-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
இன்று (14-11-15) காலை பொதிகை தொலைக்காட்சியில், நடிகை லதாவின் பேட்டி ஒலிபரப்பாயிற்று. மக்கள் திலகத்துடன் அவர் இணைந்து நடித்த காவியங்களின் படக் காட்சிகள் பற்றி விவரித்து அவரின் பெருமைகளையும், திரைத்துறையில் சகல நுணுக்கங்களையும் தெரிந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக. "சிரித்து வாழ வேண்டும்" காவியத்தில் இடம் பெற்ற, லாரி ஏற்றி குழந்தைகள் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் பொழுது, அவரை நம் பொன்மனச்ம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தர தரவென்று இழுத்து வந்து காண்பிக்கும் காட்சி ஒரே டேக்கில் ஒகே ஆனது என்று நடிகை லதா அவர்கள் கூறிய பொழுது அந்த காட்சியை ஒளி பரப்பினர்.
தம் எங்கு சென்றாலும், நம் புரட்சித்தலைவர் அவர்கள் மேல் .மக்களுக்கு ஒரு CRAZE இருப்பதை உணர்வதாகவும், தனக்கு அவரால் பெரும் பெயரும் புகழும் இன்றும் கிடைத்து வருகிறது என்று பெருமிதத்துடன் நடிகை லதா கூறியது, அவர் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மேல் , நன்றியுணர்ச்சியுடன், மாறாத அன்புடன் இருப்பது புலனாகிறது.
http://i63.tinypic.com/20ksshz.jpg
நடிகை லதா அவர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நினைவு கூர்ந்து இனிய நினைவுகளை நேயர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. தீபாவளியன்று இமயம் டிவியில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது. மக்கள் திலகத்தைப் பற்றி புகழ்ந்தார். தான் விபத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்ற போது தன்னை சந்தித்து ஆறுதல் சொன்னார் என்று நெகிழ்ந்து போனார்.
தீபாவளி அன்று பாலிமர் டிவியில் திரைப்படக் கலைஞர்கள் பங்கு பெற்ற பட்டிமன்றம் ஒளிபரப்பானது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானபோது சென்னையில் தேவி பாரடைஸ் தியேட்டரில் இருந்து மவுண்ட் ரோடில் உள்ள அண்ணா சிலையை தாண்டி வாலாஜா ரோடிலும் மக்கள் வரிசை நீண்டது என்று இயக்குநர் பி.வாசு கூறினார். உண்மையில் அப்போது டிக்கட்டுக்காக அன்னபூர்ணா ஓட்டல் வரை வரிசை நிற்கும். இப்போது அந்த ஓட்டல் இல்லை.தேவி பாரடைசுக்கும் அன்னபூர்ணா ஓட்டலுக்கும் எவ்வளவு தூரம் என்று சென்னையில் உள்ளவர்களுக்கு தெரியும். நன்றி.
-
http://www.timescontent.com/tss/phot...machandran.jpg
2 நாள்
20 மணி நேரம்
2 கோடி (10 லட்சம்)
நான் சொல்வது மூத்த ரசிகர்களுக்கு நினைவிருக்கும். 1969-ம் ஆண்டு அண்ணா அவர்கள் மறைந்த பிறகு கருணாநிதி அவர்கள் முதல்வராக பதவியேற்றார். சில மாதங்களில் திமுகவுக்கு கட்சி நிதியாக ரூ.10 லட்சம் திரட்ட வேண்டும் என்று கருணாநிதி அவர்கள் முடிவு செய்தார். அதற்கான பொறுப்பை புரட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார். புரட்சித் தலைவர் அப்போது கட்சியின் பொருளாளர்.
உடனே, புரட்சித் தலைவரின் பயணத் திட்டம் தயாரானது. படப்பிடிப்பை ஒத்தி வைத்தார். கட்சிப் பணி, மக்கள் பணிக்காக பெருமளவு நேரத்தை ஒதுக்கியதால் தான் நடிக்கும் படங்களைப் பற்றியோ அதனால், தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்றோ புரட்சித் தலைவர் கவலைப்படவில்லை. பொதுப்பணிகள் காரணமாகவே அவரால் அதிக படங்கள் நடிக்க முடியாமல் போனது.
கட்சி நிதி திரட்ட சேலம் மாவட்டத்தில் மட்டும் மக்கள் தலைவர் 2 நாள் பயணம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு சாப்பிட அழைத்தால் ஒரு தொகை, பொன்மனச் செம்மலுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு கட்டணம், ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்க ஒரு கட்டணம் என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதற்கு ஏராளமானபேர் சேலத்தில் முன்னாள் அமைச்சர் மறைதிரு.ராஜாராமிடம் பதிவு செய்து கொண்டனர்.
சேலம் முழுவதும் திருவிழாக் கோலம். ஓமலூரில் முதன் முதலில் ஒரு சேட்டு வீட்டுக்கு புரட்சித் தலைவர் சென்றார். ஆயிரக்கணக்கானோர் சாப்பிட அழைத்திருந்ததால் ஒவ்வொரு வீட்டிலும் பெயரளவுக்கு சாப்பிட்டார். சேட்டு வீட்டில் இரண்டு ஸ்பூன் பாசந்தி மட்டும் சாப்பிட்டார். இப்படி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள். பொன்மனச் செம்மலை நேரில் பார்த்த மகிழ்ச்சி, அதிலும் தங்கள் வீட்டுக்கே வந்த உற்சாகத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் பலர் அவரிடம் கூடுதலாக பணம் கொடுத்தனர்.
சாப்பிட அழைத்தவர்களில் வாட்ச் மேன் பணியாற்றும் ஒருவரும் இருந்தார். அவர் கடன் வாங்கி புரட்சித் தலைவரை தனது வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார். அவர் வீட்டுக்கு சென்று நிலைமையை பார்த்த புரட்சித் தலைவர், விவரம் தெரிந்து கொண்டு வாட்ச்மேன் செலுத்திய தொகையை விட 2 மடங்கு தொகையை அவருக்கு அளித்தார். அந்த வாட்ச்மேன் குடும்பமே மனித தெய்வத்தின் கருணை மழையில் நனைந்தது.
புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு பொன்மனச் செம்மலுடன் படம் எடுக்க ஆயிரக்கணக்கானோர் மேடைக்கு கீழே கியூவில் நின்றனர். ஆயிரக்கணக்கானோருக்கு ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்தார்.
இப்படியே இரண்டு நாள் பயணம். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. மொத்தம் 2 நாள்களில் 20 மணி நேரத்தில் புரட்சித் தலைவருக்கு மக்கள் அளித்த காணிக்கை ரூ.10 லட்சம்.
1969-ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை 100 ரூபாய்க்கு கொஞ்சம் கூடுதல். 10 லட்சத்துக்கு கிட்டத்தட்ட 1000 பவுன் வாங்கலாம். இன்று 1000 பவுன் 2 கோடி ரூபாய். மக்கள் தனக்கு அளித்த பணத்தை அப்படியே ராஜாராமிடம் ஒப்படைத்து விட்டு சேலத்தில் இருந்து புறப்பட்டார் மக்கள் திலகம்.
இரண்டே நாளில் 20 மணி நேரத்தில் திமுகவுக்காக கட்சி நிதியாக இப்போதைய மதிப்புப்படி 2 கோடி ரூபாயை பொன்மனம் கொண்ட மன்னவனிடம் மக்கள் அள்ளிக் கொடுத்தது யாரும் நினைக்க முடியாத சாதனை.
அவர் நடித்த திரைப்படங்கள் மூலம் மட்டுமில்லாமல், பொது வாழ்வில் மக்களின் அன்பை வசூலிப்பதிலும் ஏழைகளின் தலைவர் என்றும் வசூல் சக்கரவர்த்தி.
சேலம் மக்கள் இந்த பாடலை பாடி வாத்தியார் ஐயாவை வரவேற்றிருப்பார்களோ?
https://youtu.be/7lIENBK-la4
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
19.11.2015
FORMER PRIME MINISTER SMT INDIRA GANDHI BIRTH DAY .
http://i68.tinypic.com/2wggois.jpg
-
-
-
-
http://i67.tinypic.com/wb4c3b.jpg
மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.
வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!
courtesy-ஜியாவுத்தீன்.
-
VETRAN ACTOR M.N. NAMBIYAR - NINAIVU THINAM INDRU.
http://i67.tinypic.com/dfiw3n.jpg
-
-
-
-
-
நம் மக்கள் திலகத்தின் தீவிர விசுவாசியாகிய திரு.அலெக்ஸ் அவர்களின் மகள் திருமண வரவேற்பின்போது, 17-11-2015 செவ்வாய் கிழமையன்று மணமக்களை இதய தெய்வம் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்துவது போல், வைக்கப்பட்ட பதாகை :
http://i63.tinypic.com/2eex7ba.jpg
-
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு
கோவை நகரில் இரு திரை அரங்குகளில்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியங்கள்
திரையிடப்பட்டு இன்று வரை ரசிகர்களை
மகிழ்வித்து வருகின்றது.அதன் வசூல் விபரம்.
1. ராயல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் - Rs.1,05,000/-
2. டிலைட் - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள் - Rs. 71,000/-
தகவல் - அன்பு நண்பர் திரு ஹரிதாஸ் - கோவை.
-
-
-
-
-
-
-
-
-
-
-