டியர் mr_karthik,
தங்கள் 'சொக்குப் பொடி' எழுத்து என்னை 'கிடுக்கிப்பிடி' போட்டு இங்கே இழுத்துவந்து விடுகிறது.
பாசத்துடன்,
பம்மலார்.
Printable View
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :28
நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்
உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]
தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !
38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/...5625ce895c.jpg
குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்
"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....
பக்தியுடன்,
பம்மலார்.
That's why every call NT is only "Vasool Chakravarthy" , Super Star, Tamil Cinema King. He is the only all rounder even produced in Indian cinema industry.
Just few of NT unique records never ever thought by any one and cannot achieve by any one.
1. 5 times 2 silver jubilee movies in a year
2. Silver jubilee movies in all the big cities in Tamil Nadu including Salem.
3. More number of 100 days hits
4. Maximum days run in Ceylon
I can write more records if required.....
Long live NT fame...
Cheers,
Sathish
ராகவேந்தர் சார்,
தாங்கள் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களாகவே அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்பது புரிகிறது. தங்களை வாட்டி வரும் பிரச்சினையும் ஓரளவு ஊகிக்க முடிகிறது. நான் என்னால் இயன்ற அளவில் hubber களின் sensitivity புரிந்து பதிவுகளை இடுகிறேன் (சில சமயம் நீக்கி விடுகிறேன்) பொது மனிதர்களின் குடும்பம் என்பது உலகம் தழுவி விரிந்து விடும். அவர் சொந்தம் என்று சொல்லும் சிலரை விட , பலர் அவரை அறிய ,அவர் புகழில் அக்கறை செலுத்த வாய்ப்புள்ளதால் ,பல்வேறு கருத்துக்கள்,ஊகங்கள்,யோசனைகள் வந்த படிதான் இருக்கும். நாம் சிலவற்றை எதிர்கொள்ளலாம். சிலவற்றை கவனிக்காதது போல முற்செல்லலாம்.ஆனால் தவிர்க்க இயலாது. அது சம்பத்த பட்ட எல்லோருக்கும் புரியும் தெரியும்.
இங்கிருக்கும் அனைவருமே படிப்பு,தகுதி, அந்தஸ்து எல்லாவற்றிலும் உயர்நிலை எய்தியும் ,அவர் மீதுள்ள அன்பினால், பாசத்தினால்,பக்தியினால் , தன்னிச்சையாய் இயங்கும், பலன் கருதா, நற்பண்பாளர்கள்.(சுஜாதா அவர் மரணத்தின் போது மட்டுமே அழுதவர்களின் கண்ணீர் உண்மையானது என்று கூறியது சத்தியம்). அதனால் கருத்துக்களை தவிர்ப்பது கடினம். ஆனால் நாம் மனதளவில் நம்மை தயார் செய்து ஒரு நட்பு,சகோதரத்துவம் கொண்டு இயங்குவோமே.
இந்த நிலையில் நான் ஒன்றை கூற ஆசை படுகிறேன். சென்ற விடுமுறையில் மிக குறைந்த நாட்களே இருந்த போதும் ,குடும்ப திருமணம் போக மீதி ஐந்து நாட்களும் நம் திரி நண்பர்களுக்காக செலவிட்டு என் மனைவியிடம் திட்டு வாங்கி கட்டி கொண்டேன்.இத்தனைக்கும் அனைவரோடும் என் நட்பு ஒரு வருடத்துக்கும் குறைந்தது.
நீங்கள் இதனை புரிந்து கொண்டால் எங்களையும் அவர் பிள்ளைகளாகவே எண்ணி நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கார்த்திக் சார்,
உத்தமனுக்காக ஒரு உத்தமரை வரவழைத்த சாமர்த்தியம் தங்களுக்கே உரியது. தெய்வ பிறவியில் கள்ளபார்ட் நடராஜன் அழைப்புக்கு மட்டுமே வந்த பத்மினி போல நாங்கள் தினமும் கதறி அழைத்தும் வராதவர் ,உங்கள் அழைப்புக்கு இணங்கி விட்டார்.
வருக வருக எங்கள் திரியின் சூப்பர் ஸ்டார் .
உத்தமன் சாந்தியில் முதல் ஷோ.
ஒரு ஹிந்தி பட ரசிகரை (Day scholar )எங்களுடன் அழைத்து சென்று விட்டோம். (சுமார் 25 பேர்)
skating காட்சிகளில் எங்கள் மானத்தை வாங்கி தோரணம் கட்டியவர் போக போக படத்தில் தோய்ந்து ,கடைசியில் சொன்ன வார்த்தை. சிவாஜி சிவாஜிதாம்பா. எத்தனை ஹிந்தி ஹீரோ வந்தாலும் நிக்க முடியாது. ஆனால் heroine ரோல் க்கு ஷர்மிளாவையே போட்டிருக்கலாமே என்றார். எனக்கும் தோன்றியது. ஆனாலும் மஞ்சுளா Dr .சிவா ,உத்தமன் இரண்டிலும் சிறப்பாக நடித்திருப்பதாகவே என் கருத்து. (வாசு தேவனார் சமூகத்திற்கு அடியேன் காணிக்கை) .அதுவும் திருமண பந்த மன உரசல்கள், பிரிவு,பிரிவின் ஊசலாட்டம் இவற்றில் மஞ்சுளா expert .
தலைவர் மஞ்சுளாவை உருட்டி விளையாடுவார் இடைவேளை வரை. ஒரே பாட்டு மயம்.
அதற்கு பிறகு சசி கபூர் ஓரங்கட்ட படும் அளவு தலைவர் performance கொடி கட்டி பறக்கும்.
மாமா இசை ஓகே ரகம்தான்.
இது அடைந்திருக்க வேண்டிய வெற்றி இன்னும் அதிகம்.அரசியல் குழப்பங்கள் வாட்டி வந்த காலகட்டம். ஆனாலும் மன்னவன் வந்தானடி முதல் ரோஜாவின் ராஜா வரை தொடர்ந்த box office பஞ்சத்தை ஓரளவு தீர்த்த படம் இதுதான்.