:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:
Printable View
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:
Thanks again saradhaa madam. We all greatly appreciate your contribution.
காஞ்சனாவின் வீட்டில் வழக்கம்போல அவள், ஈஸ்வரனக்கும் கற்பகத்துக்கும் நடக்கப்போகும் சஷ்டியப்த பூர்த்தி விழாவைத்தடுக்க தன் மகன் ஆதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவனைக் காய்ச்சியெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆதி என்ன சமாதானம் சொல்லியும் அவள் திருப்தியாகவில்லை. ஆதியின் கோபம் முழுக்க அபியின் மீதே திரும்புகிறது. இன்னமும் அந்த தேவராஜ பாண்டியனின் ஆட்கள் தன் அப்பாவைக் கண்டுபிடிக்கவில்லையென்ற ஆத்திரம். ஆனால் தேவராஜனைக் கேட்கும்போதெல்லாம், ‘கவலைப்படதீங்க தம்பி, எவ்வளவு முயற்சி செய்தும் உங்க அப்பா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இந்நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி மண்டப வாசலில் வந்திறங்கும் உங்க அப்பாவை, அங்கிருந்து அப்படியே தூக்கி வருவதுதான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன், நம்ம ஆட்கள் ரொம்ப தயாரா இருக்காங்க’ என்று சொல்லியும் ஆதி சமாதானம் ஆகவில்லை. அவனுடைய ஒரே அச்சம், எங்கே அந்த அபி எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு அந்த விழாவை நடத்தி முடித்துவிடுவாளோ என்பதில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவன் அடிக்கடி தேவராஜனை உசுப்பேத்திக்கொண்டிருக்கிறான்.
மண்டபத்தில் எல்லோரும் ஒரே சந்தோஷமும் கும்மாளமுமாக இருக்கின்றனர். விடிய விடிய அம்மா கற்பகத்தைச் சீண்டிவிட்டு அவள் வெட்கப்படுவதைப்பார்த்து ஆனந்திக்கின்றனர். காஞ்சனாவின் வீட்டில் காஞ்சனாவும் ரேகாவும் செய்வதறியாது கலக்கத்தில் இருக்க, இன்னொரு இடத்தில் ஆதியும் தேவராஜனும், மண்டபத்திலிருந்து தங்கள் ஆட்களின் போன் செய்தியை பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்க இரவு இப்படியே ஓடிப்போகிறது, நேரம் ஆக ஆக ஆதிக்கு கலக்கம், முக்கியமாக இந்த ஃபங்க்ஷன் நடந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ள்ப்போவதாக தன் அம்மா காஞ்சனா விடுத்திருந்த மிரட்டல். (இந்த தொடரிலேயே அம்மாவின் மீது உயிராகவும் அவளுக்காக எதையும் செய்யக்கூடியவனாகவும் வரும் ஒரே பாத்திரம் ஆதித்யாதான், அபியின் அம்மா பாசமெல்லாம் இவனுக்கு அப்புறம்தான்).
பொழுதும் விடிந்துவிட்டது. மண்டபமும் களைகட்டிவிட்டது. இன்னும் அப்பா வரவில்லையே என்று அபி வகையறாவுக்கு சற்று பதட்டம், இருந்தாலும் வரத்துவங்கிவிட்ட விருந்தினரை வரவேற்று உபசரித்து அமரவைப்பதில் பிஸியாக இருக்கின்றனர். அழைக்கப்பட்டவர்களெல்லாம் வந்துகொண்டிருக்க அவர்களை ஆர்த்தியும் ராஜேந்திரனும் வாசலில் நின்று வரவேற்கின்றனர்.
உஷாவின் வீடு…….. மொட்டை மாடியில் உஷா, அப்பா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தொல்காப்பியன் வர, ‘வாங்க தொல்ஸ், எப்படி இருக்கீங்க?’
‘அதிருக்கட்டும் உஷா, என்ன இங்கே இருக்கீங்க? நீங்க அபி விட்டு ஃபங்க்ஷனுக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்’.
‘என்ன விளையாடுறீங்களா?. உங்களை அழைக்கலைன்னு கோபப்பட்டு, உங்க முன்னாடிதானே அபியிடம் இன்விடேஷனைத் திருப்பிக்கொடுத்தேன், மறந்துட்டீங்களா?. அதுவும் பக்கத்தில் நின்ற உங்களை அழைக்காமல் என்னை மட்டும் அழைத்தால் என்ன அர்த்தம்?’
‘இதோ பாருங்க உஷா, இது அபி வீட்டு குடும்ப விசேஷம். அவங்க குடும்பத்தில் யாருக்கும் என்னை பிடிக்கலை அதனால் அழைக்கலை, ஆனா நீங்க அப்படியில்லையே’
‘அப்படி பார்த்தா என்னையும்தான் அவங்களுக்கு பிடிக்காது, அப்புரம் நான் ஏன் போகனும்?’
‘உங்களை பிடிக்காததுக்கு காரணம் நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னுதான், வேறு காரணம் எதுவும் இல்லை’
‘சரி தொல்ஸ், இப்போ அந்த ஃபங்க்ஷனுக்கு போகனும் அவ்வளவுதானே, வாங்க ரெண்டுபேரும் போவோம்’.
‘அய்யோ என்ன உஷா நான் எப்படி அங்கே’
‘தெரியுதுல்ல?. அப்போ பேசாமல் இருங்க, அதுமட்டுமல்ல இன்னைக்கு உங்களுக்கு லன்ச் எங்க வீட்டுலதான், அம்மா நம்ம எல்லோருக்கும் லன்ச் ரெடி பண்ணுங்க’.
மீண்டும் கல்யாண மண்டபம்…..
அப்பா இன்னும் வரவில்ல்யே என்று ஆனந்தி, சாரதா இவர்களுக்கு இருந்த பதற்றம் இப்போது அபியையும் தொற்றிக்கொண்டது, நேரம் ஆக ஆக அவளது முகத்தில் சந்தோஷம் மறைந்து சந்தேகமும் பரபரப்பும் குடிகொள்ளத்துவங்கிவிட்டன, ‘அப்பா வராமல் சொதப்பி விருவாரோ, அல்லது வழியில் அவருக்கு ஏதும் தடங்கலோ’ என்ற பதை பதைப்பு, இருந்தாலும் மற்ரவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. அப்பா தனக்கு ஒரு காண்டாக்ட் நம்பர் கூட கொடுக்காமல் இப்படி ஒளிந்திருப்பது அவளையும் ஆனந்தி, சாரதா ஆகியோரையும் கவலையில் ஆழ்த்துகிறது.
தேவராஜா பாணிடியனுக்கும் ஆதிக்கும் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் ஆதி, தேவராஜனின் ஆட்கள் நிச்சயம் தன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் கொண்டு, தானே மண்டபத்துக்குப்போவதாக காரில் விரைகிறான்.
மண்டப வாச்லில் சட்டென்று ஒரு காரில் வந்திரங்கும் ஈஸ்வரன், நேராக மண்டபத்துக்குள் விரகிறார். அப்பாவைப்பார்த்ததும் அபி, ஆனந்தி, ஆர்த்தி ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் முகத்தில் சந்தோஷம் குடி கொள்கிறது. நேராக அவர் மணவறியில் சென்று அமர, அலங்கரிக்கப்பட்ட கற்பகத்தை அழைத்து வருகின்றனர்.
‘வேகமா போப்பா’ என்று டிரைவரை விரட்டும் காஞ்சனா, காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்க, அவள் கையில் துப்பாக்கி.
மண்டப வாசலில் வந்திறங்கியதும் பரபரப்புடன் நேராக அவள் உள்ளே செல்ல, பின்னால் வந்த காரிலிருந்து ஆதி இறங்கி அவனும் உள்ளே செல்ல, அவர்களின் பின்னே இன்னொரு காரிலிருந்து மனோ, அனு, அஞ்சலி ஆகியோரும் பின்தொடர, மண்டபத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் அம்மாவைப்பார்த்ததும் ஆதிக்கு அதிர்ச்சி. இவர்களை யாரும் கவனிக்காமல் சடங்குகளில் மூழ்கியிருக்க, அப்பாவின் கையில் தாலியை அபி கொடுக்கப்போகும்போது….. காஞ்சானவின் குரல்…
“நிறுத்துங்க”
நிமிர்ந்து பார்க்கும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.
‘ஏய் அபி, இது உனக்கே நல்லாயிருக்கா, அவர் உங்கம்மாவுக்கு தாலி கட்டின புருஷன்னா, அப்போ என் கழுத்தில இருக்கிற தாலி யார் கட்டினது?. ஏன் எங்களை இப்படி வதைக்கிறீங்க?’
‘ஏம்மா, நாங்க உங்களை வதைக்கிறோமா? உங்க பிள்ளை ஆதி எனக்கு எவ்வளவு கொடுமை செஞ்சான்னு உங்களுக்கே தெரியாதா?. எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு எங்க அப்பா எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்கார். அவருக்கும் அம்மாவுக்கும் நடக்கிற விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?’
தொலைக்காட்சிகள் சும்மா எதற்கெடுத்தாலும் போட்டி வைத்து, நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச்சொல்லி படுத்துகின்றன. ஆகவே நாமும் ஒரு போட்டி வைத்தால் என்ன...?.
முந்தைய போஸ்ட்டில் 'மண்டபம்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது என்று சரியாக சொல்லும் நேயர்களில் மூவருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு : ரூ. பத்து லட்சம் மதிப்புள்ள கார் உடைய புகைப்படம்.
இரண்டாம் பரிசு : சிங்கப்பூருக்கு விமானப்பயணம் செல்லும் பயணிகளுக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு.
மூன்றாம் பரிசு: 21" கலர் டிவி யின் அட்டைப்பெட்டி.
:omg:Quote:
Originally Posted by saradhaa_sn
போட்டிக்கு முந்துங்கள்
:clap: :clap:
wow, attractive prizes...
I want second prize :P
'நாங்க ஆசைப்பட்டு நடத்துற இந்த விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?'
'நான் ஒண்ணும் தடுக்கலை அபி. தாராளமா நடத்துங்க' காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் அத்தனை முகங்களிலும் குழப்ப ரேகைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அபியின் முகம் அதிகமாகவே குழப்பம அடைகிறது.
'உண்மையாத்தான் சொல்றேன் அபி. நீங்க திட்டமிட்டபடி நடத்துங்க, ஏன்னா உங்க எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கு. என் கணவர் முதலில் தாலி கட்டியது உங்க அம்மாவுக்குத்தான். அதை இப்போ ஊரைக்கூட்டி வேறு நிரூபிச்சிட்டீங்க. அதுமட்டுமில்லே, அப்பா என்ற முறையில் நீங்க யாரும் இதுவரை அவரிடமிருந்து எந்த சந்தோஷத்தையும் அடைந்ததில்லை. அதன்னல்தான் சொல்றேன். நான் ஒண்ணும் இந்த விசேஷத்தை தடுக்க வரவில்லை. நீங்க எல்லோரும் என்னை அழைக்கலைன்னு கோபம்தான் எனக்கு, மத்தபடி எதுவுமில்லை'
காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் ஈஸ்வரன், கற்பகம், அபி, ஆர்த்தி, ஆனந்தி, சாரதா, ராஜேந்திரன், தோழர் பால கிருஷ்ணன் ஆகியோரை அதிகமாகவே குழப்பியது மட்டுமல்லாமல் மண்டபத்தில் வாசலில் நின்ற ஆதியை அதிர்ச்சியடைய வைக்கிறது.
'அம்மா, நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலை' என்று சொல்லும் அபியைப்பார்த்து, 'உண்மையாத்தான் சொல்றேன் அபி. இந்த விசேஷத்தில் கலந்துக்கத்தான் நான் வந்தேனே தவிர குழப்பம் விளைவிக்க வரவில்லை'. இந்த வார்த்தைகளைக்கேட்டதும் எல்லோர் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியின் பக்கம் திரும்பியது என்றாலும் ஆனந்தியின் முகத்தில் இன்னும் சந்தேகம்.
காஞ்சனா இன்னும் என்னென்னவோ நிறைய பேசி அவர்களை சமாதானப்படுத்த (அந்த வசனங்களை எல்லாம் முழுசா இங்கு கொண்டு வர முடியவில்லை) அபி மகிழ்ச்சியடைந்து 'சித்தி'(?)யின் கைகளைப்பிடித்து அவளுக்கு நன்றி சொல்ல, மணமேடையில் இருந்து இறங்கி வரும் ஈஸ்வரன் 'என்னை மன்னிச்சிடு காஞ்சனா, நீயும் ஆதியும் ஏதாவது குழப்பம் செய்து இந்த விழாவை நிறுத்திடுவீங்களோ என்ற எண்னத்தில்தான் ரகசியமாக இந்த ஏற்பாடுகளை செஞ்சிட்டோம். நீ இவ்வளவு சீக்கிரம் மனம் மாறுவேன்னு நினைக்கவேயில்லை' என்று சொல்ல அனைவரும் மீண்டும் மணமேடைக்கு செல்ல, அபி மற்றும் அனைவரின் முகமும் ஆதியின் பக்கம் திரும்புகிறது.....
தன் அருகில் வந்து நிற்கும் அபியிடம், 'எங்க அம்மா சொன்ன பிறகுதான் எனக்கும் எல்லா விஷயங்களும் தெளிவாகிறது. நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் உங்க எல்லோருக்கும் ரொம்பவே தொல்லை கொடுத்துவிட்டேன். ஆனா அதற்கு பதிலாக நீங்க எனக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நான் உங்களுக்கு செய்த அநியாயத்துக்கெல்லாம் நீங்க என்னை மன்னிக்கணும்' (இன்னும் நிறைய வசனம் பேசுகிறான்) என்று கலங்கும் ஆதியின் கைகளைப்பிடித்துக்கொண்டு அபி, 'அப்படியெல்லாம் சொல்லாதே, நீ எப்போ என்னுடைய ஒரே ரத்தம்னு தெரிஞ்சு போச்சோ அன்றையிலிருந்து நீ செஞ்ச எதுவும் எனக்கு கஷ்ட்டமா தெரியலை'.
(திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சு?. ஏன் சீரியலை இவ்வலவு வேகமா முடிக்கப்பார்க்கிறார்?. காஞ்சனாவின் மனமாற்றமும், அதைவிட ஆதியின் மனமாற்றமும் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே. ரொம்ப சினிமாத்தனமாக இருக்கே. ஏன்?)
இவர்கள் இருவரும் மனம் விட்டுப்பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர்களின் மகிழ்ச்சியான முகங்கள் மாறி மாறி காண்பிக்கப்படுகின்றன.
'அக்கா, நானும் இந்த விசேஷத்தை ஒரு ஓரமா இருந்து பார்க்கலாமா?' என்று கேட்கும் ஆதியிடம்
'தம்பி, என்னடா சொல்றே, இது உன் வீட்டு விசேஷம்டா. நம்ம குடும்பத்துக்கு நீதான் மூத்த ஆண்பிள்ளை. நீ நின்னுதான் இதை சிறப்பா நடத்தணும்.. வா.. என் வாழ்நாளில் இன்னைக்குத்தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' என்று அபி சொல்ல...
அம்மா காஞ்சனாவையும் பெரியம்மா கற்பகத்தையும் அணைத்துக்கொண்டே ஆதி மணமேடைக்கு அழைத்துச்செல்ல.......
கற்பகத்துக்கு ஈஸ்வரன் தாலி கட்ட, காஞ்சனாவும் ஆதியும் பின்னால் நின்று அட்சதை தூவ, ஆதியும் அபியும் சிரித்துப்பேசிக்கொள்ள....
ஒவ்வொருவராக வந்து ஈஸ்வரனுக்கும் கற்பகத்துக்கும் பாதபூஜை செய்கின்றனர். முதலில் அபி, அடுத்து ஆதித்யா, பின்னர் ஆனந்தி, அடுத்து மனோ, அப்புறம் ஆர்த்தி, கூடவே ராஜேஷ், இவர்களோடு அஞ்சலி, கிஷோர், சுமதி, ராஜேந்திரன் ஆகியோரும் மகிழ்ச்சியோடு பாத பூஜை செய்ய...
எல்லோருடைய முகங்களிலும் சிரிப்போ சிரிப்பு... மகிழ்ச்சித்தாண்டவம்.... எல்லோர் முகங்களிலும் பயணித்துக்கொண்டே செல்லும் கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....
:omg: :shock: :shock: :shock:
கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....
"அம்மா" அபியின் குரல் கேட்க......
"டமால்"
ஊதப்பட்ட பலூன் மீது பட்ட ஊசியாக அபியின் அழைப்பு தாக்க, கற்பகத்தின் கற்பனைக்கோட்டை வெடித்து சித்றுகிறது...
நிமிர்ந்து பார்க்கும் கற்பகத்தின் முன் அபி, ஆர்த்தி, சுமதி நிற்க, அம்மாவின் குழப்பமான முகத்தைப்பார்த்து, அபிக்கும் குழப்பம்...
'என்னம்மா ஆச்சு?'
அதோடு ஆர்த்தி 'அம்மா எதாவது பகல் கனவா?'
'இல்லடி பலிக்கக்கூடிய கனவுதான். அது சரி உங்க அப்பா வந்துட்டாரா?'
'அப்பா இன்னும் வரலைம்மா'.
(ஓ... இன்னும் ஈஸ்வரனே மண்டபத்துக்கு வரலையா?. சரிதான்)
காரில் துப்பாக்கியுடன் வந்துகொண்டிருக்கும் காஞ்சனா கோபத்துடன், 'இன்னும் வேகமா போப்பா' என்று ஓட்டுனரை விரட்டுக்கிறாள்.
அதானே பார்த்தேன்....
காஞ்சனாவாவது மனம் மாறுவதாவது....!!!,
ஆதியாவது அபியை அக்காவாக ஏற்றுக்கொள்வதாவது....!!!!
திருச்செல்வமாவது, சீரியலை முடிப்பதாவது.....!!!!!!!.
காஞ்சனா துப்பாக்கியோடு வருவதால், ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
:roll: :phew: