வேலூர் records 90 தொடர்ச்சி...
http://i58.tinypic.com/9iquy0.jpg
Printable View
வேலூர் records 90 தொடர்ச்சி...
http://i58.tinypic.com/9iquy0.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i60.tinypic.com/20a9ac5.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i62.tinypic.com/2r4liy9.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/vnh5jo.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i62.tinypic.com/9r678w.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i61.tinypic.com/6y2vq1.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i59.tinypic.com/2cnawbn.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/15p69v9.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i61.tinypic.com/2s1aava.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i57.tinypic.com/2cfbipt.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i57.tinypic.com/2lx7adz.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/1tosav.jpg
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/9bde7c.jpg
வேலூர் records 90 முடிவு
http://i60.tinypic.com/2s13sly.jpg
மக்கள்திகத்தின் புகழ் பரப்பும் ஒரே மாத இதழ்.முழுக்க முழுக்க மக்கள்திலகத்தின் சாதனைகள் மட்டுமே தாங்கி வரும் மாத இதழ் தற்பொழுது அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
http://i60.tinypic.com/2iawfhe.jpg
உலக சினிமா வரலாற்றில் மறுவெளியீட்டில் மிகப்பெரிய கின்னஸ் சாதனை படைத்த மக்களதிலகம்
MGR ன் ஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து மீண்டும் மிகபெரிய சாதனை படைக்க புறப்பட்டு விட்டான்
நமது உலகம் சுற்றும் வாலிபன்
http://i57.tinypic.com/2mpndwo.jpg
Courtesy : FB
http://i62.tinypic.com/33eo45f.jpg
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
பறக்கும் பாவை - சிறப்பு மலர் முழுவதையும் பதிவிட்ட இனிய நண்பர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .
பல சுவையான தகவல்கள் - புள்ளி விவரங்கள் - சாதனைகள் - அற்புதம் .
உபரி தகவல்
பறக்கும் பாவை - பூஜை போட்ட முதல் நாளே எல்லா ஏரியாவும் நல்ல விலைக்கு விற்பனை ஆனது .
பறக்கும் பாவை - 50 நாளில் கிடைத்த லாபம் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்தது .
மறு வெளியீடுகளில் இன்றும் ஓடி கொண்டிருக்கும் படம் .
சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்கள் அறிவது !
தாங்கள் அள்ளி வழங்கும் புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்கள், காலத்தால் அழிக்க முடியாத பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் படைத்த கடந்த கால சாதனைகள் .... மிக மிக அற்புதம்.
பழைய records & notices, phamplets போன்றவற்றை காணும் போது, என்னை அந்த காலத்து இனிய நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.
இந்த பொக்கிஷமான documents தங்களுக்கு அளித்து உதவிய வேலூர் திரு. சீனிவாசன் மற்றும் திரு. பாஸ்கரன் உள்ளிட்ட மக்கள் திலகத்தின் அன்பர்களு க்கும். அவற்றை பதிவிட்ட தங்களுக்கும் கோடானு கோடி நன்றி !
‘ஆடி ஜெயித்தவர்’
‘ஊருக்கு உழைப்பவன்’..... படத்தின் பெயரே தலைவரைத்தான் குறிக்கும். 100 நாள் என்ற எல்லைக் கோட்டை தொடாவிட்டாலும் 50 நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றிப் படம்.
பொதுவாக நான் தலைவரின் எல்லாப் படங்களையும் அவருக்காகவே பல முறை பார்ப்பதுண்டு. இந்தப் படத்தை பாடல்களுக்காகவும் பல முறை பார்த்ததுண்டு.
* இதுதான் முதல் ராத்திரி... அருமையான மெலடி.
* இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்... தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பாடலை ஜேசுதாசின் மயக்கும் குரலில் கேட்டால் ஆனந்தமான தூக்கம் கியாரண்டி.
*பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்.... படத்தின் காட்சி அமைப்பையொட்டி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இந்தப் பாடல். மகிழ்ச்சியையும் அதேநேரம் தன் குழந்தையின் நிலையை நினைத்து இழையோடும் சோகத்தையும் கலந்து காட்டும் முகபாவனை தலைவரின் நடிப்பு திறனுக்கு சான்று.
* உடல் நிலை சரியில்லாத தன் குழந்தையை பார்க்க எஸ்டேட்டில் இருந்து வீடு வந்ததும், பின்னணியில் மீண்டும் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...’ ஒலிக்க (குழந்தை இறந்திருக்கும்) காலியாக இருக்கும் தூளியின் துணியை எடுத்து அணைத்தபடி தலைவர் கலங்கி அழும்போது கலங்குவது தியேட்டரும்.
*இதற்கு முன் நான் ரசித்த காட்சி ஒன்று. தலைவர் இரவில் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வாணி ஸ்ரீ, வீட்டு வாசலுக்கு வந்து பார்க்கும்போது அவர் கையில் வைத்திருக்கும் குழந்தையும் கொட்டாவி விடும். நிச்சயம் அந்தக் குழந்தை நடித்திருக்கப் போவதில்லை. எதேச்சையாக அந்த குழந்தை கொட்டாவி விடுவது காட்சிக்கு அற்புதம்.
* அழகெனும் ஓவியம் இங்கே, உன்னை இயற்றிய ரவிவர்மன் எங்கே?.... பாடலை தலைவரை மனதில் கொண்டே கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில் தலைவர் உண்மையிலேயே ரவிவர்மன் ஓவியம் போல இருப்பார். அதிலும், கடைசி பத்தியான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) சிமெண்ட் நிற குர்தாவில் கதவை மூடியபடி கட்டான உடலும் திரண்ட புஜங்களோடும் தலைவர் வரும் அழகும் ஸ்டைலும் தனி. அதிலும் அந்தக் காட்சியில் முதலில் தலைவர் எதிரே வருவது போல இருக்கும். ஆனால் அது கண்ணாடியில் காட்டப்பட்ட பிம்பம் என்பது பின்னர் தெரியும். கண்ணாடியில் கேமரா விழாமல் படமாக்கப்பட்ட அற்புத கோணம் அது.
* இடைவேளைக்கு முன்பு கோயிலுக்கு நிர்மலாவுடன் வரும் காட்சியில், வாணி ஸ்ரீ தன்னை பார்த்து விடக் கூடாதே என்ற அவசரத்தில், காரில் ஏறும்போது துண்டு காரின் கதவுக்கு வெளியே இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பதை காட்டும் தலைவரின் நுணுக்கமான நடிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
‘ஊருக்கு உழைப்பவன் ’..படத்தின் தலைப்பே எவ்வளவு உன்னதம். நீதிக்குத் தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என்று தலைவரின் படத் தலைப்புகளிலேயே நல்ல கருத்துக்களும் இருக்கும். அக்கால படங்களின் தலைப்புகளில் நல்ல கருத்துக்கள் இருக்கிறதோ இல்லையோ மோசமான கருத்துக்கள் நிச்சயம் இருக்காது. இப்போது, வரும் மோசமான படத் தலைப்பால் நானும் இன்னொருவரும் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஒரு மாதத்துக்கு முந்தைய பிளாஷ் பேக்...
‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்று ஒரு படம். அடப்பாவி... பெரிய யோக்கியன் போல பேசிவிட்டு சைடில் இந்த படமெல்லாம் பார்க்கிறான் போலிருக்கிறது என்று யாரும் தயவு செய்து என்னைப் பற்றித் தவறாக நினைக்க வேண்டாம். அந்த தப்பெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் பார்த்தது அந்தப் படத்தின் போஸ்டரை. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டது.
உழைப்பை, திறமையை, நேர்மையை ஊக்குவிப்பதற்கு பதிலாக எந்த நோக்கத்தை வளர்க்கும் வகையில் தலைப்பு வைக்கிறார்கள் பாருங்கள். நாம் இன்று இருக்கும் நிலை எதுவானாலும் அந்த நிலைக்கு வருவதற்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்போம்; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உழைக்காமலே ஜெயிக்கலாம் என்பது போல தலைப்பு சூட்டுகிறார்கள். தர்மம் தலைகாக்கும் என்று தலைப்பு வைத்த காலம் போய் இப்போது சூது கவ்வும் என்று தலைப்பு வைக்கின்றனர். ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற இந்த கருத்தே முதலில் தவறு. அதையும் மரியாதையாக சொல்கிறார்களா பாருங்கள். அதற்காக, காதலிக்க நேரமில்லை பாலையா போல ‘அசோகர் உங்க மகரா?’ ரேஞ்சுக்கு போகச் சொல்லவில்லை. ஆடாம ஜெயிச்சோமடா என்று மரியாதையில்லாமல் ‘டா’ போட்டு சொல்கிறார்கள்.
‘போடா, போடி’, ‘நீ எவனாயிருந்தா எனக்கென்ன?’ இதெல்லாம் படத் தலைப்பு. எனது சினிமா ஞானத்துக்கு எட்டியவரை சொல்கிறேன். இன்னும் ‘வாடா நாயே’ என்ற தலைப்பில் படம் வரவில்லை என்று நினைக்கிறேன். அப்படி ஒருவேளை அந்தத் தலைப்பில் படம் வந்தால், வருத்தத்தோடு சொல்கிறேன் நண்பர்களே,.. அதையும் பார்க்க ஒரு கூட்டம் போகும்.
சரி.... விட்ட இடத்துக்கு வருகிறேன். ஆடாம ஜெயிச்சோமடா போஸ்டரை பார்த்ததும் இதுபோன்ற எண்ணங்கள் என் மனதில் ஓட ஆத்திரத்தில் போஸ்டரை கிழிக்கலாமா? என்று தோன்றியது. ஒரு போஸ்டரை கிழித்தால் போதுமா? மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதே? அதையும் கிழித்தாலும் நாளிதழ்களில் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வருமே? அதை யார் தடுக்க முடியும்? என்ற எண்ணத்தோடு, மற்றவர்கள் பார்த்தால் பைத்தியம் என்று என்னை நினைக்கும் அபாயமும் உள்ளதால், அந்த அபாயத்தில் இருந்து என்னை காத்துக் கொள்ள, பல்லைக் கடித்தபடி இறுகிய, கோபமான முகத்துடன் வெடுக்கென தலையை திருப்பினேன். அப்போது, பத்தடி தூரத்தில் எதிரே ஒரு நபர். எதேச்சையாக என்னைப் பார்த்தவர் என் கடுமையான முகத்தை கண்டு அவரைப் பார்த்து நான் முறைக்கிறேன் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. அவரும் என்னை லேசாக முறைத்தபடியே வந்தார். ஆள் வேறு ‘பல்கி’யாக இருந்தார்.
இது என்னடா வம்பு? அவரிடம் விளக்கலாமா? விளக்கினால் நீண்ட விளக்கமாகுமே? அல்லது உங்களை தவறாக பார்க்கவில்லை என்று மட்டும் சொல்லி விட்டு செல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த சில விநாடிகளிலேயே ஒருவரையொருவர் கடந்து சென்று விட்டோம். இது என்ன கருமம்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாரோ? என்று சிந்தித்துக் கொண்டே இன்னும் ஒரு பத்தடி தள்ளிச் சென்று அனிச்சையாய் அவரை திரும்பிப் பார்த்தேன். அவருக்கும் அதே உணர்வு இருந்திருக்குமோ, என்னவோ? சரியாக அதே நேரத்தில் அவரும் திரும்பிப் பார்த்தார். அப்போதும் முறைப்பு. அவருக்கு அந்த கோபம் போகவில்லை போலும். இருவரும் தலையை திருப்பிக் கொண்டோம். அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் நான் சென்று விட்டேன். அவர் திரும்பிப் பார்த்தாரா? என தெரியவில்லை. ஒரு படத்தின் தலைப்பால் சம்பந்தமே இல்லாத, யாரென்றே தெரியாத எங்கள் இருவருக்கிடையே சில விநாடிகள் சின்ன விரோதம். தேவையா இது? போஸ்டரை பார்த்தாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றால் இதுபோன்ற படங்களை பார்த்தால் இளைஞர் சமுதாயம் உருப்படுமா?
இதுபோன்ற தலைப்புகளையும், படங்களையும் மக்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். கலாசாரம், பாரம்பரியம், நற்பண்புகளை வலியுறுத்திய பழைய திரைப்படங்களை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு இணையம் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் மற்றவர்களை விட நமக்கு அதிகம் உண்டு.
காரணம், நாம் தலைவரின் தொண்டர்கள். அவர் உழைக்காமல், ஆடாமல் ஜெயித்தவர் அல்ல. திறமை, உழைப்பு,நேர்மை, உண்மை, சத்தியம், தர்மம், சமூகப் பணி, மக்கள் தொண்டு ஆகியவற்றால் ‘ஊருக்கு உழைத்தவர்’. அதனால், கிடைத்த மக்கள் செல்வாக்கு என்னும் ஆயுதத்தால் எதிரிகளை ஆடி ஜெயித்தவர். களத்தில் மட்டுமல்ல.... அன்பினாலும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தொலைகாட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்
---------------------------------------------------------------------------------------------------
10/11/2014 வசந்த் - பிற்பகல் 2 மணி - தாய்க்கு தலைமகன்
12/11/2014 சன்லைப் இரவு 7 மணி - தாழம்பூ (இன்று ஒளிபரப்பாகிறது )
13/11/2014 சன்லைப் காலை 11 மணி - ரிக்க்ஷாக்காரன்
The Duet song (dream song) you had posted about sir.
https://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc
3.13 to 3.19 time line.
first time I observed thanks for the information Kalaiventhan sir.
ஊருக்கு உழைப்பவன் - பட விமர்சனம் மிகவும் அருமை . நன்றி கலைவேந்தன் சார் . உங்களின் சமூக பொறுப்பு
பாராட்டுக்குரியது .மக்கள் திலகம் இந்த படத்தில் மிகவும் அழகாக காட்சி அளிப்பார் . மாறு வேடத்தில் மக்கள் திலகம் பாடும் பாடல் it is easy to .... .சூப்பர் பாடல் .சென்சார் பிடியில் மாட்டியதால் சண்டை காட்சிகள் பாதிக்கப்பட்டது .
ஊருக்கு உழைப்பவன் . கிடைக்கவேண்டிய கவுரமும் ,மரியாதையும் அடுத்த ஆண்டே 1977ல் கிடைத்தது
நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி .
மதுரை சென்ட்ரலில் கடந்த தீபாவளி முதல் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஆணையிட்டால் " வெளியாகி , வெற்றிநடை போட்டதோடு ,9 நாட்களில்
ரூ.1,27,500/- வசூல் சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே .
நான் ஆணையிட்டால் சுவரொட்டிகள் , பேனர்களுக்கு மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் மலர் மாலைகள் சூடி, சிறப்பு வழிபாடுகள் செய்து அமர்க்களபடுத்தினர் .
அதன் புகைப்படங்கள் நமது நண்பர்களுக்காக உதவியவர் மதுரை திரு. எஸ்.குமார்.
http://i57.tinypic.com/sli5xk.jpg
மதுரை மீனாட்சியில் சென்ற மாதம் 05/10/2014 முதல் ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன் " திரைக்கு வந்து
வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படம் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i60.tinypic.com/2ymhkhx.jpg
மதுரை மீனாட்சியில் கடந்த 07/09/2014 முதல் ,மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படமான Ç'ரிக்க்ஷாக்காரன் "திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படம் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்
http://i60.tinypic.com/2s9bw92.jpg
.மதுரை ராம் தியேட்டரில் 09/11/2014 முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் மாறுபட்ட நடிப்புத்திறனை வெளிப்படுத்திய "மாட்டுக்கார வேலன் " வெளியாகி வெற்றி நடை போட்டது .
அதன் புகைப்படங்கள் நமக்கு அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/11lo1z7.jpg