்தை என்ன சொல்ல? இத்தனைக்கும் reciting musically ரகம்தான். ஆனால் ஒழுங்கற்ற பேச்சு பாடல்கள் ,அபார அமரத்துவம் பெற்றதை எந்த ரகத்தில் வைக்க?
எஸ்.டீ .பர்மன் -guide பட டைட்டில் பாடல்.தூக்கி நிறுத்தும்.
https://www.youtube.com/watch?v=7KR67xAVj5U
உனக்கென்ன குறைச்சல் என்ற முதுமையின் தனிமை சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன் .
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
சொந்தமுமில்லை பந்தமுமில்லை என்ற நகைச்சுவை கலந்த கிண்டல் தத்துவம் பாடிய ஜி.கே.வெங்கடேஷ்.
https://www.youtube.com/watch?v=thhp6yyFoAI
ஜனனி ஜனனி என்று உருகி நம்மை பக்தியில் திளைக்க விட்ட சுருதி சேராத ராஜாவின் அதிசய பாடல்.
https://www.youtube.com/watch?v=KQxEgUNDDbo
தீயில் விழுந்த ஏ.ஆர் .ரகுமான் என்று அழைக்க படும் நம் திலீப் முதலியார்.
https://www.youtube.com/watch?v=zFtKXaPpL_c
-
300 பக்கங்களில் 30000 விஷ்யங்கள் அடேயப்பா .. இந்த திரி எவ்வளவு வளர்ந்துவிட்டது
குறிப்பாக வாசு ஜி, கிருஷ்ணா ஜி, ராகவ் ஜி, கோபால் ஜி, எஸ்.வி ஜி,மது அண்ணா, சி.க என எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வாழ்த்துக்கள் .. இந்த திரி மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அடியேனையும் இதில் இணைத்து என் பதிவுகளுக்கும்
இதோ ஆர்.பார்த்தசாரதியின் இசையில் இசையரசியின் மிக இனிய கானம்
http://www.youtube.com/watch?v=9N6WQiKqPsY
-
வாசு சார்..
பொருட்கள் மாறிப்போனாலும் நிலைமை என்னவோ அதேதான்.. அது என்றுமே மாறாது :)
படத்தின் மற்ற பாடல்களின் வீடியோ எதுவுமே இணையத்தில் காணப்படவில்லை. "மறந்தே போச்சு" பாடலுக்கு "தெய்வச்செயல்" வீடியோவை ரீமிக்ஸ் செய்து போட்டிருந்தார்கள். அதுதான் ஒரிஜினல் என்று ஒருவர் சண்டையே போட்டார். ( பெரிய விக் வைத்துக் கொண்டு உஷா நந்தினி சுற்றி சுற்றி ஆடும்போது அது எப்போது கழன்று விழும் கண்கொத்தி பாம்பாக கவனித்தது எங்களுக்கில்ல தெரியும் ? )..
"அத்தையா மாமியா அங்கியா இங்கியா.. அத்தை பெத்த அல்லியா.. மாமி பெத்த கள்ளியா" என்ற சுசீலா-ஈஸ்வரி பாட்டு அனேகமாக எல்லோரும் மறந்தே போயிருப்பாங்க.. வேறு ஏதாவது பாடல் நினைவுக்கு வருதா ? மைண்ட் ரொம்ப பிளாங்க் ஆகி போச்சு.
-
ராஜேஷ்.. அருமையா சொன்னீங்க..
நம்ம கண்ணே பட்டுவிடக் கூடாது. முதல் முறையாக எல்லோரும் அன்பாக விஷயங்களை பரிமாறிக் கொண்டு ஜாலியாக கலாய்க்கும் திரியை இங்கேதான் பார்க்கிறேன்.
நாளைக்கு ஆடி வெள்ளி. அத்தனை நண்பர்களுக்கும் அவர்களின் அன்பான மனங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.
-
Rajesh,
Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.
-
சி.எஸ்.ஜெயராமன்.
சீர்காழியை பற்றி எழுதி விட்டு ,பக்கத்து நகரமான சிதம்பரத்தை எப்படி விடுவது?சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் பற்றித்தான் எழுத போகிறேன்.ஒன்றை சொல்லி விட்டே துவங்குகிறேன். கிழவன் வெற்றிலை பாக்கு போட்டு பாடுவது போல ,இதெல்லாம் குரலா என்று சிறு வயதில் உதாசீனம் செய்து எள்ளியுள்ளேன்.ஆனால் அதை மீறி இவர் பாடிய முறை,பாடல்களின் சுவை பல பாடல்களை இன்றும் மறக்க முடியாமல் அமர துவம் பெற வைத்திருப்பதை என்ன சொல்ல?(சுதர்ஷன்,ஜி.ராமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,டி.ஆர்.பாப்பா,சி.எஸ்.ஜெ யராமன்)
ஆரம்பத்தில் சிவாஜியின் பிரிய பாடும் குரலாக இருந்தவர்,டி.எம்.எஸ் ஐ தூக்கு தூக்கியில் (1954) பாட வைக்கவே யோசிக்க செய்தவர்.நடிகர்(1934 கிருஷ்ண லீலா முதல் 1948 கிருஷ்ண பக்தி வரை ஆறேழு படங்கள்),பாடகர் ,இசையமைப்பாளர் (ரத்த கண்ணீர்)என்று பல்முனை கலை திறன்.
கலைஞரின் மைத்துனர் என்பதை விட கலைத்துறையில் அவர் நுழைய காரணகர்த்தா.(1947 இல் அருள் சூசை ஆரோக்ய சாமி என்ற ஏ.எஸ்.ஏ.சாமியிடம் அறிமுக படுத்தி ராஜகுமாரியில் வாய்ப்பு தேடி தந்தவர்).கலைஞரின் மகன் மு.க.முத்துவின் மாமனார்.ஒரு தமிழிசை கலைஞரின் மகன்.
இசை முறையாக கற்று தேர்ந்தவர்.இதற்கு உதாரணம் இன்று போய் நாளை வாராய் பாட்டில் எண்டிசை வென்றேனே என்று வீர புலம்பல் ,கையறு நிலை என்பதை உணர்த்தும் மெய் சிலிர்ப்பு கானம்.இவரால் ராவணனுக்கு கூடுதல் பெருமை .
இவருடைய நல்ல பாடல்கள்.(மறக்க முடியாத)
தேச ஞானம் கல்வி, கா கா கா , நெஞ்சு பொறுக்குதில்லையே-பராசக்தி.
காலமெனும் சிற்பி செய்த - மனிதனும் மிருகமும்.
குற்றம் புரிந்தவன் -ரத்த கண்ணீர்.
மஞ்சள் வெயில் மாலையிலே-காவேரி.
அன்பினாலே உண்டாகும்,உனக்கெது சொந்தம்,இதுதான் உலகமடா-பாசவலை.
விண்ணோடும் முகிலோடும் -புதையல்.
வீணை கொடி உடைய, இன்று போய் நாளை வாராய் -சம்பூர்ண ராமாயணம்.
ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே - தங்க பதுமை.
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம், தன்னை தானே நம்பாதது - தெய்வ பிறவி.
ஆயிரம் கண் போதாது,வண்ண தமிழ் பெண்ணொருத்தி,காவியமா- பாவை விளக்கு.
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார்-குறவஞ்சி.
சிரித்தாலும் அழுதாலும்- களத்தூர் கண்ணம்மா.
வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சி தலைவன்.
பெண்ணே உன்கதி இதுதானா- பூமாலை.
https://www.youtube.com/watch?v=ehqEeeXYcAg
https://www.youtube.com/watch?v=hI_dXGC2V20
https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c
-
Quote:
Originally Posted by
Gopal,S.
Rajesh,
Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.
ஆம் கோபால் ஜி, மன்னிக்கவும் கார்த்திக் ஜியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சமீப காலமாக அடிக்கடி வாகனத்தில் கேட்டு மகிழும் பாடல் தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே
என்ன அருமையாக பாடியிருக்கிறார் இசையரசி, எல்.விஜயலக்*ஷ்மியும் அழகு..
http://www.youtube.com/watch?v=bccaAbvtKac
-
ராஜேஷ் சார்,
காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.:)
ராஜேஷ் சார்,
'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.
அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.
ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?
-
ராஜேஷ் சார்,
தேடிப் பிடித்தீர்கள் பாருங்கள் 'தாயில்லாப் பிள்ளை'யை.
'தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே' யப்பா! எவ்வளவு நாளாச்சு?!
ஒடியும் என்று இடையை மட்டும் தொடாமலே விட்டாராம்.
அடேயப்பா! அபாரம்.
விஜி ஆரம்ப காலத்தில் கொள்ளை அழகு சார். பின்னாட்களில் 'கூடையிலே கருவாடு' மாதிரி தெரிய ஆரம்பித்து விட்டார்:).
அபூர்வ பாடலுக்கு மிக்க நன்றி சார்.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.:)
ராஜேஷ் சார்,
'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.
அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.
ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?
வாசு ஜி .. அட அட நானும் நினைத்தேன்.. என்ன இரண்டு மூன்று நாட்களாக வாசுஜியுடன் அளவளாவமுடியவில்லையே என்று. நினைத்தேன் வந்தீர்கள் 100 வயது..
உங்கள் தூக்கத்தை கெடுத்தது நானா .... வீட்டுல கேட்ட கோவிச்சுக்கபோறாங்க.. ஹ ஹா.
ஆம் சார் சரோ அந்த ஷரணம்பே நா பாடலில் கொள்ளை அழகு. தெய்வீக களை.. கண்களே ஆயிரம் கதைகள் பேசுமே
ஆம் தலைவர் வேடத்தில் வஜ்ரமுனி .. அம்மா வேடத்தில்(சாந்தகுமாரி வேடத்தில்) அத்வானி லெஷ்மி ...
தாயில்லா பிள்ளை பாடல் என்னை என்னவோ செய்யும்.. குறிப்பாக பாடியிருக்கும் விதம் தான்..
நீங்கள் சொன்ன வரியை அவர் பாடியிருக்கும் அழகு .என்ன சொல்வது நாளுக்கு நாள் வயதுக்கு வயது நான் இசையரசியின் அடிமையாகிக்கொண்டிருக்கிறேன்
-
ராஜேஷ் சார்,
இனிமை மெட்டுக்களில் இன்னொன்று
இதோ நம் 'இனிமைக் குயில்' தாலாட்டும் ஒரு அருமையான பாடல்.
மாணிக்கத் தொட்டில் படத்தில்
'ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்த குமாரன்'
அப்படியே அந்தக் குரல் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்க் கிடாசும் சார். குரலில் இனிமை இருக்க வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா?
சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாராம் தந்தையடி
பச்சை மகன் படுத்துறங்க பவளமணிக் கட்டிலடி
மன்னவனும் கண்ணுறங்க மாணிக்கத் தொட்டிலடி
புன்னைகை அரசி பாந்தம். ஜெமினியின் இயற்கையான கைகொட்டல்.
அருமையான சகோதரிகளின் கோரஸ்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XV9OzWrGrj8
-
Quote:
Originally Posted by
vasudevan31355
அப்படியே அந்தக் குரல் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்க் கிடாசும் சார். குரலில் இனிமை இருக்க வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா?
100% உண்மை
-
ராஜேஷ் சார்,
இந்தப் பாட்டைப் போட்டவுடன் தெரு வாசல் கூட்டிகிட்டிருந்த எங்க வீட்டுக்காரம்ம்மா அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டுட்டு ஓடி வந்து முழுப் பாட்டைக் கேட்டுட்டுதான் போனாங்க. நல்லா டோஸ் விழுந்துது 'காலைல என் வேலையை வேற கெடுக்கறீங்க' அப்படின்னு.:)
-
Quote:
Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
இந்தப் பாட்டைப் போட்டவுடன் தெரு வாசல் கூட்டிகிட்டிருந்த எங்க வீட்டுக்காரம்ம்மா அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டுட்டு ஓடி வந்து முழுப் பாட்டைக் கேட்டுட்டுதான் போனாங்க. நல்லா டோஸ் விழுந்துது 'காலைல என் வேலையை வேற கெடுக்கறீங்க' அப்படின்னு.:)
என்ன செய்ய அப்படி ஒரு குரல் எல்லோரையும் கட்டி இழுக்கத்தானே செய்யும்
-
Quote:
Originally Posted by
madhu
வாசு சார்..
பொருட்கள் மாறிப்போனாலும் நிலைமை என்னவோ அதேதான்.. அது என்றுமே மாறாது :)
படத்தின் மற்ற பாடல்களின் வீடியோ எதுவுமே இணையத்தில் காணப்படவில்லை. "மறந்தே போச்சு" பாடலுக்கு "தெய்வச்செயல்" வீடியோவை ரீமிக்ஸ் செய்து போட்டிருந்தார்கள். அதுதான் ஒரிஜினல் என்று ஒருவர் சண்டையே போட்டார்.
அடப் பாவி மக்கா!
-
வாசு ஜி
இதோ உங்களுக்காக இன்னும் இரண்டு சரோ இசையரசி முத்துக்கள்
என்.டி.ஆரின் முதல் டைரக்*ஷன் படம் சீதாராம கல்யாணம்
மணி என்ற கீதாஞ்சலியை சீதாவாக்கினார். சரோ மண்டோதரி பாத்திரம் .. அருமையாக செய்திருப்பார்
http://www.youtube.com/watch?v=wrtj0xQoC6c
http://www.youtube.com/watch?v=2L9806Akja0
-
பொங்கும் பூம்புனல்
சின்னச் சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரை சுசீலாவின் மென்மையான குரல் இன்னும் மென்மையாக்கித் தாலாட்டும் விதம் தங்களை ஈர்க்கும்.. கேளுங்கள்.. மெலடி என்பதன் பொருளாக சுசீலா கேவிஎம் இணையில் வெளிவந்த இது போன்ற பாடல்களைக் கூறலாம்.
தேடி வந்த திருமகள் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தங்களில் பலர் கேட்டிருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
http://www.inbaminge.com/t/t/Thedi%2...%20Thirumagal/
-
வாயு வேகம் மனோ வேகம் அசுர வேகம் என வேகங்கள் என்ன உண்டோ அவையனைத்தும் பின் தங்கி திரி வேகம் என புதியதாக சொல்லலாம் வாசு சார் இத்திரியை. பாராட்டுக்கள் ஒவ்வொருவருக்கும்.
தொடருங்கள்.
-
-
thanks
Quote:
Originally Posted by
esvee
NELLAI - RATHNA THEATER
RATHNA SONG
நெல்லை ரத்னா திரை அரங்கு உடன் ரத்னாவின் பாடல்
எஸ்வி சார்
உங்கள் ஒப்புமை உவமை கண்டு வியப்புறுகிறேன்
அருகில் நெல்லை பார்வதி இரண்டும் ஒரே உரிமையாளர்
எத்தனை படங்கள் இத் திரை அரங்கில் கண்டு களித்து கழித்து களைத்த தினங்கள்
நன்றி