டியர் ராகவேந்திரன் சார்,
அருமை நண்பர் கவிஞர் தென்காசி தெ. கணேசன் அவர்களின் கலையுலகக் கர்ணன் புகழ்பாடும் கவிதை பிரமாதம் !
இடுகை செய்திட்டமைக்கு இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
அருமை நண்பர் கவிஞர் தென்காசி தெ. கணேசன் அவர்களின் கலையுலகக் கர்ணன் புகழ்பாடும் கவிதை பிரமாதம் !
இடுகை செய்திட்டமைக்கு இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கோபால் சார்,
தங்களின் உயர்வான பாராட்டுக்களுக்கு எனது உன்னத நன்றிகள் !
"சாந்தி", "இரும்புத்திரை" அலசல்கள் அருமை !
Dear Ramajayam Sir, Thanks.
Thank You, Mr.kumareshanprabhu.
Dear Gnanaguruswamy Sir, Thank You.
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் பாந்தமான பாராட்டுக்கு அன்பான நன்றிகள் !
'இன்றைய செய்தி நாளைய வரலாறு' என்கின்ற அடிப்படையில், தாங்கள் பதிவிட்ட நாளிதழ் விஷுவல்கள் 'நச்' !
அன்புடன்,
பம்மலார்.
டியர் balaa சார்,
தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உன்னதம் !
'அசையாதவற்றையும் அசைப்பார்' தகவல் அற்புதம் ! நமது நடிகர் திலகத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவரது மறைவுக்குப்பின், 'தினகரன் - வசந்தம்' ஞாயிறு இதழில் வெளிவந்த தகவல் இது. பதிவிட்டமைக்கு நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
வாணி ராணி
[12.4.1974 - 12.4.2012] : 39வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5687-3.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1974
http://i1110.photobucket.com/albums/...GEDC5691-1.jpg
குறிப்பு:
மதுரை 'நியூசினிமா'வில் 100 நாள் விழாக் கொண்டாடிய இக்காவியம், சென்னையில் 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 77 நாட்களும், 'அகஸ்தியா'வில் 56 நாட்களும், 'ராக்ஸி'யில் 56 நாட்களும், கோவை 'கீதாலயா'வில் 77 நாட்களும், திருச்சி மற்றும் சேலம் மாநகரங்களில் ஒவ்வொரு நகரத்திலும் 70 நாட்களும் மற்றும் தென்னகமெங்கும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடி ஒரு சிறந்த வெற்றிக்காவியம் என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
நட்சத்திரம் [கௌரவத் தோற்றம்]
[12.4.1980 - 12.4.2012] : 33வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5692-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
அந்த நாள்
[13.4.1954 - 13.4.2012] : 59வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 10.4.1954
http://i1110.photobucket.com/albums/...GEDC5697-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 11.4.1954
http://i1110.photobucket.com/albums/...DC5696-1-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
அந்த நாள்
[13.4.1954 - 13.4.2012] : 59வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
காவிய விமர்சனம் : கலைமன்றம் : 24.4.1954
http://i1110.photobucket.com/albums/...GEDC5698-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5699-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
[13.4.1954 - 13.4.2012] : 59வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5694-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 11.4.1954
http://i1110.photobucket.com/albums/...aar/KPP1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 12.4.1954
http://i1110.photobucket.com/albums/...GEDC5695-1.jpg
குறிப்பு:
சிறந்த வெற்றிப்படைப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்:
1. திருச்சி - ஸ்டார்
2. சேலம் - நியூசினிமா
பக்தியுடன்,
பம்மலார்.
எந்த நாளும் சிறக்கும்
அந்த நாள் விளம்பரங்களை
இந்த நாளில் தந்து இனிக்க வைத்த பம்மலாரே -
இவற்றை நீ
தந்த நாளே எமக்கெல்லாம் பொன்னாள்...
அன்புடன்
டியர் பம்மலார்,
ஏப்ரல் திரை வரிசையில் வாணி ராணி, நட்சத்திரம். அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்று கலக்கலான பொக்கிஷப் பதிவுகள் அருமை. நன்றி!.
Dear pammalar sir,
Antha naal,Vani rani,Kalyanam panniyum bramachchari
stills super
பம்மலார் சுவாமிகளே,
அருளாசிகள் மட்டும் போதாது.தினமும் நம் கடவுளின் பதிவு பிரசாதம் வேண்டும்.
தங்கள் பக்தன்
கோபால அடிகள்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
தெய்வப்பிறவி
[13.4.1960 - 13.4.2012] : 53வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல் : அரிய ஆல்பம்
மாதவன் எனும் சாந்தஸ்வரூபி
http://i1110.photobucket.com/albums/...laar/DP1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/DP2-1.jpg
நடிப்புலகப் பேரொளியுடன் நாட்டியப் பேரொளி : Made for each other pair
http://i1110.photobucket.com/albums/...laar/DP3-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/DP4-1.jpg
உணர்ச்சிகரமான காட்சி : எஸ்.எஸ்.ஆர்-பத்மினி-சுந்தரிபாய்-தாம்பரம் லலிதா-நடிகர்திலகம்
http://i1110.photobucket.com/albums/...laar/DP5-1.jpg
ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு - பத்மினி - நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/...laar/DP6-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
தெய்வ பிறவியின் அரிய ஆல்பம் அருமை.
"நடிப்புலகப் பேரொளியுடன் நாட்டியப் பேரொளி : Made for each other pair" - பொருத்தமான வர்ணனை.
நன்றி.
Dinamalar supplement 27.04.2012. image courtesy: Subramaniam through NSV in facebook
http://a1.sphotos.ak.fbcdn.net/hphot...03464662_n.jpg
நடிகர் திலகத்தின் மிக சிறந்த பத்து படங்கள் என்று நான் கருதுபவை(வரிசை படி)
புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,முதல் மரியாதை,அந்த நாள்,தெய்வ பிறவி,இருவர் உள்ளம்,உயர்ந்த மனிதன்,கெளரவம்,கர்ணன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை.
அவரது நடிப்பில் எனக்கு பிடித்த மிக சிறந்த பத்து.(வரிசை படி)
உத்தம புத்திரன்,தெய்வ மகன்,நவராத்திரி,படிக்காத மேதை,கர்ணன்,விஎட்நாம் வீடு,கெளரவம்,உயர்ந்த மனிதன்,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள்.
Pammalaar sir,
Thanks for great Deiva piravi stills one of my all time favourite.
Raghavendar Sir,
Great article.
To all,
I read somewhere that Marudhanayagam was originally planned by NT-Panthulu combo but given up due to the Kan sahip's mercurial swings against Indian Patriots?Can someone throw more light on it?
இருவர் உள்ளம் - 1963
நடிகர் திலகத்தின் சிறந்த பத்துக்குள் நான் போற்றும் காவியம்.இயக்குனரின் அறிவுரை படி அளவோடு நடித்த படம் .அதனாலேயே அபார மெருகு குணசித்திரத்தில்.நன்றாக ஓடிய நல்ல படம்.
கதை-செல்வ குடும்பத்தின் சீரழிந்த பிள்ளை (பெண் பித்தன்) ,ஒரு ஏழை வாத்தியாரம்மாவை காதலித்து திருந்தி வாழ ஆசை பட்டு,அவள் சம்மதமின்றி சூழ்நிலை கைதியாக்கி, மணந்து,அவள் மனதை தன்னிடம் திருப்ப படும் பாடுதான் கதை.முடிவு தமிழ் ரசிகர்களை திருப்தி படுத்த ஓர் கொலை,நிரபராதியின் மேல் பழி,தந்தை-மகன் எதிர்-எதிரே ,பிறகு எல்லாம் சுபம்.
சிறப்புகள்-
சிவாஜி தன் சினிமா குரு என போற்றும் பிரசாத் அருமையாக தயாரித்து இயக்கி தன் கட்டுக்குள் அனைத்தையும் (சிவாஜி உட்பட) வைத்து ,தமிழில் வந்த நல்ல படங்களில் ஒன்றாக உருவாக்கியிருந்தார்.
மு.க வின் திரைகதை மேல் எனக்கு மிக மதிப்பு உண்டு.(பராசக்தி,மனோகரா,ராஜா ராணி,புதையல் ).இந்த கதை லக்ஷ்மி அவர்களின் புகழ் பெற்ற பெண்மனம் நாவல் தழுவி அமைக்க பட்ட அருமையான திரைக்கதை.தென்றல் ஆக தொடங்கி,நகைச்சுவையாய் வளர்ந்து,உணர்ச்சிகளில் தோய்ந்து, பின் புயலாய் மாறி, சுபமாய் முடியும் போர் அடிக்காத சீரான திரைக்கதை. வசனத்தில் மு.க தன்னுடைய வழக்கமான பாணியில் விலகி,சுருக்கமாக,இயல்பாக,கருத்தாக,பாத்திர அமைப்பை ஒட்டி ,பிரமாத படுத்தி இருப்பார்.
இசை- கே.வீ.மகாதேவன் -நடிகர் திலகம் இணைவில் வந்ததிலேயே சிறந்த படம் என்பேன்.(மற்றவை-பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,திருவிளையாடல்,செல்வம்,வியட்நாம ் வீடு,வசந்த மாளிகை). பறவைகள் பலவிதம்,புத்தி சிகாமணி,கண்ணெதிரே,நதி எங்கே,இதய வீணை,ஏனழுதாய்,கண்ணே கண்ணே,அழகு சிரிக்கிறது இசை விருந்து. முக்கியம்,அழகான ,அடக்கமான பின்னணி இசை கோர்ப்பு. காட்சி இணைப்பு இசை,கதாபாத்திர வார்ப்பு இசை என பல விஷயங்களில் முள்ளும் மலரும் இளைய ராஜாவிற்கு இப்படம் முன்னோடி.
நடிப்பு-பெண் முன்னிலை வகிக்கும் கதை.சரோஜாதேவி ,சிவாஜியுடன் இணைந்தால் மட்டுமே அவர் நடிப்பு சுடர் விடும்.பாலும் பழமும்,புதிய பறவை_வரிசையில் இருவர் உள்ளம்.அவர் மழலை பேச்சும் பாத்திரத்துக்கு பொருத்தமாய் இழையும்.
சிவாஜி, கேட்கவா வேண்டும்!! -ஆரம்ப பறவைகள் பலவிதம்(ஸ்டைல் ஆக,ரொம்ப அழகாக இருப்பார்) நடனம் ஆகட்டும்(பின்னாளின் கே.பீ யின் நாயகி ஜெயந்தி ஒரு பெண் நண்பியாக)தொடரும் சூழ்நிலை சார்ந்த நகைச்சுவை காட்சிகள் ஆகட்டும்(நகைச்சுவை பிரமாதம்),காதலில் விழுந்து,பிறகு வீட்டுக்கு வரவழைத்து அதிகாரத்தோடு கெஞ்சுவது, இதய வீணை காட்சியில் அவமானத்தில் நெளிவது,மனைவியோடு ஒத்து வரும் போது சூழ்நிலை சதி செய்து கெடுக்கும் காட்சி,தன் மனதை புரிய வைக்கும் காட்சிகள்-அடக்கி வாசித்தால் நடிகர்திலகத்தின் நடிப்பில் தெரியும் மெருகு -இந்த படத்தில் சுகமோ சுகம்.
எம்.ஆர்.ராதா மென்மையான,நகைச்சுவை கலந்த குண சித்திரத்தில்,அடக்கி வாசித்து பின்னியிருப்பார்.எஸ்.வீ.ரங்கா ராவ்,சந்தியா,ராம ராவ்,டி.ஆர்.இராமச்சந்திரன்,பாலாஜி,பத்மினி பிரிய தர்ஷினி,முத்து லட்சுமி எல்லோரும் அளவோடு கதைக்கு ஒத்து அருமையாய் நடிப்பார்கள்.
இந்த படத்தில் மற்றோர் அழகு, கதைக்கு தகுந்தவாறு,அவரவர்கள் இடத்தில் அவரவர் இருந்து ,பங்களிப்பார்கள்.( spacing )
படத்தில் கடி ஜோக் உண்டு-வாட்சை வைத்து.
எல்லோரும் பார்த்தேயாக வேண்டிய,பொக்கிஷமாய் காக்க பட வேண்டிய,மிக மிக அருமையான நடிகர் திலகத்தின் காவியம்.
Jai,
That was how things were, especially with respect to the other camp. Appreciate your keen observation.
சுவாமி,
நன்றி! நன்றி! நன்றி! தெய்வப் பிறவிக்கு நன்றி. அந்த நாளுக்கு நன்றி. கலாட்டா (கல்யாணம்) பண்ணியும் பிரம்மச்சாரி இவைகளுக்கு நன்றி. இந்த அலை வரிசையில் இல்லாவிட்டாலும் கூட எங்கள் மதுரை என்ற இரும்பு கோட்டையின் சிறப்பை மீண்டும் எடுத்துக் காட்டிய வாணி ராணிக்கு நன்றி. இனி கோபால் சாரின் ஆசைக்கிளியான சுமதியையும் பதிவிட்டு விடுவீர்கள் என நம்புகிறேன்.
கோபால் சார்,
கவிதை கொட்டுகிறதே! அழகாய் வார்த்தைகள் விழுந்திருக்கின்றன. குறிப்பாக
முற்சாதனையை உரைக்கவும் நேரமில்லா சங்கிலி சாதனையாளனே...
கர்ண பரம்பரை பொய்களை அந்த கர்ணனே வந்து பொய் ஆக்கினான் இன்று!
என்பது பிரமாதம். அதை போன்றே
ஒரே ஓட்டை பாத்திரத்தை பலருக்கு விற்றவர் முன்
ஒருவருக்கே பல நற்பாத்திரங்கள் ஈந்த உன்னத வணிகனே!
என்பதும் மிக சிறப்பு.
அன்புடன்
பாராட்டுப் பதிவுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.
"நவராத்திரி" - 'தினமலர்' கட்டுரைக்கு நன்றி, ராகவேந்திரன் சார்.
பாராட்டுக்கு நன்றி, அடிகளாரே ! "இருவர் உள்ளம்" அலசல் அக்காவியம் போல் ஒவ்வொரு உள்ளத்தையும் கவரும் !
லேட்டஸ்ட் "கர்ணன்" டிசைன் அட்டகாசம், படைப்பாளி பாலா சார்.
மனமார்ந்த நன்றி, முரளி சார்.
எமது "தெய்வப்பிறவி" ஆல்பம் பதிவுக்கு நமது வாசுதேவன் சார் மின்னஞ்சல் மூலம் வழங்கிய பாராட்டு:
'தெய்வப்பிறவி'யின் புகழ் பாடும் ஆவணப் பிறவியே!
அகமெல்லாம் குளிர அசர வைக்கும் 'தெய்வப் பிறவி' புகைப்படங்கள்.
மாதவன் எனும் சாந்தஸ்வரூபி மரியாதைக்குரிய நபராக, மாமனிதராய் மனதில் நிறைகிறார்.
Made for each other pair புகைப்படம் அந்த வாக்கியத்தின் உண்மையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. தலைவர் பத்மினியுடன் ஜோடியாக அமர்ந்திருக்கும் அழகே அழகு!
ஜோடியாக நிற்கும் தலைவர் பத்மினி படம் ஜோராக ஜொலிக்கிறது.
உணர்ச்சிகரமான காட்சி உன்னத உணர்வுகளை அப்படியே அனைவரும் பிரதிபலிக்கும் காட்சி. நம்மைக் கட்டிப் போடும் காட்சி.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்று கண் திருஷ்டி படக்கூடிய அந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் களிநடனம் புரிய வைக்கிறது. தலைவர் ஏதோ ஜோக் அடித்து மெய் மறந்து சிரிப்பதும், பத்மினி மனம் மகிழ்ந்து சிரிப்பதும் 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் புகைப்படம். (இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவுக்கு சிரிப்புக்கு மிகவும் பஞ்சம் போலும்!)
தலைவரின் முகம் இளமை பொங்கும் அழகுடன், வித்தியாசமான சிரிப்புடன் மலர்ந்துள்ளது.
மாதவரின் அற்புத புகைப்படங்கள் தங்களின் மூலம் கிடைக்க நாங்கள் மாதவம் செய்திருக்க வேண்டும்.
மொத்ததத்தில் கலைநயமிக்க கண்ணியமான புகைப்படங்கள். விலையில்லா மாணிக்கங்கள்.
தெய்வப் பிறவியின் புகைப்படங்களையும், ஆவணங்களையும் எமக்களிப்பதற்காகவே பிறந்த தனிப்பிறவியே! பதிவிட்ட தங்களுக்கு தாள முடியாத நன்றிகளும், வாழ்த்துக்களும். நல்லாசிகளும்.
புகைப்படங்கள் பளீரென இருப்பதால் தங்களுக்கு ஒரு புதிய பட்டம். 'பளிச்' பம்மலார். o.k வா?
vasudevan
உச்சமான பாராட்டுக்கு உயர்வான நன்றிகள் சார்.
"வாணி ராணி", "நட்சத்திரம்", "அந்த நாள்", "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" ஆவணப் பதிவுகளுக்கு வாசு சார் மின்னஞசலில் வழங்கிய பாராட்டு மடல்:
அன்பு பம்மலார் சார்,
'வாணி ராணி' முதல் வெளியீட்டு விளம்பரம் டக்கர் என்றால் 'தினத்தந்தி' 100வது நாள் விளம்பரம் டாப் டக்கர்.
'நட்சத்திரம்' அரிய நிழற்படம் அரும் பெரும் விருந்து. இப்படத்தின் முதல் காட்சியன்று கடலூரில் நடந்த சம்பவம். இடைவேளை வரை தலைவர் வரவில்லை. தலைவர் சீனுக்கு முன் கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களை காட்டியாகி விட்டது. கமல் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். தலைவர் எப்போது வருவார் என நகத்தைக் கடித்துக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தோம். ஷூட்டிங் சீனில் ஸ்ரீப்ரியாவுடன் தலைவர் சூட்கேசுடன் திரும்பியதுதான் தாமதம் சும்மா தியேட்டரே அல்லோல கல்லோலப் பட்டு விட்டது. கடலலை போல அப்படி ஒரு ஆரவார சப்தம். ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று. மற்ற முகங்களைப் பார்க்க வேண்டுமே! இந்த இனிய நிகழ்ச்சியை நினைக்க வைத்ததற்கு நன்றிகள் சார்.
'அந்தநாள்' விளம்பரங்கள் எந்த நாளும் தங்கள் புகழ் பாடும். காணக் கிடைக்காத அதி அற்புத விளம்பரங்கள்.
திறமைசாலி ராஜனாக திரையுலக மன்னன் சிவாஜி... படிக்கும் போதே மனம் பெருமிதம் அடைகிறது. நடிக்க வந்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட பட்டத்தை அடையும் தகுதி அவர் ஒருத்தருக்குத் தானே சொந்தம்! அருமையான நடுநிலை விமர்சனம். அந்த நாள் நாட்டுக்கொரு பாடம். உண்மை. அதனினும் உண்மை அது திரைப்படங்களுக்கே ஒரு பாடம். குறைகள் சிலவற்றை சுட்டிக் காட்டி இருப்பதும் அழகு. தங்கள் புண்ணியத்தில் அந்தநாளைய 'அந்தநாள்' விமர்சனம் இந்த நாள் கண்டு மனம் மகிழ்கிறோம். எந்த நாளும் நீங்கள் நீடு வாழ அந்த மகானை வேண்டுகிறேன்.
'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. வெகு நேர்த்தியான பதிவு.
1. திருச்சி - ஸ்டார் 2. சேலம் - நியூசினிமா இரு திரையரங்கிலும் க.ப.பி. நூறு நாட்களை கடந்த விவரம் உற்சாகத் துள்ளலை ஏற்படுத்துகிறது.
'reservation can be made for the higher two classes' தலைவரின் தன்னிகரில்லா class audience க்கு சான்று அதுவும் field க்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே.
மொத்தத்தில் அத்தனை பதிவுகளும் கற்கண்டுப் பாகும், கனிரசமும், தேனும் கலந்த அமுத ஊற்றுக்கள். அளித்த தங்களுக்கு இமாலய நன்றிகள்.
சிறு வேண்டுகோள்: க.ப.பி. நூறாவது நாள் விளம்பரங்கள் கிடைக்குமா?
vasudevan
பாராட்டு மடலுக்கும், கடலூர் 'நட்சத்திரம்' தகவலுக்கும் கனிவான நன்றிகள் சார்.
"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் நமது திரியில் அவசியம் இடுகை செய்கிறேன்.
"நான் வணங்கும் தெய்வம்", "கலாட்டா கல்யாணம்" ஆவணப் பதிவுகளுக்கு வாசு சார் மின்னஞ்சலில் அளித்த பாராட்டு:
அன்பு பம்மலார் சார்,
'கலாட்டா கல்யாணம்' முதல் வெளியீட்டு விளம்பரம் கண்ணுக்கு கலக்கல் விருந்து. 100வது நாள் 'தினத்தந்தி' விளம்பரம் ஆனந்தத்தை அளிக்கிறது. நம் படமல்லவா! எல்லோர் மனதையும் கவர்ந்த கலாட்டா கல்யாணம் பற்றிய பதிவுகளுக்கு எனது ஆர்ப்பாட்டமான நன்றி!
'நான் வணங்கும் தெய்வம்' 'ஹிந்து' இன்று முதல் விளம்பரப் பதிவு நான் தங்களைப் போற்றி வணங்கக் கூடிய வகையில் மனம் மகிழச் செய்யக் கூடிய அபூர்வ அற்புதமான பதிவு. அதற்காக என் தலை வணங்கிய அன்பு நன்றிகள்.
தாங்கள் திரிக்கு மறுபடியும் திரும்ப வருமாறு பாசத்துடன் அழைத்ததற்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
தங்கள்
வாசுதேவன்
இத்தகையதொரு அன்பான பாராட்டுக்கு எனது ஆனந்தமயமான வணக்கங்களும், நன்றிகளும், வாசு சார்....!
மதுரை 'நியூடீலக்ஸ்' திரையரங்கில் 26.4.2012 வியாழன் முதல் வாழ்வியல் திலகத்தின் "விளையாட்டுப் பிள்ளை" தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
திருச்சி 'கெயிட்டி'யில் 25.4.2012 புதன் முதல் உலக நடிகர் திலகத்தின் "ஊட்டி வரை உறவு" தினசரி 3 காட்சிகளில் வெளியாகி உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது.
இனிக்கும் இத்தகவல்களைத் தந்துதவிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.பி.கணேசன் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
தெய்வப்பிறவி
[13.4.1960 - 13.4.2012] : 53வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
The Mail : 8.4.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2627-1.jpg
The Mail : 10.4.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2626-1.jpg
The Mail : 5.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2629-1.jpg
The Mail : 12.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2628-1.jpg
The Mail : 16.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2631-1.jpg
The Mail : 19.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2630-1.jpg
குறிப்பு:
அ. 1960-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் காவியமான "தெய்வப்பிறவி" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - பிளாசா - 121 நாட்கள்
2. சென்னை - பிராட்வே - 107 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 100 நாட்கள்
4. திருச்சி - வெலிங்டன் - 107 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 107 நாட்கள்
6. கோவை - ராஜா - 100 நாட்கள்
[100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்...!]
ஆ. இதர முக்கிய நகரங்களான மதுரையில்[சென்ட்ரல் சினிமா] 79 நாட்களும், நெல்லையில்[ரத்னா] 79 நாட்களும், திண்டுக்கல்லில்[சோலைஹால்] 73 நாட்களும், வேலூரில்[நேஷனல்] 66 நாட்களும், நாகர்கோவிலில்[பயோனீர்பிக்சர்பேலஸ்] 58 நாட்களும், இன்னும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களும் ஓடிய இக்காவியம், 1960-ம் ஆண்டில் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த காவியம் கலையுலக மாமேதையின் "படிக்காத மேதை".
பக்தியுடன்,
பம்மலார்.