https://uploads.tapatalk-cdn.com/201...4ae3dcb358.jpg
Printable View
முள்ளி வாய்க்கால் , காவேரி, முல்லை பெரியார், ஹிந்தி-சமஸ்க்ரித திணிப்பு,மீனவர் பிரச்சினை,விவசாயி தற்கொலை என்று பல விஷயங்கள் இணைக்க முடியாத தமிழர்களை ஏறு தழுவுதல் இணைத்தது விநோதமா,தற்செயலா, அல்லது காப்பு மூடி (safety valve )உடைப்பா? எதுவாயினும் 17 ஜனவரி 2017 தமிழர்களால் ஒற்றுமை நாளாகவே நினைவு கூறப்படும்.
இதையொட்டி தமிழர்கள் தமிழர்களால்தான் ஆளப்பட வேண்டும் எனும் கோஷம் வீரமணி தொடங்கி,சரத்குமார்,நடராஜன் வரை கேட்க தொடங்கி விட்டது. இதை நாம் காமராஜ் மறைந்ததும் உணர்ந்திருந்தால், காமராஜ் வழியிலேயே எளிமை சிந்தனை,நேர்மை, தேசிய சிந்தனையுடன் கூடிய தமிழ் நலன், பண்பாட்டை மதித்த பண்பு ,காமராஜால் மறைமுகமாக வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட சிவாஜி கணேசன் எனும் தமிழரிடம் தமிழ்நாட்டின் தலைமை வந்திருக்க வேண்டும்.
இனியாவது நன்மையே நடக்கட்டும். ஏறு தழுவுதல் ,இன்றைய பிரச்சினை ஆதலால் இன்றைய ஸ்பெஷல் ,நடிகர்திலகம் ஏறு தழுவும் விளையாட்டு பிள்ளை.2.39 முதல் 2.44 வரை.
https://www.youtube.com/watch?v=CAPD2ZFU38g
[QUOTE=Gopal,S.;1314891]
( இதை நாம் காமராஜ் மறைந்ததும் உணர்ந்திருந்தால், காமராஜ் வழியிலேயே எளிமை சிந்தனை,நேர்மை, தேசிய சிந்தனையுடன் கூடிய தமிழ் நலன், பண்பாட்டை மதித்த பண்பு ,காமராஜால் மறைமுகமாக வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட சிவாஜி கணேசன் எனும் தமிழரிடம் தமிழ்நாட்டின் தலைமை வந்திருக்க வேண்டும்.
(வைர வார்த்தைகளுக்கு நன்றி கோபால் சார்)
இனியாவது நன்மையே நடக்கட்டும். )
நடிகர்திலக ரசிகர்களின் நெடுங்கால நெஞ்சக்குமுறல் இது.
இனியாவது நன்மை..
என்பதுதான்...
இது தமிழ்நாட்டில் இனி நடக்குமா?அவரின் பெருமையை தமிழினத்தின் பெரும்பகுதி என்றைக்கு உணர்கிறார்களோ அப்போது வேண்டுமானால் அது நடக்கலாம்.
அவரின் பெருமையை அனைவரும் உணரும் காலம் வந்தால் அப்போது பகுத்தறிவு துளிர் விட ஆரம்பித்திருக்கும் .
பிரபு அவர்கள் ஒரு நடிகரின் நூற்றாண்டு விழாவை இந்த வருடம் முழுதும் கொண்டாடுங்கள் என்று கூறியது என்னை போன்ற சிவாஜி ரசிகர் மட்டுமன்றி பல சிவாஜி ரசிகர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நம் தலைவரின் சிலையை திருச்சியில் 6 ஆண்டு காலமாக மூடி வைத்து அதற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவருடைய 100 வது பிறந்த நாளை பொது மக்களே தேவையற்ற நிகழ்வு என்று ஒதுக்கி வைத்து ஜல்லிக்கட்டு பிரச்னையை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் போது இப்படி இவர் கூறுவது ஏற்புடையதாக இல்லை.மேலும் இவர் நம் தலைவருடைய பிறந்த நாளைக்கோ நினைவு நாளைக்கோ ஒரு வருடமாவது அறிக்கையை கொடுத்து கொண்டாட சொல்லியதே இல்லை - தலைவருடைய பிள்ளை என்பதால் அவர் எங்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் சார்புடைய நபர்களின் வார்த்தையை உச்சரிப்பதை உண்மையான சிவாஜி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் - திருச்சி சிலையை திறக்காமல் இருப்பதும் சென்னை சிலையை அகற்ற குறி வைப்பதும் தங்கள் வேலையாக கொண்டிருக்கும் அழிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் அந்த கூட்டத்திற்கு சாமரம் வீசுவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் பிரபு அவர்களே
Gopal sir and chowthryram sir
thank u very much for your postings
keep it up sirs
Senthilvel sir
thanh u for ur postings sir
sivaji pugal kaakkum unmai ullangal valga
பழைய பொக்கிஷங்களின் அசத்தல் பதிவுகள் அருமை,
தொடர்ந்து அசத்துங்கள் செந்தில்வேல்.
அபூர்வமான இந்த நோட்டீஸை பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி செந்தில்.இதில் மன்றத்தின் செயல் வீரர்கள் பட்டியலில் அடியேன் பெயரைக் காணலாம்
நடிகர் திலகத்தின் ஜனவரிமாத வெளியீடுகள்
அன்பளிப்பு(1969)
தங்கப்பதுமை(1959),
சாதனை(1986)
பராசக்தி(தெலுங்கு)(1957),
பொம்மல பெள்ளி(தெலுங்கு)(1958),
மனிதனும் தெய்வமாகலாம்(1975),
ஞான பறவை(1991)
காவேரி(1955)
பரதேசி(தெலுங்கு)(1953),
நான் பெற்ற செல்வம்(1956),
நல்ல வீடு(1956),
இரும்புத்திரை(1960),
பார்த்தால் பசி தீரும்(1962),
கர்ணன்(1964), பழநி(1965),
கந்தன் கருணை(1967),
எங்க மாமா(1970),
இரு துருவம்(1971),
அவன் ஒரு சரித்திரம்(1977),
மோகனப்புன்னகை(1981),
உருவங்கள் மாறலாம்(1983),
பெஜவாடா பொப்புலி(தெலுங்கு)(1983),
திருப்பம்(1984),
ராஜ மரியாதை(1987)
மன்னவரு சின்னவரு(1999)
நானே ராஜா(1956)
மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),
ராஜா(1972),
சிவகாமியின் செல்வன்(1974),
தீபம்(1977),
அந்தமான் காதலி(1978),
ரிஷிமூலம்(1980),
ஹிட்லர் உமாநாத்(1982),
நீதிபதி(1983),
பந்தம்(1985),
மருமகள்(1986),
குடும்பம் ஒரு கோவில்(1987)
திரிசூலம்(1979)
பூங்கோதை(1953),
ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)(1958),
சினிமா பைத்தியம்(1975)
நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்!நடிகர்திலகத்தின் படங்களை உதாரணம் காட்டி பேச்சு!
நேற்று நடைபெற்ற நடிகர்சங்க உண்ணாவிரதத்தின் போது இளைஞர் ஒருவர் நடிகர்களை குற்றம் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், நடிகர்கள் நான்கு சுவர்களுக்குள் உண்ணாவிரதம் இருப்பது தவறு என்றும், 20 வருடங்களுக்கு மேலாக நல்ல படங்களை தமிழில் பார்க்க முடியவில்லை என்றும், கட்டபொம்மன், திருவிளையாடல் படங்களை உதாரணம் காட்டியும் பேசியுள்ளார்.உணர்ச்சி வேகத்தில் அவர் பேசும் போது கூட அவர குறிப்பிட்டது நடிகர்திலகத்தின் படங்களை மட்டும் தான்.என்றும் பெயர் சொல்லும் படங்களாக அவர் படங்கள் மட்டுமே இருக்கும் என்பது காலம் உணர்த்தும் உண்மை.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல்.
"தெய்வம் நின்று பேசும்".
அந்த வீடியோ இணைப்பு
நடிகர்களுக்கு எதிர்ப்பு: https://youtu.be/aCEgEZi1o1M
இதே வீடியோவை தினமலரும் அப்லோட் செய்திருக்கிறது.ஆனால் அதில் நடிகர்திலகத்தின் படங்களைஅந்த இளைஞர் குறிப்பிடும் முன்னர் அந்த வீடியோ அத்துடன் முடிவதாக காண்பிக்கப்படுகிறது.
தினமலரின் சீரிய பணி வாழ்க!
ராஜ பார்ட் ரங்கதுரை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி
கோவை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தின் கலந்தாசனைக் கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க சில முடிவுகள் எடுக்கப்பட்டது.படத்தை வெளியிடும் திரு.பாலகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
https://uploads.tapatalk-cdn.com/201...d0e65dfe87.jpg
பாலகிருஷ்ணன் கூறுகையில்,
கேரளாவிலும் இப்படம் ஆறு அரங்குகளில் திரையிடப்போவதாகவும் அறிவித்தார்.40 வருடங்களுக்கு முன் வந்த ஒரு பழைய தமிழ் திரைப்படம் வெளி மாநிலத்தில் ஆறு திரையரங்குகளில் வெளியாவது திரையுலக வரலாற்றில் இதுவே முதன் முறையென்றும் தகவல் அளித்தார்.மேலுமபடம் 120 முதல் 150 திரைகளில் வெளியிட முயற்சி நடக்கிறது.
படம் டிஜிட்டலுக்கு மாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை கேட்டால் பெரும் மலைப்பைஏற்படுத்துகின்றது.
கோவை மாவட்ட. ரசிகர்கள் படத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது.
கோவை அன்புச்செழியன் :
இவர் நடிகர்திலகத்தின் பட பாடல்களை அவர் பெருமை கூறும் வரிகளாக மாற்றி பாடும் திறமை படைத்தவர்.சாம்பிள் வீடியோ இணைப்பு :
Raja Part Rangadurai. -civai sivaji fans meeting: https://youtu.be/9z4bx7Od0jg
இணைப்புச் செய்தி:
நடிகர்திலகத்தின் சிலை வேறு எங்கும் இல்லாத அளவில் 2கோடி செலவில் நாகர்கோயிலில் அமைக்கப்படுகின்றது.அதற்கான இடம் ரசிகர்களின் சொந்தப்பணத்தில் வாங்கப்பட்டு அதற்கான முயற்சிகள்நடைபெற்று வருகிறது.சிலை திறப்புவிழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருப்பதால் 1919 க்குள் அந்த விழா நடக்க முடிவு செய்திருப்பதாகவும் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
https://uploads.tapatalk-cdn.com/201...61ce96130f.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...68940c9b67.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...37619cb795.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...d080c0e97e.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...ae0bf911de.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...034d73d765.jpg