https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...12&oe=5C0706EF
Printable View
இனிய நண்பர் திரு சிவா சார் அவர்களுக்கு
தங்களுடைய பதிவுகள் அந்தக்காலத்தில் நடந்த இரு திலக ரசிகர்களும் தங்களுடைய தலைவர் மீது எவ்வளவு அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாக வைத்திருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது....இப்போதும் அது தொடர்கிறது...எந்த காலமாக இருந்தாலும் இன்னும் தொடரும்.
இது ஒருபுறம் இருக்க, என்னைப்பொறுத்தவரை இது இனியும் தொடரவேண்டுமா என்பதனைதான் நினைக்க தோன்றுகிறது. காலம் மாறிவிட்டது....இரு சகாப்தங்களும் மக்களின் மனதில் நிரந்தர நிலை கொண்டுவிட்டனர் அவர் அவர்கள் specialised area வில்.
இது போன்ற ரசிகர் பத்திரிகைகள் படிக்கும் நமது மாற்றுமுக நண்பர்கள் மனம் வருத்தப்படுவார்கள் என்பதை நிச்சயமாக நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். எல்லோருக்கும் 40 வயது கடந்து சென்று அவர் அவர் வாழ்க்கையில் பிடிப்புடன் செயல் பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம்.
திரிக்கு வந்து படிக்கும் நேரமும் இப்போது குறைவு...அப்படி இருக்க அந்த சிறிய நேரத்திலும் எதற்கு இதுபோல பதிவுகள் ? நாம் இனி வாழும் காலம் மிக குறைவு என்பது அனைவருக்குமே தெரியும். அதுவும் கணினியை இயக்கி படிக்கும் காலம் இன்னும் எத்துணை காலம் என்பது நமக்கே தெரியாது.
இங்கு வரும் நாம் நல்ல விஷயங்களை படித்து மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை அசைபோட்டால் மிக மிக சிறப்பாக இருக்குமே சார் !
விளம்பரங்கள் பதிவு செய்யுங்கள் சார்.... ரசிக விமர்சனங்கள் வேண்டாம் இனி. ... அனைவருடனும் நட்பு பாராட்டுவது சிறந்த விஷயமாக இருக்கும்.
இது என்னுடைய எண்ணம் !
தவறாக இருந்தால் மன்னிக்கவும் !
நட்புடன்
ரவிக்கிரன் சூர்யா
நேரடித்தாக்குதல் இரண்டுதரம்
மறைமுக தாக்குதல் இரண்டுதரம்
வந்தா வாச்சுது போனா போச்சுது எனதாக்குதல் இரண்டு தரம்
அவை ஒன்றும் பலிக்கவில்லை
எனவே வைரஸ் தாக்குதல் செய்தார்கள் முடக்கிவிட்டது
வீழ்ந்தாலும்
மீண்டு வருவேன்
திரு ரவிகிரண் சூரியா எதிரிகளை புரிந்து கொள்ளுங்கள்