-
சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 44
கைராசி முகராசிக்கும் பேர் ராசிக்கும் பேர் போனவர் நம்ம வாத்தியார். .அவர் கால்கள் பட்ட இடமெல்லாம் வரலாற்று சுவடுகளாக பதிக்கப்பட்டது. .அவர் கரங்களால் துவக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் புதுபொலிவுப்பெற்றது. .அவர் முகத்தை காட்டி ஓட்டு பெற்றவர்கள் உண்டு. அவர் பெயரை சொல்லி பிழைத்தவர்கள் உண்டு அவரால் வாழ்ந்தவர்கள் உண்டு இன்றும் அவர் பெயர் கூறி வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் அதிகம். இன்னும் சொல்லனும் என்றால் அவர் பெயர் சொன்னால்தான் அவர் சின்னத்துக்குதான் ஓட்டு என்கிற வரைமுறை கொண்டு வந்தவர் வாத்தியார் ஒருவரே இது வேறு எந்த தலைவர்களிடமும் காண முடியாத ஒர் அதியம் ஆகும். . அதனால் தான் கடையெழு வள்ளல்கள் வரிசையில் எட்டாவது வள்ளலாக திகழ்கிறார். புகழ வேண்டும் என்பதற்காக நான் புகழவில்லை. புகழுக்குரியவர் புகழுக்கு தகுதியுடையவர் என்பதால் புகழ்கிறேன். .விவசாயி படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் கூறுவார் அடடா போதும் அண்ணனைப்பற்றி புகழ ஆரம்பித்தால் அப்புறம் அதுக்கு ஏது எல்லை அடுத்த வேலை பார்ப்போம் என்பார். அதைப் போல் நானும் எனது அடுத்த பதிவுக்கு வருகிறேன். ..தெய்வம் செயல். என்ற படம் நடிகர் சுந்தர்ராஜனை கதாநாயகனாக வைத்து சாண்டோ சின்னப்பர் தேவர் எடுத்த படம். பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்தது பல பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை. கூறி விமர்சனம் எழுதினார்கள் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள்.பத்திரிக்கையாளர்களுக்கு சின்னப்பர் தேவர் கூறியதாவது படத்தின் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள் இதே கதையை நான் எனது ஆண்டவனை வைத்து வெற்றி பெற்று காட்டுகிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாநாயகன் அமையவில்லை தவிர கதை திரைக்கதை சரியில்லை என்று கூறியதை தவறு என்பதை நிருப்பிக்கிறேன் என்று சவாலாக கூறினார். .
23 -06 -1967 ம் ஆண்டு "தெய்வசெயல் " படம் வெளிவந்தது. .அப்போது தேர்தல் நேரம் ஒரு புறம் குண்டடிபட்ட சம்பவம் ஒரு புறம் ஏற்கனவே பல படங்கள் புக்கிங் ஒரு புறம் இப்படி பல தரப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதால் வாத்தியாரால் அந்த கதையில் நடிக்க முடியவில்லை என்றாலும் வாத்தியார் உடல் நலம் விசாரிக்க வந்த இந்தி நடிகர் ராஜேஷ்கண்ணா அவர்களிடம் சின்னப்பர் தேவரை அறிமுகம் செய்து வைத்தார். .சின்னப்பர் தேவர் பற்றியும் அவரது திறமையையும் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார் சின்னப்பர் தேவரை கட்டித்தழுவி தனது அன்பை பறிமாறிக்கொண்டார் அதே நேரத்தில் சின்னப்பர் தேவர் கூறிய கதையை வாத்தியார் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார். ராஜேஷ் கன்னா சின்னப்பர் தேவரிடம் இப்படி கூறினார். .எனக்கு இந்திய திரையுலகில் பல ரசிகர்கள் இருந்தாலும். இந்திய திரையுலகில் உள்ள நடிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் ரசிக்கும் நடிகர் உங்கள் எம்ஜிஆர் தான். அப்படிப்பட்ட நடிகர் நடிக்கும் கதையில் நான் நடிக்கிறேன் என்றால் அதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியில் கால்பதித்தார் சின்னப்பர் தேவர் அப்படி வெளிவந்த படம்தான் ஹாத்தி மேரா ஷாத்தி என்ற இந்தி படம் 1971. ம் ஆண்டு வெளிவந்தது மாபெரும் வெற்றி பெற்றது. . அதன் பிறகு வாத்தியார் வைத்து எடுக்கப்பட்ட மெகா ஹிட் படமான "நல்ல நேரம்" 10. 03. 1972. ம் ஆண்டு வெளிவந்தது. .இனி நல்லநேரம் படத்தின் சாதனையை அடுத்த பதிவில் சந்திப்போம் தொடரும் தொடரும் தொடரும்..... Thanks.........
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 45
கஷ்டத்தை போல மனிதனுக்கு படிப்பு சொல்லித்தரும் கண்டிப்பான வாத்தியார் யாரும் இல்லை. ...
கொடுக்கறவங்களும் வாங்கறவங்களும் எஎன்றைக்குமே நாணயம் தவறக்கூடாது என்பதற்காகத்தான் காசுக்கே நாணயம் என்று பெயர் வந்தது. .
வஞ்சகர்கள் மத்தியில் வசதியாக வாழ்வதை விட நெஞ்சம் நிறைய கஷ்டப்பட்டு ஏழையாக வாழ்ந்திடலாம். .
இதயத்தை விட வயிறு பெரிசுதான் அதற்க்காக வயிற்றை நிரப்பனும் என்பதற்காக இதயத்தை விலை பேசக்கூடாது. .
தகுதி என்பது பணத்துல இல்ல வாழற வாழ்க்கையிலே இருக்கு.
நல்ல நேரம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் ஆகும். மேலும் வரும். . எந்த படத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் இந்த படத்துக்கு உண்டு. இவை பல பேர் அறியாத தகவல் ஆகும். 10. 3. 1972. ம் ஆண்டு வெளிவந்த பிறகு கட்டப்பட்ட சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் திறப்பு விழா அன்று முதல் காட்சியாக இலவசமாக நல்ல நேரம் படம்தான் காண்பிக்கப்பட்டது. .இந்த தகவல் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகத்தில் வந்தது. . எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் உள்ள பல தியேட்டர்களில் காண்பிக்கப்பட்டது நானும் பார்த்துள்ளேன். .குறிப்பிட்ட சில தியேட்டர்கள் ஸ்ரீ பிருந்தா ஆல்பர்ட் மூலகடை ஐயப்பா M M தியேட்டரில் போன்ற தியேட்டரில் பார்த்து உள்ளேன். .அதுமட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது. .
தேவர் பிலிம்ஸ் எடுத்த முதல் கலர் படம் இது தான். அதேசமயம் வாத்தியார் நடித்த கடைசிப் படம் இது தான். . இந்தியில் சில தியேட்டரில் மட்டுமே 100. நாட்கள் ஒடியது ஆனால் தமிழில் பல ஊர்களில் பல தியேட்டர்களில் 100. நாட்கள் மேல் ஒடியது. .சென்னையில் சித்ரா மேகலா பிராட்வே ராம் நான்கு தியேட்டரிலும் 100. நாட்கள் மேல் ஒடியது ..இந்தி படத்தின் வசூலை விட ஐந்து மடங்கு அதிகமாக வசூலில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. . 1972 ம் ஆண்டு வந்த படங்களில் அதிக வசூல் சாதனையை படைத்தது நல்ல நேரம் படமே.
கவியரசு கண்ணதாசன் எமுதிய ஒரு பாடலில் வரும் வரிகள். .
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ. ..
அதாவது வாத்தியார் உடலும் உள்ளமும் பொன்னானது. அப்படிப்பட்ட உடலும் உள்ளமும் பெற என் மேனி தகுதியற்றது. என்ற கவிஞரின் வரிகள் வாத்தியார் புகழுக்கு மேலும் புகழ் மணக்க செய்தது. ...படத்தில் நான்கு பாடல்கள். ..இரண்டு பாடல் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடல் அவினாசிமணி எழுதியிருப்பார் கள்
இதையெல்லாம் மிஞ்சி புலமைப்பித்தன் எமுதிய பாடல் தான் உலகமெங்கும் ஒலிக்க செய்தது மெகாஹிட் சூப்பர் ஹிட் டாப் டக்கர் என்று புகழாரம் சூட்டினார்கள் தமிழக மக்கள் அந்த பாடல் எது என்று நீங்கள் அறிவீர்கள் அடுத்த பதிவில் அப்பாடலின் சாதனையும் வரலாறும் காணலாம் தொடரும் தொடரும் தொடரும் .... Thanks.........
-
ஸ்ரீ MGR வாழ்க.........
சித்திரை 4. வியாழன்
எம்ஜிஆர் பக்தர்களே
1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்
அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
A.L.நாராயணன்
இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்
உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்
A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட
அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்
இந்த செய்தி வந்துள்ளது
இந்த செய்தியை நம்பாதவர்கள்
இப்போது உயிரோடு உள்ள
A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்
/////////////////////////////////////////////$$$$/////
நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்
ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .
MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்
இதையறிந்த நான்
MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்
அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்
MGR அவர்களை சந்தித்தார்கள்
தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்
மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /
ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
என்று கூறினார்/
அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்
பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்
உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை
இண்டர்காம்போண் மூலம் அழைத்து
தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்
அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்
இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்
MGR அவர்கள்
ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்
அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்
அவர்களிடம் உங்கள் மகன்
டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று
MGR கூறினார்
இதைக்கேட்டவுடன் நான்
அசந்துவிட்டேன்
இதனால்தான் தமிழ்
நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து
முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்
இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்
×××××××÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷3÷÷÷÷==
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள்
கதாநாயகிகளாக நடித்து உள்ளார்கள்
அந்த நடிகைகள் யாராவது சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எம்ஜிஆரை போல் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா
அப்படி இருந்தால் அந்த நடிகையின் படத்தை வெளியிட்டு அவர் எந்த காரணத்திற்காக மக்களுக்கு பண உதவி கொடுத்தார் என்பதையும் பதிவிட வேண்டுகிறேன்
தர்மம் செய்வதில்
எம்ஜிஆர் கால் தூசுக்கு இணையாக யாரும் வர முடியாது
இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆர் அவர்களை
முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு
ஒரு துரோகி முயற்சி செய்தார்
அந்த துரோகியை நீதிதேவன் எமலோகத்தில்
கழுமரத்தில் ஏற்றிதண்டனைகொடுத்துக்கொண்டு உள்ளார்
அந்த துரோகியை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அப்பளத்தை போல் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் எமதர்மராஜா
அந்த துரோகியை எண்ணெய் ஆட்டும் செக்கில் இட்டு எமதர்மராஜா எமலோகத்தில் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்....... Thanks mr.PM.,
-
புரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாக சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தனது தலைவரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.
முசிறிப்புத்தன், அவர்களிடமிருந்து உயிர் தப்பி புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே! என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.
அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், ரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போல தன் முன்னால் ரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும், புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.
சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.
அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கணக்கில் அடங்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.
அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீரர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரம் ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.
இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள், தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார், புரட்சித் தலைவர்!
அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.
அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.
படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!
பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!!......... Thanks.........
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல்:
இன்று 17-ம் தியதி
தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.
ஜெனோவா ( மலையாளம்)
17-04-1953
ஜெனோவா மலையாளம்
மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.
மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.
ஜெனாவா -
"ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.
இயக்கம் :- ஈச்சப்பன்
தயாரிப்பு :- ஈச்சப்பன்
கதை :- சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
ஞானமணி கல்யாணம்
ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
ராஜமணி
@ வெளியிடூ : 17th April, 1953
( மலையாளம்)
@ வெளியீடு : 1st June, 1953
( தமிழில் )
நன்றி ...
என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...
-
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020
"இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
என்றேன்.
“நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
"நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
முதலில் நான் சொன்னது யோசனை.
ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
"காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
"நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
உண்டாக்குவது கட்டளை...!
ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
நினைத்தார் என்று சொல்ல முடியாது.
“நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
கட்டளையில்லாமல் வேறென்ன?
இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
வேண்டாமா?
ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
வடித்துத் திருந்தியவனாயிற்றே!
எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
மறக்கத்தான் கூடுமா?
"அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"
"வெற்றியும் தோல்வியும்"
அறிவுதான் ஒரு மனிதனுக்கு
வழிகாட்டியாக அமைகிறது.
அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
தோல்வி அடையும் போது 'முட்டாள்'
ஆகிறான்.
இவை புறத் தோற்றத்திற்கு.
ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
விடுகிறான். அதாவது மற்றவர்கள்
அவனைத் தோல்வி அடையச் செய்து
விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
கொள்ளமாட்டான்.
வேறொரு சமயம் அதே கலைஞன்
பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
கிறான். ஆனாலும் அப்போது, அவனது
லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
உணருவதால் அவனுடைய உள்ளம்
வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
விட்டேன்'' என்று.
பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
அதற்கு என்ன காரணம்?
நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.
"தலையை முட்டிக்கொண்ட பிறகு..."
திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
வேண்டும்!
நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
எண்ணம் என்ன?
"அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
என்பது ஒன்று.
மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
அல்லவா அது மாறிவிட்டது!
ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
"திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்......... Thanks.........
-
"அன்பே வா" படத்தில் ருசிகரமான ஒரு காட்சியில் சரோஜாதேவி அப்பாவை வாங்கப்பா சிம்லாவை சுற்றிப் பார்க்கலாம் என்று அழைத்தவுடன் நீங்க போயிட்டு வாங்கம்மானு சொல்லிட்டு எனக்கு இந்த குளிர் ஒத்துக்காது என்பார்.
இருவரும் சென்றவுடன் "மசாலா கோழியை விட்டுட்டு மலையாவது கிலையாவது இன்னைக்கு ஒரு பிடி பிடிக்கலாம்" னு சாப்பிட ஆரம்பிப்பார். சற்று நேரத்தில் டேபிளுக்கு கீழே சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை தூக்கும் போது வெறும் கோழி எலும்பு மட்டும் தட்டில் இருப்பதாக சீன அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த காட்சியில் நடிக்க T R ராமச்சந்திரன்
முதலில் மறுத்து விட்டார். நான் ப்யூர் வெஜிடேரியன் என்னை போய் கோழி சாப்பிட வைத்தால் எனக்கு வாந்தியே வந்திரும்னு சொல்லிட்டார். உடனே அவருக்காக கோழி மாதிரி வடிவில் கேக் ஆர்டர் பண்ணி ( தலைவர் யோசனைப்படி) பின்னர் அவர் சாப்பிடுவது போல காட்சி எடுக்கப்பட்டது ஒரு ருசிகரமான தகவல் இல்லையா.?!........ Thanks.........
-
எம்ஜியாருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..ஹா... ஹா...
---------------------------------------------------------
(ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல். Sska Rabeek Rajaa உபயத்தில் வாசித்து மகிழ்ந்த மதிப்புரை)
நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்....
ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ
உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...(மீள் பதிவு)... Thanks.........
-
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மானசீக குருவாக ஏற்றுகொண்ட நம் தலைவர் >>>> ரீமோட்டுடன் டிவியில் உலா வந்தேன் HBO -வில் police story -2 , 1988 இல் வெளிவந்த படம் !! டிபன் சாபிட்டுகொண்டு இருந்த நான் கைகழுவ மறந்து பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன் > ஜாக்கி சான் கதநாயகன் உடலில் மனித வெடிகுண்டும் அதை கழட்டிவிடும் லாவகமும் > இவருக்கெல்லாம் தலைவர்தான் முன்னோடி > இந்த சண்டைகாட்சி யில் வில்லன் உடலில் தீபிடித்து அலறுவான் தலைவரைபோலவே மனிதாபத்துடன் கதாநாயகன் தீயை ஆணைப்பார் > வில்லன் உடனே தன் நம்பியார் புத்தியை காண்பித்து கதாநாயகன் மேல் சீரிபாய்வான் < > இந்த காட்சியிலும் தலைவர்தான் முன்னோடி <> படத்தின் முடிவில் படபிடிப்பு காட்சிகளை காட்டுவார்கள் <> கதாநாயகனும் கதாநாயகியும் மிகவும் ஆபத்தை கையில் எடுத்து நடித்து இருப்பார்கள் << இதெல்லாம் வெறும் காசுக்கா ?? புகழுக்கா ??...... Thanks.........
-
#பெற்றால்தான்பிள்ளையா
[ 09 - 12 - 1966 ]
தலைவரின் அற்புதமான நடிப்பில் வெளி வந்த மெகா ஹிட் காவியம்...
தமிழ் இருக்கும் இடமெல்லாம் தலைவரின் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்...
சின்னஞ்சிறு கைகளை நம்பி என்ற காட்சியில் தலைவரின் Steps...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...
தலைவருக்கு நிகர் தலைவரே...
இதே மாதிரி ஸ்டைலில் சத்யராஜ், ராமராஜன் உட்பட ஏன் விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் கூட முயன்று பார்க்கிறார்கள்...முடியவில்லை...
எனினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தலைவர் முதல்வராக இருந்த போது நடைபெற்ற ஒரு விழாவில்...
சென்சார் போர்டு ஒரு தீராத நோய் என்பார்கள்.
இப்பாடலில் வரும் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளில் அறிஞர் அண்ணா என்று வரக்கூடாது என்று சென்சார் போர்டு தடை செய்து விட்டதால் படத்தில் திருவிக போல் என்றே இருந்தது.
ஆனால் தலைவர் வாய் அசைவு அறிஞர் அண்ணா என்றே இருக்கும்...
ஒலி நாடாவிலும் அறிஞர் அண்ணா என்றே இன்றளவும் ஒலிக்கிறது...
மெல்லிசை மன்னர் M.S.V. இசையில்...
T.M.S. அவர்களின் கணீர் குரலில்...
வாலிப கவிஞர் வாலியின் அற்புத வரிகளுக்கு தலைவர் உயிர் கொடுத்ததால் பாடல் சாகா வரம் பெற்று விட்டது.
★ வளர்க புரட்சித்தலைவர் புகழ் ★
#இதயதெய்வம்.......... Thanks.........
-
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?
அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.
நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.
யார் அவர்..?
ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.
இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.
இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.
அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.
அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.
சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks.........
-
'லூஸிப்பர்' மோகன்லால் நடித்து பிருதிவுராஜ் தயாரித்த மலையாளபடம் இதுவரை உள்ள எல்லா மலையாள வசூலையும் முறியடித்த படம் இந்த படம் சென்ற ஈஸ்டர் அன்று ஏசியநெட் டிவியில் ஔிபரப்பபட்டது இதில் ஒருகாட்சி கதாநாயகன் ஒரு அனாதை விடுதி நடத்தி கொண்டே கேரளா அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக நேர்மைவாதியாகவும் இருக்க சில ஊழல்வாதிகள் கதாநாயகனை அழிக்க போலீசை அனுப்புகிறது ... உயர் அதிகாரி தலைமையில் அனாதை இல்லத்தில் நுழைந்து கதாநாயகன் ஆன மோகன்லாலை பொய் வழக்கின் பெயரில் விலங்கு மாட்டி இழுத்து செல்ல ஒரு சிறுமி மோகன்லாலை நெருங்க உயர்அதிகாரி சிறுமியை தூக்கி வீச கோபம் கொண்ட கதாநாயகன் உயர் அதிகாரியை காலால் ஓங்கி மிதித்து தள்ளுகிறான் கோபம் கொண்டு உயர் அதிகாரி கதாநாயகனை பார்த்து நீ என்ன பெரிய "எம்.ஜி.ஆரா. " தலைவராடா என உறுமி தரதர என இழுத்து செல்லுகிறார் ...
மலையாள படத்தில் இந்த காட்சியை கண்ட போது.அநீதியை எவ்வளவு பெரியவன் செய்தாலும் தண்டிக்கும் சக்தி எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே இருந்தது என்பதை மலையாளிகளும், கேரள திரையுலகமும் ஒப்பு கொள்ளுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது... வாழ்க, வளர்க... மக்கள் திலகம் புகழ்........ Thanks.........
வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...
-
உண்மை தான்.
தானம்...
கோ தானம்(பசு)...
கன்னிகா தானம்...
நிதானம்...
அன்னதானம்...
பொருள்தானம்(தங்கம் அடங்கும்)...
உடைகள் தானம்....
வீடுகள் தானம்....
புரட்சிதலைவர்
கையில் எடுத்தார்...
சட்டத்தை
நானே போடப்போகிறேன்
சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு....... Thanks.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது*அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.
சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .
சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .
எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .
மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..
தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .
-
எதிரிகளைப் பந்தாடும் #MGR ஆரம்ப காலப் படங்களில் கடுமையாகச் சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.
சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார், உன்னைத் தாக்குவது என் நோக்க மல்ல என்று சொல்வது போல. வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். ‘
'நான் ஆணையிட்டால்’ என்று தங்களுக்காக முழங்கிய திரைப் பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்குப் பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காகத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.
‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘பாசம்’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல் காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார்.
சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். பாடல்களில் நாம் கண்ணதாசனையோ ,வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் பாடல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கும்.
‘குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்’ என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன் படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. பல கோடானுகோடி கணக்கானோரை impress செய்யும் வகையில் பயன்படுத்தினார். திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும்
எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரை, சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக வைத்திருந்தது.
-கட்டுரையாளர் திரு.மதன்.......... Thanks.........
-
12.07.1974 இல் தடைகளை தாண்டி வருகிறது புரட்சிதலைவரின் "நேற்று இன்று நாளை", படம்..
உ.சு.வா. மாதிரி கோட்டை விட்டுவிடாமல் படத்தை வரவிடாமல் செய்ய அன்று ஆண்ட தீயசக்தி வழக்கம் போல தூண்டி விட்டது.
கும்பகோணம் நகரில் பெரும் பதட்டம் ஆரம்பம் ஆனது.. சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த ஐ.ஜி.அருள் அவர்கள் ஆளும் கட்சி மன்னை நாராயணசாமி என்றாலும் சரி அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.ராதா குழுவை சேர்ந்த எம்ஜியார் மன்றம் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கலவரம் வராமல் தடுக்க இரு தரப்பினரையும் அழைத்து ஒரு அதிகாரி மூலம் பேச்சு நடத்த.
அந்த நாளும் வந்தது....நகர் எங்கும் இருந்த தலைவரின் விளம்பர போர்டுகள், பட போஸ்டர்கள் கிழித்து எறிய பட்டன.
படம் ஓடவேண்டிய அரங்கை கொளுத்தி விட ரவுடிகள் பட்டாளம் தயார் ஆகின.......அவர்கள் அரங்கை நெருங்கும் போது அங்கே நூற்றுக்கணக்கில் எம்ஜியார் படை திரண்டு அவர்களை தடுத்தனர்.
இருதரப்பிற்கும் ஏற்பட்ட கடும் மோதலில் சேதம் இருபுறமும் ஏற்பட அங்கே அரங்கில் படம் அமர்க்களமாக ஓட துவங்கியது.
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே பாடலுக்கு எழுந்த கரவொலி கும்பகோணம் நகர் எங்கும் ஒலித்தது.
இதை தாங்க முடியாத தீயசக்தி கும்பல் எஸ்.ஆர் ராதாவுக்கு சொந்தம் ஆன அவர் பிரிண்டிங் பிரெஸ்ஸை அடித்து நொறுக்கி சேதம் செய்தது...தடுக்க முயற்சி செய்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விஷயம் அறிந்த மன்னர் ஏன் இப்படி ப்ரெஸ்க்கு ஆட்கள் காவல் இல்லையா என்று வருந்த உடனே கிளம்பி கும்பகோணம் வருகிறேன் என்று தகவல் சொல்ல.
அதை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் துள்ள....அடுத்த வாரம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தலைவர் பேசி முடிந்து சேதம் அடைந்த பிரஸ் ஐ பார்வை இட்டபின்.
எஸ் .ஆர்.ராதாவை அழைத்து ரூபாய் 25000 கொடுக்க அதை உடனே பிரஸ் சேதத்துக்கு 11000 ரூபாய் மற்றும் காயம் அடைந்த இருவருக்கு ஆளுக்கு 2000 போக மீதி 10000 ரூபாயை தலைவர் வசம் திருப்பி கொடுக்க.
வள்ளல் அவரை பார்க்க அவர் வள்ளலை பார்க்க எப்படிப்பட்ட தலைவர் எப்படிப்பட்ட தொண்டர் என்று அருகில் இருந்தவர்கள் வியக்க.
1977 சட்டமன்ற பொது தேர்தலில் கும்பகோணம் தொகுதிக்கு கழகம் சார்பில் 10 பேர் மனு செய்ய...எஸ்.ஆர்.ராதா மனு செய்யவில்லை.
ஏன் என்று தலைவர் பட்டியல் பார்த்து விசாரிக்க நான் கட்சிக்கு உழைக்கவே இருக்கேன் பதவிக்கு உங்க கிட்ட வரவில்லை என்று சொல்ல.
வேட்பாளர் பட்டியலில் எஸ் .ஆர்.ராதா பெயர் வர அவரும் மற்ற எம்ஜியார் மன்ற தோழர்கள் கட்சியினர் பம்பரமாக சுற்றி பணியாற்ற...
30 ஆண்டுகள் ஆக காங்கிரஸ் கட்சி கோட்டை ஆக இருந்த கும்பகோணம் தொகுதியில் மன்னவர் எம்ஜியார் கண்ட கொடி வெற்றி பெற்று பட்டொளி வீசி பறந்தது.
வெற்றி பெற்ற தொண்டர் எஸ்.ஆர்.ராதா அவர்களை வீட்டு வசதி துறை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் தொண்டர்களின் காவலர் புரட்சிதலைவர்..
வாழ்க. எம்ஜியார் புகழ்.
நன்றி....தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.
பின்குறிப்பு.
அப்படிப்பட்ட எஸ் ஆர்.ராதா அவர்கள் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு எம்ஜியார் விழாவில் அருமையாக தலைவர் பற்றி பேசினார்...விழா தி.நகரில் நடைபெற்றது....நன்றி.
படத்தில் தலைவருடன் நடந்து வருபவர் எஸ்.ஆர்.ராதா அண்ணன் அவர்கள்....... Thanks...
-
சென்ற பதிவில் தங்க சுரங்கம் மற்றும் அடிமைப்பெண்ணை பற்றி சொல்லியிருந்தேன். இந்த பதிவில் 1969ம் வருட கடைசியில் வெளிவந்த இரண்டு படங்களை பற்றி சொல்கிறேன். அதில் ஒன்று நம்நாடு மற்றொன்று சிவந்த மண்.
நம்நாடு தீபாவளிக்கு ஒரு நாள் முன் நவ 7ம் தேதியும் சிவந்த மண் தீபாவளிக்கு ஒரு நாள் பின்னால் நவ 9ம் தேதியும் வெளிவந்தது. நம்நாட்டை பொறுத்தவரை அடிமைப்பெண்ணின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த படம் என்பதாலும் ,விஜயா கம்பெனி நாகிரெட்டியின் படம் என்பதாலும் படத்தின் வெற்றியை பற்றி எந்தவித சந்தேகமும் எழவில்லை. படமும் வெளிவந்து நல்ல விமர்சனமும் எழுந்ததால் படம் 50 நாட்கள் சார்லஸில் ஓடியது. அதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் சிவந்த மண்ணின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
நவ 9ம் தேதியும் வந்தது. படம் வெளியானவுடன் முதல் காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒன்றிரண்டு எம்ஜிஆர் ரசிகர்களும் ஆரம்ப காட்சியை பார்த்து விட்டு ரொம்ப குஷியாக வந்தார்கள். படம் டப்பா, குப்பை நான்கு வாரங்கள் கூட ஓடாது என்ற விமர்சனங்களை அனைவரிடமும் சொன்ன போதிலும் படம் முதல் வாரம் சிவாஜி ரசிகர்களால் நன்றாகவே போனது. அதுமட்டுமல்ல
அந்த படத்திற்கு வந்த விளம்பரம், பிரம்மாண்டம், வெளிநாட்டு காட்சிகள், பிரமிட் காட்சிகள் ,வெற்றி பெற்ற பாடல்கள் போன்ற காரணத்தால் எல்லோரும் ஒரு தடவை படம் நன்றாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் பார்க்க விரும்பினார்கள். எப்படியும் நான்கு வாரங்களுக்கு மேல் ஓட வாய்ப்பில்லாத ஒரு படத்தை 100நாட்கள் ஓட்டுவதென்றால் சிவாஜி ரசிகர்களின் திறமையை என்னவென்று சொல்லுவது.
ஆனாலும் ரசிகர்களும் இந்த படத்தை விட்டால் சிவாஜிக்கு வேறு பிரமாண்ட படம் கிடையாது என்ற காரணத்தால் என்ன விலை கொடுத்தாவது படத்தை 100 நாள் ஓட்ட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். படம் இரண்டாவது வாரம் காலை காட்சி மற்றும் செவ்வாய் வெள்ளி மாட்னி காட்சிகள் பாதி தியேட்டர் கூட நிரம்ப சிரமப் பட்டதால் ரசிகர்கள் தங்களது இந்திரஜித் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே வசூலில் பின் தங்கி விட்டால் பின் அதை ஈடு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு முதலில் இருந்தே அடிமைப்பெண்ணின் ஷோ பை ஷோ வசூல் ரிப்போர்ட்டை தியேட்டர்காரர்களிடமிருந்து வாங்கி அதை கம்பேர் பண்ணியே வசூலை ஏற்றத் துவங்கினார்கள்.
இரண்டும் ஒரே தியேட்டரில் வெளிவந்ததால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் வசதியாகப்போனது. தியேட்டர் வழியாக எப்போது யார் சென்றாலும் ப்ரீ டிக்கெட் ரசிகர்கள் மூலமாக கிடைத்து விடும். சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் வசதியானவர்கள்,பணக்கார வீட்டு பையன்கள். தெய்வ மகன் படத்தில் செல்ல மகனாக சிவாஜி வருவாரே அதை போலதான் அவரது ரசிகர்களும். பெற்றவர்களும் பிள்ளையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் முழு ஒத்துழைப்பை நல்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பணத்தை தண்ணீராக செலவு செய்த போதிலும் 50 நாட்களில் ௹ 73000 க்கு மேல் முடியவில்லை.அடிமைப்பெண் ௹ 78678 வசூல் செய்தது. ௹5000 க்கு மேல் வித்தியாசம்.
ஒரு ஷோ ஹவுஸ்புல் ஆனால் அதிக பட்சம் ௹800 தான் கிடைக்கும். இப்படியே தொடர்ந்து டிக்கெட் கிழித்து 13 வார முடிவில் அடிமைப்பெண்ணை தாண்ட சுமார் 7000க்கும் அதிகமாக தேவைப்பட்டது. அப்போது சிவந்த மண் தினசரி 2 காட்சிகள் தான் நடந்தது. உடனே சிவாஜி ரசிகர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள். தினசரி மாட்னி காட்சிக்கு வேறு மொழிப்படம் குறைந்த பட்ஜெட்டில் திரையிடுவது அந்த படம் ஹவுஸ்புல் ஆன மாதிரி D C R எழுதுவது ரிகார்டுகளில் சிவந்த மண் 3 காட்சிகள் ஓடிய மாதிரி எழுதி மொத்த வசூலையும் சிவந்த மண் கணக்கில் சேர்த்து விடுவது என்று பல ஜகஜ்ஜால வித்தைகளை செய்து சிவந்த மண்ணை 101 நாட்கள் ஓட்டி வசூலிலும் ௹ 106200. என்று கொண்டு வந்து வெற்றி விழாவை எம்ஜிஆர் ரசிகர்களின் வயிற்றெரிச்சலோடு கொண்டாடினார்கள். அடிமைப்பெண் மொத்த வசூல் ௹ 105816 /13 பை.
ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். சிவந்த மண் 100 வது நாள் விளம்பரத்தில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா மட்டும் தனியாக தெரிவதை பாருங்கள்.திருநெல்வேலி நாகர்கோவில் ஈரோடு தஞ்சாவூர் வேலூர் திண்டுக்கல் முதலான ஊர்களை காணவில்லை. அப்படி என்றால் தூத்துக்குடி மக்கள் மட்டும் விரும்பி பார்த்து ஓடிய படமா? பொதுவாக திருநெல்வேலியை விட தூத்துக்குடி வசூலும் ஓடுகின்ற நாட்களும் 40 சதவீதம் குறைவு. இது விநியோகஸ்தர்கள் கணக்கு. திருநெல்வேலியில் ஓடிய நாட்கள்
76. அப்படியென்றால் தூத்துக்குடியில் அதிக பட்சசமாக 42 நாட்கள் ஓடலாம். ஆனால் 101 நாட்கள் ஒட்டப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்றாகிப் போனது.
ஆமாம் இவ்வளவு பணத்தை சிவாஜி ரசிகர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு பலியானவர் ஒரு வெறி பிடித்த சிவாஜி ரசிகர். தூத்துக்குடியை பொறுத்தவரை சிவாஜி படம் நல்ல படமாக இருந்தால் 3 வாரம் ஓடுவதே பெரிய விஷயம். ராஜா 21 நாட்களும் சொர்க்கம் 21 நாட்களும்
ஞானஒளி 18 நாட்களும்தான் ஓடின.
இவ்வளவு ஏன்? தியாகம் 3 வாரம்தான் ஓடியது. அதைவிட சிவாஜி ரசிகர்களால் பெரிதும் சாதனை என்று போற்றப்பட்ட திரிசூலம் இங்கே சிறிய தியேட்டரான காரனேஷனில் 50 நாட்கள் ஓடுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. ஏனென்றால் சிவாஜி படத்தை திரும்ப திரும்ப பார்க்க யாரும் முன்வரமாட்டார்கள். அதனால் எம்ஜிஆர் ரசிகர்களின் கேலிக்கு ஆளாகியதால் எப்படியும் சிவந்த மண்ணை ஓட்டி சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி அவர்களை அப்படி செய்ய தூண்டியது என நான் நினைத்ததுண்டு.
அப்படிப்பட்ட ஊரில் ஒரு சிவாஜி படத்தை 100 நாட்கள் ஓட்டுவதென்பது கற்பனைக்கெட்டாத
ஒரு விஷயம். அதை திறம்பட செய்து முடிப்பதற்கு அந்த சிவாஜி வெறியர் செய்த காரியம்தான் காரணம். அப்படி என்ன செய்தார் என்றால் அவர் தனக்கு சொந்தமான வீட்டை இந்த படத்திற்காகவே விற்று அதை அப்படியே சிவந்த மண் வசூலை உயர்த்துவதற்காக பயன்படுத்தி கொண்டார். இத்தனைக்கும் அவர் ஒரு நல்ல எண்ணெய் வியாபாரி.
அவர் பெயரிலேயே பிராண்டட் நல்லெண்ணை வியாபாரம் செய்பவர். ஆனால் சமீபத்தில் அவரை பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் எல்லா சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடுகிறார் என்கிறார்கள். இன்று அவர் விற்ற சொத்து மட்டும் இருந்தால் பல லட்சங்களுக்கு மேல் விலை போகும்.
எல்லாம் காலம் செய்த கோலம். சரி அந்த வெற்றியாவது நிலைத்ததா என்றால் அதுவுமில்லை. எப்படி படத்தின் தயாரிப்பாளர் படத்தை எடுத்து கடன்காரர் ஆனாரோ அதை போல் படத்தை ஓட்டி அவரது ரசிகரும் இன்று கடன்காரனாக நிற்பது வேதனையாக இருக்கிறது.
அடுத்து வந்த மாட்டுக்கார வேலன் 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 77 நாளில் எடுத்தது அவர்களுக்கு வசதியாய் போனது. அதற்கடுத்து வந்த ரிக்ஷாக்காரன் 50 நாளிலேயே 85000 தாண்டி சிவந்த மண்ணை விட 12000 அதிகம் வசூல் செய்தது. அதையும் அதிக நாள் ஓட்டினால் பிரச்னை ஆகும் என்று தூக்கி விட்டார்கள். அதற்கு அடுத்து வந்த உலகம் சுற்றும் வாலிபன் இனிமேல் யாரும் சாதனையை பற்றி பேசக்கூடாது என்பதற்காகவே படம் 104 நாட்கள் ஓடி ௹186000 தாண்டி வசூல் செய்ததாக கணக்கு காண்பித்தாலும் கணக்கில் வராமல் சுமார் ௹100000 க்கும் அதிகமான வசூலை ஏப்பமிட்டார்கள் என்பதே எல்லோருடைய கணிப்பும். மூன்று வருடம் மட்டும் நீடித்த சிவந்த மண்ணின் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் வந்து தகர்த்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையின் கதை............ Courtesy by: Mr. Shankar, fb.,
-
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!........ Thanks to mr. Aiyappadas fb.,
-
"நேற்று இன்று நாளை", படம் என்றவுடன் எனக்கு ஒரு மறக்க முடியா புரட்சி நினைவு.
ஈரோட்டில் படம் ரிலீசன்று போடக் கூடாது என்று அப்போதைய ஆட்சியாளர்களால் வெளியிட இருந்த செண்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்தை மிரட்டி தடுத்தனர்,தியேட்டர் வாசலில் படம் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான,ரசிகரகளும் கழக தொண்டர்களும் எம் ஜி.ஆர் மன்றத் தலைவராக இருந்த ஈரோடு அழகரசன் என்பவர் தலைமையில் ஒன்று கூடி தலைவரின் படம் திரையிடவில்லை என்றால் வேறு எந்தத் தியேட்டரிலும் படம் ஓடாது என்று அனைத்துத் தியேட்டரிலும் ஒரு வாரகாலம் நிறுத்திக் காட்டினோம்,அதோடு மட்டுமல்லாமல் அன்றைக்கு வீரப்பன் சத்திரம் எனும் இடத்தில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டது,ஆட்சி,அதிகாரத்தை மண்டியிட வைத்து தலைவர் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் மற்ற தியேட்டர்கள் திறக்கப்பட்டன....... Thanks...
-
பாமரர்,படித்தவர்,உடன் நடித்தவர், கட்சிக்காரர் இவர்களுக்கு தலைவர் உதவினார் சரி.
10 வயது பாலகன் செந்திலுக்கு எப்படி...
1977 தலைவர் முதல்வர். ..பெரம்பலூர் மாவட்டம் சூரப்பனூர் நம்ம செந்தில் குமரனுக்கு.
செந்தில் குமரன் அப்பா திருச்சி கூட்டுறவு வங்கி மேலாளர்..ஒரு நாள் அவருக்கு வெகுதொலைவில் உள்ள பஞ்சம்பட்டி கிளைக்கு மாறுதல் உத்தரவு வர குடும்பத்தில் ஒரே சோகம்.
அங்கு போய் வரவே 7 மணி நேரம் ஆகும் என்பதால் செந்தில்குமரன் அப்பா அந்த ஊர் அருகில் தங்கி வேலை பார்த்து விட்டு சனிக்கிழமை வீட்டுக்கு வந்து அடுத்த நாள் மாலை வேலைக்கு திரும்பிவிட.
நரக வாழ்க்கை செந்தில் குடும்பத்துக்கு....ஊரில் வேறு கடும் குடிநீர் தட்டுப்பாடு...பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க அம்மா மதியம் போனால் இரவு ஆகிவிடும் சிலநாள் வீட்டுக்கு வர.
ஒரு நாள் டீக்கடையில் சிலர் எம்ஜியார் பற்றி பெருமையாக பேசி கொண்டு இருக்க உடனே செந்தில் ஊரில் இருந்த தபால் நிலையத்தில் ஒரு இன்லாண்ட் கவர் வாங்கி.
அதில் அவனுக்கு தோன்றிய படி......முதல்வர் எம்ஜியார் அண்ணா என்று ஆரம்பித்து... குடும்ப சூழல்... ஊர் குடிநீர் கஷ்டம் எல்லாம் மை ஒழுகும் குண்டு பேனா கொண்டு எழுதி ஒட்டி
முதல்வர்...எம்ஜியார் அவர்கள்...சென்னை கோட்டை என்று முகவரி எழுதி போஸ்ட் செய்து விட.
அடுத்த வெள்ளிக்கிழமை இரவு செந்தில் தூங்கி கொண்டு இருக்க அவன் அப்பா டேய் எழுந்திரு என்று மிரட்டி எழுப்பி ஒரு கவரை அவனிடம் காட்ட.
உயர்த்த பட்ட விளக்கின் ஒளியில் அதை செந்தில்குமரன் படிக்க....அதில்..
பெருனர்.... கே.சாமிநாதன்...என்று ஆரம்பித்து... உங்கள் மகன் செந்தில்குமரன் அவர்கள் எழுதிய வேண்டுகோள் கடிதத்தின் படி உங்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு நீங்கள் மீண்டும் அரும்பாவலூர் கிளைக்கு மாற்றம் செய்ய படுகிறீர்கள் என்று இருக்க.
மறுநாள் காலை சூரப்பனூர் கிராமத்துக்கு அரசு அதிகாரிகள் படை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளும் தூர் வார பட்டு பெரிய பொது கிணற்றில் மின் மோட்டார் பொறுத்த பட்டு தண்ணீர் விடாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட.
அன்று முதல் செந்தில்குமரன் மனதில் மட்டுமல்ல அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எம்ஜியார் நிரந்தர ஹீரோ ஆனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?...
வாழ்க எம்ஜியார் புகழ்..தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.......... Thanks...
-
#தொண்டர்களின் #மைண்ட்வாய்ஸ்
1977 பொதுத்தேர்தலில் பொன்மனச்செம்மல் அருப்புக்கோட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த தொகுதிக்கு எளிமையும், மகளுக்குத் தொண்டாற்றும் கடமை உணர்வும் கொண்ட பஞ்சவர்ணம் என்பவருக்குத்தான் சீட் கிடைக்கும், என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு சில முக்கிய காரணங்களால் புரட்சித்தலைவரே அத்தொகுதியில் நிற்கும்படி ஆகிவிட்டது.
ஆனால்.. மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம், தனக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது, நம் பொன்மனச்செம்மலுக்கும் தெரியும்.
தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெறுகிறார். முதல்வர் ஆகிறார். நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு வள்ளல் பெருந்தகை அருப்புக் கோட்டைகு வருகிறார். பஞ்சவர்ணம், அங்கே, கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார்.
கட்டுக்கடங்காத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில், மக்கள்திலகம் மைக்கைப் பிடித்து,
“நீங்களெல்லாம் ஏன்-எதிர்க்கட்சிகள் கூட, சென்னை கோட்டையில் அமர்ந்திருக்கும் இந்த ராமச்சந்திரனை, அருப்புக் கோட்டை தொகுதியில் இனி பார்க்க முடியுமா? இவரால் இந்தத் தொகுதிக்கு என்ன விமோசனம் பிறக்கப் போகிறது! அவசர தேவைக்கு எப்படி பார்க்க முடியும்? என்றெல்லாம் நினைக்கலாம். எதிர்க்கட்சிகள் விமர்சனமே செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம்.
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராமச்சந்திரனை இனி இங்கே இருக்கிற உங்கள் அனைபை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம் வடிவில் பார்க்கலாம். இனி அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம். கோரிக்கைகளை வைக்கலாம். அதையெல்லாம் உடனடியாக தீர்த்து, வைப்பேன். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறேன். என்று வள்ளல் சொன்னவுடன் கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.
விழிகளில் வேதனையை தேக்கி வைத்திருந்த பஞ்சவர்ணத்தின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. இனி அருப்புக்கோட்டைக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்று சொல்லும் அளவுக்கு நம் வளல் பஞ்சவர்ணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்...
தொண்டனிடம் உண்மையான அன்பு, கொள்கை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு...இப்பல்லாம் காணாமல் போனவைகளில் "லிஸ்ட்" ல போயிருச்சுன்னு சொல்கிற
உங்களின் "மைண்ட் வாய்ஸ்" நான் 'கேட்ச்' பண்ணிட்டேன்............. Thanks.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15/04/20* *-சன் லைப் -* * * *காலை 11மணி* -* * * நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * *முரசு டிவி* * - காலை 11 மணி &இரவு 7 மணி _நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * * * *மூன்* டிவி* * - இரவு* 7 மணி* * - நல்ல நேரம்*
* * * * * * * * *மெகா 24 டிவி _ இரவு 9 மணி -தர்மம் தலை காக்கும்*
16/04/20* * சன்* லைப்* *- காலை 11 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * * * *மெகா டிவி* *- மதியம் 12 மணி* *- கலங்கரை விளக்கம்*
* * * * * * * * * *வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி _ நீரும் நெருப்பும்*
17/04/20* * புதுயுகம் டிவி -இரவு 7 மணி* - நீரும் நெருப்பும்*
18/04/20* முரசு டிவி - காலை 11 மணி & இரவு 7 மணி- விவசாயி*
20/04/20* *-ஜெயா டிவி* *-காலை 10 மணி -இதய வீணை*
21/04/20* -ஜெயா டிவி* *- காலை 11 மணி* - பணக்கார குடும்பம்*
* * * * * * * * * *சன் டிவி* * - இரவு 9.30 மணி - அன்பே வா*
22/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி -தாய்க்கு பின் தாரம்*
23/04/20* -ஜெயா டிவி* - காலை 11 மணி* -குலேபகாவலி*
* * * * * * * * * சன் டிவி* * *-இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*
24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*
-
“நீயும் நாடோடி மன்னன் தான்” – வாலி
https://www.thaaii.com/?p=25493
*****
“மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
திருச்சி தியாகராஜ பாகவதர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.
சிலம்புச் செல்வர் திரு.ம.பொ.சி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்கள்.
சிலம்புச் செல்வரைக் குறித்துப் பாடிவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது-
“செங்கோட்டை சாய்ந்தாலும்
உன் கோட்டை சாயாது” என்று பாடினேன்.
இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு புலவர் பெருமக்கள் சிரக்கம்பம் செய்தார்கள்.
இதே விழாவில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாராட்ட அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும் வந்திருந்தார்கள்.
நான் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது –
“நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்குச் சென்ற
இராமச்சந்தினல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியாவிற்கு வந்த
இராமச்சந்திரன் !
இருப்பினும்
என்னளவில்
இருவரும் ஒன்றே !
அந்த ராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்;
நீயும்
உதயசூரியனின்
வழித்தோன்றல் தான்.
அவனும்
ஜானகி மணாளன்;
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவியாசை
பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்;
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னன் ஆனான்.
நீயும்
நாடோடி மன்னன் தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே-
உன்னிடத்திலும்
‘வில் பவர்’ இருந்தது.
அவனும்
குகன் என்னும்
படகோட்டியை
குவலயம் அறியச் செய்தான்;
நீயும்
படகோட்டியின்
பெருமையைப்
பாரறியச் செய்தாய்.
நீயும்
அவனைப் போல்
மீனவ நண்பன்.
அன்று
அவன் வாக்கு
அரச கட்டளை.
இன்று
உன் வாக்கு
அரச கட்டளை.
அந்த ராமசந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்
நீ
மனிதனாக இருந்து
தெய்வமாக
மாறியவன்;
அதனால் தான்
உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயோ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.
நீயே
எனக்கு
நிஜமான கருணாநிதி”
இப்படி நான் பாடியதும் தொந்தி குலுங்கச் சிரித்தார்கள் வாரியார் ஸ்வாமிகள்.
பிறகு வாரியார் பேசும்போது சொன்னார்கள்.
“பொன்மனச் செம்மலைப் பாராட்டி ‘வாலியார்’ சொன்னதை இந்த ‘வாரியார்’ அப்படியே வழிமொழிகிறேன்”.
வாரியார் ஸ்வாமிகள் இப்படிச் சொன்னதும், அண்ணன் எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“இந்தப் புன்னகை என்ன விலை?’ என்று ஒரு காலத்தில் நான் பாடியது என் நினைவுக்கு வந்தது.”
புதிய பார்வை – இதழில் தொடராக வெளிவந்த வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற தொடரிலிருந்து ஒரு பகுதி........ Thanks...
-
“மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்”- மு.ராமசாமி
https://www.thaaii.com/?p=25219
***
“இந்த நிமிடம் வரையும் எம்.ஜி.ஆர் எனக்குள் அரணாய் நின்று, தன் ஆட்சியை எனக்குள் நீட்சி பெற வைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.
இன்றைக்கும் என்னுள் விருட்சமாகி நிற்கும் அந்த விதையின் நிழலில் நின்று கொண்டுதான், எந்தவித அசூசையுமின்றி நாடகக்காரனாய் உலகத்தை அதன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடிகிறது.
“என்னடா.. பொல்லாத வாழ்க்கை.. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?” வகையறாப் பாடல்கள் எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் எந்தக் காலத்திலும் வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை என்னால் இப்பொழுதும் உறுதியாகக் கூற முடியும்.
“நாம பாடுற பாட்டும், ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்…
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்”
என்பது தான் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களின், பாடல்களின் அடிச்சரடாயும், அழகியலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவிறக்கம் தான் எம்.ஜி.ஆர் படங்கள் என்று ஒற்றை வரியில் எளிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
1969 ல் ‘நம்நாடு’ திரைப்படத்தில்
“பாலூட்டும் அன்னை
அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை
நல்வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நடைபோடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று…”
– என எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திப் பிஞ்சு நெஞ்சங்களைப் பஞ்சினால் போர்த்தியிருப்பார்.
43 ஆண்டுகளுக்கு முன் பாரிய படைப்புகளால் சமூகக் கருத்துக்களை மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்!
அதே போல்,
“மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை”
என்று நிழல் பிம்பமாய் வாயசைத்து,
“அஞ்சாமை திராவிடர் உடைமையடா”
என்று புதுக்கணக்கில் அதைப் பெயர்த்தெழுதி, அதில் பொதுவுடமைக்கான வித்தை, அந்தப் பொடி வயதிலேயே என் மனசுக்குள் நிஜமாய் ஒளித்து வைத்ததும் எம்.ஜி.ஆர் தான்.
அந்த வயதில், என் சூழலில், என் வயதுப் பையன்களின் சமூகக் கோபத்திற்கு வடிகாலாய் அமைந்திருந்தது,
“நாளை உயிர் போகும்; இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா” என்ற எம்.ஜி.ஆர் தான்!
‘தோன்றத் தான் போகிறது சம உரிமைச் சமுதாயம்’ என்கிற அவரின் கனவு தான்!
பட்டுக்கோட்டையாரின் பாடல்களாக இருந்தாலும் சரி, அல்லது தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, மருதகாசி, கண்ணதாசன், லட்சுமண தாஸ், புலமைப்பித்தன், வாலி என்று எவருடைய பாடல்களாய் இருந்தாலும் சரி, படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கிற பாடல்கள் எல்லாமே,
அவரின் முத்திரை அறிவிக்கைகள் தாம்!
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
என்ற கேள்வியை அவரே எழுப்பி, ‘மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார்’ என்ற பதிலையும் தந்து நிற்கிற எம்.ஜி.ஆர், அப்போது என் இளம் நெஞ்சுக்குள் இலவம் பஞ்சாய்க் கிடந்தார்.
“ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை” என்றும்,
“சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா,
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவம் அம்மா” – என்றும்,
“வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே” – என்றும்,
திரையில் அவர் நடத்திய சமதர்மப் பாடம் தான், பசுமையாய் எனக்குள் இன்னமும் இனிமை பேசிக் கொண்டிருக்கிறது.
பாடல்கள் பலவிதமாக இருக்கலாம். பலரால் புனையப்பட்டும் இருக்கலாம். ஆனால் பாடலின் உள்ளடக்கம் என்பது எம்.ஜி.ஆர் தான்!
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே” என்பது தான்!
“உழைப்பவர்கள் உரிமை பெறுவதில் தான் இன்பம்
உண்டாகுமென்றே நீ சொல் தோழா” என்கிற அவரின் கனவு தான்!
“உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்கிற அவரின் பெரு வியப்பு தான்!
“கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்துத் தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக” என்கிற அவரின் சிந்தனைச் சிறகு தான்!
“அழுதவர் சிரிப்பதும்,
சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை” என்கிற அவரின் உறுதி மிக்கத் தெளிவு தான்!
அதனால் தான் ராஜா காலத்துக் கதைப் பின்புலத்தில் கூட அவரால், “தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று உணர்வுபூர்வமாய் வாயசைத்துவிட முடிகிறது.
அவரின் கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனிலும்’,
“புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்” என்று தான் உண்மையாய் அவர் வாயசைக்கிறார்.
அவரின் அத்தனைப் படங்களையும் இணைக்கின்ற பொதுக்கோடு,
“எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்” என்பது தான்!
பொதுவுடமை பேசும் இந்தவகைச் சிந்தனைத் தடத்தில் தான், அதற்கான சூழல்களைத் திரைப்படத்தில் உருவாக்கித் தன் கருத்தைப் பதிவு செய்தபடி, அவரின் திரைப்பயணமும் அமைந்திருந்தது.
அன்று அவர் உள்ளுக்குள் விதைத்த விதை, அறுபதிலும் வளையாமல் புதுக்கதைகள் எனக்குள் பேசிக் கொண்டேயிருக்கிறது”
(முனைவர்.மு.ராமசாமி எழுதிய “திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை” என்ற நூலில் இருந்து ஒரு பகுதி…)........ Thanks...
-
#எம்ஜிஆர் #நினைவலைகள்
#நான்கு #காட்சிகள்...!
(தலைப்பே அமர்க்களமாயிருக்கே!! )
You tube channel ல்
https://youtu.be/58M4Xw3MntY (காலை)
https://youtu.be/rDgTVyjV4KE (பகல்)
https://youtu.be/gDPj0RgpgEU (மாலை)
https://youtu.be/GqdzayISogI (இரவு)
வாத்தியார் பிறந்த இந்நன்னாளில்
வித்தியாசமான சிந்தனை...
பாராட்டுக்கள்...!
#தமிழ்நதி @ #எம்ஜிஆர் #சேனல் குடும்பத்திற்கு உலகிலுள்ள புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள்
எம்ஜிஆர் நினைவாயலத்தைப் பற்றி நிறைய சேனல்களில் பார்த்திருப்போம். மிகப் பிரமாதமாகவும் இருந்திருக்கலாம்...பின்னணிக் குரலிலும், தொழில் நுட்பத்திலும்...பின்னியிருக்கலாம்...
மறுப்பதற்கில்லை...
ஆனால் இந்தக் காணொளியில் #உயிர் #இருக்கிறது என்பது தான் இதன் தனிப்பெரும் சிறப்பு...! ஏனெனில் இதில், வர்ணனையாளர், பேட்டியளிப்பவர் என அனைவருமே தீவிர எம்ஜிஆர் பக்தர்களாயிற்றே! எனவே இதைப் "#புனிதப்பேட்டி" என்று கூறலாம்...
இந்தக் காணொளிகளின் மூலம் நம் புரட்சித்தலைவர் இந்த இல்லத்தில் நடமாடுவதை ஆத்மார்த்தமாக நாம் உணரலாம்...
எல்லாக் காணொளிகளுமே சிறப்பென்றாலும், அந்த இரவுக்காட்சிக் காணொளி இருக்கிறதே!!! அடடா!!! பார்ப்பவர்களை அப்படியே மனம் உருகச்செய்துவிடும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது...!
இந்தப் பேட்டியில் நாம் இடம்பெறாமல் போய்விட்டோமே! என ஒவ்வொருவரையும் அவர்களையுமறியாமல் நெஞ்சம் கனக்கச் செய்வது திண்ணம்...!
வாத்தியார் வாழை போல...! தலைமுறை தலைமுறைகளாய் நம்மை எப்படித் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் பாருங்கள்...!
உலகில் யாருக்குமே இல்லாத சிறப்பு இது ....!
வாழ்க...!
புரட்சித்தலைவர் திருநாமம் ( Thalaivar Birthday Functions... Posts....... Thanks...
-
எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 14.
அன்று பெரும்பாலும் வானொலி மூலமாகத்தான் பல பாடல்களும் நமக்கு அறிமுகமாகும் . பொதுவாக கவர்ச்சிப் பாடல்களுக்கே பயன் போன ஈஸ்வரி அவர்களின் குரலில் , அந்த வயதிற்கு முதன் முறையாக ஒரு தனிப்பாடலை ...ஒரு வாழ்த்துப்பாடலாக கேட்க , அவரின் குரலின் இனிமை ..எண்ணெய் வெகுவாகக் கவர்ந்தது. மற்றுமொரு சங்கதி அதில் நாதஸ்வர இசையும் கலந்து ஒழிக்க என் மனம் வரிகளில் புகுந்தது ...
"பிறந்த இடம் தேடி .
நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரையில்
தேசம் நன்மை பெறுக ..."
"ஆல மரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட .."
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே .."
ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது . இவர் மிகவும் சுருக்கமாகவே எழுதியுள்ளார் . கதைக்கு எழுத சற்று மிகைப்படுத்தியே கதைக்கு பொருந்தாத வரிகள் .. எம்.ஜி. ஆர். பார்த்து கே.ஆர். விஜயா. பாடுவதாக இருக்கும் . நான் ஆணையிட்டால் .. திரையில் ஒரு புரட்சி நாயகனை வாழ்த்தும் பாடல் .
ஆயினும் ஈஸ்வரி அம்மா குரலில் , மெல்லிசை மன்னர்கள் இசையில் இந்தப் பாடல் என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் . பின்னாளில் தனது கட்சிப்பரப்புக்காக இப்பாடல் மூளை முடுக்கெல்லாம் ஒலி பரப்பப்பட்டது .
கோதை தனபாலன்
..https://www.youtube.com/watch?v=HRLSkhnGWu0....... Thanks.........
-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks...
-
#மக்களின் #மனக்கண்ணாடி
பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.
அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.
வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.
மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.
இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.
இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.
கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!
அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.
இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.
அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.
நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.
‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.
அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”
மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடிமன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.
காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்
#மக்கள்திலகம்
#ஒருவரே
#மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்....... Thanks...
-
#இன்றைய #தேவை
எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-
எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.
மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
#ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.
அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!......... Thanks...
-
#இறைவனின் #சித்தம்
திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.
அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...
சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...
நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)
போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...
பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...
மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...
துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...
"#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."
இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை........ Thanks...
-
#வியப்பும் #பக்தியும்
பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...
திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...
டிரைவரின் செய்கையைப் பார்த்த
ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"
ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???
அதற்கு டிரைவர்,
"இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
என்றதும்...!!!
ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!
பிரமித்துப்போனார்...பேராசிரியர்...... Thanks...
-
“எம்.ஜி.ஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்”
- கவிஞர் கண்ணதாசன்
https://www.thaaii.com/?p=25662
#
1980 ஆம் ஆண்டு மே மாதம்.
தமிழகத்தில் அப்போது தான் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.
கலைத்தவர் இந்திராகாந்தி.
சளைக்கவில்லை எம்.ஜி.ஆர். இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றி.
மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.
அதற்கான தேர்தல் வேலைகளில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரைச் சந்தித்த கவிஞர் கண்ணதாசன் அந்த அனுபவத்தை அப்போது வார இதழ் ஒன்றில் எழுதிக் கொண்டிருந்த “சந்தித்தேன்.. சிந்தித்தேன்” தொடரில் எழுதினார்.
அந்த அனுபவம் உங்களுடைய பார்வைக்கு :
“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்”
“அவர் உற்சாகமாக இருக்கிறார். சிரித்த முகத்தோடிருக்கிறார். திடகாத்திரமாகவும், சுறுசுறுப்போடும் இருக்கிறார், முன்பைவிடப் பளபளப்பாக இருக்கிறார்.
மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்னை வந்த எம்.ஜி.ஆரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆற்காடு முதலி தெருவில் சந்தித்த போது, நான் ஆச்சர்யப்படவில்லை.
சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிலே தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் தெரிந்தது.
நியாயம்தான். தமிழ்நாடு பூராவிலும் அவர் மீது ஓர் அனுதாபம் இருக்கிறது.
“நாங்கள் இந்திரா வரவேண்டும் என்று விரும்பினோமே தவிர, எம்.ஜி.ஆர் போக வேண்டும் என்று விரும்பவில்லை” என்பது ஏழை எளிய மக்களின் வாதம்.
“டில்லிக்கு இந்திரா, நம் ஊருக்கு எம்.ஜிஆர்” என்றே எங்கே பார்த்தாலும் பேசுகிறார்கள்.
அதை நேரிலேயே கேட்டு, மக்கள் வெள்ளத்தைச் சந்தித்துத் திரும்பிய அவர், நாணயமான நடத்தையை இந்த நாட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.
அவரைவிட்டு விலகிச் சென்றவர்கள் கூட அவரைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லையே!
சட்டசபை கலைக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவில்லை. காரணம் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் தவற விட்டதில் எனக்கு வருத்தம் இருந்தது.
ஆனால் நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்? ஆகவே இன்று அவரைச் சந்தித்தேன்.
குறைந்தபட்சம் 135 இடங்களை அ.தி.மு.க பெறும் என்று அவர் நம்புகிறார்.
நாட்டு மக்கள் ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி அவர்கள் மனோபாவத்தைக் கணிப்பது கடினமான காரியமல்ல.
வங்காளத்தையும், கேரளாவையும் போல அவருக்குப் பத்து, இவருக்குப் பத்து என்ற நிலைமை எப்போதுமே தமிழ்நாட்டில் இல்லை. ஓட்டுச் சீட்டை ஒரே மாதிரிப் போட்டு ஒரு கட்சியை மெஜாரிட்டிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர் ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் என்னிடம் அரசியலைப் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக என்னோடு வந்திருந்த என் மகன் கலைவாணனுக்கு ஒரு மணி நேரம் புத்திமதிகளைக் கூறினார்.
சினிமாவில் நடிக்கும் கலைவாணன் உடம்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் சில ஆசனங்களைச் செய்து காட்டினார்.
கலைத்துறையில் அரை நூற்றாண்டாக வளர்ந்து கொண்டிருக்கும் அவர், உடம்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முறை கண்டு என் மகனே கூட ஆச்சர்யமடைந்தான்.
தேர்தல் சூடு பிடித்திருக்கும், இந்த நேரத்தில் அது பற்றிப் பரபரப்பே கொஞ்சம் கூட அவரிடம் காணப்படவில்லை.
“வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு” என்றார் அவர்.
இடையிடையே வருகிற டெலிபோன் கால்களுக்கு அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரிடம் நிதி கொடுப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.
நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்.
‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு. ‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல, யாரையும் ரசித்ததில்லை.
‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.
ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன்.
“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை” என்று.
அது இன்று பலிக்கிறது.
நம்பாமல் சென்று விட்டவர்கள் இன்று அஞ்சாத வாசம் செய்கிறார்கள். நம்பித் துணை நிற்போர், நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம், விழுவது போல் தெரியும், எழுந்து விடுவார். நீண்டகால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.
தமிழர்கள், அவரைத் ‘தமிழன்’ என்றே அறிவார்கள். அவரை வேறு பாஷைக்காரர் என்றோ, கப்பல் பேரத்தில் ஊழல் செய்தவர் என்றோ சொல்லப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
நாட்டு மக்கள் முழுக்க முழுக்க அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நேரத்தில், இந்தத் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிக்கைகளும், விதவிதமான சுவரொட்டிகளும், மேடை முழக்கங்களும் வெறும் தேர்தல் காலக் கடமைகளே! அவற்றைப் பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ மக்கள் ஓட்டுப் போடுவதில்லை.
கம்யூனிஸ்டுகளும், முக்குலத்தோரும், நெடுமாறனும் செல்வாக்குப் பெற்ற மதுரையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவரது ஆழ்ந்த அறிவு தெரியவில்லையா?
‘இந்திராவா, எம்.ஜி.ஆரா?’ என்று வந்தபோது மக்கள் இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்கள்.
எம்.ஜி.ஆரா, தி.மு.க வா என்று வரும் போது…
பொறுத்திருந்து பார்ப்போம்.”
நன்றி : ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ – கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து… கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.
****
#mgr
#MGRforever
#Kannadasan
#MGRamachandran............ Thanks.........
-
.#அன்று...! #இன்று...?
கருணாநிதி குடும்பம் நொடித்திருந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் 1971ல் உதவிய சினிமாத் தொழிலில் சுய தயாரிப்பில் கருணாநிதி, முரசொலி மாறன் பல படங்களை எடுத்து தங்கள் வீடு வரை அடமானத்தில் இருந்த போது மக்கள்திலகம் நடித்து கொடுத்த படமே #எங்கள்_தங்கம்.
#எங்கள்_தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நிகழ்வில்..
அரங்கில் பேசிய மாறன்..
எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. #முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் #வட்டி கூட கட்ட முடியாத நிலை..
என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் #புரட்சி_நடிகர் அவர்கள். பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்... அது மட்டுமின்றி, #ஒரு_பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்..
இன்று எங்கள் குடும்பம் அனைத்து #கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர் தான்.. கோபாலபுரம் வீடு அவர் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...
நானும், எங்கள் குடும்பமும் #ஆயுள் உள்ளவரை அவரை மறக்கக் கூடாது..
அடுத்து பேசிய #கருணாநிதி:
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் #எனது #வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...
இவை அனைத்தும் அடுத்த நாள் 17-01-1971 ....#முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது............ Thanks...
-
#லதாம்மாவின் #சேவை #கட்சிக்குத் #தேவை
எம்ஜிஆர் லதாம்மா வின் வழக்கம்
போல மனம்திறந்த, யதார்த்தமான, நேர்மையான பேட்டி...இன்று பிற்பகல் 2மணிக்கு....தந்தி டிவியில்...
புரட்சித்தலைவரைப் பற்றிய சுவாரசியமான பல விஷயங்கள் அலசப்பட்டன...
தன் தாய்க்கு புரட்சித்தலைவர் செய்த முக்கியமான உதவியைப் பற்றி லதாம்மா பகிர்ந்தது இதுவரை யாருமே கேள்விப்படாத, நெகிழ்ச்சியான ஒன்று...
இதுவரையிலும் எந்தப்பதவியியையும் எதிர்பாராத, உண்மையான, தூய எம்ஜிஆர் விசுவாசிகளில், லதாம்மா மிக முக்கியமானவர்...
எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு, முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டுமென்பது எம்ஜிஆர் பக்தர்களின் விருப்பம் மட்டுமல்ல...
தமிழக மக்களின் விருப்பமும் கூட...
இன்றைய சூழலில் கழகத்திற்கு எம்ஜிஆர் லதாம்மாவின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்பதை மனிதிற்கொண்டு கட்சி மேலிடம் இனியும் தாமதிக்காது எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, #கட்சியில் #முக்கியப் #பொறுப்பு வழங்கவேண்டுமென்று எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கிறேன்...
YOU TUBE LINK...
https://youtu.be/DlhLcH0kL78........ Thanks...
-
#மூன்றெழுத்தில் #என் #மூச்சிருக்கும்”
என்று கடமையை மூச்சாக கொண்ட நம்ம வாத்தியாருக்கு அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட லட்சோபலட்சம் பக்தர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆரை குறிப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்ஜிஆருக்கும் #மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரம்பித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்...!
அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.
அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்ஜிஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்ஜிஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்ஜிஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்ஜிஆருக்கு வயது மூன்று.
என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்ஜிஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்ஜிஆர்.
நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்ஜிஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.
1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்ஜிஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்ஜிஆர் மட்டுமே.
1967 ஜனவரி 12 ந்தேதி எம்ஜிஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்ஜிஆர் கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.
ஜானகி அம்மையார் எம்ஜிஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.
எம்ஜிஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை (மூன்று கைகள்) கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ..."#ஈகை" எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.
நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்ஜிஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார்...
எம்ஜிஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.
முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் தன் வாழ்நாளிலேயே மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர்.
“செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்ற பாடல் வரிகள் வாத்தியாருக்கு மட்டுமே பொருந்தும் ......... Thanks...
-
ஸ்ரீலங்காவில் தமிழ் ரீபல்ஸ் மூலம் கெரில்லா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ராமச்சந்திரன் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
வறுமைக்கு எதிரான சர்வதேச யுத்தத்தில் எம்.ஜி.ஆர் தனது குறியீட்டை செய்துள்ளார். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம் உலக வங்கி இதேபோன்ற வறுமை ஒழிப்பு திட்டங்களை வேறு எங்கும் நடத்துவதற்கும் ஒரு அளவுகோல்.
--வாஷிங்டன் போஸ்ட் [அமெரிக்கா]
Ramachandran was a central figure in efforts to end the guerrilla war by Tamil Rebels in Sri Lanka.
MGR has also made his mark in International War against poverty. The Tamil Nadu Nutrition Scheme launched by MGR is not the standard by which the World Bank measures similar anti-poverty schemes elsewhere.
--Washington Post[USA]........... Thanks to mr.SB.,
-
கோடிகள் கொடுத்தத் தலைவர்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...
இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...
அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...
சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...
தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...
தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...
'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’......... Thanks.........
-
கோடிகள் கொடுத்தத் தலைவர்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...
இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...
அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...
சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...
தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...
தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...
'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’......... Thanks.........
-
#நாடோடி_மன்னன்
'தீன் தீன்கா சுல்தான்' என்ற இந்தி படத்தைப் பாா்த்தாா் பேரறிஞா் அண்ணா அவா்கள் .
மூன்று நாட்கள் மட்டுமே ஒரு நாட்டிற்கு இராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன் ,
அந்த குறுகிய காலத்திற்குள் அந்த நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பதுதான் என்பதுதான் அப்படத்தின் கதை .
இப்படம் அண்ணாவை மிகவும் கவா்ந்து விட்டது . அதனால் ஒரு கூட்டத்தில் பேசும்போது , " தீன் தின்கா சுல்தான்' என்ற ஒரு திரைப்படத்தைப்பாா்த்தேன் ;
மூன்று நாட்கள் மட்டும இராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன் , அந்நாட்களுக்குள் , நாட்டிற்குத் தேவையான ,
பல திட்டங்களைத் தீட்டி , அந்த நாட்டை எப்படி செல்வச் செழிப்படையச் செய்கிறான் என்பதுதான் கதை ..
இந்த நாட்டை ஆள , எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள் . அதாவது என்னை , ஏக் தின்கா சுல்தான் - ஒருநாள் இராஜாவாக ஆக்குங்கள் ; இந்த உலகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன் " என்ற வகையில் பேசினாா் .
இப்பேச்சு , புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.,மனதில் பதிந்து போனது . இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான் 'நாடோடி மன்னன்' திரைப்படம் .
இப்படத்தை , பெரும் பொருட் செலவில் , தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும் , கடன் வாங்கியும் , தயாாித்தாா்
எம்.ஜி.ஆா்.,
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் , எம்.ஜி.ஆாின் எதிா்காலம் என்ற பேச்சு எழுந்தபோது ,
" இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் ; இல்லையென்றால் நாடோடி ....." என்று தன் நிலையைக் கூறினாா் எம்.ஜி.ஆா் .
ஆனால் இப்படம் மிகப் பொிய வெற்றியைப் பெற்றது .
'நான் மன்னன்தான் ....' என்பதை நிரூபித்தாா் எம்.ஜி.ஆா்., தான் தான் சக்கரவர்த்தி என்பதையும் நீக்கமர நிரூபித்தார் புரட்சி நடிகர்......... Thanks.........
-
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!.......... Thanks.........