Dear Shiv,
Thank you very much for your regards on our website.
Raghavendran
Printable View
Dear Shiv,
Thank you very much for your regards on our website.
Raghavendran
டியர் முரளி சார்,
ஐப்பசி மாதம் வெளியான அய்யனின் காவியப்பட்டியல் அருமையான, வித்தியாசமானதொரு தொகுப்பு. தங்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டபடியே அப்பட்டியலில் விடுபட்டுள்ளவற்றை என்னால் இயன்ற அளவுக்கு பூர்த்தி செய்து தனியொருபதிவாகவே தந்துள்ளேன்.
அன்புடன்,
பம்மலார்.
Quote:
Originally Posted by Murali Srinivas
ஐப்பசி மாதம் வெளியான அண்ணலின் திரைக்காவியங்கள்
அக்டோபர் 17 - பராசக்தி(1952)
18 - பாபு(1971)
19 - பாவை விளக்கு(1960), பெற்ற மனம்(1960), பட்டாக்கத்தி பைரவன்(1979)
20 -
21 - எங்க ஊர் ராஜா(1968)
22 - அம்பிகாபதி(1957), சித்ரா பௌர்ணமி(1976)
23 - வம்ச விளக்கு(1984)
24 -
25 - கெளரவம்(1973), தேவர் மகன்(1992)
26 - கீழ்வானம் சிவக்கும்(1981)
27 - பந்தபாசம்(1962), தச்சோளி அம்பு[மலையாளம்](1978)
28 -
29 - சொர்க்கம்(1970), எங்கிருந்தோ வந்தாள்(1970)
30 - அவள் யார்(1959), பைலட் பிரேம்நாத்(1978)
31 - பாகப்பிரிவினை(1959)
நவம்பர் 1 - ரங்கோன் ராதா(1956), ஊட்டி வரை உறவு(1967), இரு மலர்கள்(1967), லட்சுமி வந்தாச்சு(1986)
2 - டாக்டர் சிவா(1975), வைர நெஞ்சம்(1975)
3 - முரடன் முத்து(1964), நவராத்திரி(1964)
4 - வெள்ளை ரோஜா(1983)
5 - கண்கள்(1953)
6 - விஸ்வரூபம்(1980)
7 - காத்தவராயன்(1958), கப்பலோட்டிய தமிழன்(1961)
8 -
9 - சிவந்த மண்(1969)
10 - அண்ணன் ஒரு கோயில்(1977)
11 - செல்வம்(1966), படிக்காதவன்(1985)
12 -
13 - பெம்புடு கொடுகு[தெலுங்கு](1953), கோடீஸ்வரன்(1955), கள்வனின் காதலி(1955), அன்பைத் தேடி(1974), பாரம்பரியம்(1993)
14 - பரிட்சைக்கு நேரமாச்சு(1982), ஊரும் உறவும்(1982)
15 - அன்னை இல்லம்(1963), லக்ஷ்மி கல்யாணம்(1968)
குறிப்பு:
1. பராசக்தி[294 நாள்], பாகப்பிரிவினை[216 நாள்], பைலட் பிரேம்நாத்[222 நாள், ஷிஃப்டிங் முறையில் 1080 நாள்] முதலிய காவியங்கள் 200 நாட்களைக் கடந்தவை.
2. படிக்காதவன், தேவர் மகன்[180 நாள்] முதலியவை வெள்ளிவிழாக் காவியங்கள்.
3. சிவந்த மண்[145 நாள்], தச்சோளி அம்பு(மலையாளம்), பட்டாக்கத்தி பைரவன் ஆகியவை இருபது வாரக் காவியங்கள்.
4. அன்னை இல்லம், நவராத்திரி, ஊட்டி வரை உறவு, இரு மலர்கள், சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாபு, கௌரவம், அண்ணன் ஒரு கோயில், விஸ்வரூபம், கீழ்வானம் சிவக்கும், வெள்ளை ரோஜா ஆகியவை 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.
5. கள்வனின் காதலி[83 நாள்], ரங்கோன் ராதா[71 நாள்], அம்பிகாபதி[84 நாள்], காத்தவராயன்[84 நாள்], பந்தபாசம்[77 நாள்], முரடன் முத்து[79 நாள்], எங்க ஊர் ராஜா[85 நாள்], பரிட்சைக்கு நேரமாச்சு[75 நாள்] ஆகிய காவியங்கள் 10 வாரங்களைக் கடந்தவை.
6. பெம்புடு கொடுகு(தெலுங்கு), பாவை விளக்கு, கப்பலோட்டிய தமிழன், செல்வம், லக்ஷ்மி கல்யாணம், டாக்டர் சிவா, வைர நெஞ்சம், ஊரும் உறவும், வம்ச விளக்கு, லட்சுமி வந்தாச்சு முதலிய காவியங்கள் 50 நாட்களுக்கு மேல் ஓடியவை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
இசைவாணி பி.சுசீலா அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
டியர் நௌ சார்,
அரிய பொக்கிஷத்தை [ஸ்ரீவில்லிபுத்தூர் "பராசக்தி" போஸ்டர்] அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!
டியர் ராகவேந்திரன் சார் & பாலா சார்,
அபார லிங்க்குகளுக்கு அற்புத நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி & பம்மலார்...
ஐப்பசி மாத வெளியீடு பட்டியலுக்கு நன்றி, (முன்பு பம்மலார் வெளியிட்ட தீபாவளிப் பட்டியலின் புதிய வடிவம்). நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க. :D
'குறிப்பு' பகுதியில், முதல் பிரிவில் இடம்பெற்றிருக்க வேண்டிய 'கப்பலோட்டிய தமிழன்' ஆறாம் பகுதியில் இடம் பெற்றிருப்பது ஒன்றே நம் மனதை வலிக்கச்செய்யும் ஒரு விஷயம். 1961-ல் மட்டும் அது தீபாவளி அல்ல தீபா'வலி'.
Read long back -
CREDIT GOES TO MR. எம்கேஆர்சாந்தாராம.
" உயர்ந்த மனிதன் " படமும் , நடிகர் திலகத்தின் நடிப்பும் !
இந்த தலைப்பில் ஓர் இழையே போடலாம் !
அவ்வளவு எழுத வேண்டும் !
" அப்படி என்ன நடிகர் திலகத்தின் நடிப்பு இந்த படத்தில் சிறந்து
விளங்குகின்றது ? " என்று நீங்கள் கேட்பது புரிகின்றது ! படத்தைப்
பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வந்தது புரியும் ! முதலில்
இளமையாகத் தோன்றும் சிவாஜியைப் பாருங்கள். மலந்த முகத்துடன்,
புன் சிரிப்புடன், உற்சாகமாக நடை நடந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார் !
ஆனால் அதேசமயத்தில் தனது தந்தையார் " வறட்டுக் கெளரவத்தை "
கடைபிடிப்பது குறித்து அவர் கவலைப்பட்டு அசோகனிடம் வருந்துவதைக்
காட்டும்போது, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தகையது என்பது தெரிகின்றது !
அவரது சிரித்த முகம், மகிழ்ச்சி , எல்லாம் எது வரை ?
" வெள்ளிக்கிண்ணம் தான் " பாடல் பாடும் வரை !
அதற்கு அடுத்த காட்சியிலே, அவரது தந்தையார் ( எஸ்.வி. ராமதாஸ் ),
வாணியின் வீட்டைக் கொளுத்த வரும்போதுதான் மறைந்து விடுகின்றது !
அதன் பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் சிவாஜியின் முகத்தைப்
பாருங்கள் !
சிவாஜியின் முகம் :
எதையோ பறி கொடுத்தவர் போலவும், வெறுப்புடன் இருப்பது போலவும்,
வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்தவர் போலவும், மகிழ்ச்சி என்றால்
என்ன என்று கேட்பவர் போலவும், உற்சாகம் இல்லாமல் இருப்பது போலவும்...........
படம் முழுக்க வருவார் ! இந்த மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டே
படம் முழுக்க நடிகர் திலகம் நடித்திருப்பதுதான் இந்த படத்தில் சிவாஜி
செய்த தனி சிறப்பு !
படம் முழுக்க இந்த துயரம் தோய்ந்த முகத்தில்தான் சிவாஜி நடித்திருப்பார் !
நான் படம் பார்த்த வரையில் எனக்கு கீழ்கண்டவாறு , அவரது
நடிப்பாற்றலை சான்று கூறும் காட்சிகளாக சொல்லலாம் ! அந்த காட்சிகள்
உங்களையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை !
1. வாணி இறந்த பின்பு தன் தந்தையின் எதிரில் படுக்கையில் படுத்தவாறு
பேசும் வசனம் :
" பார்வதி ! என்னை விட்டுப் போய்ட்டியே ! நீ எங்கே என்னை விட்டுப்
போனே ? நான் தான் உன்னைக் காப்பாத்த முடியாத கோழை ஆயிட்டேனே !
நான் ஒரு கோழை ! இந்த பாவத்திற்காக நான் என்னென்ன துன்பங்களை
நான் அனுபவிக்கப் போறேனோ ! கடவுளே ! "
என்று மனம் உருகும் காட்சியில் சிவாஜி " உயர்ந்து " நிற்கிறார் !
2. அசோகன் , குடித்துவிட்டு உண்மையை தாறு நாறாக சொல்லும் போது,
ஒரு இடத்தில் அசோகன் சிவாஜியைப் பார்த்து இப்படி சொல்லுவார் :
"உன்ன நம்பன பார்வதியே உன்னானே காப்பாத்த முடியலே ! " ராஜு, நீ
ஒரு கோழை ! SELFISH FELLOW , சுயநலக்காரன் ! " என்று குற்றம் சாட்டும்போது
சிவாஜி சொல்லும் வசனம் :
" கோபால் , என்னைக் கோழை என்று சொல்லு ! ஆனா சுயநலக்காரன்
என்னு மட்டும் சொல்லாதே ! அதுவும் உன் வாயாலே சொல்லாதே !
நானும் எனக்காக ஒரு கடமையையும் செய்யவில்லை ! ஆரம்பத்திலிருந்து
இன்றுவரை மற்றவர்களின் கடமைக்காக சுமையாக உழைத்துக்கிறேன் !
ஆரம்பத்திலிருந்து என் அப்பாவோட சுயநலத்திற்காக கட்டளை என்னும்
சுமையை சுமந்திருக்கின்றேன் ! கெளரவமான பரம்பரை என்கிற சுமை !
திரண்ட செல்வத்திற்கு அதிபதி என்கிற சுமை ! ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை என்னும் சுமை !
இப்படி பல சுமைகளை ஆற்றிக் கொண்டு பொதி மாடு போல வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் ! சுருக்கமாக சொல்லப் போனால் நான் ஒரு நடமாடும்
சுமைதாங்கி ! "
இப்படி சொல்வதற்க்கு முன்பு நடிகர் திலகம் , அசோகன் கையை இழுத்து
அவரை தன் அருகே இழுத்து வந்து , அசோகன் முதுகில் ஆதங்கத்தோடு ஒரு
தட்டு தட்டிப் இப்படி பேச ஆரம்பிப்பது அற்புதமாக இருக்கும் !
2. சிவகுமார் தன் அம்மா படத்தை வி கே ராமசாமி பாழடித்தற்காக நேரே
சிவாஜியிடம் சென்று தான் வேலையில் நின்று நின்று விடப்போவதாக
சொல்வதும் , அப்போது சிவாஜி , சிவகுமாருக்கு அறிவுரை செய்ய, அப்போது
அங்கு வந்த அசோகன் , சிவாஜியிடம் " லொள்ளு " பண்ணிப் பேச , அப்போது
சிவாஜி பேசும் ஒரே வார்த்தை அற்புதமானது !
சிவாஜி : ( அசோகனிடம் ) : " டேய், நீ அவனுக்கு புத்திமதி
சொல்லுடா ! "
மேற்கண்ட ஒரே வார்த்தை யை சிவாஜி சொல்லும்போது அவரின் அந்த
வார்த்தை " டெலிவரி " மிக சிறப்பாக இருக்கும் ! எப்போதும் சோகத்துடன்
காணப்படும் சிவாஜியின் முகம் இன்னும் சோகம் கப்பியதையும் காணலாம் !
4. செளகார் ஜானகி கொடுக்கும் " பத்திய சமையல் ( ! ) " சிவாஜிக்கு அறவே
பிடிக்காது ! இதனை கவனித்த சிவகுமார் ஒரு நாள் சிவாஜியிடம் " எங்கள்
வீட்டு சமையலை சாப்பிடறீங்களா , ஐயா ? "என்று பணிவுடன் கேட்க அப்போது
சிவாஜியின் முகத்தை பார்க்க வேண்டுமே !
" சரி, கொண்டுவா ! சாப்பிடுகிறேன் ! "
என்று சொல்லும் பாணியில் சிவாஜி தலையை மெல்ல ஆட்டுவாரே !
பார்ப்பதற்க்கே ரொம்ப ரம்மியமாக இருக்கும் !
இது நம்ம கதை !
எனக்கும் , சந்தர்ப்பம் கிடைக்கும்போது கிராமத்திற்கு போகும்போது
அங்கிருக்கும் உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து , " கடலை
உருண்டை சாப்பிடிறீங்களா ? " என்று கேட்டால் , நான் அப்படித்தான்
தலையை ஆட்டுவேன் !
ஒரு பக்கம் சாப்பிட அசை ! மறுபக்கம் உடம்புக்கு
ஆகாது ! இன்னொரு பக்கம் யாராவது ஏதாவது சொல்வார்களா
என்று அச்சம் !
இதனை எல்லாம் சொல்லாமல் சொல்வதின் வெளிப்பாடுதான்
இந்த சிவாஜியின் " தலையாட்டல் ! " இந்த படத்தில் சிவாஜிக்கு ,
சாப்பிட ஆசை ! உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதில் அச்சம் !
அதை விட முக்கியம் , " தஞ்சாவூர் தவுறு " - அதான் எஜமானியம்மாள்
செளகார் ஜானகிக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ !
இவைகள் எல்லாம் சேர்ந்த கலவைதான் அந்த தலையாட்டல் !
இதனை நடிகர் திலகம் நன்றாக செய்திருப்பார் !
5. செளகார் ஜானகிக்கு சிவகுமார் வீட்டில் சென்று சிவாஜி சாப்பிட்டது
பிடிக்கவில்லை ! எனவே அவர் சிவாஜியைப் பார்த்து இப்படி கோபத்துடன்
கேட்கிறார் :
" ராத்தினத்திடம் சாப்பாடு கொடுத்தனுப்பின பிறகு பசி இல்லை
என்று சொல்லி , " சாப்பாடு நன்றாக இருந்தது ! " என்று சொன்னது
பொய் இல்லையா ? ஆபிஸ் ஐந்தரை மணிக்கு முடிந்த பின்னும் இப்படி
எட்டு மணிக்கு வந்து விட்டு " ஆபிஸில் வேலை அதிகம் ! " என்று
சொன்னது பொய் இல்லையா ? "என்று சொல்லி சிவாஜியைக் கேட்கும்போது
அதற்கு சிவாஜி சொல்லும் நீளமான வசனம் - அழுத்தம் திருத்தமாகவும் ,
முகபாவகளை மாற்றியும் அதே சமயத்தில் " ஸ்டைல் : ஆக நடந்து சென்றும்
சிவாஜி பேசும் " பொய் " என்கிற தலைப் பில்பேசும் வசனக்கள் - என்னை
மிகவும் கவர்ந்தது !
இதோ அந்த வசனம் :
சிவாஜி : ( செளகார் ஜானகியிடம் ) :
( சிரித்துக்கொண்டே )
" ஏய் ! நான் என்ன சத்ய மூர்த்தியா - சதா உண்மையைப் பேச !
நீ கஷ்டப்பட்டு கண்டு பிடித்தது 2 பொய்கள் ! ஆனா நம்ம வாழ்க்கையிலே
எவ்வளவு பயங்கரமான பொய்கள் மறைந்திருக்குத் தெரியுமா ?
உன் கணவன் யார் ?
மிஸ்டர் ராஜலிங்கம் - A , OWNER OF HUNDREDS OF FIFTY THOUSANDS
ACRES OF FERTILE LAND ! ! "
இதுக்கெல்லாம் என்ன ஆர்த்தம் ?
நாம ஓயாம , ஒழியாம பொய் சொல்லிக்கொண்டிறோம் என்று அர்த்தம் !
( சலிப்புடன் கைகளைத் தட்டிக்கொள்கிறார் )
நாம எழுதற கணக்கிலே பொய் ! " ரிஜிஸ்டர் ஆபீஸிலே பொய் ! "
நாம தொழிலாளர்களுக்கு கிட்டே பொய் ! நம்ம கூட்டாளிகிட்டே பொய் !
இப்படி பொய் ! பொய் ! பொய் ! பொய் !
இப்படி பொய்யே பேசிக்கிட்டு இருக்கிறதலால் ஒரு " மில் " இப்போது
ஏழு மில் ஆயிட்சு ! ஏன் !உன் கழுத்திலே மின்னுதே வைர நெக்லேஸ் !
கணக்கிலே வரும் அதன் விலை 3 லட்சம் ! ஆனால் அதன் மதிப்போ பல
லட்சம் பொய்கள் ! நாம ஏறிப் போற கார் , இந்த பங்களா, இந்த வீடு, ஆஸ்தி,
சொத்து , சுகம் அந்தஸ்து - இவை எல்லாம் என்ன ?
எங்க தாத்தா சொன்ன பொய் !
எங்க அப்பா சொன்ன பொய் !
இப்போ நான் சொல்லிக்கொண்டிருக்கிற பொய் !
மேற்கண்ட வசனங்களால் போலி வாழ்க்கையில் அவர் எவ்வாறு
அவதிப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது அல்லவா ?
6. இறுதியாக " கிளைமாக்ஸ் " காட்சியில் பாரதி தந்த பார்வதிப்
படத்தைப் பார்த்து அவர் காட்டும் உணர்ச்சிகள் - 20 வருடங்களாக
அவர் தன் உள்ளத்தில் தேக்கி வைத்த உணர்ச்சிப் பிரவாகத்தை
அந்த படத்தைப் பார்க்கும் போது அவர் காட்டும் முக பாவங்கள்............
என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது !
படத்தின் " கிளைமாகஸ் " :
கொடைகானலில் சிவகுமார் , பாரதியை திருமணம் நடத்தித் தருவதாக
உறுதிதரும் சிவாஜி, வீட்டுக்குத் திரும்பியவுடன் அங்கே கண்ட காட்சி ,
அவரை திடுக்கிட வைக்கிறது ! வைர நெக்லேஸ் காணாமல் போய்
விட்டது என்று செளகார் ஜானகி சொல்ல எல்லோருடைய உடமைகளையும்
சோதனை செய்ய முற்பட்டபோது, அதில் சிவகுமாரின் பெட்டியில் அந்த
வைர நெக்லேஸ் இருப்பதை அறிந்து அனைவரும் திடுக்கின்Tஅனர் -
வி கே ஆர் மற்றும் மனோரமாவைத்தவிர- ஏன் என்றால் சிவகுமாரை
அந்த வீட்டிலிருந்து " கல்தா "கொடுத்தால்தானே தாங்கள் முன்னேற
முடியும் என்கிற தப்புக் கணக்கில் செய்தது இந்த நெக்லேஸ் வேலை !
அனைவரும் சிவகுமார் மீது பழி போட , அந்த அவச் சொற்களைக் கேட்டு
சிவாஜி , சிவகுமார் மீது கோபம் கொள்கிறார் ! தான் , நல்லவன் என்று
முற்றிலும் நம்பிய ஒருவன் , இப்போது திருட்டுப் பட்டம் வாங்கி நிற்பது
அவருக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் மன நிம்மதி
இல்லாமல் இருக்கும் பொழுத்கு , அந்த சமயத்தில் என்ன நடந்தது என்று
விசாரிக்கும் நினைவு கூட இல்லாத நேரத்தில் மற்றவர்கள் கூறும் பழிச்
சொற்கள் , ஒருவரின் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு
சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தில் வரும் இந்த காட்சி ! சிவாஜி,
அனைவரையும் போக சொல்கிறார் !
தன் வீட்டில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நாகய்யா , ஒரு நாள்
மூப்பின் காரணமாக வேலையை விட்டு விலக நேருடும் சமயத்தில்
அவரைப் பிரிய மனம் இல்லாமல் சற்றே கண் கலங்கும் நல்ல உள்ளம்
படைத்த சிவாஜி, மற்றவர்கள் பழிச் சொல்லைக் கேட்டு மதி இழக்கிறார் !
சிவாஜி : " சத்யா, ஏன்டா இப்படி செஞ்சே ? உன்னை நான் எப்படி
நினைச்சிருந்தேன் ! என்னை ஏமாத்தியேடா பாவி ! " என்று ஆத்திரத்தில்
தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவகுமாரை விளாசு , விளாசு என
விளாசுகின்றார் ! சிவகுமார் " அம்மா " என்று அழுதுகொண்டு கீழே விழுகிறார் !
செளகார் ஜானகி தடுத்தும் அவர் கேட்காமல் மறுபடியும் அடிக்கிறார் !
பின்னர் கோபம் கொண்டு தன் காலால் சிவகுமாரை எட்டி உதைக்கிறார் !
மேற்கண்ட காட்சி ஒரே " டேக் " -ல் படமாக்கினார்கள். ஆனால் பிரம்பால்
அடிபட்ட சிவகுமாருக்கு அதனால் ஒன்றும் ஆகவில்லை !
ஆனால் :
சிவாஜி, தன் " பூட் " காலால் எட்டி உதைத்ததில் சிவகுமாரின் தோள்பட்டை
கழன்று தனியே வந்து விட்டது ! வலியால் துடித்த சிவகுமார் , தன் வலியை
மறந்து காட்சி சிறப்பாக வந்தது குறித்து மகிழ்ச்சி கொண்டார் ! பின்னர் அவர்
தன் தோள் பட்டைக்கு மருத்துவ கிசிச்சை மேற்கொண்டது தனி கதை !
அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் சிவகுமார் தீப்பற்றி எரியும் ஒரு
வீட்டில் தன் அம்மாவை எண்ணியே தற்கொலை எண்ணத்துடன் நுழைகிறார் !
இங்கே , சிவாஜியிடம் பாரதி , சிவகுமாரின் அம்மா படத்தைக் காண்பிக்கும்
போதுதான் சிவாஜியின் முகம் மாறுகிறது ! " பார்வதீ " ( தீ ! ) என்று அலறிக்
கொண்டு கீழே விழுகிறார் ! செளகாரிடம் நடந்ததை சொல்கிறார் ! செளகாரும்
தன் மகன் தம் வீட்டிலே வேலைக்காரனாக இருந்தது குறித்து வேதனை
அடைகிறார் ! அப்போது தன் மகனைத் தேடி சிவாஜி வெளியே வரும்போது,
தீப்பற்றி எரியும் வீட்டில் சிவகுனார் உழைந்து விட்டார் என்பதை அறிந்து ,
தன் மகனைக் காப்பாற்ற தீபிடிக்கும் அந்த வீட்டில் நுழைந்து சிவகுமாரை
மீட்டு வெளியே வருகிறார் !
பிறகு என்ன சுபம் தான் !
விகேஆரும் , மனோரமா வும் தாங்கள் செய்த சதி வேலைக்கு மன்னிப்பு
கேட்கும்போது சிவாஜியோ , " உங்களால் தான் என் மகன் எனக்கு கிடைத்தான் !
எனெவே உங்களை மன்னித்து விட்டேன் ! " என்று சொல்லி " உயர்ந்த மனிதன் "
ஆகிவிடுகிறார் ! அதன்பின்னர் பட இறுதியில் ஏ விஎம் ந் " எம்பளம் " காட்டும்
போது தியேடரில் இருந்த மக்கள் கைகளைத் தட்டி " ஒரு நல்ல படத்தைப்
பார்த்தோம்! " என்கிற திருப்தியுடன் தியேடரை விட்டு வெளியேறுவதை நான்
பார்த்திருக்கின்றேன் !
படம் வெற்றி !
" உயர்ந்த மனிதன் " திரைப் படம் 29 / 11 / 1968 -ல் வெளியானது !
சென்னையில் வெல்லிங்க்டன், மகாராணி, ராக்ஸி ஆகிய தியேடர்களில்
ஓடியது ! இந்த படம் அதிகம் ஆராவாரம் இன்றி , ஆர்ப்பாட்டம் இன்றி
அமைதியாக ஓடியது ! ஏ வி எம் சரவணன் சொல்வது போல், அந்த
காலத்தில் பெரியவர்கள் திரை அரங்குகிற்கு சென்று படங்களைப் பார்த்து
எது நல்ல படம் என்பதைக் கண்டறிருந்து பின்னர் அந்த படங்களை தங்கள்
பிள்ளைகளும் பார்த்து ரசிக்கவேண்டும் என்று விரும்பி அனுப்புவார்கள் !
" உயர்ந்த மனிதன் " திரைப் படத்தை எனது தந்தையார் பரிந்துரையின் பெயரில் தான் நான் பார்த்தேன் !
இப்போதோ , நிலைமை வேறு !
இப்போது நம் பிள்ளைகள் முதலில் படத்தைப் பார்த்து பின்னர் தேர்வு செய்து அவைகளைப் பார்க்கும்படி பரிந்துரை செய்கிறார்கள் !
உயர்ந்த மனிதன் " படம் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது !
125 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் 100 -ம் நாள் விழா கொண்டாடப் பட்டது !
அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து ரிசுகளை
வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !
காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்
இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த
நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !
ஆனால் அண்ணா அதனைப் &
CONTD. ...
" உயர்ந்த மனிதன் "
அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய
அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து பரிசுகளை
வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !
காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்
இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த
நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !
ஆனால் அண்ணா அதனைப் பற்றி கவலைப் படாமல் விழாவில் கலந்து
கொண்டதோடு அவருடைய " பஞ்ச் " வசனத்தையும் அந்த விழாவில்
சிவாஜிக்காக பயன்படுத்தினார் !
அதுதான் :
" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ! "
இந்த வசனம் அண்ணா எழுதின ஒரு படத்தில் இடம் பெற்ற வசனம் !
அந்த வசனத்தை இங்கே சிவாஜியைக் குறிப்பிட்டு பேசினார் !
" கணேசன் வேறு ஒரு கட்சியில் இருந்தாலும் அவருடைய திறமையை
நான் போற்றுகின்றேன் ! கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க ! "
என்று அண்ணா சொன்னார் !
நடிகர் திலகமும் அண்ணாவை புகந்து பேசினார் !
Rajapart rangadurai
The direction squanders a bit, especially the over-melodramatic tone with which it ends. Invariably, NT is the best thing about the film.. :notworthy:
Last Lear, Loose Liar-nu evan evano padam nadichu, empty deconstruction, subtext kandupidikaranga.
Something on lines of NT's masterclass transition from stage to film (And how he changed norms of acting in Tamil cinema since) would be the zenith. One of my fantasy films with NT, you see. For I think NT's encyclopedic modes of acting could have been fully registered in a subject like this. A film on those lines would have made it unquestionably easier to those who find it difficult to fully appreciate his unimaginable talent, and lazily describe it as 'theatrical'. How I wish something on these lines got materialized.