Happy Independence Day ! Have fun with fireworks (where permitted) :)
Printable View
Happy Independence Day ! Have fun with fireworks (where permitted) :)
ஒருவழியா மண்டை காய்ஞ்சி கண்டுபிடிச்சேன். நம்ம கன்னக்குழி ஸ்ரீப்ரியா, ராங் நெம்பர் விஜயா என்று ரெண்டு 'யா' அழகிகளும் ஏத்தம் இறைக்க ராஜாவின் அற்புதமான மெட்டு. ஜானகி மற்றும் இன்னொருவர் குரல்களில். ஜானகி இப்பாடலுக்கு பாந்தமாக பொருந்துவார். ஸ்ரீப்ரியாவுக்கும்தான். ஆனால் அழகில் விஜயா ஒருபடி மேலே போவார். ஏற்றத்திலேயும்தான்.:) ப்ரியா கவலை நீர்க் கழியை என்னமாய் உலக்கை இறக்குவது போல இறங்குகிறார்! வாயசைப்பும் கரெக்ட். குறிப்பாக அந்த 'ஹோய்'.
ஒருபொடியாய் ஒண்ணு ஓடிவாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி
ஏத்தம் இறைச்சி காத்துக் கிடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் நின்னு
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வராதோ.... ஹோய் என்னைத் தேடி
காவலர்கள் துரத்த, ரஜினி தப்பித்து ஓடிவர, ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் பிரியா பாடலின் இடையே வரப்பில் ஓடிவரும் ரஜனியைப் பார்த்து விட்டு 'என் சாமியும் வந்தாச்சு என்னைத் தேடி' என்று பாடல் வரியை மாற்றுவதும் ஜோர்.
'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' பெண்கள் கோரஸ் வாவ். ராஜா the கிரேட்.
பைரவி பட டைட்டிலில் பின்னணி டி.எம்.சௌந்தரராஜன், ஜானகி என்று இருவர் பெயர்கள் மட்டுமே காட்டுவார்கள்.
ஆனால் மேற்சொன்ன பாடலில் ஜானகியுடன் சேர்ந்து ஒய்.விஜயாவிற்காகப் பாடும் அந்த மாயக் குரல் மயக்குகிறது.
'பையன் பொறந்தா பொங்கலும் உண்டு மங்களம் உண்டு
கொத்து மொழக்கு (சரியா? வெத்தலத் தட்டு ஊர்வலம் உண்டு'
என்று தனியாகத் தெரியும் அந்த அல்வாக் குரல் யாருடையது? சசிரேகா?... டைட்டிலில் பெயர் போட வில்லையே? ஒய்? ராகவேந்திரன் சார், மதுண்ணா ப்ளீஸ்.
ரகளை பாட்டு.
https://youtu.be/HEt78wgK-1E
From Chandralekha (1948)
baalan karuNai...............
http://www.youtube.com/watch?v=yM5DDO0eK2c
Take Diversion!! Beach Musics!!
Ocean Drownees and Beach Saviors!!
கடல் ஜல்லிகள் ....காதல் பல்லிகள்!!
கடலலை இரைச்சலில் பயமுறுத்தும் பின்னணி இசைக்கோர்ப்புக்கள்!
Quote:
திரைக்கதை வாழ்க்கை சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் முக்கியமானது வெறுப்பின் உச்சத்தில் விரக்தி மேலிட கதாநாயகி கடலில் மூழ்கப் போவதாய் ஜல்லியடிப்பதும் கதாநாயகர் பதறிப்போய் உதறலெடுத்து நாயகியைக் காப்பாற்ற கடலுக்குள் ஓடுவதும்!! மேலைப்படங்களும்விதிவிலக்கல்ல!!
https://www.youtube.com/watch?v=q7v9ClAH1LI
https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok
https://www.youtube.com/watch?v=p1Kjr7Rqltg
Take Diversion!
கிறுகிறுக்க வைக்கும் தமிழ்த்திரை கிளைமாக்ஸ் ஆன்டிக்ளைமாக்ஸ் காட்சிகள்!
பகுதி 1 ....டிரைவர்....இன்னும் கொஞ்சம் வேகமாய் போங்களேன் பிளீஸ்.....சீன்கள்!
Quote:
இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......
என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!
இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!
சுமைதாங்கியும் வசந்தமாளிகையும் கொஞ்சம் விதிவிலக்கே!
https://www.youtube.com/watch?v=518A...2n6gDQPWfhgoCg
https://www.youtube.com/watch?v=iOPxomAm8q4
Take Diversion!
Part 3 : Hero need not always win!
A Hero...the bread winner for his family need not always be a fight winner....sometimes he also succumbs to circumstantial sabotages by the vilain group or his sidekicks...easily!
https://www.youtube.com/watch?v=JSKf...igIVA&index=19
https://www.youtube.com/watch?v=5Yj102jIwHQ
//இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......
என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!
இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!//
செந்தில் சார்.
சபாஷ். சிரித்து மாளவில்லை.:) நீங்கள் அதற்குள் கிளைமாக்ஸுக்கு தாவி விட்டீர்கள். அவ்வளவு ஏன்? பட ஆரம்பத்திலேயே டிரைவரை 'வேகமாகப் போ போ' என்று டார்ச்சரடிக்கும் நமது புன்னகை அரசி 'ஊட்டி வரை உறவி'ல் உண்டே. விஜயலஷ்மியை காரில் அடித்துப் போட்டுவிட்டு போனதும் நமது தலைவர் ஓடி வந்து உதவி செய்து காரில் அடித்துப் போட்டுப் போனவரை சாடுவாரே ஒரு சாடு. 'சண்டாள பயலுக'. (அதெல்லாம் தலைவர்தான்)
Take Diversion 5
Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....
Quote:
குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
குய்யோ முறையோ கீதகூவல்கள் !
சேவல் 2 கூவல் 1
பிரச்சினை என்ற வெள்ளி முளைக்கும்போது பேச்சுலர் சேவல்கள் பேச்சிலராகி குய்யோமுறையோ என்று கூவிகூவி ஊரைக்கூட்டுமாம்!
கிடைத்தற்கரிய பிரம்மச்சாரி வாழ்க்கைப் பாதையில் நதிமூலம் ரிஷிமூலம் தெரியாத குழந்தை இடறினால் ...... இப்படித்தானே கூவ முடியும் !!
https://www.youtube.com/watch?v=UlWMzNfdliY
சேவல் 1 கூவல் 2
ஜோடிக்கோழி த்ராட்டிலில் விடும்போது துன்பமழையில் நனையும் சேவல் இப்படித்தானே கேவிக்கேவிக் கூவும்!
https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg
கார்மேகம் கண்டகவும் நர்த்தன மயிலாள் !
தோகை விரித்தாடும் மயிலின் ஆனந்த நடனம் நமது நாடி நரம்புகளை சுண்டி மகிழ்வலைகளால் இதயத்தை சுரண்டிவிடும் !
கார்மேகமாக நடிகர்திலகம் குடைவிரிக்கும்போது நர்த்தனமயில்களும் தோகை விரிப்பது இயல்பே !
https://www.youtube.com/watch?v=ZthbaddX8do
https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk
From Mallika(1957)
mangamal vaLarum singara natanam..........
http://www.youtube.com/watch?v=Ee3CK-dBfD8
From Payal(1957), HIndi remake of Mallika
Chali radhika........
http://www.youtube.com/watch?v=CT51AA1CRyI
http://llerrah.com/images6/happyanniversarytop.jpg
இன்று மணநாள் கொண்டாடும் நமது இனிய மது தம்பதியருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப நீடுழி வாழ்க.
https://www.youtube.com/watch?v=Rmhx_FiOMfQ
Happy Anniversary Madhuji!
Fill up mirth and joy.....
https://www.youtube.com/watch?v=tL1vfSBN1a4
Happy Anniversary madhu ! :)
From GG's Treasure Island with Love!
GG....The Prisoner of 'ngaaa'....! ங்கா....
மனம் மகிழ்ந்த மழலைகள்
குழந்தைகள் குடியரசு ,,,,முடியரசரும் அன்புச்சங்கிலி அடிமை மன்னரே!
Quote:
காதலில் முடிசூடா சக்கரவர்த்தியாக வலம் வாந்தாலும் குழந்தைகள் சாம்ராஜ்ஜியத்தில் ஜெமினி கணேசன் அன்புச்சங்கிலி பிணைக்கப்பட்ட ஆயுள் அடிமை மன்னராகவே அன்பை வெளிப்படுத்தினார்
பால்வடியும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் நான் கிடந்தேன்!
ஈரேழு மொழிகளிலும் என்ன மொழி கள்ளமற்ற பிள்ளை மொழி !?
காதலில் கன்னியரை விலங்கிட்ட முடிச்சக்கரவர்த்தி மழலையிடம் மண்டியிட்டு அன்புச்சங்கிலி அடிமையானதில் வியப்பென்ன ?!
https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU
கண்ணசைவில் காதலியரை கவிழ்த்திட்ட காதலின் மாமன்னன் பிஞ்சுக்குழந்தையின் கால்விரல்களில் கவிழ்ந்து முத்தமிடும் அடிமைமன்னன் ஆகிவிட்டாரே !
https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo
From kubera kuchela (1943)
aaNdaruL jagadamba..........
http://www.youtube.com/watch?v=2w7iocf7Fsw
ராகவ்ஜி, சி.செ.ஜி, வாத்தியாரையா...
அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் !!
madhunna happy anniversary
From Akbar (1961), Tamil dubbed version of Mughal E Azam
undhan sabaiyil endhan vidhiyai.......
http://www.youtube.com/watch?v=gctkrVBkpKQ
From the Hindi original
teri mehfil mein kismat.....
http://www.youtube.com/watch?v=DadAS_q63Zk
Thank you Rajesh.. இன்று... இப்போது... சிக்காவை நேரில் பார்த்து பிரம்ம்மித்து போனேன். மிஸ்டர் மஸ்கட் .. அவர் ஒரு தங்க பிஸ்கட்.
சும்மா ரொம்ப நாள் பழகியவர் போல ஜாலியாக பேசி பழகியவர் உடன் கிளம்ப வேண்டிய சூழ் நிலை. மீண்டும் சந்திப்போம்
சிக்கா.. உங்கள் அன்புக்கு நான் அடிமை. :bow: // வாசுஜி... உங்களை ரொம்ப மிஸ் செஞ்சோம் //
சின்னா! மதுண்ணா!
மன்னிக்க...மன்னிக்க. சின்னவை பார்க்க சென்னை வர எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இங்கே பணியில் முடக்கிப் போட்டு விட்டார்கள். ஷட்-டவுன் பீரியட் என்பதால் லீவும் எடுக்க இயலாத சூழல். இந்த தடவையும் சின்னாவை மிஸ் பண்ணியாயிற்று. மது அண்ணாவையும் தான். கோபால் சாரையும் கோட்டை விட்டு விட்டேன். போன் கூட எடுக்க நேரமில்லை.
மது அண்ணா! தாமதாக வாழ்த்தினாலும் மனமுவந்து தங்களுக்கான மணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அருளால் தங்கள் குடும்ப வாழ்வு இன்று போல் என்றும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
மதுர கானங்கள் வழக்கம் போல மணக்கட்டும்.சிறக்கட்டும்.
ராஜேஷ்ஜி! தங்களை இங்கே மீண்டும் பார்க்கையில் ஆறுதலாக இருக்கிறது. வருக! வருக.
ராஜ்ராஜ் சார் நலமா? எப்படி இருக்கிறீர்கள்?
ராகவேந்திரன் சார், கோபால் சார் நலம்தானே? மற்றும் வினோத் சார், ஆதிராம் சார், செந்தில்வேல், வாசுதேவன் சார், ராகதேவன் சார், முரளி சார் மற்றும் அனைவரும் சுகம்தானே!
சி.கா..
குடுத்துட்டீங்களே.டேக்கா..
கடுக்கா நேக்கா...
சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே உங்களைப் பாக்க...
ஹ்ம்ம்... அடுத்த முறையாவது பார்ப்போம்..
Anyway All the Best
கல்தோன்றி மண்தோன்றா கற்கால காவியத் தேன்மதுரங்கள் (மண்ணில் மனிதன் தோன்றியும் மனிதம் தோன்றா) தற்கால மன ஓட்டங்களில்!
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg
https://www.youtube.com/watch?v=CtaUn2jlpYY
https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI
கல்லும் கனிந்திடும் காலம் வருமா ?
சமூக பொறுப்பு
திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.
இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன்மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
வருமானம் முக்கியமல்ல
எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.
Courtesy: Tamil Hindu
மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!
ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”
திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.
விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்
ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.
நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது.
இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார்.
தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.
“என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.
எம்.ஜி.ஆர். - சிவாஜிக்கு இணை
1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது.
சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.
‘மல்லிகைப்பூ ரோஜா... முல்லைப் பூ வேணுமா...
தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’
என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.
காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.
‘ராஜி என் கண்மணி’
எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.
“ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.
அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.
‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.
ஏமாற்றமும் ஏற்றமும்
‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது.
சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.
தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.
வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.
Mr CK
If I know about your arrival to Chennai I could have come & met you.
Fire in the shadow of Ash...thy name is GG!
From the treasure archipelago of GG!!
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
Quote:
வாழ்வியல் சந்தர்ப்ப சூழல்கள் நம்மை துன்பவியல் அனுபவங்களில் ஆழ்த்திய நிகழ்வுகள் சகஜமே !
சில சமயங்களில் நமது வேதனைகளுக்கு காரணமானவரையோ நம்மை துன்பக்குழியில் தள்ளியவரையோ ஏமாற்றியவரையோ சந்திக்க நேரும்போது நீறு பூத்த நெருப்பாக ஒரு கோபம் தலைதூக்கிய வெறுப்பு மனதில் கனலாக கொழுந்து விட்டு எரிவது இயல்பே !இருப்பினும் பண்பாளர்கள் சினத்தை நீறு பூத்த நெருப்பாக வைத்துக்கொண்டு புத்திசாலித்தனமான வழிகளில் பழி தீர்க்கும் திரைக்கதையமைப்புக்கள் ஏராளம் !
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 1 வஞ்சிக்கோட்டை வாலிபன் / ராஜ் திலக்!
அன்னையை கொடுஞ்சிறையில் கண்டிழந்திட்ட கோபம்....தங்கையை கொன்ற கயவனை பழிதீர்க்க நெஞ்சம் நிறைய வெஞ்சினம்....நீறுபூத்த நெருப்புடா...
என்பதை பிரேமுக்கு பிரேம் ஜெமினி வாழ்ந்து காட்டிய தமிழ்த்திரை மறக்கவொண்ணாத மாபெரும் காவியம் !!
Perceive the greatness of GG the world class actor par excellence and the doyen for his finest portrayal of a vengeance laden youth!
https://www.youtube.com/watch?v=yp_HD9rbUwo
https://www.youtube.com/watch?v=ZAmoFNFta6Y
https://www.youtube.com/watch?v=1YeTEq9DLBc
https://www.youtube.com/watch?v=TcN9536Xx-o
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 2 பார்த்தால் பசி தீரும்!!
சந்திரபாபுவின்அலுவலக குளறுபடியால் அண்ணன்நடிகர்திலகம் அலுவல் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை சிக்கலில் விட்டுவிட்டாரோ என்று நீறு பூத்த நெருப்பாக கனன்று பாட்ட்டாலடிக்கும் மன்னர் !
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
Guest entries / Gap fillers from GG thread!
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
Quote:
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 3 ராமு
கொள்ளையர்களால் மனைவியை இழந்து மகனும் பேச்சிழந்து நிற்கையில் முகமறியாக் கொள்ளையனைப் பொசுக்க வேண்டும் என்னுமளவு வெஞ்சினம் மேலோங்கி குரோதம் நிறைந்த விழிகளுடன் நீறு பூத்த நெருப்பராக மன்னர் பிழம்படித்த காவியம் ராமு !
மகோன்னத நடிப்பின் சிகரம் தொடும் மன்னர் நமக்களித்த மறக்க முடியாத திரைச் சுவடி இக்காட்சியே !
https://www.youtube.com/watch?v=viCL...igIVA&index=17
https://www.youtube.com/watch?v=lKWJ...igIVA&index=30
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
Quote:
அமரர் ஜெமினியின் இயல்புற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 4 : சாந்தி நிலையம்
என்ன இருந்தாலும் தனது புத்தி சுவாதீனமற்ற மனைவியின் மேலிருந்த ஆழ்மன அன்பால் மனைவியின் அண்ணன் பாலாஜியின் பிளாக் மெயிலை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மன்னர் நீறு பூத்த நெருப்பாக உள்மனதில் புகைந்து கொண்டிருந்த கோபக்குமுறலை நெருப்புப் பிழம்பாக சீறியடித்து பாலாஜியை ஒரு வழி பண்ணுகிறார் ....!
https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
Quote:
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 5
பூவா தலையா ?!
Quote:
இத்தனை காலமாக ரகசியங்களை மறைத்து தன்னை ஒரு கோழை மாப்பிள்ளையாகவே நடத்தி வந்திருக்கிறார் என்பது ஜெய் மூலம் அம்பலமானதும் நீறு பூத்த நெருப்பாக மவுனம் காத்த மன்னர் பொங்கியெழுந்து சுழற்றுகிறார் சவுக்கை ! அடி சக்கை....!
ஆனால் ஒரு பெண்மணியிடமா மன்னரே தங்கள் வீரத்தைக் காட்டுவது .....கொஞ்சம் சறுக்கலே!
https://www.youtube.com/watch?v=xc__tSEQL8M
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
பகுதி 6
உன்னால் முடியும் தம்பி / ருத்ரவீணா
Quote:
முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !
https://www.youtube.com/watch?v=ejgrwT5TigQ
https://www.youtube.com/watch?v=fyWWn8vGrkw
To my eyes, Rajanikanth's Kabali make up closely resembles that of GG's make up in this movie....of course Rajini is in coat-suit!!
மதுண்ணா!
தங்களின் மணநாள் பரிசாக ஏதாவது தர வேண்டும் என்று தோன்றியது. சரி! என்ன தரலாம்? மண்டை காய்ந்து இறுதியில் என்னுடைய குரலில் ஒரு அருமையான ஹிந்திப் படப் பாடலை பாடி அதை பரிசாகத் தரலாமே என்ற விபரீத ஆசை தோன்றியது. இரண்டு நாள் மெனக்கெட்டு பிராக்டிஸ் செய்து ஒருவழியாக பாடி முடித்து மீடியா ஃபயரில் அப்லோட் செய்தேன். என்னடா இது நல்ல பரிசாகத் தருவான் என்று நினைத்தால் இப்படி சோதனைக்குள்ளாக்கி விட்டானே என்று நீங்கள் வருத்தமும் படலாம். நீங்கள் செய்த புண்ணியம் அவ்ளோவ்தான்.:) முதலிலேயே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
ராகவேந்திரன் சார், ராஜ்ராஜ் சார் இருவரும் கண்டிப்பாக மன்னித்து விட வேண்டும்.
'ஜி'யும் என்னை மன்னிக்க.
மதுண்ணா! நல்லதோ கெட்டதோ சந்தோஷமாக இந்தப் பரிசை தருகிறேன். மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும்.
இதோ 'ஜுவல் தீஃப்' படத்திலிருந்து கிஷோர் அமர்க்களப்படுத்திய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான 'yeh dil na hota bechara' இப்போது என்னுடைய குரலில் உங்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்தப் போகிறது.:) உங்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.:) அடிக்கணும்னு நினைப்பவர்கள் இப்போதே கியூவில் நிற்கலாம்.
டவுன்லோட் செய்து கேட்க.
http://www.mediafire.com/download/hr...vasudevan.3gpp
அந்த கோப்பினிலே ஒரு ரகசியம்
அதை நீயும் கேட்பது அவசியம்
அதன் குரலுக்குள்ளே ஒரு வசியம்
அதைக் கேட்பது தான் சுகமே....
ஒரு புதிய பாடகர் உதயமாகினார்
மதுர கானங்களின் திரியிலே
...
வாசு சார் கலக்கல்...
வாசு ஜி...
ஆஹா... ஓஹோ... யோட்லிங் எல்லாம் செஞ்சு கலக்கிட்டு இப்படி எல்லாம் நைசா போஸ்ட் போட்டா நாங்க நம்பிடுவோமாக்கும்...
நிஜமாகவே உங்க குரல் ரொம்ப கிளியரா இருக்கு... சாதாரணமாக என்னை மாதிரி ஆசாமிங்க பாடினா தகரத்தில் ஆணியால் கீறின மாதிரி ஒரு சத்தம் வரும். இங்கே பிருகா எல்லாம் அனாயாசமாக வருது... கண்டிப்பா அடுத்த தடவை சந்திக்கிறபோது நீங்க எக்கசக்கமா பாட வேண்டி இருக்கும்.. விக்ஸ் டிராப்ஸ், ஸ்ட்ரெப்சில்ஸ், மிளகு ரசம், புளிப்பு மிட்டாய் எதுவேணாலும் கொண்டு வரேன்.. தொண்டை சரியில்லைன்னு எல்லாம் கதை விட்டு தப்பிக்க முடியாது..
எது வந்த போதும்.... இந்த அன்பு போதும் :bow:
//முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !//
https://www.youtube.com/watch?v=IrdBqPv7Aq0
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
பகுதி 8 சரசுவதி சபதம்!
Quote:
விதி வசத்தால் பெண்தெய்வத்தின் அருள்பார்வை கடாட்சத்தில் கடைந்தெடுத்த கிராமப்புற கோழை மாவீரனாக உருமாற்றம் பெற்று அதேபோல யானை மாலை போட்டதால் ராணியாகி விட்ட கோவை சரளா டைப் (ஷாஜஹான்) பிச்சைக்காரியிடம் தளபதியாகப் பதவி பெறுகிறார்!!
கட்டழகனான தன்னை விட்டுவிட்டு தங்களைப்போலவே விதியின் சதியால் திடீரென்று பேச்சுவரப் பெற்று வசனமழை பாடல் சாரல் ஜெயிலிலும் ஆடல்பாடல் என்று தூள்கிளப்பும் கதியற்ற கவிஞனை தன்னைப் பாராட்டி பாடியே தீர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர நாட்டு மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காத ராணியிடமும் வாயாடிக் கவிஞனிடமும் தீராத கோபத்தை நீறுபூத்த நெருப்பாக பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் கெட்டப்பில் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயேயாக உமிழும் வித்தைக்காரன் போல் இடிச்சிரிப்பு வீரப்பா உள்ளங்கை பிசையும் நம்பியாராக மாறி கிலியூட்டுகிறார் மன்னர்!!
https://www.youtube.com/watch?v=YIPFopNqSos
நடிகர்திலகம் கிடத்தப்பட்டிருக்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சூழலில் ஜெமினி ஏவிய யானை காலைத் தூக்கும்போது நடிகர்திலகம் மற்றும் மன்னரின் எக்ஸ்பிரஷன்கள் எனக்கு கோல்டுபிங்கர் ஜேம்ஸ் பாண்ட் வில்லனின் லேசர் பீம் கொஞ்சம் கொஞ்சமாக தாக்க முன்னேறும்போது ஷான் கானரி காட்டும் ஜேம்ஸ் பாண்ட் முகபாவனைகளையே நினைவுபடுத்தி வதைக்கிறதே !!
NT taking over Sean Connery/James Bond OO7 position, GG taking over the Bond villain Gert Forbe's position and the Elephant's pillar leg simulates the Laser Beam......HAAAAA HAAAHAAAAA!
https://www.youtube.com/watch?v=FZxzC3X5ww8