-
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.
உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்
ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்
புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
அடிமைப்பெண் - பாகுபலி
அடிமைப்பெண் 1969ம் ஆண்டு வெளியான அக்காலத்து பிரமாண்டப் படம். பாகுபலி 2015ல் வெளியான பிரமாண்டப் படம்.
50 வருடங்களுக்கு முன்பு
வெளியான படம்தான் அடிமைப்பெண். இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் அக்காலத்தில் வெகுவாக சிலாகித்துப் பார்க்கப்பட்டது, ரசிக்கப்பட்டது.
நிஜ சிங்கத்துடன் சண்டை போட்ட "வாத்தியார்"
அடிமைப் பெண் படத்தில் நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்காக, அந்த சிங்கத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து தினசரி சாப்பாடு போட்டு அதை தனக்குப் பழக்கிக் கொண்டாராம் எம்.ஜி.ஆர். கிளைமேக்ஸ் காட்சியில் இந்த சிங்கச் சண்டை மயிர்க்கூச்செறிய வைத்தது அந்தக் காலத்து ரசிகர்களை.
ஜெய்ப்பூர் அரண்மனையில்
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்திருந்தனர். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.
வசூல் ராஜா
அடிமைப்பெண் படம் அப்போதைய கணக்குப்படி ரூ. 2.30 கோடியை வசூலித்ததாக கூறுகிறார்கள். இப்போதுள்ள கணக்குக்கு அது ரூ. 350 கோடி என்று கணக்கிடப்படுகிறது.
100 நாள்தான் ஷூட்டிங்
அடிமைப் பெண் படத்தின் ஷூட்டிங் ஜஸ்ட் 100 நாட்களில் முடிந்து போனது. பாகுபலியின் ஷூட்டிங்கோ கிட்டத்தட்ட 3 வருடம் ஆனது.
சிலிர்க்க வைத்த கிளைமேக்ஸ்
கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாக, திரில்லாக இருக்கும். வெறும் கையுடன், கிரேக்க நாட்டு ஸ்டைலில் எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் போட்ட அந்த சண்டை.. இந்தக் காலத்து சிக்ஸ் பேக் ஹீரோக்கள் பிச்சை வாங்க வேம்ண்ம்.
கம்ப்யூட்டர் இல்லை. கிராபிக்ஸும் இல்லை
அடிமைப்பெண் படமான காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது, கிராபிக்ஸ் கிடையாது, அனிமேஷன் கிடையாது. பிளை கேம் கி்டையாது, ஹெலிகேம் கிடைாயது. அகேலா கிரேன் கிடையாது. டிஜிட்டல் கேமரா கிடையாது. எந்த வசதியுமே இல்லாத பட்டிக்காட்டு சினிமா சூழல் அப்போது இருந்தது. ஆனால் இசையில், நடிப்பில், பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்த படம் அடிமைப் பெண்.
திருப்பம்.. திரில்
சாதாரண இந்தக் கதையை திருப்பங்கள், ஆச்சரியங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கியிருப்பார்கள் அடிமைப்பெண் படத்தில். காதல் காட்சிகள், சண்டைக்
காட்சிகள், வீராவேசம், கோபம், குரோதம், துரோகம், வர்த்தகம் என அத்தனையும் கலந்த அதிடிப்படம் அடிமைப்பெண்.
தீர்ப்பு
எனவே பாகுபலியைப் பார்த்து பிரமிக்கும் அதே நேரத்தில் நம் 'சொந்த' அடிமைப்பெண்ணை கொண்டாடுவோம். இந்தக் கால இளைஞர்கள் கட்டாயம் அடிமைப்பெண்ணை ஒருமுறை பார்க்குமாறு சொல்லுவோம்....... Thanks...
-
#மெருகேற்றிக்கொண்ட #வாத்தியார்
சாலிவாஹனன் படத்தின் கதாநாயகன், ரஞ்சன். வில்லன், டி.எஸ் பாலையா. கதாநாயகிகள் அன்றைக்கு கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் கே.எல்.வி வசந்தா. கதாநாயகன் ரஞ்சன், தமிழ்சினிமாவின் முதல் அஷ்டாவதானி நடிகர்.
அன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படத்தைப் பற்றி ஒரு பாப்புலரான பத்திரிகையில் வந்த விமர்சனம் :
“இந்தக் கதையை டைரக்டர் சீர்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக நடிகைகளைக் கவர்ச்சியாகப் பதிவு செய்வதில் சிரத்தை காட்டியிருக்கிறார். கே.எல். வி வசந்தாவை வெறுக்கத்தக்கபடி மேலாடை தரிக்கச் செய்திருக்கிறார். இதில் தேவையில்லாத வெறுக்கத்தக்க குளோசப் ஷாட்டுகள் வேறு. ராஜகுமாரி தோற்றமும் இதுபோலவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ரஞ்சனுக்கு வேஷம் துளிக்கூடப் பொருத்தமில்லை. அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக நிற்கிறது. மேக்கப் சகிக்கக்கூடியதாக இல்லை. முகத்தில் வீரத்துக்குப் பதில் அசடும் அறியாமையும் தாண்டவமாடுகின்றன. அவருடன் காதல் காட்சிகளில் மட்டுமு டி.ஆர். ராஜகுமாரி நன்றாக நடித்திருக்கிறார்.....”-
நீளமான இந்த விமர்சனத்தின் இடையே அந்த பத்திரிகை ஒரு கதாபாத்திரத்தை மட்டும் பட்டும் படாமல் ஒரேவரியில் பாராட்டியிருந்தது.
அது, நம்ம வாத்தியார் பற்றியது தான். “எம்.ஜி.ராம்சந்தர் போடும் கத்திச்சண்டை பாராட்டும்படி உள்ளது..." என்ற அந்த ஒருவரியினால் உச்சிக்குளிர்ந்து போனது வாத்தியாருக்கு.
கதாநாயகனை கண்டமேனிக்கு சாடியும் அதேசமயம் துணைபாத்திரத்தை பாராட்டியும் எழுதப்பட்ட இந்த விமர்சனம், 'வெறும் நடிப்புத்திறமையும் அழகும் மட்டுமே சினிமாவுக்கான மூலதனம் இல்லை. பல விசயங்களிலும் நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தாம் தனித்துத் தெரிவோம்' என்ற எண்ணத்தை வாத்தியாரின் மனதில் இன்னொரு முறை ஆழமாக விதைத்தது.
அந்த உறுதியோடு முன்னைவிடவும் சுறுசுறுப்போடு தன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத்துவங்கினார் நம்ம வாத்தியார்....... Thanks...
-
பொதுவா நம்ம வாத்தியார் மீது ஒரு தவறான செய்தி கூறுவார்கள் அது என்னவென்றால் அவர் நடிக்கிற படத்தில் படப்பிடிப்பு தாமதமாக நடைப்பெறுகிறது ..அதற்கு என்ன காரணம் என்பது அறியாமல் பல. தவறான. கருத்துக்கள் கூறுவார்கள் சில சண்டாளர்கள்,.அதற்க்கான காரணம் இதோ நான் அறிந்தவை
1...புரட்சித்தலைவர் படப்பிடிப்பில் இருக்கும் போது தீடீரென்று அறிஞர் அண்ணாவிடம் தகவல் வரும் உடனே புறப்பட்டு வரும்படி அதனால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி விட்டு அண்ணாவின் கட்டளைக்கு பணிந்து புறப்பட்டு சென்று விடுவார் அப்படி புறப்படவில்லையென்றால் அண்ணா கூப்பிட்டு போகல என்று தவறானா கருத்து திணித்து பத்திரிகையில் எழுதி விடுவார்கள் என்பதால் ....போகாமல் இருந்தால் அண்ணா மீது பற்று இல்லை என்று நினைப்பார்கள் மதிக்க வில்லை என்று கதைக்கட்டி விடுவார்கள் போனால் படப்பிடிப்பு நின்றுவிடும் இப்படி இரண்டுக்கும் மத்தியில்தான் அவர் படப்பிடிப்பு நடைப்பெறும்
2....தமிழகத்தில் எங்கு தீ விபத்து ஏற்ப்பட்டாலும் மழை வெள்ளம் ஏற்ப்பட்டாலும் அங்கே வந்து முதல் உதவி புரட்சித்தலைவரின் உதவித்தான் இருக்கும் யாருக்கு எந்த ஆபத்து இருந்தாலும் அவர்கள் நாடுவது புரட்சித்தலைவரின் உதவித்தான் ஒவ்வொரு முறையும் பட.ப்பிடிப்பு நடைப்பெறும் போதும் இப்படி எதாவது அசம்பாவிதம் நடை.ப்பெறும் உடனே புரட்சித்தலைவர் படப்பிடிப்பு நிறுத்திவிட்டு பிறர்க்கு உதவிட சென்று விடுவார் இதனால் அவர் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்
3...அரசியல் கட்சி பொதுக்கூட்டம் தேர்தல் பிரச்சாரம் அரசியல் பிரமுகர்கள் பொது நிகழ்ச்சி என்று பல்வேறு அழைப்பு க்கள் நிகழ்வுகள் மத்தியில்தான் படப்பிடிப்பு நடைப்பெறும்
4......புரட்சித்தலைவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் ஒரே நேரத்தில் 4. ..5..படத்தில் நடிப்பார்கள் அடுத்த பட.த்தில் படப்பிடிப்பு கலந்துக்கொள்ள. இயக்குனர் களிடம் அனுமதி கிடைக்காது அந்த காலத்தில் மிகவும் கண்டிப்பு மிக்க. இயக்குனர் இருந்தனரர் அதனால் புரட்சித்தலைவரிடம் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதனால் புரட்சித்தலைவர் மீது அபாண்டமா பழி வரும் வாத்தியாரிடம் இதைப்பற்றிறி கேட்டபோது அதற்கு அவர் கூறிய. பதில்.. இதுதான் அவர்கள் சம்பாதிக்கும் நேரம் அவர்களுக்கு சினிமா தவிர் வேறு தொழில் தெரியாது அதனால் அவர்கள் பிழைப்புக்கு நாம் தடையாக இருக்க கூடாது என்பார் இப்படி உதவி செய்து படப்பிடிப்பு தாமதம் ஏற்படுவது உண்டு..
..
5....படப்பிடிப்பு முடியும் தருவாயில் கிளைக்மாஸ் காட்சியில் உடனே நடித்துக்கொடுக்கமாட்டார் காரணம் ? ....தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பார் யாருக்காவது எதாவது பிரச்சினை சம்பளம் பாக்கி இருக்க கவனிப்பார் அப்படி எதாவது இருந்தால் முதலில் அதை தீர்த்தப்பிறகுத்தான் படப்பிடிப்பு நடக்கும் தன்னைப்போல் மற்றவர்களை நினைத்து பிற. நலனில் அக்கறை காட்டுவதாலும் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்
6...குடும்பம் அரசியல் பொது சேவை சினிமா இந்த நான்கு வாழ்க்கையிலும் எதிலும் யாருக்கும் குறைபாடு இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் ஆனால் நம்ம வாத்தியார் நான்கு வாழ்க்கையிலும் எல்லோருக்கும் வழிகாட்டியா வாழ்ந்துக்காட்டினார்
பின்குறிப்பு இதற்கு ஆதாரம் புரட்சித்தலைவருடன் நடித்தவர்கள் கூறியது
அவரைப்புரிந்துக்கொண்டு படம் எடுத்தவர்கள் இரண்டு பேர்
ஒன்று R. M. . வீரப்பன் மற்றொருவர் சாண்டோ சின்னப்ப தேவர்....... Thanks...
-
கவியரசு கண்ணதாசன் அவர்கள
உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம் கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M..R..ராதா அவர்கள் வந்தார் ..கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்துபார்த்தார் பாடல் வரிகள் M.R.ராதாவை வெகுவாக கவர்ந்தது கண்ணதானை அப்படியே கட்டி தழுவி பாரட்டினார். என்னய்யா கவிஞர் நீ உன்னைபோல் கவிஞர் நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்.
ஆமா இந்த பாடல் யாருக்காக எமுதப்பட்டது என்று கேட்டார்..
அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்க யாருக்கு இந்த பாடல் பொருந்தும் நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவர்க்கே போய் சேரும் தவறான பதிலாக. இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் நீங்கள் உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக் கொளேளுங்கள் என்றார்.
என்ன கவிஞர் இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடல்க்கு உயிர் கொடுக்க எம். ஜி. ஆர். ஒருவர்தான் இருக்கிறார் அவரைத் தவிர வேறு எவருக்கும் பொருந்தாது
எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைத்தான் பேசப்படும். ஆனால்
எம்.ஜி. ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்
...உடனே கவியரசு கண்ணதாசன் M.R.ராதாவை கட்டி தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் ..இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம்.ஜி.ஆர் பாடல் என்றுத்தான் பேசப்படும்
சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M.R.ராதா அவர்கள்
எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்துக்காட்டுவது கடினம் நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்து கூறி கண்ணதாசன் எமுதிய. பாடலையும் குறிப்பிட்டு பாரட்டினார் ..
M.R.ராதாவால் பாரட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார்
எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்க வில்லை திருத்தவும் இல்லை.......... Thanks...
-
.நமது தெய்வம் பொன்மனச்செம்மல் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களின் மனதில் வெற்றி கண்ட வெற்றிச்சித்திரம் பாசம் படத்தில் இடம்பெற்ற பாடல்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்ற பாடல் வாத்தியார் வாழ்வில் மறக்க முடியாத ஒர் உன்னதமான அற்புதமான பாடல் ...
அன்றைக்கு கதைக்காகவும் தாயாரிப்பாளர்கள் வேண்டுதலுக்காகவும் இயக்குனர்களின் திரைக்கதைக்காகவும்தான் பாடல்கள் எமுதப்பட்டது.
முதல் முதலாக கதாநாயகன் அந்தஸ்து உயர்த்தி கதாநாயகன் பெருமைகளைப் குறிப்பிட்டு எழுதபட்ட முதல் பாடல் முதல் படம் இதுதான் இந்தபாடல் வெளியிடப்பட்டு புரட்சித்தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது.
இப்பாடல்க்கேட்டு அன்றைய. முன்னணி கதாநாயகன்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலர் கவியரசு கண்ணதாசன் வீட்டுக்கு படையெடுத்தனர் எங்களுக்கும் இது போன்ற பாடல் எழுதி தருமாறு கேட்டனர்
அதற்கு கவியரசு கண்ணதாசன் தந்த பதில் நான் எம்..ஜி..ஆர்க்காக பாடல் எமுதனும் என்று எழுத வில்லை நான் எழுதிய பாடலுக்கு அவர் பொருத்தமானர்
அதுப்போல் நான் எத்தனையோ பாடல் எழுதியுள்ளோன் அவற்றில் எதாவது ஒரு பாடலுக்கு உங்களுக்குள் பொருத்திக்கொள்ளுங்கள் என்றார் .
...
பத்து ஆண்டுகள் கழித்து 1965 ம்ஆண்டு முதல் 1975 ம்ஆண்டு வரை உள்ள. முன்னனி கதாநாயகன்கள் 1975 ம்ஆண்டு முதல் 1980 ம்ஆண்டு வரை உள்ள முன்னணி கதாநாயகன்கள் கவியரசு கண்ணதாசனிடம் இதே கேள்வி கேட்டனர்
அதற்கு கவியரசு சொன்ன பதில் எம் ஜி ஆர் போல் பாடல் கேட்கிறீர்கள் தவறில்லை ஆனால் உங்களால்
எம். ஜி. ஆர்.போல் சினிமாவில் கொள்கையுடன் நடித்து நிலைக்க முடியுமா?
எம். ஜி. ஆர் போல வாழ்க்கையில் மனிதநேயம் வள்ளல் தனம் வுடன் வாழமுடியுமா?..
எம். ஜி. ஆர் போல் அரசியலில் பண்பு பணிவு ஊழலற்ற அரசாக ஜொலிக்க முடியுமா? ..இதெல்லாம் சாத்தியமாகும் என்றால் நான் உங்களுக்காக பாடல் எமுதி தருகிறேன். என்றார்.
1996 ம்ஆண்டு கவியரசு கண்ணதாசன் பவள விழாவில் விசாலி கண்ணதாசன் கூறியது ...... Thanks...
-
பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலுர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்.வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த காவல்காரன் படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது
அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...
பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.
ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்........ Thanks...
-
கவியரசு கண்ணதாசன் பிடித்த பாடல்
பாராட்டிய பாடல்
படகோட்டி,படத்தில் வரும் கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். .
கவிஞர் வாலி முதல் முறையாக ஒரு படத்தில் முழு பாடல் எமுதிய
முதல் படம் படகோட்டி....அப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
இன்னும் சொல்லனும் என்றால் பாட்டுக்கு ஒரு படம் இப்படம் வெளியான முதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து சென்டரில் இப்படத்தில் வரும் பாடல்கள்தான் ஒலித்தது இப்படத்தில் வரும் பாடல்கள் பாராட்டாத பத்திரிக்கைகள் கிடையாது
பாராட்டாத தலைவர்கள் கிடையாது
கவிஞர்கள் பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் .இப்படி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தார்கள்
ஏன் அன்றைய முன்னனி கவிஞர்கள் பலர் ஒன்று கூடி கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் கவிஞர் வாலியை பாராட்டினார்கள்
அதில் கவியரசு கண்ணதாசன் வாலியைப்பற்றி பாராட்டிய சில வரிகள்
படகோட்டி படம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். க்கு மேலும் ஒரு வெற்றி மகுடம் சூட்டும் இனி புரட்சிநடிகரின் ஆஸ்தான கவிஞராக வாலி திகழ்வார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அற்புதமாக செதுக்கிள்ளார் கவிஞர் வாலி
அதிலும் குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்தது பிடித்தது கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். காரணம். வாலி இதை ஒரு கவிஞராக இருந்து எமுதினாரா அல்லது ஒரு மீணவராக இருந்து எமுதியாதா என்று என்னால் யூகிக்க முடியல. . ஒரு மீணவன் துன்பம் பற்றி அவனிடம் போய் கேட்டாலும் இந்தளவுக்கு கூறுவானா என்பது சந்தேகமே ஆனால் கவிஞர் வாலி அதைவிட ஆழமாக வேரூன்றி செதுக்கியுள்ளார் இப்பாடல் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பல பேர் வியர்ந்து பாராட்டுக்கு பொருத்தமான கவிஞராக திகழ்கிறார். இப்படி பல இடங்களில் பலர் பாராட்டு பெற்ற வாலி முடிவாக கூறியது
பல பேர் பாராட்டு பெற்ற நான் இன்று ஒரு கவிஞன் என்ற அந்தஸ்து பெறுவதற்கு காரணம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். நான் பல நாள் பட்ட கஷ்டம் துயரம் எல்லாம் அவரைக்கண்டவுடன் ஒரு நோடியில் பறந்து போனது வறுமை பசி பட்டினி யாவும் மறந்து போனது எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அக்கறையுடன் எடுத்துக் கொண்டவர் இனி நான் எந்த உயரம் சென்றாலும் எம் ஜி ஆர் என்ற ஒரு மாமனிதர்தான் எனக்கு அடையாளம் என்றார்..... Thanks.........
-
எம்ஜிஆர் பக்தர் s.குமார் அவர்களுக்குக்காக இப்பதிவு எமுதிகிறேன்
பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே கருத்துக் ஆழமிக்க பாடல் என்பது ஊர் உலகம் முழுவதும் அறிந்த உண்மை ஆனால் அதன் உண்மையான உட்பொருளும் கருத்துக்கள் பலர் அறிந்திருக்கவில்லை. . அவர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம். ....பணத்தோட்டம் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். ...
என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே. ..என்ற பாடலில் வரும் ஒரு வரி. ..
. பின்னாலே தெரிவது அரிச்சுவடி
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்து போராடு
இப்பாடல் கருத்து. ..பின்னாலே தெரிவது அரிச்சுவடி என்றால்
நடந்து முடிந்த சம்பவம். சுவடு என்றால் வரலாறு. இறந்த காலத்தை குறிக்கும்
இறந்த காலம் மீண்டும் வராது அதனால் அதைப் பற்றி நீ சிந்திக்க வேண்டாம்.
முன்னாலே இருப்பது அவன் வீடு..இக்காட்சி யில் இறைவன் ஆலயத்தைக்காட்டி பாடுவார்..உன்னுடைய எதிர்காலம் இறைவனிடம் உண்டு அதை அவன் பார்த்துக்கொள்வான்.அதனால் அதைப்பற்றி.நீ சிந்திக்காதே
நடுவினிலே நீ விளையாடு...இப்போது நடப்பது நிழல் காலம் இந்த காலத்தில்
நல்லது செய்து நல்லதை நினைத்து வாழ்ந்தால். .எதிர் காலம் உன்னை தேடி வரும். இறந்த காலம் பேசப்படும்
அதாவது நடந்து முடிந்த சம்பவம் பற்றி பேச வேண்டாம்
நடக்க போறதைப்பற்றி யோசிக்க வேண்டாம் இப்போமுது நடக்க வேண்டியதை மட்டும் சிந்திப்போம் செயல் படுத்துவோமா. ...
என்பதே இப்பாடலின் உட்பொருளின் கருத்தாகும்........ Thanks...
-
1968 ---குடியிருந்தக்கோயில். ....ஒளிவிளக்கு ...
1969 --- அடிமைப்பெண்,......நம்நாடு...
1970 ---மாட்டுக்காரவேலன் தொடர்ந்து 5_வது வெள்ளி விழா படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இந்த வெற்றி புரட்சித்தலைவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். ? என்பது பலர் அறிந்த உண்மை ஆனால் அதன் பின்னனி என்ன என்பது பலர் அறியாமல் இருப்பதும் உண்மையாகும். அதற்கு ஒர் உதாரணம் இப்பதிவு எமுதிகிறேன். .1970- ம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்காரவேலன் வெள்ளி விழா கொண்டாடி மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது. படம் பொங்கல் திருநாள் அன்று வெளிவந்தது. ஆனால் அப்படம் தீபாவளிக்கு வரவேண்டியது காலதாமதமாக பொங்கலுக்கு வெளிவந்தது ...அதற்கு காரணம். ....
ஜெயந்தி பிலிம்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கனகசபை ரத்தினம் படம் முழுவதும் எடுத்தபின் புரட்சித்தலைவரிடம் போட்டுகாண்பித்தார். படத்தின் கதை படி புரட்சித்தலைவர் வக்கீல் அதனால் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் நீதிமன்றம் காட்சிகள்தான் வைக்கப்பட்டது புரட்சித்தலைவர் நீதிமன்றத்தில் வாதாடி அசோகனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதுப்போல் வழக்காடு காட்சி இடம் பெற்று இருந்தது அப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் இல்லை. ..புரட்சித்தலைவர்க்கு படம் முழுக்க பார்த்த பிறகு மனம் திருப்தி அளிக்கவில்லை அதனால் தயாரிப்பாளர் இயக்குநர் இருவரையும் அழைத்து இந்த காட்சியினை எடுத்து விட்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ...
இதைக்கேட்டதும் தயாரிப்பாளர் முகம் வாடியது. படம் முழுக்க முடிந்த பிறகு இனி மீண்டும் செட்டிங்ஸ் அமைத்து எடுத்து முடிக்க நாள் ஆகும் செலவும் அதிகம் ஆகும் அதனால் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் படத்தை ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்கிக்கொள்வோம் அல்லது கதை விவாதத்தில் புரட்சித்தலைவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். மீண்டும் புரட்சித்தலைவரிடம் வந்து ஐயா படத்தின்கதைப்படி நீங்கள் வக்கீல் நீதிமன்றம் காட்சி இடம் பெற்றால்தான் அதில் உங்கள் வாததிறமையுமீ சமூக கருத்துக்கள் மக்களிடம் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். .அதுமட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் விமர்சனம் செய்து படத்தின் வெற்றி வசூல் பாதிக்கும் என்றார்.... உடனே அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில். ..
கதைப்படி நான் வக்கீல் ஆக இருந்தாலும் நீதிமன்றம் காட்சி இரண்டு மூன்று முறை வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே நான் நடித்த நீதிக்குப்பின்பாசம்படத்தில் அப்படி ஒரு காட்சி இருந்ததால்தான் அப்படம் வெற்றி பெற்றது வசூலில் லாபம் பார்த்தது நீங்கள் ஒரு காட்சியில் மட்டும் நீதிமன்றம் காட்சி வைத்திருந்தால் அவை பலர் கேள்விக்கு சாதகமாக அமையும் அதே நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மக்கள் கதையை மறந்து இதிலே ஆர்வம் காட்டி மகிழ்ச்சி அடைவார்கள் மக்கள் தரும் வெற்றி எந்த பத்திரிகையாளர் விமர்சனம் வெற்றியை பாதிக்காது வசூலும் குறையாது..நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை நானே செய்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். தயாரிப்பாளர் கனகசபை இனிமேல். .... எம் ஜி ஆர் வைத்து படம் எடுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டார்.
அதன் பின்னர் புரட்சித்தலைவர் அதற்கான பயிற்சி பெற்ற பிறகுதான் செட்டிங்ஸ் அமைத்து சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டது கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க இரண்டு மாதங்கள் ஆனது தீபாவளிக்கு வரவேண்டிய படம் பொங்கலுக்கு வெளிவந்தது வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ..
படத்தின் தயாரிப்பாளர் கனகசபை பணம் மழையில் நனைந்தார் அவர் வாழ்விலே அவ்வளவு பெரிய அளவில் வசூல் பார்த்ததில்லை. ..எந்தளவுக்கு புரட்சித்தலைவர் மீது கோபம் இருந்ததோ அவையெல்லாம் மறந்து இனிபடம் எடுத்தால் புரட்சித்தலைவர் வைத்துதான் எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். .......
மாட்டுக்காரவேலன் வசூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக அளவில் வசூலில்
சக்கரவர்த்தியாக திகழ்ந்தது இப்படி ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நமது தெய்வம் புரட்சித்தலைவர் தான்....... Thanks...
-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 1
பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் இயக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தில் சில தவறான கருத்துக்களால் நடிப்பதை நிறுத்தி விட்டார் அவருடைய. கொள்கை படத்தில் சரியான முறையில் அமைய வில்லை என்பதும் ஒர் காரணமாகும் ...
எம் ஜி ஆர் மீது உள்ள கோபத்தில் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்ற படத்தை வெளிநாட்டில் எடுத்து வெளியிட முடிவு செய்தார் ..
அதே நேரத்தில் நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் படத்தில் என்ன கருத்தை கூற. விரும்பினோமோ அதே கருத்தை வேறு படத்தில் கூறி அவருக்கும் மற்றவர்களுக்கும் பதிலாக உணர்த்தவே உருவாண படம்தான் நம்நாடு
படத்தின் கதைப்படி குடிசைவாழ்பகுதியில் வாழும் மக்களின் அறியாமை போக்கி அவர்கள் பக்கம் உள்ள நியாத்தை எடுத்துக்கூறி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு திட்டங்கள் அவர்களுக்கு போய் சேர வேண்டும். அதற்காக பாடுபடும் இளைஞராக புரட்சித்தலைவர் நடித்தார்..இதுதான் நம்நாடு படத்தின் கதை
அதே நேரத்தில் ஸ்ரீதர் அவர்கள் எம் ஜி ஆர் நடித்த நம்நாடு படம் வெளீயிடும் அதே நாளில் சிவந்த மண் வெளியீட்டு மாபெரும் வெற்றியை காட்ட வேண்டும். எம் ஜி ஆர் க்கு தோல்வியே பரிசாக தரவேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணமாக இருந்தது ஸ்ரீதரின் எண்ணத்துக்கு ஏற்ற போல் சிவாஜியும் ஒத்துழைப்பு கொடுத்தார் ..
...அதற்கு காரணம் எம் ஜி ஆர் படத்துடன் போட்டி போட்டு சிவாஜி படம் எதுவும் வசூலில் முந்தியது இல்லை. அதனால் இந்தப்படம் எம் ஜி ஆர் படம் மிஞ்சி வசூலில் ஹிட் படமாக அமையவேண்டும் என்பது சிவாஜியின் நோக்கமாக இருந்தது.....
ஆனால் புரட்சித்தலைவர் நாம் சொல்ல போகும் கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக. பதிய வேண்டும். என்பதில் குறிக்கோள் கொண்டிருந்தார் ....அதற்க்கான கதைதான் நம்நாடு .
நம்நாடு படம் பெரும்பகுதி 100/.க்கு 75/. சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது ...பட.த்தைப் போட்டு பார்த்த புரட்சித்தலைவர் சமூக கருத்து இருந்தாலும் திரைக்கதையில் திருப்தி இல்லை. படத்தின் கதையை மாற்றியமைக்க சொன்னார்
தொடரும்....தொடரும்......தொடரும்..... Thanks...
-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 2
திரைக்கதையில் திருப்தி இல்லாத புரட்சித்தலைவர் விஜயாபுரொடக்ஷன் தயாரிப்பாளர் B.நாகிரெட்டி அப்போது படத்தை இயக்கிக்கொண்டிருந்த ப.நீலகண்டன் எங்க வீட்டு பிள்ளை படத்தின் இயக்குனர் சாணக்யா அவர்கள் அழைத்து கதையே மாற்றியமைக்க. சொன்னார் திரைக்கதை பற்றியும் ஆலோசனை செய்தார் ...எம் ஜி ஆர் எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் ..நமக்கு தேவை படத்தின் வெற்றி வசூல் என்பது நாகிரெட்டியின் கருத்தாகும். காரணம் எங்க வீட்டு பிள்ளை படமும் எம் ஜி ஆரின் ஆலோசனையாதால் முமு வெற்றி பெற்றது.என்பது நாகிரெட்டி மட்டுமே அறிந்தார்..
துணை இயக்குனர் ஜம்பு லிங்கம் கதையில் சில மாற்றங்கள் அமைத்து திரைக்கதை வடியமைத்து எம் ஜி ஆரிடம் நாகிரெட்டியிடம் விளக்கி கூறினார்
திரைக்கதை கதை இரண்டும் எம் ஜி ஆர்க்கு பிடித்து விட்டது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படம் எடுத்தால்தான் ஜம்புலிங்கம் சொன்ன கதை திரைக்கதை சரியாக அமையும். ஆனால் 100/.க்கு 75/. சதவீதம் படம் முடிந்த நிலையில் எப்படி மாற்றுவது என தயங்கினார் நாகிரெட்டி.....
உடனே புரட்சித்தலைவர் சில ஆலோசனை வழங்கினார் இடைவேளை வரைக்கும் ஏற்கனவே உள்ள கதையே இருக்கட்டும் இடைவேளைக்கு பிறகு ஜம்பு லிங்கம் சொன்ன திரைக்கதையேஇனைத்து அமைத்துக்கொள்ளுங்கள் படத்தை ஜம்புலிங்கத்தையே இயக்க சொல்லுங்க அப்படி செய்தால் படத்தின் செலவும் குறையும் வெற்றியும் உறுதி என்றார் .....உடனே நாகிரெட்டி இப்போது இயக்கும் பா. நீலகண்டன். க்கு என்ன பதில் கூறுவது என்றார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் அழைத்து தற்போது உள்ள நிலவரம் கூறி எனது அடுத்து இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குனர் என்று வாக்குறுதி கொடுத்தார்.பிறகு ஜம்புலிங்கம் இயக்கத்தில் நம்நாடு உருவானது ...நாகிரெட்டியும் செலவைப்பற்றி யோசிக்காமல் நம்நாடு பிரமாண்டமான முறையில் வளர தொடங்கியது ...
தொடரும் .....தொடரும்....தொடரும்....... Thanks...
-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 3
எங்கவீட்டுபிள்ளை படத்தில் வரும் முதல் சண்டைக் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் நீண்ட நாள் ஆசை அப்படத்தில் மூலம் நிறைவேற்றது...அதேப்போல் நம்நாடு படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சிறிது லித்தியாசமாக எடுக்க நினைத்தார். தர்மலிங்கம் அழகிரி சாமிநாதன் ஷ்யாம்சுந்தர் போன்ற ஸ்டண்டு நடிகர்கள் அழைத்து ஆலோசித்தார் .இது அரசியல் படம் என்பதால் இதில் ஆக்ரோஷம் இருக்க கூடாது. அதனால் நகைச்சுவையாக அமைத்து விடுங்கள் என்றார் ..படத்தில் பெரிய மனிதர் களாக நடித்தவர்களை நான் ஆக்ரோஷமாக தாக்கினால் உண்மையாண பலசாலிகள் திறமைசாலித்தனம் அடிப்பட்டடு போய்விடும். புரட்சித்தலைவர் ஆலோசனைப்படி சண்டைக்காட்சி நகைச்சுவையாக எடுக்கப்பட்டது இப்படி கதையே மாற்றி கிளைமாக்ஸ் காட்சி மாற்றி 1969 நவம்பர் 7 ந் தேதி வெளிவந்தது.
.
நம்நாடு மாபெரும் வசூல் சாதனை படைத்தது மக்களின் ஏகோபித்த பாராட்டு மழையில் நனைந்தது 150 நாட்கள் மேல் ஒடி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இதனுடன் போட்டி போட்டு வந்த சிவந்த மண் நம்நாடுக்கு நிகராகமல் தோல்வியடைந்தது . போட்ட காசு எடுக்க.முடியால் ஸ்ரீதர் கடன்காரனாக மாறினார். புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் கொடுத்த வாக்குபடி மாட்டுக்கார வேலன் என்அண்ணன் தொடர்ந்து இரண்டு படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் .இவ்விரண்டும் மாபெரும் வெற்றி வசூலில் ஒன்றரை மிஞ்சி ஒன்று ஒடியது. நம்நாடு வசூல் மாட்டுக்கார வேலன் மிஞ்சியது மாட்டுக்காரவேலன் வசூல் நிகராக என்அண்ணன் வந்தார் ..நம்நாடு படம் பார்த்தால் தெரியும் இடைவேளை வரை ஒரு கதையும் இடைவேளைக்கு பிறகு கதைமாற்றுருக்கும்.
இவையெல்லாம் புரட்சித்தலைவர் கை வண்ணத்தில் உருவானது .நாகிரெட்டி நம்நாடு படத்தின் வசூலில் திக்கு முக்காடி போனார் ..
இப்படி வாத்தியார் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படம் போல் நினைத்துத்தான் அவருடைய கலை ஆர்வம் ஒவ்வொரு ரசிகர்களிடமும் போய் சேர்ந்தது ......... Thanks...........
-
தமிழகத்தின் ஒளிவிளக்கு நமது தெய்வம் புரட்சித்தலைவர் M .G .R .
அதேப்போல் ஆந்திராவின் விடிவிளக்கு N .T .R
அரசியல் சினிமா இரண்டுக்கும் N. T. .ராமராவ் குரு நம்ம. வாத்தியார் .
வாத்தியார் நடித்த பல படங்கள் டப்பிங்கில் ஆந்திராவில் N. T .ராமராவ் நடித்தார் ...
ராமராவ் அரசியல் ஆசான் குரு வழிகாட்டி எல்லாம் நம்ம தலைவர் எம். ஜி. ஆர்.
கட்சி தொடங்குவதற்கு முன் நம்ம வாத்தியார் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி கட்சி பெயர் முடிவு செய்து. பிறகு ஆந்திராவில் ஆட்சி பிடித்தது. இவையெல்லாம் ஊர் உலகம் அறிந்த உண்மையாகும் ...
முதல் முதலாக ஆந்திராவில் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றதும் .
N .T. ராமராவ் அவர்கள் நம்ம வாத்தியார் கண்டு தரிசனம் பெற்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு முதல்வர் பதவி ஏற்கவேண்டும் .என்பது ராமராவின் விசுவாசம் உள்ள விருப்பம் ஆகும் அதனால் வெற்றி பெற்ற செய்தி அறிந்தவுடன் நம்ம தலைவரை காண இரவு 2.00 மணிளவில் ராமபுரம் தோட்டத்துக்கு வந்தார்
ராமராவ் ..பாதுகாப்பு நலன் கருதியே இரவு வந்தார்) ..
ராமபுரம் தோட்டத்துக்கு வந்ததும் சில அதிசியம் கண்டு ஆச்சரியம் அடைந்தார் ராமராவ் அந்த நேரத்திலும் சுமார் 30. பேர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் எங்கு சென்றாலும் உணவு கிடைக்காது நம்ம வீட்டீலே கூட இந்த நேரத்தில் சாப்பாடு இருக்காது அப்படியே இருந்தாலும். எது இருக்கிறதோ அதைத்தான் சாப்பிடனும் இதுதான் வழக்கம் நடைமுறையாகும் ...ஆனால் இங்கே சுட சுட அறுச்சுவை உணவு சாப்பபிடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆகும் அதுவும் இந்த நேரத்தில் என எண்ணி ஆச்சரியம் அடைந்தார் .
தன்மனதில் பட்டதை அப்படியே புரட்சித்தலைரைக் கண்டதும் கேட்டார் .அதற்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம் ...இந்த நேரம் மட்டும் அல்ல எந்த நேரத்தில் வந்தாலும் என்னால் உடனே செய்யக்கூடிய ஒரே உதவி சாப்பாடு மட்டுமே
வேறு எந்த உதவியும் காலம் தாமதமாகத்தான் செய்ய முடியும் ..மனிதன் பிறவி எடுத்ததும் வாழ்வதும் தன் வயிற்றுக்காகத்தான் ..இதைக்கூட நம்மால் செய்ய. முடியல என்றால் நாம் பிறவி எடுத்து என்ன பயன். பசித்தவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் உன் தாய் உன்னை பெற்றுடுத்த பலன் அடைவார் காலமெல்லாம் உணவு கொடுத்தால். நீ உன் தாயின் வயிற்றில் பிறந்த பலன் அடைவாய் ..இதுதான் மனிதன் பிறவிக்கு அர்த்தம் ஆகும் .
இதைக் கேட்டதும் N. T. ராமராவ் தன்னையறியாமல் கண்கலங்கினார் ..இப்படியும்
ஒரு மனிதரா தாய் செய்த புண்ணித்தால் இவர் பிறந்தாரா அல்லது இவர் பிறந்தனால் தாய் புண்ணியம் அடைந்தாரா..என எண்ணி நெகிழ்ச்சியடைந்தார் .
இன்னும் முடியல ...தொடரும் ...தொடரும் ...தொடரும்....... Thanks...
-
M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...
புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..
தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..
பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்
நமது தெய்வம் பொன்மனச்செம்மல்..... Thanks...
-
"நாடோடிமன்னன்" படம் குறித்த சில அறியாத தகவல்கள் உங்கள் பார்வைக்கு.
ஆரம்பத்தில் மதனா பானுமதிக்கு கழை கூத்தாடி வேடம் என்று முடிவாகியது.
முத்துகூத்தன் பாடல் எழுத ஆண்டவன் எங்கே அரசாண்டவன் எங்கே என்ற ஒரு பாடல் படமாக்க பட்டு பின் படத்தில் வரவில்லை.
பாடல் ஒத்திகையில் வாத்தியார் வழக்கம் போல திருத்தங்கள் சொல்ல பானுமதிஅதை ஏற்க மறுக்க பாடல் கைவிடப்பட்டது.
வாத்தியார் கோவம் அடைந்து வெளியே செல்ல சக்கிரபாணி அண்ணன் பதட்டம் அடைந்து படம் தொடருமா என்று பதற.
ஒரு காட்சியை வாத்தியார் மீண்டும் மீண்டும் படமாக்க கோவம் கொண்ட பானுமதி ஏ. கே. சுப்ரமணியம் மாதிரி ஒரு நல்ல இயக்குனரை வைத்து எடுக்காமல் ஏன் இப்படி என்னை படுத்துகிறீர்கள் என்று கத்த.... தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரிந்து விட்டது . இனி பானுமதி படத்தில் நீடிப்பது கடினம் என்று.
காடு விளைந்தென்ன பாடல் ஏவிஎம் தளத்தில் படமாக்க இருக்க நான் அங்கு வரமாட்டேன் எனக்கும் ஏ வி.எம்.க்கும் ஆகாது என்று மறுக்க பாட்டையே தூக்கி விடலாமா என்று தலைவன் யோசிக்க பின் சமாதானம் ஆகி வாஹினி படத்தளத்தில் படம் ஆக்க பட்டது. நல்ல வேளை நல்ல பாடல் தப்பியது.
பொன்மனம் தன் மனதை கல்மனம் ஆக்கி கொண்டு ஏன்பா ரவீந்தர் கதாநாயகி இல்லாமல் கதையை மாற்ற முடியாதா என்று கேட்க அது நடந்து பின் படம் தொடர்ந்தது.
கன்னித்தீவில் தங்கை புஷ்பலதாவை தேடி போவது போல முதலில் கதை...ஆம் ஏ. வி.எம்..ராஜன் மனைவி அவரே..
பானுமதி பாத்திரம் பாதியில் முடிய கதை மாற்றப்பட்டு பின் சரோ படத்தில் இணைய பின் பகுதி கலராக வர.
தினம் தினம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிய நாடோடிமன்னன் வெளி வந்து வெள்ளி வெற்றி விழா மலரில் எழுதிய நம் மன்னாதி மன்னன்
பானுமதி கூட எழுந்த மோதல்கள் பற்றி ஏதும் சொல்லாமல் படத்தில் மதனா பாத்திரமே மிகவும் சிறப்பு...அந்த பாத்திரத்தை பானுமதி தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று சொல்ல.
அவர் சொல்லவந்த செய்தி இதுதான் கருத்து வேறுபாடுகளை யாரும் மறக்க வேண்டும் என்பதே..
என்ன சரிதானே எம்ஜியார் நெஞ்சங்களே...மறு வெளியீட்டில் ஒரே திரை அரங்கில் 3 காட்சிகள் தினமும் ஓடி 100 நாட்கள் கண்ட திருவண்ணாமலையில் சாதித்த நிகழ்வு நம் தலைவனுக்கு மட்டுமே இந்த தமிழகத்தில் சொந்தம்.
வாழ்க எம்ஜியார் புகழ்.. தொடரும்...கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. ஒரு ஊக்கத்துக்குத்தான் நன்றி........ Thanks.........
-
தமிழ் மக்கள் எம் ஜி ஆருக்கு கொடுத்த ஆதரவு உலக சரித்திரத்தில் பொறிக்க வேண்டியது
எம் ஜி ஆர் பணத்தை விட மனிதநேயத்தை நேசித்தார் மக்கள் தங்களை விட எம் ஜி ஆரை அதிகம் நேசித்தார்கள்
தன்பசியை விட மற்றவர் பசி ஆறி பார்பதில் சுகம் கண்டார் எம் ஜி ஆர் மக்கள் எம் ஜி ஆர் புகழ் வளர்ச்சி கண்டு சுகம் பெற்றார்கள்
அனாதையாக வந்த தன்னை ஆளாக்கி நாட்டை ஆளவைத்த மக்களுக்கு அரணாக இருந்து காத்தார் எம் ஜி ஆர் மக்கள் தங்களை காத்த எம் ஜி ஆரை காவல்தெய்வமாக கொண்டாடுகிறார்கள்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...
-
உண்மை தான் எங்கள் புரட்சித் தலைவா
இப்போது நீதி நியாயம் தர்மம் என்பது
காணல் நீர் போல் ஆகிவிட்டது
தர்மம் நீதி நியாயம் இவைகளை எல்லாம்
தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை
புரட்சித் தலைவரே நீங்கள் இல்லாத இந்த உலகில்
நீதியும் இல்லை
நியாயமும் இல்லை
தர்மமும் இல்லை
நேர்மையும் இல்லை
உண்மையும் இல்லை
எல்லாம் வெற்றிடமாக உள்ளது
மக்கள் திலகமே நாங்கள் அனைவரும்
உங்களின் அருமை பெருமைகளை
நன்கு உணர்ந்து கொண்டோம்
மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறோம்
வாழ்க வளர்க வள்ளல் பெருமான் புரட்சித் தலைவரின் புகழ்
✌️ நன்றி ....... Thanks...
-
அன்பு நண்பர்களே
இந்த புகைப்படம் தலைவர்
எஸ் என் லட்சுமி அம்மா அவர்களுக்கு
நம் மக்கள் திலகம் பரிசாக வழங்கினார்
தொழிலாளி திரைப்படத்தின் போது
லட்சுமி அம்மா அவர்கள் பெற்றுக்கொண்டு தன் வீட்டின் வாசல் முன்பு அலங்கரித்து வைத்துக் கொண்டார் தலைவரின் தாய்
எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள்
காலம் உருண்டோடுகிறது தொழிலாளியாக நாடோடியாக விவசாயியாக இருந்த நம்
புரட்சித் தலைவர்
மன்னாதி மன்னனாக
காவல்காரறாக இந்நாட்டு
முதல்வர் ஆகிறார் ஆம் தமிழ் நாட்டுக்கே
முதல் அமைச்சர் ஆகிறார்
நம் தலைவரின் தாய் எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள் நம் தலைவர் வழங்கிய
புகைப்படத்தை தன் வீட்டின் முன்பு அலங்கரித்த புகைப்படத்தை அகற்றி விடுகிறார்
தமிழ் நாட்டின் முதல்வர்
என் கால் பிடித்திருக்க கூடாது என்று
நல் எண்ணத்தில்
இந்த செய்தி நம் தலைவருக்கு எப்படியோ செல்கிறது
நம் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம்
அன்பு கட்டளை இடுகிறார்
அந்த புகைப்படம் இருந்த இடத்திலே இருக்க வேண்டும் என்று
நம் அன்பு தலைவரின் சொல்லை மீற முடியுமா
அந்த புகைப்படம் இருந்த இடத்துக்கே வந்தது
இது தான்
நம் மக்கள் திலகத்தின் மகிமை...... Thanks...
-
MGR வாழ்க
நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மூன்று முறை முதலமைச்சராகி நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை
உருவாக்கித் தந்தார்
ஆந்திர முதலமைச்சர் எம் டி ராமாராவ் அவர்களுடன் கலந்து பேசி
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு திட்டம் தீட்டினார்
அதுதான் தெலுங்கு கங்கை திட்டம்
கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடி நீர் வந்தது
அடுத்து காவிரி நீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக
காவிரிப் பாசன விவசாயிகள் உடன் சேர்ந்து
தமிழ்நாடு அரசின் சார்பில்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
அதன் காரணமாக. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வாங்கியது
ஷண்முக நதியின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டது
நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப் பட்டது
இன்னும் பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் உருவாக்கினார்
இந்தத் திட்டத்தினால் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் எவ்வளவு லஞ்சப் பணம் கிடைக்கும் என்று திட்டம் போடாமல் நாட்டு மக்களுக்காக லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினார்
ஆகவேதான் இவரைப் பார்த்து யாரும் ஊழல் பெருச்சாளி என்று சொல்ல முடியாது
.....
எம்ஜிஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி...... Thanks...
-
சாண்டோ சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம்....பாகம் ..1
1961. ம் ஆண்டு வெளி வந்த தாய் சொல்லைத்தட்டாதே மாபெரும் வசூல் சாதனை புரிந்த சூப்பர் ஹிட் மெகா ஹிட் படம் என்பது யாவரும் அறிந்தது, .இப்படம் சாண்டோ M..M .சின்னப்ப தேவர்க்கு மறு வாழ்வு தந்த படம் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் பிரச்சினைகள் கடன்ங்கள் எல்லாம் தீர்த்து வைத்த ஒர் அற்புதமான திரைக்காவியம் சின்னப்பாதேவர் புரட்சித்தலைவரை ஆண்டவன் என்று அழைத்தது இப்படத்திற்கு பிறகுதான். எனக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் எம்.ஜி. ஆர். என்று பல தடவை சின்னப்பர் தேவர் கூறியுள்ளார்.அதற்கு காரணம் இத்திரைப்படம்தான் .இப்படம் உருவான வரலாறும் அதன் பின்னனியும் தான் இங்கே நான் கூற விரும்பிகிறேன் ..
சாதாரண.ஒர் காட்சியில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த சாண்டோ M.M. சின்னப்பர் தேவர். அகில இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த மிக பெரிய தாயாரிப்பாளராக ஆக்கிய பெருமை நமது புரட்சித்தலைவரையே சேரும்...
1956. ம். ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை ஏற்படுத்தி சின்னப்பதேவரின் அந்தஸ்து உயர்த்திய திரைப்படம்தான் தாய்க்கு பின் தாரம்.
புரட்சித்தலைவர் ஒப்பந்தம் மீறி படத்தின் தெலுங்கு உரிமையே விற்றது..A.சென்டர் B. சென்டர் என்று ஏரியா பகுதிகளை கேட்காமல் மறு வெளியீடு செய்தது..இப்படி ஒரு சில விஷயங்கள் புரட்சித்தலைவரைக் கேட்காமல் சாண்டோ சின்னப்பர்தேவர் செய்த சில தவறுகளால். இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.
அதன் பின் சாண்டோ சின்னப்பர்தேவர் கொங்கு நாட்டு தங்கம் பாண்டிய நாட்டு சிங்கம் யானை பாகன் வாழவைத்த தெய்வம் நீலமலைத்திருடன் என்று பல படங்கள் எடுத்தார் ..தாய்க்கு பின் தாரம் படத்திற்கு பின் சுமார் 10. 15. படங்கள் எடுத்துருப்பார். அந்தந்த கதாநாயகர்களுக்குத்தான் வாழ்வு தந்தது தவிர
சாண்டோ சின்னப்பர்தேவர் பொருத்தவரைக்கும் படும் நஷ்டம் கடனாளி ஆனார் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இழந்தார்...அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கி போனார்..அப்போது அவர் மனைவி கூறினார்..நீங்கள் அண்ணணை போய் பாருங்கள் கண்டிப்பா நமக்கு வழி பிறக்கும்..என்றார் ...
தொடரும் ... தொடரும் ......தொடரும் .......... Thanks...
-
சாண்டோ M .M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 2. தொடர் ஆரம்பம்
அலிபாபாவும் 40 திருடர்களும்.படத்தில் M.G.சக்ரபாணி மனைவி சந்தியா கூறுவார் அலிபாபா மனதை உங்களை விட நான் நன்கு அறிவேன். என்பது போல் சின்னப்பா தேவரின் மனைவி மாரி முத்தம்மாள் கூறினார்.அன்ணனைப் பற்றியும் அவர் குணத்தையும் உங்களைவிட நான் நன்கு அறிவேன். போய் பார்த்து விட்டு வாருங்கள் வழி பிறக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். குசேலன் கண்ணபிரானை காண சென்றதுப் போல் சின்னப்பதேவர்.நமது தெய்வத்தை காண சென்றார். நாடோடி மன்னன் படத்தின் அடுத்த காட்சிக்காக ஆலோசனையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார் தனது குழுவினர்வுடன் நமது தெய்வம்.
சின்னப்பதேவர் தன்னை கான வந்திருக்கிற செய்தி அறிந்ததும் ஒடி சென்று வாங்க முதலாளி எப்படி இருக்கிறீங்கள் என்று சின்னப்பதேவரை கட்டி அனைத்து அன்பு மழை பொழிந்தார் நமது தெய்வம். எதோ எதோ நினைத்துக்கொண்டு வந்த சின்னப்பதேவர்க்கு எம் ஜி. ஆரின் அன்பும் வரவேற்பும் கண்டு மெய்சிலித்துபோனார்.தான் வந்த நோக்கம் பிரச்சனை சொல்வதற்கு முன்பே புரட்சித்தலைவர் முந்திக்கொண்டு கூறினார். நான் உங்களுக்கு என்ன செய்யனும்.
அதைமட்டும் கூறுங்கள் வேறு எதையும் கூற வேண்டாம். என்று கூறி வாங்க சாப்பிட்ட பிறகு பேசலாம் அழைத்து சென்று விருந்தோம்பல் உபசரிப்பு செய்து சின்னப்பதேவர் மனம் குளிற வைத்தார
மீண்டும் நீங்கள் எனக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்க. வேண்டும். அப்பபடம் மூலம் நான் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து பழைய நிலைக்கு வந்துடுவேன்
என்றார் சின்னப்பர்தேவர்..அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில்....
இப்போது நான் நாடோடி மன்னன் என்ற படம் எனது சொந்த தயாரிப்பில் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.இது எனது லட்சிய படம் பலர் சாவலுக்கு பதிலாக இப்படம் எடுக்கிறேன்.இப்படம் வெற்றியடைந்தால் எனது முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான் ஒரு வேளை தோல்வியுற்றா மீண்டும் சினிமாவில் நடிப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளோன் அதனால் வேறு வழியில் உங்களுக்கு
உதவி செய்கிறேன். என்றார்.
சின்னப்பதேவர் கூறினார் என் அப்பன் முருகன் அருளால் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவிர்கள் எனக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுப்பீர்கள் இது உறுதி
என வாழ்த்துக்கூறி புறப்பட்டார் சின்னப்பர்தேவர்..
மருதமலை முருகன் ஆலயம் சென்று நாடோடி மன்னன் படம் வெற்றியடைய வேண்டும்..எம்.ஜி. ஆர் கால்ஷீட் எனக்கு கிடைக்க வேண்டும். அவர் வெற்றியடைந்தால் நான் வெற்றி பெற்றதுப்போல் என முருகனிடம் வேண்டி
பூஜை செய்தார்.சாண்டோ.M.M.A. சின்னப்பர் தேவர்....
தொடரும் .....தொடரும் .....தொடரும் ......... Thanks...
-
சாண்டோ M.M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 3.
நாடோடி மன்னன் உருவாக பல காரணங்கள் உண்டு.அதற்கான முதல் காரணம். சிலவற்றை அறிவோம்.
சொந்த படம் எடுத்தது. ...குண்டூ மணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.)( துப்பாக்கி சூடு நடந்தது) வெளிநாடு சென்று படபிடிப்பு நடத்தியது) அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தது) ( அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது) இவையெல்லாம் புரட்சித்தலைவர் வாழ்வில் நடக்கனும் என்பதற்க்காக நடக்க வில்லை ..நடக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் நடந்தது.இதற்கான விளக்கம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் புரட்சித்தலைவர் எழுதியுள்ளார். அதன் தெளிவுரை இத்தொடர் முடிந்ததும் நானே எமுதிகிறேன். அந்த வகையில் நாடோடி மன்னன் படமும் சந்தர்ப்பம் சூழ்நிலையில் உருவானது அதற்க்கான காரணம்.
குலேபகாவலி! ! அலிபாபாவும் 40 திருடர்களும்!! சக்கரவர்த்தி திருமகள் மலைக்கள்ளன் பதுமைப்பித்தன் மதுரை வீரன் போன்ற படங்களில் நடிக்கும் போது வாத்தியார் மீது தவறனா பழிகள் சுமத்தப்பட்டது.என்ன வென்றால் காட்சிகள் இப்படி அமைய வேண்டும் பாடல்கள் இப்படித்தான் எழுத வேண்டும் சண்டைக்காட்சியில் இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று தலையீடுவது. ஒளிப்பதிவு எடிட்ங் ஒலிபரப்பு இப்படி எல்லா விஷத்திலும் எம் ஜி.ஆர் ஆலோசனை தலையீடுகிறார்.இவர் சொந்த படம் எடுத்தால் தெரியும். இவர் தயாரிப்பாளராக இருந்தால் இப்படி செய்வாரா.?? என பலர் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க வாத்தியார் தந்த பதில். நீங்கள் என்ன படம் எடுக்கிறீங்க நான் படம் எடுத்தால் இதை விட பிரண்டாமா எடுத்துக்காட்டுகிறேன் என சவாலாக எடுத்ததுதான் நாடோடி மன்னன். அது மட்டும் அல்ல
திரையுலகில் நாடோடி மன்னன் படத்துக்கு முன் எந்த நடிகரும் சொந்த படம் எடுத்து வெற்றி அடைந்ததில்லை..அதற்கும் முற்று புள்ளி வைக்கனும்.
அதே நேரத்தில் தனது முமு திறமையும் வெளிக்காட்ட முடியல என்கிற ஏக்கம் வாத்தியாரிடம் இருந்தது ..அதற்கான நேரம் காத்திருந்து எடுக்கப்பட்ட படமே நாடோடி மன்னன்.
அதற்க்காக வாத்தியார் பட்ட கஷ்டங்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் அல்ல இப்படி அரசியல்.? சினிமா.? வாழ்க்கை .இவை மூன்றும் இழக்க நேர்ந்தது..எத்தனையோ சிக்கல்கள் தாண்டி படம் எடுக்கப்பட்டது..வெளியிடுவதற்க்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
(நாடோடி மன்னன் வரலாறு கூற ஒரு யுகம் வேண்டும்) அதே தேதியில் சிவாஜி நடித்த காத்தவராயன் படம் தேதி அறிவிக்கப்பட்டது.
தொடரும் .....தொடரும் ....தொடரும் .......... Thanks...
-
சாண்டோ M. M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 4 .
15. 8. 1958. வெளியீடு என்று தேதி அறிவிக்கப்பட்டது. நாடோடி மன்னன் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர். அதே நேரத்தில் காத்தவராயன் படமும் அதே தேதி அறிவிக்கப்பட்டது.அப்படத்தின் இயக்குனர்
T. R. ராமண்னா கதாநாயகி T. R. ராஜகுமாரி கதாநாயகன் சிவாஜி மூவரும் புரட்சித்தலைவர் காண வந்தனர் ..அண்ணே உங்கள் படம் வெளியீடும் அதே நாளில் எங்க படம் வருகிறது.எங்களுக்காக ஒரு வாரம் தள்ளி வெளியீடுங்கள்.
.எங்கள் படம் வாங்கும் வினியோஸ்தர்கள் உங்கள் படத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.இரண்டும் ஒரே நேரத்தில் வந்தால் எங்கள் படம் வாங்கும் .வினியோஸ்தர்கள் லாபம் குறைவாகத்தான் இருக்கும்.என எண்ணி பின் வாங்குகின்றர்.அதனால் எங்கள் படம் முதலில் வந்தால். வாங்கிய வினியோஸ்தர்கள்.லாபம் அடைவார்கள்.அதை வைத்து நாங்களும் படத்தை விற்று விடுவோம் என்றார் சிவாஜி.T. R. ராமண்னா T.R. ராஜகுமாரியும் தங்களுக்கு உள்ள இக்கட்டானச் சூழல் சொல்லினர் ..வாத்தியார் மனம்தான் பொன்மனம் அல்லவா..
தன்னால் எந்த தயாரிப்பாளரும்.நடிகரும் ஏன் எந்த மனிதரும் நஷ்டம் அடைய விட மாட்டார். அதனால் ஒப்புதல் கொடுத்தார்.
15. 8. 1958. அன்றுமுதல் முன்பதிவு செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை முதல் முதலாக கொண்டு வந்தார்..22. 8. 1958 அன்று படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். காத்தவராயன் ஒருவாரத்துக்கு முன்பே வெளியிடப்பட்டது..படம்
படுத்தோல்வி யானது.வினியோஸ்தர்கள் லாபம் அடையவில்லையென்றாலும்.பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தார்கள் ( காத்தவராயன் படத்தில் முதலில் வாத்தியார்தான் நடிக்கவேண்டிருந்தது.தனது கொள்கைக்கு எதிரான மாயாஜாலம் காட்சி இருந்ததால் நடிக்க மறுத்தார்))
22. 8. 1958. அன்று நாடோடி மன்னன் வெளிவந்து மக்கள் எதிர்பார்ப்பு ஆவல் விட மிகப்பெரிய வெற்றி மகுடம் சூடியது.
படத்தின் ரிசல்ட் அறிய புரட்சித்தலைவர். R.M .வீரப்பன் கலை இயக்குனர் அங்கமுத்து ஒளிப்பதிவாளர் G.K.ராமு. எடிட்டர் R.பாலசுப்ரமணியம். மற்றும் தனது உதவியாளர் அழைத்து. படம் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை அறிந்து வாருங்கள் என அனுப்பி வைத்தார்.
இராமயணத்தில் ராமருக்கு தூதூவராக சென்ற அனுமன் போல். இந்த ராமச்சந்திரனுக்கு தூதூவராக சென்றார்கள்.நால்வரும் ..நால்வரும்.ஒவ்வொரு திசையாக சென்று படத்தின் ரிசல்ட் தெரிந்துக்கொண்டு வந்து சொன்ன பதில்...
அண்ணே படம் பார்த்து விட்டு யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. மீண்டும் அடுத்த. காட்சிக்கு நிற்கிறார்கள் என்றதும்.புன்னகை வேந்தன் முகம் புன்னகைத்தது..
தொடரும் ...தொடரும் ....தொடரும் ......... Thanks...
-
சாண்டோ M.M.A.சின்னப்ப தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 5
நாடோடி மன்னன் பல சாதனைகள் படைத்த சரித்திரம் படம்.எல்லோரும் வரலாற்றைத்தான் படமாக்குவார்கள். ஒரு படத்தை வரலாறாக மாற்றிய பெருமை வாத்தியாரால் மட்டுமே முடிந்தது.எல்லோரும் நடந்ததை.? நடக்கபோவதை.?மட்டுமே திரையில் காட்டுவார்கள்.....நடத்திக்காட்டுவேன்.நடத்துவே ன் நடப்பேன்.என்று திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் அதை நிருப்பித்தவர்.புரட்சித்தலைவர் ஒருவரே என்பதற்கு நாடோடி மன்னன் ஒர் உதாரணம் ஆகும்..
ஆனந்தவிகடன் மற்றும் பல பத்திரிகைக்கள் இப்படி விமர்சனம் எமுதினார்கள்.
படத்தை வாங்கிய வினியோஸ்தர்கள் ஒன்றுக்கு பத்து மடங்கு லாபம் பார்த்தனர்..
ஆனால் படம் எடுத்த எம் ஜி. ஆர் க்கு நஷ்டம் ..மக்கள் எதிர்பார்த்தை விட அதிகமா
நிறைவேற்றுப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்து திருப்தி அடையற படமல்ல குறைந்தது பத்து முறை பார்த்தால்தான்.மனம் ஆறுதல் அடைகிறது.தமிழ் திரையுலகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. இப்படி எல்லா பத்திரிகையும் புரட்சித்தலைவர் புகழுக்கு மகுடம் சூட்டீனர்.படத்தின் வசூலை பற்றி குறிபிடும் போது. படம் வாங்கியவர்கள் படம் பார்த்தவர்கள். ஒரு பைசா முதலீடு போட்டு.1.50.ரூபாய் லாபம் பார்த்தனர்.இந்த காலத்துக்கு ஏற்ற படி சொல்லனும் என்றால்.
100. ரூபாய் முதலீடு போட்டு 10'000. ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.இப்படி பல
சாதனை வசூல். பத்திரிகை பாராட்டு பிரமாண்டம் மக்கள் வரவேற்பு எல்லாவற்றிலும்.நாடோடி மன்னன் மகுடம் சூட்டப்பட்டார்.1958.1959.இரண்டு ஆண்டுகளும் நாடோடி மன்னன் வசூல் பற்றியே பேச்சு.
ஆலிவுட் பாலிவுட் கோலிவுட் அகிலம் முமுவதும்.நாடோடி மன்னன் பேச்சுத்தான்.
1959 ம்ஆண்டு வாத்தியார் வாழ்வில் முதல் கண்டம் ஏற்பட்டது.குண்டுமணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.நாடோடி மன்னன் வெற்றியின் கண் திருஷ்டி என்றும் கூறலாம்.( .(அதனால் வாத்தியார்க்கு வந்த சோதனைப்பற்றி வேறு தொடரில் எழுதிகிறேன்).) 1960. ம் ஆண்டு விடுப்பட்ட படங்கள் பாக்தாத் திருடன் அரசிளங்குமரி மன்னாதிமன்னன் திருடாதே ராஜா தேசிங்கு. சபாஷ் மாப்பிள்ளை நல்லவன் வாழ்வான்.போன்ற படங்களில் நடித்து முடித்தார்..
1961. ம் ஆண்டு சாண்டோ சின்னப்பர்தேவர்க்கு கொடுத்த வாக்குபடி தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் நடிக்க தொடங்கினார் நமது தெய்வம் .....
தொடரும் ..........தொடரும் ......தொடரும் ......(மேற்கண்ட பதிவில் நாடோடிமன்னன் படத்தோடு வந்தது சாரங்கதாரா அல்லவா?! என பதிவாளரிடம் விளக்கம் அளிக்க கேட்டுளோம்)... Thanks...
-
சாண்டோ M.M.A.சின்னப்பர் தேவர்வாழ்வில் நமது தெய்வம் பாகம் .6
முதன் முதலாக வாத்தியார் C.I.D. காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம்.
ஒரே மாதத்தில் முமு படபிடிப்பும் நடத்தி முடிக்கப் பட்ட முதல் திரைப்படம் ..
நடிகர் அசோகனுக்கும்.! நடிகவேள் M.R. ராதாவுக்கும். நடிப்பில் பெரும் போட்டி
வைத்து ரசிகர்களிடமே கேட்கப்பட்டு முடிவில் பல. பேர் அசோகன் என்றே
தேர்ந்தெடுத்தனர்..மணப்பந்தல் படத்துக்குப் பின் தாய்சொல்லைத்தட்டாதே அசோகன். என்றே அழைத்தனர்.அந்தளவுக்கு அசோகன் நடிப்பு பேசப்பட்டது..
போயும்.போயும்.மனிதனுக்கு என்ற.பாடலில்.வாத்தியார் போட்ட. மேக்காப் மிகவும்
பிரபலமானது.ஆரம்பத்தில். படப்பிடிப்பில். உள்ளவர்களால்.கூட.கண்டுப்பிடிக்க
முடியவில்லை.அந்தளவுக்கு வாத்தியார் மாறுவேடம் பிரமாதமாக அனைவோரையும் கவர்ந்தது..அசோகனுக்கும்.வாத்தியார்க்கும் நடக்கும்..சண்டைக்காட்சி.அனைவரையும்.பிரமிக்க வைத்தது. படம். பார்த்து விட்டு
வரும் மக்கள் படத்தில் வரும் பாடல்களை பாடிக்கொண்டே வெளிவந்தனர்.
அந்தளவுக்கு. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
படத்தின் வசூல் சொல்ல வேண்டும் என்றால். தாய்க்குப்பின்தாரம்.படம்.அந்த..
காலத்தில்.45.ஆயிரம் ரூபாயில் எடுக்கப்பட்டு.ஐந்து மடங்கு அதிகமாக வசூல் ஆனது..தாய் சொல்லைத்தட்டாதே 75 ஆயிரம் ரூபாயில்.எடுக்கப்பட்டு..பத்து. மடங்கு வசூல் அதிகமானது. அந்த ஆண்டு அதிக வசூல் சாதனைப் படைத்தது..
சின்னப்பதேவர் பட்ட கடன் பிரச்சினை யாவும்.ஓரே.படத்தில் தீர்ந்தது.படத்தில் நடிப்பதற்கு முன் வாத்தியார் சின்னப்பதேவரிடம்.சம்பளம் பேசவும் இல்லை.
வாங்கவும் இல்லை.படம் வசூல் வந்த பிறகு சம்பளம் கொடுங்கள் என்றார். அதேப்போல் விஜாயா வாகினி ஸ்டியோவில்.படப்பிடிப்பு நடத்துவதற்கான. வாடகையும் தர வில்லை. படம் வெற்றிப்பெற்ற பிறகு வாடகை தாருங்கள்.என்றார்
நாகிரெட்டி ..ஆனால் படம் இவ்வளவு பெரிய வெற்றி வசூல் சாதனை புரியும் என்று
சின்னப்பதேவர் எதிர்பார்க்க வில்லை. தாய்சொல்லைத்தட்டாதே படத்திற்க்கான
சம்பளம் அடுத்தப்படம்.தாயைக்காத்த தனயன் படத்திற்க்கான சம்பளமும்.சேர்த்து
கொடுத்தார்.வாத்தியாரிடம்.....அதேப்போல் இரண்டு படத்திற்க்கான ஸ்டியோ வாடகையம் சேர்த்து நாகிரெட்டியிடம் கொடுத்தார்..
வசனகர்த்தர்.ஆருர்தாஸ். வாத்தியார்க்கு முதன் முதலாக வசனம் எழுதியப்படம்.
சாதனைகள். தொடரும் ..........தொடரும் ............தொடரும் ............. Thanks...
-
சாண்டோ M.M.A. சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம். பாகம். 7
வெற்றி .வெற்றி .வெற்றி. என்று வாத்தியார் கூறுவதுப்போல்தான்.முதல் காட்சி.
முதல் ஷாட். எடுக்கப்ட்டது..தாய்சொல்லைத்தட்டாதே.படத்தில் தொடங்கிய இந்த வெற்றி என்ற வசனம் சின்னப்பர் தேவர் எடுத்த அனைத்து படங்களிலும்.இடம
பெற்றது..போட்டோ படம் எடுத்து அதை கழவி உடனே பிரிட்டு போடுவதுப்போல் காட்சி காண்பித்து தொழில் முன்னேற்றத்துக்கு.முன்னோடியாக விளங்கியது இப்படம்தான்..
1961.ஆண்டு வந்த பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும். வசூலில் அனைத்து படங்கனையும் முந்தி NO....1 .வசூல் சாதனை புரிந்தது.தாய்சொல்லைத்தட்டாதே..? இப்படத்திற்கு பிறகு வந்த அனைத்து படங்களில் வாத்தியார் புகழுக்கு புகழ் சேரும்.படி எதாவது ஒரு பாடல் அமைத்திருப்பார்.சின்னப்பர் தேவர்....
படப்பிடிப்பு முமுவதும்..முடிந்து விட்டது.நடிகை சரோஜாதேவி வேறு படத்தில் நடிப்பதற்க்காக பம்பாய் செல்வதற்க்காக புறப்பட்டு.சென்றார்.கண்ணதாசன் எமுதிய ஒரு அற்புதமான பாடல் பதிவில் விடுப்பட்டு போயிருந்தது.அது வாத்தியார் பார்வைக்கு பட உடனே அதை பாடல் காட்சியாக எடுக்க சொன்னார்.
சரோஜாதேவி சென்று விட்டார் இனி எப்படி எடுப்பது என்றார் சின்னப்பர்தேவர்.?
உடனே வாத்தியார் அவர் எப்போது சென்றார்.எத்தனை மணிக்கு பயணம் என்றெல்லாம் எல்லாம் விபரம் கேட்டார். முமுவிபரம்.அறிந்த பிறகு கூறினார்.
இந்நேரம் விமான நிலையம்தான் சென்றிருப்பார்கள்,நான் அழைத்தேன் என்று அழைத்து வாருங்கள் இப்பாடல் காட்சி எடுத்த பிறகு நானே வழி அனுப்பி வைக்கிறேன்.என்றார். வாத்தியார் கூறியதையே.சரோஜாதேவிடம் கூறி அழைத்தார்.விமானம் ஏறும் தருனத்தில் வேறு யார் கூப்பிட்டு இருந்தாலும் சரோஜாதேவி வந்திருக்க மாட்டார்.எம்.ஜி.ஆர்.என்ற ஒரு சொல்லுக்கு மதிப்பிட்டு. உடனே புறப்பட்டு வந்து படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.
நான்கு மணி நேரத்தில் எடுக்கபட்டு பாட்டு சூப்பர் ஹிட் .படமும் சூப்பர் ஹிட்.
அந்த பாடல் தான். பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாடா. என்ற பாடல் ....
இப்படம் வெற்றி சாண்டோ சின்னப்பர்தேவர்.மனைவி மாரி முத்தம்மாள் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.தனக்கு ஒரு ஆசை இருப்பதாக கூறினார்.?அது என்ன ஆசை..??
தொடரும் ...........தொடரும் ......தொடரும் .......... Thanks...
-
சாண்டோ M.M.A.சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 8
நான் எப்ப எப்படி எங்கே வருவேன் என்று யாருக்கும்.தெரியாது. வரவேண்டிய இடத்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு வந்துடுவேன்...என்று தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் வாத்தியார் கூறும் வசனம் ஆகும்..படத்தில் வாத்தியார் C.I.D. என்பதால் அந்த காட்சிக்கு அமைந்தது.போல் இருக்கும் ...((.இதே வசனத்தை முத்து படத்தில் ரஜினி பேசி தன்னை தானே பெருமைப்படுத்திக்கொள்வார்.)) .படத்தில் ஆருர்தாஸ் வசனம் பிளஸ் பாயின்ட்டா அமைந்தது.காட்சிக்கு காட்சி கருத்து ஆழமிக்க வசனம் அமைந்திருக்கும்.இப்படி ஆருர்தாஸ்? அசோகன்.? M.R.ராதா. சின்னப்பர்தேவர். சரோஜாதேவி.? அனைவருக்கும் ஒரு வெற்றி மகுடம் சூட்டியது.தாய்சொல்லைத்தட்டாதே.......
சின்னப்பர்தேவர் மனைவி மாரிமுத்தம்மாள்.வாத்தியார் போட்டோ பூஜை அறையில் வைத்து தெய்மாக வணங்கினார்.தனது கணவரிடம்.நமக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் அன்ணன் எம். ஜி. ஆர். இந்த இரண்டு பேரும் இனைத்தப்படி ஒரு பாடல் எழுதி தர சொல்லுங்கள் கண்ணதாசனிடம்.என்று தனது விருப்பத்தையும் ஆசையும் கூறினார்.
சின்னப்பர்தேவரும் தனது மனைவியின் விருப்பத்தை கண்ணதாசனிடம் கூறி ஒரு பாடல் எமுதி தருமாறு கேட்டார். கண்ணதாசனும்.அதற்கெற்றப்படி ஒரு பாடல் எமுதி கொடுத்தார்.அந்த பாடல்தான் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற
அன்றொரு நாள் அவனுடைய பெயரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவன் இருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்று வரை அவன் முகத்தை நானும் காணேன் ...அவன்
என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்.
இந்தப்பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் முருகரை நினைத்து பாடுகிறாரா அல்லது புரட்சித்தலைவர் நினைத்து பாடப்பட்டதா.என்று கண்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..இதற்கு முன்னாலே இந்த பாடல் கேட்டீருந்தாலும் இப்போது மீண்டும் அப்பாடல் கேட்டுப்பாருங்கள் புரியும் ..சாண்டோ சின்னப்பர் தேவர் வீட்டு பூஜை அறையில் எப்போதும் இப்பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ...
வாத்தியார் சின்னப்பர் தேவர் வீட்டுக்கு வருவதும்.? வாத்தியார் வீட்டுக்கு சின்னப்பர் தேவர் வருவதும் நாளடைவில் இருந்தாலும். அவரவர் பூஜை அறைக்கு இருவரும் வந்ததில்லை.
ஒரு நாள் சின்னப்பர் தேவர் வீட்டு நிகழ்ச்சிக்கு வாத்தியார் பூஜை அறைக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
தொடரும் ....தொடரும் ......தொடரும் ........ Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 9
பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராய கல்லூரியில் எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து சொற்பொழிவு உரையாற்றினார்.
இந்திய ஜனாதிபதி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் எம்ஜிஆர் மன்றம் திறந்து வைத்து பெருமை சேர்த்தவர்
இந்து முஸ்லீம் கிருஸ்துவ அனைத்து மதத்தினரும் எம்ஜிஆர் உடல் நலம் பெற வேண்டி அவரவர் வழியில் வழி பாடு செய்து தனது விசுவாசித்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்
இவையெல்லாம் சராசரி மனிதன் வாழ்வில் நடப்பது சாத்தியம் ஆகாது ஆனால் எம்ஜிஆர் வாழ்வில் நடந்தது ஆச்சரியம் அதிசயம் ஆகும்.அதனால்தான் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள். அதேப்போல் தான் சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் அவர் தெய்வமாக கருதினர். பூஜை அறையில் இருந்த தனது போட்டோ பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார்.
இது என்ன அநியாயம் சாமி படத்துக்கு நடுவில் என் படத்தை ஏன் வைத்தீர்கள் நான் சராசரி மனிதன் என்னை கடவுளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொ*ண்டு*ள்ளா*ர்.அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை உன் அண்ணனுக்கு தெரிந்தால் ஏற்றுக்கொள்ளக்மாட்டார்.என்று நான் எவ்வளவோ சொல்லியும் கேட்க வவில்லை இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று என் மனைவி கூறியுள்ளார் நீங்களே கேளுங்கள் என்றார்.
வாத்தியார் சின்னப்பர் தேவர் மனைவி மாரி முத்தம்மாளிடம் என்னம்மா உங்கள் வீட்டுக்காரர் சொல்வது உண்மையா என்றார். ?
அதற்கு அவங்க கூறிய பதில் அண்ணே உங்களுக்கு தெரியாது எங்க வீட்டுக்காரர் இழந்த கெளரவத்தை மீட்டு கொடுத்தது நீங்கள் அதனால் உங்களிடம் கூறுகிறேன். அவர் கடன் கேட்க போய் எத்தனை முறை அவமானத்தால் திரும்பி வந்தார். வேதனைப்பட்டார் .எங்களை ஏராளமான பார்த்தவர்கள் உண்டு இழிவாக நினைத்தவர்கள் உண்டு. ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் போது அவனுக்கு பெரும் உதவி செய்து அவன் துன்பத்தை போக்கி அவனை உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தி பார்ப்பவன் எவனோ அவனே இறைவனாக கருதப்படுகிறது அந்த வகையில் எங்களைப் பொருத்தவரைக்கும் நீங்கள்தான் எங்களுக்கு கடவுள் அதனால் எங்கள் நம்பிக்கையில் மறுப்பு சொல்லாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார் மாரி முத்தம்மாள் மட்டும் கலங்க வில்லை உடன் இருந்த சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் தன்னை அறியாமல் கலங்கினார்கள்.
இப்படித்தான் வாத்தியார் பல பேர் வியர்ந்து ஆச்சரியம் அடையற போல் உதவி செய்து வள்ளலாகவும் தெய்வமாக திகழ்கிறார்.அவர் கொடைவள்ளத்தனம் நமக்கு தெரிந்தது 100/,25/சதவீதம் தான் மீதி 75/சதவீதம் நாம் அறியவில்லை. அதை அறிந்து இருந்தால் வாத்தியார் தவிர வேறு ஒருவரை நேசிக்க மாட்டார்கள். என்பது தான் உண்மை. .
அடுத்தது தாயைக் காத்த தனயன் சாதனை தொடரும், ....தொடரும். ......தொடரும்... Thanks...
-
சாண்டோ M, M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 10
இது மற்றவர்களை மட்டம் தட்டனும் என்பதற்காகவோஉதாசீனம் படுத்தனும் என்பதற்காகவும் எமுத வில்லை ஒர் உதாரணம் காட்டவேண்டும் என்பதற்காக எமுதிகிறேன் தவறாக கருத வேண்டாம்.அப்படி தவறு இருந்தால். மன்னிக்கவும். ....எத்தனையோ தலைவர்கள் பகையே மனதில் வைத்து எதிரணியே,. எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் அதற்கு உதாரணமாக சிலர், ,
தந்தை பெரியார் கண்ணதாசன் கருணாநிதி ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அனைவரும் எதாவது ஒரு கூட்டம் அல்லது மேடை பேச்சு அல்லது பேட்டியில் தனது எதிராளி எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் தரக்குறைவாக பேசியுள்ளார்கள்.
மகாகவி பாரதியார் என் எஸ் கிருஷ்ணன் மக்கள் திலகம் எம் ஜி ஆர் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் யாரையும் எப்பவும் தரக்குறைவாக பேசியதாக இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
மகாகவி பாரதியார் வெள்ளையனை எதிராக குரல் கொடுத்தார் தனது புரட்சி கவிதை மூலம். ஆனால் ஒரு முறை கூட தனது காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
என் எஸ் கிருஷ்ணன் .தன்னை தர குறைவாக எமுதி கொலை வழக்கில் சிக்க வைத்த லட்சுமி காந்தன் பற்றி எங்கும் எப்போதும் தர குறைவாக பேசியது இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை
மக்கள் திலகம் எம் ஜி ஆர் சினிமாவில் M.R.ராதா சிவாஜி அரசியலில் கண்ணதாசன் கருணாநிதி தன்னைப் பற்றி தர குறைவாக பேசினாலும் அவர்கள் மட்டும் அல்ல வேறு யாரையும் எங்கும் எப்போமுதும் தர குறைவாக பேசியதில்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை. பகையே மனதில் வைத்து பழிவாங்கும் குணமும் அவரிடம் இருந்தது இல்லை,
வாத்தியார் பற்றி நன்றாக அறிந்தவர்கள் புரிந்தவர்கள் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள், தெரியாதவர்கள் புரியாதாவர்கள்தான் வதந்திகள் நம்பி தவறான கருத்துக்கள் கூறுகிறார்கள், தாய்சொல்லைத்தட்டாதே படத்தின் வெற்றி மட்டும் அவர் குணம் அறிய வில்லை. ஏற்கனவே எடுத்த தோல்வி படங்கள் மூலம் தான் கண்ட அனுபவத்தால் வாத்தியார் குணம் அறிந்து வேதனை பட்ட காலம் உண்டு, 7.11.1961 அன்று படம் வெளிவந்து வெற்றி மாலை சூடியது
13.4.1962.அன்று தாயைக் காத்த தனயன் தமிழர் திருநாள் வெளிவந்தது சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் மற்றொரு மறுமலர்ச்சி மகிழ்ச்சி ஏற்பட்டது அது என்ன? ??
தொடரும். ....தொடரும். ...தொடரும். ..... Thanks...
-
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 11
M R. ராதா இரு வேடங்களில் நடித்த முதல் படம்
M R. ராதா மகன் M R. வாசு முதல் படம்
தேவர் பிலிம்ஸ் ஆர்ட்ஸ் முத்திரை பதித்த முதல் படம்
சின்னப்பர் தேவர் தம்பி M A மாரியப்பன் எடிட்டிங் செய்த முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வேட்டைக்காரன் வேடத்தில் நடித்த முதல் படம்
இவையெல்லாம் தாயைக் காத்த தனயன் சாதனைகள் எண்ணிக்கை
படத்தில் சிறப்பான விஷயங்கள். ..
சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதும் சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள்
வாத்தியார் புலியுடன் மோதும் சண்டைக்காட்சி
M R ராதா டீக்கடை பெஞ்ச் அரசியல் தெறிக்கும் நகைச்சுவை காட்சிகள்
சூப்பர் ஹிட் மெகா ஹிட் பாடல் காட்சிகள் இதுதான் சிறந்த பாடல் என்று சொல்லமுடியாத அளவுக்குப் அனைத்து பாடல்களும் தேனமுது
தாய்சொல்லைத்தட்டாதே அசோகன் என்றால் தாயைக் காத்த தனயன் M R. ராதா
நடிப்பு கொடிக்கட்டி பறந்தது
தொடர்ந்து 21 வாரம் ஒடி மாபெரும் வெற்றி வாகை சூடியது அந்த ஆண்டு அதிக
வசூல் சாதனையை படைத்தது.
திருச்சி பேலஸ் தியேட்டரில் 146 நாட்கள் ஒடிக்கொண்டிருக்கும் போது குடும்பத்தலைவன் வந்ததால் இப்படம் எடுத்து விட்டனர்.
சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி மூன்று தியேட்டரிலும் 120 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது
வெற்றி. வெற்றி. ...வெற்றி என்று மூன்று முறை சொல்லுவதைப்போல் காட்சி எடுக்கப்பட்டது. மூன்று முறை எடுக்கப்பட்டது. .வாத்தியார் சின்னப்பர் தேவரிடம் கேட்டார் ஏன் ஒரு முறை எடுத்தால் போதாது
அதற்கு சின்னப்பர் தேவர் தந்த விளக்கம் ஆண்டவேன நான் உங்களை வைத்து மூன்றாவது வெற்றி பெறுகிறேன். அதாவது
தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் என்று மூன்று படங்களை குறிப்பிட்டார்.
குறைந்த செலவில் குறைந்த நாட்களில் எடுக்க ப்பட்டு அதிக வசூல் அதிக நாட்கள்
ஓடியது கண்டு கோலிவூட் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது
சின்னப்பர் தேவர் பெருமை மேலும் கொடிக்கட்டி பறந்தது. .
அடுத்தது குடும்பத்தலைவன் சாதனை தொடரும். ...தொடரும். ...தொடரும். .......... Thanks..........
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 12
1 பேரறிஞர் அண்ணா 2 நாவலர் நெடுஞ்செழியன் 3 மு கருணாநிதி
4 V N ஜானகி 5 J , ஜெயலலிதா 6 O பன்னீர்செல்வம் 7 எடப்பாடி பழனி சாமி
தமிழகத்தில் ஏழு முதல்வர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர்
எம் ஜி ஆரை சேரும். .
1 சரோஜாதேவி 2 ஜெயலலிதா 3 லதா 4 மஞ்சுளா 5 ராஜ ஸ்ரீ 6 ரத்னா 7 லஷ்மி ஏழு பேரும் முன்னணி கதாநாயகியாக உயர்வுக்கு காரணம் புரட்சிநடிகர் எம் ஜி ஆர்
1 M R ராதா 2 , M N நம்பியார் 3 S, A அசோகன் 4, R. S , மனோகர், 5 P S வீரப்பா
6, T S, பாலையா , 7. O. A. K, தேவர் இந்த ஏழு பேரும் வில்லனாக பிரபலமானது
வாத்தியார் படத்தில்தான்
1, சரவணா பிலிம்ஸ் 2, A V, M , புரடக்ஷன் 3 ஜெயந்தி பிலிம்ஸ் 4 வீனஸ் பிக்சர்ஸ்
5, மேகலா பிக்சர்ஸ் 6. விஜயா வாகினி, 7, தேவர் பிலிம்ஸ்
இவர்கள் எல்லோரும் வாத்தியார் வைத்துதான் முதல் முதலாக கலர் படம் எடுத்து வெற்றி வாகை சூடினார்கள்
இப்படி எத்தனையோ மனிதர்கள் வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் மூல காரணமாகவும் முதல் காரணமாகவும் விளங்கியவர் நமது தெய்வம் பொன்மனச்செம்மல்.
ஒரு உதாரணத்துக்கு மட்டும் தான் மேலே உள்ளது குறிப்பிட்டேன் ஆனால் வாத்தியாரால் உதவி பெற்றவர்கள் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம் கணக்கில் அடங்காது எண்ணிக்கை இல்லாதது உண்டு.
அந்த வகையில் M R ராதா மகன் M R வாசு அறிமுகம் ஆனது எப்படி என்பதை முதலில் அறிவோம்.
ரத்தகண்ணீகர் படத்தில் மூலம்தான் M R. ராதா பிரபலம் ஆனார். அந்த படத்திலே தனது மகனை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருந்தது ஆனால் தனது படத்தில் அறிமுகமாகி உயர்த்த நிலை வருவதை விட வேறு ஒருவர் படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே M R. ராதாவின் ஆசை அதற்கான தருணம் காத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தாயைக் காத்த தனயன் படத்தில் இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது. அதிலே ஒரு வேடம் எனக்கும் மற்றொரு வேடத்தில் தனது மகனை நடிக்க வைக்க வாய்ப்பு அமைய சின்னப்பர் தேவரிடம் கேட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் குறுகிய காலத்தில் படம் எடுப்பதால் புது முகம் அறிமுகம் படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை இருந்தாலும் எம் ஜி ஆரிடம் ஒரு வார்த்தை கூறி விடுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.
வசனகர்த்தா ஆரூர்தாஸ் மூலம் எம்ஜிஆரிடம் இச்செய்தி எட்டியது.???
தொடரும். ...தொடரும். ...தொடரும். ......... Thanks...
-
சாண்டோ M M. A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 13
கவிஞர் வாலி 2 கவிஞர் முத்துலிங்கம் 3 கவிஞர் நா காமராசன் 4 புலவர் புலமைப்பித்தன் 5 கவிஞர் மருதகாசி 6 கவிஞர் பஞ்சு அருணாசலம் 7 கவிஞர் அவினாசிமணி இவர்கள் எல்லாம் புரட்சித்தலைவர் மூலம் அறிமுகமான ஜாம்பவான்கள்
1 K , பாலச்சந்தர், 2, K, மகேந்திரன் 3, பா நீலகண்டன் 4 A, ஜகன்நாதன் 5 R. M, வீரப்பன் 6 கிருஷ்ணன் பஞ்சு 7, ஜம்பு வாத்தியார் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்கள் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்
T, M, செளந்தரராஜன் , 2, S, P. பாலசுப்பிரமணியம் , 3. T. K, கலா, 4. K J. யேசுதாஸ்
5, L R. ஈஸ்வரி , 6, வாணி ஜெயராம் , 7. ஜிக்கி புரட்சித்தலைவர் படத்தில் பாடிய பிறகுதான் பிரபல பின்னணிப் பாடகர்கள் என்ற நிலை அடைந்தனர்
மேலே குறிப்பிட்ட அனைவரும் வாத்தியாரால் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்கள்
இப்படி எத்தனையோ துறையில் உள்ளவர்கள் புரட்சித்தலைவர் மூலம் புகழ் அடைந்தனர் வாழ்வு பெற்றனர், இது குறைவுதான் கணக்கில் அடங்காது எண்ணிக்கை எத்தனையோ பேர் உண்டு, அந்த வகையில் M. R. வாசும் புரட்சித்தலைவர் மூலம் தாயைக் காத்த தனயன் படத்தில் அறிமுகமானார். வசனகர்த்தா ஆரூர்தாஸ் வாத்தியாரிடம் M. R. ராதா அண்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது என்றும் அதில் ஒரு வேடம் தனது மகனுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார் உடனே வாத்தியார் கூறினார்
ராதா அண்ணன் இரட்டை வேடம் அவரே நடிக்கட்டும் அதுதான் அவர் நடிப்புக்கு முத்திரை பதிக்கும், தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் காமெடி நடிகர் இல்லை அது க்ரைம் த்ரில்லர் படம் என்பதால் எடுப்பட்டது. இது குடும்பம் படம் அதனால் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் முக்கியத்துவம் தரனும் அவர் மகனை நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யுங்கள் என்றார்,
வாத்தியாரின் சமயோகிதனமான அறிவும் திறமையும் கண்டு படப்பிடிப்பில் இருந்த M. R. ராதா முதல் ஆரூர்தாஸ் சின்னப்பர் தேவர் வரை அசந்து போனார்கள்
இது தான் எம் ஜி ஆர் சினிமா அனுபவம் இந்த ஐடியா யார் கொடுப்பார்கள் என்று வியந்து பாராட்டினார்கள். .
அதே நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த M. R ராதா விடம் அவரது மகன் M R. வாசு தனது தந்தையிடம் கேட்ட கேள்வி .?? அப்பா என்னை ஏன் எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் நீங்கள் நினைத்தால் யாரிடம் கூறினாலும் என்னை நடிக்க அழைப்பார்கள் ஏன் உங்கள் படத்தில் கூட என்னை நடிக்க வைக்க முடியும் குறிபிட்டு எம் ஜி ஆர் படத்தில் நடிக்க வைக்க தருணம் காத்திருக்க காரணம் என்று கேட்டார். ?
அதற்கு M. R. ராதா கூறிய பதில். ...தொடரும். ...தொடரும். .தொடரும். ?...... Thanks.........
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 14
போதனையில் புத்தனாக இருந்து போதித்தார்
அகிம்சையில் மகாத்மாவும் இருந்து கடைப்பிடித்தார்
கொள்கையில் அண்ணா வழியில் வாழ்ந்தார்
தமிழ் நேசிப்பதில் மகாகவி பாரதியார் வழியில் வாழ்ந்தவர் நமது தெய்வம் M G R
இப்படி எத்தனையோ தலைவர்கள் கலவையில் கலந்த கலவைதான் M G R
அதேப்போல் எத்தனையோ திறமைகளை கொண்டு தொழில் வித்தைகளையும் கற்ற சகலகலா வல்லவர் பொன்மனச்செம்மல் சினிமாவில் அவருக்கு தெரியாத கலைகள் எதுவும் இல்லை இது நன்கு அறிவார் M R ராதா அவர்கள் ஆனால் அதைப் ஒரு போதும் வெளிபடையாக யாரிடமும் கூறியது இல்லை ஏன் என்றால் அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை அமைந்தது இல்லை இன்று தனது மகன் கேட்கும் போது சொல்லவேண்டிய சூழ்நிலை உருவானது.
உன்னை எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய பல காரணங்கள் உண்டு அதில் சில முக்கியமான விஷயம் மட்டும் கூறுகிறேன் , ,
எம் ஜி ஆர் ஒர் அனுபவமிக்க நடிகர் அவருடன் நடித்தால் பதற்றம் பயம் இல்லாமல் மற்ற படங்களில் நடிக்க சுலபமாக இருக்கும். முதல் படத்திலேயே அவர் படத்தில் நடித்த பெருமை அடைவாய் மற்ற படங்கள் நடிக்க வாய்ப்பு சுலபமாக கிடைக்கும்
சம்பளம் அதிகமாக கிடைக்கும் அதனால் மற்ற படங்களிலும் இங்கு கிடைத்த சம்பளமே கிடைக்கும். . சினிமாவில் நடிக்கும் எவருக்கும் முதல் படம் வெற்றி படமாக அமைந்து விட்டால் அடுத்த படம் நடிக்கும் வாய்ப்பு தானாகவே அமைந்துவிடும். இததான் சினிமா பார்முலா ஆகும் ஆனால் எம்ஜிஆர் படத்தை பொருத்தவரைக்கும் அந்த பார்முலா கிடையாது. . வெற்றி என்பது அவரை வைத்துத்தான் உள்ளது . அவரை குறை கூறுபவர்கள் குற்றம் சாட்டியவர்கள் எதிரியாக நினைப்பவர்கள் கூட அவரை வைத்துத்தான் புகழ் அடைவது வருமானம் பார்ப்பார்கள் அவரால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அதிகம் உண்டு ஏன் நீயே மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு குறைவுதான் அதனால் தான் முதல் படம் எம் ஜி ஆர் படமாக இருக்கனும் என்பதால் காத்திருந்தேன் அதற்கான தருணம் இப்போமுது ஏற்பட்டுள்ளது என்றார்
இக்குறிப்பு M R வாசு அவர்கள் மகன் நடிகர் வாசுவிக்ரம் பொதிகை தொலைக்காட்சியில் தனது சினிமா அனுபவம் கூறும் போது தனது அறிமுகம் தனது தந்தை அறிமுகம் இப்படி கூறியுள்ளார் தினமலர் வாசகர் மலரில் இச்செய்தி வந்துள்ளது
அடுத்து குடும்பத்தலைவன் பற்றி தகவல் தொடரும் தொடரும் தொடரும். ............ Thanks
.........
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 15
இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15-08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
கலையரசி. ..பல போட்டிகள்
தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
படகோட்டி. ...படகு போட்டி
காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
நம்நாடு. ..தேர்தல் போட்டி
பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
ரிக்ஷாக்காரன். ..ரிக்ஷா போட்டி
குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
நல்ல நேரம். ..யானை போட்டி. ...
பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
மீணவநன்பன். ...வாள் சண்டை போட்டி
மதுரையைமீட்டசுந்தரபாண்டியன். ..பாட்டு போட்டி
இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும்......... Thanks.........
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 16
வாத்தியார் படத்தை பொருத்தவரைக்கும் தனது நடிப்பை விட படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுப்பார் அதற்கு காரணம்?
தன்னுடைய நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள் கதாநாயகன் பொருத்தவரைக்கும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல படங்கள் உண்டு அதற்கான வாய்ப்பும் அமையும் ஆனால் மற்ற நடிகர்கள் அப்படியல்ல அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். கதாபாத்திரம் அமைந்திருக்க வேண்டும் அப்போது தான் படவாய்ப்புகள் கிடைக்கும் ரசிகர்களால் பேசப்படுவார்கள். இதை நன்கு உணர்ந்து அனுபவம் கண்டவர் நம்ம வாத்தியார் தனது ஆரம்ப காலம் சினிமா அனுபவத்தை நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதனால்தான் அவர் நடித்த பல படங்களில் மற்ற நடிகர்களுக்கு கனமான கதாபாத்திரம் கொடுத்து அவர்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் அதற்கு உதாரணமாக பல படங்கள் உண்டு அதில் சில முக்கியமான படங்கள் மற்றும் கூறுகிறேன்
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்....மகாதேவி. .... P S வீரப்பா
படகோட்டி. ..எங்க வீட்டு பிள்ளை. ....M N நம்பியார்
தெய்வத்தாய்....குடியிந்தக்கோயில். ...பன்டரிபாய்
தாய்சொல்லைத்தட்டாதே. ..பணக்காரக்குடும்பம்....S A அசோகன்
அரசக்கட்டளை ஒளிவிளக்கு. ......R S மனோகர்
சந்திரோதயம். ...குமரிக்கோட்டம். ....ஜெயலலிதா
திருடாதே. ... அன்பே வா. ..சரோஜாதேவி
உரிமைக்குரல். ....லதா
தாயைக் காத்த தனயன். ..தாயின் மடியில். ....M R ராதா
நீதிக்குப்பின்பாசம் நம்நாடு. ....ரங்காராவ்
இப்படி பல படங்கள் நீண்டுக்கொண்டே போகும் மற்ற நடிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களால் பேச வைத்தார் ஒவ்வொரு பபடத்திலும் ஒவ்வொருக்கும் நடிக்கும் வாய்ப்பு அமைத்து கொடுத்தார் இது எந்த நடிகர்களிடம் காணத ஒரு அதிசயம் ஆகும்
நடிகர் அசோகன் பல படங்களில் பல நடிகர்களையும் நடிப்பில் முந்திக்கொண்டு வருவார் அதற்கு பல படங்கள் உதாரணமாக கூறலாம் அவை பின் வரும் தகவலில் பதிவு வரும் குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் நடிப்பில் போட்டி போடுவார் அடுத்த பதிவில் காண்போம்
தொடரும். ...தொடரும். ....தொடரும். ........ Thanks...
-
சாண்டோ M,M, A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 17
குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் அசோகனுக்கு கடுமையான நடிப்பு போட்டி அமைந்திருக்கும் . . வாத்தியார் தனது இயற்கை நடிப்பிலும் யதார்த்தம் நடிப்பும் வெளிப்படுத்திருப்பார் அசோகன் சிறிது அதிகமான நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் தாய்சொல்லைத்தட்டாதே, பணக்காரக்குடும்பம், , சந்திரோதயம் தெய்வத்தாய் இவையெல்லாம் அசோகன் நடிப்புக்கு தீனி போட்டவை , , குடும்பத்தலைவன் தாய்க்கு தலைமகன், பெற்றாதால்தான் பிள்ளையா, கொடுத்துத்வைத்தவள் காவல்காரன் போன்ற படங்களில் வாத்தியாரின் நடிப்புக்கு அசோகனால் ஈடுக்கொடுக்க முடியவில்லை வாத்தியார் நடிப்பே அதிகமாக பேசப்பட்டது . சின்னப்பர் தேவரின் நான்காவது வெற்றி படமாக குடும்பத்தலைவன் அமைந்தது,
1956 தாய்க்கு பின் தாரம், . 1961 தாய்சொல்லைத்தட்டாதே. . 1962 தாயைக் காத்த தனயன் . குடும்பத்தலைவன் தொடர்ந்து 22. 2. 1963 தருமம் தலைக்காக்கும் மற்றொரு வெற்றி படமாக அமைந்தது. இனி இப்படத்தின் வரலாறு கவனிப்போம்.
தருமம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் இப்பாடல் படத்திற்காக எமுதிய பாடல் அல்ல, இப்பாடல் தகுதியுள்ள ஒருவருக்குத்தான் அமையனும்
என்பது கண்ணதாசனின் விருப்பம். . இப்பாடலை கேட்டு பல இயக்குநர்கள் படையெடுத்தனர் கண்ணதாசனின் வீட்டுக்கு இன்னும் குறிப்பாக சொல்லனும் என்றால் ஸ்ரீதர், . B R பந்தலு K S, கோபாலகிருஷ்ணன் பீம்சிங் திருலோகச்சந்தர்
போன்றோர் கண்ணதாசன் இவர்களுக்கு சொன்ன பதில் எம்ஜிஆர் வைத்து யார் படம் எடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இப்பாடல் என்றார் அவருக்கு மட்டுமே இப்பாடல் பொருந்தும் என்றே பதில் தந்தார். .
இச்செய்தி சின்னப்பர் தேவர் கேள்விப்பட்டார் உடனே கண்ணதாசன் வீட்டுக்கு சென்று அப்பாடலை கேட்டார். அதற்கு கண்ணதாசன் என்ன படம் என்ன கதை என்று கேட்டார். உடனே சின்னப்பர் தேவர் பாடல் வரிகள் சொல்லுங்கள் படத்தின் பெயர் கூறுகிறேன் என்றார். . பாடல்வரினை கண்ணதாசன் கூறியதும் அதுதான் படத்தின் பெயர் என்றார் சின்னப்பர் தேவர்
என்ன கதை என்ன படம் என்று எதுவும் சொல்லாமல் நான் கூறியதை வைத்து படத்தின் பெயர் கூறுகிறீர்கள் என்றார் அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார்
நான் ஆண்டவனை வைத்து படம் எடுக்கிறேன் அவருக்கு கதை முக்கியம் இல்ல
அவருக்கு பொருந்தர மாதிரி பாடல் அமைந்தால் கதை தானாக அமைந்திடும்
ஆண்டவன் ரசிகர்கள் பொருத்தவரைக்கும் சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் அமைந்துவிட்டால் அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதால் நான் கதை முடிவு செய்யவில்லை என்றார். சின்னப்பர் தேவர் புரட்சித்தலைவர் மீது வைத்துள்ள அபார நம்பிக்கை கண்டு கண்ணதாசன் வியர்ந்து போனார் அன்று முதல் சின்னப்பர் தேவர் எப்போமுது வந்தாலும் அவர்க்கு ஏற்றபடி பாடல் எமுதிக்கொடுத்திடுவார் இன்னும் முடியலங்க
தொடரும். ...தொடரும். ....தொடரும். .......... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 18
நின்றால் பொதுகூட்டம் ...
நடந்தால் ஊர்வலம் ...
பேசினால் மாநாடு... இந்த வரலாறு உருவானது வாத்தியார் மூலம் தான் ... அதேப்போல் அவரின் ஒவ்வொரு தகவலும் வரலாறாக உருவாக்கப்பட்டது ...
இன்று காணும் வரலாறு "தர்மம் தலைக்காக்கும்"
1962 ம் ஆண்டு தமிழக சட்டசபையில் பொதுத்தேர்தல் நடந்தது. .கவியரசு கண்ணதாசன் ஈ வி கே, சம்பத் இனைந்து தேசிய தமிழ் ஜனநாயக கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு தோற்றது. . இராமநாதபுரம் மாவட்டம் திருக்கோஷ்டியூர் (தற்போது திருப்பத்தூர் என்று மாற்றப்பட்டது ) என்ற தொகுதியில் கண்ணதாசன் போட்டியிட்டு தோற்றார் தனது தோல்வியினால் மனம் உடைந்த நிலையில் இருந்தார் இன்னும் சொல்லனும் என்றால் மக்கள் மீது கோபம் இருந்தது. அதே நேரத்தில் அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியுற்றார்.
இருவரும் தனது சொந்த ஊரிலே தோற்றனர். .....
பலே பாண்டியா படத்தின் பாடலுக்காக படத்தின் இயக்குனர் பி ஆர் பந்தலு கவியரசு கண்ணதாசன் தேடி வந்தார் மக்களிடம் தனது கோபத்தை எப்படி காட்டுவது என்று காத்திருந்த கண்ணதாசனுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது
தான் எமுதிய ஒரு பாடல் பி ஆர் பந்துலுவிடம் கொடுத்தார். அந்த பாடல் பலே பாண்டியா படத்தில் இணைக்கப்பட்டது
யாரைக் எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல என்ற பாடல்தான் அது
இந்த பாடலை நன்றாக கவனித்தால் தெரியும் தனது தோல்விக்கு காரணம் என்னவென்று குறிப்பிட்டுள்ளார்,
அதே நேரத்தில் அறிஞர் அண்ணா தோல்வி கண்டு அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார் அண்ணாவை விட வாத்தியார்தான் அதிக வேதனை அடைந்தார். .
அண்ணாவின் மனதுக்கு ஆறுதல் கூறுவது போல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கூறினார்
தருமம் தலைக்காக்கும் படத்தில் வரும் ஒரு பாடலில் இரண்டு வரிகள் இனைத்து அண்ணாவுக்கு ஆறுதல் கூறுவது போல் எமுதிக்கொடுத்தார்.அந்த பாடல்தான்
மூடு பனி குளிருடுத்து முல்லை மலர் தேனடுத்து என்ற பாடலில் வரும் ஒரு வரி தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு
காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பது இல்லை
என்ற வரி அண்ணாவை வாத்தியார் சமாதானம் கூறுவது போல் அமைந்திருக்கும்
தனக்காக தான் எம் ஜி ஆர் இந்த வரி இனைத்து உள்ளார் என்று அண்ணா தன்னுடன் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். .
1964 ம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணா வாத்தியார் பற்றி இப்படி கூறியுள்ளார்.
பணம் இருப்பவர்கள் எல்லாரும் தர்மம் செய்யலாம் அதன் பெயர் தர்மம் அல்ல
யாருக்கு தர்மம் செய்தால் அதன் பயன் அடைவார்கள் என்பதை அறிந்து தர்மம் செய்யவேண்டும் அதுதான் உண்மையான தர்மம் தலைக்காக்கும். அதை எம் ஜி ஆர் ஒருவர் தான் செய்துக்கொண்டிருக்கிறார் .அவர் செய்யும் தர்மம் அவரை என்றைக்கும் காப்பாற்றும். .
தர்மம் தலைக்காக்கும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர்க்கு அந்த வார்த்தை பொருந்தவில்லை. .பாடல் எழுதியவர் கவியரசு கண்ணதாசனுக்கு பொருந்தவில்லை. .பாடல் பாடிய பின்னனி பாடகர் T M சௌந்தராஜன்க்கு மொருந்தவில்லை படத்தில் நடித்த கதாநாயகன் எம்ஜிஆர் ஒருவருக்குத்தான் அமைந்தது பொருந்தியது இது எல்லாருக்கும் அமையாது பொருந்தாது
அது உண்மையான தர்மம் அதனால்தான் அமைந்தது என்று புகழாரம் சூட்டினார்
தொடரும். ...தொடரும். ..தொடரும். ....... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 19
தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் திருடாதே நல்லவன் வாழ்வான் தர்மம் தலைக்காக்கும் நீதிக்குப்பின்பாசம்
பெற்றால் தான் பிள்ளையா நீதிக்கு தலை வணங்கு பல்லாண்டு வாழ்க
இன்று போல் என்றும் வாழ்க நல்லதை நாடு கேட்கும் படத்தின் பெயர் கூட பிறருக்கு புத்தி மதி கூறுவது போல் அமைந்திருக்கும் அதுதான் புரட்சித்தலைவரின் மிக பெரிய சமூக சிந்தனை ஆகும் அதன் படி வாழ்ந்து காட்டியவர் .. எல்லோரும் அனுபவத்தை கூறுவார்கள் அறிவுரை சொல்வார்கள்
ஆனால் அதன் படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் அதுதான் மற்றவர்களுக்கும் வாத்தியார்க்கு உள்ள வேற்றுமை ஆகும். .தர்மம் தலைக்காக்கும் என்று படத்தின் பெயர் வைத்தது பெரிய விஷயம் இல்லை. அது தான் வாத்தியார் புகழுக்கு இன்று வரை புகழ் சேர்த்துக்கொண்டிருக்கிறது.
படத்தில் ஏழு பாடல்கள் சூப்பர் ஹிட் நான்கு சண்டைக்காட்சிகள் மிரள வைக்கும்
திகில் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய மான பாடல்கள் இரண்டு ஒன்று தர்மம் தலைக்காக்கும் மற்றொன்று
ஒருவன் மனது ஒன்பதடா என்ற பாடல் இப்பாடலில் வரும் கருத்துக்கள் இனி எத்தனை தலைமுறை வந்தாலும் அவர்களுக்கு பொருந்தும். .
தர்மம் தலைக்காக்கும் என்ற பாடல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது...
ஒருவன் மனது ஒன்பதடா பாடல் பணக்கார வர்க்கத்தையும் படித்தவர்கள் வறட்டு கர்வத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார். .அதனாலே பாடலில் வரும் கடைசி இரண்டு வரிகள் நீக்கப்பட்டு இருக்கும். ..அப்படி நீக்கப்பட்ட வரிகள் இதோ
பட்டம் பதவி பெற்றவர்கள் மட்டும் பண்புயோடையர் ஆவாரா
பள்ளி படிப்பு இல்லாத மனிதர்கள் பகுத்தறிவு யின்றி போவாரா
இப்பாடல் வீடியோ ஆடியோ எதிலே கேட்டாலும் இவ்வரிகள் நீக்கப்பட்டு இருக்கும்
பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே பாமரமக்களுக்கு சாதகமாகவும்
பணக்காரர்களுக்கு மாதகமாவே அமையும். அவருடைய ஒவ்வொரு பாடலின் கருத்துக்கள் கேட்டால் நான் சொல்வது உண்மையா இல்லையா என்பது புரியும்
இப்படி புரட்சித்தலைவர் படத்தின் பெயர் பாடல் கதை கதாபாத்திரம் அனைத்தும் புரட்சிகரமான கருத்துக்களை கூறி இருப்பதால் தான் அவருக்கு
புரட்சித்தலைவர் புரட்சிக் நடிகர் என்ற பொருத்தமாக அமைந்தது. .
இது நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லாத ஆச்சரியம் அதிசயம் ஆகும்
எமது அடுத்த பதிவில் சின்னப்பர் தேவர் அடுத்த வெற்றி படமான நீதிக்குப்பின்பாசம்படத்தின் சாதனை வரலாறு தொடரும்
தொடரும் தொடரும் தொடரும்.... Thanks...