https://scontent.fyto1-2.fna.fbcdn.n...f6&oe=5EC785D9
Printable View
இன்று - 23.04.2020 பகல் 01.30 P.M. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" பணம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், பத்மினி மற்றும் பலரும் நடித்து உள்ளனர்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...f0&oe=5EC6D28A
இன்று 23/04/2020 இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி.யில். நடிகர்திலகம் நடித்த " வைர நெஞ்சம் " படம காண தவறாதீர்கள்.
"அடி நீதானா அந்தக் குயில்......யார் வீட்டு சொந்தக் குயில்.....ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி.....பறந்ததே ஒலகமே மறந்ததே....."
இன்று 23/04/2020 மாலை 06.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" முதல் மரியாதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி கணேசன், ராதா
வடிவுக்கரசி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'காகிதத்தில் கப்பல் செய்து..கடல் நடுவே ஓட விட்டேன்..மணல் எடுத்து வீடு கட்டி..மழை மீதில் நனைய விட்டேன்.. மழை மீதில் நனைய விட்டேன்..'
இன்று 23/04/2020 மாலை 4.00 p.m. மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" அன்புக்கரங்கள் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
23-04-2020,
தொலைக்காட்சி சேனல்களில் இன்றைய நடிகர் திலகம் திரைக்காவியஙள்,
காலை 11 மணிக்கு முரசு சேனலில் - படித்தால் மட்டும் போதுமா,
பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்- பாகப்பிரிவினை,
பிற்பகல் 1:30 க்கு வசந்த் டிவியில்- பணம்
மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்- அன்புக்கரங்கள்,
மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில்- முதல் மரியாதை
இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் - வைர நெஞ்சம்
இரவு 7 மணிக்கு முரசு டிவியில்- படித்தால் மட்டும் போதுமா
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...52&oe=5EC72F40
Thanks...
சிவாஜி கணேசனின் தனித்துவமான
குணநலன்களை, நாம் அறிந்தேயாக வேண்டும் நட்புகளே....
தனது வாழ்நாள் முழுவதும், யாரையும் புண்படுத்தாத, பாதிக்கப் படாமல், முழு மனிதனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் கணேசமூர்த்தி எனும் நிறைமனிதர்....
1988 ஆம் ஆண்டு, சிவாஜி அவர்கள் தனிஇயக்கமாக, "தமிழக முன்னேற்ற முன்னணி" கட்சியைத் துவக்கினார்....
முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தையே, செலவு செய்து கட்சியை வளர்த்தார்.......
யாரிடமும், ஒரு நயாபைசா கூட, அவர் நன்கொடையாக பெறவில்லை....
கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் நன்கொடை ரசீதுகளை தயாரித்ததையெல்லாம் தன் கைப்படவே கிழித்தெறிந்தார்..... அதுமட்டுமன்றி, த.மு.மு.சார்பாக நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவிற்காக தனது சொந்த
சேமிப்பிலிருந்தே, லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்தார்....
தேர்தல் முடிந்த பிறகு தன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களையும் அழைத்து, அவர்கள் செய்த சுவர் விளம்பரங்களை அழித்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினார்.....
விளம்பரம் இல்லாமல், கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்றவைகளுக்கு, கோடிகளில், இன்று வரை, சிவாஜி- பிரபு அறக்கட்டளை சார்பில் சேவைகள் தொடர்கிறது... .அனைத்து திரையுலகிலுள்ள, நலிந்த நிலையிலிருக்கும் வாரிசுகளுக்காக, ஆண்டு தோறும் கவ்விக்காக, பெருந்தொகையாகக் கொடுத்தார்....
அதையே, இப்போதும் அவரது இரு புதல்வர்களும் (பிரபு, ராம்குமார்) தொடர்கின்றனர்....
திரைப்படம், அரசியல், ஆன்மீகம், பொது வாழ்வு என எத்துறையிலும் வெளிப்படையாக வாழ்ந்து, நன்மதிப்பை பெற்றதால்தான், அவர் இன்றும் நம் மனதில் கோயில் கொண்ட இறைவனாக உயர்ந்து நிற்கிறார்..,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...56&oe=5D2E9A95
நன்றி Nirmal Thiyagarajan
தோழர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிவரும் நடிகர்திலகத்தைப் பற்றிய " செல்லுலாய்ட் சோழன்" தொடர் 'தமிழக அரசியல்' பத்திரிகையில் 50 ஆவது எபிசோட்டை இந்த வாரம்... எட்டியிருக்கிரது,
நான் எத்தனையோ நடிகர்திலகத்தை பற்றிய தொடர்கள் படித்திருக்கிரேன், ஆனாலும் இந்த தொடரில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை படித்ததில்லை,
மூடி மறைக்கப்பட்ட பல உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது,
உதாரணமாக ஆரம்பத்தில் அவர் எழுதிய தொடரில்
பராசக்தி படத்தின் வெற்றி நடிகர்திலகத்தை உச்சத்தில் நிறுத்தியது அவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை நடிப்பு இவற்றுக்கு ஈடு கொடுக்க அப்போதைய மற்ற ஹீரோக்கள் என்ன செய்வதென புரியாமல் விழிபிதுங்கினர்,
அப்போது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் தங்கை படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தார்
இதனை கண்டித்து எம்ஜிஆர் முகநூல் வாதிகள் தமிழக அரசியல் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இன் தோல்வியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் தொடரில் எழுதக்கூடாது என எச்சரிக்கை செய்து இருக்கிறோம் என்கிற செய்திகள் முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது , இன்பா அவர்களை கடுமையாக தாக்கி இருந்தார்கள்.
நடிகர்திலகத்தை நேசிப்பவர்ககளிடம் ஒற்றுமை கிடையாது என்ற கோணத்தில் அவர்களின் பதிவையும் புரிந்து கொள்ள முடிகிறது
50 வது தொடரில் இடம்பெற்ற முத்தாய்ப்பான நிகழ்வுகள்
"வ உ சி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் என்பதால் அவரின் வரலாற்றை படமாக எடுக்கும்போது எந்தவித தவறான தகவலும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது படக்குழு.
படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாத்திரமாகவே மாறி இருந்தனர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளையும் தியாகத்தையும் மக்களுக்கு கொண்டு போகும் அற்புத படமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழனை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை என்பது வேதனையின் உச்சம்,
நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்ப இருந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பிய கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்து திமுக பயந்தது. காங்கிரஸ் மெத்தனத்தில் கோட்டை விட்டது,
வ உ சி அவர்களை கடைசி காலத்தில் கேட்பார் அற்று விட்டது போல் காங்கிரஸ் க்காக வந்த படத்தை காங்கிரஸ் கேட்பார் அற்று விட்டது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் , வரி விலக்கு அளிக்க வேண்டிய படம் என்று தெரிந்து இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருந்தது.
காங்கிரஸின் இது போன்ற மெத்தனங்கள்தான் அதன் வாக்கு விழுக்காடு 4 % என சரிந்தது,
கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு காங்கிரஸ் வழங்காத வரி விலக்கை 1967 ல் ஆட்சியை கைப்பற்றிய திமுக அளித்தது.
நமது நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் எவ்வளவு குருதியைச் சிந்தி துன்பப்பட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த பணியை கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களின் மூலம் தான் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டு வரி விலக்கை அளித்தது திமுக அரசு.
தனது படத்திற்கு காங்கிரஸ் அரசு வரி விலக்கு அளிக்காதது சிவாஜிக்கு வருத்தம் என்றாலும் காமராஜர் மேல் கொண்ட பற்றினம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காங்கிரஸ் கொடியை தனது உயிராகப் போற்றினார் சிவாஜி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பது முன் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கிய சிவாஜி ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்,
முத்துராமலிங்க தேவரை முதுகுளத்தூர் கலவர வழக்கில் காமராசரின் அரசு கைது செய்ததால் தேவர் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மீது ஆத்திரம் கொண்டு இருந்தனர்
தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் என்ற பெயரை தவறிக்கூட உச்சரித்தாலும் தர்ம அடிதான் கிடைக்கும், அந்த அளவுக்கு அந்த மக்கள் மத்தியில் காங்கிரஸ். துடைத்தெரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடியோடு தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரப்புரை செய்யப் போனார் சிவாஜி காங்கிரஸ் மீது தேவர் இன மக்கள் கொண்ட வெறுப்பு சிவாஜியின் மீது திரும்பியது
வேல்கம்பு வீச்சரிவாள் என ஆயுதங்களை கொண்டு சிவாஜியைத் தாக்கினார்கள் சிவாஜி சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது ஆனாலும் சிவாஜி காங்கிரஸ் கொடியை தனது காரிலிருந்து கழற்றாமலே தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேவர் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் சிவாஜி மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்ததால் சிவாஜியின் வாகணத்திற்கு முன்பு பாதுகாப்புக்குச் சென்றார்கள்
இன்று காங்கிரஸ் என்று மார் தட்டும் எந்தத் தலைவரும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருந்த தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் யாரேனும் உண்டோ என்றால் பூஜ்ஜியம் தான் பதில்
கல்லெரியையும் அரிவாள் வெட்டையும் வேல்கம்பு தாக்குதலையும் எதிர்கொண்டு காங்கிரஸிர்காக உழைத்த ஒரே தலைவர் சிவாஜி மட்டும் தான்
காங்கிரஸ் கொடி மெல்ல மெல்ல தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் பறக்க தொடங்கியது.
காமராஜரோ, கக்கனோ, சி.சுப்பிரமணியமோ, லூர்து அம்மாவோ அதற்கு காரணமல்ல !
சிவாஜி! சிவாஜி! என்ற தனியொரு மனிதன் மட்டுமே காரணம்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியான சில மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வந்தது.
குலக்கல்வித் திட்டத்தால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த ராஜாஜி அந்தத் தேர்தலில் தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்தார்.
சுதந்திரா கட்சி என்ற பெயரில் ராஜாஜி நிறுவிய கட்சிக்கு என் ஜி ரங்கா தலைவர் ஆனார்.
ஏழை மக்களின் பிரச்சனைகள் மையப்படுத்தியே அரசியல் இயக்கங்கள் தோன்றியிருக்கின் றன, ஆனால் ராஜாஜி சுதந்திராக் கட்சியை நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் வேண்டி தொடங்கி இருப்பதாக அறிவித்தது இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் வாயை பிளந்தார்கள் ஆனால் ராஜாஜி அவைகளை சட்டை செய்யவில்லை.
காமராஜரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜாஜி, திமுக வுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என அறிவித்து காங்கிரஸின் வயிற்றில் புளியைக் கரைத்தார். திமுக விற்கு ராஜாஜி அளித்த திடீர் ஆதரவு திமுக தலைவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது
சுதந்திரா கட்சியில் அங்கம் வகிக்கும் பணக்காரர்கள் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை நன்கொடையாக தருவார்கள் என திமுக கணக்கிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜாஜி அமைத்த வியூகம் காமராஜரை சற்று யோசிக்க வைத்தது.
திமுகவின் வேகத்தோடு ராஜாஜியின் விவேகமும் சேர்ந்தால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமோ எனப் பயந்தார். ஆனாலும் கடந்த ஆட்சியில் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் கைவிட மாட்டார்கள் என காமராஜர் நம்பினார்.
காமராஜருக்கு எதிராக ராஜாஜி எழுப்பிய ராஜதந்திரம் பெரியாரை ஆத்திரம் கொள்ள வைத்தது, சாதிய அடிப்படையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராஜாஜியின் வளர்ச்சியை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன் காமராஜருக்கு ஆதரவளித்தார் பெரியார்.
திராவிட இயக்கத் தோழர்களை காங்கிரஸ் வெற்றிக்குப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சிவாஜி தனது மன்றப் பிள்ளை களை தேர்தல் பணி செய்ய களத்தில் இறக்கி விட்டார்
சிவாஜியை நம்பி பல வேட்பாளர் கள் தவம் இருந்தனர். சிவாஜி ஒருமுறை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்தால் போதும் வெற்றி உறுதி ஆகிவிடும் என நம்பினார்கள். வேறு எந்த தலைவரையும் தேடி அவர்கள் ஓடவில்லை தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர், சிவாஜி என்ற இரண்டில் மட்டுமே அடக்கம் என்பது அவர்களுக்கு தெரியும்.
* சிவாஜி பெட்டி நிறைய தனது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் ஒவ்வொரு சிறிய கிராமமாக பிரசாரம் செய்தார்.
சிவாஜி சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. போட்டி யிட்ட பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முடிந்த அளவு நிதியையும் அள்ளிக் கொடுத்தார். *சிவாஜியிடம் நிதி பெறாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை.
ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரம் செய்து விட்டு சிவாஜி திண்டுக்கல் வரும்போது அவருடைய தொண்டை புன்னாகிப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொன்டு சிவாஜி அந்த வலியோடு மறு நாளும் பிரசாரம் தொடர்ந்து செய்தார்.
* தனது உடல, பொருள், ஆவி என அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்ட சிவாஜியைத் தலைவராகப் பார்க்க காங்கிரஸ் தவறி விட்டது. காமராஜரின் தொண்டன் என்ற ஒற்றை சொல்லிற்குள் அவரைச் சுருக்கிக் கொண்டு அரசியலை கச்சிதமாக செய்தது.
*1962 சட்டமன்ற தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பஸ் முதலாளி நடேச முதலியார் களத்தில் நின்றார். *தனது மாநசீகக் குருவான அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் சிவாஜி பிரசாரம் செய்யவில்லை. *மனித நேயமும் செய்நன்றி மறவா குணமும் சிவாஜியிடம் இருந்ததால்தான் அவர் மற்றவர்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
*சிவாஜியின் அரசியல் பயணங்கள் பற்றிய நிகழ்வுகளை எல்லா பத்திரிகைகளும் மூடி மறைத்து அவரை ஒரு நடிகராகவே முன்னிலைப்படுத்தி முனைந்து வந்தன.
சிவாஜி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தாய்மார்களும் பெருமளவு திறன்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள். தங்கள் குழந்தைகளை சிவாஜி கையில் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்கள்.
பெரும்பாலான ஆண் குழந்தை களுக்கு காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார், பெண் குழந்தை களுக்கு சாந்தி என முதலிடம் பிடித்தது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த திமுக விற்கு சிவாஜியின் பிரசாரம் பெரும் தலைவலியைக் கொடுத்தது, திமுக வை நோக்கி திரும்பிய இளைஞர்கள் சிவாஜியால் கவரப்பட்டு காங்கிரஸ் அனுதாபியானார்கள் .
பிப்ரவரி 17, 1962 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 139 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது
திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, அதிர்ச்சியாக அண்ணாவும் தோல்வியை தழுவினார்.
1962 ல் வெளியான ஒரு நாளிதழ் காங்கிரஸின் வெற்றியை சிவாஜியின உழைப்பு எனக் குறிப்பிட்டது.
நன்றி சேகர்
22-4-20ன் தொடர்ச்சி...... முல்லை ரவி எழுத்து....
நாட்டியப்பேரொளி பத்மினியும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவும் சிவாஜியின் திரைப்பயணத்தை அலங்கரிக்கக் கிடைத்த பொக்கிஷங்கள் என்று இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்..
நடிப்பு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் கலக்கியவர் சிவாஜி. இந்த விஷயத்தில் அவர் ஒரு வித்தியாசமான மேஜிக் மேன் என்றே சொல்லலாம்.. 1964ல்தனது முதல் வண்ணப்படமான புதிய பறவையை எடுத்த சிவாஜி, 1970களின் இறுதியில் ரஜினி- கமல் சகாப்தம் ஆரம்பித்த கட்டத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் எடுத்த படம், திரிசூலம்.
இதில் மூன்று வேடங்களில் நடித்து 1979ல் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் போர்டை பல வாரங்களுக்கு தொங்கவிடவைத்து, மூட்டை மூட்டையாய் வசூலை குவிக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது..,
சிவாஜி உட்கார்ந்தாலும் நடிப்பு, நின்றாலும் நடிப்பு.. அது,அவர் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்.. இதை புரிந்துகொண்டுதான் பாரதிராஜா, முதல் மரியாதை என்ற காவியத்தைக் கொடுத்தார், கமலஹாசனும் தேவர் மகன் என்ற படத்தை சிவாஜியை வைத்து காவியமாக்கிக் கொண்டார்.
பாமரன் முதல் படைப்பாளிகள் வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால் தான் சிவாஜியின் பெருமை நாடுகள் கடந்து இன்றும் பேசப்படுகிறது.
1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்புத் திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னனி நடிகர்களான (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் அவரைக்காணத் தேடி ஓடிவந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுப்பேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்கள்.
இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது.
விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு.
உலக சினிமாவில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை..
‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவே முடியாது’’
எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமான விஷயம் தனது பிறந்த நாள் எப்போது என்று சிவாஜி தெரிந்து கொண்டது கூட வித்தியாசமான வரலாறுதான்.
சிவாஜியின் தந்தையான விழுப்புரம் சின்னய்யா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைபிடிக்கப்பட்டார்.. அன்றைய தினம் தான் ராஜாமணிக்கு சிவாஜி பிறந்தார். பின்னாளில் இந்த சிறைபிடிப்பு தினத்தை கண்டுபிடித்த பிறகே அக்டோபர் ஒன்றாம் தேதி தான் சிவாஜியின் பிறந்ததினம் என தீர்மானிக்கப்பட்டது..
முற்றும்!
70 பதுகுளில் ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட்சி நடைபெற்றது
அக்கண்காட்சியைகாண உலகெங்கிலுமிருந்து பணம்படைத்தவர்கள் ஜப்பான் சென்று
அக்ககண்காட்சியை கண்டு ரசித்து மகிழ்ந்தார்கள் . ஜப்பான் சென்று அக்கண்காட்சியை
காணஇயலாத தமிழக மக்கள் பார்ப்பதற்க வசதியாக சிவாஜி பிலிம்ஸ் சார்பில் ஒர் படத்தை
தயாரித்து அதன் படக்காட்சிகள் சிலவற்றை ஜப்பான் சென்று எக்ஸ்போ 70 கண்காட்சியில் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்,
இவ்விடயம் பிடரியில் கண்கொண்ட கண்ணியவானுக்கும் கைகூலிகளுக்கும் தெரிந்ததும்
எங்கே எப்படியெல்லாம் சிவாஜி கணேசனை வென்று விழுத்தலாம் என நாளும் பொழுதும் சிந்தனையிலிருந்த
பிடரியில் கண்கொண்ட பொண்மணத்தவர் சிவாஜி கணேசனின் ஐடியாவை கபக்கென பற்றிக்கொண்டார்.
உடனடியாக தனது உ சு வாலிபனை ஜப்பான் எக்ஸ்போ 70 ல் எடுப்பதாக அறிவித்து
படக்குழுவையும் அவசரஅவசரமாக ஏற்பாடு செய்தகோண்டார்.
இதனை அறிந்த சிவாஜி கணேசன் அவர்கள்
ஏன் முட்டி மோதிக்கொள்வான் என பெருந்தன்மையுடன் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
உ ச வாலிபனும் படப்பிடிப்ப முடிவுற்று
பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளிவந்து ஓடியது விநியோகித்தர்கள் ஓரளவு
தப்பித்தக்கொண்டார்கள் . அனால் தயாரிப்பாளர் என்ற முறையில் மா கோ ராவுக்கு
பெருத்த நஷ்ட்டம் . மா கோ ராவின் வஞ:சக எண்ணத்திற்கு ஆண்டவன் கணக்கை காட்டிவிட்டான்.
உ சு வாலிபனுக்காக ஈடு வைக்கப்பட்டிருந்த ராமாவரம் தோட்டம் ஜப்தியில் போகவேண்டியிருந்தது
சில பேர்வழிகளால் காப்பாற்றி கொடுக்கப்பட்டது,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0d&oe=5EC8BC26
நடிகர் திலகம் எக்ஸ்போ 70ல் படப்பிடிப்பு நடத்தப்போவதாக அறிவித்த பத்திரிகை செய்தி
இன்று 24/04/2020 - இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " இரு துருவம் "
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, முத்துராமன் மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
படத்தை காண தவறாதீர்கள்
'அவளா சொன்னாள் இருக்காது...அப்படி எதுவும் நடக்காது...நடக்கவும் கூடாது... நம்ப முடியவில்லை... இல்லை இல்லை...உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா...'
இன்று 24/04/2020 மதியம் 3.30 மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த " செல்வம் " படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
'பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு.. நான் அறிவேன்..பாவை க்குள்ளே என்ன உண்டு நீ அறிவாய்.....நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூனுமும் உண்டு..
உன் நாடகத்தில் காதல் உண்டு நாலும் உண்டு...'
இன்று 24/04/2020 காலை 07.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" ராஜா " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இன்று 24/04/2020 - பகல் 02.00 p.m. மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி இல்.
நடிகர்திலகம் நடித்த - "பக்த துக்காராம்" படம் " "- காண தவறாதீர்கள். ¶
நடிகர் திலகம், நாகேஷ்வர ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ...விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்...'
இன்று 24/04/2020 மாலை 06.00 p.m. மணிக்கு ஜெயா டிவி யில். நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
" ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காணதவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அந்த மானைப் பாருங்கள் அழகு.. இளம்
பாவை என்னோடு உறவு..அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்...'
இன்று 24/04/2020 - இரவு 06.00 மணிக்கு மெகா டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த "அந்தமான் காதலி "
படத்தை காண தவறாதீர்கள் . இந்த படத்தில் சிவாஜி, சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பட்டிக்காடா பட்டணமா? 24-04-2020 வசந்த் ரி வியில் 1.30 மணிக்கு
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c1&oe=5EC6F3A0
#அமரகாவியம். மெல்லிசை மன்னரின் சொந்தப் படம். நல்ல பாடல்கள். முக்காதார் கா சிக்கந்தர் என்ற இந்திப்படத்தின் ரீமேக். ஆனால் சரியாக .24.04.81 அன்று வெளியானது. ஒரு வார இடைவெளியில் (01.05.81) கல்தூண் ரீலீஸாகவே இந்தப் படத்தை பாதித்தது.
#அமரகாவியம்39வருடங்கள்நிறைவு.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...91&oe=5EC72D65
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ab&oe=5EC6BFA4
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...da&oe=5EC86C89
முடியாது
பொட்டில் அடித்தார் போல பதிலடி தரும் கமெண்ட்ஸ் என்பது இதுதான்,
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் என்றாலும் சிம்மக்குரலோன் சிவாஜிக்கு அநீதி என்றால் பொங்கி எழ வேண்டும்
அது தான் தமிழன் மரபு,
அண்னண் சிவாஜியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் அண்னண் சிவாஜி அவர்கள் எதையும் எதிர்பார்த்து யாரையும் எதிர் பார்த்து எதையும் செய்யவில்லை அவர் எந்த காலத்திலும் விளம்பரத்தை விரும்பவில்லை அவர் செய்த தர்மங்கள் நற்காரியங்கள் பல பல அண்னண் சிவாஜி அவர்கள் தமிழ் நாட்டிற்கு மட்டும் செய்யவில்லை இந்தியாவில் பல மாநிலங்களுக்கு பல உதவிகள் இந்தியா மட்டும் அல்லாமல் கடல் கடந்தும் பல உதவிகள் விளம்பரம் தேடாமல் மத்திய அரசிடம் மட்டும் இல்லாமல் பல மாநிலங்களில் பல உதவிகள் அந்தந்த அரசுகளிடம் நிதியை வழங்கினார் இது போக தனிப்பட்ட முறையில் மக்கள் சேவை செய்த ஒரே கலைஞன் தலைவன் மாமனிதர் அண்னண் சிவாஜி அவர்கள் மட்டுமே! அண்னண் சிவாஜியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்!
100% உண்மை, சிவாஜி செய்த உதவிகள், தியாகங்கள் இந்திரா முதல் பத்திரிக்கைகாரர்கள் காங்கரஸ் வரை மூடி மறைத்தார்கள் திருட்டு திராவிட கூட்டம் கஞ்சன் ௭ன பொய்யை பாமர மக்களிடம் பரப்பி ௮வர்கள் யோக்கியமாக உலாவந்தார்கள்
I, Dr.M.Davamani Christober, am the Principal of The American College, Madurai. I have been watching this group for the past many days. Great fan of Sivaji Ganesan from my childhood. The American college auditorium was opened by Sri Sivaji Ganesan, as he donates large amount. Happy to share this photo.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...5d&oe=5EC845C8
Thanks..Dr.M.Davamani Christober (Nadigar thilkam sivaji Visirikal)
காதல் படம் என்றாலே... நம் கண்ணுக்கு முன்னே வந்து நின்றது... அந்த பிரமாண்டமான, அழகான, அருமையான ‘வசந்தமாளிகை’.
அழகாபுரி ஜமீன். அதில் இளைய மகன் ஆனந்த்... சிவாஜி. ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்பதுதான் அவரின் வாழ்க்கை. வாழ்க்கையை, அதன் போக்கில் விட்டிருப்பார். விமானப் பணிப்பெண் லதா... வாணிஸ்ரீ. சிவாஜியும் வாணிஸ்ரீயும் விமானத்தில்தான் சந்தித்திருப்பார்கள்.
அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என்றிருக்கிற பெரிய குடும்பத்தில், வாணிஸ்ரீயின் சம்பளம்தான் பலம். ஆனால் விமான வேலை என்று வீடு சொல்லுவதால், வேறு வேலைக்கு முயற்சி செய்வார். அங்கே, அவரைக் கற்பழிக்க முயலுவார் ராமதாஸ். பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவாஜி, வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவார். தன்னுடைய காரியதரிசியாகவும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்.
தன்மானமும் சுயகெளரவமும் கொண்டிருக்கும் வாணிஸ்ரீக்கு அந்த அரண்மனையில் ஏகத்துக்கும் இடைஞ்சல். ஆனால் அப்போதெல்லாம் வேலைக்கார வி.எஸ்.ராகவன் தடுத்துவிடுவார். வேலையிலேயே இருக்கச் சொல்லுவார். சிவாஜிக்கு அம்மா உட்பட எவருமே பாசம் காட்டுவதில்லை. ஒருகட்டத்தில், குடித்துக்கொண்டே இருக்கிற சிவாஜிக்கு, வீட்டிலேயே அவமானம். ’இனி குடிக்கக்கூடாது’ என்று தடுக்க, பாட்டில்களை உடைக்க, பாட்டிலை எடுத்து வாணிஸ்ரீயின் மீது சிவாஜி வீச, வழிகிற ரத்தத்தைப் பிடித்து, ‘இதைக் குடிங்க. நல்ல போதையா இருக்கும்’ என்று சொல்ல... துக்கித்துவிக்கித்துப் போவார் சிவாஜி. அப்போது ஓர் ப்ளாஷ்பேக்.
அம்மாவிடம் ஒட்டாமல், ஆயாவிடம் ஒட்டுதலாக இருக்கும் சிவாஜி... சின்னப்பையனாக இருக்கும்போது, தவறாகப் புரிந்துகொண்டு, சுட்டுக்கொல்லப்படுவார். அந்த ரத்தம், ஆயாம்மா இல்லாத தனிமை, அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் வெறுமை, இதையெல்லாம் பார்த்து குடியில் மூழ்கத் தொடங்கினேன் என்று சொல்லும் சிவாஜி, ‘இனி, குடிக்கமாட்டேன்’ என சத்தியம் செய்வார்.
பிறகு மெல்ல மெல்ல இருவருக்கும் காதல் பூக்கும். தன் காதலிக்காக, மிகப்பெரிய வசந்தமாளிகை எழுப்புவார். காதலையும் சொல்லுவார். இந்தச் சமயத்தில் வாணிஸ்ரீக்கு திருட்டுப்பட்டம் கட்டி, அவரை அங்கிருந்து துரத்துவார்கள். உண்மையெல்லாம் தெரிந்து, நீ திருடியில்லை என்று நீருபணம் செய்துவிட்டேன் என்று சிவாஜி கெஞ்சுவார். ஆனால் தன்மானம்... மன்னிக்காது. சுயகெளரவம்... மனமிரங்காது.
ஒருகட்டத்தில், சிவாஜிக்கு உடல்நலமில்லாமல் போகும். ‘தடக்கென்று குடியை நிறுத்துவதும் தப்பு. தினமும் மருந்து போல் பயன்படுத்துங்கள்’ என மருத்துவர் சொல்ல, சிவாஜி இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்’ என்று சொல்ல, இதைத் தெரிந்துக்கொண்டு வாணிஸ்ரீ வந்து, விஸ்கியைக் கொடுக்க, குடிக்க மறுப்பார். உடல்நலம் இன்னும் சீர்கெடும். ’இவர் நல்லா இருக்கணும்னா, நாம கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று வீடு பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள வாணிஸ்ரீ சம்மதிப்பார். மனம் நொந்து போன சிவாஜி, வாணிஸ்ரீயை ஒருமுறை பார்ப்பார். வீட்டுக்கு வருவார். விஷம் அருந்துவார். அங்கே கல்யாணம் தடைப்படும். வாணிஸ்ரீ சிவாஜியைக் காண ஓடோடி வருவார். மருத்துவத்தாலும் காதலாலும் பிழைத்த சிவாஜி, வாணிஸ்ரீயுடன் ‘வசந்தமாளிகை’யில் இல்லறத்தைத் தொடங்குவார் என்று படம் முடிய... சோகமும் ஆறுதலும் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
சிவாஜி, வாணிஸ்ரீ, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சுகுமாரி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்திருந்த ‘வசந்தமாளிகை’ படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு தயாரித்திருந்தார். இயக்குநர் பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். தெலுங்கு ரீமேக் படமான இந்தப் படத்துக்கு, பாலமுருகன் வசனம். கே.வி.மகாதேவன் இசை. அத்தனைப் பாடல்களும் தேன். பாட்டெல்லாம் கண்ணதாசன்.
1972ம் ஆண்டு, செப்டம்பார் மாதம் 26ம் தேதி, ரிலீசான ‘வசந்த மாளிகை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 100 நாள், 150 நாள், 200 நாள்... என வசூலில் சாதனை செய்தது.
பணக்கார, ஏழை காதல்தான். அங்கே வில்லனாக, பிரச்சினையாக இருப்பதும் இதுதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, சுயகெளரவமும் தன்மானமும் காதலுக்கு முட்டுக்கட்டையாக, தடையாக இருப்பதைச் சொன்னதில் வித்தியாசம் பெறுகிறது ‘வசந்தமாளிகை’.
‘வேணாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. விருப்பம்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது’.
‘இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க. நீ மோசம்னு சொல்றே’.
‘உங்க அக்கா அகம்பாவம் பிடிச்சவ. வரமாட்டா. ஆனா உங்க அக்காகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்’.
‘இது இறந்து போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்தமாளிகை’... இப்படி படம் நெடுக, வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே போகும். வாணிஸ்ரீ பேசும் வசனங்களும் அப்படித்தான். அந்தக் காலத்தில் வாணிஸ்ரீக்காக நான்கைந்து தடவை படம் பார்த்தவர்கள் உண்டு. வாணிஸ்ரீ புடவைக்கட்டிலும் அவரின் கொண்டை ஸ்டைலிலும் ஈர்க்கப்பட்டு பெண்களே திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். நாகேஷ், ரமாபிரபா, வி.கே.ஆர் காமெடி கலகலக்கவைக்கும். இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. அண்ணன், அம்மா வில்லத்தனம் செய்வார்கள். ஒருகட்டத்தில், தன்மானமே வில்லனாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்.
சிவாஜியின் முக்கியமான படங்களில் ஒன்று இது. வாணிஸ்ரீக்கும்தான். ‘ஓ மானிட ஜாதியே’, ‘ஏன் ஏன் ஏன்...’, ‘குடிமகனே பெருங்குடிமகனே...’, ’கலைமகள் கைப்பொருளே...’, ‘மயக்கமென்ன..’, ‘இரண்டு மனம் வேண்டும்’, யாருக்காக இது யாருக்காக’ என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட்டு.
‘வசந்தமாளிகை’ உறுதியான அஸ்திவாரம் கொண்ட கோட்டை. காதல் கோட்டை. இன்னும் நூறு வருடங்களானாலும் சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ‘யாருக்காக’ ‘இரண்டுமனம் வேண்டும்’ என்றெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார்கள்.
நன்றி! வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை இணைய பகுதியிலிருந்து....
Thanks Ganes Pandian
https://youtu.be/VsW1HQlZbVY...பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ அவர்கள் புரட்சி நடிகர் நடிப்பை பற்றியும், கொடை தன்மையையும் விவரிக்கும் காட்சி, பேட்டி.( முழுசாக பார்க்கவும்).நன்றி.
நன்றி மறந்த திரையுலகுக்கும்
நன்மை செய்த நடிகர்திலகம்!
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...92&oe=5ECA85CE
Thanks Nilaa
இன்று 25-04-2020
பிற்பகல் 1:30 க்கு
வசந்த் தொலைக்காட்சியில்
நான் பெற்ற செல்வம்,
.................................................. ......................
இன்று 25-04-2020, இரவு 7:30 க்கு
வசந்த் தொலைக்காட்சியில் பாட்டும் பரதமும்
.................................................. ....................
இன்று மதியம் 1.30 க்கு நீதிபதி ராஜ் டிஜிட்டல் டிவியில்.
.................................................. ..............................................
இன்று 25/04/2020 பகல் 02.00 pm மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தெனாலிராமன் " சிரிப்பு படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி, ஜமுனா, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர் !!!
ஞாயிறும திங்களும்.
நடிகர் திலகம் நடித்து வெளிவாரத திரைப்படம்.
டோக்கியோவில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்ட ஞாயிறும் திங்களும் படம் திரைக்கு வராத படப்பட்டியலில் இணைந்து விட்டது. முழுவதும் முடிந்த நிலையில், இப்படத்தின் சில இறுதிக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவில்லை. தேவிகா ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார். இப்படத்தின் கதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமாகியுள்ளது. ஞாயிறும் திங்களும் சேர்ந்தால் அமாவாசைதான் வரும். பெளர்ணமி போல் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டிய இப்படம், அமாவாசை போலாகிவிட்டது
. நாயகனை (சிவாஜியை) காதலிக்கும் நாயகி (தேவிகா) ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாயகி டோக்கியோ செல்கிறாள். அது சமயம் நாயகியின் பணக்கார தாய் (கே.பி.சுந்தராம்பாள்) ஏழை நாயகனை மகனாக ஸ்வீகாரம் எடுக்கிறாள். நாயகனுக்கும் தன்னை தத்து எடுப்பது நாயகியின் தாய் எனத் தெரியாது. டோக்கியோவிலிருந்து திரும்பிய நாயகி அனைத்தும் அறிந்து வேதனைப் படுகிறாள். வாழ்வை வெறுத்த நாயகி கிருத்துவ மதத் தொண்டுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். இரு மலர்கள் படத்தில் பத்மினியை காதலித்த சிவாஜி விதி வசத்தால் கே.ஆர்.விஜயாவை மணப்பது போலவே, இந்தப் படத்திலும் தேவிகாவை காதலித்த சிவாஜி கே.ஆர். விஜயாவை மணக்கிறார். நாயகனின் தந்தையாக வி.கே.ராமசாமியும் நாயகனின் தங்கையை மணப்பவராக முத்துராமனும் நடித்தனர்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...1a&oe=5EC8C9BA
Thanks ..R,Vijaya
படித்த உண்மை.... மீண்டும் சிவாஜி....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்கள் நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்து இருக்கின்றன. ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச் சுற்றி உள்ள பலரும் 35 வயதை கடந்தவர்களே. ¶
இவர்களில் பலர் இளையராஜா, ரஜினி, கமல் ரசிகர்கள், வெகு அபூர்வமாக மற்றவர்கள் அரட்டைகளில் இடம் பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் ரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள்.
இப்போது நான் சொல்ல வருவது என்ன என்றால், கடந்த ஒரு மாதமாக இவர்களுக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து.....முடங்கி..... வீட்டுக்குள் அமர்ந்திருக் கும் போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளை யும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம். ¶
அதில் ஒன்றுதான் சிலர் நினைக்க மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும் தான். ¶
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்து விட முடியாமல், சிவாஜி நம்மில் பலருக்குள் மீண்டும், உணர்வுப் பூர்வமாக அமர்ந்து விட்டார் என்பதை ஆணித்தரமாக மறுப்பதற்கில்லை. ¶
Thanks to - SivajiGanesan ISR selvakumar.
Thanks ..Jeyavelu Kandaswami
இன்று 25/04/2020 சன் லைப்ஃ டி.வி. யில் மாலை 04.00 p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். ¶
" சித்ரா பௌர்ணமி " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.