-
14.02.2016 அன்று மதுரையில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தலாம் என்று சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்கள் மற்றும் மதுரை சிவா மூவீஸ் நிர்வாகிகளும் முடிவு செய்தது 12.02.2016 மாலை தான். அன்றே சில முக்கிய நபர்களுக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்கப்ட்டது.
மறுநாள் 13.02.206 அன்று நானும் (சுந்தராஜன்), நண்பர் வெங்கடேசும் மற்ற அனைத்து ரசிகர்களுக்கு 14.02.2016 அன்று அனைவரும் மதுரையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலை அருகே ஒன்று கூடி, தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தலைவரின் ஆசியை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள எக்கோ பார்க்கில் அனைவரும் கூடி விழா சிறக்க என்ன செய்யவேண்டும் என்பதை பேசுவோம் என்று அலைபேசியில் அழைப்பு விடுத்தோம்.
14.02.2016 அன்று மாலை 5.30 மணிக்கே நமது மக்கள்தலைவரின் ரசிகர்கள் சிலை முன் வரத் தொடங்கி விட்டனர். கே.கே.நகரைச் சேர்ந்த குமார் மற்றும் கார்த்திகேயன் அவர்கள் தலைவரின் சிலைக்கு ஆறடி உயர மாலையுடன் காத்திருந்தனர். வி.சி.சேகர். நான் (சுந்தராஜன்), ரமேஷ்பாபு, சோமசுந்தரம், வெங்கடேஷ், பழனிச்சாமி, முருகவிலாஸ் நாகராஜன், செல்லுார் வெங்கடேசன், புதுப்பட்டி செல்வராஜ், சிவாஜி செல்வம், நாராயணன், ஜவகர்
பாண்டி, ராஜன், வெங்கிடு,
மற்றும் 75க்கும் மேலான ரசிகர்கள் கூடினர். சென்னையிலிருந்து ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
மாலை 6 மணிக்கு சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்கள் வர அனைவரும் மக்கள்தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். சிலை அருகில் அதிகமான கூட்டத்தைக் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பாண்டியிடம் என்ன விசேசம் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். மகளிர் காங்கிரசைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேநீர் அருந்தி விட்டு அனைவரும் பூபங்காவிற்குள் சென்றோம். காதலர்தினத்தை முன்னிட்டு பூங்காவில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டம் அதிகமில்லாத மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத ஒரு இடத்தில் அனைவரும் அமர்ந்து உரையாடினோம்.
8 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது.
காசு கொடுத்தாலே 25 பேருக்கு மேல் திரட்ட முடியாத இந்த காலத்தில், எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்கள்தலைவரின்பால் காெண்ட அன்பின் காரணமாக ஒரு நாளில் அழைப்பு விடுத்து இவ்வளவு பேர் வருகிறார்கள் என்றால் அது நமது தலைவருக்கு மட்டும் தான் என்பதனை தலைநிமர்ந்து சொல்லலாம்.
பின்பு 8 மணிக்கு மேல் வி.என்.சி அவர்களின் புதல்வரும் கமலா தியேட்டர் அதிபருமான திரு.வள்ளியப்பன் அவர்களை டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்க அனைவரும் சென்றோம். பாசத்துடன் எங்களை அன்புடன் வரவேற்றார் வள்ளியப்பன் அவர்கள். சிவாஜி அவர்களின் விழா, ரசிகர்கள் அனைவரும் அழைத்த பின் நான் என்ன மறுப்பா சொல்லப் போகிறேன். அவசியம் வருகிறேன் என்றார் உரிமையோடு. படத்தைப் பற்றி பேசி வள்ளியப்பன் அவர்கள் அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விவரித்தார்.
தமிழகத்தில் வாழும் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருடைய மனதிலும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்ற பெருமிதம் எனக்கு..... எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகர்களுக்கும்.
http://www.sivajiganesan.in/Images/150216_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://www.sivajiganesan.in/Images/150216_8.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://www.sivajiganesan.in/Images/150216_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://www.sivajiganesan.in/Images/150216_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://www.sivajiganesan.in/Images/150216_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://www.sivajiganesan.in/Images/150216_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாடும், நாமும் கொண்டாடும்
நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும்
புனிதப் பணியில் இரண்டாம்
முறையாக வென்றிருக்கிறது..
திருச்சி "சிவாஜி ஃபிலிம் கிளப்."
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
இரண்டாம் திரைப்படமாக
நம் நடிகர் திலகத்தின் "புதிய பறவை"14.02.2016 அன்று திருச்சிசங்கரன்பிள்ளை ரோடு-சுருதிஹாலில் சீரும் சிறப்புமாக திரையிடப்பட்ட
போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எனக்கு
அன்புடன் அனுப்பி வைத்திருக்கிறார்...
அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளரும், "சிவாஜி ஃபிலிம் கிளப்" அமைப்பை
சிறப்புடன் நடத்திக் கொண்டிருப்பவருமான, திருச்சி
திரு.அண்ணாதுரை அவர்கள்.
அவற்றை இங்கே நான்
பெருமையோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையைத் தொடர்ந்து,
திருச்சியிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்களை ஒருங்கிணைத்து ரசனை வளர்க்கும் "சிவாஜி ஃபிலிம் கிளப்" அமைப்பின் பணி
உயர்வானது.
சிங்கத் தமிழனின் புகழ் போற்றும் "சிவாஜி ஃபிலிம்
கிளப்" மேலும்,மேலும் சிறக்கட்டும்.
அய்யா நடிகர் திலகத்தின்
புகழ்க் கொடி பட்டொளி வீசிப்
பறக்கட்டும்.
---------------------------
திரு.ராமச்சந்திரன் (SP.சௌத்ரி
ராம்) அவர்கள்
உரையாற்றுகிறார்.
அருகிருக்கிறார்..
திரு.அண்ணாதுரை அவர்கள்.
http://i1028.photobucket.com/albums/...pslmtsqgfh.jpg
-
-
வெள்ளித்திரையில்
தங்கத் தலைவன்.
துள்ளும் மனங்களோடு
ரசிகர் திரள்.
http://i1028.photobucket.com/albums/...pseqjwu5hg.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-