1973- BOMMAI
http://i43.tinypic.com/2hfrzo2.jpg
Printable View
1973- BOMMAI
http://i43.tinypic.com/2hfrzo2.jpg
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தலைவரின் பக்தர்களுக்கு அவர் பிறந்ததினமே புத்தாண்டு தொடக்கம்.
அவ்வகையில் அவர் பிறந்த நாளான இன்று சக பக்தர்களுக்கு வாழ்த்துக்களை கூறி
அனைவருக்கும் மிக ஆனந்தமான ,அமைதியான வாழ்வு அமைய எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்.!
டியர் வினோத் சார்,
பொம்மையில் வெளியான பல சுவையான தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.
ஆனந்த விகடன் - 08 Jan, 2014
விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள்
வாசகர் கேள்விகள்,
ராமானுஜன், ஸ்ரீரங்கம்.
''சிவாஜி, ரஜினி, கமல்... என பலருக்கும் வில்லனாக நடித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூறுங்களேன்?''
''எம்.ஜி.ஆர். தவிர்த்து, 'இவர் ரசிகர்’னு சொல்றதா இருந்தா, நடிகர் திலகம் சிவாஜியைத்தான் சொல்வேன். அவர்கூட நான் நடிச்ச அனுபவங்களைத் தனிப் புத்தகமாவே போடலாம். 'சிரஞ்சீவி’ படத்தில்தான் முதல் முறையா அவர்கூட நடிச்சேன். சிங்கப்பூர் போற கப்பல்ல நடக்கும் கதை. அப்போ ஷூட்டிங் ப்ரேக்ல நான் அவரை மாதிரியே மிமிக்ரி பண்ணினதை ரசிச்சவர், தான் பயன்படுத்துற ஒரு சென்ட் பாட்டிலை எனக்குப் பரிசாக் கொடுத்தார். அதை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன்.
'புதிய வானம்’ படத்துல எனக்கு ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். அவருக்கு ரொம்ப சாஃப்ட் கேரக்டர். நாங்க ரெண்டு பேரும் ஜீப்ல பாடிட்டு போற மாதிரி ஒரு காட்சி. அவர் பாடுறதுல, 'எளிமையும் மனப்பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை’னு ஒரு வரி வரும். அப்ப புரட்சித்தலைவர் இறந்த சமயம். 'டேய்... இதுல அண்ணனைப் பத்தி வரி வருது. அந்தக் காட்சியில அண்ணன் மாதிரியே நடிக்கலாம்னு இருக்கேன். நீதான் அண்ணன் மாதிரி நடிப்பியே... இந்தக் காட்சியில அண்ணன் நடிச்சிருந்தா எப்படி நடிச்சிருப்பார்னு கொஞ்சம் நடிச்சுக் காட்டுடா’ னார். 'என்னங்கப்பா நீங்க, உங்களுக்குப் போய் நான் எப்படி நடிச்சுக் காட்டுவேன்’னு சொல்லிப் பதறிட்டேன். ஆனா, என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சார். புரட்சித்தலைவர் மாதிரியே ஸ்டைலா ஓடி வர்றது, கையத் தூக்குறதுனு நடிச்சுக் காமிச்சேன். அவரும் அதே போல நடிச்சார். அவர்கூட வில்லனா, ஹீரோவா நடிச்ச நான், அவருக்கு ஒரு நடன உதவியாளராகவும் இருந் திருக்கேன் என்பது எனக்கான பெருமை.
சிவாஜி சார், பிரபுவைத் தொடர்ந்து அன்னை இல்ல மூன்றாவது தலைமுறையான விக்ரம் பிரபுகூடவும் இப்ப நடிக்கிறேன் என்பது கூடுதல் தகவல்.
THANKS CHANDRASEKAR SIR
http://youtu.be/3VyGB42TVx0
KC சார் - ஒரு சிலபேராவது இன்றும் நன்றியுடன் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது , மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .
அன்புடன் ரவி
:):smokesmile: