https://scontent.fyto1-2.fna.fbcdn.n...97&oe=5EC40385
Printable View
" மன்னவன் வந்தானடி – தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி – தோழி "
இன்று 21/04/2020 காலை 11.00 மணிக்கு சன் லைஃப் டி.வி.யில் நடிகர் திலகத்தின் கம்பீரமான நடையை, நடிப்பை, பாடலை,
மற்றும் அப்பராக என அசத்திய" திருவருட் செல்வர் " படத்தை காண தவறாதீர்கள். !!!
இப்படத்தில் நடிகர்திலகம், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்
இன்று 21/04/2020 - இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " நீதிபதி "
இந்த படத்தில் நடிகர் திலகம், பிரபு, கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்து உள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள்.
'சிந்தனை செய் மனமே...செய்தால் தீவினை அகன்றிடுமே...சிவகாமி மகனை ஷண்முகனை...சிந்தனை செய் மனமே...செய்தால் தீவினை அகன்றிடுமே.'
இன்று 21/04/2020 வசந்த் டிவி. யில் மதியம் 01.30p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த காதல் காவிய படம் 'அம்பிகாபதி' காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் சிவாஜி, பானுமதி, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இன்று பாகப்பிரிவினை
************************************
"அங்கம் குறைந்தவனை...அழகில்லா ஆண் மகனை... மங்கையர்கள் நினைப்பதுண்டோ...பொன்னம்மா வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா.."
இன்று 21/04/2020 - காலை 11.00 மணிக்கு முரசு தொலைக்காட்சி இல் நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் "பாகப்பிரிவினை ".!!
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
எத்தனை எத்தனை நடிகர் திலகம் திரைப்படங்களப்பா?
எதைப் பார்ப்பது?
எதைக் காண்பது?
சினிமா என்றால் அது சிவாஜி தானே
சின்னத்திரைகளுக்கு தெரியாதா என்ன?
கண்ணைய்யாவைப் பார்ப்பேனா?
அப்பரைத் தான் பார்ப்பேனா?
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினுள் குறைவதுண்டோ
யாருக்குத் தான் பொருந்தும் இந்த பொன் வரிகள்
சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே
என நேற்றைய பொழுது சிவமே கதி எனவும் இருந்தாச்சு
இன்றோ கணக்கிலடங்கா சிவாஜி காவியங்கள்
காலை 10 மணிக்கே கலைஞர் டிவி வாழ்க்கையை ஆரம்பித்து விட்டது
காலை 11 மணிக்கு சன் லைப் - திருவருட்ச்செல்வர்
அதே 11 மணிக்கு முரசு சேனலில் தான் பாகப்பிரிவினையும் நடக்க இருக்கிறது,
1:30 க்கு பாலிமர் சேனலில்.ஜல்லிக்கட்டு வேறு நடக்க இருக்கிறது,
அதே 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில் அம்பிகாபதி கவியரங்கு அரங்கேற்றம்,
இரவு 7 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் நீதிபதி,
மீண்டும் இரவு 7:30 க்கு முரசு சேனலில் பாகப்பிரிவினை
Thanks Sekar
தமிழின் உண்மையான சரித்திர நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.
பராசக்திக்குப் பிறகு கருணாநிதி கதை வசனத்தில் சிவாஜி நாயகனாக நடித்த மனோகரா படம் மகத்தான வெற்றி பெற்றது. கருணாநிதியின் வசனங்களுக்கு சிவாஜி அளவுக்கு உயிர் கொடுத்த தமிழ் சினிமாவின் நாயகன் என வேறு யாரையும் சொல்ல முடியாது. அவர் திரையுலகுக்கு அறிமுகமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1954இல் வெளிவந்த மனோகரா சக்கை போடு போட்டது. படத்தில் இடம்பெற்ற கருணாநிதியின் வசனங்கள் தமிழ் மனங்களில் சில பத்தாண்டுகள் வரை நிலைத்திருந்தன. பாத்திரப் படைப்புகளின் பெயர்களில் ஒன்று வசந்தசேனை, பதவி ஆசை கொண்ட எதிர்மறைப் பெண் பாத்திரம். அந்தப் படத்தில் சிவாஜிக்கு இணையாகப் புகழ் பெற்றவர் சிவாஜியின் தாயாக நடித்த கண்ணாம்பா. வசனங்களை உச்சரிப்பதில் தேர்ந்த நடிகையான கண்ணாம்பா பிறகு சிவாஜியின் பல படங்களில் அவருக்குத் தாயாக நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் கண்ணாம்பா ஒரு வசனம் பேசுவார், ‘மகனே மனோகரா, பொறுத்தது போதும் பொங்கியெழு’ என்னும் அந்த வசனம் இன்று வரையிலும் நினைவிலிருப்பது,
தன் திரையுலக வாழ்வின் முதல் பதினைந்தாண்டுகளில் சிவாஜி வரலாற்றுக் கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவற்றில் சில வரலாற்றுப் பின்புலம் கொண்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்கள். 1950களில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படம் தமிழின் மிகச் சிறந்த காதல் காவியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டது. கவியரசர் கம்பரின் வரலாற்றோடு சம்மந்தப்பட்ட கதை அது. மகாகவி காளிதாசரின் வரலாறு சார்ந்த கதையம்சம் கொண்ட மகாகவி காளிதாஸ் சிவாஜியின் நடிப்பில் உருவான குறிப்பிடத் தகுந்த படம். தெனாலிராமன் என்னும் தலைப்பில் சிவாஜி நாயகனாக நடித்த படமும் வரலாற்றுப் பின்புலம் கொண்ட படம்தான்.
சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன், தங்கமலை ரகசியம், தங்கப் பதுமை, தங்கமலை ரகசியம், காத்தவராயன் போன்ற அவரது குறிப்பிடத்தக்க படங்களில் பல வரலாற்றுக் கதையம்சம் கொண்டவை.
நேரடியான வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்ட படங்களில் மட்டுமல்லாது சமூகப் படங்களில்கூட ஓரிரு காட்சிகளில் வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அன்னையின் ஆணை என்னும் சமூகப் படத்தில் சிவாஜிக்கு எதிர் நாயகன் பாத்திரம். தன் அம்மாவை ஏமாற்றியவனைக் கொடூரமாகச் சித்ரவதை செய்யும் நாயகன். அந்தப் படத்தில் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ ஓரங்க நாடகமாக இடம்பெற்றிருக்கும். சிவாஜி அதில் ஆங்கில வசனங்களைப் பேசி நடித்தாக நினைவு.
அவர் நாடக நடிகனாக வேடமேற்று நடித்த திரைப்படத்தில் திருப்பூர் குமரன் வேடத்தை ஏற்றிருப்பார். ஒரு படத்தில் ஜூலியஸ் சீசராக நடித்திருப்பார். பாரதியாகக்கூட ஒரு படத்தில் தோன்றியிருக்கிறார் சிவாஜி.
1970களில் வெளிவந்த ராமன் எத்தனை ராமனடி என்னும் சுமாரான படத்தில் சிவாஜி மராட்டிய மாவீரன் சிவாஜியின் வேடமேற்று ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த வேடத்துக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமானவர்கள் அல்ல என்னுமளவுக்குச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட காட்சி அது.
அந்தப் படத்தில் சிவாஜி ஏற்று நடித்த பாத்திரம் திரைப்பட நாயகனின் பாத்திரம். நடிகர் திலகம் விஜயகுமார் என்பது அந்தப் பாத்திரத்தின் பெயர். படத்தின் நாயகன் சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் சென்னைக்கு வந்து நடிகனாக உயர்ந்த பிறகு நடிகர் திலகம் விஜயகுமாராக மாறியிருப்பார். அந்த விஜயகுமார் ஒரு படப்பிடிப்பில் மாவீரன் சிவாஜியின் வேடமேற்று நடிப்பதுதான் காட்சி. மிக நீண்ட வசனம். சிவாஜி அற்புதமாக அந்த வசனத்தைப் பேசியிருப்பார். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி அவரது ரசிகர்களை ஈர்த்த முக்கியமான காட்சி.
அவற்றையெல்லாம் விட முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுக் கதையம்சம் கொண்ட படங்களின் நாயகன் சிவாஜி. கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன் ஆகிய திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த வரலாற்று நாயகர்களின் பாத்திரங்கள் அவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சரித்திரப் படங்களின் நாயகனாக உருவாக்கின.
நன்றி! விகடன்.காம் இனைய பகுதியிலிருந்து.....
Thanks .. Ganesh Pandian
தில்லானா மோகனாம்பாள்!
கலைத்தாயின் தலைமகன் அருங்காவியத்தில் ஓர் வைடூரியம்!!
ஒருமுறை, நூறுமுறை, ஆயிரம் முறை, இன்னும் எத்தனை தடவையாயினும், அத்தனை நேரத்திலும் முதன் முறை பார்ப்பது போல் ஒரு உற்சாகம், உத்வேகம், ஆனந்தம், ஆர்ப்பரிப்பு,
மீண்டும் ஒருமுறை 22.04.2020 (புதன்) இரவு 9.30மணிக்கு சன் தொலைக் காட்சியில் ரசிக்கலாம், குதூகலிக்கலாம்!!
இந்த உன்னத காவியத்தை தாங்கள் முதன் முதலில் பார்த்து ரசித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே!!
TODAY RICE VEGETABLES BAG DISTRIBUTION BY DINDIGUL DISTRICT SIVAJIGANESAN FANS ASSOCIATION
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a5&oe=5EC554F3
Thanks sivaji Thiru Pathi
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...48&oe=5EC656F6TODAY BHARATHIPURAM VEGETABLES BAG 100 NO DISTRIBUTION BY DINIGUL DISTRICT SIVAJIGANESAN FANS ASSOCITION THIRUPPATHI PANDIAN SATHYAN MARIYAPPAN VENGIDul
Thanks sivaji Thiru Pathi