-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாத நிகழ்வு இது .....
1958ல் ஜவஹர்லால் நேரு சென்னை வர இருந்தபோது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக தயாராக இருந்தது.
அந்த சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எம்ஜிஆர் அவர்களையும் எஸ்.எஸ்.ஆர் அவர்களையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தது அன்றைய காவல் துறை .
சிறையில் வசதியான வகுப்பை மறுத்து, சாதாரண வகுப்பில் ஆறு நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் !........ Thanks...
-
#நான்_சாப்பிடட்டுமா..? #வேண்டாமா..?
சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கொண்டு, இந்த ஒரே ஒரு சாமர்த்திய கேள்வியை மட்டுமே வஜ்ராயுதமாக பயன்படுத்தி எப்படிப்பட்ட வல்லவரையும் நம் வழிக்குக் கொண்டு வந்து விட முடியும்... அதற்கு சாமர்த்தியமும் சமயோசித புத்தியும் வேண்டும், இரண்டுமே எம்.ஜி.ஆரிடம் இருந்தது.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மறைந்து விட ... அடுத்த முதல்வர் யார்..? என நாலா திசைகளிலிருந்தும் குரல் வர....நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர ..உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி...
அதற்கு ராஜாஜி, “ உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்....
எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார் ” என்று அனுப்பி வைக்க....
உடனடியாக கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்... என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். “என்று எதுகை மோனையுடன் எம்.ஜி.ஆரிடம் பேச ...இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.சொன்னார் இப்படி....
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்..”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த எஸ்..எஸ். ராஜேந்திரனுக்குப் போன் செய்த எம்.ஜி.ஆர்....
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார் ...
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு எஸ்.எஸ்.ஆரின் இல்லம் வருகிறார் எம்.ஜி.ஆர்.
இலை போட்டு இனிய முகத்துடன் எஸ்.எஸ்.ஆரின் தாய் , எம்.ஜி.ஆருக்கும் - எஸ்.எஸ்.ஆருக்கும் பரிமாற....,
இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர்...எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்கிறார்....
“கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்ஜிஆர் விளக்குகிறார்.
திகைத்துப் போன எஸ்.எஸ்.ஆர். நிறைய விளக்கங்கள் சொல்லி.., “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
எம்.ஜி.ஆர். வாதம் செய்யவில்லை..வற்புறுத்தவில்லை...
எஸ்.எஸ்.ஆரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்
"நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா..?”
எஸ்.எஸ்.ஆர். வெகு நேர யோசனைக்குப் பின், வேறு வழியின்றி சொல்கிறார்...
“சரி.. நீங்க சாப்பிடுங்க..”
அதன் பின்.. முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்கிறார்.
அப்புறம்.. நடந்ததை நாடே அறியும்...!
#யானைக்கு_பாகனைவிட_சிறந்த #நண்பன்_யாருமில்லை.
#ஆனால்_மதம்_பிடித்தால்_யானைக்கு #பாகனை_விட_மோசமான_எதிரியும்
#யாரும்_இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!......... Thanks..........
-
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_பொற்பாதம்_வணங்கி #நண்பர்கள்_அனைவருக்கும்_இனிய #காலை_வணக்கம்
#திமுக_அதிமுக_இணைப்பு
#பேச்சு_வார்த்தைகள்
1979ஆம் வருடத்தின் இலையுதிர் காலம். ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், ஒரு வலிமையான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க விரும்பினார்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் இரு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். வீரமணி மூலம் அவ்வப்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது அவருக்குத் தெரியாது.
கலைஞரை எம்.ஜி.ஆர். சந்திக்க வேண்டுமென பத்திரிகையாளர் சோலை அறிவுறுத்திவந்தார். கலைஞரிடம் வீரமணி இதனை வலியுறுத்திவந்தார்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை கலைஞரை தொலைபேசியில் அழைத்த, பட்நாயக் சென்னை வந்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டார்.
.... செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வந்த பட்நாயக், கலைஞரைச் சந்தித்தார். கலைஞர் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தார்.
1. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணந்த கட்சி தி.மு.க. என்றே அழைக்கப்படும்.
2. கட்சியின் கொடி அ.தி.மு.கவின் கொடியாக இருக்கலாம்.
3. எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்வார்.
4. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க அவசியமில்லை.
5. ஒருங்கிணைந்த கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என்பது இணைப்பிற்குப் பிறகு தகுந்த நேரத்தில் முடிவுசெய்யப்படும்.
6.முக்கியமாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற ஆணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற வேண்டும்.
இந்த நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், எம்.ஜி.ஆர். இதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று நம்பினார்.
#மோதல்_அரசியலால்_களைப்படைந்த #எம்ஜிஆர்
எம்.ஜி.ஆரும் இணைப்பை விரும்பினார் அல்லது அப்படி ஒரு தோற்றம் இருந்தது.
மோதல் அரசியல் தமிழ்நாட்டை முன்னெடுத்துச்செல்லவில்லை என்பதோடு, எம்.ஜி.ஆருக்கு மிகவும் களைப்பூட்டியது.
செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் மோகன்தாஸுடன் (காவல்துறை தலைவர்) இணைப்பு குறித்து பேசினார் எம்.ஜி.ஆர்.
அடுத்த நாள் காலையில் மாநில விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். பட்நாயக் அருகில் இருந்த கலைஞரை 'ஆண்டவரே' என்று பிரியத்துடன் அழைத்தார்.
கலைஞருடன் அன்பழகன் இருந்தார். எம்.ஜி.ஆர். நெடுஞ்செழியனையும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.
பிறகு இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பட்நாயக் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.
இந்த ஆறு நிபந்தனைகளுக்கும் பின்னாலிருந்த காரணங்களை விளக்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.
மேலும் ஒருபடி முன்னே சென்று, இரு கட்சிகளின் செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரு குறிப்பிட்ட நாளில்கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என வாக்குறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.
#கழகங்களின்_இணைப்பைக்
#தடுத்தது_யார் ?
பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த இரு தலைவர்களும் பட்நாயக்கையும் ஊடகத்தினரையும் சந்தித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினர்.
அதே நாளில் கருப்பையா மூப்பனாரை எம்.ஜி.ஆர். சந்தித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக கலைஞர் குறிப்பிடுகிறார்.
கலைஞரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் வைத்து கருப்பையா மூப்பனாரைச் சந்தித்துப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அன்று மாலையில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த
பி.ராமச்சந்திரனுக்கு விருந்தளித்தார் எம்.ஜி.ஆர்.
அடுத்த நாள் செப்டம்பர் 14ஆம் தேதி. அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.
#வேலூரில்_நடந்த_பொதுக்கூட்டம் #ஒன்றில்_பேசிய_எம்ஜிஆர். #அதிமுகவின்_கொடி_இன்னும்_ஆயிரம் #ஆண்டுகளுக்கு_உயரத்தில்_பறக்கும் #என்று_குறிப்பிட்டார்.
தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரது அமைச்சர்கள் தி.மு.க. குறித்தும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
இப்படியாக, கழகங்களின் இணைப்பு என்ற சிந்தனையை தீர்த்துக்கட்டினார் எம்.ஜி.ஆர்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பொது நிகழ்வில் பேசிய கலைஞர், இணைப்பு நடக்காமல் போனதற்கு வேறு ஒரு ராமச்சந்திரன் மீது குற்றம்சாட்டினார்.
"இதனைக் கெடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். நான் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லாவிட்டால் வரலாறு முழுமையடையாது. மாநில விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர். வேலூருக்குப் போனபோது உடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர்" என்றார் கலைஞர்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.......... Thanks.........
-
எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்...
படத்தில் வரும் ஒரு பாத்திரத்திற்கு நண்பரின் பெயரேயே வைத்து, பாடலிலும் நண்பர் பெயர் வரும்படி பாடலை எழுதி வாங்கிய நட்புக்கு பெருமை சேர்தவர்தான் நம் #எம்ஜியார்...
//#மக்கள்_திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.
ஒரு முறை தான் நடித்து வெளியான #சிரித்து_வாழ_வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள.. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை..
டி எம். சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்..
'எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்!
அன்புள்ள தோழர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்...
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்...
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும்?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும்!
#எம்ஜிஆர் திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?
பகுத் அச்சா என்பதைவிட! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. #புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.
நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!//
சரி யாருய்யா இந்த 'அப்துல் ரஹ்மான்' என கேட்பவர்கள் இந்த சுட்டியை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.vallamai.com/?p=48679
நன்றி:கவிஞர் காவிரி மைந்தன்....... Thanks...
-
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..
என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.
அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..
இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.
எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.
இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
— புவனா, மும்பை......... Thanks.........
-
#வாத்தியார் #பாட்டு
தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல...
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் – எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் ” #மலைக்கள்ளன்...
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் தயாரிக்கப்பட்டு பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்...
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக – எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது...!!!
கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!.
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி – இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.”........... Thanks to mr. BSM.........
-
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#ரேகை_சாஸ்திரம்
M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே........... Thanks.........
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பண்டிகை
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.
எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு.......... Thanks fb.,
-
"நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."
உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்..
ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..
"தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"
இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.
"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...
"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்
"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"
"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.
'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..
அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)
நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.
இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"
சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.
"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"
"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.
என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.
ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.
"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"
அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.
எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....
எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..
#படித்ததில் நெகிழ்ந்தது
#MGR #Ulagam #Sutrum #
Courtecy : Jayant Prabhakar.......... Thanks.........
-
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைய முழு காரணம் #புரட்சித்தலைவரே...!
வரலாறு தெரியாமல் வாயை கொடுத்து, வம்பில் மாட்டிய ஸ்டாலின்..
"சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக 1985-86-ல் என்னை எம்ஜிஆர் நியமித்தார்.
அவர் தலைமையில் கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில்தான் திட்டத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மனுவாக அளித்தேன்.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நல்லுசாமிக்கு எம்ஜிஆர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில்தான், 1986-87-ல் முதன்முதலில் இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது.
'கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பேருந்து நிலையம் மற்றும் சுமை வண்டி நிலையம் உள்ளிட்டவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்படும்'
-என்று 1986-87-ம் ஆண்டு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, எம்ஜிஆர் உத்தரவின்படி, அப்போதைய துறை அமைச்சர் நல்லுசாமி அறிவித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்.
இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் இது யார் குழந்தை என்பது தெரிந்திருக்கும்.
பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்."
வரலாறு இப்படி இருக்க, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதே தில்லு முல்லு திமுக-வின் வேலையாகி போய்விட்டது...
-சைதை துரைசாமி | சென்னை முன்னாள் மேயர்......... Thanks.........
-
புரட்சி தலைவர் ஆட்சியில் தான் சென்னை பாரிமுனையில் இருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையம், பூக்கடைகள், கொத்தவால் சாவடி என்ற மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை வாகன நெரிசல் காரணமாக அன்றாடம் தினறும் சென்னை வாகனநெரிசலை போக்க நிரந்தரமாக மாற்றியவர். தவிரவும் எண்ணற்ற ஊர்களுக்கு பஸ் வசதி /கிராமங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தவரும் அவர் தான். தவிரவும் 1977ஆடசிக்கு வந்த நிலையில் உயிர் காட்சி சாலையை வண்டலூர்க்கு மாற்றினார். திருவள்ளூர் /கும்மிடிப்பூண்டி ரயில் தடங்களை அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஒத்துழைப்புடன் மின்மயமாக்கினார். 11ஆண்டு எஸ் எஸ் எல் சி பாடத்திட்டத்தை நீக்கி 10வகுப்பு எஸ் எஸ் எல் சி /+2 புகுமுக பாடத்திட்டத்தை உருவாக்கி PUC ஒழித்து ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டத்தை உருவாக்கி ஏழை, நடுத்தர மக்கள் பயிலும் வகையில் எஞ்ஜினியர்/மருத்துவம்/வக்கில் படிப்பை எளிமையாக்கினார். ஐம்பது சதம் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார். நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கினார்.ரேஷன் அட்டைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கி, கடைகோடி கிராமங்களில் கூட ரேஷன் கடை உருவாக்கினார். கர்ணம், முன்சீப் பதவியை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை ஏற்படுத்தி எண்ணற்ற ஏழைவீட்டு பிள்ளைகளும் விஎஒ ஆக்கினார். குடிசைகள் ஒரு மின்விளக்கு பெற செய்தார். மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தார். போலீஸ் காவலர்களுக்கு ட்ரவுசர் பதிலாக பேன்ட் மற்றும் கோபுர தொப்பியை நீக்கி அழகான தொப்பி அணிய செய்தார். தமிழ் பல்கலை கழகம்/மகளிர் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார். எண்ணற்ற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.......... Thanks fb., Friends.........
-
வணக்கம்..!
இன்று உலகக் (World Voice Day) குரல் தினம்..!
இந் நாளில் ஒரு மகிழ்ச்சியான நற்செய்தி..!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "நான் ஆணையிட்டால்." படத்தில் இசையரசர் திரு.டி.எம்.எஸ். பாடிய "தாய்மேல் ஆணை." எனும் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த நல் வரவேற்பினைப் பெற்ற ஒரு அதியற்புதப் பாடலாகும்..!
இந்த இனிய பாடலின் இறுதி வரிக் காட்சியில் புரட்சித் தலைவர் கையில் ஒரு "திருக்குறள்" புத்தகம் இருக்கும்..! (இந் நற்தகவல் உதவி:- மெகாத் தொலைக் காட்சித் "தமிழ்நதி ஆதவன்")
அதாவது இசையரசரின் தேமதுரக்குரலுக்கும் வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனைக்கும் புரட்சித் தலைவரின் தமிழ்ப் பற்றிற்கும் மெல்லிசை மாமன்னரின் இசைநயத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த அதியற்புதப் பாடலை இன்றைய (World Voice Day) "உலகக் குரல் தினத்தில்" முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுத்து முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பயனுள்ளப் பொருத்தமானச் செயலாக யான் கருதுகின்றேன்..!
-கவிச்சாரல் காமராஜ் மாரியப்பன் கொள்ளிடம் காமராஜ்,
சர்வதேச வானொலி நேயர்,
கரோகிப் பாடகர்,
ஸ்ரீசத்ய சாய் இல்லம்,
நெ.1.டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி - 621 216....... Thanks...
-
இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து இந்திக்கும் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...?
தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் இயக்குனர் சாந்தாராமின் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.
சச்சா ஜூட்டா –இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.
ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.
ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.
ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.
ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.
ரக்வாலா- இதுவும் தர்மேந்திரா நடித்த படம்தான். காவல்காரன் என்ற பெயரில் தமிழில் உருவாக்கினார் எம்ஜிஆர். இப்படத்தில் இடம் பெறும் பாக்சிங் காட்சிகளும் ரகசிய போலீஸ்காரராக எம்ஜிஆர் ஏற்ற கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தன.
ரிக்சாவாலா- தமிழில் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற ரிக்சாக்காரன் படமே இந்தியில் ரந்தீர் கபூரும் இளமை துள்ளும் பெரிய மார்பகங்களுடைய நீத்து சிங்கும் நடித்தனர்.
ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்
சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோயில் என்று வந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.
யாதோங்கி பாரத் –தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.
உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் ஏ.ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை எனும் மதிப்பை பெற்று அதற்குபின்னர் காணாமல் போனார்.
ஹாத்தி மேரே சாத்தி –தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.
தமிழில் நம் நாடு என எம்ஜிஆர் நடித்த படமே இந்தியில் அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது.
கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். தமிழில் நீரும் நெருப்பும். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் வசூலில் வழக்கமான வெற்றி பெற்றது, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.
ராஜா ஜானி – தர்மேந்திரா-ஹேமாமாலினி ஜோடியாக நடித்த இப்படத்தை தமிழில் ராமன்தேடிய சீதையாக ஜெயலலிதா எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலிக்கிறது............ Thanks fb.,
-
1982 ஆம் ஆண்டு நம் மக்கள்திலகம் முதல்வர்.
சென்னையில் 5 ஆண்டு மருத்துவ படிப்பு முடிந்து ஹவுஸ் சர்ஜென் ஆக ஓராண்டு பயிற்சி மருத்துவர்கள் ஆக பணி புரிவோர்கள் தங்களுக்கு வழங்க படும் மாத சிறப்பு அரசு ஊதியம் 375 ரூபாய் தங்களுக்கு போதவில்லை என்று.
போராட்டம்...ஆர்பார்ட்டம்.... உண்ணாவிரதம்..ஊர்வலம் நடத்துகிறார்கள்.அப்போது சுகாராதத்துறை அமைச்சர் திருமிகு ஹண்டே அவர்கள்.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் சிலர் திரு ஹண்டே அவர்களை சந்திக்க அவர் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கி தர ஒப்புக்கொள்ள.
அதன் படி ஒரு நியாயிற்று கிழமை காலை 10.30. மணிக்கு தன் வீட்டுக்கு மருத்துவ குழுவினரை வர சொல்கிறார் மன்னர்.
அதன் படி முதல்வர் 10.30 மணியில் இருந்து காத்து இருக்க போராட்ட குழுவினர் 11.30 மணி தாண்டி தலைவர் வீட்டுக்கு செல்ல.
என்ன இவ்வளவு தாமதம் என்று முதல்வர் கேட்க எங்க கிட்ட வாகன வசதி இல்லை அனைவரும் பஸ்ஸில் வர லேட்டா ஆகி விட்டதை சொல்ல.
நீங்க சொல்லி இருந்தால் நான் டி.நகர் வந்து இருப்பேனே என்கிறார் முதல்வர்...என்ன சிந்தனை பாருங்கள்.
விவரங்கள் சொல்ல பட ஆம் உண்மை 375 ரூபாய் காணாது ஒரு மாதத்துக்கு..
படிக்கும் போது அப்பா அம்மா செலவழிப்பது சரி நீங்கள் முடித்த பிறகு அது தவறு.
சரி நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்கள் என்று தலைவர் கேட்க 500 ரூபாய் கொடுத்தால் சமாளித்து விடுவோம் என்று குழுவினர் சொல்ல.
நீங்கள் உயிர் காக்கும் மருத்துவர்கள் 500 ரூபாய் எப்படி பத்தும் மாதத்துக்கு என்று 1500 ரூபாய் கொடுக்க ஒப்புக்கொள்கிறார் நம் தங்க தலைவர்..
யாருக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று கணிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
அன்று அவர் போட்ட அஸ்திவாரத்தில் தான் இன்று தமிழக சுகாதாரத்துறை தலை நிமிர்ந்து நடை போடுவது பலருக்கும் தெரியாத உண்மை.
அன்று முதல்வரை சந்தித்த அந்த குழுவில் இருந்த 6 மருத்துவர்களின் பல முறை அதிமுக எம்பி ஆக இருந்த மருத்துவர் வேணுகோபால்
அவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல்... அவர் அப்போது ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
பின்னர் கழகத்தில் தீவிர பணியாற்றி கட்சி எம்பி ஆனார்...எப்படி..
நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...நன்றி
தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி... Thanks.........
-
#மனிதநேயம் #நம் #இனம்
#அன்பு #நம் #மதம்
P2 Media விற்காக நம்ம எம்ஜிஆர் லதாம்மா பிரத்யேக பேட்டி
You tube link :
https://youtu.be/KOqIOEdlSxw
#புரட்சித்தலைவர் #தான் #என் #ஆசான்...!
நான் எங்கு சென்றாலும் என்னை எம்ஜிஆர் லதா என மக்கள் அழைப்பதை நான் மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்...!
குறிப்பறிந்து உதவுவார்...! நிறைய நேரங்களில் நானே பார்த்து வியந்திருக்கிறேன்...!
அவரைப் போல சிறந்த தொழில்நுட்ப வல்லுந*ர் கிடையாது, எந்த வசதியுமில்லாத அந்த காலகட்டத்திலேயே அவரது தொழில்நுட்பம் மிகப் பிரம்மாண்டமாய் இருக்கும்...!
பிறருக்கு உதவும் குணம் நான் அவரிடம் கற்றது...! மனித நேயத்தில் முன்னேற இன்னமும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன்...!
அன்றைய சினிமா மற்றும் இன்றைய சினிமாக்கள் பற்றிய கருத்து...!
(எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்புடீ...!)
இன்னும் பலப்பல பசுமையான நினைவுகளை நமக்குப் பகிர்ந்துள்ளார் நம்ம எம்ஜிஆர் லதாம்மா!!! .......... Thanks.........
-
வட இந்தியாவில் உள்ள ஒரு தனியார் டி.வி சேனலில் எடுக்கப்பட்ட சர்வே யார் சிறந்த மனிதர் சிறந்த முதல்வர் மூன்று பேர்கள் பெயர் குறிப்பிட்டு கருத்து கணிப்பு எடுத்தனர் அதில் நம்ம தெய்வம் பொன்மனச்செம்மல்க்கு ஐந்தரை கோடி பேர் வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு மூன்று கோடி பேர் வாக்களித்தனர் கருணாநிதிக்கு இரண்டு கோடி பேர் வாக்களித்தனர். ..இந்த செய்தி அதிகமாக சேர் செய்யுங்கள் மக்கள் அனைவரிடமும் போய் சேரும். .......... Thanks.........
-
#கண்ணன்_என்_காதலன் படத்தில் #அம்மா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார்.
ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் மக்கள்திலகம் #எம்ஜிஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.
"காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள்" என்று #புரட்சித்தலைவர் கேட்க,
இயக்குனரோ "சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி" என்று விளக்க, காரில் ஏறப்போன #எம்ஜியார் இறங்கிவிட்டார்.
"அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன். அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது?" என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார்.
எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா? என்று உறுதி செய்தார்.
ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது.
அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர்தான் நம் #மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.......... Thanks...
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்....
ஒரு கேள்வி?
இந்த வீடியோ காட்சியை காணுங்கள்?
பல நாடுகளில் ஜனநாயக முறைப்படி மக்களால் வாக்களித்து தங்களுக்கான முதலவர்களை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது?
ஆனால் இந்த அமெரிக்காவில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி ஒன்றை மட்டும் நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாடு திரும்பிய எங்கள் மனிதபுனிதர், புரட்சி தலைவர்,மக்கள் திலகம்,பொன்மனச்செம்மல், பாரத்ரத்னா, டாக்டர்."திரு.எம்.ஜி.ஆர்" போல் சாதனை படைத்தவர்கள் எந்த நாட்டிலாவது உண்டோ?
தெரிந்திருந்தால் கருத்தை பதிவு செய்யவும்?
எம்.ஜி.ஆர் பக்தன்
A .A. பாலு...... Thanks...
-
எம் ஜி ஆர் புகழ் மக்களால்
எம் ஜி ஆரால் பலன் கண்டோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
இதில் நன்றி மறந்தோர் அதிகம்
அண்ணா முதல் இன்றைய ஆட்சி வரை எம் ஜி ஆர் எனும் சக்தியால்
எம் ஜி ஆரை மறப்பது மக்களை மறப்பது போன்று
திராவிட இனம் ஆட்சி நடக்க எம் ஜி ஆர் எனும் ஆணிவேர் வேண்டும்
எம் ஜி ஆர் எவரையும் எதிரியாக காணவில்லை எம் ஜி ஆர் முன் எதிரியாக நிற்க்க எவராலும் முடியாது
எம் ஜி ஆர் சக்தியின் பலம் அப்படி
வெற்றி வேண்டுமா எம் ஜி ஆர் சக்தி அங்கு வேண்டும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...
-
ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.
இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.
முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.
ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.
கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.
அதனை இப்போது காண்போமா?
“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.
அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?
ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?
இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!
“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”
அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!
பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!
இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.
நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!
“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”
பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?
இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!
“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.
இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!
இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?
“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”
- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?
“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”
என்றும்,
“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”
என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது......... Thanks.........
-
இந்தப்*பாடல்*திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.
தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப்*பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
திரைப்படம்: ஒளிவிளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!
இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!
இறைவா! இறைவா! இறைவா!✍........ Thanks...
-
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.
உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்
ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்
புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...
-
நான் ஏன் பிறந்தேன் படம் பார்க்காத கண்கள் இல்லை. இருந்தாலும் அதில் உள்ள சிறு கருத்துக்கள் மட்டும் கூறுகிறேன்.
படத்தின் கதைப்படி நடிகை காஞ்சனா அயல்நாட்டில் இருந்து வருவார். கால்கள் ஊனமுற்றவராக இருப்பார். எத்தனையோ வகை வைத்தியம். ,மருத்துவர்கள் பார்த்தும். அவர் கால்கள் குணமாகாது. அப்படியிருக்கையில் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடன் பழகியதும் அவரது கால்கள் குணமாகும் என்ன காரணம். ? அதுதான் அங்கே கொடுக்கப்பட்ட கருத்தாகும், ,,,.....
எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும். எந்த வகை நோயாக இருந்தாலும்
நோயாளியிடம் காட்டும் உண்மையான அன்பு. .பாசம் அவர்களுடன் பழகும் விதமும்தான் நோயை குணப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகதான் இக்காட்சி யாகும்.
மருத்துவரிடம் சென்று குணமாகாத. நோய். எத்தனையோ கோயில்கள் சென்று குணமாத நோய் ஒருவருடைய அன்பு குணமாக்கும்
மருந்தைவிட அதைக் கொடுக்கறவங்க மனசைப் பொருத்துதான் நோயாளிகளின் நோய் போக்குவதற்கு உதவும்.
இதைத்தான் புரட்சித்தலைவர் நான் பாடும் பாடல் காட்சி மூலம் நமக்கு இக்கருத்தை கூறுகிறார். ....... Thanks........
-
சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் புரட்சித்தலைவரும் கலைவாணரும் போட்டிபாடல் அனைவரும் அறிந்ததே
பாடலில் வரும் ஒரு வரி
என் .எஸ் கே....கேட்கும் கேள்வி, .
உலகத்திலேயே..பயங்கரமான ஆயுதம் எது?
புரட்சித்தலைவர் பதில். .நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு
இந்த பாடல் எழுதும் போது நாக்கு என்பதைப் மட்டுமே குறிப்பிட்டு எழுதினார்.
பாடல்வரினை கவனித்த புரட்சித்தலைவர். நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளது இருந்தாலும் ஒரு மனக்குறை
பாடல் வரியில் நாக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள் நாக்கு நன்மை தீமை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு வார்த்தை வாழ்த்துக்கள் கூறுவது. வாயாலே. புகழ்வது. நல்ல வார்த்தைகள் உதிர்வது. நல்ல கல்வி கற்பது நல்ல பாடல்கள் பாடுவது வாக்கு தவறாமல் நடப்பது இப்படி எத்தனையோ நன்மை தரும் நல்ல செயல்கள் நாக்கு தான் பயன் படுத்தக்கிறோம் .நீங்கள் எழுதிய ஒரு வரியில் நாக்கினால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் மறக்க படுகிறது. மறைக்கப்படுகிறது. அதனால் நாக்கு என்ற வார்த்தையை மட்டும் மாற்றி வேறு வார்த்தைகளில் எழுதுங்கள் அப்படியில்லையென்றால் ஒருமைப் பன்மை வருகிறமாதிரி..குறிப்பிட்ட ஒரு இனம் குறிப்பிடப்படி எழுதுங்கள் என்றார்
புரட்சித்தலைவர் கூறிய கருத்துக்களையும் சுட்டிக்காட்டியவிதமும் வியர்ந்து நெகிழ்ந்து போனார் பட்டுக்கோட்டையார். அதன் பிறகுதான்
நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு என்று மாற்றி எழுதி புரட்சித்தலைவரிடம் காண்பித்தார்.புரட்சித்தலைவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது பட்டுக்கோட்டையாரைக் வெகுவாக பாராட்டினார்....... Thanks...
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
எம்.ஜி.ஆருக்கு வாரிசு இல்லை
குடும்பம் இல்லை என்று கூறும் அறிவுஜீவிகளின் கவனத்திற்க்கு?
அரசியலில் இருந்து தன் குடும்பங்களை தள்ளியே வைத்த எங்களின் புரட்சி தலைவரின் சரித்திரத்தில் மேலும் ஒரு வைரக்கல்...
ஆம் அவர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும் அவர் இளம் வயதில் தவழ்ந்த
கேரளாவில் உள்ள வடவனூர் வீட்டை
அவருடைய தம்பியாக போற்றப்படும் வாழும் மனிதநேயம் உலக எம். ஜி. ஆர் பேரவை தலைவர் அண்ணன் திரு."சைதை துரைசாமி" அவர்களின் சீறிய நடவடிக்கையால் நினைவு இல்லமாக புதுப்பிக்கப்பட்டு நாளை 26.02.2019 அன்று திறக்கப்பட்டது...
விழாவில் புரட்சி தலைவரின் அண்ணன் பெரியவர் சக்கரபாணி குடும்பத்தினருக்கும் புரட்சி தலைவரின் பக்தர்களால் மரியாதை செய்யப்படுகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்...
மறைந்து இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு மட்டுமல்ல தான் வாழ்ந்த வீட்டுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இன்றும் பெருமையை தேடிக்கொடுக்கும் எங்கள் புரட்சி தலைவர் மனிதக்கடவுள்தான் யாருக்கு கிடைக்கும் இந்த மகத்துவம்?..
ஒன்றை மட்டும் உறுதியாகவும், தெளிவாகவும் கூறிக்கொள்கிறேன்..
புரட்சி தலைவர்
தம்பியாக போற்றப்படும் அண்ணன் "சைதையார்" உள்ளவரையிலும்...
தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் வாழும் தமிழர்கள் இருக்கும் அத்தனை இடத்திலும் பிள்ளைகளாகவும்,பேரன்களாகவும் பக்தர்ளாக நாங்கள் உள்ளவரையிலும்,
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் பெற்று விளங்கும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்....
எம்.ஜி.ஆர் பக்தன்
A.A. பாலு... Thanks...
-
பொதுவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் யாரையும் சாப்பிட்டீர்களா சாப்பீடுர்களா என்று கேட்க மாட்டார் அதற்கு காரணம் 1957 ம் ஆண்டு காமராஜர் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீடு திரும்ப. இரவு 12 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது அவருடன் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெகுநேரம்ஆகிவிட்டதால் காமராஜர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எண்ணி காமராஜரிடம் அனுமதி கேட்டனர் அவரும் சம்மதம் கூறி தனது வீட்டீர்க்கு அழைத்து வந்தார் வீட்டீர்க்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.வந்தவர்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் காமராஜர் வீட்டு உணவு ருசி அறிய. சாப்பிடவில்லை என்றனர். உடனே தனது வீட்டு பணியாளர் அழைத்து அவர்களுக்கு உணவு பறிமாற சொன்னார் அவர்களுடன் காமராஜரும் அமர்ந்து உணவு உண்டார்..மறுநாள் அவர்கள் சென்ற பிறகுதான் காமராஜர்க்கு நினைவு வந்தது நேற்று நமக்கு உணவு அளித்த பணியாளர் உணவு உண்ணவில்லையே என எண்ணி வருந்தினார் தனது வரட்டு கௌரவத்தால் அவரை பட்னி போட்டமே இனி கௌரவத்துக்காகவும் தன்மானம்த்துக்காகவும் கடமைக்காகவும் சுயநலத்துக்காகவும் யாரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்க கூடாதுஎன்று முடிவு எடுத்தார் அன்றுமுதல் அதைகடைப்பிடித்தார் (காமராஜர் வீட்டீல் அவரும் பணியாளர் மட்டும் இருப்பதால் இரண்டு பேர்க்குதான் உணவு தாயரிக்கப்படும் என்பது குறிப்பிடக்தக்கது.)இதே பத்து ஆண்டுகள் கழித்து 1967 ம் ஆண்டு ஒருமுறை காமராஜரைக் காண புரட்சித்தலைவர் அவரது அலுவலகம் வந்தார்.அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் 100 க்கு மேற்ப்பட்டவர்கள் கூடிருந்தனர் சில கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்.ஜி ஆர் வருகிறார் என்பதை அறிந்ததும் காமராஜர் சென்று அவரை வரவேற்று சாப்பிட்டீர்களா என்ன சாப்பிடுர்கள் என்று கேட்டார் இதுவரை யாரையும் அப்படி கேட்காத காமராஜர் புரட்சித்தலவரை மட்டும் கேட்டதை எண்ணி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் இதை சற்று கவனித்த புரட்சித்தலைவர் அப்படி என்ன அவர் கேட்டார் நீங்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார் அதற்கு அவர் காமராஜர் பற்றியும் அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்தார் ..இதே சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜரிடம் கேட்டனர்.ஐயா நீங்கள் யாரையும் இப்படி கேட்டதில்லை ஆனால் எம் ஜி ஆரிடம் கேட்டதற்க்கு என்ன காரணம் ? அதற்கு காமராஜர் தந்த விளக்கம் பொதுவா எம் ஜி ஆர் யாரைப் பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது வழக்கம் கேட்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அலாதி பிரியம் கொண்டவர் இது எம் ஜி ஆரிடம் மட்டும் உள்ள. தனி கலை அதுமட்டும் அல்ல அவர் வீட்டில் உணவு உண்டவர்கள் லட்சம் பேர்களுக்கு மேல் இருப்பார்கள் அதையே தனது லட்சியமாக கொண்டு வாழ்பவர் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உணவு அளித்தால் ஊருக்கு உணவு அளித்தற்கு சமம் அது மட்டும் அல்ல நான்தான் அவரை சாப்பிட்டிர்களா என்று கேட்டேன் ஆனால் அவர் நமக்கு உணவு அளிப்பார் பாருங்கள் எம் ஜி ஆர்க்கு மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எதையும் யாரிடமும் தனககு என்று கேட்க மாட்டார் என்று காமராஜர் சொல்லிமுடிக்கும் முன் அங்கே நுற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு எம் ஜி ஆர் உணவு வரவைத்துருந்தார் பார்த்தீர்களா நான் அவர் ஒருவரை கேட்டேன் அதனால் நூற்றுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உணவு கிடைத்தது என்றார் காமராஜர் இதைக்கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் எம் ஜி ஆர் பற்றி காமராஜர் எந்தளவுக்கு சராசரியா எடை போட்டு வைத்துள்ளார் என்பதை எண்ணி மகிழ்ந்தனர்....... Thanks.........
-
தலைவரை பற்றிய ஒரு தகவல் - 6
தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசிடர் கார் ஈரோட்டில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் M G R 4777 என்பதாகும்.
இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-
1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
அப்போது எம்.ஜி.ஆரிடம் T M X 4777. என்ற கார் இருந்தது எனக்கு M G R என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக M.G. R என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.
உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் M G R 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 2 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில் இருந்த 3 கார்களில் ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்
பகிர்வுக்கு நன்றி Nallasiva சகோதரரே..... Thanks...
-
#விளம்பரம்
ஒரு சமயம் எங்கள் சந்திப்பின்போது ‘மக்களிடையே ஏற்கனவே செல்வாக்குடன் விளங்கும் நடிகர்களுக்கு விளம்பரம் தேவையா, அல்லது வளரத்துடிக்கும் திறமைசாலிகளுக்கு அதிக விளம்பரம் அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.
“செல்வாக்குடன் விளங்கும் கலைஞர்களுக்குப் பதிலாக வளரும் நிலையிலுள்ளவர்களுக்கு போதிய விளம்பரம் தந்தால், அந்த விளம்பரம் அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, அவர்கள் முன்னேற உதவுமல்லவா? என்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.
“செல்வாக்குடன் விளங்கும் உங்களைப் போன்றவர்களைப்பற்றி செய்திகளும் படங்களும் வெளியிடும்போது மக்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். அதே சமயம் புதுமுகங்களைப் பற்றியும், வளரும் கலைஞர்களைப் பற்றியும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ‘பேசும் படம்’ அதைத்தான் செய்கிறது என்று சொன்னோம்.
’அப்படியானால் புதுமுகங்கள் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.
இந்தப் பதில் எங்களுக்கு மிக்க மன நிறைவு தந்ததுடன், அவர் மீதுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் கூட்டியது.
சக கலைஞர்களுக்காக - அவர்கள் அறியாமலேயே - அவர்களது நலனுக்காக முன்னின்று வாதிடும் தன்னலமற்ற செயல்வீரராக அவரைக் கண்டோம். தன் வாழ்நாளின் கடைசிவரை அப்படித்தான் அவர் விளங்கினார்.
#நன்றி: பொம்மை சாரதி...... Thanks...
-
மக்கள் திலகம்.மக்கள்.மேல் வைத்திருந்த அன்புக்கு இந்நிகழ்ச்சி ஒர் சமர்ப்பணம் ஆகும்
ஆண்டு அமைச்சர் பெயர் சரியாக. நினைவு இல்லை ஆனால் நடந்தது உண்மை ஆகும்
நமது தெய்வம் பொன்மனச்செம்மல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து தாயகம் திரும்பிய நேரம் சென்னை விமான நிலையத்தில் மக்கள் திலகம் காணவும் வரவேற்கவும் மக்கள் தலைகள் அலைகக்கடலன. காட்சியளித்தன
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் வசனம் போல்
மாண்டுபோன முருகன் மறுபிறவி எடுத்து வருவதுப்போல் நமது பொன்மனச்செம்மல் மறுபிறவி எடுத்து வந்ததை எண்ணி மக்களிடம்
மகிழ்ச்சி சந்தோஷம் ஆரவாரம் கைத்தட்டல் விண்ணை பிளந்தது மழை வெயில் பொருட்படுத்தாமல் தூக்கம் உணவு இல்லாமல் எண்ணம் செயல் எல்லாமே தலைவரை காண்பதே குறிக்கோள் என்று 24 மணி நேரம் காத்திருந்தனர்
பொன்மனம் கொண்ட. பொன்மனச்செம்மல் விமான நிலையம் வந்ததும்
மக்கள் கூட்டத்தையும் மக்களின் அன்பையும் கண்டு தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார்
இவர்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன் ஏன் என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் இனி என்ன செய்ய போகிறன் என எண்ணி மனம் உருகினார் மக்களிடம் கையசத்து அவர்கள் அன்பையும் வாழ்த்தும் பெற்றுக்கொண்டு தியாகராய நகரில் தனது அலுவலகம் வந்துக்கொண்டீருந்தார்
விமான நிலையம் கிண்டி சைதாப்பேட்டை வழியாக வரும் எங்கும் புரட்சித்தலைவர் கட்வுட்டு வரவேற்பு அலங்காரம் என்று வரிசையாக மாம்பழம் அலுவலகம் வரை அலங்கரிக்கப்ப.டு இருந்தது காரில் வரும் வழிஙெங்கும் இதைக்கவனித்துக்கொண்டுவந்தார் அலுவலகம் வந்ததும் இந்த விளம்பரம் செய்த அமைச்சர் பெயரைக்கூறி தன்னை வந்து சந்திக்க. சொன்னார்
அமைச்சர்க்கு குஷி தாங்கல புரட்சித்தலைவரே தன்னை அழைக்கிறார் என்றால்
நமக்கு பாரட்டு விழா நடக்கும் என. மகிழ்ந்து தலைவரைக் கான சென்றார் மற்ற. அமைச்சர்களுக்கும் இவர் மீது சிறிது பொறாமை ஏற்ப்பட்டது
தலைவர் அமைச்சர் வந்தும் சாப்பிட்டீர்களா என்று கேட்டு முதலில் போய் சாப்பிடுங்கள் பிறகு என்னை வந்து பாருங்கள் என்றார் சாப்பிட்டு வந்த. அமைச்சரிடம் கேட்ட. முதல் கேள்வி ..என்னை வரவேற்க. செய்த. செலவு மொத்தம் எவ்வளவு என்றார் அதற்கு பணம் ஏது யாரிடம் வசூல் செய்தாய் உன் வருமானம் எவ்வளவு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபம் கொண்டார்
என்னை பார்ப்பதற்க்காக. வெயில் மழை என்று பாரமல் மக்கள் காத்திருக்கிறார்கள் என்மனம் குளிரவைப்பதற்க்காக அவர்கள் வயிறு எரியவைத்தாயே அந்த பணத்தில் ஒரு லெமன்சாதம் தயிர் சாதம் புளிச்சாதம் வாங்கிக்கொடுத்துருந்தால் அவர்கள் வயிறு நிறைந்திருக்கும் அல்லது ரஸ்னா மோர் குளிர்பானம் கொடுத்துருந்தால் அவர்கள் மனம் குளிர்ருந்துருக்கும் இதுதான் நீ எனக்கு செய்யும் தொண்டு நீ என்னிடம் நல்லபெயரை வாங்க. வேண்டும் என்பதற்க்காக. மக்களிடம் எனக்கு கெட்ட பெயர் உருவாக்க. பார்த்தாயே இனி நீ என் கட்சிக்கு தேவையில்லை ஆடம்பரம் செலவு செய்பவர்களை ஒரு நாளும் நான் நேசிப்பதில்லை என்று கூறி அமைச்சர் பதவி முதல் அடிப்படை உறுப்பினர் வரை கட்சியே விட்டு நீக்கினார்
மக்களுக்கு பணி புரியாதவர்கள் மக்களை மதிக்காதவர்களையும் மக்கள் திலகம் ஒருநாளும் மதிக்கமாட்டார் விரும்ப மாட்டார்...... Thanks...
-
எம்.ஜி.ஆரின் பலகீனம்???
-----------------------------------------
இந்தப் பதிவை கவனமாகப் படித்து உள் வாங்குமாறு கேட்டுக் கொள்கிறென்!1
இன்றைய அரசியல்வாதிகள் இப்படி முழங்குவார்கள்!
என் உயிரைக் கொடுத்து என் நாட்டைத் தூக்கி நிறுத்துவேன்!!
நீ உயிரை விட்டா,,உன்னைத் தூக்கவே நாலு பேர் வேணும்? நீ எப்படி நாட்டு மக்களைத் தூக்கி நிறுத்துவே??
என் வீட்டையே நாடாகவும்,,என் பிள்ளைகளையே மக்களாகவும் நினைச்சு நான் சொன்ன வார்த்தை அது? அரசியல்வாதியின் விளக்கத்துக்கு நம்மிடம் சரியான பதில் இல்லாத காரணத்தால்--
ஒரு நிகழ்வில் நம் கவனத்தைத் திருப்புவோம்!!
முன்னாள் அமைச்சர் அரங்க நாயகம்!!
எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலேயே காபினட் மந்திரியாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.
அவர் அடிக்கடி மேடையில் ஒன்றைச் சொல்வார்!
எம்.ஜி.ஆர்,,,எப்போதுமே மக்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்!
எந்தப் பயனும் எதிர்பார்க்காமல் இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கும் இந்த மக்களுக்கு என்னாலே,,நான் நினைச்ச அளவுக்கு செய்ய முடியலே??
தனியாக எங்களுடன் உரையாடும்போது கூட இதைச் சொல்லியே புலம்புவார்!
நாங்கக் கூட சில சமயம் அவரிடம் சொல்வோம்!!
இப்படி ஓவராக அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க!!
அந்த அளவு அவர் மனசுலே மக்களைப் பற்றிய நினைவே மண்டியிட்டுக் கிடந்தது!!
அந்த மன உளைச்சலே அவரை நம்மிடம் இருந்து சீக்கிரம் பறித்து விட்டது என்று கூட சொல்லலாம்!!
சரி! ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்!
அது எம்.ஜி.ஆர் குணமடைந்து தாய் நாடு திரும்பி ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த நேரம்!!
வக்கீல்கள் அணிகள் பல்வேறு அம்சங்களை வேண்டி போராட்டம் நடத்துகின்றன!
முதல்வர் எம்.ஜி.ஆர்,,அவர்களின் பிரதி நிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!
ஊரில் இல்லாத சட்டங்களையும் உதவாத கோரிக்கைகளையும் அடுக்கிக் கொண்டே எம்.ஜி.ஆரை டென்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள் பிரதி நிதிகள்!
பொறுமை இழந்த எம்.ஜி.ஆர் கடுங்கோபத்துடன் வெளியில் விரலை சுட்டிக் காட்டியவாறு வேகமாக வார்த்தைகளை வெளியே அனுப்புகிறார்?
இதைப் பாருங்க!! உங்க நிலைமையை விட வெயிலில் வெளியே என்னைப் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம்!!
இந்த ஆட்சியையே கலைச்சுட்டு அவங்க கூட சேர்ந்துடுவேன்.?
அவுங்க ஆதரவில் தான் நான் இன்னிக்கு முதல்வரா இருக்கேனே தவிர உங்க தயவுலே இல்லை! அதைப் புரிஞ்சுக்கிடுங்க??
அந்தப் பிரதி நிதிகளே,, எம்.ஜி.ஆரின் அந்த பதிலில் ஆடிப் போனதுடன்--மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும்--அவர்களைப் பற்றிய நலனிலேயே அவர் கொண்டிருந்த இடைவிடா சிந்தனையையும் கண்டு மனம் நெகிழ்ந்தார்களாம்??
ஏன்? பதிவைப் படிக்கும் நாமும் தானே????... Thanks........
-
வாள் எம் ஜி ஆர் சேர்ந்தால் அங்கு மின்னல்களின் அணிவகுப்பு
ஒவ்வொரு வீச்சும் ஒரு மின்னல் வேகம்
நீரும் நெருப்பும் கடைசி சண்டை காட்சி எம் ஜி ஆரின் ஸ்டைல் அத்தனையும் கொண்ட வாள்வீச்சு
முதலில் கரிகாலனாக முரட்டு தனமான வாள்வீச்சு இடிபோல் இறங்கிய வாள் எதிரின் திகைப்பை அசோகன் நன்றாக பிரதிபலிப்பார் பின் மணிவண்ணனாக எம் ஜி ஆர் இடது கையால் வாள் வலது கை வேகத்தில் சுழற்றுவார் என்னா ஒரு லாகவம் நேரிடையாக இதை பார்த்த இந்தி பிரபல நடிகர் ஒருவர் பிரமித்து உடனே எம் ஜி ஆர் பிரமிப்போடு பாராட்டினார் பின் இரு கரத்தால் வாள் வீசுவார் எம் ஜி ஆர் என்ன ஒரு அழகு இடது கையால் வீசி கொண்டே இடையிடையே வலது கையால் இடிபோல் தாக்குவார் என்ன ஒரு சக்தி அதில் வாள் கொண்டு எதிரியை பந்தாடுவார் அங்கும் இங்கும் எவராலும் செய்ய முடியாத காட்சி இது முடிவில் இடது வலது என எதிரியின் உடலில் வாளால் கோலம் இடும் வேகம் ஸ்டைல் எழுதும் போதே புல்லிரிக்கும் காட்சி
வில்லுக்கு விஜயன்
வாளுக்கு எம் ஜி ஆர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...
-
தமிழன் ஏமாளி அல்ல
சினிமா பைத்தியம் அல்ல
அரசியல் கட்சிகள் சினிமா நடிகர்களை அவர்கள் ரசிகர்கள் போதும் தமிழகம் ஆள என எண்ணும் அவலம்
ரஜினிகாந்து விஜய் கமல் இப்போது தேசியகட்சி ஒன்று அஜீத்க்கு வலைவீசியுள்ளது
எந்த கொள்கையும் இல்லாத இந்த நடிகர்கள் தன் குடும்பத்துக்கு கோடிகணக்கில் சேர்த்து விட்டு பதவி ஆசையில் மக்களை ஏமாளி ஆக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள்
இவர்களின் எண்ணத்தை தூள் ஆக்கி கடும் தோல்வி மூலம் ஒரு பாடம் புகட்ட தமிழ் மக்கள் தயார்
எம் ஜி ஆர் முதலில் மக்கள் சேவை நாட்டு சேவை திராவிடம் மூலம் தமிழ் மக்கள் நலம் காக்க போராடி அரசியல் களம் கண்டவர் காலத்தின் கட்டளை கட்சி நிறுவி பொற்கால ஆட்சி தந்தார்
நடிகர்கள் எல்லாம் எம் ஜி ஆர் ஆக முடியாது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...
-
எம் ஜி ஆர் பிறந்த நாள்
அன்றும் இன்றும் என்றும் எங்கள் எம் ஜி ஆர் தான் அவருக்கு இணையா எவரும் இல்லை
ஆண்டுகள் கால் நூற்றாண்டு கழிந்து விட்டது ஆனால் சினிமா அரசியல் எம் ஜி ஆரை சுற்றியே நகர்கிறது
இது எவராலும் சாதிக்க முடியா சாதனை
இந்தியா எதிர்த்தபோதும் தமிழனுக்கு உதவிகரம் நீட்டிய மாவீரன் எம் ஜி ஆர்
இந்தியா பாரதரத்னா அளித்து கௌரவித்தது எம் ஜி ஆரை
தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜீ
அறிஞர் அண்ணா கண்ணியத்துக்குயுரிய காயித்தே மில்லத் அன்னை தெரசா போப்பாண்டவர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலக குத்து சண்டை வீரர் முகமது அலி முப்படை வைத்து போராடிய பிரபாகரன் இவர்கள் மட்டும் அல்ல எம் ஜி ஆரை எதிர்த்து விமர்சித்த காமராஜ் கருணாநிதி ஜோயவர்த்னா தமிழ்வாணன் சோ கண்ணதாசன் சிவாஜிகணேசன் வைகோ டி ராஜேந்தர் சீமான் கம்மியூனிஸ்ட் பாலசுப்பிரமணியன் வரை எதிரிகளாலும் இன்றுவரை புகழபட்டவர் எம் ஜி ஆர் ஒருவரே
எல்லோருக்கும் நல்லவர் வல்லவர் எம் ஜி ஆர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...
-
அதுவரை மக்கள் திலகத்தின் பிறந்தநாள் எது? என்று யாருக்கும் தெரியாத நிலையில் பப்ளிக்காக போட்டுடைத்த தலைவரின் நண்பர்...
#புரட்சித்தலைவர் முதல்வரான பிறகு 1978 ஜனவரி மாதம் 17–ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் எம்ஜியாரின் நண்பர் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள் விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும் வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைப்பார்த்த #புரட்சித்தலைவர் தன் நண்பரை தொலைபேசி வாயிலாக அழைத்து,
‘‘என் பிறந்த நாள் உங்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் சொன்னதும் கிடையாது, சொல்றதும் இல்லை. அப்படி இருக்கும்போது இன்னிக்கு நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில் போட்டிங்க?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார்.
அதற்கு முதலியார், ‘‘இப்போ நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர் இல்லே. இந்தத் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர். இதுவரைக்கும் இல்லேன்னாலும், இப்போவாவது – இனிமேலாவது உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான் தினத்தந்தியிலே போட்டேன்’’ என்றார்.
புரட்சித்தலைவரால் பதில் ஏதும் பேசமுடியவில்லை. அதற்குப் பிறகுதான் புரட்சித்தலைவரின் பிறந்த நாள் ஜனவரி 17 என்பது அவருடைய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் அரசியல், திரை உலக நண்பர்களுக்குமே தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17 புரட்சித்தலைவர் பிறந்த நாளில் முதலியாரின் வாழ்த்துச்செய்தி தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து கொண்டிருந்தது.
புரட்சித்தலைவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வென்று முதல்–அமைச்சர் ஆன பிறகும்கூட அவர் இல்லாமல் முதலியாரின் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷங்களும் நடைபெற்றது இல்லை, நடக்கவும் நடக்காது.
முதலியாரது பிள்ளைகளின் திருமணச் சடங்குகளை சம்பிரதாயப் பிரகாரம் பிராமணப் புரோகிதர்கள் நடத்துவார்கள்.
ஆனால் தேங்காய் மீதிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகனின் கரங்களில் கொடுப்பது மட்டும் ஒரே ஒருவருடைய கரங்கள்தான்.
அது அள்ளி அள்ளி வழங்கிய மகாபாரதக் கர்ணனுடைய கரங்களுக்குச் சமமான புரட்சித்தலைவரின் கரங்கள்தான்.
அந்த அளவிற்கு புரட்சித்தலைவரும், பரமசிவ முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும், நட்பையும் மட்டும் அல்ல, ஆரூயிரையே வைத்திருந்தனர் என்றால் அது சற்றும் மிகை அல்ல.
எப்படா பிறந்தநாள் வரும். தொண்டர்களை அறிவாலயம் வரச்சொல்லி வசூல் வேட்டை நடத்தலாம் என்றிருந்த தலைவரை போலல்ல நம் தலைவர்.
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான வாத்தியார் ஒரு போதும் தம் பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை....... Thanks...
-
திமுக-வுக்கு மறக்க முடியாத மரண அடி கொடுத்த #மக்கள்திலகம்..எம்.ஜி.ஆர்
தி.மு.கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அவர்களை திட்டமிட்டு நீக்கி அவமானப்படுத்திய திரு. கருணாநிதிக்கு தக்க அரசியல் பதிலடி கொடுக்க பொருமையாக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் #புரட்சிதலைவர்.
அந்த தருணமும் விரைவில் வாய்த்தது பொண்மனசெம்மல் அவர்களுக்கு
ஆம். அப்போது திண்டுக்கல் மக்களவை உறுப்பினரான இருந்த திமுகவை சேர்ந்த ராஜாங்கம் திடீரென மரணம் அடைந்தார்.
ஆகவே, திண்டுக்கல் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் மீதான மக்களின் மனவலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது அரசியல் ரீதியான பொதுவான கருத்து.
அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி.
செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர்தான் பொன்.முத்துராமலிங்கம்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது மக்கள் திலகத்தின் கணிப்பு. உடனே மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார்.
சுயேட்சி சின்னமான இரட்டை இலையை தேர்ந்தெடுத்தார் மாயத்தேவர்.
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் #புரட்சித்தலைவர் களத்தில் இறங்கினார்.
அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்.
திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ்.முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.
'படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன்' என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் தமிழகம் முழுவதும் வெளியானது.
அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி.
உண்மையில் அந்த படத்தின் வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின.
அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபார வெற்றியைப் பெற்று திமுகவை மண்ணை கவ்வ செய்தார்.
ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மாறாக, திமுக வேட்பாளர் வெறும் பொன்.முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று, மூக்குடைபட்டு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
கருணாநிதியை கதற அடித்த தேர்தல் என்றால் இதுதான்.
அறிமுக மேச்சிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ் மேன் போல வலம் வந்தார் நமது வாத்தியார்.
ஜீரணிக்க முடியாத இந்த தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.
"தி.மு.கழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது." என்று..
(படம்: முதல் முறையாக தமிழகத்தில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாயத்தேவர் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு மலர் மாலையிட்டு கழகத்தின் வெற்றியை சமர்பித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்)
பதிவு எண்:13,
பதிவுகள் பிடித்திருந்தால் லைக், சேர், கமெண்ட் பன்னுங்க, அதிமுக, அன்பர்களே, நண்பர்களே, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.அம்மா அவர்களின் குறிப்புகள், புகைப்படங்கள், மேடை பேச்சுக்கள், திரைப்பாடல்கள், காண விரும்பினால் லிங்கை தொடரவும் https://www.facebook.com/groups/237398323372711........... Thanks...
-
ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் நிரபராதியாக இருந்தும் தண்டனை பெறுவார். அவர்க்கு பதில் நீதிபதியாக இருக்கும் நடிகர் சுந்தர்ராஜன் அபாதாரம் கட்டுவார் அதற்காக சுந்தர்ராஜன் காண வீட்டுக்கு வருவார்.புரட்சித்தலைவர் வரும் போது நீதிபதியான சுந்தர்ராஜன் வேலைக்காரிடம் பேசிக்கொண்டுருப்பார் வேலைக்காரி சென்ற பிறகு தனக்காக கட்டிய பணத்தை சுந்தர்ராஜன் எதிராக உள்ள மேஜை மீது வீசுவார்
இந்த காட்சியினை உற்று கவனித்தால் அதன் பொருள் அறியலாம்
புரட்சித்தலைவர் வந்தவுடன் பணத்தை வீசவில்லை. வேலைக்காரி சென்ற பிறகுதான் பணத்தை வீசுவார் அதற்கான காரணம்.
ஒரு வேலைக்காரிக்கு முன்னால்..நீதிபதியே அவமானம் படுத்தக் கூடாது என்பதற்காகவும் சுந்தர்ராஜன் கெட்டவனாக இருந்ததாலும் அவர் படித்த படிப்புக்காவும் அவர் ஏற்றுள்ள பதவிக்கு மரியாதை கொடுக்கனும் என்பதற்காக
அக்காட்சி அமைந்திருக்கும். ...மேலும் தொடரும். ......... Thanks....
-
ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகை மஞ்சுளா அறிமுகம் பாடல் காட்சி முடிந்தவுடன் கல்லூரி முதல்வராக நடித்த நடிகையர் பேசும் போது
பெண்கள் அழகிகளாக இருக்கலாம். ஆண்மைக்களா இருக்கக்கூடாது.
என்று பேரறிஞர் அண்ணா சொன்னதாக கூறுவார். அவர் சொன்னவுடன் அனைவரும் கைத்தட்டுவார்கள்.இக்காட்சி சற்று உற்று கவனித்தால் ஒர் உண்மை புலப்படும். கைத்தட்டுப்போது பெண்கள் மட்டுமே கைத்தட்டுவதைக்காட்டுவார்கள்.
காரணம் இக்கட்சியில் வரும் வசனம் பெண்களுக்கு அறிவுரை கூறுவது போலவும் அதே நேரத்தில் அவர்களிடம் உள்ள தவறை சுற்றிக்காட்டுவதை போலவும் அமைந்திருக்கும். அது போன்ற வசனம் வரும் போது ஆண்களும்.கைத்தட்டுவதுப்போல் காண்பித்தால் .அது பெண்களுக்கு எதிரான கருத்தாக சித்தரிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து பெண்களே இக் கருத்தை ஏற்றுக்கொள்வதுப்போலவும் பெண்கள் இக் கருத்தை ஆதரிப்பதுப்போலவும் இக் காட்சி அமைந்திருக்கும் இது சமயோகிதனமான அறிவுக்கு வேலைக்கொடுக்கும் காட்சியாகும் சாமானியர்கள் இதைக்கண்டுப்பிடிப்பது கடினம். ..மேலும் தொடரும். ......... Thanks...
-
ரிக்ஷாக்காரன் படத்தில் வாத்தியார் கூறும் அறிவுரைகள்
வாயாலே வாழ்த்தறாங்களே அதை நம்ப முடியாது வயிறு வாழ்த்தவேண்டும்
சாமர்த்தியமாக நெருப்பை மூடி மறைக்கலாம் ஆனால் புகையை மறைக்க முடியாது.
இலக்கணம் தெரிந்தா மட்டும் போதாது அடுத்தவங்களை மதிக்கனும் அதுதான் வாழ்க்கையின் அரிச்சுவடி
முறைப்படி நடக்கற தொழிலுக்குத்தான் கெளரவம் இருக்கும். .தொழிலுக்கு கெளரவம் இருந்தால்தான் எல்லோரும் ஈடுபட முன் வருவார்கள்
குடிசைகள் எல்லாம் எப்போ கட்டிடங்களாக மாறுதோ அப்பத்தான் மனுசனின் தரம் கூட உயரும் எல்லோரும் மதிப்பார்கள்
உண்மைக்கு சாட்சி மனசாட்சி யாருக்கிட்ட என்ன கேட்கறதங்கற வரைமுறை இல்லாததினால்தான் உண்மை தெரிந்திருக்கும் நல்லவஙுககூட சாட்சி சொல்லபயப்படறாங்க
எல்லோரும் மகாத்மா அளவுக்கு உயராமல் இருக்கலாம். ஆனால் சராசரி மனிதனாக இருக்கலாம் அல்லவா.
ஒரு பொம்பள நிம்மதியா வாழமுடியும் என்ற நம்பிக்கை எப்போ வருதோ அப்பத்தான் சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம்.
கல் உடைந்தால் படியாகும். .வில் உடைந்தா விறாகும்..குடும்பம் உடைந்தால் குப்பைக்கு கூட ஆகாது.
மனசாட்சியே போல கண்டிப்பான நீதிபதியே பார்க்கவே முடியாது. ..
உடல் உழைப்பும் அறிவும் சேர்ந்து செயல்பட்டால்தான் எந்த தொழிலுக்கும் மதிப்பும். கூடும். அப்பத்தான் நாடு நாடாக இருக்கும். இல்லையென்றால் நாடு என்று போர்டு போட்டால்தான் தெரியும்
கண்ணு கெட்டா கூட மருந்து உண்டு ஒரு பொண்ணு கெட்டபோயிட்டா என்று பேர் எடுத்துட்டா மண்ணுக்கு போனாகூட் அந்த பேர் மறையாது
என்னத்தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும். மற்றவர்கள் உணரும் படி எடுத்து கூறினால்தான் எந்த நியாயமும் எடுப்படும் உண்மைமைக்கு என்றும் அழிவில்லை
ஒரு பொண்ணுடைய வாழ்க்கை லட்சியம் ஒன்று நல்ல மனைவியாக இருக்கனும். மற்றொன்று நல்ல தாயா இருக்கனும்
கெட்டவர்கள் யாரையும். வேண்டாம் திருத்துவோம்........ Thanks...
-
புரட்சித்தலைவர்.முதல்வராக இருந்தப்போது அவரை தேடி சுமார் பத்து பதினைந்து இளைஞர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு என்னை வந்து பார்க்கும் படி கூறினார்.அதேப்போல் அனைவரும் சாப்பிட்டவுடன் புரட்சித்தலைவர்க்காக காத்திருந்தனர்.அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் எதற்க்காக வந்திருக்கிறார்கள்..என்பதைப் புரட்சித்தலைவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். இருந்தாலும் அவர்களா கூறவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தார். தனது அலுவலகம் வந்தவுடன் அவர்களை அழைத்தார். என்ன விஷயம் எதற்க்காக வந்திருகக்கிறீர்கள் என்று கேட்டார். வந்தவர்கள் கூறினார்கள்....
ஐயா நாங்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளோம் நாங்கள் எல்லோரும் மலையாளிகள் எங்கள் ஊரில் உங்கள் தாயார் பெயரில் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறோம். அதற்க்காக தாங்களிடம் நிதியுதவி பெறவே வந்துள்ளோம் என்று கூறினர் அவர்கள் கொண்டுவந்த அழைப்பிதழ் குறிப்புகள் யாவும் கொடுத்தனர்.
அதையெல்லாம் வாங்கிப் பார்த்தார் புரட்சித்தலைவர் ..நீங்கள் எல்லாம் எனது தாயார் பெயரில் நிதி கேட்டது தவறு இல்லை ஆனால் மலையாளி என்று கூறி நிதி கேட்டுருக்ககூடாது நீங்கள் என்னை மலையாளி என்பதால் தமிழகமக்களிடம் இருந்து பிரித்து பார்க்கீர்கள் நான் தமிழன் தமிழ்தான் என்னை வாழவைத்தது .பேர் புகழ் தந்தது இந்த உயிர் மூச்சு எல்லாம் தமிழம் தமிழக மக்கள் தந்தது ... தமிழக மக்களுக்காக எதையும் விட்டு கொடுப்பேன் ஆனால் தமிழை விட்டுக்கொடுக்கப்மாட்டேன் அதுமட்டும் அல்ல நீங்கள் தந்த அழைப்பிதழ் தமிழ் வார்த்தை தமிழ் எமுத்து எதுவும் இல்லை. சாரசரி மனிதனாக வந்து எந்த உதவியும் கேளுங்கள் செய்கிறேன் ஜாதி பெயர் மதத்தின் பெயர் மொழி பெயர் சொல்லி எந்த உதவியும் கேட்டாலும் செய்ய. மாட்டேன்.மீண்டும் இதுப்போல் மலையாளி கேரளா என்று கூறிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்று அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தார்......... Thanks...