Quote:
In Tamil Cinema quite a few movies were made with near perfection for all elements of a Hitchcock type thriller...of which Pudhiya Paravai was daring and a darling in the minds of viewers in depicting the negative characterization in a believable way by the most famous emperor of acting NT evoking sympathy rather than anger!Of course films of similar genre like Adhe Kankal, Nadu Iravil, Saavi (direct adaptation of Hitchcock's Dial M for Murder), Andha Naal (by S. Balachander)....could also please the viewers and fed them to their hunger for different story bases amidst the sentiment driven family dramas!
உளவியல் ரீதியான குற்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் இறுகிக் கிடக்கும் மர்ம முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப் பட்டு குற்றவாளி எத்தகைய சமூக அந்தஸ்தில் இருப்பவராயினும் தண்டிக்கப்படுவதே ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் ஹாலிவுட் மர்மப் பட மேதையின் திரைக் காவியங்கள் சொல்லும் பாடம் !
தனது மனைவியின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் சமூக அந்தஸ்துள்ள செல்வந்த இளைஞன் அக்குற்றத்தை மறைத்து இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு வாழ்கை மாற்றம் நிகழும் தருணத்தில் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவலை உணராது மர்மங்களைத் தனது வாயாலேயே
வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு வலையில் சிக்கும் அதி அற்புதமான திரில்லர் புதிய பறவை !
ஆரம்பம் முதல் முடியும்வரை நடிப்பிலக்கணத்தின் அனைத்து சாராம்சங்களையும் நடிகர்திலகம் பிரித்தெடுத்து பின்னியிருப்பார் !