http://i65.tinypic.com/10hkdol.jpg
Printable View
தினத்தந்தி -21/4/19
http://i67.tinypic.com/k189wj.jpg
கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
எழுதிய கவிதை.
நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்கு சென்ற-
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியா வந்த
இராமச்சந்திரன்.!
அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.
அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்திலும்
"வில் பவர்" இருந்தது.
அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயொ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.
வாலி............. Thanks wa.,
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.
வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,
இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.
ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!............ Thanks wa.,
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
கருணையிருந்தால் வள்ளல் ஆ. கலாம்
கடமையிருந்தால் வீரானா. கலாம்
பொறுமை இருந்தால் மனிதானா. கலாம்
இந்த மூன்றும் இருந்தால்
தலைவனா. கலாம்
கலாம் அவர்களை நம் மக்கள் திலகம் அன்றே
பாராட்டிவிட்டார் !
கலாம் அவர்களை சலாம் சொல்ல போகிறார் ராஜா !
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !.............. Thanks wa.,
"அடிமைப்பெண்" பொன்விழா சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு அருமையாக நடைபெற்றிட வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் ரசிகர்கள், பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்......
தமிழ் மக்களின் மனதில் எம் ஜி ஆர் அடைந்த இடம் எவராலும் அடைய முடியாத இடம்
எதனால்
தான்பட்ட பசி பட்டினியை மற்றவர்கள் அனுபவிக்க விடமாட்டேன் சத்துணவு முதல் தன்னை நாடியவர் தன்னை சுற்றி உள்ளவர் அனைவரின் பசிபோக்கினார் ஒரு அன்னையின் கருணையோடு எம் ஜி ஆர்
தனக்கு கிடைக்காத கல்வியை தமிழ் மக்களுக்கு தன் ஆட்சியில் முழுவதும் கிடைக்க வைத்து தமிழகத்தை கல்வியில் முதலிடம் வரவைத்தார் எம் ஜி ஆர்
வலிமை உள்ளன் கெட்டவன் போன்றவர்களிடம் இருந்து வந்த இடஞசல்களை ஒரு மாவீரனாக இருந்து தீர்த்தார் எம் ஜி ஆர்
தனது எல்லாம் தமிழ் மக்களுக்கு என வாழ்ந்த பொன்மனசெம்மல் எம் ஜி ஆரை தமிழ் மக்கள் எங்களுக்கு எல்லாம் எம் ஜி ஆர் என போற்றி வணங்குகிறார்கள்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Courtesy: fb.,
வருகின்ற 26-04-2019 வெள்ளிக்கிழமை முதல் மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வசூலை குவிக்க வருகிறார் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " குடியிருந்த கோயில்"... அனைவரும் கண்டு களியுங்கள்..........
தினத்தந்தி -22/04/19
http://i64.tinypic.com/2d01klg.jpg
26/04/19 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்தகோயில் "
தினசரி 4காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வருகிறது . தேர்தல் காரணமாக ஒரு வாரம் தாமதம் . இந்த வாரம் வெளியாகியிருந்தால் (சித்திரை திருவிழாவை முன்னிட்டு ) நல்ல வசூல் ஆகியிருக்கும் .
http://i66.tinypic.com/15fy8p.jpg
தகவல்கள் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
தினமணிக்கதிர்
-21/04/19
http://i65.tinypic.com/lehhk.jpg
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் திருமண நாளில் விஜயம் செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் மனைவியுடன் .
http://i66.tinypic.com/vfxnyd.jpg
திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கொடுமுடி கே.பி.எஸ். தியேட்டர் திறப்பு விழாவின்போது ஜீப்பில் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , செல்வி ஜெயலலிதா , கே.பி.எஸ்.. பின் வரிசையில் அன்றைய முதல்வர் திரு .மு..கருணாநிதி .
http://i67.tinypic.com/2814xnk.jpg
📽 எம்.ஐி.ஆா். எப்போதுமே தான் நடிக்கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவா். " சக்கரவா்த்தி திருமகள் " படத்தில் ' ஆட வாங்க அண்ணாத்த ' என்று ஒரு பாடல். அந்தப் பாடலில் எம்.ஐி.ஆா். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பாா்.
செட்டிற்க்குள் நுழைந்த எம்.ஐி.ஆா். ' செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழுகு திரையில் தொியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங்கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க' என்று சொல்லி விட்டு மேக் ஆப் அறைக்கு போய்விட்டாா்.
விசயம் அறிந்த இயக்குநா் ப. நீலகண்டன் கொதித்தாா். ' படத்தின் டைரக்டா் நானா? எம்.ஐி.ஆரா? கேமர் ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றப்படி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்படியே படமாக்கலாம் எம்.ஐி.ஆரை அழைத்து வா.... என்று உதவியாளரை விரட்டினாா்.
அவா் போய் எம்.ஐி.ஆாிடம் விசயம் சொல்ல ' காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை.விடிய விடிய இருந்து நடிச்சு கொடுத்திட்டுப் போறேன்... காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான் நல்லபேரு. டைட்டில்ல கேமரா ஆங்கில் எம்.ஐி.ஆருன்னா போடப் போறிங்க? போய் சொல்லுங்க என்றாா்.
எம்.ஐி.ஆாின் கருத்து ப. நலகண்டனை யோசிக்க வைத்தது. எம்.ஜிஆாின் விருப்பப்படியே செட் மாற்றப் பட்டு காட்சி படமாக்கப்பட்டது. எம்.ஜிஆரும் தான் கூறியப்படி நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்து விட்டு போனாா். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
எம்.ஜிஆாின் நுண்ணறிவையும் நல்லெண்ணத்தையும் புாிந்து கொண்ட ப.நீலகண்டன், இருவருக்கும் நட்பு பலப்பட்டது.
எம்.ஜி.ஆாின் நெருங்கிய நண்பா் என்று சொல்லும் வகையில், அவா் நடித்த அதிக படங்களை இயக்கியவா் என்ற பெருமையைப் பெற்றாா் ப.நீலகண்டன்.
☸☸☸☸☸............ Thanks wa.,
ஓடாத படங்களை 100 நாட்கள் ஓடியதாகவும் , தோல்வி அடைந்த படங்களை வெற்றிப்படமாகவும் பொய்யான பதிவுகளை தாராளமாக ............புத்தகத்தில் பதிவிட்டிருக்கும் நாஞ்சில் இன்பா போன்ற பிள்ளைகள் இன்னும் ஒரு சிலர் இருப்பதாலதான் நடிகர் சிவாஜிக்கு அவமரியாதை..........
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயரை கெடுத்த புண்ணியம் இந்த பிள்ளைகளுக்கு ஏராளம் ..........சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் சிவாஜிக்கு தவறான செய்திகளை கொடுத்து ஏமாற்றிய பெருமை இந்த பிள்ளைகளுக்கு உண்டு .........(சபாஷ்) எம்ஜிஆர் ஒரு ஸ்டண்ட் நடிகர் என்று ஒப்பு கொண்ட இலங்கை முதியவருக்கு பாராட்டுக்கள் .......சிவாஜி ரசிகர்கள் ஒரு சிலர் விரக்தியின் உச்சியில் உள்ளார்கள் . என்றுமே மன அமைதி இல்லாத மனநலம் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் . பாவம் . பரிதாபம் படுகிறோம் .பெயரில் ஆனந்தம் இருந்தாலும் நிஜ வாழ்வில் புலம்பல் மட்டுமே இருக்கிறது .உணருங்கள் . ....திருந்துங்கள் ....... இனியாவது ஒழுங்காக திருந்தி... திருப்தியுடன் வாழ பழகுங்கள்... Thanks wa., Friends ......
Malaysia MGR Centre soft launching on 12-5-2019 at 2.30pm in Brickfields, KL.
All are invited .
especially all Malaysian MGR’s attendance is compulsory .
Please come in full MGR get up and invite members of MGR Associations........ Thanks abroad friends...
தமிழக அரசியல் வார இதழ் -24/04/19
http://i64.tinypic.com/x5nhn7.jpg
http://i66.tinypic.com/kd0213.jpg
http://i64.tinypic.com/98901u.jpg
http://i64.tinypic.com/98901u.jpg
ராணி வார இதழ் -28/04/19
http://i67.tinypic.com/24bndxx.jpg
http://i64.tinypic.com/14j45sg.jpg
http://i68.tinypic.com/333d1sn.jpg
மறுபக்க நாணயம்??
----------------------------------------
என் நெஞ்சைத் தொட்டப் பதிவுகளில் இதுவும் ஒன்று!!
அது அன்னமிட்டக் கை படப்பிடிப்பு!
கோவைக்கு அருகில் பவானி ஆற்றுக்குப் பக்கத்தில் மூன்று நாட்கள் ஷூட்டிங்!!
அன்று ,,அந்த இடத்தில் மூன்றாம் நாள் படப்பிடிப்பு!!
ஜெ வோ அடிக்கடி டேக் வாங்குகிறார்?
படப்பிடிப்புக் குழு அனைவருக்கும்,,குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு ஏக திகைப்பு?
காரணம்??
அரசியலில் நடிக்கத் தெரியாத ஜெ??--ஷூட்டிங்கில் வெளுத்து வாங்குவார்!!
காட்சியை உள் வாங்கி,,ஒரே டேக்கில் ஓகே செய்வதில்,,இவர் இன்னொரு சாவித்திரி!
மதியம் உணவு இடைவேளைக்குப் பின் முக்கிய ஷாட் ஒன்றில் நடிக்கவேண்டிய --
மிஸ் ஜெயலலிதா மிஸ் ஆகிறார்??
எங்கு போனார் என்று எல்லோரும் தேட,,ஏக டென்ஷனில் எம்.ஜி.ஆர்?
அரை மணி நேரம் கழிந்து அவசரமாக வந்து சேர்ந்தவரிடம் விபரம் கேட்கிறார் எம்.ஜி.ஆர்!
இவர் முதல் நாள்,,தம் காரில் படப்பிடிப்பு இடத்துக்கு வந்தபோது அவசரத்தில் இவரது புத்தகங்கள் சிதறி, கீழே விழுந்திருக்கிறது?
இவ்ரது காருக்குப் பக்கத்தில் இள நீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு மாணவர்,,அந்தப் புத்தகங்களை பொறுக்கி எடுத்து ஜெ விடம் கொடுக்க--
ஜெ வின் மனதில் சன்னமான ஒரு திடுக்கிடல்?
அந்த மாணவருக்கு ஒரு கால் ஊனம்?
அடுத்த வருடம் பொதுத் தேர்வுக்குப் பணம் இல்லாத நிலையில்,,தம் உறவினர் வீட்டில் தங்கி இள நீர் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்??
அந்த மாணவரும்,,அன்று தான்,,தன் சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்?
அவரது படிப்புக்கு உதவி செய்யும் சிந்தையிலேயே ஷூட்டிங்கில்,,தம் கவனத்தை சிதறவிட்ட ஜெ,,மதியத்துக்கு மேல் அந்தக் கடைக்குச் சென்று அந்த மாணவனுக்கு உதவிவிட்டு வந்திருக்கிறார்??
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட எம்.ஜி.ஆர்,,ஜெ விடம் கேட்கிறார்?
ஏன் அம்மு-- நீ செஞ்சுட்டு வந்த காரியம் ரொம்ப நல்ல காரியம் தான்! இருந்தாலும் அந்த மாணவனை இங்கே வரச் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமாக உதவியிருக்கலாமே??
இப்படி எவருக்கும் தெரியாமல் உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாயே??
நீங்க சொல்லறது சரி தான்!! ஆனால் அந்த மாணவனை இங்கே வரச் செய்தால்,,அவன் கடையை யார் கவனிப்பார்கள்? மேலும்,,--ஊனம் உள்ள ஒருவரை இங்கே வரவழைத்துக் கொடுப்பதற்கு பதிலாக நாமே சென்று கொடுப்போம் என்று தான் நான் போனேன்!! இவ்வளவு என்னிடம் பேசும் நீங்கள்,,எத்தனை இடங்களில் சத்தமில்லாமல் உதவியிருக்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரு நீதி! எங்களுக்கு ஒரு நீதியா??
ஜெ வின் மனித நேயம் கூடிய இந்தப் பதிலால் நெகிழ்ந்து போய்--ஜெ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தாராம் எம்.ஜி.ஆர்??
எம்.ஜி.ஆர் கொண்ட நெகிழ்ச்சி நமக்கும் தானே தோழமைகளே???........... Courtesy: fb.,
#மதிப்பும் #மரியாதையும்
புரட்சித்தலைவரின் திரைப்படங்களில்
சண்டை நடிகராக நடித்து பின்னர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக விளங்கிய ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மலேசியாவில் நடந்த விழாவில் நினைவுப் பரிசு வழங்க அழைத்தனர். அப்போது அவர் புரட்சித்தலைவருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்தபோது மலேசிய அமைச்சர் முதல் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தனர்... 😊😊😊
விழாவின் இறுதியில் மேடையிலிருந்து இறங்கிய திரு. ராமகிருஷ்ணனின் கரங்களைப் பற்றியபடி அவரை தாங்கிப்பிடித்து அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் அழைத்து வந்த போது, "இருக்கட்டும்... பரவாயில்லை " என்ற ராமகிருஷ்ணனிடம், "#நீங்கள் #எம்ஜிஆருக்கு #சேவை #செய்தவர்..." என மலேசிய அமைச்சர் கூறினார். 👌👌👌
எம்ஜிஆர் உடன் இருந்தவருக்கே அவ்வளவு மரியாதை கொடுக்கும் மக்கள் எம்ஜிஆர் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்கள் என்று நான் கூறத்தேவையில்லை...--V P சிவகுமார்🙏🏻🙏🏻🙏🏻.............. Thanks wa.,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " திரைப்படத்தின் பொன்விழா நிகழ்ச்சி, சென்னை தி.நகர்
தியாகராயர் அரங்கில் கடந்த ஞாயிறு (21/04/19) காலை 10மணிக்கு வெகு விமரிசையாக அனுசரிக்கும் வகையில் . துவங்கியது .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு குத்துவிளக்கேற்றி மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் தீப ஆராதனைகள் செய்தனர் .பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது .
முன்னதாக உரிமைக்குரல் மாத இதழ் சார்பிலும்,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பிலும் பேனர்கள், பதாகைகள் அரங்க வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன . ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பேனர் வைக்கப்பட்டது .
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, நடிகை லதா, நடிகை. ராஜஸ்ரீ,உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து ,கவிஞர் முத்துலிங்கம் , அரங்க அமைப்பு இயக்குனர் திரு.சண்முகம் ( திரு.அங்கமுத்து மகன் ), திரு. சுதாங்கன் (பத்திரிகை விமர்சகர் )ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு விருந்தினர்களுக்கு உரிமைக்குரல் மாத இதழ் ,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, மற்றும் வெளியூர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பொன்னாடைகள், மாலைகள் அணிவித்து , வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ) அனைவரையும் வரவேற்று பேசினார் .
அதன்பின் அடிமைப்பெண் பொன்விழா மலர் திரு.சைதை துரைசாமியின் கரங்களால் வெளியிடப்பட்டு, நடிகை லதா அதை பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் கைகளிலும் பொன்விழா மலர் தவழ்ந்தது .
மலர் வெளியீடு முடிந்ததும், திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றினார் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகள், வரலாற்று சாதனைகள் ,திரைப்பட வெற்றிகள், ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த பல நல்ல திட்டங்கள் ,மற்றும் தான் சைதை தொகுதியில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் தோற்றாலும் வருங்காலத்தில் நீதான் அ .தி.மு.க.வின் முதல் மேயர் என்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாக்குறுதி அளித்தார்.என்றும் பேசினார் .
ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மறையும் வரையில் மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் மேயர் ஆக மு டியவில்லை . ஆனால் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனதும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பல சோதனைகளுக்கு பின் மேயர் ஆகியதாகவும், அதன்மூலம் புரட்சி தலைவரின் வாக்கு பொய்க்காமல் பலித்தது என்றும் பேசினார் .புரட்சி தலைவரின் நல்ல திட்டங்களையும், திரைப்படத்தில் போதித்த போதனைகள், சமுதாய கருத்துக்கள், சமூகநல பாடல்கள் ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களும் தலையாய கடமையாக கருதி பாடுபட வேண்டும் என்று பேசினார் .மேலும், புரட்சி தலைவர் உடலால் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கும் தங்களின் சொந்த செலவில் நாள்தோறும், மாதம்தோறும் விழா எடுக்கும் எம்.ஜி.ஆர். பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது . சில பக்தர்கள் சராசரியாக மாதம் ரூ.1,000/-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் பாட செலவு செய்து வருகின்றனர் . அதற்கு காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒவ்வொருவரின் உதிரத்தில் அவர்களது உண்மை பாசம், பற்று, அன்பு என்கிற எல்லா நிலைகளிலும் அவர் பிரதிபலிப்பதனால் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் பக்தர்கள் ஒரு திரைப்பட பாடல் , திரைப்படத்தின் மூலம் உலகத்தில் இருக்கின்ற அறிஞர்கள், மேதைகள், தத்துவ ஞானிகள் , மதங்கள் அத்தனை பேரும் சொன்ன கருத்துக்களை ஒரு பாமரன் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தனது திரைப்படங்களின் மூலம் இந்த சமூக, சமுதாய முன்னேற்றத்திற்காக அந்த கருத்துக்களை திரைப்பட பாடல்களின் மூலம் கொடுத்து உதவிய மாபெரும் தலைவர். எம்.ஜி.ஆர். அவர் மனிதரல்ல, ஒரு அவதாரம் என்று நம்புகின்ற மக்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் வாழ்வார் . உலக தமிழர்கள் அனைவரின் இதயங்களிலும் வாழ்வார் .
. திரையுலகில் புரட்சி தலைவருக்கு எல்லா பாடல்களும் பொருந்தின. ஆனால் ஒன்று மட்டுமே பொருந்தவில்லை. அதாவது எனக்கொரு மகன் பிறப்பான் என்கிற பாடல். அதனால்தான் அவர் ஒரு அவதாரம் என்கிறோம் . அவர் ஒரு அவதார புருஷர் . என்று முடித்தார் .
திரு.சுதாங்கன் பேசும்போது , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகை ஆண்ட காலம் பொற்காலம் தொழிலில் போட்டி இருந்தது . . அவருடைய பாடல்கள்
காலம் கடந்து வாழ்ந்து வருகின்றது .கலையுலகில் மன்னாதி மன்னனாக இருந்தார் .அரசியல் உலகில் ராஜராஜனாக இருந்தார் .மக்கள் மனதில் அன்றும், இன்றும், என்றும் மறையாமல் வாழ்ந்து வருகிறார் . அவரது பாடல்களை பல
கட்சிகள் தேர்தலில் பயன்படுத்துவதை இன்றும் பார்க்கிறோம். மனிதநேயமிக்க மாமனிதர் என்று புகழுரைத்தார் .
திரு.சண்முகம் (ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவின் மகன் ) பேசியபோது ,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தனது தந்தையின் அனுபவங்களை இளம் வயதில் நேரில் பார்த்தவற்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் .
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் , இதயக்கனி, போன்ற படங்கள்
தயாரிப்பின்போது ஏற்பட்ட சுவையான சம்பவங்கள், அ.தி.மு.க. கொடி உருவாக தனது தந்தை செய்த உதவிகள் ஆகியன பற்றியும் பேசினார் .பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு , தி.மு.க. கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயம் பற்றி பேசுவதற்கு திரு.மு.கருணாநிதி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டூடியோ வந்தார் .அப்போது அடிமைப்பெண் ,படத்திற்காக குகையில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். அவர்கள் சண்டையிடும் காட்சி படப்பிடிப்பு ஏற்பாடு .
தலைவர் குகையில் இருந்தார் . திரு. மு. கருணாநிதி தான் தி.மு. க. தலைவராக வேண்டி புரட்சி தலைவரை சிங்க குகையில் சந்திக்க ஏணி மூலம் இறங்கி வந்தார் .ஜப்பானில் புத்தர் ஆலயம் போல என் தந்தையார் செட் அமைத்து (உலகம் சுற்றும் வாலிபனுக்காக ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பாராட்டுக்கள் பெற்றார் . இப்படி பல விஷயங்கள். சொல்லிக்கொண்டே போகலாம். நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ் வாழ்க .
நடிகை லதா பேசும்போது,புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே , தலைவரின் கண்டுபிடிப்பு நான், அவரோடு பயணித்தவள் .
அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எங்கு சென்றாலும்,கலையரசி, கலைமாமணி என்கிற பட்டங்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். லதா என்கிற அடைமொழியோடு அழைப்பதை பெருமையாக கருதுகிறேன் .
1972ல் அ. தி.மு.க. உதயமானபோது நான் மூன்றாவது பெண் உறுப்பினர் .
தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாட்டியம், நடனம் ஆடி, அந்த காலத்தில் சுமார் 35 லட்சம் கட்சிக்கு நிதி பெறுவதற்கு உதவி புரிந்தேன் .தலைவரோடு 12 படங்களில் நடித்துள்ளேன் .
நாடோடி மன்னன், அடிமைப்பெண் படங்கள் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பு .
மூன்றாவது தயாரிப்பான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் என்னை கதாநாயகி ஆக்கிய தலைவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் .
உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகிய சமயத்தில் பல சோதனைகள், கெடுபிடிகள், மிரட்டல்கள், எல்லாவற்றையும் மீறி மிகப்பெரிய சரித்திர சாதனை வெற்றிப்படமாக வெளியாகி திகழ்ந்தது .கட்சிக்கு நாட்டிய நடனம் ஆடி நிதி சேர்த்து உதவியதற்காக ,தலைவர் எனக்கு எந்த உதவி என்றாலும் உனது உழைப்பை மதித்து செய்ய தயார். என்ன வேண்டுமானாலும் கேள் என்றார் .பாடல்களில் சமுதாய முற்போக்கு சிந்தனையுடன் கருத்துக்கள் அமையவேண்டி பாடல்கள் அமைத்து மக்களுக்கு அளித்தார் .திரையுலகம்,அரசியல் இரண்டையும் வெவ்வேறாக கருதாமல் ஒன்றாக பயணித்து , இரண்டிலும் முத்திரை பதித்து, முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஒரே மக்கள் தலைவர் புரட்சி தலைவர்தான். இந்த சாதனையை இனிமேல் எவராலும்
செய்ய முடியாது. தொட முடியாது .தலைவரின் மனிதநேயத்திற்கு பல சுவையான சம்பவங்கள், உதாரணங்கள் சொல்லலாம். அவரோடு பல காலம் பயணித்ததால் பல அனுபவங்களை நேரடியாக கண்கூடாக பார்த்திருக்கிறேன்
ஆஸ்கார் விருது கிடைத்தாலும் கூட நான் அவ்வளவு மகிழ்ச்சி அடையமாட்டேன். எம்.ஜி.ஆர். லதா என்கிற அழைப்பு, விருது ஒன்றே போதும் எனக்கு பெருமகிழ்ச்சி .
அனைத்தையும் சொல்லி முடிக்க நேரம் போதாது .கடலளவு விஷயங்கள் .என் ஆசான், குரு, தலைவர் எல்லாமே புரட்சி தலைவர்தான் ..
.தலைவரின் பண்புகள் வாழ்க. பக்தர்கள் வாழ்க . இந்த விழாவிற்கு அழைத்து என்னை பேச வைத்ததற்கு விழா குழுவினருக்கு நன்றி .
நடிகை ராஜஸ்ரீ பேசும்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் கலையரசி படத்தில் நடிக்கும்போது நீண்ட நாள் படப்பிடிப்பு இருந்தது .அப்போது அவர் கால் முறிந்து குணமாகி நடிக்க வந்த சமயம். ஒரு பாடல் காட்சியின்போது
அவர் காலில் விழவேண்டிய காட்சியில் நடிக்க பயந்தபோது எனது கால் நன்கு குணமாகிவிட்டது .நீ தாராளமாக விழலாம் என்று தைரியம் சொல்லி நடிக்க வைத்தார் .அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குடியிருந்த கோயில் படத்தில் நடித்தேன் உன் விழியும் என் வாளும் , துள்ளுவதோ இளமை பாடல்கள் காட்சியில் அவரது வேகத்திற்கு என்னால் ஆரம்பத்தில் நடனம் ஆட முடியவில்லை. அவரது உற்சாகம், ஊக்கம், தைரியம் காரணமாகத்தான் வெற்றிகரமாக நடித்தேன் .இந்த படம் அந்த ஆண்டில் பெரிய வெற்றி பெற்றது .நான் பிஸியான நடிகை ஆகிவிட்டேன். தொடர்ந்து அடிமைப்பெண் பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை,நாளை நமதே ஆகிய படங்களில் நடித்தேன்
அடிமைப்பெண் பிரம்மாண்ட வெற்றிப்படம் , வெள்ளிவிழா படம் .எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பது பெருமையான விஷயம் ..நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுவனாக நடித்த கதாபாத்திரத்திற்கு தாயாக சில காட்சிகளில் நடித்தேன் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் ஆகி படத்துறையை விட்டு விலகினேன் .பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்கிறேன் . எம்.ஜி.ஆர்.விழா பற்றிய அழைப்பு வந்தால்,சென்னையில் இருக்கும் பட்சத்தில் நான் தவறாமல் கலந்து கொள்வேன் .வாழ்க எம்.ஜி.ஆர். புகழ் .என்று பேசினார் .
கவிஞர் முத்துலிங்கம் , பேசும்போது, நான் எத்தனையோ நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி இருந்தாலும், மனிதநேயமிக்க மாமனிதர் , மக்களின் ஒரே ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய பாடல்களால்தான்
எனக்கு பெரும் புகழ் கிடைத்தது . ஒருமுறை தி.நகர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து உதவி கேட்டேன். தற்சமயம் பணம் தருவதாக சொன்னார் .
எனக்கு பணம் தேவையில்லை. பாடல் எழுத வாய்ப்பு அல்லது ஏதாவது வேலை
இருந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் மீண்டும் இப்போது பணம் தருகிறேன்
வாங்கி கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார் . ஆனால் நான் மறுத்துவிட்டேன் .
என்னுடைய பாடல்கள் சிலவற்றைக் கேட்டபின்பு சில காலம் கழித்து அவரது படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்தார் . அதை நான் பயன்படுத்திக் கொண்டேன் . மீனவ நண்பன் படம் முடியும் தருவாயில் , அவரை சந்திக்கும் பொருட்டு சென்றபோது ,இந்த படத்தில் உனது பாடல் எது என்று கேட்டார் . எனக்கு வாய்ப்பு இல்லை என தெரிந்ததும், எனது குடும்ப சூழ்நிலை, எனது மனைவி பிரசவம் காரணமாக உடல்நிலை ஆகியன தெரிந்து கொண்டு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரிடம் வற்புறுத்தி, கனவுப்பாடல் ஒன்று
எழுத எனக்காக வாதாடி வாய்ப்பு அளித்தார் . பல ஆண்டுகள் கழித்து விழா ஒன்றில் எனக்கு விருது வழங்கும் சமயம், திரு.முத்துலிங்கம் என்னை நாடி உதவிக்காக வந்தபோது , பணம் தருவதாக சொன்னேன் . பணம் வேண்டாம். வேலை கொடுங்கள் என்று சொன்னார் . ஆனால் தான் உழைக்காமல் பணம் வாங்க கூடாது என்கிற கொள்கையோடு உறுதியாக இருந்த திரு.முத்துலிங்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார் .
மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க. மனிதர்களுள் நடிகர்கள் பார்த்திருக்கிறேன். நடிகர்களுள்
மனிதநேயமிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர்.ஒருவரே என புகழ்ந்தார் .திரு.முத்துலிங்கம் .
பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது . அரங்கத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பாலாஜி பவனில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது .
பிற்பகல் 2.30 மணியளவில் கவியரங்கத்தை திரு.துரை கருணா துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் திரு.முருகன், விழுப்புரம், திரு.கவிகுமரன், சென்னை,திரு.பிச்சாண்டி,, திரு.விஸ்வநாதன்,திண்டுக்கல் ஆகியோர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை புகழ்ந்து கவி பாடினார் அவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .
பிற்பகல் 3 மணியளவில் திரு.ராஜாவின் கானம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . அதில் இடம் பெற்ற பாடல்கள் பின்வருமாறு :
1.புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
2..நாம் ஒருவரையொருவர் - குமரிக்கோட்டம்
3. ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்
4. கண்போன போக்கிலே - பணம் படைத்தவன்
5. சக்கரைக்கட்டி ராஜாத்தி - பெற்றால்தான் பிள்ளையா
6. பருவம் எனது பாடல் - பணம் படைத்தவன்
7. தொட்டால் பூ மலரும் - படகோட்டி
8. ஆட பிறந்தவளே ஆடி வா - அரச கட்டளை
9. காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்
10. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
11.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
12.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி
13.வெற்றி மீது வெற்றி வந்து - தேடிவந்த மாப்பிள்ளை
14. பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி
15.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி
16.சிரித்து சிரித்து என்னை - தாய் சொல்லை தட்டாதே
17.மூடி திறந்த இமை இரண்டும் - தாயை காத்த தனயன்
18.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு
19.நாங்க புதுசா கட்டிக்கிட்ட - ஒளி விளக்கு
20.கல்யாண வளையோசை - உரிமைக்குரல்
21.சின்னப்பயலே - அரசிளங்குமரி
22.தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன்
23.தங்க பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்
24.மின்மினியை கண்மணியாய் - கண்ணன் என் காதலன்
25.எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
26.நினைத்ததை நடத்தியே - நம் நாடு
27. ஒரு தாய் மக்கள் நாம் - ஆனந்த ஜோதி
மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளை. அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் தேனீர் அளிக்கப்பட்டது .
மாலை 6மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அப்போல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின்பு, அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பும் வரையில்
எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் பார்வையிட
ஒளிபரப்பப்பட்டது . காட்சியின் முடிவில் அனைவரும் கண்கலங்கி சோகத்துடன் அமர்ந்து இருந்தனர் .
இரவு 7.30 மணியளவில் சென்னை,பெங்களூரு, மதுரை, திருச்சி, சேலம், ஆரணி, விழுப்புரம் திருவாரூர், திருவனந்தபுரம், திண்டுக்கல், கோவை பொள்ளாச்சி , விருதுநகர் , நெல்லை ,மற்றும் பல நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு நினைவு
பரிசு மற்றும் அடிமைப்பெண் பொன்விழா மலர் வழங்கப்பட்டது .
இறுதியில் விழா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு வந்திருந்த பக்தர்கள், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது .
உடல் வலிமை மனவலிமை மக்கள் ஆதரவு வலிமை எவரையும் வெல்லும் வலிமை இருந்தும் எவரையும் கண்ணிய குறைவா பேசாத ஒரே தலைவர் எம் ஜி ஆர்
காமராஜர் கூட வேட்டை காரன் வருவான் ஓட்டு போட்டுவிடாதீர்கள் என ஒருமையில் கூறியதுண்டு
எவரையும் ஒருமையில் பேசாத ஒரு கண்ணிய தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே .........
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks wa.,
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெள்ளி முதல் (26/04/19) தினசரி 4 காட்சிகளில்
வெற்றி விஜயம் .
http://i67.tinypic.com/24xga53.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் .