இன்னா செய்தாரை(யே)ஒருத்து _அவர் நாண நன்னயம் செய்துவிடல்!_- by THALAIVAR
http://i1170.photobucket.com/albums/...ps51acac01.jpg
Printable View
இன்னா செய்தாரை(யே)ஒருத்து _அவர் நாண நன்னயம் செய்துவிடல்!_- by THALAIVAR
http://i1170.photobucket.com/albums/...ps51acac01.jpg
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை !
சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே !
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் !
தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு !
இந்த சரித்திர சாட்சியயை
இந்த நேரத்தில்பகிறுவுவது
பொருத்தமாக இருக்கும்
ஆம் கடன்காரணக வலம் வந்த
கருணாநிதியை -நம் தலைவரும்
நம் அம்மாவும் கடனை மீட்டுகொடுக்க
உதவியதாய் கருணவும் மாறன்னும்
கூறிய பேட்டீ
http://i1170.photobucket.com/albums/...ps70eed2e1.png
அன்பார்ந்த நண்பர் திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,
தங்கள் விளக்கத்துக்கும் என் மீது தனிப்பட்ட கோபமோ வருத்தமோ கொள்ளும் அளவுக்கு நம்மிடம் எந்த பகையும் இல்லையே என்று கூறியதற்கும் நன்றி.
அதேபோல ‘நான் நினைப்பது தவறாக இருக்கலாம், எனக்குப்படுகிறது, எனக்கு தோன்றுகிறது’ என்று நீங்களே உறுதியாக நம்ப மறுக்கும் அளவுக்கு, எனக்கும் அமரராகி விட்ட திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எந்த கோபமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இன்னமும் சொல்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த நடிகர். ஆனால், அவர் மட்டுமே சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொண்டால்தான் அவர் மீது வெறுப்பு இல்லை என்று அர்த்தம் என சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.
உதாரணமாக, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பலே பாண்டியா படத்தில் வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடல் காட்சியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பை ரசித்திருக்கிறேன். அதேபோல, அந்த பாடலில் கிண்டலும் கேலியுமாக ஸ்வரம் சொல்லும் நடிகவேள் திரு.எம்.ஆர்.ராதா அவர்களின் நடிப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். நீங்களே மனசாட்சிப்படி சொல்லுங்கள். அந்த பாடலில் நடிப்பில் யாரை யார் விஞ்சினார்கள்? என்று யார்தான் சொல்ல முடியும்?
என்னைப் பொறுத்தவரை இருவரும் சிறந்த கலைஞர்களே. இத்தனைக்கும் திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் காழ்ப்புணர்ச்சியால் புரட்சித் தலைவரை சுட்டவர் என்ற போதும் அவரது நடிப்புத் திறமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. இதுவே எங்களது நடுநிலைக்கு சான்று. திரு. எம்.ஆர்.ராதா அவர்கள் மீதே வெறுப்பு கொள்ளாத எங்களுக்கு‘ எனது தம்பி ’என்று தலைவரால் அழைக்கப்பட்ட திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது என்ன வெறுப்பு இருக்கப் போகிறது?
சகோதரர் செல்வகுமார் அவர்கள் மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்கு சமம் என்று திரு. முக்தா சீனிவாசன் தலைவரைப் பற்றி புகழும் செய்தியைத்தான் வெளியிடப் போவதாக சொல்லியிருக்கிறார். இதில் என்ன provoke இருக்கிறது? ஆனால், எங்கள் தலைவரை மறைமுகமாக தாக்கும் வகையில் ‘அந்நிய கள்’ என்றும் பஜனைக் கூட்டம் என்று எங்களையும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? சரி அதுதான் போகட்டும். வேறு யாரையோ கூறியதாகவே இருக்கட்டும். ஆனால், சிவா என்பவர் எங்கள் தலைவரை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் ‘நீ தானய்யா உண்மையான பொன்மனச் செம்மல்’ என்று உங்கள் அபிமான நடிகரைப் போற்றுவது provoke இல்லையென்று எப்போதும் நடுநிலையோடு செயல்படுவதாக கூறும் நீங்கள் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன். நானும் சில விளக்கங்களை தெளிவுபடுத்த உதவிய உங்களுக்கு சிறப்பு நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்