மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.
http://i58.tinypic.com/21odavn.jpg
நெல்லை மாவட்டம் .ஒரு கண்ணோட்டம் .
காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்ட் நிறைந்த இந்த மாவட்டத்தில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தால் 1967-1971 தேர்தல்களில் திமுக மாபெரும் வெற்றி கண்டது . நெல்லை மாவட்டத்தில் இடம் பெற்று இருந்த சட்ட சபை தொகுதிகள் .
விளாத்திகுளம் - தூத்துக்குடி - திருசெந்தூர் -ஸ்ரீ வைகுண்டம் -சங்கரன் கோயில் -கடையநல்லூர் -தென்காசி -ஆலங்குளம் - திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் -பாளையங்கோட்டை - நாங்குநேரி- வாசுதேவநல்லூர் -ராதாபுரம் -ஓட்டபிடாரம் -கோவில்பட்டி .
1977-1984 மூன்று முறை நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தல்களில் அதிமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .அதே போல் அதிமுக கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்று இருந்தார்கள் . நெல்லை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பது வரலாறு பதிவு செய்துள்ளது .
மக்கள் திலகத்தின் அதிமுக 1991.2001 ,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று உள்ளது .
2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை , தென்காசி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது மக்கள் மனங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த அளவிற்கு நிலைத்து விட்டார் என்பதை அறிய முடிகிறது .
அடுத்து தொடர்வது - கோவை மாவட்டம் -மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.