81 ஆண்டு தமிழ் திரை வரலாற்றில் ஒரு பழைய படம் மறு வெளியீட்டில் ௦ 50 நாட்கள் ஓடுவது ( ஷிப்டிங் செய்யாமல்) என்பது இதுவே முதல் முறை.
கர்ணன் 14 திரைகளில் ( release print - 10 , shifting -4 ) 50 நாள் என்ற சாதனையை செய்யவிருக்கிறது.
பழைய படங்களையே திரையிடாத Multiplex திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, அந்த அரங்குகளில் பெரும்பான்மையாக படம் பார்க்கும் இளைஞர்களையும் சென்றடைந்து, 4 multiplex அரங்குகளில் 50 நாட்கள் ஓடும் முதல் பழைய படமும் இது தான்.
ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா சென்டர்களிலும் முந்தைய மறு வெளியீட்டு சாதனைகள் அனைத்தையும் கர்ணன் மிஞ்சி விட்டது.
இந்த சாதனை இன்னும் , 50 நாட்களைக் கடந்தும், தொடரும் என்பதை சத்யம், எஸ்கேப் வளாகங்களின் ரிசர்வேஷன் நிலவரங்கள் நமக்கு காட்டுகின்றன. நாளை மாலை 6 . 40 மணி காட்சிக்கு வெறும் 10 டிக்கட்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. எஸ்கேப் வளாகத்தில் மதிய காட்சிக்கும் 80% டிக்கட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு விட்டன.
இது தவிர -ஏதோ இந்த வாரம் வெளியான புதிய படம் போல- ஒரு Special show வேறு Studio 5 அரங்கில் நாளை காலை 9 .10 மணிக்கு உள்ளது.
வேறு சில இணைய தளங்களில் கர்ணன் வெற்றியை குறித்து சந்தேகம் (!!!) தெரிவிப்பவர்கள் இந்த விபரங்கள் அனைத்தையும் சத்யம் வளாக இணைய தளமான
http://www.thecinema.in ல் சரி பார்த்துக் கொள்ளலாம்.