-
டியர் வினோத் சார் - உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை - எப்படிப்பட்ட ஆவணங்கள் , எவ்வளவு அருமையாக பதிவு செய்கின்றீர்கள் . உங்களை பெற MT திரி மட்டும் அதிர்ஷ்ட்டம் செய்யவில்லை - நாங்களும் தான் - இந்த திரிக்கு புதிய உற்சாகத்தை தந்து கொண்டு எங்களையும் பெருமை படுத்திகொண்டு இருகிண்டீர்கள் - தொடுருங்கள் உங்கள் இனிய பதிவுகளை !!
அன்புடன் ரவி
:):smokesmile:
-
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சினிமாவுக்கான விளம்பரமாக இருந்தது பத்தி*ரிகைகள் மட்டுமே. ஜனங்களும் பத்தி*ரிகைகளை விரும்பி வாங்கிப் படித்தனர். சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் ஆரம்பிக்காத அந்த காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் சினிமா பத்தி*ரிகைகளில் ஆர்வம் காட்டினர். 1967ல் வெளியான பொம்மை இதழுக்காக சிவா*ஜி கணேசனை ஜெயலலிதா பேட்டி கண்டார். பேட்டியில் சிக்கலான விஷயங்களில் ஷார்ப்பாக ஜெயலலிதா கேள்வி கேட்டிருப்பது பளிச்சென தெ*ரிகிறது.
ஜெயலலிதா - உங்க பெயருக்கு முன்னாலே சிவா*ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?
சிவாஜி - அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.
ஜெயலலிதா - எனக்குத் தெ*ரியாதே. அதனாலே...
சிவா*ஜி - அப்போ ச*ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம*ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா*ஜி நாடகம் நடந்தது. பெ*ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா*ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா*ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேருந்து சிவா*ஜி கணேசனாயிட்டேன்.
ஜெயலலிதா - லைலா - ம*ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?
சிவா*ஜி - காதலிச்சா அந்த மாதி*ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி*ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.
ஜெயலலிதா - அம்மாதி*ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?
சிவா*ஜி - நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.
ஜெயலலிதா - வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க?
சிவா*ஜி - தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ*ரிய தவறும்பேன்.
ஜெயலலிதா - நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறாள், அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்?
சிவா*ஜி - பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க?
ஜெயலலிதா - தமிழ்ப் படங்க இப்போ முன்னேறி இருப்பதா நினைக்கிறீங்களா? அல்லது தரம் குறைவாய் விட்டதாக எண்ணுறீங்களா?
சிவா*ஜி - எல்லாத்துறையிலும் நிச்சயமா முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதே சமயம் சில படங்கள் மக்களது ரசனையையும் குறைச்சிட்டும் போயிருக்கு. இந்த மாதி*ரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தைஞ்சு இருக்கும். ஆக, நாம் மேலே ஏறினால், இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கீழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா - எப்படி?
சிவா*ஜி - இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.
ஜெயலலிதா - தயா*ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.
சிவா*ஜி - ஜனங்களோட வீக்னஸை தயா*ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.
ஜெயலலிதா - பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவாங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா?
சிவா*ஜி - தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா*ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ*ரிஞ்சா, தயா*ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.
ஜெயலலிதா - இது ஒரு வியாபாரம் மாத*ரிதானே. அப்படி அவங்க பணம் பண்ணுவதில் என்ன தப்பு?
சிவா*ஜி - ஒத்துக்கறேன். இருந்தாலும் கொஞ்சம் நிதானமாகவும் இருக்கலாம் இல்லியா? அதைத்தான் சொல்றேன். அளவுக்கு மீறி எதுவும் போயிடக் கூடாது.
ஜெயலலிதா - இப்போ புதுசா ஒரு பிரச்சனை தலைதூக்கி இருக்கு. முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு. நீங்க என்ன நினைக்கறீங்க?
சிவா*ஜி - சே சே வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதைக் காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கற மாதி*ரி நடிக்கணும். மூடிக் காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக் கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா - ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்க முடியாததாக அமைஞ்சிடும். அம்மாதி*ரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
சிவா*ஜி - எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில் ஆசிய ஆப்பி*ரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்தப் படங்களின் *ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ ஒரு டெக்னீஷியன்னு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெ*ரியவங்க, உயரத்திலும் ஏழடி.
அங்கே பல பெ*ரிய நாடுகளிலேருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லாரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம், கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோது கூட அசையாமல் இருந்தவன். ஆனால் அன்னைக்கு கெய்ரோவில் நடந்த அந்தச் சம்பவம் என்னையே அசத்திவிட்டது. எழுந்து நின்ற நான் மயங்கியே விழுந்திருப்பேன். நல்லவேளை என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிக்கிட்டாங்க. இல்லாட்டா நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சிவசப்பட்டது இந்த ஒரு நாள்தான்.
ஜெயலலிதா - நீங்க நாடகங்களிலே நடிக்க வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவா*ஜி - அப்ப மட்டும் என்ன? இப்பவுந்தான். மெட்ராஸ் சிடியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்தி*ரி கூட ஒரு குப்பைப் படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
இது கொஞ்சம். இதுபோல் சுவாரஸியமான பல கேள்விகள். இன்றைக்கு இப்படியொரு அந்தரங்கமான உரையாடலை சினிமாவில் எதிர்பார்க்கவே முடியாது.
நன்றி - பொம்மை ஆண்டு மலர் 1967
-
NT rare photos - 1
-
NT rare photos - 2
-
NT rare photos - 3
-
NT rare photos - 4
-
நன்றி Goldstar சார் , நீங்களும், Vinod சாரும் இந்த திரியை பழைய வேகத்தில் எடுத்து செல்வதற்கு - இந்த நிலைமை நீடிக்க வேண்டும் - சோகத்தின் சாயல் முழுவதும் அகல வேண்டும் , இந்த புத்தாண்டில் நாம் புதிய சாதனைகள் நிகழ்த்தவேண்டும் - இதுதான் எங்கள் மனமார்ந்த ப்ராத்தனை.
அன்புடன் ரவி
:):smokesmile:
-
நடிப்புலக மாமேதையின் அற்புத படங்களை பதிவு செய்த gold star அவர்களுக்கும் பல விதமான செய்திகளை போட்டு எங்களை திக்கு முக்காட செய்த வினோத் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
-
சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் வெளிப்படையாகவே மோதல் இருந்தது என்றும் பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டார்கள் என்றும் இந்த வார குமுதம் ரிப்போர்டரில் படித்தேன். உண்மையா?
-
1968
BANGALORE
NT IN PARASAKTHI 2ND WEEK- INDIAN EXPRESS
http://i41.tinypic.com/1695czq.jpg