‘இசையரசி’ பி. சுசீலா அவர்கள், தனது இனிமையான குரலால், தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்
. சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று
விளங்கும் பி. சுசீலா அவர்களின் 79 வது பிறந்தநாள் இன்று !
## காலத்தால் அழியாத ' கவிக் குயில் '
முழு நலத்துடன் வாழிய பல்லாண்டு !
https://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc