http://i63.tinypic.com/10zskd0.jpg
Printable View
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (01/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் இணைந்த 6 வது எம்.ஜி.ஆர். வாரம்.
சென்னை சரவணாவில் கடந்த ஆண்டில் 21/08/2015 வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 7 மாத இடைவெளியில் மீண்டும் மறு வெளியீடு.
http://i63.tinypic.com/2z5nko1.jpg
வரும் ஞாயிறு (03//04/2016) அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணியளவில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i63.tinypic.com/2irb221.jpg
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (01/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் இணைந்த 6 வது எம்.ஜி.ஆர். வாரம்.
சென்னை சரவணாவில் கடந்த ஆண்டில் 21/08/2015 வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 7 மாத இடைவெளியில் மீண்டும் மறு வெளியீடு.
http://i63.tinypic.com/2z5nko1.jpg
தகவல் உதவி: ஓட்டேரி திரு.பாண்டியன்.
எம்ஜிஆர் 100 | 34 - இரக்க சுபாவம் கொண்டவர்!
M.G.R. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்டவர். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்றால் அவரது கருணை மனம் கங்கையாக பொங்கும். அதனால்தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட வீட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.
நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.
மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.
‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று...’ என்ற சூப்பர் ஹிட் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் மஞ்சள் வண்ண உடையில் கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து எம்.ஜி.ஆர். மிகவும் இளமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்.
காட்சி படமாக்கப்பட்ட இடம் மைசூரில் உள்ள மலைப் பகுதி. ஒரு காட்சியில் மலை யின் உச்சியில் எம்.ஜி.ஆர். நிற்பார். கேமரா கோணம் கீழே இருந்து எடுக்கப் பட்டிருக்கும். அவருக்கு பின்னே வெண்மேகத்தை சுமந்தபடி விரிந்து பரந்த நீலவானம். ரம்மியமான காட்சி அது.
ஒரு இடத்தில் இடுப்பில் ஒரு கையை வைத்து மறுகையால் உலகம் எல்லையற் றது என்பது போல தலைக்குமேல் சுழற்றி அபிநயம் செய்வார். குறிப்பிட்ட வரிகளை பாடிவிட்டு இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உயர்த்தி ‘T ’ வடிவில் விநாடி நேரம் நின்று, இடதுபுறம் அரை வட்டமாக எம்.ஜி.ஆர். திரும்பும் ஸ்டைலே தனி. அது அவருக்குத்தான் வரும். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள்....
‘‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்....’’
உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் அப்போதைய அரசியல் சூழலில் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் வரும் முன்பே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...’ என்ற பாடல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. இந்தப் பாடல் காட்சி யில் ‘திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி’ என்று ஓட்டு நிலவரத்துடன் பேனர் காட்டப்படும்போது தியேட்டர் அதகளப்படும். தடைகளை தாண்டி படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி அமோக வெற்றி பெற்றது.
courtesy the hindu
வரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை
வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப்படங்களில் மதுரையைச் சித்தரிப்வனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டனவாகும்.
அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப் பட்டுக் கொலையுண்டவன்.
இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களிள் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவருக்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.
அதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கிய படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஒப்பு நோக்கிக் காண வேண்டிய படம். எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு 1980 மற்றும் ஆண்டிப்பட்டி 1984 தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர்கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.
courtesy - net
எம்.ஜி.ஆர்., நடித்த, "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படம், வெளியான சமயம் அது. மதுரையில் வெளியிடப்பட்ட அந்த படத்தை பார்க்க வந்த வெளியூர் ரசிகர் ஒருவர், டிக்கெட் கிடைக்காததால், சோகத்துடன் ஊர் திரும்பினார். திரும்பும் வழியில், லாட்டரி கடையில் வேண் டாவெறுப்பாக, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிச் சென்றுள்ளார்.
அந்த சீட்டிற்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அச்சமயம் தினசரிகளில், "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பெற்றுத் தந்த ஒரு லட்சம்...' என்று, செய்தி வெளிவந்து இருந்தது.
dinamalar
மீனவநண்பன் -1977
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஸ்ரீதர் இணைப்பில் வந்த இரண்டாவது படம் .
மக்கள் திலகத்தின் கடைசி சமூக படம் .
100 நாட்களுக்கு மேல் தமிழகத்திலும் , இலங்கையிலும் ஓடி மாபெரும் வெற்றி .
http://i65.tinypic.com/2eq48c5.jpg
நாட்டில் பொது சேவை செய்ய தலைவர்கள் போட்டி
ஏன் எதற்கு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்
நடிகர்கள் போட்டி முதல்வர் ஆகஂ
ரசிகர்கள் ரசிக்கும் வரை சினிமா வில் பணம் புகழ்
மார்கெட் போனதும் அரசியலில் ஏமாளி ரசிகர்களை கொண்டு பணம் புகழ் அடைய எண்ணம்
மக்கள் தெளிவாகஂ உள்ளார்
எம் ஜி ஆர் ரை நடிகர் என்பதால் மட்டுமே ஏற்றுகொள்ளவில்லை
எம் ஜி ஆர் ஒரு சிறந்த வள்ளல்
எம் ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதநேயர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த மாவீரர்
எம் ஜி ஆர் ஒருசிறந்த நிர்வாகி
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தலைவர்
எம் ஜி ஆர் ஒரு சிறந்த தேசியவாதி
இதுபோன்ற பல சிறப்பு தகுதி பெற்றவர் எம் ஜி ஆர் அதனால் மக்கள் அவரை தலைவராக மட்டும் அல்ல கடவுளாய் ஏற்று கொண்டுள்ளார்கள்
ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம் ஜி ஆர்
இந்த சூரியகுடும்பத்தில்
courtesy fb
நேற்று முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
அலிபாபாவும் 40 திருடர்களும்.