கவியரசு கண்ணதாசனின் புகழ் பெற்ற பல பாடல்களில் 1972 ஆண்டு வந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு பாடல் .http://youtu.be/FS8I5TLV208
Printable View
கவியரசு கண்ணதாசனின் புகழ் பெற்ற பல பாடல்களில் 1972 ஆண்டு வந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு பாடல் .http://youtu.be/FS8I5TLV208
ADVT. PUBLISHED IN MAALAIMALAR, COIMBATORE EDITION 11.03.2013
http://i49.tinypic.com/14mwd92.jpg
http://www.youtube.com/watch?v=4Xvnq...ature=youtu.be
PARAKUM PAVAI
http://i45.tinypic.com/14l6igz.jpg
CONGRATS PROFRESSOR SIR 300...400.
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் விரைவில் கோவையில் வருகிறது என்ற விளம்பரம் மகிழ்ச்சி அளிக்கிறது .
நாடோடிமன்னன் -1958
55 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு
வருவது சாதனையாகும் .
மக்கள் திலகம் நடித்த 'என்கடமை ' இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
13.3.1964 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் படம் .
http://i48.tinypic.com/2is9r1g.jpg
இந்த மாதம் சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நடை பெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது .
திரை உலகில் 1936-1977 வரை 41 ஆண்டுகள் சாதனை படைத்த மக்கள் திலகம் பற்றிய எந்த குறிப்பும் செய்தியும் வரவில்லை .
உலக சினிமா நூற்றாண்டு வரலலற்றில் முக்கிய இடம் பிடித்தவர் மக்கள் திலகம் .
ஒரு நடிகராக - ஒரே மொழி பட கதாநாயகனாக - இந்தியாவின் மிக சிறந்த நடிகராக - ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக - ஒரு மாநிலத்தின் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக மனிதநேய பண்பாளர்களாக - கோடிக்கணக்கான ஏழைகளின் - ரசிகர்களின் -இதய தெய்வமாக வாழ்ந்த மக்கள் திலகம் சாதனை புரிந்த ஒரே நடிகர் .
இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதும் - மறைந்த பின் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதும் பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் .
திரை உலகைவிட்டு 36 ஆண்டுகளும் , மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் மக்கள் திலகத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தமிழ் நாட்டில் தொடர்ந்து படங்கள் ஓடிகொண்டிருப்பது சாதனை.
நூற்றாண்டு விழா நடத்தும் சம்பந்த பட்ட வர்கள் மக்கள் திலகத்தின் புகழினை மறக்காமல் பதிவு செய்வார்களா ?
என் கடமை படத்தில் இடம் பெற்ற அருமையான மக்கள் திலகத்தின் நடனத்துடன் பாடல் .http://youtu.be/aNaScr3eqVA
courtesy - net - kalapriya
என் பள்ளிப்பருவத்தில் நானும் ஒரு சினேகிதனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் பட ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வந்தோம். தினத்தந்தி பேப்பரில் வரும் விளம்பரங்கள்,பேசும்படம் இதழில் வரும் படங்கள், எல்லாவற்றையும் வெட்டி ஒரு அரைக்குயர் நோட்டில் ஒட்டுவது. இது எங்கள் படிப்பை முழுதாக விழுங்கியது என்றே சொல்லவேண்டும். இதை அவ்வப்போது பார்க்கிற பள்ளித் தோழர்களும் அவர்களுக்கு கிடைக்கிற அபூர்வப் படங்களைத் தருவார்கள்.அப்படிச் சேகரிக்கையில் பேசும்படம் இதழில் இருந்து ஸ்ரீதர் தயாரிக்கும் “அன்று சிந்திய ரத்தம்” படத்தின் ஒரு ஸ்டில் கிடைத்தது. முற்றிலும் வித்தியாசமான ஒரு மேக் அப்புடன் எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ ‘எழுச்சிஉரை (!) ஆற்றுவதுபோல கையை உயர்த்திக் கொண்டு நிற்பார். இது 1963-64 என்று நினைவு.. அது ஒரு பொக்கிஷம்.
தென்காசியில் ஒரு மாமா ஒருவர் இருந்தார்.அவரிடம் பழைய காலத்து ’பேசும்படம்’, இதழ்கள் இருக்கும். அவரிடம் பல அருமையான சினிமாப் புத்தக சேகரிப்புகள் இருந்தன. ’நாரதர்’ என்று ஒரு சினிமா பத்திரிக்கை.நாரதர் ஸ்ரீனிவாசராவ் என்பவர் நடத்தியது. அவர் விகடனின் சினிமா நிருபர் என்று நினைவு. அதிலிருந்து பிரிந்து வந்து இந்த இதழை நடத்தினார்.அவரிடம், ’பேசும்படம்’ போன்ற அமைப்பிலேயே ’குண்டூசி’, ’சினிமாக்கதிர்’, ’கலை’ போன்ற சினிமா பத்திரிக்கைகள் உண்டு. பேசும்படம் தான் நிறைய இருக்கும். ‘PICTURE POST’ என்று ஒரு ஆங்கில இதழ் கூட ஒன்று வைத்திருப்பார். அதுவும் பேசும்படம் வெளியீடு என்று நினைவு.பேசும்படம் வெளியிட்ட ஒரு மலர் பெரிய சைசில் உள்ளது ஒன்று அவரிடம் உண்டு. அதன் பல பக்கங்கள் இருக்காது.
எம்.ஜி.ஆர். பம்பை முடி, ஓவர்கோட் அணிந்து ஒரு படம் “மலையாளம் தந்த மாணிக்கம்” என்ற தலைக்குறிப்புடன் இருக்கும். எல்லா பிரபலங்களுடைய படங்களும் இருக்கும். மற்றவர்களுக்கு என்ன ‘டைட்டில்’ போட்டிருந்தது நினைவில்லை.அதை எவ்வளவு கேட்டும் தர மறுத்துவிட்டார்.
அவர் கோ ஆப்டெக்ஸில் வேலை பார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு வேலை, அவரது மாடியறையில் ஒரு டிரங்குப்பெட்டியைத் திறந்து பழைய இதழ்களைப் பார்ப்பது. அப்படிப்பார்க்கும்போது மட்டும் நம்மையும் அனுமதிப்பார்.அதற்கே அவரது அப்பா ஏசுவார், ”ஆரம்பிச்சுட்டானா சின்னப்புள்ளைகளை வச்சுக்கிட்டு கூத்தடிக்க “ என்று. அவ்வப்போது அவர் வீட்டு அத்தை மரப்படிகளில் பாதிக்கு ஏறி மாடியை எட்டிப் பார்ப்பதும் வழக்கம். அங்கே ஒரு ’கேம்ப் கட்டில்’ உண்டு. அதில் அவர் அருகே உட்கார்ந்து கொண்டு, நானும் இன்னொரு அத்தை மகனும் பார்ப்போம். அவர் காண்பிக்கும் இதழ்களைத்தான் பார்க்க முடியும். எட்டிப்பார்க்கும் அத்தை ”ஏம்ல தரையில உக்காந்து பார்த்தா ஆகாதா” என்று சொல்லிவிட்டு தலை மறைவாள். மாமாவுக்கு பல் நீளம். காதில் ஒரு பஞ்சு வைத்திருப்பார்.காணாததற்கு ஒரு இரண்டுங்கெட்டான் வாசனை வீசுகிற எண்ணையொன்று தேய்த்துக் குளித்திருப்பார்.அவரிடம் ஒரு முறை ஆல்பத்தைக் காண்பித்து படங்கள் கேட்டேன். ஒரே ஒரு விளம்பரப்படம் தந்தார். ’மாலையிட்டமங்கை’யைத் தொடர்ந்து கண்ணதாசன் புரொடக்*ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஜி.ஆர் நடிக்கும் “ஊமையன் கோட்டை” . ஒரு கோட்டையை நோக்கி குதிரை வீரன் விரைவது போல வரையப்பட்ட படம். ஏதோ அம்புலிமாமா படக்கதையில் வருகிற மாதிரி இருந்தது. அதை மட்டும் தந்தார். ’வேலுத்தேவன்’ என்று ஒரு பட விளம்பரம். எம்.ஜி.ஆர் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி உடையில் கையில் ஒரு கைத்தடி வைத்துக் கொண்டு நிற்பார்.இந்தப் பாடல்க் காட்சி ”தட்டுங்கள் திறக்கப்படும்/ கேளுங்கள் கொடுக்கப்படும்/ கொட்டுங்கள் அளக்கப் படும்/ கூறுங்கள் திருத்தப்படும்..” என்று தற்போது யூ டியூபில் காணக்கிடைக்கிறது.
மதுரை வீரன் 1956-ல் வெளிவந்து பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. 33 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்.
மலைக்கள்ளன் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருந்தது. மலைக்கள்ளன், 1954 –ல் தொடங்கிய மத்திய அரசின் தேசீய சினிமா விருது திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஒருவேளை, அன்று அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞரின் கதை என்பதனால்க் கூட இருக்கலாம். இந்தப் பரிசு பற்றி ஏனோ யாராலும் குறிப்பிடப்படுவதில்லை.
. கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மதுரை வீரன் வெற்றியைத் தொடர்ந்து லேனாச் செட்டியார் ராஜா தேசிங்கு படம் எடுத்தார். படத்தை முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார் என்பார்கள். படமும் வருகிறது வருகிறது என்று அவ்வப்போது விளம்பரங்கள் வருமே தவிர படம் நான்கு வருடம் கழித்து வந்தது. திருநெல்வேலி ரத்னா டக்கீஸில் இடைவேளையின் போது, பலத்த விசில் கொண்டாட்டங்களுக்கு நடுவே ”விரைவில் வருகிறது ”ராஜா தேசிங்கு” என்ற ஸ்லைடு காண்பிப்பார்கள்.
1958 –ல் ’நாடோடிமன்னன்’ இமாலய வெற்றிக்குப் பின் அதன் கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்தவர், கதை, வசனம் எழுதிய ‘கலையரசி’. ஐந்து வருட இடைவெளிக்குப் பின் வந்து தோல்வி கண்டது. தமிழின் முதல் சயின்ஸ் பிக்*ஷன் படம் இது. சின்ன அண்ணாமலை ஒரு காங்கிரஸ்காரர். அவர் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தை “’பாக்கெட்மார்’(தேவானந்த், கீதாபலி நடித்தது) இந்திப்படத்தைத் தழுவி எடுத்தார்.ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அப்படியே பல இடங்களில் இருக்கும். அது பாதியில் நின்றது.அதை ஏ.எல்.சீனிவாசன் தொடர்ந்து எடுத்தார், மிகப்பெரிய வெற்றி பெற்றது.
’ஆனந்த ஜோதி’ எம்.ஜி.ஆர் தேவிகா நடித்து வெளிவந்த ஒரே படம் அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ”உடன்பிறப்பு” படம் . சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பான சிலம்புக்குகை, டி.என்.ஆர் ப்ரொடக்*ஷன்ஸ் ராணி லலிதாங்கி(இது சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்தது.) கே.எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘பிரம்மாண்ட தயாரிப்பு’ என்று அறிவிக்கப்பட்ட “தங்கத்திலே வைரம்”. ரவீந்தர் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் “இணைந்த கைகள்” என்ற சரித்திரப்படம். ’பொன்னியின் செல்வன்’ படத்தையும் பலமுறை அறிவித்து, அவர் தயாரிக்க முயற்சித்து நடை பெறவே இல்லை. சதானந்தவதி பிக்சர்ஸ் ’ரிக்*ஷா ரெங்கன்’ என்று ஒரு படம். தேவர் பிலிம்ஸ் மறுபிறவி என்று ஒருபடம்.தேவர் படங்களின் இடைவேளையின்போது எமது அடுத்த தயாரிப்பு என்று ஒன்றைப் போடுவார்கள்.
எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் “ வெங்கிமலை ரங்கன்” என்று பலத்த கைதட்டலுக்கிடையே போடுவார்கள்.அப்படியெல்லாம் ஒரு படம் வரவே இல்லை. தாயைக் காத்த தனயன் படத்தின் இடைவேளை விட்டவுடன் தொடந்து அரங்கில் வெளிச்சம் பாய, மங்கலான திரையில் ஓடும், எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடிக்கும் ’தாய்க்குத் தலைமகன்’ என்று. ஆனால் அடுத்து வந்தது ‘குடும்பத்தலைவன்”. தாய்க்குத்தலைமகன் அதற்கு ஐந்து வருடம் கழித்து ஜெயலலிதா நடிக்க 1967-ல் வந்தது.
படகோட்டி படத்திற்கு அப்புறம் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் ‘பரமபிதா’ என்று படகோட்டி பாட்டுப் புத்தகத்தில் மேக் அப் டெஸ்ட் படங்கள் கூட அச்சிட்டிருந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ’ஐ கன்ஃபெஸ்’( I, CONFESS ) படத்தின் தழுவல் என்று பேச்செல்லாம் அடிபட்டது. ம்ஹூம் வரவில்லை.(அகாதா கிறிஸ்டி எழுதிய ’மர்டர் ஷி ஸெட்’ (“MURDER, SHE SAID”) என்ற படத்தின் தழுவல்தான் எம்.ஜி.ஆரின் “என் கடமை”)
வேலூர் சக்தி திரை அரங்கத்தில் மக்கள்திலகத்தின் வண்ண காவியம் மாட்டுக்கார வேலன்
http://i48.tinypic.com/2v0fyfn.jpg
10-03-2013 அன்று சென்னை சென்று திரும்பிய பொழுது மதுரவாயல் பகுதியில் கிளிக் செய்தது மிகவும் அற்புதமான ஒரு காட்சி
http://i47.tinypic.com/24o1q0y.jpg
சென்னை திருவல்லிக்கேணி ஆர்த்தி ஹோட்டலில் சாப்பிடும் பொழுது கண்ணில் பட்டது
http://i50.tinypic.com/iyosud.jpg
10-03-2013 அன்று அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு மக்கள்திலகத்தின் சமாதியில் மலர்மாலை வைத்து வணங்கிய பொழுது
http://i48.tinypic.com/34ns36f.jpg
அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கத்தின் தலைவர் திரு மக்கள்திலகத்தின் அண்ணன் பேரன்
M .G .C .பிரதீப்பாலு
அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது
http://i50.tinypic.com/fuqo8m.jpg
புதுச்சேரி மக்களுக்கு ஒரு இனிய செய்தி .நம்மை போன்ற ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக புதுச்சேரியில் நமது தெய்வத்தின் வெள்ளிவிழா காவியமான எங்க வீட்டுபிள்ளை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் 15.03.2013 முதல் திரையிடப்பட உள்ளது..புதுச்சேரியில் 21 தியேட்டர்கள் இருந்த இடத்தில் தற்போது 5 மட்டுமே உள்ளதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தலைவரின் திரைப்படமே வெளிவராமல் இப்போதுதான் திரையிடப்பட்டிருக்கிறது..அதனால் இந்த திரைப்பட வெளியீட்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்..மற்றவற்றை நம் தெய்வம் பார்த்துக் கொள்வார்...
http://i49.tinypic.com/mtpkif.jpg
Rare Ph.
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது
தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல்
எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று
உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம்.
உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு
அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி
வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன
செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன்
செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட
வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள்
எனக்கு டெலிபோன் செய்தார். “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக
எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை
நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி
கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத்
திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட
முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த
மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா
விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து
வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி
பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால்
நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி
மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில்
எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற
விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத்
தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு
விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான்
அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக்
கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை
வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு
உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர்
பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப்
பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர,
தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக்
கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும்,
திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர்.
விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக
அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற,
முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே
திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது
மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக
நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும்
ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே
தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே
கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத்
தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து
கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில்
ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச்
சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது
உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று
நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச்
சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி
பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே
முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை
அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர்,
ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின்
நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது
இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக,
திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப்
போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு
இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து
கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக
விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக
விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது
என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள்
அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம
வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு
எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில்
கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு
இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில்
கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும்
எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத்
தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால்
அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக
இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது
புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத்
தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர்
செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய
ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச்
சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி
ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக்
குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை
நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த
திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு
பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும்
அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே
உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும்.
யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம்
பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய
சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து
ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று
செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’
இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று,
ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப்
போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று
தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக்
கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி
உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து
காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு
வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய
இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர்
கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த
பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய்
கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)
Golden words
.........................அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக
இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
..................சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
................................... எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
............................எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய
இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர்
கருதுவார்.
படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
சந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்.
சேகர்: இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத்துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது.
சேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு!
சந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்!
சேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதை விடப் பிரமாதம்! பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.
சந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், ‘நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா’ என்று பெற்றோரின் படத்துக்கு முன் நின்று சைகையால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.
சேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மாவைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்ததுதான், அவ்வளவு சரியாக இல்லை!
சந்தர்: சரோஜா தேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு, தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு, காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு, அந்த அருமையான கலருக்கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
சேகர்: வின்சென்ட் – சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
சந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா? தங்கவேலு – நாகேஷ் காமெடி ஜோடி!
சேகர்: ரொம்ப நாளைக்கப்புறம் தங்கவேலுவைப் பார்க்கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்…
சந்தர்: அது தங்கவேலு முத்திரை! நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்… சே… நடிச்சிருக்கார்..!
சேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓர் இடம் உண்டு.
1965-66 களில் எங்க வீட்டு பிள்ளை திரையுலகை கலக்கி பேயோட்டம் ஓடிய படம். புதுவை அஜந்தா திரை அரங்கில் 100 நாள் ஓடி 100வது நாளைக்கு மக்கள் திலகம் மட்டும் ஏனைய கலைஞர்களும்
மேடையில் தோன்றினார்கள்.
அரங்கம் நிறைந்து பின் தெருவெல்லாம் திருவிழா கூட்டம் . அப்போது புதுவை இன்று போல் வளர்ச்சி அடையவில்லை. அஜந்தா திரை அரங்கிற்கும் முத்தியால்பேட்டை ஊருக்கும் இடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே இருக்காது. மக்கள் கூட்டம் முத்தியால்பேட்டை மணி கூண்டிலிருந்து காந்தி ரோடு பெருமாள் கோவில் வரை நீண்டிருந்தது .
திரை அரங்கினில் உள்ளேதான் கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் கூடியுள்ள கூட்ட்டத்தை கண்ட காவல் துறையினர் உடனே வெளியே
ஏற்பாடு செய்தனர்
எனது அப்பா ராதா அங்கு மேலாளராக பனி புரிந்ததால் நிகழ்ச்சி அனைத்தும் அவர் பொறுப்பிலே . அதனால் எனக்கும் அரங்கினில் செல்ல சிறப்பு அனுமதி கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் திரை அரங்கினின் மேல்பகுதியில்
கலைஞாகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு விருந்து. mgr sarojadevi
nagesh matrum சில பேருடனும் நானும் உட்கார்ந்து சாப்பிட்டேன். அன்று
என் சக மாணவர்கள் மத்தியில் எனது மதிப்பு ஜிவ்வென்று ஏறியது .
இருந்தாலும் அன்றைக்கு எனக்கு ஒரு அலட்சிய மனோபாவமே இருந்தது.
ஏனென்றால் அப்போதே நான் நடிகர் திலகத்தின் தீவிர விசிறி. மக்கள் திலகத்திற்கு அளிக்கப்படும் அந்த மாபெரும் மரியாதைகள் அந்த வயதில்
நடிகர் திலகத்திற்கு எதிரானது போன்று எனக்கு தோன்றியது.
ஒருபக்கம் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் நான் மக்கள் திலகத்துடன் இருக்கிறேன் என்ற பெருமையாய் இருந்தாலும் ஒரு சிவாஜி ரசிகன் அப்படி
அங்கு நிற்கலாமா என்ற குற்ற உணர்சியுடன் நின்றேன்.
அதை இப்போது நினைத்தாலும் அவமானமாக இருக்கிறது. எப்பேர்பட்ட மனிதர் அவர். ஒரு முறை வெளிநாட்டினர் மக்கள் திலகத்தை சந்தித்து
தமிழ்படம் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர் .
எல்லோரும்ம் அவர் படத்தைதான் போடுவார் என்று நினைத்தனர். மாறாக
அவர்களுக்கு தில்லான மோகனம்பா ள் படத்தை திரையிட்டு காண்பித்தார்.
அதோடு மட்டுமில்லாமல் நம்முடைய தமிழனின் திறமையை அறிய
தம்பி சிவாஜி யின் படம்தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார்
இன்றளவும் நான் சிவாஜியின் தீவிர விசிறியாய் இருந்தாலும் மக்கள் திலகம் என் இதயத்தின் ஓரிடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். .
courtesy- simmakuralon
---
300 பதிவுகளை கடந்தமைக்காக, வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி !
எல்லாப் புகழும் எனது குலதெய்வம் எம் ஜி ஆர். அவர்களுக்கே.
http://i50.tinypic.com/k3ribo.jpg
அன்பன் : சௌ . செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரைப்பட வரலாற்றின் நூற்றாண்டு விழா. புரட்சித்தலைவரின் பெயரை சொல்லாமல் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. தமிழனின் புகழை தன் படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் தரணி எங்கும் தழைக்க வைத்த தலைவனின் சுவடு இல்லாமல் ஒரு விழா.. உலகத்தமிழர்களுக்கு இதை விட துயர செய்தி ஏதாவது இருக்க முடியுமா.. சினிமா வரலாற்றிலேயே நடிகர் என்ற தொழிலையே குறைவாக எடைபோட்டபோது, அந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர்..இவருக்கு பிறகுதான் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் 1981ம் ஆண்டு பதவி ஏற்றார். சிறந்த நடிப்பிற்காக பாரத் விருதை பெற்றது மட்டுமல்லாது பாரத தேசத்தின் பல தலைவர்களால் போற்றப்பட்டு பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்திற்கே பெருமை சேர்த்தவர்..இந்தியாவின் இரும்பு மங்கை என்று போற்றப்பட்ட அன்னை இந்திராவின் அன்பிற்கு பாத்திரமான ஒரே ஒப்பற்ற தலைவர் புரட்சிதலைவர். நடிகராய் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் மக்களுக்காக..ஏன் இந்தியாவிற்காக செலவிட்டார்.எத்தனை முறை யுத்த நிதிக்காக நிதியளித்தார்..அப்படி புகழ்மிக்க தலைவராக இன்றும் விளங்கும் எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் ஒரு பங்கில்லை. எல்லாவற்றிற்கும் மேலான விஷயம் ஒன்று இருக்கிறாது. மக்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது இந்த உலகத்திலே அதிக கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் இடம்பெற்ற, பேசப் படுகிற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான்..இது ஒரு பெரிய கின்னஸ் சாதனைஆகும்..இந்த சாதனையை கின்னசில் இடம்பெற செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை எல்லோரும் ரசிக்கும்படி செய்தவர். அவர் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத ஒரு இயற்கை நடிப்பாகும்..ஆம். இயற்கை நடிப்பால் எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து இன்றும் இதய தெய்வமாக வாழ்ந்து வருபவர்..மலைக்கள்ளனில் அவரது பண்பட்ட மற்றும் மாறுபட்ட நடிப்பால் அப்படம் ஜனாதிபதியின் தங்கபதக்கம் பெற்றது..அப்படிப்பட்ட ஒரு ஒப்பில்லா நடிகரை பாராட்ட இந்த விழாவில் வார்த்தை இல்லாதபோது இந்த விழா நடக்கவும் வேண்டுமா என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கும்..எனவே மேற்கூறிய கருத்துகளை நூற்றாண்டு விழா நடத்துவோரிடம் நடிகர் சங்கமோ, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ கொண்ட செல்ல வேண்டும் என்பதுதான் என்போன்ற தலைவரின் தொண்டனின் எண்ணமாகும்.
கலியபெருமாள் சார்
மக்கள் திலகம் பற்றிய உங்களின் விரிவான நூற்றாண்டு விழா சாதனை குறிப்புக்கள் மிகவும் அருமை .
அனைத்துலக எம்ஜியார் மன்ற அமைப்பினர் . மற்றும் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் , நடிகர் சங்கம் , என்று எல்லா தரப்பு நிர்வாகிகள் இது வரை எந்த வித முயற்சி எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம் .
நூற்றாண்டு விழா -நிகழ்ச்சியில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் சாதனைகள் இடம் பெறவில்லை என்றால் உண்மையிலே அது நூற்றாண்டு விழா இல்லை .
நாம் எல்லோரும் ஒன்று பட்டு உரிமைக்குரல் எழுப்புவோம் .
செல்வகுமார் சார்,
300 மகத்தான பதிவுகள். அதிலும் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் பற்றிய குறிப்புகள் கதைச்சுருக்கம் என்று மிக அரிதான செய்திகளைத் தாங்கிய தங்களது அபாரமான பதிவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மென்மேலும் தங்களால் இத்திரி ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
ஜெய்சங்கர், வள்ளிநாயகம், கொளத்தூர்.
https://www.youtube.com/watch?v=-3dY16nwJzA
PARAKUM PAVAI - 1
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
Congrats Selvakumar Sir on completing 300 posts.
இனிய நண்பர் ஜெய் சார்
உங்களின் பதிவு ஒவ்வொரு மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளத்தில் இருக்கும் ஏக்கத்தின் பிரதிபலிப்பாகும் .கடமை செய்யவேண்டிய வர்கள் அமைதி காத்தால் என்ன செய்ய முடியும் .
மக்கள் திலகத்தின் புகழை இருட்டடிப்பு செய்ய ஆளும் கட்சியின் தலைமையும் , கட்சி நிர்வாகிகளும் ,பெயரளவில் செயல் படும் மன்ற நிர்வாகமும் உள்ளபோது நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது .
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல்கள் மட்டும் இவர்களுக்கு தேவை .
மக்கள் திலகத்தின் பெயரால் முகவரி பெற்றவர்கள் -இன்று அவரையே மறைக்க - மறக்க துணிந்துவிட்ட இவர்களின் செயல் களுக்கு காலம் நிச்சயம் உணர்த்தும் .
புதுவை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் எங்க வீட்டு பிள்ளை 15-3-2013
வெற்றி பெற வாழ்த்துக்கள் .
காலத்தால் அழியாத வெற்றி காவியம்
உலக சினிமா வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் காவியம்
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பு கொண்ட படம்
வசூலில் புயலை கிளப்பி சாதனை புரிந்த படம்
1931-1977 வரை வந்த தென்னிந்திய படங்களில் அதிக அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம்
நான் ஆணையிட்டால் - பாடல் 48 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்கப்படும் பாடல்
நான் ஆணையிட்டால் - பாடலுக்கேற்ப நிஜ வாழ்வில் ஆணையிட்டு 10 ஆண்டுகள் முதல்வராக வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்கு மூல காரணமான பாடல்
உலகமெங்கும் வாழும் கோடி க்கணக்கான ரசிகர்கள் சொல்லும் ஒரே வார்த்தை - மக்கள் திலகம் - அவர்
எங்க வீட்டு பிள்ளை .
http://i50.tinypic.com/f3g8wl.jpg
எங்கவீட்டு பிள்ளை நம்மையெல்லாம் பார்த்து பாடிய பாடல் - நான் உங்கள் வீட்டு பிள்ளை . இது ஊரறிந்த உண்மை .
1972ல் - புரட்சி நடிகர் - மக்களின் அரவணைப்பால் புரட்சி தலைவரானார் .
மக்கள் தந்த முதல் பரிசு - திண்டுக்கல் .-1973
மக்கள் தந்த மாபெரும் பரிசு - தமிழ் நாடு -1977-1987.
இந்திய அரசு தந்த பரிசு - பாரத் பட்டம் -1972
இந்திய அரசு தந்த மற்றுமொரு மாபெரும் பரிசு - பாரத ரத்னா 1988
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தினமும் பேசும் பொது உச்சரிக்கும் வார்த்தைகளில் இடம் பெறும் ஆறு வார்த்தைகளில் ஒன்று எம்ஜியார் .
இத்தனை புகழுக்கு உரியவரான மக்கள் திலகம் மீண்டும் புதுவை நகருக்கு 15-3-2013 முதல் எங்க வீட்டு பிள்ளையாய் வரும் அவரை வரவேற்பதில் மக்கள் திலகம் திரியின் சார்பாக பெருமை படுகிறோம் .
http://i47.tinypic.com/2irvi9i.jpg
கோவை நகரில் நாடோடி மன்னன்
1958 ஆண்டில் இந்திய சினிமாவில் புரட்சி ஏற்படுத்திய படம்
1956 மதுரை வீரன் இமாலய வெற்றிக்கு பின் வந்த காவியம்
வசூலில் வரலாறு கண்ட படம்
வள்ளலை நாடோடி மன்னனாக உயர்த்திய படம்
ஒரு அரசாங்கமும் - கட்சி இயக்கமும் செய்ய வேண்டிய சமூக மாற்றத்தை இந்த ஒரே படம் மூலம் செய்து காட்டி புரட்சி உண்டாக்கிய படம் .
கதை - நடிப்பு - வசனம் - பாடல்கள் - இயக்கம் என்று எல்லா துறைகளிலும் வெற்றி கண்ட படம் .
http://i50.tinypic.com/5p3h2q.jpg
55 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் படம் .
சந்திரன் - சூரியன் - எம்ஜியார் - மூன்று பெயர்களும் சுழன்று கொண்டே இருக்கும் .