ஒய்.ஜி. விழா - 4
விழா உரைகள் (தொடர்ச்சி.....)
-------------------------------------------
(விழா உரைகளில், நமது நடிகர் திலகம் குறித்து கூறப்பட்ட செய்திகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன)
கலைஞானி கமலஹாசன் அவர்களின் சிறப்புரை:
"கலைஞர் அவர்களும், நடிகர் திலகம் அவர்களும் எத்தகையதொரு நட்பைப் பாராட்டினார்கள் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் என் பேரன்-பேத்திகளுக்கு பெருமையாகச் சொல்வேன். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், தான் எழுதிய வசனமொன்றை நடிகர் திலகம் பேச, அந்தத் திரைப்படத்தின் காட்சி ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீண்ட, நெடிய வசனம் நடிகர் திலகத்தால் ஒரே ஷாட்டில் பேசப்பட்டது. கலைஞர் அவர்கள் ஒளித்திரையில் ஓடிக் கொண்டிருந்த அத்திரைப்படக் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது கண்களில் நீர்த்துளிகள்! தான் எழுதிய வசனம் என்பதையே மறந்து ஒரு ரசிகனாக, நண்பனாக அவரது கண்கள் பனித்தன. அதனைப் பார்த்த என் கண்களிலும் ஈரக்கசிவுகள்.
எனக்கும், எனது ஆருயிர் நண்பன் ஒய்ஜிக்கும் அடிக்கடி சண்டை வரும், 'யார் நடிகர் திலகத்தின் பெரிய ரசிகன்' என்று. கடைசியில், நட்பு கருதி போனால் போகட்டும் என்று பொய்யாக, 'நீதான் பெரிய ரசிகன்' என்று நான் விட்டுக் கொடுத்து விடுவேன். அது எப்பொழுதுமே, நிஜமாகவே பொய்யாக விட்டுக் கொடுத்ததுதான்."
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.