https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...e5&oe=5BCB3EDC
Printable View
Nallathambi Nsk
கலைவாணர் மகள் என் அன்பு கஸ்தூரி அக்கா அவர்களின் மகள்
"மது கேரிமேத்யூஸ்" திருமணம் அமெரிக்காவில் , லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றபேது வணக்கத்துக்குரிய " நடிகர் திலகம் " சிவாஜி அவர்கள் நேரில் சென்று கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்கள்
·
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...97&oe=5BD837DA
நடிகர் திலகத்தை புதிய பரிமாணத்துடன் காட்சிப்படுத்திய முக்கியமான திரைப்படம் "ஆலய மணி"... சிவாஜி சினிமாக்களில் பல டைட்டில்கள் கவிதை பேசும்... பாவ மன்னிப்பு, ஞான ஔி, வெள்ளை ரோஜா.. போன்றவை வெறும் திரைப்பட பெயர்கள் மட்டுமல்ல.. சமத்துவம், மனித நேயம், சகல மத சம்பிரதாயங்களுக்கும் பொருத்த மான டைட்டில் செலக்ஷன்ஸ்... இந்த ஆலயமணியில் ஒலித்த இந்த பாடலில் கர்மவீரர் காமராஜரை பொருத்திப் பார்த்தேன்... நன்றாகத்தான் இருக்கிறது...
ஆலமரத்தின் விழுதினைப் போலே....
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே...
...வாழைக் கன்று அன்னையின் நிழலில்...
வாழ்வது போலே வாழவைத்தாயே...
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே...
ஆலமரம் என்பது அவர்தான்... அவரேதான்... காலா காந்தியேதான்.. வேர்பிடித்த விழுதுகளை ஒட்டி நிற்கும் பெருமையை எனக்குத் தந்தாயே தலைவா... என்கிறார் அப்போது காயம்பட்ட கணேசன்... வாழையும் தென்னையும் பிள்ளைகள் போல. கன்றுகளாக நட்டு வைக்கும் போது ஒரு தாய் தன் குழந்தையை எப்படி கவனத்துடன் வளர்ப்பாளோ அதுபோல வளர்க்க வேண்டும்... தென்னம் பிள்ளை பிற்பாடு இளநீர் சொறிவதுபோல் வாழையும் வாழையடிவாழையாக உறவு வளர்க்கும்... அதில் ஒன்றித்தான் நீயும் நானும் ஈருடல் ஓருயிர் என்று காமராஜரை குறிப்பிடுகிறார்... இந்தப்பாடலை அப்படியே களவாடி... காதல் பாடலாய் உருவாக்கி விட்டதாக தோன்றுகிறது...
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்...
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்...
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்...
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை...
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே...
மான அவமானங்கள் மனித மனதுக்குள் நிறைந்து விட்டால்.. இதயம் இயல்பாய் துடிக்காது... அப்படிப்பட்ட சூழலில்... நான் எங்கே செல்வது? எங்கே நிம்மதி? என்று தென்றலிடம் கேட்டேன்... பூங்குருவிகளிடம் கேட்டேன்.. யார் சொன்னார்களோ... என் மௌன மொழியை புரிந்து கொண்டு உன்னுடன் என்னை இணைத்து விட்டார்கள்... இறைவனின் கருணையாகக் கூட இருக்கும்... இதே பாசமும் நேசமும் காலம் உள்ளவரை நிலைபெற வேண்டும் என்கிறார்...
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே...
ஆலயமணியின் இன்னிசை நீயே...
தாய்மை எனக்கே தந்தவள்(ர்) நீயே...
தங்க கோபுரம் போல வந்தாயே...
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே... அரசியல் நந்தவனத்தில் ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்.. நீயே பூஜைக்கேற்ற புதுமலர் என்று பெருந்தலைவரை குறிப்பிடுகிறார்.. ஆலய வழிபாட்டில் அவரவர் வழிகளுக்கேற்றார் போல் மணியோசை எழுப்புவார்கள்... அதுபோல உன் ஆலயத்தில் நான் சகல சமயங்களையும் பிரதிபலித்து ஒலிக்கிறேன்.. நான் உன்னை சரணடைந்தேன்.. உலகம் புதியதாக தெரிகிறது... பாசம் உண்மையாக தெரிகிறது... என்று குறிப்பிடுகிறார்...
பொன்னை விரும்பும் பூமியிலே...
என்னை விரும்பும் ஓருயிரே...
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே...
மேற்கண்ட இந்த வரிகள் ரெம்பவும் ஸ்பெஷல்... இந்த பூமிவாழ் மனிதர்கள் ஏதேனும் ஒரு காரணம் கொண்டு பொருள் தேடும் கால கட்டத்தில்... மனித உள்ளங்களை தேடும் மஹான் ஒருவர்... அவர் பொன்னை விரும்பியதில்லை.. உண்ணும் சுவையுணவை விரும்பியதில்லை... புகழை விரும்பியதில்லை.. மா நில மக்கள் இதயம் விரும்பிய நீ என் உயிரோடு கலந்து விட்ட உறவானாய் என்று ஒவ்வொறு கணமும் பச்சைத்தமிழர் புகழ் பாடுகிறார் சிம்மக் குரலோன்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...52&oe=5BCCD53C
courtesy j.hussain f b
இதுவும் ஒரு புதிர் போட்டிப் போலத்தான்,
அது என்ன காரணமோ "கர்ணன்" என்ற பெயரை தற்போதைய கவர்னர் கூட வேறு நடிகருக்காக உரிமை கொண்டாடியதைக் காண முடிந்தது,
நடிகர் திலகத்தின் கர்ணன் டிஜிட்டலில் வெளியான நாள் 16 மார்ச் 2012,
... அதே போல எம்ஜிஆர் இன் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டலில் வெளியான நாள் 14 மார்ச் 2014
இது அனைவரும் அறிந்தது தான், கர்ணன் பற்றிய விபரம் தெரியும் அது நமக்கு போதுமே மற்ற படத்தை பற்றிய விபரம் நமக்கு ஏன்? என்ற கேள்வி இல்லாமல் இருக்காது,
ஆனால் Google லுக்குச் சென்று அலசும் இளைய தலைமுறையினர் ஆகட்டும் பொதுவான தமிழ் சினிமா விரும்பிகள் ஆகட்டும் அவர்கள் அறிந்து கொள்ளும் செய்தி
கர்ணன் Super Hit, more Resbonce in audience,
Run in 155 days in chennai at satyam complex
அதேபோல
ஆயிரத்தில் ஒருவன் super hit, big celebration for mgr fans, run in 175 days for Albert theatre in chennai
இந்தச் செய்திதான் வலைத்தளத்தில் உலா வருகிறது,
கர்ணன் சினிமா துறையில் மறு வெளியீட்டிற்கு வித்திட்டது,
சுமார் 20 கோடி வரை வசூலித்து புதிய திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை புரிந்தது
76 தியேட்டர்களில் ரிலீஸாகி அதில் 25 தியேட்டருக்கும் மேல் 45 நாட்களுக்கும் மேலாக ஓடி புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட வைத்து நடிகர் திலகத்தின் பெருமைகளை புரட்டிப் பார்க்க வைத்தது
இது போன்ற செய்திகள் எல்லாம் ஏன் Google ல் இல்லாமல் இருக்கிறது என்ற ஆயிரம் கேள்விகள் எழுகிறது,
ஆயிரத்தில் ஒருவன் படம் புரிந்த சாதனையை நான் சொல்ல விரும்பவில்லை, அதற்கு பதிலாக புதிரைப் போட்டு விடுகிறேன்,
இனைப்பில் உள்ள வால் போஸ்டர் விளம்பர போட்டோக்களைக் கொண்டு புதிருக்கு சரியாக பதிலைக் கண்டு பிடியுங்கள் அன்பர்களே,
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...09&oe=5C054347
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...39&oe=5BD690B6
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...68&oe=5BC9E8C6
courtesy fb